12th Botany Lesson 4 Additional Question and Answers

12th Botany Lesson 4 Book Back Answers

12th Botany Lesson 4 Book Back Answers

12th Botany Lesson 4 Book Back Answers. TN 12th Standard Unit 8 Lessin 4 Book Back All Question with answers Tamil Medium. 12th Samacheer kalvi Guide Lesson 4. உயிரி தொழில்நுட்பவியல் நெறிமுறைகளும் செயல்முறைகளும் Full Answer key in Tamil Medium Students Guide 360. HSC 12th Botany Lesson 4 Book Back Answers.

12th Botany Lesson 4 Book Back Answers

12th Botany Lesson 4 Book Back Answers

பகுதி-I. புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. ரெஸ்ட்ரிக்ஷன் நொதிகள் என்பது

அ) மரபுப் பொறியியலில் எப்போதும் தேவைப்படுவதில்லை

ஆ) மரபுப் பொறியலில் முக்கியமான கருவியாகும்.

இ) நியூக்ளியேஸ் DNAவைக் குறிப்பிட்ட இடத்தில்துண்டித்தல்

ஈ) ஆ மற்றும் இ

விடை: ஈ) ஆ மற்றும் இ

2. பிளாஸ்மிட் என்பது

அ) வட்டவடிவ புரத மூலக்கூறுகள்

ஆ) பாக்டீரியாவினால் தேவைப்படுவது

இ) நுண்ணிய பாக்டீரியங்கள்

ஈ) உயிரி எதிர்ப்பொருளுக்கு தடுப்பை வழங்க

விடை : ஈ) உயிரி எதிர்ப்பொருளுக்கு தடுப்பை வழங்க

3. DNAவை ஈகோலை துண்டிக்குமிடம்

அ) AGGGTT

ஆ) GTATATC

இ) GAATTC

ஈ) TATAGC

விடை : இ) GAATTC

4. மரபணுப் பொறியியல்

அ) செயற்கை மரபணுக்களை உருவாக்குதல்

ஆ) ஒரு உயிரினத்தின் DNA மற்றவைகளுடன்கலப்பினம் செய்தல்

இ) நுண்ணுயிரிகளைப் பயன்படுத்தி ஆல்கஹால் உற்பத்தி

ஈ) ECG, EEG போன்ற கண்டறியும் கருவிகள், செயற்கை உறுப்புகள் உருவாக்குதல்

விடை : ஆ) ஒரு உயிரினத்தின் DNA மற்றவைகளுடன் கலப்பினம் செய்தல

5. பின்வரும் கூற்றைக் கருதுக.

I. மறுகூட்டிணைவு DNA தொழில்நுட்பம் என்பது பிரபலமாக அறியப்பட்ட மரபணு பொறியியல் ஆகும். இது மனிதனால் ஆய்வுக்கூட சோதனை முறையில் மரபணுப் பொருட்களை கையாளு தலை விவரிக்கிறது.

II. pBR322 என்பது 1977ல் ஈகோலை பிளாஸ்மிட்டி லிருந்து பொலிவர் மற்றும் ரோட்ரிக்கஸ ஆகியோரால் முதன் முதல் உருவாக்கப்பட்ட செயற்கையான நகலாக்க தாங்கிக் கடத்தியாகும்.

III. தடைகட்டு (ரெஸ்ட்ரிக்ஷன்) நொதிகள் என்பதுநியூக்ளியேஸ் எனப்படும் நொதிகள் வகுப்பைச்சார்ந்தது.

மேற்கூறிய கூற்றின் அடிப்படையில் சரியானகுறியீட்டைத் தேர்ந்தெடுக்கவும்.

அ) 1 மற்றும் II

இ) II மற்றும் III

ஆ) 1 மற்றும் III

ஈ) I, II மற்றும்I[I

விடை : இ) 1, II மற்றும் III

6. மறுகூட்டிணைவு தொழில்நுட்பம் பின்வரும் படி நிலைகளைக் கொண்டுள்ளது.

