12th Botany Unit 9 Answers

 12th Botany Unit 9 Lesson 6 Additional 5 Marks

 12th Botany Unit 9 Lesson 6 Additional 5 Marks

TN 12th Bio-Botany Unit 9, 6th lesson Additional 5 Marks Question and answers. Tamil Medium. Additional 1 Marks, 2 Marks, 3 Marks, 5 Marks Question and answers for 12th Students and NEET Students for Tamil Medium. 12th Botany Samacheer Kalvi Guide.. 12th Botany Unit 9 Full Answers. TN 12th Standard Unit 9 Lesson 6 Book Back All Question with answers Tamil Medium. 12th Samacheer kalvi Guide Lesson 6 . தாவரச் சூழ்நிலையியல் சூழ்நிலையியல் கோட்பாடுகள் Answer key in Tamil Medium Students Guide 360. HSC 12th Botany Lesson 6 Book Back Answers.

12th Bio-Botany Unit 9 | Lesson 6. தாவரச் சூழ்நிலையியல் சூழ்நிலையியல் கோட்பாடுகள் – Additional 5 Marks

 12th Botany Unit 9 Lesson 6 Additional 5 Marks

VII. ஐந்து மதிப்பெண் வினாக்கள்

1. வெப்பநிலை அடிப்படையிலான மண்டலங்கள் யாவை? (அ ) வெப்பநிலையினால் ஏற்படும் விளைவுகள் யாவை?
  • விரிவகலம் மற்றும் குத்துயரம் ஆகியவற்றில் உள்ள மாறுபாடுகள் பூமியின் மேற்பரப்பில் வெப்பநிலை மற்றும் தாவரக்கூட்டங்களை பாதிக்கிறது.
  • விரிவகலம் (Latitude) : விரிவகலம் என்பது பூமத்திய ரேகையின் (0 ° முதல் துருவங்களின் 90° வரையில் காணப்படும் கோணமாகும்.
  • குத்துயரம் (Altitude): கடல் மட்டத்திலிருந்து எவ்வளவு மேலே அந்தப் பகுதியானது அமைந்து உள்ளது என்பதைக் குறிப்பதாகும்.

 12th Botany Unit 9 Lesson 6 Additional 5 Marks

வெப்பநிலையினால் ஏற்படும் விளைவுகள் : 

  • வெப்பநிலை ஒரு தாவர உடலில் நடைபெறும் அனைத்து உயிர்வேதியியல் வினைகளுக்கு உதவும் நொதிகளின் செயல்பாட்டைப் பாதிக்கின்றன.
  • இது உயிரியல் அமைப்புகளில் CO2 மற்றும் O2 கரைதிறனை பாதிக்கிறது. சுவாசத்தை அதிகரிக் கிறது மற்றும் நாற்றுக்களின் வளர்ச்சியைத் தூண்டுகிறது.
  • உயர் ஈரப்பதத்துடன் கூடிய குறைந்த வெப்ப நிலை தாவரங்களுக்கிடையே நோய்களைப் பரப்புகிறது.
  • ஈரப்பதத்துடன் மாறுபடும் வெப்பநிலை தாவரக் கூட்ட வகைகளின் பரவலைத் தீர்மானிக்கிறது.

 

2. காலநிலை காரணியான காற்றினால் ஏற்படும் விளைவுகள் யாவை?

காற்றினால் ஏற்படும் விளைவுகள் : 
  • காற்று மழையினை உருவாக்கும் காரணியாகும். ஒரு முக்கியக்
  • இது ஏரிகள் மற்றும் கடல்களில் நீர் அலைகளை ஏற்படுத்துவதால் காற்றோட்டத்தினை மேம் படுத்துகிறது.
  • வலுவான காற்று மண் அரிப்பை ஏற்படுத்துகிறது மற்றும் மண்ணின் வளத்தினைக் குறைக்கிறது.
  • இது நீராவிப்போக்கின் வேகத்தினை அதிகரிக்கச் செய்கிறது.
  • காற்றின் மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறும் தாவரங்களுக்கு இது உதவி புரிகிறது.
  • இது கனிகள், விதைகள், வித்துக்கள் இன்னும் பலவற்றினைப் பரவச் செய்வதற்கு உதவி புரிகிறது.
  • வலுவான காற்று பெரிய மரங்களை வேரோடு சாய்த்து விடுகிறது.
  • ஒற்றைத் திசைவீசும் காற்றானது மரங்களில் கொடி வடிவ (flag forms) வளர்ச்சியினைத் தூண்டுகிறது.

