12th Botany Unit 10 Lesson 9 Additional 2 Marks
TN 12th Bio-Botany Unit 10, 9th lesson Additional 2 Marks Question and Answers, 9th Lesson Book Back Answers Tamil Medium. Additional 1 Marks, 2 Marks, 3 Marks, 5 Marks Question and answers for 12th Students and NEET Students for Tamil Medium. 12th Botany Samacheer Kalvi Guide.. 12th Botany Unit 9 Full Answers. TN 12th Standard Unit 10 Lesson 9 Book Back All Question with answers Tamil Medium. 12th Samacheer kalvi Guide Lesson 9 . பயிர் பெருக்கம் Answer key in Tamil Medium Students Guide 360. HSC 12th Botany Lesson 8 Book Back Answers.
12th Bio-Botany Unit 10.பொருளாதாரத் தாவரவியல் | Lesson 9. பயிர் பெருக்கம் – Additional 2 Mark Answers
12th Botany 9th Lesson பகுதி-II. கூடுதல் வினாக்கள் 2 Marks
- மனிதர்களுக்கும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த தாவரங்களுக்கும் இடையேயுள்ள தொடர்பைப் பற்றி படிப்பது பொருளாதாரத் தாவரவியல் எனப்படும்.
2.வேளாண்மை தோன்றிய காலம் எது ?
- தொல்லியல் தரவுகள் மூலம் நாம் அறிவது என்ன வென்றால் டைக்ரிஸ் மற்றும் யுஃபரேட்ஸ் நதிப் படுகைகளுக்கு இடையேயுள்ள செழுமை பிறைப்பகுதியில் ஏறக்குறைய 12,000 ஆண்டு களுக்கு முன்பாகும்.
3. வேளாண்மையில் டி-காண்டேலின் பங்கு என்ன?
- அவர் 247 பயிரிடும் தாவரச் சிற்றினங்களைப் பற்றி ஆய்வு மேற்கொண்டார்.
- அப்பயிர்களின் மூதாதையர்களின் வடிவம் வளர்ப்புச் சூழலுக்கு உட்படுத்தப்பட்ட பகுதி மற்றும் அவற்றின் வரலாறு போன்றவற்றின் புரிதலின்மையைத் தீர்த்து வைத்தார்.
4.வாவிலோ எத்தனை பயிர் தோற்ற மையங்களை முன்மொழிந்தார்?
- 19268 மையங்களை முன்மொழிந்தார்.
- பின்னர் 1935 பதினோரு மையங்களாக அறிவித்தார்.
- இறுதியாக அமெரிக்க மையத்தை சேர்த்து மொத்தம் 12 மையங்களாக அறிவித்தார்.
5.உயிரி உரங்கள் என்றால் என்ன?
- உயிரி உரம் என்பது உயிருள்ள அல்லது மறையுயிர் செல்களின் செயலாக்கம் மிக்க நுண்ணுயிரி இரகங்களைக் கொண்டு தயாரிக்கப் படுகிறது.
6.கடற்பாசி திரவ உரத்தில் காணப்படும் ஊட்டச் சத்துக்கள் யாவை?
- இதில் சைட்டோகைனின், ஜிப்ரலின் ஆக்சின், மாவுச்சத்து 70க்கும் மேற்பட்ட கனிமங்கள், வைட்டமின்கள் மற்றும் நொதிகள் உள்ளன.
7. ட்ரைகோடெர்மா ஒரு உயிரி கட்டுப்படுத்தும் காரணியாக அங்கீகாரம் பெற்றிருத்தலுக்கான காரணம் என்ன?
- தாவர நோய்களை கட்டுப்படுத்துதல்
- வேரின் வளர்ச்சிப் பெருக்கத்தைத் திறம்பட மேம் படுத்துகிறது
- பயிர் உற்பத்தி
- உயிரற்ற காரணிகளின் இறுக்கத்தை தாங்கும் திறன்
- சத்துக்களை உள்ளெடுத்தல் மற்றும் பயன் படுத்துதல்.
