12th Botany Unit 10 Lesson 9 Additional 5 Marks
TN 12th Bio-Botany Unit 10, 9th lesson Additional 5 Marks Question and Answers, 9th Lesson Book Back Answers Tamil Medium. Additional 1 Marks, 2 Marks, 3 Marks, 5 Marks Question and answers for 12th Students and NEET Students for Tamil Medium. 12th Botany Samacheer Kalvi Guide.. 12th Botany Unit 9 Full Answers. TN 12th Standard Unit 10 Lesson 9 Book Back All Question with answers Tamil Medium. 12th Samacheer kalvi Guide Lesson 9 . பயிர் பெருக்கம் Answer key in Tamil Medium Students Guide 360. HSC 12th Botany Lesson 9 Book Back Answers.
12th Bio-Botany Unit 10.பொருளாதாரத் தாவரவியல் | Lesson 9. பயிர் பெருக்கம் – Additional 5 Mark Answers
1. தாவரங்களை வளர்ப்புச் சூழலுக்கு உட்படுத்து வதால் பயிர்களில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?
- பல்வேறு சூழல் காரணிகளுக்கு ஏற்ப தகவ மைத்துக் கொள்ளும்
- பரவலான புவிப்பரப்பில் வளரும் தன்மை கொண்டவை
- ஒருமித்த மற்றும் சீரான முறையில் பூத்தல் மற்றும் காய்த்தல்
- விதை சிதறல் மற்றம் விதை பரப்பில் இல்லா திருத்தல்.
- கனிகள் மற்றும் விதைகளின் அளவை அதிகரித்தல்
- அதிக நோய் மற்றும் பூச்சி எதிர்ப்பு திறனைப் பெற்றிருத்தல்
- விதையற்ற கனிகளை உருவாக்குதல்.
- நிறம், தோற்றம், உண்ணும் தன்மை மற்றும் ஊட்டச்சத்துக்களை அதிகரித்தல்.
2. வேளாண்மையின் வரலாறு பற்றி ஒரு கட்டுரை எழுதுக
- 1807 – அலெக்சாண்டர்ஃலான் அம்போல்ட் பயன்தரும் தாவரங்களின் மூலங்களையும், அவற்றின் தோற்றத்தையும் உட்புக முடியாத இரகசியமென்றே கருதினார்.
- 1868- டார்வின் முன் வைத்த பரிணாமக் கோட் பாடு பயிரிடும் தாவரங்களின் தோற்றமானது இயற்கைத் தேர்வு மற்றும் கலப்புறுத்தல் மூலமாக நடைபெற்றது என்பதை உணர்த்தியது.
- 1883 – டிகாண்டோல் தன்னுடைய ஆரிஜன் ஆஃப் கல்டிவேடட் பிளாண்ட்ஸ் என்ற நூலில் 247 பயிரிடும் தாவரச் சிற்றினங்களின் வரலாற்றை பற்றிய புரிதலின்மையத் தீர்த்து வைத்தார்.
- 1887-1943-வாவிலோ முக்கியமாக பயிரிடப் படும். தாவரங்களின் வேறுபட்ட வகைகளையும் அவற்றின் பரவலையும் பல தரவுகளின் அடிப்படையில் ஆராய்ந்தார். இவர் 1926ல் 8 – பயிர் தோற்ற மையங்களை முன்மொழிந்தார். பின்பு 1935ல் அவற்றை 12 மையங்களாக்கினார்.
- 1968 சுகோஸ்கி பெரும் மரபணு மையங்களே பயிரடப்படும் தாவரங்களின் தோற்ற மையங்கள் என்றார். உலகத்தை மொத்தம் 12 பெரும் மரபணு மையங்களாகப் பிரித்தார்.
- 1971 ஹார்லன் – வேளாண்மை என்பது மூன்று மையங்களில் தோன்றியிருக்கலாம் என்றார். மையம் அல்லாத பகுதி என்பது ஒரு பயிர் அறிமுகப்படுத்தப்பட்டு பரவிய பகுதியாகும்.
