12th Botany Pure Science Guide 3rd Lesson Additional 5 Marks
12th Botany PURE SCIENCE 3rd Lesson Additional 5 Mark Answers. 12th Standard Pure Science Grout Unit 7, 3rd Lesson book Back and Additional Question and Answers. TN 12th Bio-Botany Unit 7, 3rd lesson Additional 5 Marks Tamil Medium. Additional 1 Marks, 2 Marks, 3 Marks, 5 Marks Question and answers for 12th Students and NEET Students for Tamil Medium. 12th Botany Samacheer Kalvi Guide.. 12th Botany Unit 9 Full Answers. TN 12th Standard pure science Book Back All Question with answers Tamil Medium. 12th Samacheer kalvi Guide Lesson 3 . குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம் Answer key in Tamil Medium Students Guide 360. HSC 12th Botany Lesson 3 Book Back Answers. 12th Botany Pure Science Guide.
12th Bio-Botany Unit 7 | Lesson 3. குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம் – Additional 5 Mark Question – Answers
12th Botany Pure Science Guide 3rd Lesson Additional 5 Marks
1.குறுக்கேற்றத்தின் முக்கியத்துவத்தை கூறுக.
- பாக்டீரியங்கள், ஈஸ்ட், பூஞ்சை, உயர் தாவரங்கள் மற்றும் விலங்குகள் ஆகிய அனைத்து உயிரினங்களிலும் குறுக்கேற்றம் நடைபெறும். அவை
- குரோமாடிட் துண்டுகளின் பரிமாற்றம், புதிய மரபணுக்களின் சேர்க்கைக்கு வழிகோலுவதால் இந்நிகழ்வு பரிணாமத்தில் முக்கியப் பங்காற்றுகிறது.
- குறுக்கேற்றம் பற்றிய ஆய்வின் மூலம் குரோமோசோம்களில் மரபணுக்கள் நேர்க்கோட்டில் அமைந்திருப்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது.
- குறுக்கேற்ற நிகழ்விரைவின் அடிப்படையிலேயே மரபு வரைபடம் உருவாக்கப்படுகிறது.
- மரபணுவின் தன்மை மற்றும் செயல்பாடுகளை அறிந்து கொள்ளக் குறுக்கேற்றம் உதவுகிறது.
- ஒரு புதிய நன்மை பயக்கும் சேர்க்கை தோன்றுவதால் தாவரப் பயிர்ப்பெருக்கத்தில் பயன்படுத்தப்படுகிறது.
2. பல்கூட்டு அல்லீல்கள் என்றால் என்ன? அதன் பண்புகள் யாவை?
- ஒரு உயிரினத்தில் கொடுக்கப்பட்டுள்ள புறத்தோற்றவகைய பண்புக்கூறு (phenotypic trait) அதிலுள்ள தனி இணை மரபணுக்களைச் சார்ந்துள்ளது.
- இந்த ஒவ்வொன்றும் ஒத்திசைவு குரோமோசோம்களில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அமைந்துள்ளதற்கு அமைவிடம் (locus) என்று அழைக்கப்படுகிறது.
- ஒரு இணை ஒத்திசைவு குரோமோசோம்களில் ஒரு மரபணுவின் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட அல்லீல் வகைகள் ஒரே அமைவிடத்தில் அமைந்திருப்பது பல்கூட்டு அல்லீல்கள் என அழைக்கப்டுகிறது.
- ஒரு இணை ஒத்திசைவு குரோமோசோம்களில் ஒரு மரபணுவின் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட அல்லீல் வகைகள் ஒரே அமைவிடத்தில் அமைந்திருப்பது பல்கூட்டு அல்லீல்கள் என அழைக்கப்டுகிறது.
பல்கூட்டு அல்லீல்களின் பண்புகள் :
- ஒத்திசைவு குரோமோசோம்களில் உள்ள பல்கூட்டு அல்லீல்களின் வரிசை எப்போதுமே ஒரே அமைவிடத்தில் அமைந்துள்ளது. எனவே
- இந்த அல்லீல்களின் வரிசைகளுக்குள் குறுக்கேற்றம் நடைபெறுவதில்லை. பல்கூட்டு அல்லீல்கள் ஒரே பண்பிற்கு மட்டும் காரணமாகும்.
- இயல்பான வகை (wild type) அல்லீல்கள் கொண்ட வரிசை ஓங்குப்பண்பினை வெளிப் படுத்தும். மாறாக் சடுதிமாற்றமுற்ற தாவரங்களின் அல்லீல்கள் ஓங்கு அல்லது நடுத்தர வகை தன்மையுடைய புறத்தோற்ற விளைவுகளை வெளிப்படுத்துகின்றன.
- இருவகையான சடுதிமாற்றமுற்ற பல்கூட்டு அல்லீல்களைக் கலப்பு செய்யப்படும்போது அதன் புறத்தோற்றவகையம் எப்பொழுதுமே சடுதிமாற்ற முற்ற வகையை ஒத்தே அமைந்திருக்கும். இயல்பான வகையை (wild type) ஒத்திருக்காது.
3. ஆண் டுரோசோஃபில்லாவில் முழுமையான பிணைப்பு நடைபெறுவதைப் பற்றி விவரி?
- பிணைப்புற்ற இரு மரபணுக்களுக்கிடையே பிரிந்து செல்லும் வாய்ப்பு மிகக்குறைவாக இருக்கும் பட்சத்தில் அவை ஒரு சேர மரபுவழி அடைவதால் பெற்றோர்களின் சேர்க்கை மட்டுமே காணப்படுகிறது.
