12th Botany PURE SCIENCE 1st Lesson Book Back Answers
12th Botany PURE SCIENCE 1st Lesson Book Back Answers. 12th Standard Pure Science Grout Unit 6, 1st Lesson book Back and Additional Question and Answers. TN 12th Bio-Botany Unit 6, 1st lesson Additional 5 Marks Tamil Medium. Additional 1 Marks, 2 Marks, 3 Marks, 5 Marks Question and answers for 12th Students and NEET Students for Tamil Medium. 12th Botany Samacheer Kalvi Guide.. 12th Botany Unit 9 Full Answers. TN 12th Standard Unit 10 Lesson 9 Book Back All Question with answers Tamil Medium. 12th Samacheer kalvi Guide Lesson 9 . பயிர் பெருக்கம் Answer key in Tamil Medium Students Guide 360. HSC 12th Botany Lesson 9 Book Back Answers.
12th Bio-Botany Unit 6 | Lesson 1. தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப் பெருக்கம் – Book Back Question – Answers
12. கருவுற்ற கருப்பையில் ஒருமடிய,இருமடிய, மும்மடிய அமைப்புகளின் சரியான வரிசை எது?
விடை : அ) சினர்ஜிட், கருமுட்டை, முதல்நிலைகருவூண் உட்கரு)
19. தொடர்விளிம்பற்ற கருவூண்திசு காணப்படுவது
விடை : ஆ) அரிக்கா
21. விதைத்துளை மூடி இதிலிருந்து தோன்றும்
விடை : இ) சூல்உறை
29. டயாஸ்கோரியா எவ்வாறு தழைவழி இனப்பெருக்கம் அடைகிறது ?
- டயாஸ்கோரியாவில் தழைவழி இனப்பெருக்கம் தண்டின் மூலம் நடைபெறுகிறது.
- சிறு குமிழ் மொட்டுக்கள் தண்டிலிருந்து தோன்றுகின்றன. இந்த சிறு குமிழ்மொட்டுக்கள் பெற்றோர் தாவரத்திலிருந்து பிரிந்து புதிய தனி தாவரங்களாக வளர்கின்றன.
32. அணுகு ஒட்டுதல் பற்றி சிறு குறிப்பு வரைக.
- அணுகு ஒட்டுதல் என்பது தழைவழி இனப்பெருக்க பாரம்பரிய முறைகளில் ஒன்று.
- இம்முறையில் வேர்க்கட்டை, இரண்டுமே வேருன்றியுள்ளன. ஒட்டுதண்டு
- வேர்க்கட்டை ஒரு தொட்டியில் வளர்க்கப் படுகிறது. இது ஒட்டு தண்டுடன் நெருக்கமாக கொண்டு வரப்படுகிறது.
- இரண்டும் ஒரே அளவு தடிப்புடையதாக இருத்தல் அவசியம். இரண்டிலும் ஒரு சிறிய சீவல் வெட்டப்பட்டு நீக்கப்படுகிறது.
- இரண்டின் வெட்டப்பட்ட பரப்புகளுக்கு ஒன்றை யொன்று நெருக்கமாக கொண்டு வரப்பட்டு கட்டப்பட்டு ஒரு டேப்பினால் சுற்றப்படுகின்றன.
- 1-4 வாரங்களுக்கு பிறகு வேர்க்கட்டையின் நுனியும் ஒட்டுத் தண்டின் அடியும் நீக்கப்பட்டு தனித்தனி தொட்டியில் வளர்க்கப்படுகின்றன.
35. பாரம்பரிய முறைகளின் நன்மைகளைப் பட்டியலிடுக.
- இம்முறையின் மூலம் ஒரே மாதிரியான அதிக தாவரங்களை குறுகிய காலத்தில் உருவாக்க முடியும்.
- விதை உருவாக்காத (அ) மிகக் குறைவாக விதை உருவாக்கும் (அ) வீரியமற்ற விதை உருவாக்கும். தாவரங்களை இம்முறையில் குறுகிய காலத்தில் அதிக தாவரங்களை உருவாக்க இயலும். தழைவழி இனப்பெருக்கம் மூலம் அதிக பொருட் செலவில்லாமல் ஒரு சில தாவரங்களை பெருக்க மடையச் செய்ய முடியும். எ.கா. சொலானம் டியூபரோசம்,
- நோய் எதிர்ப்பு. உயர் விளைச்சல் போன்ற விரும்பத்தக்க பண்புகளை கொண்ட இரண்டு வெவ்வேறு தாவரங்கள் ஒட்டு செய்யப்பட்டு புதிய தாவரங்களாக அதே விரும்பத்தக்க பண்புகளுடன் வளர்க்க முடியும்,
39. சுரப்பு மற்றும் ஊடுருவு வகை டபீட்டத்தை வேறுபடுத்துக.
