12th Botany Pure Science Guide Tamil Medium

 12th Botany Pure Science Guide 3rd Lesson Additional 3 Marks

 12th Botany Pure Science Guide 3rd Lesson Additional 3 Marks

12th Botany PURE SCIENCE 3rd Lesson additional 3 Marks. 12th Standard Pure Science Grout Unit 7, 3rd Lesson book Back and Additional Question and Answers. TN 12th Bio-Botany Unit 7, 3rd lesson Additional 5 Marks Tamil Medium. Additional 1 Marks, 2 Marks, 3 Marks, 5 Marks Question and answers for 12th Students and NEET Students for Tamil Medium. 12th Botany Samacheer Kalvi Guide.. 12th Botany Unit 9 Full Answers. TN 12th Standard pure science Book Back All Question with answers Tamil Medium. 12th Samacheer kalvi Guide Lesson 3 . குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம் Answer key in Tamil Medium Students Guide 360. HSC 12th Botany Lesson 3 Book Back Answers. 12th Botany Pure Science Guide.

12th Bio-Botany Unit 7 | Lesson 3. குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம் – Additional 3 Marks Question – Answers 

12th Botany Pure Science Guide Tamil Medium

 12th Botany Pure Science Guide 3rd Lesson Additional 3 Marks

1.பிணைப்பு மற்றும் குறுக்கேற்றம் வேறுபடுத்துக.
பிணைப்பு

  1. குரோமோசோம்களில் உள்ள மரபணுக்கள் அருகமைந்து காணப்படும்.
  2. ஒத்திசைவு குரோமோசோம்களில் உள்ள ஒரு குரோமோ சோம் மட்டுமே பங்குபெறும்.
  3. புதிய மரபணுச் சேர்க்கை களை இது குறைக்கிறது.

குறுக்கேற்றம்

  1. படியெடுத்தல் நிகழ்வை ஒடுக்க அல்லது குறைக்க உதவும் கார வரிசையாகும்.
  2. ஒத்திசைவு குரோமோசோம்களின் சகோதரி அல்லாத குரோமாட்டிட்களுக்கு இடையே உள்ள துண்டுகளின் பரிமாற்றம் நிகழும்
  3. புதிய மரபணுச் சேர்க்கைகள் தோன்றுவதன் மூலம் வேறுபாடுகளை அதிகரிக்கிறது, புதிய உயிரினம் தோன்ற வழிவகுக்கிறது,

2. குறுக்கேற்றம் யாவை? என்பது யாது? அதன் வகைகள்

  • ஒத்திசைவு குரோமோசோம் இணைகளின் சகோதரி அல்லாத குரோமோட்டிட்களுக்கிடையே இணையான துண்டங்கள் பரிமாற்றப்பட்டுப் புதிய மரபணுச் சேர்க்கை தோன்றும் உயிரிய நிகழ்விற்குக் குறுக்கேற்றம் என்று பெயர்.
  • ‘குறுக்கேற்றம்’ என்ற சொல் மார்கன் (1912) என்பவரால் முன்மொழியப்பட்டது. இது குன்றல் பகுப்பின் புரோபேஸ் 1ல் பாக்கிடீன் (Pachytene) நிலையில் நடைபெறுகிறது.
  • வழக்கமாகக் கேமீட்டுகள் உருவாக்கத்தின் போது குறுக்கேற்றம் இனசெல்களில் நடைபெறுகிறது. இது குன்றல் பகுப்பு குறுக்கேற்றம் அல்லது இனசெல் குறுக்கேற்றம் என்று அழைக்கப்படும்.
  • இது பொதுவாகக் காணப்படும் முக்கியத்துவம் பெற்ற நிகழ்வாகும். அரிதாக மிகவும் மைட்டாசிஸ் நிலையின் போது குறுக்கேற்றம் உடலச் செல்களில் நிகழ்கிறது. இது உடலச் செல் குறுக்கேற்றம் அல்லது மைட்டாடிக் குறுக்கேற்றம் என்று அழைக்கப்படுகிறது.

3.பிணைப்புத் தொகுதிகள் சிறு குறிப்பு வரைக. 

  • ஒரு குரோமோசோமில் நீள் வரிசையில்
  • அமைந்துள்ள பிணைப்புற்ற மரபணுக்களின் தொகுப்பிற்குப் பிணைப்புத் தொகுதிகள் என்று அழைக்கப்படுகிறது.
  • எந்த ஒரு சிற்றினத்திலும் அதில்
  • காணப்படும் பிணைப்புத் தொகுதிகளின் எண்ணிக்கை ஒருமடியத் தொகுதிகுரோமோசோம்களின் எண்ணிக்கைக்கு நிகராகக் காணப்படும்.

