12th Botany Unit 9 Lesson 7 Additional 2 Marks
TN 12th Bio-Botany Unit 9, 7th Lesson Book Back Answers Tamil Medium. Additional 1 Marks, 2 Marks, 3 Marks, 5 Marks Question and answers for 12th Students and NEET Students for Tamil Medium. 12th Botany Samacheer Kalvi Guide.. 12th Botany Unit 9 Full Answers. TN 12th Standard Unit 9 Lesson 7 Book Back All Question with answers Tamil Medium. 12th Samacheer kalvi Guide Lesson 7 . சூழல்மண்டலம் Answer key in Tamil Medium Students Guide 360. HSC 12th Botany Lesson 7 Book Back Answers.
12th Bio-Botany Unit 9.தாவரச் சூழ்நிலையியல் | Lesson 7. சூழல்மண்டலம் – Additional 2 Marks
II. இரண்டு மதிப்பெண் வினாக்கள்
1.நிலைத்த தரம் (அல்லது) நிலைத்த கூறு என்று எது குறிப்பிடப்படுகிறது?
- சூழலமண்டலத்தின் ஒரு குறிப்பிட்ட காலத்தில் காணப்படும் மொத்த கனிமப்பொருட்கள் நிலைத்த தரம் (அல்லது) நிலைத்த கூறு எனப் படும்.
- உயிரற்ற கூறுகள் சூழல்மண்டலத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.
2.பல்வேறு சூழியல் மண்டலங்களில் உள்ள பல்வேறு உணவுச்சங்கிலிகள் கொடுக்கப்பட்டிருந்தாலும். எதிலும் மனிதனைக் குறிப்பிடவில்லை. சரியான உணவுச் சங்கிலியில் மனிதனை வைத்து, அதற்கான காரணத்தையும் குறிப்பிடுக.
- ஆம், மனிதர்கள் பலதரப்பட்ட உணவுப் பழக்கவழக்கங்கள் உடையவர்களாக இருக்கிறார்கள். ஆடு.மாடு, கோழி போன்ற தாவர உண்ணிகளைஉண்பவர்கள் மூன்றாம் ஊட்டமட்டத்திலும்
- சாலமன் போன்ற மீன்களை உண்ணும் போது (சால்மன் பிற மீன்களை உண்ணும்) நான்காம் ஊட்டமட்டத்திலும் வைக்கப்படுவார்கள்.
- வெஜிடேரியன் எனப்படும் மீன் . மாமிசம் சாப்பிடாதவர்கள் மற்றும் வெகன் (vegan) எனப்படும் (விலங்குப் பொருட்கள், பால், தயிர் வெண்ணெய், நெய் கூடச் சாப்பிடாதவர்கள்) மனிதர்கள் முதல்நிலை நுகர்வோர்கள் (அ) இரண்டாம் ஊட்டக்கட்டத்தில் வைக்கப் படுகிறார்கள்.
3. நிலைத்த உயிரித்தொகுப்பு என்றால் என்ன?
- ஒரு உயிரினக் கூட்டத்தில் ஒரு குறிப்பிடக் காலத்தில் காணப்படும் உயிரிகளின் அளவிற்கு நிலைத்த உயிரித்தொகுப்பு.
4.சூழலமண்டலத்தின் செயல்பாடுகள் யாவை?
- சூழலமண்டலத்தின் ஆற்றல உருவாக்கம்.ஆற்றல் பரிமாற்றம்
- இது உயிருள்ள மற்றும் உயிரற்ற கூறுகளுக் கிடையே நடைபெறும் பொருட்களின் சுழற்சி ஆகியவை சூழலமண்டலச் செயல்பாடுகளாகும்.
5.உயிரித்திரள் ஏன் சூழலமண்டலத்தின் உற்பத்தித்திறனை எனப்படுகிறது?
- ஓர் அலகு காலத்தில் ஓர் அலகுப் பரப்பில் உற்பத்தி செய்யப்படும் உயிரித்திரள் வீதமே உற்பத்தித்திறன் எனப்படுகிறது.
- இது கிராம் / சதுரமீட்டர் / வருடம் (அ) கிலோ கலோரி / சதுரமீட்டர் / வருடம் ஆகிய அலகுகளால் குறிப்பிடப்படுகிறது.
6.உயிரித்திரள் என்றால் என்ன? அது எவ்வாறு அளவிடப்படுகிறது?
- ஓர் அலகு இடத்தில் தாவரங்களின் எண்ணிக்கை அல்லது உயிரித்திரள் அடிப்படையில் குறிப்பிடப் படுகிறது.