 

3.மண்ணின் காரணிகள் தாவரக்கூட்டங்களை எவ்வாறு பாதிக்கின்றன என எழுதுக. (அ) தாவர வளர்ச்சிக்கு மண்ணின் காரணிகள் எவ்வளவு  முக்கியமானவை என்பதை எழுதுக. 

மண்ணின் காரணிகள் தாவரக்கூட்டங்களை பின்வருமாறு பாதிக்கின்றன. 

மண் ஈரப்பதன் : 1.

  • தாவரங்கள் மழைநீர் மற்றும் வளிமண்டல ஈரப்பதத்திலிருந்து நீரை உறிஞ்சுகின்றன.
மண்ணின் நீர் : 2.
  • தாவரங்களின் பரவலைப் பாதிக்கும் மற்ற சூழ்நிலை காரணிகளை விட மண் நீர் மிகவும் முக்கியமான காரணியாகும். மழைநீர் மண்ணின் முக்கிய ஆதாரமாக உள்ளது. நுண்புழை நீர் தாவரங்களுக்குக் கிடைக்கும் முக்கியமான நீரின் வடிவமாகும்.

மண் வினைகள்:3

  • மண் கரைசலில் காணப்படுகின்றன நைட்ரஜன் மற்றும் ஹைட்ரஜன் அயனி செறிவை (pH) பொறுத்தே தாவரங்களுக்கு ஊட்டசத்துக்கள் கிடைப்பது நிர்ணயிக்கப்படுகிறது. பயிர் தாவரங் கிளன் சாகுபடிக்கு மிகச்சிறந்த ஹைட்ரஜன் அயனி செறிவு மதிப்பு 5.5 முதல் 6.8 வரை ஆகும்.

மண் ஊட்டச்சத்து :4

  • தாவர ஊட்டங்களுக்கு தேவையான தனிமங்கள், கரிம ஊட்டப்பொருட்கள் ஆகியவற்றினை அயனி வடிவில் கிடைக்கச்செய்ய உதவும் திறனே மண்ணின் வளம் மற்றும் உற்பத்தித் திறன் எனப்படுகிறது.

மண் வெப்பநிலை:5

  • மண் வெப்பநிலையானது தாவரங்களின் புவியியல் பரவலைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது. வேர்கள் மூலம் தண்ணீர் மற்றும் திரவக்கரைசல் உறிஞ்சுதலைக் குறைவான வெப்பநிலை குறைக்கிறது.

மண்வளி மண்டலம் :6

  • மண் துகள்கிடையே காணப்படுகின்ற இடை வெளிகள் மண்வளி மண்டலத்தை அமைக்கிறது. இது ஆக்ஸிஜன் மற்றும் கார்பன்டைஆக்ஸைடு ஆகிய வளிகளைக் கொண்டுள்ளது.

மண் வாழ் உயிரினங்கள் : 7.

  • மண்ணில் காணப்படுகின்ற பாக்டீரியங்கள், பூஞ்சைகள், பாசிகள், புரோட்டோசோவான்கள். நெமட்டோகள், பூச்சிகள் மண் புழு ஆகியவை மண் உயிரினங்கள் என அழைக்கப்படுகின்றன.

 

4. இயற்கை நில அமைவு (அ) நிலபரப்பு என்றால் என்ன? (அ) நிலப்பரப்பு காரணிகள் எவ்வாறு ஒரு பகுதியின் தட்ப வெப்பநிலையை பாதிக்கிறது? 

  • இது புவியின் மேற்பரப்பு வடிவம் மற்றும் PTA – 2 அம்சங்களை ஆய்வது ஆகும். இது இயற்கை நில அமைவு என அழைக்கப்படுகிறது. நிலப்பரப்பு காரணிகள் விரிவகலம், குத்துயரம், மலையின் திசைகள், மலையின் செங்குத்து ஆகிய பண்புகளை உள்ளடக்கியது.