8. தாவர அறிமுகம் என்றால் என்ன?
- வழக்கமாக வளருமிடத்திலிருந்து ஒரு தாவரத் தின் மரபணுவிய இரகங்களை வேறொரு புதிய சூழலில் அறிமுகப்படுத்துவது தாவர அறிமுகம் எனப்படும்.
9. இணக்கமாதல் என்றால் என்ன?
- புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தாவரம் புதிய சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னைத் தகவ மைத்துக் கொள்ளுதல் இணக்கமாதல் எனப் படும்.
10. தொற்றுத் தடைகாப்பு என்றால் என்ன?
- அறிமுகப்படுத்தப்படும் அனைத்து தாவரங்களும் களைகளற்றும், பூச்சி மற்றும் நோயுண்டாக்கும் உயிரிகளற்றும் இருக்கின்றனவா என கவனமாக பரிசீலிப்பதே தொற்று தடைகாப்பு எனப்படும்.
11. இயற்கைத் தேர்வு என்றால் என்ன?
- இது டார்வின் பரிணாமக் கோட்பாடான தகுந்தன. பிழைத்தல் என்பதாகும்.
- இதில் மாறுபாடுகளைக் கொண்ட தாவரத்தைப் பெற அதிக காலமாகும்.
12. செயற்கைத் தேர்வு சிறு குறிப்பு வரைக.
- இது மனிதர்களால் மேற்கொள்ளப்படும் ஒரு வழி முறையாகும்.
- கலப்பினக் கூட்டத்திலிருந்து தனிதன்மையுடைய தாவரங்களைத் தேர்ந்தெடுக்கலாகும்.
13. மூன்றாம் வேளாண் புரட்சியின் திட்டம் யா?
- வளரும் நாடுகளில் வேளாண் உற்பத்தியைப் பெருக்குவதற்காகப் உயர் விளைச்சல் தரும் தாங்கு திறன் கொண்ட இரகங்களை அறிமுகப்படுத்துவதும் நீர் மற்றும் உரப் பயன்பாட்டு முறைகளும், வேளாண் மேலாண்மையை மேம் படுத்த தீவிர திட்டமிட்டு 1960-களில் உருவாக்கப்பட்டது பசுமை புரட்சி அல்லது மூன்றாம் வேளாண் புரட்சி எனப்படுகிறது.
14. பன்மடிய பயிர்பெருக்கத்தின் பயன்கள் என்ன?
- காட்டுத்தாவரங்கள் மற்றும் வளர்ப்புச் சூழலுக்கு உட்படுத்தப்படும் தாவரங்களின் பரிணாமத்தில் பன்மடியால் முக்கிய அங்கமாக விளங்குகிறது.
- உயிர் மற்றும் உயிரற்ற காரணிகளின் இறுக்கத்தைத் தாங்கும் திறன்.
- தீங்கு விளைவிக்கக்கூடிய சடுதிமாற்றத்தினை தாங்கும் திறன்.
15. பன்மடியத்தை செயற்கையாக தூண்டும் காரணி என்ன? பன்மடியத்தின் மூலம் பெறப்பட்ட பயிர்கள் யாவை?
- காலசிசினை பயன்படுத்திக் குரோமோசோம் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கத் தூண்டுவதன் மூலம் பன்மடியத்தை ஏற்படுத்தலாம்.
- இம்முறையில் விதையில்லாத் தக்காளி, ஆப்பிள், ஆரஞ்சு, தர்பூசணி மற்றும் டிரிட்டிகேல் போன்ற தாவரங்களை உருவாக்கியிருக்கிறது.
16. பசுமைப்புரட்சி – வரையறு.
- தொடர் ஆய்வுகள், முன்னேற்றங்கள், புதுமைகள், தொழில்நுட்பப் பரிமாற்றங்களுக்கான முயற்சிகள் போன்றவற்றின் ஒருமித்த விளைவே பசுமைப் புரட்சி.
