12th Botany Unit 10 Lesson 10 Additional 5 Marks
TN 12th Bio-Botany Unit 10, 10th lesson Additional 5 Marks Tamil Medium. Additional 1 Marks, 2 Marks, 3 Marks, 5 Marks Question and answers for 12th Students and NEET Students for Tamil Medium. 12th Botany Samacheer Kalvi Guide.. 12th Botany Unit 9 Full Answers. TN 12th Standard Unit 10 Lesson 9 Book Back All Question with answers Tamil Medium. 12th Samacheer kalvi Guide Lesson 9 . பயிர் பெருக்கம் Answer key in Tamil Medium Students Guide 360. HSC 12th Botany Lesson 9 Book Back Answers.
12th Bio-Botany Unit 10.பொருளாதாரத் தாவரவியல் | Lesson 10. பொருளாதாரப் பயனுள்ள தாவரங்களும் தொழில்முனைவுத் தாவரவியலும் – Additional 5 Marks Question – Answers
பொருளாதாரப் பயனுள்ள தாவரங்களும் தொழில்முனைவுத் தாவரவியலும்
1.புல் குடும்பத்தைச் சாராத தானியங்களை விவரி?
- இவை பொய் தானியம் எனப்படும்.
- (எ.கா) கீனோபோடியம் கீனோவா (குடும்பம்: அமராந்தேசி)
- குளூட்டன் அற்ற, முழுதானிய கார்போஹைட்டிரேட். முழுமையான புரதமும் (9 இன்றியமையா அமினோ அமிலங்களைக் கொண்ட கடின புரதம்)
- 6000 ஆண்டுகளாக மலைகளில் உணவாக உட்கொள்ளப்படுகிறது.
2. எந்த காரணங்களால், தானியங்கள் உணவுத் தாவரங்களில் முக்கியத்துவம் பெறுகின்றன?
- எவ்வகை சூழலிலும் தகவமைத்துக் கொள்ளும்,
- அடிக்கிளைத்தலால் (tillers) அதிக விளைச்சல்
- உலர் தானியங்களை சேதமின்றி கையாள, சேமிக்க முடியும்.
- உயர் கலோரி மதிப்பாற்றல் கொண்டவை.
- எளிதில் பயிரிடப்படும்.
3. உயிரிப்பூச்சு விரட்டி தயாரிப்பை விவரி?
- வேப்ப இலைகளை துண்டாக்கவும்,
- 50 லிட்டர் நீரில் போட்டு 3 நாட்கள் நொதிக்க வைக்கவும்.
- நொதித்த கலவையை வடிகட்டி, தாவரங்களில் தெளிக்கவும்.
- தாவரத்தில் ஒட்ட வைக்க 100 மிலி சமையல் எண்ணெய், அதே அளவு சோப்புக் கரைசல் சேர்க்கவும்.
- நொதித்த இலைகள், உரமாக வேர்களில் இடலாம்.
4. பொதுவான மூலிகைத் தாவரங்களை அவற்றின் பயன்களுடன் பட்டியலிடுக?
பிற பொதுவான மூலிகைத் தாவரங்கள்
பொதுப் தமிழ்பெயர்
- துளசி
- நெல்லி
- குப்பைமேனி
- வில்வம்
- பிரண்டை
தாவரவியல் பெயர்
- ஆசிமம் டெனுஃபுளோரம்
- ஃபில்லாந்தஸ் எம்பிளிகா
- அக்காலிஃபா இண்டிகா
- ஏகில் மார்மிலாஸ்
- சிசிஸ் குவாட்ராங் குலாரிஸ்
குடும்பம்
- லேமியேசி
- பில்லாந்தேசி
- யூஃபோர்பியேசி
- ரூடடேசி
- வைட்டேசி
பயன்படும் தாவரப் பகுதி
- இலைகளும் வேர்களும்
- கனி
- இலைகள்
- கனி
- தண்டும் வேரும்
மருத்துவப் பயன்கள்
- இலைகள் தூண்டியாக, நுண்ணுயிர் எதிர்ப்பியாக, உயர் இரத்த அழுத்த எதிர்பியாக, பாக்டீரிய நீக்கியாக, கோழை அகற்றியாக பயன்படுகின்றது. இதன் வேரிலிருந்து பெறப்படும் மலேரிய காய்ச்சலுக்கு வியர்வையூக்கியாகப் பயன்படுகிறது.