அ. விரிவகலம் மற்றும் குத்துயரம் (Latitudes and Altitudes): 

  • விரிவகலம் எனப்படுவது பூமத்திய ரேகை பகுதி யிலிருந்து காணப்படுகின்ற தூரம், பூமத்திய ரேகை பகுதியில் வெப்பநிலையானது அதிக மாகவும், துருவங்களை நோக்கிப் படிப்படியாகக் குறைந்தும் காணப்படுகின்றன.
  • பூமத்திய ரேகை பகுதியிலிருந்து துருவங்களை நோக்கிக் காணப்படுகின்றன வெவ்வேறு வகையான தாவரக்கூட்டங்கள் படத்துடன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
  • கடல் மட்டத்திலிருந்து காணப்படும் உயரமே குத்துயரம் எனப்படுகிறது. அதிகக் குத்துயரத்தில் காற்றின் வேகம் அதிகமாக உள்ளது. வெப்பநிலை மற்றும் காற்றின் அழுத்தம் குறைந்தும், ஈரப்பதன் மற்றும் ஒளியின் தீவிரம் அதிகரித்தும் காணப்படு கின்றன. இந்தக் காரணிகளால் வெவ்வேறு குத்துயரங்களில் தாவரங்கள் மாறுபட்டுத் தனித் துவமான மண்டலத்தை உருவாக்குகின்றன.

 12th Botany Unit 9 Lesson 6 Additional 5 Marks

ஆ. மலைகளின் நோக்கு திசைகள் (Direction of Mountain):

  • ஒரு மலையின் இரண்டு பக்கங்களும் வெவ் வேறான சூரியஒளி, கதிர்வீச்சு, காற்று செயல்கள் மழை ஆகியவற்றினைப் பெறுகின்றன. இந்த இரண்டு பக்கங்களின் மழை பெறும் பகுதியில் (wind word region) அதிகத் தாவரங் களில் மழை மறைவு பகுதியில் மழை பற்றாக்குறை காரண மாகக் குறைவான தாவரங்களையே காணலாம். இதே போல நீர்நிலைகளான குளங்களில் மண்ணின் சரிவமைப்பு காரணமாக விளிம்பு மற்றும் மையப்பகுதியில் நீர் பல்வேறு ஆழங் களைக் கொண்டும். வேறுபட்டுள்ள அலை இயக்கத்தின் காரணமாகவும் ஒரே பரப்பளவில் வேறுபட்ட பகுதிகளில் பல்வேறு வகையான உயிரினங்களைக் கொண்டுள்ளன.

இ.மலைகளின் செங்குத்தான பகுதி (Steepness of the mountain):

  • குன்று அல்லது மலையின் செங்குத்தான பகுதி மழை நீரை விரைந்து ஓட அனுமதிக்கிறது. இதன் விளைவாக நீரிழப்பு மற்றும் மேல் மண் விரைவாக அகற்றப்பட்டு மண் அரிப்பு நிகழ் கிறது. இதன் காரணமாகக் குறைந்த தாவரக் கூட்ட வளர்ச்சி இங்கு ஏற்படுகிறது. இதன் மறு புறம் உள்ள சமவெளி மற்றும் பள்ளத்தாக்குப் பகுதிகளில் மண்ணில் மேற்பரப்பு நீர் மெதுவாக வடிவதாலும் மற்றும் நீர் நன்கு பராமரிக்கப்படு வதாலும் தாவரக்கூட்டங்கள் இங்கு நிறைந்து உள்ளன.

12th Botany Unit 9 Lesson 6 Additional 5 Marks

5.தாவரங்களின் மீது குறிப்பிட்ட விளைவுகளை ஏற்படுத்தும் உயிரி காரணிகள் யாவை? விளக்குக.

தாவரங்கள் மற்றும் விலங்குகள் ஆகிய உயிரினங்களுக்கிடையே ஏற்படும் இடைச்செயல் விளைவுகள் உயிரிக்காரணிகள் என அழைக்கப்படுகின்றன.
நேர்மறை இடைச்செயல்கள் (Positive interactions):
இவ்வகை இடைச்செயல்களில், பங்கேற்கும் சிற்றினங்களில் ஒன்று மட்டுமே அல்லது இரண்டுமே பயன் அடைகின்றன. (எ.கா) ஒருங்குயிரிநிலை (Mutualism) உடன் உண்ணும் Benev (Commensalism).
அ) ஒருங்குயிரி நிலை (Mutualism):
  • இங்கு இரண்டு வகையான சிற்றினங்களுக்கு இடையில் ஏற்படும் கட்டாய இடைச்செயல் களால் இரண்டு சிற்றினங்களும் பயனடை கின்றன.