- உயிரித்திரள் என்பது உயிரினத்தின் பசுமை எடை (அ) உலர் எடை (அ) கார்பன் எடையால் அளவிடப்படுகிறது.
7. மொத்த முதல்நிலை உற்பத்தித்திறனுக்கும் மொத்த இரண்டாம் நிலை உற்பத்தித்திறனுக்கும் உள்ள
வேறுபாடுகள் யாவை?
மொத்த முதல்நிலை உற்பத்தித்திறன்
1.சூழல்மண்டலத்திலுள்ள உயிரிகளால் உற்பத்தி செய்யப்படும் உணவு ஆற்றல்
2.இதனை உற்பத்தியாளர்கள் ஒளிச் சேர்க்கையின் மூலம் செய்கின்றன.
மொத்த இரண்டாம்நிலை உற்பத்தித்திறன்
- தாவர உண்ணிகளால் உட்கொள்ளப்படும் மொத்ததாவரப் பொருட்களில் கழிவாக வெளியேற்றப்படும் பொருட்களைக் கழித்து வரும் மதிப்பாகும்.
- தாவர உண்ணிகளால் நடைபெறுகிறது.
8.நிகர முதல்நிலை உற்பத்தித்திறனுக்கும், நிகர இரண்டாம் நிலை உற்பத்தித்திறனுக்கும் உள்ள வேறுபாடு யாது?
நிகர முதல்நிலை உற்பத்தித்திறன்.
1. தாவரத்தின் சுவாசச் செயலால் ஏற்படும் இழப்பிற்குப் பிறகு எஞ்சியுள்ள ஆற்றல் விகிதமே முதல்நிலை உற்பத்தித்திறன்.
2.இது தற்சார்பு ஊட்ட உயிரிகளில் (producer) கணக்கிடப்படுகிறது.
நிகர இரண்டாம்நிலை உற்பத்தித்திறன்
- ஓர் அலகு இடத்தில் ஓர் அலகு காலத்தில் சுவாச இழப்பிற்குப் பிறகு நுகர்வோர்களால் சேமிக்கப் படும் ஆற்றல்.
- இது நுகர்வோர்களில் கணக்கிடப்படுகிறது.
9.குழும உற்பத்தித்திறன் என்றால் என்ன?
- ஓர் அலகு இடத்தில் ஓர் அலகு காலத்தில் ஓர தாவரக் குழுமத்தினால் உற்பத்தி செய்யப்படும் நிகர கரிமபொருட்களின் உயிரித்திரள் விகிதம்.
10. முதல் நிலை உற்பத்தித்திறனை பாதிக்கும் காரணிகள் யாவை?
- ஒரு குறிப்பிட்ட இடத்தில் காணப்படும் தாவரச் சிற்றினங்கள்,
- அவற்றின் ஒளிச்சேர்க்கைத்திறன்.
- கிடைக்கும் ஊட்டச்சத்துக்களின் தன்மை
- சூரிய ஒளி மழையளவு
- மழையளவு மண் வகை, நிலப்பரப்பு காரணிகள்
- சுற்றுச்சூழல் காரணிகள்.
11. நிகர முதல்நிலை உற்பத்தித்திறனை NPP எவ்வாறு மொத்த முதல்நிலை உற்பத்தித்திறனிலிருந்து GPP கணக்கிடுவாய்?
- NPP = GPP – சுவாச இழப்பு
- GPPக்கும் சுவாச இழப்பிற்கும் இடையேயுள்ள வேறுபாடே NPPயாகும்.
12. சாம்பல் கார்பன் ஏன் பழுப்பு கார்பனிலிருந்து வேறு படுகின்றது?
சாம்பல் கார்பன் :
- தொல்லுயிர் படிவ எரிபொருளாக சேமிக்கப்படும் கார்பன் (நிலக்கரி, எண்ணெய்) மற்றும் உயிரி வாயுக்கள்.
பழுப்பு கார்பன் :
- தொழில் ரீதியாக உருவாக்கப்படும் சேமிக்கப்படும் கார்பன் (வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் மரங்கள்)
13. நீல கார்பன் மற்றும் கருமை கார்பன் இவை எந்த மூலங்களில் சேமிக்கப்படுகிறது?
- நீல கார்பன் : வளிமண்டலம் மற்றும் கடல்களில்
- கருமை கார்பன் : வாயு, டீசல் என்ஜின் நிலக்கரியைப் பயன்படுத்தும் மின் உற்பத்தி சேமிக்கப் படும் கார்பன். நிலையங்கள் ஆகிய வற்றிலிருந்து வெளி யேற்றப்படும் கார்பன்.
14. ஆற்றல் ஓட்டம் எனப்படுவது யாது?