4. இந்தியப் பயிர் பெருக்கவியலாளர்கள் மற்றும் அவர் களின் கண்டுபிடிப்பையும் அட்டவணையிடுக.
- Dr.M.S.சுவாமிநாதன் – சடுதி மாற்றப் பயிர் பெருக்கத்தின் முன்னோடி
- Dr.B.P.பால் புகழ்பெற்ற கோதுமை பெருக்க வியலாளர். மேம்பட்ட நோய் தாங்கும் திறன் உடைய கோதுமை இரகத்தை உருவாக்கியவர்.
- Dr.K.ராமையா பல உயர் விளைச்சல் நெல இரகங்களை உருவாக்கிய புகழ்பெற்ற நெல் பெருக்கவியலாளர்,
- N.G.P.ராவ் – உலகின் முதல் கலப்பினச் சோளத்தை (CSH I) உருவாக்கிய சிறந்த சோளப் பயிர் பெருக்கவியலாளர்.
- C.T.படேல் – கலப்பினப் பருத்தியின் தந்தையான இவர் உலகின் முதல் கலப்பினப் பருத்தியை
- சவுத்ரி ராம் தன் – பஞ்சாபைக் கோதுமைக் களஞ் சியமாக மாற்றிய C 591 கோதுமை இரகத்தை உருவாக்கிய கோதுமை பெருக்கவியலாளர்,
- உயிரி உரம் என்பது உயிருள்ள அல்லது மறையுயிர் செல்களின் செயலாக்கம் மிக்க நுண்ணுயிரி இரகங்களை கொண்டு தயாரிக்கப்படுகிறது.
ரைசோபியம் :
- வேர் மூண்டுகளில் கூட்டுயிர் வாழ்க்கையை கொண்டுள்ளது.
- வளி மண்டலத்திலுள்ள நைட்ரஜனை மண்ணில் நிலைநிறுத்துகிறது.
- இது நெல் விளைச்சலை 15 முதல் 40 சதவீதம் வரை அதிகரிக்கச் செய்கிறது.
அசோலா :
- மிதக்கும் நீர்வாழ் பெரணியாகும்.
- நிலப்பசும்பாசியுடன் இணைந்து வளிமண்டல நைட்ரஜனை மண்ணில் நிலைநிறுத்துகிறது.
- விரைவாக சிதைவடைந்து நெற்பயிரின் விளைச் சலை அதிகரிக்கிறது.
ஆர்பஸ்குலார் வேர் பூஞ்சை:
- மண்ணிலுள்ள அதிக பாஸ்பேட்டுகளை கரைக்கும் திறன் கொண்டது.
- நோய் எதிர்ப்பு மற்றும் சாதகமற்ற சூழ்நிலையைத் தாங்கும் திறன் உள்ளது.
- நிலத்தில் நீர் இருப்பதை உறுதிப்படுத்துகின்றது.
கடற்பாசி திரவ உரம்:
- சைட்டோகைனின், ஜிப்ரலின் மற்றும் ஆக்சினையும் உடையது. இது கெலப் என்னும் கடற்பாசியிலிருந்து தயாரிக்கப்பட்டது.
- இதில் 70க்கு மேற்பட்ட கனிமங்கள். வைட்டமின்கள் மற்றும் நொதிகள் உள்ளன.
- இதில் ஊறவைத்த விதைகள் வேகமாக முளைக்கும்.
6. சில பயிர்களின் இரகங்கள் மற்றும் அதன் நோய் எதிர்ப்பு திறன் பற்றி அட்டவணை வரைக..
- உயிரிகளை அடிப்படையாகக் கொண்ட தாவரநோயுரிகளை கட்டுப்படுத்தும் பூச்சி கொல்லிகள்.
- செயற்கை பூச்சிகொல்லிகளை விட நச்சுதன்மையற்றும் மலிவாகவும், சூழலுக்கு உகந்த தன்மை கொண்டதாகவும் இருக்கும்.
