12th Botany Unit 9 Answers

 12th Botany Unit 9 Lesson 6 Additional 2 Marks

 12th Botany Unit 9 Lesson 6 Additional 2 Marks

TN 12th Bio-Botany Unit 9, 6th lesson Additional 2 Marks Question and answers. Tamil Medium. Additional 1 Marks, 2 Marks, 3 Marks, 5 Marks Question and answers for 12th Students and NEET Students for Tamil Medium. 12th Botany Samacheer Kalvi Guide. 12th Botany Unit 9 Full Answers. TN 12th Standard Unit 9 Lesson 6 Book Back All Question with answers Tamil Medium. 12th Samacheer kalvi Guide Lesson 6 . தாவரச் சூழ்நிலையியல் சூழ்நிலையியல் கோட்பாடுகள் Answer key in Tamil Medium Students Guide 360. HSC 12th Botany Lesson 6 Book Back Answers.

12th Bio-Botany Unit 9 | Lesson 6. தாவரச் சூழ்நிலையியல் சூழ்நிலையியல் கோட்பாடுகள் – Additional 2 Marks

 12th Botany Unit 9 Lesson 6 additional 2 Marks

6.பாடம் |  V.இரண்டு மதிப்பெண் வினாக்கள்

1.உயிரி நில அமைவு மற்றும் சூழ்நிலை அமைவு என்றால் என்ன?

  • ஒரு குழுமத்தின் சூழலுக்கு உயிரி நில அமைவு என்று பெயர்.
  • ஒரு உயிரினத்தின் வாழிடம் மற்றும் செயல் வாழிடம் ஆகியவற்றை கூட்டாக சூழ்நிலை அமைவு என்று பெயர்.

 

2. உயிர்மம் என்றால் என்ன? 

  • உயிர்மம் எனப்படுவது பெரிய இயற்கையாக காணப்படும் தாவர மற்றும் விலங்குகள் அமைந்த வாழிடம் (எ.கா) காடுகள், தூந்திரா.
3. பசுமை மாறாக் காடுகளுக்கும், ஸ்கிளிரோபில்லம் காடுகளுக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?

  • இந்திய மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள புல்வெளி சிற்றினங்கள் அமெரிக்காவின் குளிர் பிரதேசப் புலவெளி சிற்றினங்களிலிருந்து வேறுபடுகின்றது. ஆயினும் இவை அனைத்தும் சூழ்நிலையியலில் புல்வெளி, முதல் நிலை உற்பத்தியாளர்களே.
  • வகைப்பாட்டியலில் வேறுபட்ட சிற்றினங்கள் வெவ்வேறு புவிப்பரப்புகளில் ஒரே மாதிரியான வாழிடங்கள் பெற்றிருந்தால் அவற்றைச் சூழ்நிலையியல் சமானங்கள் (Ecological Equivalents) என அழைக்கின்றோம்.

பசுமை மாறாக் காடுகள்

  • இவை ஆண்டு முழுவதும் மழை பெய்யும் பகுதிகளில் காணப்படுகிறது.

ஸ்கிளிரோபில்லஸ் காடுகள்

  • இவை குளிர்காலத்தில் அதிக மழை பெய்யும் கோடைகாலத்தில் குறைவான மழையையும்பெறும் பகுதிகளில் காணப்படுகிறது.

 

4. விரிவகல தாவரக்கூட்டம் மற்றும் குத்துயர தாவரக் கூட்ட மண்டலம் யாவை?
1.வெப்பமண்டல மழைக்காடுகள்
2.புல்வெளி அல்லது பாலைவனம்
3.இலையுதிர் காடுகள்
4.ஊசியிலைக்காடுகள்
5.துந்திரா பகுதி
6.வெண்பனி

5. யூரிஹாலைன் மற்றும் ஸ்டேனோஹாலைன் ஆகியவற்றை வேறுபடுத்துக.
யூரிஹாலைன்

  1. இவை உப்புத்தன்மை அதிகமான நீரிலும் வாழக்கூடிய உயிரினங்கள்
  2. (எ.கா) கடல் பாசிகள் மற்றும் கடல் வாழ் ஆஞ்சியோ ஸ்பெர்ம்கள்
ஸ்டேனோஹாலைன்

  1. இவை குறைவான உப்புத்தன்மை உள்ள நீரில் மட்டுமே வாழக்கூடிய உயிரினங்கள்.
  2. (எ.கா) கழிமுகத்துவாரத் தாவரங்கள்

 

6. பசுமை இல்ல விளைவு (அ) ஆல்பிடோ விளைவு என்றால் என்ன?