- இது ஒரு சக்தி வாய்ந்த புத்துணர்ச்சி யூட்டி மற்றும் நோய் எதிர்ப்பு ஊக்கி. இதற்கு மூப்பு எதிர்ப்பு பண்புள்ளது. நீண்ட ஆயுளை மேம்படுத்தவும். செரிமானத்தை அதிகரிக்கவும், மலச்சிக்கல், காய்ச்சல் மற்றும் இருமலை குறைக்கவும் பயன்படுகிறது
- வளையப் புழுக்களால் (ringworms) ஏற்படுகின்ற தோல் நோய்களை குணப்படுத்த பயன்படுகிறது. இலைப்பொடி படுக்கைப்புண் மற்றும் தொற்றுப் புலன்களையும் குணமாக்குகிறது.
- இளங்கனி செரிமான குறைபாடுகளை குணப்படுத்தவும் குடல்வாழ் ஒட்டுண்ணிகளை அழிக்கவும் பயன்படுகிறது.
- தண்டு மற்றும் வேர்களை அரைத்து தயாரிக்கப்படும் களிம்பு எலும்பு முறிவுகளுக்குப் பயன்படுத்தப் படுகிறது. ஆஸ்துமா மற்றும் வயிறு தொடர்பான குறைபாடுகளுக்கு முழுத்தாவரமும் பயன்படுகிறது. இது கால்சியம் மிகுந்தது.
5.இந்தியாவின் தேசியப் பழம் எது? விவரி? மா (மாஞ்சிபெரா இண்டிகா)
குடும்பம்: அனகார்டியேசி தோற்றம். விளையுமிடம் :
- தெற்காசியாவில் பர்மா, கிழக்கிந்தியா பிறப்பிடம்.
- ஆந்திரா, பீகார், குஜராத், கர்நாடகா அதிகம் பயிராகும் மாநிலங்கள்.
- தமிழகத்தில் சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்கள்.
பயன்கள் :
- இந்தியாவில் அதிகம் உட்கொள்ளப்படும்.
- பீட்டா கரோட்டீன் அதிகமுள்ளது.
- பின்உணவுப் பண்டம். அடைக்கப்பட்டு,உலர்த்தி, பாதுகாக்கப்பட்டு பயன்படுத்தப்படும்.
- சட்னி, ஊறுகாய். கூட்டு தயாரிக்க, உப்பு மிளகாயுடன் உண்ணப் பயன்படும்.
- சதைப்பற்றுள்ள பகுதியிலிருந்து களிமம் (ஜெல்லி) தயாரிக்கப்படும்.
- காற்றேற்றப்பட்ட, ஏற்றப்படாத சாறு பிரபல பானமாகும்.
6.கரும்பின் பயன்கள் கூறு?
- போயேசி குடும்பத்தை சேர்ந்த சக்காரம்
ஆஃபிசினாரம் தோற்றம், விளையுமிடம் :
- நியூகினியா காட்டு ரகமான, சக்காரம் ஆ ஃபிசினாரம். இந்தியாவின் சக்காரம் எஸ்பான்டே னியத்துடன், பிற்கலப்பு செய்து உருவானது. கன்னியாகுமரி, நீலகிரி தவிர எல்லா தமிழ்நாட்டு இடங்களிலும் விளைகிறது.
பயன்கள் :
- வெள்ளைச் சர்க்கரை உற்பத்தி மூலப்பொருள்
- சுத்திகரிக்கப்பட்டு சர்க்கரை, மதுபானம். வெல்லம் உற்பத்தி செய்யும் ஆலைகளில் பயன் படும்.
- கரும்புச் சாறு புத்துணர்ச்சி தரும் பானம்
- வெல்லக் கழிவு பாகு (Molasses) எதில் ஆல்கஹால் உற்பத்திக்கு மூலப்பொருள்.
7. தமிழ்நாட்டின் மாநில மரத்தினை விளக்கு?
- பனை (பெராசஸ் ஃபிளாபெர்லிஃபா)
தோற்றம், விளையுமிடம் :
- ஆப்பிரிக்கா, ஆசியா, நியுகினியா பிறப்பிடம்.
- தமிழக கடலோர மாவட்டங்கள்
பயன்கள் :
- கருப்பட்டி தயாரிக்க, பதநீர் சேர்க்கப்படும்.
- மஞ்சரி அச்சிலிருந்து வரும் பதநீர் ஆராக்கிய பானம்.
- பதநீர், வெல்லம், கள் தயாரிக்க உதவும்.
- கருவூண் திசு (நுங்கு) புத்துணர்வு தரும் கோடை உணவு.