நைட்ரஜன் நிலைப்படுத்திகள்(Nitrogen fixation): 

  • லெகூம் வகை தாவரங்களின் வேர்களில் காணப் படும் முடிச்சுகளில் ரைசோபியம் (பாக்டீரியம்) ஒருங்குயிரி நிலையில் வாழ்கிறது. லெகூம் தாவர வேர்களிலிருந்து ரைசோபியம் உணவினை எடுத்துக் கொள்கிறது. அதற்குப் பதிலாக வளி மண்டல நைட்ரஜனை நிலைநிறுத்தி நைட்ரேட் டாக மாற்றி ஒம்புயிரித் தாவரங்களுக்குக் கிடைக்குமாறு செய்கிறது.

நீர் பெரணியாகிய அசோலா மற்றும் நைட்ரஜனை நிலைநிறுத்தும் சயனோபாக்டீரியம் (அன்பீனா) லைக்கன்கள் – ஆல்கா மற்றும் பூஞ்சையிடையே யான ஒருங்குயிரி நிலை.

ஆ) உடன் உண்ணும் நிலை (Commensalism) :

  • இரு வேறு சிற்றினங்களுக்கு இடையிலான இடைச்செயல்களால் ஒன்று பயன் அடைகிறது. மற்றொன்று பயன் அடைவதில்லை அல்லது பாதிப்பு அடைவதில்லை.

குடுவைத் தாவரம் பூச்சியுடன்

தொற்றுத்தாவரங்கள், வன்கொடிகள், தொங்கும் மாஸ்கள், பெப்பரோமியா. மணித்தாவரம், அஸ்னியா (லைக்கன்) ஆகியவை தாவரங் களுக்கான பிற எடுத்துக்காட்டுகளாகும்.
எதிர்மறை இடைச்செயல்கள் (Negative interactions); 
  • பங்கேற்கும் சிற்றினங்களில் ஒன்று பயன் அடைகிறது. ஆனால் மற்றொன்று பாதிக்கப் படுகிறது. இது எதிர்மறை இடைச்செயல் என்று அழைக்கப்படுகின்றது. (எ.கா) கொன்று உண்ணும் வாழ்க்கை முறை, ஒட்டுண்ணி வாழ்க்கை, போட்டியிடுதல் மற்றும் அமன் சாலிஸம்.

 

6.வறண்ட நீர்த்தாவரங்களின் புறத்தோற்ற தகவமைப்புகளை எழுதுக. 

புற அமைப்பில் தக அமைவுகள்

வேர் 

  • வேர்த்தொகுப்பு நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது. தண்டு தொகுப்பினைக் காட்டிலும் வேர்த்தொகுப்பு அதிக வளர்ச்சி அடைந்துள்ளது.
  • வேர் தூவிகள் மற்றும் வேர் மூடிகள் நன்கு வளர்ச்சியடைந்துள்ளன.

தண்டு 

  • தண்டு பெரும்பாலும் கடினமானது. கட்டை தன்மையுடையது. இது தரைமேலி அல்லது தரைகீழ்க் காணப்படலாம்.
  • தண்டு மற்றும் இலைகளின் மேற்பரப்புகளில் மெழுகு பூச்சு காணப்படுவதுடன் அடர்த்தியான தூவிகளும் காணப்படுகின்றன.
  • சில வறண்ட நிலத் தாவரங்களின் தண்டின் அனைத்துக் கணுவிடைப் பகுதிகளும் சதைப் பற்றுள்ள இலை வடிவ அமைப்பாக மாற்ற மடைந்துள்ளன. இவை இலைத்தொழில் தண்டு (ஃபில்லோகிளாட்) (ஒப்பன்ஷியா) எனப்படு கின்றன.
  • வேறு சில தாவரங்களில் ஒன்று அல்லது அரிதாக இரண்டு கணுவிடைப் பகுதிகள் சதைப்பற்றுள்ள பசுமையான அமைப்பாக மாறுபாடு அடைந்துள்ளது. இவை கிளாடோடு (ஆஸ்பராகஸ்) எனப்படும்.
  • சிலவற்றில் இலைக் காம்பானது சதைப்பற்றுள்ள இலை போன்று உருமாற்றம் அடைந்துள்ளது. இது காம்பிலை (ஃபில்லோடு) (அக்கேஷியா வறண்ட நிலத்தாவரங்கள் மெலனோசைலான்) என அழைக்கப்படுகிறது.