  • சிறிய துகள்களைக் கொண்ட ஏரோசால்கள் வளி மண்டலத்தினுள் நுழையும் சூரியக் கதிர் வீச்சினை பிரதிபலிக்கின்றன. இது ஆல்பிடோ விளைவு எனப்படுகிறது.

 

7. தீச்சுட்டிக் காட்டிகள் வரையறு (அ) டெரிஸ் மற்றும் பைரோனிமா தாவரங்கள் தீ சுட்டிகாட்டிகள் எனப்படுகின்றன ஏன்? 

  • டெரிஸ் (பெரணி) மற்றும் பைரோனிமா(பூஞ்சை) தாவரங்கள் எரிந்த மற்றும் தீயினால் அழிந்த பகுதிகளைச் சுட்டி காட்டுகின்றன.எனவே இவை தீச் சுட்டிக்காட்டிகள்.

 

8.விளிம்பு விளைவு என்றால் என்ன?

  • சில சிற்றினங்கள் இரு வாழ்விடச் சூழலின் விளைவு காரணமாக இடைச்சூழலமைப்பு பகுதியில் காணப்படின் அது விளிம்பு விளைவு எனப்படுகிறது.
  • (எ.கா) ஆந்தை காடுகளுக்கும் புல்வெளிகளுக்கும் இடையேயான இடைச்சூழலமைப்பு பகுதியில் காணப்படுகிறது.

 

9. இடைச்சூழலமைப்பு என்றால் என்ன ? 

  • இரண்டு சூழல்மண்டலங்களுக்கு இடையே காணப்படும் இடைநிலை மண்டலம் இதுவாகும்.
  • (எ.கா) ஆந்தை காடுகளுக்கும் புல்வெளி களுக்கும் இடையேயான இடைச்சூழலமைப்பு பகுதியில் காணப்படுகிறது.

 

10. சமவெளி மற்றும் பள்ளத்தாக்குப் பகுதிகளில் தாவரக் கூட்டங்கள் அதிகமாகவும் மலையின் பகுதியில் குறைந்த தாவரக் கூட்ட வளர்ச்சி காணப்படுவது ஏன்?

  • மலையின் செங்குத்து பகுதி மழை நீரை விரைந்து ஓட அனுமதிக்கிறது. இதனால் நீரிழப்பு மற்றும் மேல் மண் விரைவாக அகற்றப்பட்டு மண் அரிப்பு நிகழ்கிறது.
  • இதனால் இங்கு குறைந்த தாவரக்கூட்ட வளர்ச்சி உள்ளது.
  • இதன் மறுபுறம் உள்ள சமவெளி, பள்ளத்தாக்கில் மண்ணின் மேற்பரப்பில் நீர் மெதுவாக வடிவ தாலும் நீர் நன்கு பராமரிக்கப்படுவதாலும் தாவரக் கூட்டங்கள் இங்கு நிறைந்துள்ளன.

 

11. பின்வரும் தொற்று தாவர வகைக்கு எ.கா. தருக.
a) முழு தண்டு ஒட்டுண்ணி:
b) முழு வேர் ஒட்டுண்ணி:

விடை : a) விஸ்கம், லொரான்தஸ்,
b) பெலனோஃபோரா, ஓரபாங்கி, ரெஃப்லீசியா
12. பின்வரும் பாதிஒட்டுண்ணி (அ) பகுதி ஒட்டுண்ணி வகைக்கு எ.கா. தருக.
a)தண்டு வாழ்பகுதி ஒட்டுண்ணி
b) வேர் வாழ் பகுதி ஒட்டுண்ணி :
விடை : n) விஸ்கம், லோரான்தஸ்,
b) சேண்டலம் (சந்தனக் கட்டை) 
13. யூட்ரிகுலேரியா (பை தாவரம்) டையோனியா வீனஸ் பூச்சி உண்ணும் தாவரம், சாரசீனியா போன்ற பூச்சிகள் மற்றும் விலங்குகளைச் சாப்பிடு வதன் மூலம் நைட்ரஜனை பெறுகின்றன. இவற்றில் எந்த வகையான இடைச்செயல்கள் காணப்படுகின்றன? 
  • இங்கு எதிர்மறை இடைச்செயலில் ஒன்றானகொன்று உண்ணும் வாழ்க்கை இரண்டு வகையான உயிரினங்களுக்கிடையே நடைபெறுகிறது.

