12th Botany Pure Science Guide 9th Lesson Additional 3 Marks
12th Botany PURE SCIENCE 9th Lesson Additional 3 Marks Answers. 12th Standard Pure Science Grout Unit 9 8th Lesson book Back and Additional Question and Answers. TN 12th Bio-Botany Unit 9, 7th lesson Additional 5 Marks Tamil Medium. Additional 1 Marks, 2 Marks, 3 Marks, 5 Marks Question and answers for 12th Students and NEET Students for Tamil Medium. 12th Botany Samacheer Kalvi Guide.. 12th Botany Unit 9 Full Answers. TN 12th Standard pure science Book Back All Question with answers Tamil Medium. 12th Samacheer kalvi Guide Lesson 9. பயிர் பெருக்கம் Answer key in Tamil Medium Students Guide 360. HSC 12th Botany Lesson 3 Book Back Answers. 12th Botany Pure Science Guide.
12th Bio-Botany Unit 9 | Lesson 9. பயிர் பெருக்கம் Additional 3 Marks Question – Answers
12th Botany Pure Science Guide 9th Lesson Additional 3 Marks
1.தன்படிமயமாதல் என்றால் என்ன?
- தன்பன்மடியமாதல் (autopolyploidy) என்பது ஒரு தாவரத்திலுள்ள குரோமோசோம்கள் தானாகவே இரட்டிப்புறுதலை குறிக்கிறது. எ.கா. பீட்ரூட், ஆப்பிள், போன்றவற்றின் மும்மய
- பன்மடிய நிலையானது வீரியத்தையும், களி, வேர், இலை, மலர் போன்றவற்றின் அளவை. பெரிதாகவும், அதிக அளவு களிகளின் எண்ணிக்கை மற்றும் சர்க்கரையின் அளவையும் அதிகரிக்கின்றன.
2.பயிர் பெருக்கத்தின் முக்கிய படிநிலைகள் யாவை?
- விளைச்சல், வேர் வளர்ச்சி, முளைப்புத்திறன் வீரியம் போன்றவற்றை உயர்த்துகிறது.
- நாற்றுகளைச் சீரான முறையில் முளைக்கச் செய்கிறது.
- பூக்கும் பருவத்தை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்னரே எய்தச் செய்கிறது.
- சீரான விதை உற்பத்தி மற்றும் முதிரச்சியை உண்டாக்குகிறது.
- வறட்சியைத் தாங்கும் திறனை விதைகளுக்கு அளிக்கிறது.
4. விதைப்பூச்சு – வரையறு.
- விதைபூச்சு என்பது விதையை எருவிலோ, வளர்ச்சி ஊக்கிகளைக் கொண்டோ, ரைசோபியம் காரணிப்பொருள், ஊட்டச்சத்து பொருள். எதிர்க்கும் பொருள், வேதிப்பொருள், பூச்சிக் கொல்லிகள் போன்ற பொருட்களைக் கொண்டு அடர்த்தியாக விதையின் மேல் பூசுவதாகும். விதைகளின் மேல் பசையின் மூலம் சேர்க்கப்படும் வேதிப்பொருட்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் விதையின் முளைப்பு மற்றும் செயல்திறனை அதிகரிக்கின்றன.
5. நோய் எதிர்க்கும் திறன் கொண்ட இரகங்களை அட்டவணைப்படுத்து.
- கோதுமை
- பிராசிகா
- காராமணி
- காலிஃபிளவர்
- மிளகாய்
இரகங்கள்
- ஹிம்கிரி
- பூசா சுவர்னிம் (கரராய்
- பூசா கோமல்
- பூசா சுப்ரா, பூசா ஸ்னோபால் K-1
- பூசா சடபஹர்
பூச்சி/சிறு பூச்சி
- இலை மற்றும் பட்டைத்துரு, ஹில் பண்ட்
- வெண் துரு
- பாக்டீரிய அழுகல்
- கருப்பு அழுகல் மற்றும் சுருள் கருப்பு| அழுகல்
- மிளகாய் மொசைக் தேமல் வைரஸ், புகையிலை தேமல் வைரஸ் மற்றும் இலைச்சுருள்
6.பியூவிரியா – வரையறு.
- பியூவிரியாசிற்றினம் என்பது உலகெங்கிலும் மண்ணில் இயற்கையாக வாழக்கூடிய ஒரு பூச்சி நோயுயிரி (entomom-pathogenic) பூஞ்சையாகும்.
- இவை பல்வேறு கணுக்காலி சிற்றினங்களில் ஒட்டுண்ணியாக வாழ்ந்து வெள்ளை மஸ்கர்டைன் நோயைத் தாவரத்தின் வளர்ச்சியைப் பாதிக்காதவாறு ஏற்படுத்துகின்றன.