 12th Botany Unit 9 Lesson 6 Additional 5 Marks

அ) சதைப்பற்றுடைய வறண்ட நிலத் தாவரம்

ஆ) சதைப்பற்றற்றது -பல்லாண்டு
வாழ்பவை-கெப்பாரிஸ்
இ) கிளடோடு – அஸ்பராகஸ்

ஈ)காம்பிலை – அக்கேஷியா

  • தண்டு, இலை ஆகியவை பல தூவிகளால் சூழப் பட்டுள்ள வறண்ட நிலத் தாவரங்கள் ட்ரைக்கோஃபில்லஸ் தாவரங்கள் என அழைக்கப்படுகின்றன.  எடுத்துக்காட்டு: பூசணி வகைகள். (மிலோத்ரியா மற்றும் முகியா)

இலைகள்

  • சூரிய ஒளி மற்றும் வெப்பத்தினை பிரதிபலிக்க உதவும் தோல் போன்றும், பளபளப்பாகவும் உள்ள இலைகள் பொதுவாகக் காணப் படுகின்றன.
  • யூஃப்போர்பியா, அக்கேஷியா, ஜிஜிபஸ், கெப்பாரிஸ் போன்ற தாவரங்களில் இலையடிச் செதில்கள் முட்களாக மாறுபாடு அடைந்துள்ளன.
  • முழு இலைகளும் முட்களாகவோ (ஒபன்ஷியா) மற்றும் செதில்களாகவோ (ஆஸ்பராகஸ்) மாற்றுரு அடைந்து காணப்படுகின்றன.

 

7. நீர்வாழ் தாவரங்களின் உள்ளமைப்பு தக அமைவுகள் மற்றும் வாழ்வியல் தக அமைவுகள் யாவை?

  • கியூட்டிக்கள் முழுமையாகக் காணப்படாமலோ அல்லது காணப்பட்டால் மெல்லியதாகவோ அல்லது குறைவாகவோ வளர்ச்சி அடைந்து இருத்தல்,
  • ஓர் அடுக்கு புறத்தோல் காணப்படுவது
  • நன்கு வளர்ச்சியடைந்த ஏரங்கைமாவினால் ஆன புறணி காணப்படுவது
  • வாஸ்குலத் திசுக்கள் குறைவான வளர்ச்சி அடைந்துள்ளது.
  • வேரூன்றி வெளிப்பட்ட நீர் வாழ்த்தாவரங்களில் வாஸ்குலத்திசுக்கள் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளது. வேரூன்றி வெளிப்பட்ட நீர்வாழ் தாவரங்களைத் தவிர மற்ற தாவரங்களில் வலுவைக் கொடுக்கும் திசுக்கள் பொதுவாகக் காணப்படுவதில்லை. பித் செல்கள் ஸ்கிளிரங்கைமாவினால் ஆனது.

வாழ்வியல் தக அமைவுகள் (Physiological adaptations of hydrophytes):

  • நீர்வாழ் தாவரங்கள் காற்றிலாச் சூழலைத்தாங்கிக் கொள்ளும் திறன் கொண்டது.
  • இவை வாயு பரிமாற்றத்திற்கு உதவும் சிறப்பு உறுப்புகளைக் கொண்டுள்ளது.

 

8. தொற்றுத் தாவரங்கள் என்றால் என்ன? அதன் புறஅமைப்பு தகவமைவுகள் யாவை? 

தொற்றுத்தாவரங்கள் (Epiphytes): 
  • மற்ற தாவரங்களின் மேல் (ஆதாரத் தாவரங்கள்) தொற்றி வாழ்பவை தொற்றுத் தாவரங்கள் எனப் படுகின்றன. இதில் ஆதாரத் தாவரத்தை உறை விடத்திற்காக மட்டுமே பயன்படுத்திக் கொள் கின்றன. ஆனால் நீர் அல்லது உணவினைப் பெற்றுக் கொள்வதில்லை. தொற்றுத் தாவரங்கள் பொதுவாக வெப்ப மண்டல மழைக்காடுகளில் அதிகம் காணப்படுகின்றன.
  • (எ.கா) ஆர்கிட்கள், (வாண்டா) வன்கொடிகள், தொங்கும் மாண்கள், மணி தாவரங்கள்.

புறஅமைப்பில் தக அமைவுகள் :

  • வேர்த்தொகுப்புகள் விரிவாக வளர்ச்சி அடைந்து உள்ளது. இதில் இருவகை வேர்கள் காணப்படு கின்றன.