- சூழல்மண்டலத்தில் ஆற்றில் ஊட்ட மட்டங் களுக்கிடையே பரிமாற்றம் அடைவது ஆற்றல் ஓட்டம்.
- இதுவே சூழலமண்டலத்தின் முக்கிய செயல்பாடு ஆகும்.
15. ஒரு சூழியல் மண்டலத்தில் காக்கைகள் இல்லை யெனில் என்ன நடக்கும் ?
காக்கைகள் அனைத்துண்ணிகள் எனப்படுகிறது,
- ஏனெனில் இவை தானியங்கள், கனிகள், விதைகள் போன்ற தாவரப்பகுதிகளையும், மற்றும் சிறு புழுக்கள், பூச்சிகள், அழுகிய, மட்கிய இறந்த முதலநிலை, நிலை வாண் உண்ணி உயிரினங் இரண்டாம் களையும் உண்கின்றன. இதனால் சூழலை. சுகாதாரமாக வைத்துக் கொள்ள உதவும் ஆகாயத் தோட்டி எனப்படுகின்றன.
- இவை உணவுச்சங்கிலியில் ஒன்றுக்கு மேற்பட்ட ஊட்டமட்டத்தில் இடம் பெறுகின்றன.
- காக்கைகளின் கனிகளை உண்டு வெளியேற்றும் எச்சத்தில் காணப்படும் சில வகை விதைகள் உள்ளன. அதனால் அவை விதை பரவலில் உதவுகின்றன.
- ஆரினும் இவை சூழியல் மண்டலத்தில் மகரந்தச் சேர்க்கை செய்ய உதவும் சில வகை பறவைகள், பூச்சிகள் போல மிகவும் இன்றியமையாததொக் கருதப்படுவதில்லை, ஏனென்றால் அவ்வகை மகரந்த சேர்க்கைக்குக் காரணமான பூச்சியினங்கள் அழிந்தால் அதைச் சார்ந்திருக்கும் சில வகை தாவரங்கள் அழியும் அபாயம் ஏற்படும். ஆனால் இளில் உணவுச்சங்கிலியில் அதற்கான இடம் வெற்றிடமாகும் – சூழ்நிலை சமநிலை பாதிக்கப்படலாம் காலப்போக்கில் அந்த இடத்தை நிரப்பீடு செய்ய வேறேதேனும் உயிரனங்கள் அனைத்துண்ணிகளாக மாற்ற பரிணாமம் அடையவும் வாய்ப்புகள் உள்ளன.
16. வெப்ப இயக்கவியலின் விதி யாது?
- சூழல்மண்டலத்தின் ஆற்றல் சேமிப்பு மற்றும் இழப்பு வெப்ப இயக்கவியலின் இரண்டு விதிகளை அடிப்படையாகக் கொண்டது.
17. “ஒளி ஆற்றல் வேதி ஆற்றலாக மாற்றப்படுகிறது”. இதனோடு தொடர்புடைய விதி யாது?
- வெப்ப இயக்கவியலின் முதல்லிதி இதனோடு தொடர்புடையது.
20, சூழியல் பிரமிட்கள் ஏன் எல்டோனியின் பிரமிள் என அழைக்கப்படுகின்றன?
- சூழியல் பிரமிட்கள் சர்லாங் எல்டன் என்பவரால் 1927ல் அறிமுகப்படுத்தப்பட்டது.
- இதனால் அவை எல்டோளியின் பிரமிட்கள் என அழைக்கப்படுகின
21. சூழியல் பிரமிட்கள் என்றால் என்ன?
- ஒரு சூழல்மண்டலத்தின் அடுத்தடுத்த ஊட்ட மட்டங்களின் அமைப்பு மற்றும் செயல் பாடுகளை குறிக்கும் திட்ட வரைபடங்கள்
- சூழியல் பிரமிட்கள் என்று அழைக்கப்படுகின்றன.
22. ஆற்றல் பிரமிட்கள் எப்பொழுதும் நேரானது ஏன்?
- ஆற்றல பிரமிகள் அடிப்பகுதியில் உள்ள உற்பத்தி யாளர்கள் முதல் இறுதிமட்டம் வரையுள்ள அடுத்தடுத்த ஊட்ட மட்டங்களில் ஆற்றல் கடத்தல் படிப்படியாக குறைகிறது. எனவே ஆற்றல் பிரமிட் எப்பொழுதும் நேரானது.
23. ஆற்றல் பிரமிட் என்றால் என்ன?
- ஒரு சூழலநிலைமண்டலத்தில் ஒவ்வொரு அடுத்தடுத்த ஊட்ட மட்டங்களில் ஆற்றல் ஒட்டத்தை குறிக்கும் திட்ட வரைபடம் ஆற்றல் பிரமிட் என்ற அழைக்கப்படுகிறது.
