12th Botany Unit 10 Lesson 9 Book Back Answers

 12th Botany Unit 10 Lesson 9 Book Back Answers

TN 12th Bio-Botany Unit 10, 9th lesson Book Back Question and Answers, 9th Lesson Book Back Answers Tamil Medium. Additional 1 Marks, 2 Marks, 3 Marks, 5 Marks Question and answers for 12th Students and NEET Students for Tamil Medium. 12th Botany Samacheer Kalvi Guide.. 12th Botany Unit 9 Full Answers. TN 12th Standard Unit 9 Lesson 8 Book Back All Question with answers Tamil Medium. 12th Samacheer kalvi Guide Lesson 8 . சுற்றுச்சூழல் பிரச்சனைகள் Answer key in Tamil Medium Students Guide 360. HSC 12th Botany Lesson 8 Book Back Answers.

12th Bio-Botany Unit 10.பொருளாதாரத் தாவரவியல் | Lesson 9. பயிர் பெருக்கம் – Book Back Answers

 

பகுதி-I. புத்தக வினாக்கள்

1. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

 
1.கூற்று: மரபணுவிய வேறுபாடுகள் தேர்ந்தெடுத்தலுக்கு மூலப் பொருட்களைத் தருகின்றன. 
காரணம் : மரபணுவிய வேறுபாடுகள் ஒவ்வொரு தனித்த உயிரியின் மரபணு வகையத்திலிருந்து வேறுபடுகின்றன 
அ) கூற்று சரி காரணம் தவறு
ஆ) கூற்று தவறு காரணம் சரி
இ) கூற்று மற்றும் காரணம் சரி
ஈ) கூற்று மற்றும் காரணம் தவறு
விடை : ஆ) கூற்று தவறு காரணம் சரி
2.வளர்ப்புச் சூழலுக்கு உட்படுத்தப்படும் பல்வேறு தாவரங்களின் வரலாற்றைப் படிப்பதற்கு முன்னர் அங்கீகரிக்கப்பட வேண்டிய ஒன்று
அ) தோற்ற மையங்கள்
ஆ) வளர்ப்புச்சூழலுக்கு உட்படுத்தப்படும் மையங்கள்
இ)கலப்புயிரியின் மையங்கள்
ஈ) வேறுபாட்டின் மையங்கள்
விடை: அ) தோற்ற மையங்கள்
3.பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.
அ) கூட்டுத்தேர்வு-புறத்தோற்றப் பண்புகள்
ஆ) தூயவழித்தேர்வு-மீண்டும் மீண்டும் நடைபெறும் தன் மகரந்தச்சேர்க்கை
இ) நகல் தேர்வு-பாலினப்பெருக்கம் செய்பவை
ஈ) இயற்கைத் தேர்வு-இயற்கையின் ஈடுபாடு.
விடை: இ)நகல்தேர்வு – பாலினப்பெருக்கம் செய்பவை
4.பயிர் பெருக்கத்தில் வேகமான முறை 
அ) அறிமுகப்படுத்துதல்
ஆ) தேர்ந்தெடுத்தல்
இ) கலப்பினமாதல்
ஈ) சடுதிமாற்றப் பயிர்பெருக்கம்
விடை : ஆ) தேர்ந்தெடுத்தல்
5. தெரிவு செய்யப்பட்ட உயர்ரக,பொருளாதாரப் பயன்தரும் பயிர்களை உருவாக்கும் முறை
அ) இயற்கைத்தேர்வு
ஆ) கலப்புறுத்தம்
ஈ) உயிரி – உரங்கள்
இ) சடுதிமாற்றம்
விடை : ஆ) கலப்புறுத்தம் 
6. பயிர் பெருக்கத்தின் மூலம் மரபணு வகையம் கொண்ட ஒரே மாதிரியான தாவரங்களைப் பெறும்முறை