 

14. ஒத்த சிற்றினங்களுக்கு இடையே நிகழும் போட்டி என்றால் என்ன?

  • ஒரே சிற்றினத்தைச் சேர்ந்த தனி உயிரிகளுக் கிடையேயான இடைச்செயல் ஆகும்.
  • இது மிகவும் கடுமையானது ஏனென்றால் தேவைஒரே விகிதத்தில் எல்லா உறுப்பினருக்கும்இருப்பதேயாகும்.
  • (எ.கா) உணவு, வாழிடம், மகரந்தசேர்க்கை இவற்றிற்கான போட்டி

 

15. போட்டியிடுதல் என்றால் என்ன? 

  • இதில் இருவகையான உயிரினங்கள் (அ) சிற்றினங்களுக்கு இடையிலான இடைச்செயல் களில் இரண்டு உயிரினங்களும் பாதிப்படை கின்றன.

 

16. ஜீகுலோன் என்றால் என்ன? 

  • (அ) அமென்சாலிசம் எடுத்துக்காட்டுடன் விவரி ஜீகுலோன் நிக்ரா என்ற கருப்புவால்நெட் தாவரத் தின் கனிகள் மேல் ஓடு மற்றும் வேர்களில் ஜீகலோன் என்ற அல்கலாய்டைச் சுரந்து அருகில் வளரும் ஆப்பிள், தக்காளி, ஆல்ஃபால்ஃபா போன்ற தாவரங்களின் நாற்றுகள் வளர்ச்சியை தடுக்கிறது. இது அமன்சாலிசம் எனப்படும் எதிர் மறை இடைச்செயலாகும்.

 

17. ட்ரைக்கோஃபில்லஸ் தாவரங்கள் என்றால் என்ன? 

  • தண்டு, இலை ஆகியவை பல தூவிகளால் சூழப் பட்டுள்ள வறண்ட நிலத்தாவரங்கள் ட்ரைக்கோ ஃபில்லஸ் தாவரங்கள் என அழைக்கப்படு கின்றன. (எ.கா) பூசணி வகைகள் (மிலோத்ரியா மற்றும் முகியா),

 

18. ஆர்கிட்கள், பெரணிகள், வன்கொடிகள், தொங்கும் மாஸ்கள், பெப்பரோமியா, மணித்தாவரம். லைக்கன்கள் ஆகியவை தொற்றுத் தாவரம் ஏன்? (அ) தொற்றுத்தாவரம் என்றால் என்ன? 

  • ஒரு தாவரமானது மற்றொரு தாவரத்தின் மீது எந்தவொரு தீங்கும் விளைவிக்காமல் தொற்றி வாழ்வது தொற்றுத்தாவரம் எனப்படும்.
  • இது உடன் உண்ணும் நிலை இடைச்செயல் ஆகும்,
  • இதில் ஒன்று பயன் அடைகிறது மற்றொன்றுபயன் அடைவதில்லை.

 

19. ட்ரோப்போபைட்கள் என்றால் என்ன? 

  • கோடைக்காலங்களில் வறண்ட நிலத்தாவரங்கள் மழைக்காலங்களில் வனநிலத் தாவரங்களாகவோ (அ) நீர்வாழ் தாவரங்களாகவோ செயல்படும் தாவரங்கள் ட்ரோப்போபைட்கள் என அழைக்கப்படுகின்றன.

 

20. மேப்பிள், கைரோகார்ப்பஸ், டிப்டிரோகார்பஸ் மற்றும் டெர்மிடினேலியா இவற்றில் எந்த வகை யான தகவமைப்புகள் மூலம் விதைகள், கனிகள் பரவுகின்றன ? 

  • தட்டையான அமைப்பு கொண்ட இறக்கைகள் கொண்ட விதைகள் மற்றும் கனிகள் மூலம் காற்றில் பரவுகின்றன.

