12th Botany Pure Science Guide Tamil Medium

 12th Botany Pure Science Guide 3rd Lesson Additional 2 Marks

12th Botany Pure Science Guide 3rd Lesson Additional 2 Marks

TN 12th Botany PURE SCIENCE 3rd Lesson Book Back Answers. +2 Pure Science Grout Unit 7, 3rd Lesson book Back and Additional Question and Answers. TN 12th Bio-Botany Unit 7, 3rd lesson Additional 5 Marks Tamil Medium. Additional 1 Marks, 2 Marks, 3 Marks, 5 Marks Question and answers for 12th Students and NEET Students for Tamil Medium. 12th Botany Samacheer Kalvi Guide.. 12th Botany Unit 9 Full Answers. TN 12th Standard pure science Book Back All Question with answers Tamil Medium. 12th Samacheer kalvi Guide Lesson 3 . குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம் Answer key in Tamil Medium Students Guide 360. HSC 12th Botany Lesson 3 Book Back Answers. 12th Botany Pure Science Guide.

12th Bio-Botany Unit 7 | Lesson 3. குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம் – Additional 2 Marks Question – Answers 

12th Botany Pure Science Guide Tamil Medium

12th Botany Pure Science Guide 3rd Lesson Additional 2 Marks

1.இருமடிய உயிரி என்றால் என்ன?

  • முழுமையான இரு அடிப்படைத் தொகுதி குரோமோசோம்களை கொண்டுள்ள உயிரினத்திற்கு இருமடிய உயிரி (diploid) என்று பெயர். எ.கா: பப்பாளி 2n=36

 

2. பால் பிணைப்பு வரையறு.

  • பால் குரோமோசோம்களுடன் இணைந்து பிணைப்புற்ற மரபணுக்கள் பால் பிணைப்பு (sex linkage) என்று அழைக்கப்படுகின்றன.

 

3.தாமஸ் ஹண்ட் மார்கன் என்பவர் எக்கண்டுபிடிப்பிற்கான நோபல் பரிசு பெற்றார்?

  • தாமஸ் ஹண்ட் மார்கன் (Thomas Hund Morgan) (1933) என்பவர் பாரம்பரியத்தில் குரோமோசோம்களின் பங்கு பற்றிய கண்டுபிடிப்புகளுக்காகச் செயலியல் அல்லது மருத்தும் சார்ந்த துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார்.

 

4.பிணைப்புற்ற மரபணுக்கள் என்றால் என்ன? 

  • ஒரே குரோமோசோமில் காணப்படும் அருகமைந்த மரபணுக்கள் ஒன்றாகவே பாரம்பரியமாவது பிணைப்புற்ற மரபணுக்கள் (linked genes) எனப்படுகிறது.

 

5.பிணைப்புறாத மரபணுக்கள் என்றால் என்ன? 

  • ஒரே குரோமோசோமில் காணப்படும் இரு மரபணுக்கள் குறிப்பிடத்தக்க தொலைவில் அமைந்திருந்தால் அது பிணைப்புறாத மரபணுக்கள் (unlinked genes) எனப்படுகிறது.

 

6.சிஸ் வகை அமைவு என்றால் என்ன? 

  • ஒரே ஒத்திசைவு குரோமோசோம்களில் காணப்படும் இரு ஓங்குத்தன்மை அல்லீல்கள் ஒரே கேமீட் மூலம் ஒன்றாகவே மரபுவழி அடைந்தால் இணைப்பு அல்லது சிஸ் வகை அமைவு (cis configuration) என்று அழைக்கப் படுகிறது.

 

7.மறுக்கூட்டிணைவிகள் என்றால் என்ன? 

  • குறுக்கேற்றத்தினால் புதிய பண்புகளைப் பெற்ற உயிரினங்கள் மறுகூட்டிணைவிகள் எனப்படும்.

 

8. இருபுள்ளி கலப்புகள் வரையறு 

  • தொடர்ச்சியான சோதனைக் கலப்புகளிலிருந்து இரு மரபணுக்களின் இணைகளுக்கான மரபணு வரைபடங்கள் கட்டமைக்கப்படுவது இருபுள்ளி கலப்புகள் (two – point crosses) என்று பெயர்.

 

9. மக்காச்சோளத்தில் உள்ள மூன்று ஓடுங்குத் தன்மைக் கொண்ட அல்லீல்கள் யாவை? 

  • மக்காச்சோளத்தில் (corn). உள்ள ஓடுங்குத்தன்மை கொண்ட அல்லீல்கள்
  1. 1 என்பது மந்த வளர்ச்சி (lazy) அல்லது நிலம் மூன்று படர்ந்த வளரியல்பு.
  2. g என்பது பளபளப்பான (glossy) இலை.
  3. உ என்பது சர்க்கரை சத்துள்ள (sugary) கருவூண் திசு.

 

10.தாவரங்களில் பால் நிர்ணயம் எவற்றால் தீர்மானிக்கப்படுகிறது? 

  • தாவரங்களில் பால் நிர்ணயம் என்பது ஒரு சிக்கலான முறையாகும். இவை மரபணுக்கள், சுற்றுச்சூழல் மற்றும் ஹார்மோன்களால் தீர்மானிக்கப்படுகிறது.

 

11. தாவரங்களில் பால் நிர்ணயத்தை கண்டறிந்தவர் யார்?

  • தாவரங்களில் பால் நிர்ணய முறையை C.E. ஆலன் (C.E. Allen) (1917) என்பவர் முதலில் கண்டறிந்தார்.

 

12. தாவரங்களை மோனோமார்ஃபிக் டைமார்ஃபிக் தாவரங்கள் என அழைக்கக் காரணம் என்ன?

  • 6% பூக்கும் தாவரங்களில் ஆண் பெண் பாலின உறுப்புகள் தனித்தனியாக அமைந்துள்ளன. இவற்றை டைமார்ஃபிக் (dimorphic) தாவரங்கள் என கருதப்படுகிறது.
  • ஆண் தாவர மலர்களின் மகரந்தத்தாள்களையும், பெண் தாவர மலர்களில் சூலக இலைகளையும் மட்டுமே உருவாக்குகின்றன.
  • இரண்டும் ஒரே தாவரத்தில் காணப்பட்டால் மோனோமார்ஃபிக் (96%) தாவரங்கள் ஆகும்.

 

13. பைவாலண்ட் என்றால் என்ன?

  • ஒத்திசைவு குரோமோசோம்கள் அருகமைவதால் தோன்றும் ஒரு இணை ஒத்திசைவு குரோமோசோம்கள் இரட்டை இணை பைவாலண்ட் எனப்படுகிறது.

14. சின்டெனிக் மரபணுக்கள் என்றால் என்ன?

  • ஒரே குரோமோசோமில் காணப்படும் இரு மரபணுக் அவை பிணையுறாத மரபணுக்கள் எனப்படுகின்றன

Leave a Reply