அ) நகலாக்கம்
ஆ) ஒற்றைமடியம்
இ) தன்பன்மடியம்
ஈ) மரபணு தொகையம்
விடை : அ) நகலாக்கம்
7.வெளியிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இரகங்கள் மற்றும் தாவரங்களைப் புதிய சூழலுக்குப் பழக்கப்படுத்துவது
அ) நகலாக்கம்
ஆ) கலப்பின வீரியம்
இ) தேர்ந்தெடுத்தல்
ஈ) அறிமுகப்படுத்துதல்
விடை : ஈ) அறிமுகப்படுத்துதல்
8.குட்டை மரபணு உடையக் கோதுமை
அ) 1
ஆ) அடோமிடா 1
ஈ) பெலிடா 2
இ) நோரின் 10
விடை : இ) நோரின் 10
9. ஒரே இரகத்தாவரங்களுக்கிடையே கலப்பு செய்வது இவ்வாறு அழைக்கப்படுகிறது 
அ) சிற்றினங்களுக்கிடையே கலப்பு
ஆ) இரகங்களுக்கிடையே கலப்பு
இ) ஒரே இரகத்திற்குள் கலப்பு
ஈ) பேரினங்களுக்கிடையே கலப்பு
விடை : இ) ஒரே இரகத்திற்குள் கலப்பு
10. அயல் மகரந்தச்சேர்க்கை செய்யும் பயிரில் மீண்டும் மீண்டும் தன் மகரந்தச்சேர்க்கை செய்து பெறப் படும் வழித்தோன்றல்
அ) தூய வழி
ஆ) சந்ததி வழி
இ) உட்கலப்புவழி
ஈ) கலப்பினவீரிய வழி
விடை : அ) தூய வழி
11. ஜெயா மற்றும் ரத்னா கீழ்கண்ட எந்த அரைக் குட்டை இரகத்திலிருந்து பெறப்பட்டன 
அ) கோதுமை
ஆ) நெல்
இ) காராமணி
ஈ) கடுகு
விடை : ஆ) நெல்
12. கீழ்கண்ட எந்த இரண்டு சிற்றினங்களைக் கலப்பு செய்து அதிக இனிப்புத்தன்மை, அதிக விளைச்சல், தடித்த தண்டு மற்றும் வட இந்தியாவில் கருப்பு பயிரிடப்படும் இடங்களில் வளரும் தன்மையுடைய இரகங்கள் பெறப்பட்டன.
அ) சக்காரம் ரோபஸ்டம் மற்றும் சக்காரம் அஃபிசினாரம்
ஆ) சக்காரம் பார்பெரி மற்றும் சக்காரம் அஃபிசினாரம்
இ) சக்காரம் சைனென்ஸீ மற்றும் சக்காரம் அஃபிசினாரம்
ஈ) சக்காரம் பார்பெரி மற்றும் சக்காரம் ரோபஸ்டம்
விடை : ஆ) சக்காரம் பார்பெரி மற்றும் சக்காரம் அஃபிசினாரம்
13. பயிரிடப்படும் கோதுமையின் தரத்தை அதிகப் படுத்துவதற்காக அட்லஸ் 66 என்ற கோதுமை இரகம் கொடுநராகப் பயன்படுத்தப்பட்டு இதில் உள்ள சத்து 
அ) இரும்பு
ஆ) கார்போஹைட்ரேட்
இ) புரதம்
ஈ) வைட்டமின்கள்
விடை : இ) புரதம்
14. கீழ்கண்ட எந்தப் பயிர் இரகம் அதன் நோய் எதிர்க்கும் திறனுடன் பொருந்தியுள்ளது.
இரகங்கள்
அ)பூசா கோமல்
ஆ)பூசா சடபஹர்
இ)பூசா சுப்ரா
ஈ)பிராசிகா
நோய் எதிர்க்கும் திறன்
பாக்டீரிய அழுகல்
வெண் துரு
மிளகாய் தேமல் வைரஸ்
பூசா சுவர்னிம்
விடை : அ) பூசா கோமல் – பாக்டீரிய அழுகல்
15.கீழ்கண்டவற்றில் சரியாகப் பொருந்தாத இணை எது?
அ) கோதுமை-ஹிம்கிரி
ஆ) மில் பிரீட் -ரத்னா
இ) நெல்-சாஹிவால்
ஈ) பூசாகோமல்-பிராசிகா
விடை : ஈ) பூசாகோமல் – பிராசிகா

