12th Botany Pure Science Guide 10th Lesson Answers
12th Botany PURE SCIENCE 10th Lesson Answers. 12th Standard Pure Science Grout Unit 10, 10th Lesson book Back and Additional Question and Answers. TN 12th Bio-Botany Unit 10, 10th lesson Additional 5 Marks Tamil Medium. Additional 1 Marks, 2 Marks, 3 Marks, 5 Marks Question and answers for 12th Students and NEET Students for Tamil Medium. 12th Botany Samacheer Kalvi Guide.. 12th Botany Unit 9 Full Answers. TN 12th Standard pure science Book Back All Question with answers Tamil Medium. 12th Samacheer kalvi Guide Lesson 10. பொருளாதாரப் பயனுள்ள தாவரங்களும் தொழில் முனைவுத் தாவரவியலும் Answer key in Tamil Medium Students Guide 360. HSC 12th Botany Lesson 3 Book Back Answers. 12th Botany Pure Science Guide.
12th Bio-Botany Unit 10 | Lesson 10. பொருளாதாரப் பயனுள்ள தாவரங்களும் தொழில் முனைவுத் தாவரவியலும் Question – Answers
12th Botany Pure Science Guide 10th Lesson Answers
1. தூரிகை நார் தரும் தாவரத்திற்கு உதாரணம்
ஆ) வேம்பு
விடை: ஈ) பனை
2. தவறான இணையைக் கண்டறிக.
ஆ) தோதகத்தி – டால்பெர்ஜியா சிற்றினம்
விடை : ஈ) மருதாணி – ஷொரியா ரொபஸ்டா
3. பொருத்தமற்றதை தேர்ந்தெடுக்கவும்.
இ) பில்லாந்தஸ் – நீரிழிவு எதிர்ப்பு
ஈ) குர்க்குமின் – எதிர் ஆக்சிஜனேற்றி
விடை: இ) பில்லாந்தஸ் – நீரிழிவு எதிர்ப்பு
4. கீழ்கண்ட கூற்றுகளில் சரியானது எது? எவை?
iii. திரவக் கடற்களை உரங்களின் தொடர் பயன்பாடு தாவரங்கள் சுற்றுச்சூழல் அழுத்தத்தை தாங்கிக் கொள்ள உதவுகிறது.
அ) (i) மற்றும் (ii)
ஆ) (j) மற்றும் (iii)
விடை : ஆ) (i) மற்றும் (iii)
5. ஒற்றைச் செல் புரதத்தைப் பற்றிய கூறுகளில் தவறான இணை/இணைகளைத் தேர்ந்தெடுக்கவும்
iv)கடற்களை – பொட்டாசியம் நிறைந்தது.
அ) (i) மற்றும் (ii)
ஆ) (i) மற்றும் (iv)
இ) (i) மற்றும் (iii)
ஈ) (i) மட்டும்
விடை : அ) (i) மற்றும் (ii)
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது. காரணம் கூற்றுக்குக்கு சரியான விளக்கம் ஆகும்.
ஈ) கூற்றும் காரணமும் தவறானது.
7. குக்கர்பிட்டுகள் என்றால் என்ன? ஏன் இவை முக்கிய கோடைக்கால காய்கறியாக பயன்படுத்தப் படுகிறது?
- குக்கர்பிட் என்பது குக்கர்பிட்டேசி குடும்பத்தைச் சார்ந்த கொடியின் தாவரங்களான வெள்ளரி, ஸ்குவாஷ் (squash), பூசணி, முலாம் போன்றவை இவ்வினம் சார்ந்த காய்கறிகளைக் குறிக்கும் சொல்லாகும். இந்தியா முழுவதிலும் பரவலாக வெள்ளரிபயிரிடப்படுகிறது. இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் வெள்ளரி ஒரு முக்கியக் கோடைக் காலக் காய்கறியாகப் பயன்படுத்தப்படுகிறது.
- வகையைப் பொறுத்து இளம் அல்லது முதிர்ந்த பழங்களை நேரடியாகவோ அல்லது சமைத்தோ உண்ணப்படுகிறது. சாலட் (salad) (மற்றும்) ஊறகாய் தயாரிக்கப் பயன்படுகிறது.
8. எந்த பழத்தில் பொட்டாசியம் செறிந்து காணப்படுகிறது?அதனுடைய பொருளாதார முக்கியத்துவத்தைத் தருக.
- வாழைப்பழத்தில் பொட்டாசியம் மற்றும் இன்றியமையாத வைட்டமின்கள் அதிகமாக நிறைந்துள்ளன.
- இது நேரடியாக அல்லது சமைத்து (வறுத்து, உலர வைத்து, வேகவைத்து) உண்ணப்படுகிறது. பழம் பதப்படுத்தப்பட்டு மாவாக்கப்படுகிறது.