24. சூழல்மண்டலத்தில் ஊட்டங்களின் மறுசுழற்சிக்கும் சமநிலைப்பாட்டிற்கும் தேவைப்படும் முக்கியமான செயல் எது?
- சிதைத்தல் என்னும் செயல் சிதைவுக் கூளங்களை (இறந்த தாவரங்கள், விலங்குகள் மற்றும் அதன் கழிவுகள்) சிதைப்பவைகளால் சிறிய கரிமப் பொருளாக உடைக்கப்படும் செயல்முறைக்கு சிதைத்தல் என்று பெயர்.
25. நன்னீரியல் மற்றும் கடலியல் இவற்றிற்கு இடையே உள்ள வேறுபாடுகளை எழுதுக.
நன்னீரியல்
- இது உள்நில நன்னீர் சூழல்மண்டலத்தின் உயிரியல், வேதியியல் உடற்கூறு மற்றும் புவியியல் கூறுகளைப் பற்றி படிக்கும் பிரிவு ஆகும். (குளம், ஏரிகள் முதலியன)
கடலியல்
- இது கடலின் உயிரியல், வேதியியல், உடற்கூறு மற்றும் புவியியல் கூறுகளை பற்றி படிக்கும் பிரிவாகும்.
28. நீல கார்பன் சூழல்மண்டலத்தின் இயற்கையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஏன்?
- கழிமுகம் மற்றும் கடலோர சூழ்நிலை மண்டலங் களில் காணப்படும் கடற்புற்கள் மற்றும் சதுப்பு நிலத்தாவரங்கள் அதிக கார்பன் சேகரிக்கும் திறன் கொண்டவை,
- எனவே இவை நீல கார்பன் சூழல்மண்டலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
27. பொருந்தாதை கண்டறிந்து காரணம் கூறவும்
- வாழிடத்தை வழங்குதல், ஊட்ட சுழற்சி, முதல் நிலை உற்பத்தி, வழிமுறை வளர்ச்சி
பொருந்தாது : வழிமுறை வளர்ச்சி
- காரணம் : ஒரு குறிப்பிட்ட வகை தாவர குழுமம் மற்றொரு வகை குழுமத்தை அதே இடத்தில் இடம் பெறச் செய்தல் வழிமுறை வளர்ச்சி எனப் படும். மற்றவை சூழல்மண்டல சேவைகளுடன் தொடர்புடையது.
28. பொருந்தாதை கண்டறிந்து காரணம் கூறவும்
- லைக்கன்கள், நீலப்பசும்பாசிகள், பசும்பாசிகள், டயட்டம், பாக்டீரியங்கள்
பொருந்தாது: லைக்கன்கள்
- காரணம் : லைக்கன்கள் முதல்நிலை வழிமுறை வளர்ச்சியுடன் (Primary Succession) தொடர்பு உடையது. மற்றவை தாவர மிதவை உயிரிநிலை (Phytoplankton Stage)யான நீர்நிலை வழிமுறை வளர்ச்சி (Hydrosere) யுடன் தொடர்புடையது.
29. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலான முழக்கங் களை (அ) ஊக்கொலிகளை (slogans) எழுதுக.
- “சூழல்மண்டலத்தைப் பயன்படுத்து. ஆனால் இழக்காதே, அதை நீடித்த மற்றும் நிலையானதாக மாற்று”
30. துணுக்காதல் வரையறு:
- சிதைப்பவைகளான பாக்டீரியங்கள் பூஞ்சைகள் மற்றும் மண் புழுக்களின் சிதைவுக்கூளங்கள் சிறிய துண்டுகளாக உடைபடுதல் துணுக்காதல் எனப்படும்.
31. மட்காதல் என்றால் என்ன?
- எளிமையாக்கப்பட்ட சிதைவுக்கூளங்கள் கருமை யான படிக உருவமற்ற பொருளான மட்காக மாற்றமடையும் செயலுக்கு மட்காதல் என்று பெயர்.
32.உயிர்புவி வேதிச்சுழற்சியின் வகைகள் யாவை?
- வளி சுழற்சி : (Gaseous cycle) வளிமண்டல ஆக்ஸிஜன், கார்பன், நைட்ரஜன் ஆகியவற்றின் சுழற்சிகள் இதில் அடங்கும்
- படிம சுழற்சி : (Sedimentary cycle) புவியில் படிமங்களாக உள்ள பாஸ்பரஸ், சல்பர், கால்சியம் ஆகியவற்றின் சுழற்சிகள் இதில் அடங்கும்.