 12th Botany Unit 10 Lesson 9 Book Back Answers

16. முதல்நிலை அறிமுகப்படுத்துதலையும், இரண்டாம்நிலை அறிமுகப்படுத்தலையும் வேறுபடுத்துக.
முதல்நிலை அறிமுகப்படுத்துதல்
  • அ.புதிய சூழ்நிலைக்கு தன்னை தகவமைத்துக் கொள்ளும்
  • ஆ.மரபணு வகைய விகிதத்தில் எந்த மாறுபாடும் ஏற்படாது.
இரண்டாம் நிலை அறிமுகப்படுத்துதல்
  • அ.இந்த இரகமானது தேர்ந்தெடுத்தலுக்கு உட்படுத்தி அதிலிருந்து மேம்பட்ட ரசத்தைப் பிரித்தல்.
  • ஆ.இந்த இரகத்தை உள்ளுர் இரகத்துடன் கலந்து ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட பண்புகளை அவற்றில் மாற்றுதல்
  • இ.எ.கா.சீனா மற்றும் வடகிழக்கு இந்திய பகுதிக ளிலிருந்து சேகரிக்கப்பட்ட பல தேயிலை ரகங்கள் கொல்கத்தா தாவரவியல் பூங்காவில் வளர்க்கப் பட்டு பின்னர் இந்தியாவின் பல பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டன.
20. மண்வளத்தை மேம்படுத்துவதில் நுண்ணுயிரி உட் செலுத்திகள் எவ்வாறு பயன்படுகின்றன? 
  • ரைசோபிய உயிரி வளர்ப்பு உரம் வளிமண்டல நைட்ரஜனை மண்ணில் நிலைநிறுத்துகின்றன.
  • நெல் பயிரிடும் உழவு நிலங்களில் அசோலா மிக விரைவாகச் சிதைவடைந்து நெற்பயிர்களை விளைச்சலை அதிகரிக்கச் செய்கிறது.
  • ஆர்பஸ்குலார் வேர்பூஞ்சை மண்ணில் உள்ள பாஸ்பேட்டுகளை கரைக்கும் திறனுடையவை.
  • கடற்பாசி திரவ உரம் பயிர்களுக்கு மாவச்சத்தை அளிக்கப் பயன்படுகிறது.
  • இவ்வாறுமணவளத்தை மேம்படுத்த நுண்ணுயிரி உட்செலுத்திகள் பயன்படுகின்றன.
நன்மைகள் :
  • நைட்ரஜனை நிலை நிறுத்துதலிலும் பாஸ்பேட்டைக் கரைப்பதிலும் மற்றும் செல்லுலோசை சிதைப்பதிலும் செயல்திறன் மிக்கவையாக உள்ளது.
  • உயிரிய செயல்பாட்டையும் அதிகரிக்கச் செய்கின்றன.
  • மண்ணின் வளத்தையும், தாவர வளர்ச்சியையும், மண்ணில் வாழும் பயன்தரு நுண்ணுயிரிகளின் செயல்களை அதிகரிப்பதிலும் உதவுகின்றன.
  • சுற்றுச்சூழலுக்கு உகந்த இயற்கை வேளாண் மைக்கு உதவும் இடுபொருளாகவும், வேதிய உரங்களை விடத் திறன்மிக்கவையாகவும், விலை மலிவானதாகவும் உள்ளன. எ.கா, ரைசோபியம்
21. கலப்புறுத்த முறையின் பலவேறு வகைகளை  எழுதுக.
கலப்புறுத்தலின் வகைகள் : 
  • தாவரங்களுக்கிடையே உள்ள உறவுமுறையை வைத்து கலப்புறுத்தல் கீழ்கண்ட வகைகளாகப் பிரிக்கப்படுகிறது.
i) ஒரே இரகத்தினுள் கலப்புறுத்தம் :
  • ஒரே இரகத் தாவரங்களுக்கிடையே கலப்பு நடை பெறுகிறது.
ii) இரகங்களுக்கிடையே கலப்புறுத்தம்: 
  • சிற்றினத்தின் இருவேறு இரகங்களுக் கிடையே கலப்பு செய்யப்பட்டுக் கலப்புயிரி உருவாக்கப்படுகிறது.
iii) சிற்றினங்களுக்கிடையே கலப்புறுத்தம்: 
  • ஒரு பேரினத்தின் இருவேறுபட்ட சிற்றினங் களுக்கிடையே கலப்பு நடைபெறுகிறது.
iv) பேரினங்களுக்கிடையே கலப்புறுத்தம் :
  • இருவேறுபட்ட பேரினத் தாவரங்களுக்கிடையே கலப்பு நடைபெறுகிறது.
  • எ.கா: ரஃபானஸ் பிராசிகா X டிரிடிக்கேல்
22. பயிர்பெருக்கவியலாளர்கள் தற்போது பயன்படுத்தும் மிகச்சிறந்த வழிமுறைகள் என்னென்ன? 
  • பாரம்பரிய பயிர் பெருக்க முறைகள் பயிர் விளைச்சலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
  • ஒரு புதிய தாவர இரகம் அதில் ஏற்கனவே அமைந்துள்ள மரபுக்கூறுகளைச் சிறந்த முறையில் வெளிக் கொணரத் தெரிவு செய்வதன் மூலம் உருவாக்கப்படுகிறது.