ட்ரைகோடெர்மா :
- பொதுவாக மண்ணிலும், வேர்தொகுதியிலும் தனித்து வாழும் பூஞ்சையாகும்.
- இவை தாவர நோய்களை கட்டுப்படுத்தும். வேரின் வளர்ச்சிப் பெருக்கத்தைத் திறம்பட மேம் படுத்துகிறது.
- பயிர் உற்பத்தியை அதிகரிக்கும்.
- சத்துக்களை உள்ளெடுத்து பயன்படுத்தும்.
பியூவிரியா:
- உலகெங்கிலும் மண்ணில் இயற்கையா வாழக் கூடிய ஒரு பூச்சி நோயுயிரி பூஞ்சையாகும்.
- இவை பல்வேறு கணுக்காலி சிற்றினங்களில் ஒட்டுண்ணியாக வாழ்ந்து வெள்ளை மஸ்கர் டைன் நோயை தடுக்கிறது.
- இது ரைசாக்டோனியா சொலானி என்ற பூஞ்சையால் தக்காளியில் ஏற்படுத்தப்படும் நாற்றமடிதல் நோயைக் கட்டுப்படுத்துகிறது.
8. பயிர்பெருக்கத்தின் குறிக்கோள்கள் எவை?
- பயிர்களின் விளைச்சலையும், வீரியத்தையும், வளமையையும் அதிகரித்தல்.
- வறட்சி, வெப்பநிலை, உவர்தன்மை மற்றும் அனைத்து சூழ்நிலைகளையும் தாங்கி வளரும் திறன்.
- முதிர்ச்சிக்கு முன்னரே மொட்டுகள் மற்றும் பழங்கள் உதிர்வடைதலை தடுத்தல்,
- சீரான முதிர்ச்சியை மேம்படுத்தல்.
- பூச்சி மற்றும் நோய் உயிரிகளை எதிர்த்து வாழும் திறன்.
- ஒளி மற்றும் வெப்பக் கூருணர்வு இரகங்களை உருவாக்குதல் போன்றவையாகும்.
9.தேர்வு செய்தல் மற்றும் அதன் வகைகளைப் பற்றி விரிவான கட்டுரை எழுதுக.
- தேர்வு செய்தல் என்பது தாவரப் பயிர்பெருக்கத்திலுள்ள மிகப்பழமையான மற்றும் அடிப்படை முறைகளில் ஒன்றாகும்.
- தேர்வு செய்தல் இரண்டு வகைப்படும்.
இயற்கைத் தேர்வு :
- இது இயற்கையிலேயே நடைபெறும்.
- இதில் விரும்பத்தகுந்த மாறுபாடுகளைக் கொண்ட தாவரத்தைப் பெற அதிக காலமாகும்.
- இது டார்வினின் கோட்பாட்டை ஒத்திருக்கும்.
செயற்கைத் தேர்வு
- இது மனிதர்களால் மேற்கொள்ளப்படும் ஒரு வழி முறையாகும்.
- கலப்பினக் கூட்டத்திலிருந்து தனித்தன்மையுடைய தாவரங்களை தேர்ந்தெடுத்தலாகும்.
அ) கூட்டுத்தேர்வு :
- அதிக எண்ணிக்கையிலுள்ள தாவரத் தொகை யிலிருந்து ஒரே மாதிரியான புறத்தோற்றப் பண்பு களைக் கொண்ட தாவரங்களை தேர்வு செய்து அவற்றின் விதைகளை ஒன்றாகக் கலந்து புதிய இரகத்தை உருவாக்குதலாகும்.
- அவ்வாறு பெறப்படும் சந்ததிகளின் விதைகளை விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
ஆ) தூயவரிசைத் தேர்வு:
- இது ஒத்த மரபுக்கூறுடைய தாவரத்தை மீண்டும் மீண்டும் தன் மகரந்தச்சேர்க்கை செய்து பெறப் படும் தாவரங்களாகும்.