சுரப்பு டபீட்டம்
- சுரப்பு டபீட்டம் (அ) புறப்பக்க டப்பீட்டம் (அ) செல்வகைடபீட்டம்
- இவ்வகை டப்பீட்டம் தோற்றநிலை செல்லமைப்பை தக்க வைத்துக் கொள்கிறது.
- ஒருங்கமைந்து நுண்வித்துகளுக்கு ஊட்டமளிக்கின்றன
ஊடுருவும் டபீட்டம்
- ஊடுருவும் டபீட்டம் (அல்லது) பெரிபிளாஸ் மோடிய வகை டபீட்டம்
- இவ்வகை டபீட்டத்தின் செல்கள் உட்புற கிடை மட்ட சுவர்களையும் இழக்கிறது.
- அனைத்து புரோட்டோ பிளாஸ்ட்களும் பெரிமிளாஸ் ஒருங்கிணைந்து மோடியத்தை உருவாக்குகின்றன.
43. ஆண் உட்கரு உருவாக பகுப்படையும் செல்லின்
- பெயரைக் குறிப்பிடுக. ஆண் உட்கரு உருவாக பகுப்படையும் செல்லின் பெயர் நுண்வித்தின் உருவாக்கச் செல் ஆகும்.
47. கருவுறாக் கனி தோன்றல், கருவுறா இனப்பெருக்கம் போன்றவை வெவ்வேறு நிகழ்வுகள் என்று நினைக்கிறீர்களா? உங்கள் விடையை நியாயப்படுத்தவும்.
- கருவுறா கனிதோன்றல், கருவுறா இனப்பெருக்கம் இரண்டும் வெவ்வேறு நிகழ்வுகள் ஆகும்.
- இவற்றிற்கிடையே சில ஒற்றுமைகளும், வேற்றுமைகளும் காணப்படுகின்றன. ஒற்றுமை கருவுறா கனிதோன்றல், கருவுறா இனப் பெருக்கம் இரண்டிலும் கேமீட்டுகளின் இணைவு நடைபெறுவதில்லை, எனவே உருவாகும் சேய்கள் மரபணு வேறுபாடு இன்றி பெற்றோர் பண்புகளை மட்டும் கொண்டிருக்கும்.
வேற்றுமை:
கருவுறா கனி தோன்றல்
- கருவுறுதல் நடைபெறாமல் கனி போன்ற அமைப்புகள் சூலகத்திலிருந்து தோன்றுகின்றது.
- கருவுறுதல் கனிகளில் நடைபெறாததால் விதைகள் காணப்படுவதில்லை
- பெரும்பாலான உயிரினங்களில் இது செயற்கையாக தூண்டப்பட்டு (ஹார்மோன், சூழ்நிலைக் காரணிகள் கனி பெறப்படுகிறது. எ.கா. குக்கர்பிட்டா
கருவுறா இனப்பெருக்கம்
- இங்கு ஆண், இங்கு பெண் கேமீட்களின் இணைவின்றி நடைபெறும்.
- இது கருவுறுதல் நடைபெறாமல் விதைகள் காணப்படுகிறது.
- இது இயற்கையாக நிகழும் ஒருவித இனப்பெருக்கம் ஆகும். எ.கா. மாஞ்சிஃபெரா, ஸ்பாரத்தீனியம்
50. ஹீலோபிய கருவூண் திசுவிற்கு எடுத்துக்காட்டுகள். தருக.
- ஹைட்ரில்லா
- வாலிஸ்நேரியா
55. சூல்களின் வகைகள் பற்றி சிறுகுறிப்பு தருக.
சூலின் வகைகள் :
- திசையமைவு வடிவம் சூல்காம்பு மற்றும் சலாசாவிற்கு தொடர்பாக சூலதுளையின் அமைவிடம் ஆகியவற்றின் அடிப்படையில் சூல்கள் ஆறு முக்கிய வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் மிக முக்கியமானவை நேரசூல், தலைகீழ்சூல். கிடைமட்ட சூல் மற்றும் கம்பை லோட்ராபஸ் வகைகளாகும்,
- நோசூல் (Orthotropous) : சூலில் சூலதுளை இணைப்புப் பகுதியிலிருந்து அமைந்திருக்கும். சூலகாம்பு சூலதுளை மற்றும் தொலைவில் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் சலாசா அமைந்திருக்கும், எ.கா. பைப்பரேசி, பாலிகோனேசி
- தலைகீழ்சூல் (Anatropous): இவ்வகைச் சூலில் சூல் முழுமையாக திரும்பியிருக்கும்.. எனவே தழைகீழாகத் சூழ்துளையும் சூல்காம்பும் அருகருகே அமைந்திருக்கும். ஒருவிதையிலை, இருவிதையிலை தாவரங்களில், இவ்வகை குல் காணப் படுகிறது.