இவை 

அ) பற்றுவேர்கள் மற்றும்
ஆ)உறிஞ்சு வேர்கள்
  • தொற்றுத் தாவரங்களின் பற்றுவேர்கள் (Clinging roots) ஆதாரத் தாவரங்களின் மீது உறுதியாக நிலை நிறுத்த உதவுகின்றன.
  • நிலப்புற வேர்கள் (Aerial roots) பசுமையானது. இவை கீழ்நோக்கித் தொங்கிக் கொண்டி ருப்பவை. மேலும் இது வளி மண்டலத்திலிருந்து ஈரப்பதத்தை உறிஞ்சுவதற்காக வெலாமனி (Velamen) என்ற பஞ்சு போன்ற திசுவுடையது.
  • சில தொற்றுத் தாவரங்களின் தண்டு சதைப் பற்றுள்ளதாகவும் மற்றும் போலி குமிழ்களையோ அல்லது கிழங்குகளையோ உருவாக்குகின்றன. இலைகள் பொதுவாகக் குறைந்த எண்ணிக்கை யிலும் தடிப்பான தோல் போன்றும் காணப்படு கின்றன.
  • கொன்று உண்ணிகளிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ளத் தொற்று தாவரக்கூட்டங்களில் மிர்மிகோஃபில்லி பொதுவாகக் காணப்படுகிறது.

 

9. உள்ளமைப்பு மற்றும் வாழ்வியல் தக அமைவுகள் தொற்றுத் தாவரங்களில் எவ்வாறு உள்ளன என்று எழுதுக.

  • பல்லடுக்கு புறத்தோல் காணப்படுகிறது. வெலாமன் திசுவினை அடுத்துச் சிறப்பாக அமைந்த எக்சோடெர்மிஸ் (Exodermis) அடுக்கு ஒன்று காணப்படுகிறது.
  • நீராவிப் போக்கினை வெகுவாகக் குறைப்பதற் காகத் தடித்த கியூட்டிகிள் மற்றும் உட்குழிந்த இலைத்துளைகள் ஆகியன காணப்படுகின்றன.
  • சதைப்பற்றுள்ள தொற்றுத் தாவரங்களில் நீரினைச் சேமிக்க நன்கு வளர்ச்சி அடைந்த பாரங்கைமா திசுக்கள் காணப்படுகின்றன.வெலாமன் திசுக் கொண்டு ஆர்கிட் நில மேல் வேரின் குறுக்குவெட்டுத் தோற்றம் வாழ்வில் தக அமைவுகள் : நீரைச் சிறப்பாக உறிஞ்ச வெலாமன் திசு உதவுகிறது.

10. உவர் சதுப்பு நில வாழ்த்தாவரங்கள் (அ) கனிக்குள் உள்ளமைப்பு மற்றும் வாழ்வின் தகஅமைவுகள் விதைமுளைத்தல் செயலின் காணப்படும் பற்றி எழுதுக. 

உள்ளமைப்பில் தக அமைவுகள் :

  • தண்டில் காணப்படும் சதுர வடிவப் புறத்தோல் செல்கள் மிகையான க்யூட்டின் பூச்சைப் பெற்றிருப்பதுடன் அவற்றில், எண்ணெய்ப் பொருட்கள் மற்றும் டான்னின் நிரம்பிக் காணப்படுகின்றன.
  • தண்டின் புறணிப் பகுதியில் வலுவூட்டுவதற்காக நட்சத்திர வடிவ ஸ்கிலிரைட்களும் ‘H’ வடிவ தடித்த அடர்த்தியற்ற ஸ்பிகியூல்களும் காணப் படுகின்றன.
  • இலைகள் இருபக்க இலைகளாகவோ அல்லது சமபக்க இலைகளாகவோ இருப்பதுடன் உப்பு சுரக்கும் சுரப்பிகளையும் பெற்றுள்ளன.

வாழ்வியல் தக அமைவுகள்: 

  • சில தாவரங்களின் செல்கள் அதிக அழுத்தச் சவ்வூடு பரவல் அழுத்தத்தைக் கொண்டுள்ளன. விதை முளைத்தலானது கனி தாய் தாவரத்தில் இருக்கும் போதே நடைபெறுகின்றது (கனிக்குள்) விதை முளைத்தல்).

 

11. நீர் மூலம் விதை பரவும் தாவரங்களில் காணப்படும் தகஅமைவுகள் யாவை? 