- இவ்வாறு பெறப்பட்ட இரகமானது ஒரே சீர் தன்மையைக் கொண்டிருக்கிறது. புதிய மரபணுவகையம் கொண்ட தாவரங்களை உருவாக்க முடியாது.
இ) நகல் தேர்வு :
- உடல் இனப்பெருக்கம் செய்யும் தாவரங்களில் மைட்டாடிக் செல்பிரிதல் மூலம் உண்டான தாய் தாவாத்தின் ஒத்த பண்புகள் கொண்ட வழித் தோன்றல்கள் பெறப்படுகின்றன.
- தேர்வு செய்யப்பட்ட தாவரங்கள் உடல் இனப் பெருக்கத்தின் மூலம் பெருக்கமடையச் செய்யப் படுகின்றன.
- இந்த நகல் தாவரத்தின் மரபணு வகையம் நீண்ட காலத்திற்கு மாறாமல் அப்படியே இருக்கும்.
10. கலப்புறுத்தலின் படிநிலைகளைப் பற்றி விவரி.
- தெரிவு செய்யப்பட்ட பண்புடைய ஆண் மற்றும் பெண் தாவரங்களைத் தேர்ந்தெடுத்தல்,இத்தாவரங்களின் ஒத்த பண்பிணைவுத் தன்மையைச் சோதனை செய்தல் மிக முக்கியமாகும்.
ஆ) ஆண் மலடாக்குதல் :
- தன் மகரந்தச் சேர்க்கையை தடுப்பதற்காக ஆணகச் சிதைவு செய்தல்.அதை ஆண் மலடாக்குதல் என்றழைக்கப்படுகிறது.
இ) பையிடுதல் :
- சூலக முடியை உறையிட்டுப் பாதுகாக்கும் முறை பையிடுதல் ஆகும். இது தேவையற்ற மகரந்தத்துகள்கள் சூலக முடியில் கலந்துவிடாமல் தடுக்கும்.
ஈ)கலப்பு செய்தல் :
- தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண் மலரின் மகரந்தங் களை ஆண் மலடாக்கப்பட்ட பெண் மலரின் சூலக முடிக்கு மாற்றம் செய்வது.
(உ) விதைகளை அறுவடை செய்து புதிய தாவரங்களை உண்டாக்குதல்
- மூலம் கருவுறுதல் ஏற்பட்டு விதைகள் உருவாகின்றன.
- இவ்விதைகளிலிருந்து உருவாகும் புதிய சந்ததிக்கு கலப்புயிரி எனப்படும்.
11. பன்மடிய பயிர்பெருக்கம் பற்றி விவரி,
- இரண்டிற்கும் மேற்பட்ட குரோமோசோம் தொகுப்புகளைக் கொண்ட
- தாவரங்கள் பன்மடியம் ஆகும்,
- தாவரங்கள் மற்றும் வளர்ப்புச் சூழலுக்கு உட்படுத்தப்படும் தாவரங்களின் பரிணாமத்தில்
- பன்மடியம் உதவுகிறது. பன்மடியம் கலப்பின உயிரி உருவாக்க உதவு கிறது
- உயிர் மற்றும் உயிரற்ற காரணிகளின் இறுக்கத் தைத் தாங்கும் திறன்.
- இது குன்றல்பகுப்புக் குறைபாட்டால் குறைந்த வளத்தன்மையுடைய விதையற்ற இரகங்கள் உருவாகும்.
- ஒரு தாவரத்திலுள்ள குரோமோசோம்கள் தானா கவே இரட்டிப்பானால் – தன்பன்மடியாதல் எனப்படும்.
- இரண்டு சிற்றினங்களிலிருந்து பெறப்பட்ட குரோமோசோம் தொகுதிகளைப் பெருக்கமடைய செய்யும்
- கால்சிசினை பயன்படுத்திக் குரோமோசோம்களை இரட்டிப்பாக்கலாம்.
12. நவீன பயிர்பெருக்கம் பற்றி ஒரு கட்டுரை எழுதுக.
- நவீன பயிர்பெருக்கத்தின் மூலம் புதிய பண்புகளை வளர்க்கலாம்.