- விதைக் கருவிகளை சூழ்ந்த சதைப்பற்றுள்ள செதில் இலை பனங்கிழங்கு. இது உண்ணக் கூடியது.
12th Botany Unit 10 Lesson 10 Additional 5 Marks
8. சிட்ரஸ் (ரெட் பெப்பர்) என்பதன் பயன்கள் கூறு? மிளகாய் (கேப்சிகம் அன்னுவம்) (சொலானேசி குடும்பம்)
- தென் அமெரிக்கா பூர்வீகம்
- இந்தியா உற்பத்தியாளர், ஏற்றுமதியாளர்
- கே.அன்னுவம், கேஃபிருட்டிசென்ஸ்
- விளைவிக்கப்படும் முக்கிய சிற்றினங்கள்.
பயன்கள் :
- கே.அன்னுவம் குறைந்த காரத்தன்மை உடையது.
- இது இனிப்பு குடமிளகாய் வகைகளைக்
கொண்டது. - கேய்லி பெப்பர் என்ற வணிக வகை, நீண்ட கனி கொண்டவை.
- நசுக்கப்பட்டு, பொடியாக்கப்பட்டு, சுவையூட்டி யாகவுப் பயன்படும்.
- சூப், குழம்புக் பொடி, ஊறுகாய் தயாரிக்கப் பயன்படும்.
- கேப்சைசின் வலிநீக்கி.
- விட்டமின் A, C, Eக்கு மூலப்பொருள்
9.எந்தப்பொருளின் உலக உற்பத்தியில் ஆசியாவின் பங்கு 90 சதவீதம் ஆகும். விளக்கு? இரப்பர் (ஹெவியா பிரேசிலியன்சிஸ், யூபோர்பியேசி)
தோற்றம், விளையுமிடம் :
- பிரேசில் பூர்வீகம்
- இந்தியாவில் கேரளா. அடுத்தது தமிழ்நாடு
பயன்கள் :
- டயர். வாகனப்பாக உற்பத்தியில் 70 சதவீதம் பயன்படும்.
- காலணி, கம்பி மற்றும் கேபிளைச் சுற்றியுள்ள கடத்தாப் பொருள், மழைக்கோட்டு, வீடு, மருத்துவமனைப் பொருள். அதிர்வு தாங்கி, பெலட், விளையாட்டுப் பொருள், அழிப்பான், பசை, இரப்பர் பட்டை தயாரிக்கப் பயன்படும்.
- மின். வானொலி பொறியிற் தொழிற்சாலைகளில் பயன்படும்.
- அடர் மரப்பால கையுறைகள், பலூன்கள், கருத்தடைச் சாதனம்.
- நுரையூட்டிய மரப்பால் மெத்தை, தலையணை, உயிர்ப்பாதுகாப்பு பட்டை,
10. பிரம்மனிடமிருந்து தோன்றிய மருத்துவ முறையை விளக்கு?
ஆயுர்வேத மருத்துவம்
- சுரகா, சுஷ்ருதா, வாக்பட்டா எழுதிய ஏடுகளில் ஆவணப்படுத்துப்பட்டுள்ளது.
- உடல் நீர்மங்களான வாத, பித்த, கபத்தை அடிப்படையாகக் கொண்டது.
- மூலிகைகள், விலங்குகளிடமிருந்து பெறப்படும்.
- இமாலய மூலிகைகள் முக்கியப் பங்கு வகிக்கும்.
- இந்திய ஆயுர்வேத குணப்பாட நூல் 500 மூலிகைகளைப் பட்டியலிடும்.
11.வாய்மொழி மருத்துவ முறை எது? விளக்குக?
- இந்திய, கிராமப்புற, பழங்குடி இன மக்களின் பாரம்பரிய முறை.
- அகில இந்திய ஒருங்கிணைந்த, பழங்குடி உயிரியல் ஆய்வுத் திட்டம் (All India Co ordinated Research Project on Ethobiology) பழங்குடிகள் பயன்படுத்திய மூலிகைகளை ஆவணப்படுத்தியுள்ளது.
- 8000 தாவரச் சிற்றினங்கள் ஆவணப்படுத்தப் பட்டுள்ளன.
- ஆவணப்படுத்தும் வேலை தொடர்கிறது.
- தமிழ்நாட்டில் இருளர், மலையாளி, குரும்பர். பனியன், காணிகள் மருத்துவ அறிவால் அறியப் பட்டனர்.