17. சடுதிமாற்றப் பயிர்பெருக்கத்தின் Dr.M.S. சுவாமிநாதனின் பங்கு என்ன?
- இவர் சடுதிமாற்றப் பயிர்பெருக்கத்தின் முன்னோடியாவார்.
- சடுதி மாற்ற முறை மூலம், பொன்னிறமுடைய ஷர்பதி சோனாரா என்ற கோதுமை இரசுத்தை உருவாக்கினார்.
- இதுவே இந்தியாவின் பசுமைப்புரட்சிக்கு வழி கோலியது.
18, உயர்த்தப்பட்ட ஊட்டச்சத்து தரம் நிறைந்த பயிர் பெருக்க குறிக்கோள் என்ன?
- புரதச்சத்து மற்றும் தரம்
- எண்ணெய் சத்து மற்றும் தரம்
- வைட்டமின் சத்து
- நுண் ஊட்டச்சத்து மற்றும் கனிமச்சத்துக்களை உயர்த்துதல்
19. பயிர் மற்றும் பூச்சி எதிர்க்கும் இரகங்களைப் பற்றிய ஒரு அட்டவணை வரைக.
- பிராசிகா (கடுகு சிறிய வகை)
- தட்டை பன்ஸ்
- வெண்டைக்காய்
இரகங்கள்
- பூசா கவ்ரவ்
- பூசாசெம் – 2, பூசாசெம் – 3
- பூசா சவானி, பூசா -A- 4
பூச்சி / சிறுபூச்சி
- அசுவினி பூச்சி
- இலைதத்துப் பூச்சி, அசுவினி மற்றும் பழத்துளைப்பான்
- தண்டு மற்றும் பழத் துளைப்பான்
20. விரிவாக்கம் தருக.
- ODM – ஆலிகோ நியூக்ளியோடைடு இயக்கத் திடீர் மாற்றக் காரணி NBT – புதிய பயிர் பெருக்கத் தொழில்நுட்ப முறைகள்,
21. தாவரபயிர் பெருக்கத்திற்கு எந்த வகை செயற்கை தழைவழி பெருக்கம் நல்லது? அதற்கான காரணங்கள் தருக.
- திசு வளர்ப்பு முறை என்ற நவீன செயற்கை தழை வழி பெருக்கமுறையே மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகிறது.
- காரணங்கள் : 1. இதனால் விரும்பத்தக்கப் பண்புடைய தாவரத்தின் குளோன்கள் (ஒத்த ஜீனாக்கம் கொண்டவை ) உருவாக்கப்படுகிறது. வருடம் முழுவதும் குறைந்த காலத்தில் பயிர் மற்றும் வனத்திற்கு பயன்படும் மரச்சிற்றினங்கள் அதிக எண்ணிக்கையிலான நாற்றுருக்கள் உருவாக்கப்படுகின்றன என்பதே இதன் சிறப்பாகும்.
22. நெல் வயல்களில் அசோலாவின் பணி யாது?
- அசோலாவில் காணப்படும் அனபீனா எனும் நீலப்பச்சை பாசி வளிமண்டல நைட்ரஜனை நிலை நிறுத்தி நெல் வயல்களில் நைட்ரேட் உப்புச் சத்துக்களை சேர்க்கிறது.
23. தழை இலை உரத்திற்கு பயன்படும் தாவரச் சிற்றினங்கள் ஏதேனும் மூன்றின் பெயர் தருக.
- கேசியாஃபிஸ்டுலா (கொன்றை)
- செஸ்பேனியா கிரான்டிஃளோரா (அகத்தி)
- அசோடிராக்டா இண்டிகா (வேம்பு)
24. உயிரி பூச்சிக் கொல்லிகள் என்றால் என்ன?