  • நீர்நிலைகள் அல்லது நீர் நிலைகளுக்கு அருகில் வளரும் தாவரங்களின் விதைகள் மற்றும் கனிகள் பொதுவாக நீர் மூலமாகப் பரவுகின்றன.
  • தலைகீழ்க் கூம்பு வடிவப் பூத்தளம் (Receptacle) கொண்டு அவற்றில் காற்று அறைகள் காணப் படுதல். (எ.கா.) தாமரை
  • கனியில் மெல்லிய வெளியுறையும், நார்களாலான நடு உறையினையும் கொண்டிருப்பது. (எ.கா) தேங்காய்
  • இலேசான சிறிய மற்றும் காற்றினை உள்ளடக்கிய விதை ஓட்டு வளரிகளை விதைகள் பெற்று இருப்பது. (எ.கா) அல்லி
  • உப்பியத்தன்மையுடன் கூடிய கனிகளைக் கொண்டிருத்தல். (எ.கா) ஹெரிட்டீரா லிட்டோராலிஸ்
  • தானாகவே காற்றில் மிதக்க இயலாத தன்மை கொண்ட விதைகள் ஓடு நீரின் வேகத்தினால் அடித்துச் செல்லப்படுகின்றன. (எ.கா) தேங்காய்

 

12. காற்று ஒரு முக்கிய காலநிலை காரணி சூழியலின் இதன் பங்கினை விளக்குக.

  • விசையுடன் கூடிய இயங்கும் வளி, காற்று என அழைக்கப்படுகிறது. இது முக்கியச் சூழல் காரணி ஆகும்.

வளிமண்டலத்திலுள்ள வளிகளின் கலவை

  • நைட்ரஜன் 78%, ஆக்ஸிஜன் 21%. கார்பன்டை ஆக்ஸைடு 0.03%, ஆர்கானி மற்றும் இதர வாயுக்கள் 0.93%, நீராவி வளி மாசுக்கள் தூசி, புகைத் துகள்கள். நுண்ணுயிரிகள், மகரந்தத் துகள்கள், வித்துக்கள் போன்றவை காற்றில் காணப்படுகின்றன. ஏனைய கூறுகளாகும்.
  • காற்றின் வேகத்தை அளவிடப் பயன்படுத்தப் படும் கருவி அனிமோமீட்டர் ஆகும்.
  • எனவே காற்று ஒரு முக்கிய காலநிலை காரணி ஆகும்.
13. வெடித்தல் வழிமுறை என்றால் என்ன? இவ்வகை கனிகளில் காணப்படும் தகஅமைவுகள் யாவை?
  • சில கனிகள் திடீரென்று ஒரு விசையுடன் வெடித்து அதனுடைய விதைகள் அந்தத் தாவரத்தின் அருகிலேயே பரவுதல்.
  • சில கனிகளைத் தொடுவதன் மூலம் அவை திடீரென வெடித்து விதைகள் மிகுந்த விசை யுடன் தூக்கி எறியப்படுகின்றன. (எ.கா) காசித்தும்பை
  • சில கனிகளில் மழை தூரலுக்குப் பின், திடீரௌச் சத்தத்துடன் வெடித்து விதைகளானது பரவப்படுகின்றன. (எ.கா) ருயில்லியா மற்றும் கிரசான்ட்ரா
  • சில கனிகள், பட்டாசு போன்ற அதிகச் சத்தத்துடன் வெடித்து அனைத்து திசைகளிலும் விதைகளைச் சிதறடிக்கச் செய்கின்றன. (எ.கா) பாஹினியா வாஹலி ஒட்டகப்பாதக்கொடி (Camel’s foot climber)
  • கனிகள் முதிர்ச்சியடைந்தவுடன் விதைகளைச் சுற்றியுள்ள திசுக்கள் பிசின் போன்ற அடர்த்தியான திரவமாக மாற்றமடைவதால் கனிகளின் உள்ளே அதிக விறைப்பழுத்தம் (High turgor presure) ஒன்று உண்டாக்கப்பட்டுக் கனியானது வெடித்து விதைகள் பரவ உதவுகிறது.(எ.கா) எக்பெல்லியம் – எலேட்டிரியா என்ற பீய்ச்சும் வெள்ளரி (Squirting cucumber) கைரோ கார்பண் மற்றும் டிப்டீரோ கார்ப்பஸ்.

Leave a Reply