12. சணல் இந்தியத் தேசிய பொருளாதாரத்தில் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது? விளக்குக? சணலி (கார்கோரஸ் சிற்றினம்) (மாலவேசி குடும்பம்)
தோற்றம் விளையுமிடம் :
i)சணல்
- கார்கோரஸ் கேப்சுலாரிஸ்
- கார்கோரஸ் ஒலிடோரியஸ் போன்ற 2 சிற்றினங்களிலிருந்து கிடைக்கிறது,
ii) கார்கோரஸ் ஒலிடோரியஸ் ஆப்ரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது.
iii) கார்கோரஸ் கேப்சுலாரிஸ் இந்தோ பர்மாவைப் பூர்வீகமாகக் கொண்டது.
iv) கங்கை சமவெளி, பங்களாதேஷில் விளை விக்கப்படும்.
பயன்கள் :
- மிகப் பெரிய ஏற்றுமதியாகும் நார்ப்பொருட்களில் ஒன்று.
- இயற்கையான. மறு சுழற்சி செய்யக்கூடிய, மக்கக்கூடிய, சுற்றுச்சூழலுக்கு உகந்த பொதி கட்டும் பொருள்.
- துணிகளைப் போர்த்த, மூட்டை கட்டப் பயன்படும்
- 75 சதவீதம் காலுறை, பை செய்யப் பயன்படும்.
- போர்வை, கம்பளிப் போர்வை. திரைச்சீலை செய்யப்பயன்படும்.
- நெசவு நாராகப் பயன்படும்.
13. இயற்கை வேளாண்மை என்பது இயற்கைக்குத் திரும்புதல் என்ற தத்துவத்தை நோக்கி இயங்குவதாகக் கருதப்படுகிறது. இதனை விளக்குக.
- இயற்கை வேளாணமை என்பது ஒரு மாற்று வேளாண்மை முறையாகும்.
- இதில் உயிரியல் இடுபொருட்களைப் பயன்படுத்தி இயற்கையாகத் தாவரங்கள்/ பயிர்கள் பயிரிடப் படுவதால் மண் வளமும் சுற்றுச்சூழல் சமநிலையும் பராமரிக்கப்பட்டு மாசு மற்றும் இழப்பு குறைக்கப் படுகிறது.
- பசுமைப்புரட்சி நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் இந்திய விவசாயிகள் இயற்கை விவசாயம் செய்து வந்தனர்.
- ஒருங்கிணைந்த இயற்கை விவசாய மேலாண்மையின் முக்கிய கூறுகளில் ஒன்றாக உயிரி உரங்கள் (biofertilizers) பயன்படுத்தப்படுகின்றன.
- இவை விலை குறைந்த புதுப்பிக்கத் தகுந்த மூலமாக இருப்பதால் வேதி உரத்திற்கு மாற்றாகத் தொடர்பயன் தரு வேளாண்மையில் (Sustainable agriculture) பங்கு பெறுகின்றன.
- உயிரி உரங்கள் தயாரிப்பில் தாவரங்களுடன் தொடர்புடைய பல நுண்ணுயிரிகள் பயன்படுத்தப் படுகின்றன. இவ்வாறு இயற்கை வேளாண்மை என்பது இயற்கைக்குத் திரும்புதல் என்ற தத்துவத்தை நோக்கி இயங்குவதாகக் கருதப்படுகிறது.
14.மூலக்கூறு வேளாண் தாவரங்கள் இயல்பான மருத்துவப்பயன் தாவரங்களிலிருந்து வேறுபட்டவை எவ்வாறு?
மூலக்கூறு வேளாண் தாவரங்கள்
- உயிர் நுட்பவியல் முறையில், மரபணு மாற்றம் செய்யப்பட்டு மருத்துவ வேதிப்பொருட்களைத் இ தரும் தாவரங்களை மூலக்கூறு வேளாண் தாவரங்கள் என்று பெயர்.
- அதிக அளவு உற்பத்தி குறைந்த செலவு – ஆனால் உயிர்தொழில் நுட்ப அறிவு தேவைப்படுகிறது.
இயல்பான மருத்துவப்பயன் தாவரங்கள்
- பயிரிடப்பட்ட மூலிகைத் தாவரங்களிலிருந்து, இயற்கை முறையில் மருந்துகள் பெறப்படுகின்றன.
- எளிமையானது, அதிக அளவு உற்பத்தி, குறைந்த செலவில் சாத்தியமில்லை, அதிகஅளவு மனித ஆற்றல் தேவைப்படுகிறது