- இது ரைசாக்டோனியா சொலானி என்ற பூஞ்சையால் தக்காளியில் ஏற்படுத்தப்படும் நாற்றுமடிதல் நோயைக் கட்டுப்படுத்துகிறது.
7.விதை பாதுகாப்பு வகைகள் யாவை?
- ஈவார்ட் (1908) வாழ்நாளின் அடிப்படையில் |விதைகளை மூன்று வகையாக வகைப்பாடு செய்தார்
- விதையின் வாழ்நாளானது 3 வருடத்திற்கு மிகாமலிருத்தல்
- விதையின் வாழ்நாளானது 3 முதல் 15 வருடத்திற்கு மிகாமலிருத்தல்.
- விதையின் வாழ்நாளானது 15 முதல் 1000 வருடத்திற்கும் மேலாக இருத்தல்.
8.விதைச்சான்று – சிறுகுறிப்பு வரைக.
- தரக்கட்டுப்பாட்டுடன் கூடிய விதைப் பெருக்கம் மற்றும் உற்பத்திக்கான சட்டபூர்வமான அல்லது சட்டமயமான முறையே விதைச்சான்றாகும். விதைகளைப் பராமரித்து அவற்றைப் பொதுமக்களுக்கு அளிப்பதே இத்தரச்சான்றின் நோக்கம்.
- மரபு அடையாளத்துடன் கூடிய கலப்படமற்ற பட்டியலிடப்பட்ட இரகங்களைத் தரம் வாய்ந்த விதைகள் மற்றும் பெருக்கத்திற்கான பொருட்கள் மூலம் வளர்த்து விநியோகிக்க இத்தரச்சான்று பயன்படுகிறது.
9.தேசிய தாவர மரபியல் வளத்துறையின் தலைமையகம் மற்றும் மண்டல நிலையங்கள் எங்கு அமைந்துள்ளது?
- தேசியத் தாவர மரபியல் வளத்துறை (Nation Burea of Plant Genetic Resoure-NBPGR), இது நமது நாட்டிலுள்ள வேளாண் மற்றும் தோட்டக்கலை துறைகளில் பயிர் இரகங்களை அறிமுகப்படுத்திப் பராமரிக்கிறது.
- இதன் தலைமையகம் புதுதில்லியிலுள்ள இரங்கபுரி என்ற இடத்தில் அமைந்துள்ளது.
- இது அமிர்தசரஸ், கொல்கத்தா, மும்பை, சென்னை (மீனம்பாக்கம்) ஆகிய நான்கு மண்டல நிலையங்களைக் கொண்டுள்ளது.
10. விதை நேர்த்தி முறை மற்றும் அதன் பயன்களை யாவை?
- வேளாண்மையிலும், தோட்டக்கலைத் துறை யிலும் விதை நேர்த்தியானது வேதிப்பொருட்களைக் கொண்டு முக்கியமாக எதிர்நுண்ணுயிரி அல்லது பூஞ்சைக் கொல்லிகளை நடவுக்கு முன் இட்டு நேர்த்தி செய்யப்படுகிறது.
விதைநேர்த்தியின் பயன்கள்:
- தாவரங்களில் நோய்கள் பரவுவதைத் தடுக்கிறது.
- நாற்றுக் கருகளிலிருந்து விதைகளைப் பாதுகாக்கிறது.
- முளைப்புத் திறனை மேம்படுத்துகிறது.
- சேமித்து வைத்திருக்கும் தானியங்களைப்
- பூச்சிகள் தாக்காமல் பாதுகாக்கிறது.
- மண்ணிலுள்ள பூச்சிகளைக் கட்டுப்படுத்துகிறது.
11. அசோலா பற்றி குறிப்பு தருக.
- அசோலா என்பது மிதக்கும் நீர்வாழ் பெரணி ஆகும்.
- இது நைட்ரஜனை நிலைநிறுத்தும் நீலம் பசும் பாசியான அன்பீனா அசோலாவுடன் இணைந்து வளிமண்டல நைட்ரஜனை நிலை நிறுத்துகிறது.
- நெல் சாகுபடி செய்யும் நிலங்களில் ஒரு ஹெக்டேருக்கு 40 முதல் பயிர் விளைச்சலை அதிகரிக்கிறது.
- நெல்பயிரிடும் உழவு நிலங்களில் அசோலா விரைவாக சிதைவடைந்து நெற்பயிர்களின் விளைச்சலை அதிகரிக்கிறது.