 

21. நான் யார் ? யூகிக்க. நான் விதை மேல்வளர்சதையினை கொண்டு எறும்புகள் மூலம் பரவுகின்றேன் ?

  • விதை மேல்வளர் சதை யூஃபோர்பியேசியே தாவர குடும்பத்தின் விதைகளின் நுண்துழை பகுதியில் காணப்படுகிறது.
  • இது எறும்புகளின் லார்வாக்களுக்கு உணவாக பயன்படுவதால் எறும்புகள் இந்த விதையை எடுத்து செல்கிறது.
  • இந்த விதை மேல்வளர் சதையை உண்ட பின் எறும்பு புற்றுகளின் பகுதியில் விதைகள் விடப் படுகின்றன.
  • அங்கேயே விதைகள் முளைக்கின்றன. இந்த முறைக்கு மிரமிக்கோஃபில்லி எனப்படும்.

 

22. வறண்ட நிலத்தாவரங்கள் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை? 

  • உலர் (அ) வறள் நிலச்சூழலில் வாழ்கின்ற தாவரங்கள் வறண்ட நிலத்தாவரங்கள் எனப்படு

அவை. 

அ) இயல்நிலை வறட்சிகின்றன.

ஆ) செயலநிலை வறட்சி என இருவகைப்படும்.

23. மாசடைந்த மண்ணிலிருந்து காட்மியத்தை அகற்றும் முறை யாது? எடுத்துக்காட்டுடன் வரையறுக்கவும்.

  • நெல், ஆகாயத்தாமரை போன்ற தாவரங்கள் காட்மியத்தை தங்களது புரதத்தோடு இணையச் செய்து சகிப்புத்தன்மையை ஏற்படுத்திக்கொள்கின்றன.
  • இந்தத் தாவரங்கள், மாசடைந்த மண்ணிலிருந்து காட்மியத்தை அகற்றவும் பயன்படுகின்றன. இதற்கு தாவரங்களால் சீரமைக்கப்படுதல் (Phyto remediation) என்று பெயர்.

 

24. பெடாலஜி (pedology) வரையறு. 

  • மண்ணைப் பற்றிப் படிக்கும் பிரிவு பெடாலஜி (pedology) எனப்படும்.

 

25. தொல்காலநிலையியல் என்றால் என்ன? எ.கா. தருக. 

  • தற்போது புவியில் வாழும் தாவரங்கள் மற்றும் சூழல் மண்டலம் ஆகியவை கற்காலச் சூழ்நிலையை வடிவமைக்க உதவுகிறது. எ.கா.பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் பனி குமிழ்களுக்குள் காணப்படும் மகரந்தம், பவளப் பாறை. மட்கிய விலங்கு மற்றும் தாவரங்கள்.

 

26. ஸ்கிளிரோபில்லஸ் காடுகள் என்றால் என்ன? 

  • குளிர் காலத்தில் அதிக மழையையும் கோடை காலத்தில் குறைவான மழையையும் பெறும் பகுதிகள் ஸ்கிளிரோபில்லஸ் காடுகள் என அழைக்கப்படுகின்றன.

 

27. அனிமோமீட்டர் வரையறு:

  • காற்றில் காணப்படும் புகைத்துகள்கள், வித்துக்கள், நுண்ணுயிரிகள், தூசி, நீராவி, வளி மாசுக்கள், மகரந்தத் துகள்கள் போன்றவை காற்றில் காணப்படும் கூறுகளாகும்.
  • காற்றின் வேகத்தை அளவிடுவதற்குப் பயன்படும் கருவி அனிமோ மீட்டர் எனப்படும்.

 

28. நைட்ரஜன் நிலைப்படுத்திகள் யாவை? 

  • லெகூம் வகை தாவரங்களின் வேர் முடிச்சுகளில் ரைசோபியம் (பாக்டீரியம்) ஒருங்குயிரிநிலையில் வாழ்கிறது.
  • லெகூம் தாவர வேர்களிலிருந்து ரைசோபியம் உணவினை எடுத்துக் கொள்கிறது.
  • அதற்குப் பதிலாக வளிமண்டல நைட்ரஜன் நிலைநிறுத்தி நைட்ரேட்டாக மாற்றி ஓம்புயிரித் தாவரங்களுக்குக் கிடைக்குமாறு செய்கிறது.

Leave a Reply