- கிடைமட்ட சூல் (Hemianatropous): சூலின் உடல் குறுக்குவாட்டில் சூல்காம்பிற்குச் செங்குத்தாக அமைந்
- கம்பைலோட்ராபஸ் (Campylotropus):திருக்கும், சூல்துளைப் பகுதியில் சூலின் உடல் வளைந்து ஏறத்தாழ அவரை விதை வடிவில் காணப்படும். சூல்ஒட்டுதிசுவை நோக்கிய நிலையில் கருப்பையும் சற்று வளைந்திருக்கும். விதைத்தழும்பு சூழ்துளை, சலாச ஆகியவை ஒன்றுக்கொன்று அருகமைந்து குல்துளை, அமைந்திருக்கும். எடுத்துக்காட்டு: லெகுமினோசே மேற்கூறிய முக்கிய வகைகளைத் தவிர மேலும் இரு வகைகள் உள்ளன. அவை
- ஆம்பிட்ரோபஸ் (Amphitropous) : இவ்வகை சூல் ஏறத்தாழ தலைகீழ் சூலிற்கும் கிடைமட்ட சூலிற்கும் இடைப்பட்டதாகும். இங்கு சூல்திசுவும், கருப்பையும் குதிரை லாடம் போன்று வளைந்திருக்கும். சூல்துளை, சூலகாம்பு, சலாசா ஆகிய மூன்றும் அருகாமையில் அமைந்திருக்கும், எடுத்துக்காட்டு : ஒரு சில அலிஸ்மட்டேசி குடும்பத் தாவரங்கள்.
- சிர்சினோட்ரோபஸ் (Circinotropous): சூலினைச் சூழ்ந்து மிக நீளமான சூலகாம்பு காணப்படும். இது சூலை முழுவதுமாகச் சூழ்ந்துள்ளது. எ.கா: காக்டேசி
59. சால்வியாவின் மகரந்தச் சேர்க்கை இயங்கு முறை பற்றி விவரி.
- சால்வியாவில் தேனீக்கள் மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது.
- இதன் மலர் ஆண் முன்முதிர்வுத் தன்மை கொண்டது.
- ஈருதடு வடிவமுடைய அல்லி வட்டத்தையும், இரு மகரந்தத்தாள்களையும் கொண்டது.
- சால்வியாவில் மகரந்தச்சேர்க்கை நடைபெற நெம்புகோல் இயங்குமுறை உதவுகிறது.
- ஒவ்வொரு மகரந்தப்பையும் மேற் புறத்தில் வளமான மகரந்த மடலையும் கீழ்ப்புறத்தில் வளமற்ற மகர்த்த மடலையும் கொண்டுள்ளது.
- மகரந்த மடல்களுக்கு இடையே காணப்படும் நீண்ட இணைப்புத்திக மகரந்தப்பை இங்குமங்கும் நன்கு அசைந்தாட உதவுகிறது. மலரின் கீழ்ப்புற உதடு
- தேனீ அமர்வதற்குரிய தளமாகிறது.பூந்தேன் உறிஞ்ச தலையை தேனீயின் தேனீ பொழுது உள்ளே உடல் நுழைக்கும் இணைப்புத்திசுவில் படுகிறது.
- இதனால் மகரந்தப்பையின் வளமான பகுதி கீழிறங்கி (தாழ்ந்து) தேனீயின் முதுகில் மோதுகிறது.
- எனவே தேனீயின் உடலில் மகரந்தத் துகள்கள் படிகின்றன.
- தேனீ மற்றொரு மலரினுள் நுழையும் பொழுது மகரந்தத் துகள்கள் அம்மலரின் சூலகமுடியில் விழுவதன் மூலம் சால்வியாவில் மகரந்தச் சேர்க்கை நிறைவடைகிறது.
64. இருவித்திலை கருவளர்ச்சி பற்றி விவரி.
- இருவித்திலை தாவா கருவளர்ச்சியிலுள்ள நிலைகளை ஔகிராட் அல்லது குரூசிஃபெர் வகை கரு வளர்ச்சி மூலம் அறிந்து கொள்ளலாம். இருவித்திலை தாவரங்களில் தாவரத்தின் கருப்பையின் சூல்துளைப் பகுதியில் கரு வளர்ச்சி நடைபெறுகிறது.