- உயிரிகளை அடிப்படையாகக் கொண்ட தாவர நோயுயிரிகளை கட்டுப்படுத்தும் பூச்சிகொல்லிகள் உயிரி பூச்சிக் கொல்லிகள் எனப்படும்
12th Botany Unit 10 Lesson 9 Additional 2 Marks
கீழ்கண்ட இணையை வேறுபடுத்துக
- இது உயிருள்ள அல்லது மறையுயிர் செல்களின் செயலாக்கம் மிக்க நுண்ணுயிரி இரகங்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.
- தங்களுடைய வினையாற்றல் மூலம் வேர் மண்டலத்திலுள்ள ஊட்டச்சத்துக்களைப் பயிர்கள் எடுத்துக் கொள்ள உதவுகின்றன.
- இது சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகும்.
தழை உரம்
- தழை உரப்பயிர்களை வளர்த்து அவற்றை நேரிடையாக வயல்களிலிட்டு உழுவது தழை உர இடலாகும்.
- இது மண்ணிலுள்ள தழைச்தச்தை உயர்த்தும்.
- இது மண்ணின் அமைப்பையும் இயற்பியல் காரணியையும் மேம்படுத்துகிறது.
2.தூயவரிசைத் தேர்வு மற்றும் நகல் தேர்வு
- இது ஒத்த மரபுக்கூறுடைய தாவரத்தை மீண்டும் மீண்டும் தன் மகரந்தச்சேர்க்கை செய்து பெறப் பட்ட தாவரங்களாகும்.
- எல்லா மரபுக்கூறுகளிலும் இவ்வாறு பெறப்பட்ட இரகமானது ஒரே சீர்தன்மையைக் கொண்டிருக்கிறது
நகல் தேர்வு
- உடல இனப்பெருக்கம் செய்யும் தாவரங்களில் மைட்டாடிக் செல்பிரிதல் மூலம் உண்டான தாய் தாவரத்திலிருந்து ஒத்த பண்புகள் கொண்ட வழித் தோன்றல்கள் பெறப்படுகின்றன.
- கலப்பினத் தாவரத் தொகையிலிருந்து புறத்தோற்ற விகிதத்தின் அடிப்படையில் மிகச்சிறந்த இரகத்தை தெரிவு செய்ய நகல் தேர்வு உட்படுத்தப்படுகிறது.
3.சடுதி மாற்ற பயிர்பெருக்கம் மற்றும் பன்மடியப் பயிர்பெருக்கம்
- ஒரு உயிரினத்தின் மரபணு வகையத்திலோ அல்லது புறத்தோற்ற வகையிலோ மரபுவழியாக ஏற்படும் மாற்றம்
- சடுதி மாற்றப் பயிர்பெருக்கம் பரிணாமம். மறுசேர்க்கை தேர்ந்தெடுத்தல் போன்றவற்றிற்கு இருபொருள் தருவதால் இது முக்கியமானதாக கருதப்படுகிறது.
- இரண்டுக்கு மேற்பட்ட குரோமோசோம் தொகுப்புகளை கொண்ட தாவரங்கள் பன்மடியங்கள் எனப்படும்
- கலப்பின வீரியம் மாறுபட்ட பன்பிணைவுத் தன்மை போன்றவற்றை வெளிப்படுத்துகின்றன.
4.இரகங்களுக்கிடையே மற்றும் சிற்றினங்களுக்கிடையே கலபுறுத்தம்.
- ஒரே சிற்றினத்தின் இருவேறு இரகங்களுக் கிடையே கலப்பு செய்தல்.
- தன் மற்றும் மகரந்தச்சேர்க்கை அடையும் தாவரங்களை மேம்படுத்தலாம்.
- ஒரு பேரினத்தின் இருவேறுபட்ட சிற்றினங் களுக்கிடையே கலப்பு செய்தல்.
- இது பொதுவாக சாதகமான மரபணுக்களை ஒரு சிற்றினத்திலிருந்து மற்றொரு சிற்றினத்திற்கு மாற்ற பயன்படுகிறது.