- ஏனெனில் ஒரே குரோமோசோமில் காணப்படும் பிணைப்புற்ற மரபணுக்களின் இருப்பிடம் மிக அருகருகே அமைந்துள்ளதால் குறுக்கேற்றம் நிகழ வாய்ப்பில்லை.
- இந்நிகழ்வு முழுமையாக பிணைப்பு என்று அழைக்கப்படுகிறது.
- இவை அரிதாக நடைபெற்றாலும் ஆண் டுரோசோஃபில்லா கண்டறியப்பட்டுள்ளது.
- C.B. பிரிட்ஜஸ் (1919) ஆண் டுரோசோஃபில்லா சில சிற்றினங்களில் குறுக்கேற்றம் முற்றிலுமாக நடைபெறுவதில்லை எனக் கண்டறிந்தார்.-
4.மக்காச் சோள விதையில் நடைபெறும் முழுமையற்ற பிணைப்பை பற்றி விவரி?
- பிணைப்புற்ற மரபணுக்கள் மிக நிகழ அமைந்தால் குறுக்கேற்றம் விலகி அதிக வாய்ப்புள்ளது.
- இதன் விளைவாகப் பெற்றோர் மற்றும் பெற்றோர் இல்லாத சேர்க்கைகள் அறியப்பட்டது. இந்தப் பிணைப்புற்ற மரபணுக்கள் குறுக்கேற்றத்தை வெளிப்படுத்துகிறது.
- இது முழுமையற்ற பிணைப்பு என்று அழைக்கப்படுகிறது.
- இந்நிகழ்வை வறட்சின்சன் மக்காச்சோளத்தில் முதலில் கண்டறிந்தார்.
6.புள்ளி சடுதிமாற்றத்தின் வகைகள் பற்றி விவரி?
- DNA வில் நடைபெறும் புள்ளி சடுதிமாற்றம் இரண்டு வகைகளாக வகைப்படுத்தப் பட்டுள்ளன.
- கார இணை பதிலீடுகள் மற்றும் கார இணை இடைச்செருகல் அல்லது நீக்குதல் ஆகியவையாகும்.
- கார இணை பதிலீடு சடுதிமாற்றம் : கார இணை பதிலீடு சடுதிமாற்றம் என்பது DNA வின் ஒரு கார இணை மற்றொரு கார இணையால் பதிலீடு செய்வதாகும். இவை இரு துணை வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒத்த பதிலீடு (Transition), வேறுபட்ட பதிலீடு (transversion).
- சேர்த்தல் அல்லது நீக்குதல் சடுதிமாற்றம் : சேர்த்தல் அல்லது நீக்குதல் சடுதிமாற்றம் என்பது நியூக்ளியோடைடு இணைகளின் சேர்த்தல் அல்லது நீக்குதல் மற்றும் கார இணை சேர்த்தல் அல்லது நீக்குதல் எனவும் அழைக்கப்படுகிறது.
- இன்டெல் சடுதிமாற்றம் : கூட்டாக இந்த நிகழ்வுகள் அனைத்தும் இன்டெல் சடுதிமாற்றம் (indel mutation) (Insertion – deletion mutation) எனக் குறிப்பிடப்படுகிறது. பதிலீடு சடுதிமாற்றம் அல்லது இன்டெல் சடுதிமாற்றங்கள் மரபணுக்களின் மரபுச் செய்தி பெயர்வுகளைப் பாதிக்கின்றன. இதன் அடிப்படையில் பல்வேறு வகையான சடுதி மாற்றங்கள் உள்ளன. அவை
- ஒத்த அல்லது அமைதியான சடுதிமாற்றம்: ஒரு அமினோ அமிலத்திற்கான ஒரு மரபுக்குறியனை (codon) அதே அமினோ அமிலத்திற்கான வேறொரு மரபுக்குறியனாக மாற்றியமைக்கப்படும் சடுதிமாற்றம் ஒத்த அல்லது அமைதியான சடுதிமாற்றம் (Synonymous or Silent mutation) என்று அழைக்கப்படுகிறது.
- தவறுதலாகப் பொருள்படும் அல்லது ஒத்திலாச் சடுதிமாற்றம் : ஒரு அமினோ அமிலத்திற்கான ஒரு மரபுக்குறியனை வேறொரு அமினோ அமிலத்திற்கான மரபுக்குறியனாக மாற்றியமைக்கப்படும் சடுதிமாற்றம் தவறுதலாகப் பொருள்படும் அல்லது ஒத்திலாச் சடுதிமாற்றம் (Missense or non synonymous mutation) என்று அழைக்கப்படுகிறது.
- பொருளுணர்த்தாத சடுதிமாற்றம் : ஒரு அமினோ அமிலத்திற்கான மரபுக்குறியன் முடிவு அல்லது நிறுத்துக் குறியனாக மாற்றமடையும் சடுதிமாற்றம் பொருளுணர்த்தாத சடுதிமாற்றம் (Nonsense mutation) என்று அழைக்கப்படுகிறது.
- கட்ட நகர்வு சடுதிமாற்றம் : ஒரு DNA வில் ஒரு கார இணை சேர்த்தல் அல்லது நீக்குதலால் மரபுச் செய்தி பெயர்வு கட்டமைப்புகளை மாற்றப்படுவதன் விளைவால் இயல்பான புரதத்தின் அமைப்பு மற்றும் செயல்பாடு இழக்கப்படுவது கட்ட நகர்வு சடுதிமாற்றம் (Frame shift mutation) என்று அழைக்கப் படுகிறது.