- கருமுட்டை குறுக்குவாக்கு பகுப்புற்று மேல்செல் அல்லது நுனி செல் மற்றும் கீழ் அல்லது அடி செல்லைத் தருகிறது. அடி செல்லில் செங்குத்துப் பகுப்பும் நடைபெற்று நான்கு செல் முனிகள் (proembryo) உருவாகிறது.
- நுனி செல்லில் ஏற்படும் இரண்டாவது செங்குத்துப் பகுப்பு முதல் செங்குத்துப் பகுப்பிற்கு நேர்கோணத்தில் நடை பெறுகிறது. இதனால் நான்கு செல் நிலையான குவாட்ரண்டு (quaderant) உருவாகிறது.
- குவாட்ரண்ட் அல்லது நான்மய கருவில் ஒரு பகுப்பு நடந்து நான்கு செல் வீதம் இரண்டு அடுக்கில் அமைந்த எட்டு செல் கருநிலை (octant) உண்டாகிறது.
- எட்டு செல் கருநிலையின் மேலடுக்கிலுள்ள நான்கு செல்கள் மேலடிச் செல்கள் (epibasal) அல்லது முற்பக்க எட்டு செல் (anterior octant) நிலை என்றும், கீழுள்ள நான்கு செல்கள் கீழடிச் செல்கள் (hypobasal) அல்லது பிற்பக்க எட்டு செல் (posterior octants) நிலை என்றும் அறியப்படுகிறது.
- எட்டு செல் கரு நிலை பரிதிக்கிணையாக பகுப்படைந்து 16 செல் நிலையை எட்டுகிறது. இதில் புற அடுக்கில் எட்டு செல்களும், அக அடுக்கில் எட்டு செல்களும் அமைந்துள்ளன. புறஅடுக்கில் அமைந்த எட்டு செல்கள் டெர்மட்டோஜனைக் (dermatogen) குறிக்கின்றன.
- இது ஆதாரத்திற்கு இணையாக பகுப்படைந்த புறத்தோலைத் தருகிறது. அக அடுக்கில் உள்ள எட்டு செல்கள் செங்குத்து மற்றும் குறுக்குவாக்கு பகுப்படைந்து வெளி அடுக்கு பெரிபிளம்மையும் மையத்தில் அமைந்து பிளியுரோமையும் உருவாக்குகிறது.
- பெரிபிளம் புறணியையும் பிளியுரோம் எஸ்டீலையும் உண்டாக்குகின்றன. கரு வளர்ச்சியின் போது அடிசெல்லிலுள்ள இரண்டு செல்கள் பலமுறை குறுக்குவாக்கு பகுப்படைந்து ஆறு முதல் பத்து செல்களுடைய சஸ்பென்ஸர் (Suspensor) உருவாகிறது
- .இந்நிலையில் சஸ்பென்ஸர் கருகோள வடிவமடைகிறது.கருவை கருவூணதிசுவினுள் உந்துவதற்கு உதவுகிறது. சஸ்பென்ஸரின் மேலேயுள்ள செல் பெரிதாகி உறிஞ்சு உறுப்பாகிறது.சஸ்பென்ஸரின் கீழேயுள்ள செல் ஹைப்போபைஸிஸ் .(hypophysis) என்று அறியப்படுகிறது
- இச்செல்லில் ஒரு குறுக்குவாக்கு பகுப்பும், இரண்டு செங்குத்து பகுப்புகளும் (ஒன்றிற்கு ஒன்று நேர்கோணத்தில்) நடைபெற்று எட்டு செல்கள் கொண்ட ஹைப்போபைஸிஸ்உருவாகிறது. இந்த எட்டு செல்களும் நான்கு செல்கள் வீதம் இரண்டு அடுக்குகளில் அமைந்துள்ளது.
- மேல் அடுக்கு மேல் மூடி மற்றும் புறத் தோலைத் தருகிறது. இந்நிலையில் கரு இதய வடிவைப் பெறுகிறது. விதையிலை அடித்தண்டு (hypocotyl) பகுதியிலும் விதையிலையிலும் ஏற்படும் பகுப்புகள் கருவை நீட்சியடையச் செய்கின்றன.
- பிறகு நடைபெறும் வளர்ச்சி காரணமாக கருப்பையில் கரு வளைந்து குதிரை லாட் வடிவைப் பெறுகிறது. முதிர்ந்த கருவில் முளை
- வேர், விதையிலை அடித்தண்டு, இரண்டு விதையிலைகள் மற்றும் முளைக் குருத்து காணப் படும்.