பயிர்பெருக்க முறைகள்:

  • தேர்வு செய்தல்
  • அறிமுகப்படுத்துதல்
  • கலப்புறுத்தம் பன்மயம்
  • சடுதிமாற்றம்
  • திசு உற்பத்தி
  • உயிரிய தொழில்நுட்ப முறைகள்
23. கலப்பின வீரியம் – குறிப்பு வரைக,
  • பெற்றோரை விடக் கலப்புயிரி முதல் மகவு சந்ததியில் செயல்திறன் மேம்பட்டிருப்பதால் இது கலப்புயிரி வீரியம் என்றழைக்கப்படுகிறது.
  • G.H.ஷல் என்பவர் தான் முதன்முதலில் ஹெட்டிரோசிஸ் என்ற சொல்லை பயன் படுத்தினார்.
கலப்பின வீரியத்தின் வகைகள் : 
  • மெய்கலப்பின வீரியம், சடுதிமாற்ற மெய் கலப்பின வீரியம், சமநிலை மெய்கலப்பின வீரியம் மற்றும் பொய்கலப்பின வீரியம்
i) மெய் கலப்பின வீரியம்
  • மரவு வழியாக பெறப்படும் கலப்பு வீரியமாகும். இது இரண்டு வகைப்படும். அவை
அ.சடுதிமாற்ற மெய்கலப்பின வீரியம் :
  • அயல் மகரந்தச்சேர்க்கை நடைபெறக்கூடிய பயிர்களில் மேம்பட்ட ஓங்கிய அல்லீல்கள் மூலம் தேவையற்ற கேடு விளைவிக்கக்கூடிய, கொல்லும் ஒடுங்குப் பண்புடைய (அ) சடுதிமாற்றம் பெற்ற மரபணுக்களை நீக்குவதன் மூலம் ஏற்படுகிறது?

ஆ. சமநிலை மெய்கலப்பின வீரியம் :

  • பல சூழ்நிலைக் காரணிகளுக்கேற்ப தகவமைத்துக் கொள்ளும் சமநிலை பெற்ற மரபணு இணைப்பு, சமநிலை மெய்கலப்பின வீரியமாகும்.
ii) பொய் கலப்பின வீரியம் : 
  • இதனை உடல்வளவீரியம் என்றும் அழைப்பர். தாவரமானது உடல் வளர்ச்சியில் பெற்றோர் தாவரங்களை விட மேம்பட்டு விளைச்சலிலும், தகவமைப்பிலும் மலட்டுத்தன்மையுடனோ அல்லது குறைந்தளவு வளமானதாகவோ காணப்படுகிறது.

 12th Botany Unit 10 Lesson 9 Book Back Answers

24. பயிர்பெருக்கத்தில் புதிய பண்புக்கூறுகளை உருவாக்கும் புதிய பயிர்பெருக்க தொழில்நுட்ப முறைகளைப் பட்டியலிடுக. 
பயிர்பெருக்க முறைகளில்
  • மரபணு பொறியியல்
  • தாவரத்திசு வளர்ப்பு
  • புரோட்டோபிளாச இணைவு அல்லது உடல இணைவு முறை
  • மூலக்கூறு குறிப்பு மற்றும் DNA விரல் பதிவு போன்ற நவீன பயிர்பெருக்க முறைகள் பயன் படுகின்றன. NBT – என்பது தாவரப் பயிர் பெருக்கத்தில் புதிய பண்புகளை வளர்க்கவும் வேகப்படுத்தவும் பயன்படும் வழிமுறையாகும்.
  • DNA-வின் குறிப்பிட்ட இடங்களை மரபணு தொகைய திருத்தம் செய்யலாம்.
  • DNA – வை குறிப்பிட்ட இடங்களில் மாற்றிப் புதிய பண்புக்கூறுகளுடைய பயிர்த்தாவரங் களை உருவாக்கலாம்.

பண்புக்கூறுகளில் மாறுதல் செய்யப் பயன்படும் படிநிலைகள்:

  • மரபணு தொகையத்தை வெட்டுதல் (அ) மாற்றியமைத்தலை CRISPR/ Cas போன்ற முறைகள் செய்கின்றன.
  • மரபணு தொகைய திருத்தம் – ஆலிகோ நியூக்ளியோடைடு இயக்கத் தீடீர்மாற்றக் காரணி (ODM) என்ற நுட்பத்தின் மூலம் இணை காரங் களில் மாற்றம் செய்யலாம்.
  • ஒரே சிற்றினம் அல்லது நெருங்கிய தொடர்புடைய சிற்றினத்திற்குள் மரபணுக்கள் மாற்றப்படுவது (Cisgenesis)
  • DNAவை மாற்றம் செய்யாமல் அதற்குள் இருக்கும் மரபணுவின் செயல்பாடுகளை ஒருங்கமைக்கும் முறை (epigenetic methods)

Leave a Reply