- நொதிக்க வைக்கப்பட்ட பானங்களான ஓயின் (wine) தயாரிக்கப்பயன்படுகிறது.
9. போன்சாய் – வரையறு.
- போன்சாய் ஒரு முழு வளர்ந்த மரத்தின் வடிவையும், அளவையும் ஒத்திருக்கும், கொள் கலனில் குறுமரங்களாக வளர்க்கப்படும் ஜப்பானிய கலை போன்சாய் ஆகும்.
10. கண்ணாடித் தாவரப் பேணகம் என்றால் என்ன?
- கண்ணாடித் தாவரப் பேணகம் என்பது உள்ளிருப்பது வெளியில் தெரியக்கூடிய.ஒளி ஊடுருவும், மூடிய கண்ணாடி கொள்கலனில் வளர்க்கும் சிறு செடிகளின் தொகுப்பாகும்.
- இத்தகைய கண்ணாடி பேணகங்கள் எளிதில் தயாரிக்கக்கூடிய குறைந்த பராமரிப்பு கொண்ட குறைந்தளவு நீரில் நீண்டநாள் வாழக்கூடிய தோட்டங்களாகும்.
11. லைக்கோபெர்சிகான் எஸ்குலென்டமின் பொருளாதார முக்கியத்துவத்தை எழுதுக.
- லைக்கோபெர்சிகான் எஸ்குலென்டமின் என்பது தக்காளி ஆகும்.
பொருளாதார முக்கியத்துவம் :
- உயர்ந்த மகசூல் தருகிறது.
- உயர் பொருளாதார மதிப்பீட்டில் விளைகிறது. அதிக அளவு ஊட்டச்சத்து மற்றும் வைட்டமின் A மற்றும் C.
- மனித ஊட்டச்சத்துக்கான பங்களிப்பில் முதலிடம் வகிக்கின்றன.
12, நறுமணத் தாவரங்களை பயிரிடுவதன் நன்மைகளைப் பட்டியலிடு.
- 2500 நறுமணத் தாவரங்களையும் இந்தியா தன்னகத்தே கொண்டுள்ளது.
- மூலிகை மற்றும் நறுமணத் தாவரங்களில் மூலிகை மற்றும் நறுமணப் பயிர்கள் நிறுவனம் (CIMAP) அதிக விளைச்சல் தரும் இரகங்களையும் செயலாக்கத் தொழில்நுட்பங்களையும் உருவாக்கியுள்ளது. மூலிகை மற்றும் நறுமணத் தாவரங்களைப் பயிரிடுவதால் பின்வரும் நன்மைகள் கிடைக்கின்றன.
- துணைத் தொழில்களின் வளர்ச்சி மூலம் வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்.
- ஏற்றுமதி மூலம் அந்நியச் செலவாணியை ஈட்டலாம்.
- வீட்டு விலங்குகளாலும், பறவைகளாலும் பயிர்கள் சேதப்படுத்தப்படுவதில்லை.
- இதன் தொடர்புடைய தொழில்நுட்பங்கள் விவசாயிகளுக்கும் சூழலுக்கும் உகந்ததாக உள்ளன.
13. ஒரு போன்சாய் தாவரத்தை எவ்வாறு உருவாக்கலாம்?
- மரக்கன்றைப் பிடுங்கி வேரைத் தூய்மைப்படுத்தி வெட்டி திருத்தம் செய்யவும்.
- தொட்டியைத் தயார் செய்து சரியான இடத்தில் மரக்கன்றை நடவும்.
- மறுநடவு செய்த தாவரத்தில் வேர்கள் மீண்டும் வளரும் வரை அறை நிழலில் வைக்கவும்
14. NMPB என்றால் என்ன?
- இந்திய அரசு 24.11.2000-ல் தேசிய மருத்துவத் தாவர வாரியம் (NMPH) ஒன்றை அமைத்தது.
- தற்போது இந்த வாரியம் இந்திய அரசாங்கத்தின் ஆயுஷ் (AYUSH) அமைப்பின் கீழ் இயங்குகிறது
- பல்வேறு அமைச்சகங்களின் ஒருங்கிணைப்பு மற்றும் மத்திய, மாநில மற்றும் சர்வதேச அளவிலான மருத்துவ மூலதனத்துடன் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கான கொள்கையை நடை முறைப்படுத்துவதற்கான ஒரு பொருத்தமான முறையை உருவாக்குவதே NMPB-ன் முதன்மை நோக்கமாகும்.
- வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய இயல் மற்றும் அயல் சூழல் பாதுகாப்பிலும் உள்ளுர் மூலிகை மற்றும் மருத்துவ முக்கியத் துவம் வாய்ந்த நறுமண இலைகளிலும் கவனம் செலுத்தி வருகிறது.
15. நார்களின் வகைகளை விவரி
- தாவரவியலின்படி நார் என்பது ஒரு நீண்ட, குறுகிய மற்றும் தடித்த சுவருடைய செல்லாகும்.தாவர நார்கள் அவற்றின் உபயோகத்தின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
- நெசவு நார்
- தூரிகை நார்
- பின்னல் நார்
- திணிப்பு நார்
- துணிகள், வலைகள், கயிறுகள் தயாரிப்பு
- தூரிகைகள், துடைப்பம் செய்ய
- தொப்பிகள்,கூடைகள் மரச்சாமான்கள் செய்ய
- தலையணைகள் குஷன்கள், மெத்தைகள் அடைக்க
எடுத்துக்காட்டு
- பருத்தி, சணல், சணப்பை
- பனை நார்கள், துடைப்புற்கள்
- பிரம்பு. வைடெக்ஸ். லாண்டனா
- இலவம் பஞ்சு. கேலோடிராபிஸ்
16. கையடக்க சிறிய அறை பசுந்தாவரங்களைத் தயாரிக்க என்ன செய்வாய்?
- கண்ணாடித் தாவரப் பேணகம் என்பது உள்ளிருப்பது வெளியில் தெரியக்கூடிய, ஒளி ஊடுருவும், மூடிய கண்ணாடி கொள்கலனில் வளர்க்கும் சிறு செடிகளின் தொகுப்பாகும். இத்தகைய கண்ணாடி பேணகங்கள் எளிதில் தயாரிக்கக்கூடிய குறைந்த பராமரிப்பு கொண்ட குறைந்தளவு நீரில் நீண்டநாள் வாழக்கூடிய தோட்டங்களாகும்.
1.கொள்கலனைத் தயார் செய்தல் :
- உங்களுக்கு விருப்பமான கண்ணாடி கொள் கலனைக் கடையிலிருந்து சேகரித்து, சுத்தம் செய்து கொள்ளவும்.
- தாவரத்தை எவ்வாறு கண்ணாடி கொள்கலனுள் ஒழுங்குப்படுத்த வேண்டும் என்பதைத் திட்ட மிட்டுக் கொள்ள வேண்டும்.
2.வடிகால் அடுக்குகளை அமைத்தல் :
- கூழாங்கற்களைப் பயன்படுத்தி ஒரு வடிகால் போன்ற அடுக்கை உருவாக்குவதால் நீர் வடிந்து, தேக்கமடைவது தவிர்க்கப்படுகிறது. கொள்கலனின் அளவைப் பொறுத்துக் கூழாங் கற்களின் அடுக்கின் ஆழத்தை தீர்மானிக்கலாம். A
3.செயலூட்டப்பட்ட கரியைச் சேர்த்தல்:
- பாக்டீரியா, பூஞ்சை மற்றும் நாற்றங்களைக் குறைப்பதற்காகவும், கண்ணாடித் தாவரப் பேணகத்தின் தரத்தை மேம்படுத்துவற்காகவும் கூழாங்கற்களுடன் செயலூட்டப்பட்ட கரி சேர்க்கப்படுகிறது.
4.மண் சேர்த்தல் :
- தாவர பற்றி வளர்வதற்குப் போதுமான இடமளிக்கும் வகையில் தேவையான அளவு மண் சேர்க்கவும்.
5.தாவரங்கள் :
- கள்ளிமுளியான் சிற்றினங்கள், தண்ணீர்விட்டான் கிழங்கு சிற்றினங்கள், பருப்புக்கீரை சிற்றினங்கள், குளோரோபைட்டம் சிற்றினங்கள் போன்றவற்றுள் விரும்பிய தாவரங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
- அதன் வேர்கள் நீளமானதாக இருந்தால் ஒழுங்கமைக்கவும், ஒரு குச்சியப் பயன்படுத்திக் குழி தோண்டித் தாவர வேர்களை அதனுள் வைத்து வேரின் மேல் மண் சேர்த்து அழுந்தி வைக்கவும்.
- கொள்கலனில் சிறிய தாவரங்களை விளிம்பில் இருந்து விளக்கி நடுவதால், இலைகள் விளிம்பில் தொடாதிருக்கும்.
- தாவரங்களை நட்ட பிறகு மாஸ் அடுக்குகள் (உலர்ந்த அல்லது உயிருடன் உள்ள), சிறிய சிலைகள் (பழைய பொம்மைகள், கண்ணாடி மணிகள்) அல்லது சிறிய பாறை அடுக்குகள் போன்றவற்றைச் சேர்க்க வேண்டும். இது ஒரு சிறிய பசுமை உலகமாகும்.