- தாவரங்களில் DNA வின் குறிப்பிட்ட இடங்களை மரபணு தொகையை திருத்தம் செய்யலாம்.
- மரபணு தொகையத்தை வெட்டுதல் மற்றும் மாற்றியமைத்தலை CRISPR போன்ற முறைகள் செய்கின்றன.
- DDM மூலம் மரபணு தொகையைத் திருத்தலாம்
- ஒரு சிற்றினம் அல்லது நெருங்கிய தொடர்பு உடைய சிற்றினத்திற்குள் மரபணுக்கள் மாற்றப்படுகிறது.
- DNA வை மாற்றம் செய்யாமல் அதற்குள் இருக்கும் மரபணுவின் செயல்பாடுகளை ஒருங்கமைக்கும் முறை.
13. கடற்பாசி திரவ உரத்தின் பயன்கள் யாவை?
- திரவக் கடற்பாசி உரம் கரிம உரமாக மாறி சுற்றுச்சூழலுக்கு பயன்படுகிறது.
- கடற்பாசியிலுள்ள ஆல்சினேட்டுகள் மண்ணிலுள்ள உலோகங்களுடன் வினைபுரிந்து நீண்ட ஒன்றுடன் ஒன்று குறுக்கே இணைந்த பாலிமர்களை உருவாக்குகின்றன.
- பாலிமர்கள் மண்ணைச் சிறு துகள்களாக ஆக்கி நீர்பட்டதும் விரிந்த ஈரப்பதத்தை நீண்ட நேரம் தக்கவைத்து கொள்கிறது,
- கடற்பாசிகளில் 70 க்கு மேற்பட்ட வைட்டமின்கள், நொதிகள் உள்ளதால் தாவரங்களின் அப்ரீத
- விதைகளை ஊறவைத்து விதைத்தால் அவை வேகமாக வளர்ந்து சிறந்த வேர்த்தொகுப்பையும் உருவாக்குகிறது
14.ராமுவும்,சோமுவும் விவசாயிகள். ராமு தற்கலப்பின் மூலம் பயிர் செய்தார். சோமு கலப்பு தாவரங்கள் மூலம் பயிர் செய்தார்.
- சோமுவுக்கு தான் புதிய வகை கிடைக்கும். ஏனெனில் அவன் கலப்பு தாவரங்களை தேர்வு செய்து கலப்பு செய்தார்.
(ii) தற்கலப்பின் நன்மைகள் :
- இது ஒத்த மரபுக்கூறுடைய தாவரத்தை மீண்டும் மீண்டும் தன் மகரந்தச்சேர்க்கை செய்து பெறப்படும் தாவரங்களென்பதால், இவை ஒரே சீர்தன்மையைக் கொண்டிருக்கிறது.
தீமைகள்:
- இதனால் புதிய மரபணுவகையம் கொண்ட தாவரங்களை உருவாக்க இயலாமல் போவதுடன் இவ்வகை இரகங்கள் குறைந்த தகவமைப்புகளோடும் சூழல் காரணிகளின் மாற்றங்களுக்கு ஏற்ப நிலைக்கும் தன்மையைக் குறைவாகவும் கொண்டுள்ளன. கலப்பு தாவரங்களின் கலப்பு
நன்மைகள்:
- கூட்டுத்தேர்வில் அதிக எண்ணிக்கையிலுள்ள தாவரத் தொகையிலிருந்து ஒரே மாதிரியான புறத்தோற்ற விகிதம் அல்லது புறப்பண்புகள் கொண்ட தாவரங்கள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றின் விதைகளை ஒன்றாகக் கலந்து புதிய இரகத்தை உருவாக்குதலாகும்.
தீமைகள்:
- இதன் மரபுவழி வேறுபாடுகள் கலப்பினமாதல் (அ) சூழ்நிலை மாறுபாடுகள் இவ்விரண்டில் எதிலிருந்து உருவானது என்பதை பிரித்தறிய முடிவதில்லை.