எடுத்துக்காட்டு

உயிரினத்தின் பெயர்கள் – பிணைப்புத் தொகுதிகள்
  1. மியூகர்- 2
  2. டுரோசோஃபில்லா – 4
  3. இனிப்பு பட்டாணி – 7
  4. நியூரோஸ்போரா – 7
  5. மக்காச்சோளம் – 10

 

4.குறுக்கேற்றத்தினை கயாஸ்மாக்களின் அடிப்படையில் வகைப்படுத்துக. 
  • குறுக்கேற்றத்தின் போது உருவாகும் கயாஸ்மாக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இது மூன்று வகைப்படும்.
  • ஒற்றைக் குறுக்கேற்றம் : நான்கில் இரு குரோமோடிட்கள் மட்டுமே பங்கேற்று ஒரு கயாஸ்மாவை உருவாக்குகிறது.
  • இரட்டைக் குறுக்கேற்றம் : இரண்டு அல்லது மூன்று அல்லது அனைத்து நான்கு குரோமோடிட்களும் பங்கேற்று இரண்டு கயாஸ்மாக்களை உருவாக்குகிறது,
  • பல் குறுக்கேற்றம் : இரண்டிற்கு மேற்பட்ட கயாஸ்மாக்கள் உருவாவதால், குறுக்கேற்ற நிகழ்விரைவு மிகக் குறைவாக இருக்கும்,

5.மறுகூட்டிணைவு நிகழ்விரைவு என்றால் என்ன? அதன் சூத்திரம் யாது? மறுகூட்டிணைவு நிகழ்விரைவுக் (RF) கணக்கீடு:

ஒரு கலப்பின் போது தோன்றும் மறு கூட்டிணைவு வழித்தோன்றல்களின் விழுக்காடு மறுகூட்டிணைவு நிகழ்விரைவு எனப்படுகிறது.

6.மாற்றுமுறை இயைத்தலின் முக்கியத்துவம் யாது? 

மாற்றுமுறை இயைத்தலின் முக்கியத்துவம்:

  • மாற்றுமுறை இயைத்தலினால் உருவாகும் பலவகைப்பட்ட mRNA களினால், பல்வேறு வகையில் அமினோ அமில வரிசைகளைப் பெற்றும் மேலும் செயல்பாட்டில் வேறுபட்ட புரதங்கள் உருவாகின்றன.
  • ஒரு மரபணுவிலிருந்து ஒத்த உரு பெற்ற பல்வேறு புரதங்கள் தோன்றுகின்றன.ஒரு மரபணுவிலிருந்த பல mRNA படிகள் தோன்றுகின்றன. மரபணு ஒன்றின் விலைபொருட்களின் எண்ணிக்கை அதிகமாகிறது.
  • சூழல் நிர்ப்பந்தங்களைச் சமாளித்து அதற்கேற்ற தக அமைவுகளைப் பெற இது உரவுகிறது. அதாவது சூழலுக்கேற்ற பண்பைத் தேர்வு செய்ய இது உதவுகிறது.

7.குரோமோசோம்களில் சடுதிமாற்றம் (அ) குரோமோசோம் பிறழ்ச்சிகள் என்றால் என்ன? 

  • குரோமோசோம்களின் அமைப்பு மற்றும் எண்ணிக்கையில் உண்டாகும் மாற்றங்கள். ஒரு செல்லின் மரபணு தொகையத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
  • இந்த மிகப் பெரிய மாற்றங்களே குரோமோசோம் சடுதிமாற்றங்கள் அல்லது குரோமோசோம் பிறழ்ச்சிகள் (Chromosomal aberrations) எனக் கருதப்படுகிறது. ஒரு மரபணுவிற்குள் நடைபெறும் மாற்றமானது, மரபணு சடுதிமாற்றம் எனவும் அதிக மரபணுக்களைக் கொண்ட குரோமோசோம் பகுதியில் நடைபெறும் மாற்றமானது குரோமோசோம் சடுதிமாற்றம் எனவும் அழைக்கப்படுகிறது.
  • இவை நுண்ணோக்கி ஆய்வு, மரபணு பகுப்பாய்வு அல்லது இரண்டின் மூலமாகவோ கண்டறிய முடியும். மாறாக மரபணு சடுதிமாற்றத்தை நுண்ணோக்கி ஆய்வு மூலம் கண்டறிய இயலாது.
  • குரோமோசோம் சடுதிமாற்றம் இரு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. குரோமோசோம் எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றங்கள் குரோமோசோம் அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள்.

Leave a Reply