17.செங்காந்தள் / எலுமிச்சைம் புல் பயிரிடுதலை பற்றி கட்டுரை வரைக.
- குளோரியோசா சூபர்பா (செங்காந்தாள்) பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த . தாவரப்பகுதி – விதை, மட்டநிலத்தண்டு,
முக்கிய வேதிக்கூறுகள்
- கால்சிசின் (0.5-0.7) மற்றும் கால்சிகோசைடு
- கீல்வாத குணப்படுத்தி, அழற்சி எதிர்ப்பி, புற்றுநோய் எதிர்ப்பி.
மண் மற்றும் காலநிலை :
- சிவப்பு தோட்ட மண் பயிரிடுவதற்கு மிகவும் ஏற்றது. தமிழ்நாட்டில், முக்கியமாகத் திருப்பூர். திண்டுக்கல், கரூர் மற்றும் சேலம் மாவட்டங் களில் 2,000 ஹெகடேர் பரப்பளவில் செங்காந்தள் பயிரிடப்படுகிறது.
நடவு:
- ஜுன் – ஜுலை மாதத்தில் நடவு செய்யப்படுகிறது. இரண்டு முதல் மூன்று முறை வயலை உழுது, கடைசி உழவின் போது 10டன் பண்ணை உரம் சேர்க்க வேண்டும். 30 செ.மீ. ஆழக் குழி தோண்டிக் கிழங்குகளை 30-45 செ.மீ. இடை வெளியில் நடவேண்டும். ஒரு ஆதாரத்தின் மீது கொடிகள் சுற்றிவிடப்பட வேண்டும்
நீர்பாசனம்:
- நடவு செய்தவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். பின்னர் அடுத்தடுத்து ஐந்து நாட்கள் இடைவெளியில் நீர் பாய்ச்ச வேண்டும்.
அறுவடை :
- காய்கள் (pods) 160 முதல் 180 நாட்களில் அறுவடை செய்யப்படுகின்றன.
II.நறுமணத் தாவர பயிரிடல் –
- சிம்போடோகான் சிட்ரேட்டஸ் (எலுமிச்சம் புலி) எலுமிச்சம் புல் (Lemon grass) என்பது திடமான எலுமிச்சை மணமுடைய ஒரு வெப்பமண்டல மூலிகையாகும். எலுமிச்சை சுவை ஆசியச் சமையலிலும், தேநீர், சுவையூட்டிகள் மற்றும் சூப்களிலும் அதிக மதிப்புமிக்கதாக உள்ளது.
பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த தாவரப் பகுதி :
- தண்டின் அடிப்பகுதியும், இலைகளும், முக்கிய வேதி கூறுகள் : சிட்ரோனெல்லால், ஜொனியால், சிட்ரோனெல்லால் ஆகியவை முதன்மை வேதி பொருட்களாகும்.
பயன்கள் :
- நறுமண எண்ணெய் சுவையூட்டும் பண்புகளைக் கொண்டுள்ளது. மேலும் மணமூட்டிகள், ஒப்பனைப் பொருட்கள், இனிப்புகள், பானங்கள், கொசு விரட்டிகள், கழிப்பறை கழுவிகள் போன்ற வற்றிலும் பயன்படுத்தப்படுகிறது.
மண் மற்றும் காலநிலை :
- எலுமிச்சம் புல், நல்ல சூரிய ஒளியும், மிகுந்த நீர் வளமும், நன்கு வடியும் தன்மையும் (well drained) கொண்ட மண்ணில் நன்கு வளரும்.
நடவு:
- இத்தாவரம் ஆண்டு முழுவதும் நன்கு வளரக் கூடியது. மண்ணின் வளமையும் நீர் கொள் திறனும் அதிகரிக்க நடவுத் துளைகளை உரம் கொண்டு நிரப்ப வேண்டும். தாவரங்களுக் கிடையே 60 செ.மீ. இடைவெளி விட்டு நட வேண்டும்.
நீர்பாசனம்:
- இத்தாவரங்களுக்குத் தேவையான நீரின் அளவு. அது வளரும் மண்ணின் வகையைச் சார்ந்து மாறுபடும். வண்டல் கலந்த மண்ணைவிட, மணற்பாங்கான, தளர்வான மண்ணிற்கு அடிக்கடி நீர் பாய்ச்ச வேண்டும்.
அறுவடை :
- தண்டு 30 செ.மீ. உயரமும், தண்டின் அடிப்பகுதி 1.5 செ.மீ சுற்றளவையும் அடையும் போது தரை மட்டத்திலிருந்து அறுவடை செய்ய வேண்டும்.