I. மரபணுக்களின் பெருக்கம்

II. ஓம்புயிர் செல்லில் மறுகூட்டிணைவு DNAவை செலுத்துதல்.

III. தடைகட்டு (ரெஸ்ட்ரிக்ஷன்) நொதியைப் பயன் படுத்தி குறிப்பிட்ட இடத்தில் DNA வைத்துண்டித்தல்.

IV. மரபணுப் பொருட்களைப் பிரித்தெடுத்தல் DNA) மறுகூட்டிணைவு தொழில்நுட்பத்தின் சரியான வரிசையைத் தேர்ந்தெடுக்கவும்.

ஆ) IV, II, III, 1 இ) 1, II, III, IV ஈ) IV, III, I, II

அ) II, III, IV, I

விடை : ஈ) IV, III, I, II

7. சில தடைகட்டு (ரெஸ்ட்ரிக்சன்) நொதிகளினால் DNAவின் பின்வரும் எந்த ஒரு முன்பின் ஒத்த (பாலியாண்டரோம்) தொடர் வரிசையின் மையத்தில் எளிதாக துண்டிக்கிறது?

அ) 5’CGTTCG3′ 3’ATCGTA5′

ஆ) 5’GATATG3′ 3’CTACTA5′

இ) 5’GAATTC3′ 3’CTTAAG5

ஈ) 5’CACGTA3′ 3’CTCAGT5

விடை : இ) 5’GAATTC3′ 3’CTTAAG5

8. pBR 322, BR என்பது

அ) பிளாஸ்மிட் பாக்டீரிய மறுகூட்டிணைவு

ஆ) பிளாஸ்மிட் பாக்டீரிய பெருக்கம்

இ) பிளாஸ்மிட் பொலிவர் மற்றும் ரோட்ரிக்கஸ்

ஈ) பிளாஸ்மிட் பால்டிமோர் மற்றும் ரோட்ரிக்கஸ்

விடை: இ) பிளாஸ்மிட் பொலிவர் மற்றும் ரோட்ரிக்கஸ்

9. பின்வருவனவற்றுள் எது உயிரி உணர்வியல் பயன்படுத்தப்படுகிறது?

அ) மின்னாற்பிரிப்பு

ஆ) உயிரி உலைக்கலன்

இ) தாங்கிக்கடத்தி

ஈ) மின்துளையாக்கம்

விடை : சரியான விடை : நொதிகள்

10. பின்வருவனவற்றைப் பொருத்துக.

பகுதி - அ

பகுதி - ஆ

எச்சோநியூக்ளியேஸ்

பாஸ்ஃபேட்டை சேர்த்தல் அல்லது நீக்குதல்

எண்டோநியூக்ளியேஸ்

DNA துண்டுகளை இணைத்தல்

அல்கலை பாஸ்ஃபட்டேஸ்

நுனிப்பகுதியில் DNA வை துண்டித்தல்

லைகேஸ்

DNA வை நடுவில் துண்டித்தல்

அ) a b c d

ஆ) c d b a

இ) a c b d

ஈ) c d a b

விடை : ஈ) 1-c, 2-d, 3-a, 4-b

11.எத்திடியம் புரோமைடு எந்த தொழில்நுட்ப முறையில் பயன்படுத்தப்படுகிறது?

அ) சதர்ன் ஒற்றியெடுப்பு தொழில்நுட்ப முறை

ஆ) வெஸ்டர்ன் ஒற்றியெடுப்பு தொழில்நுட்ப

இ) பாலிமரேஸ் சங்கிலித் தொடர்வினை

ஈ) அகரோஸ் இழும மின்னாற் பிரிப்பு முறை

விடை : ஈ) அகரோஸ் இழும மின்னாற் பிரிப்பு

12.கூற்று: மரபணு பொறியியலில் அக்ரோ பாக்டீரியம் பிரபலமானது ஏனெனில் இந்த பாக்டீரியம் அனைத்து தானியங்கள் மற்றும் பயிறு வகைத் தாவரங்களின் வேர் முடிச்சுகளில் ஒருங்கிணைந்து உள்ளது.

காரணம்: பாக்டீரிய குரோமோசோமின் மரபணுத்தொகையத்தில் இணைக்கப்பட்ட ஒரு மரபணு அந்த பாக்டிரியம் இணைந்துள்ள தாவரத்திற்கு தானாக மாற்றப்படுகிறது.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால் காரணம் கூற்றிற்கு சரியான விளக்கம்.

ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால் காரணம் கூற்றிற்கு சரியான விளக்கம் அல்ல

இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறானது ஈ) கூற்று தவறானது ஆனால் காரணம்சரியானது

உ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு

விடை : உ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு

13. பின்வரும் கூற்றுகளில் எது சரியான கூற்று அல்ல.

அ) Ti பிளாஸ்மிட் வாழையில் உச்சிக் கொத்துநோயை உருவாக்குகிறது.

ஆ) பல நகலாக்க களங்கள் பல இணைப்பான் எனப்படும்.

இ) செல்லில் உட்கரு அமிலத்தின் ஊடுதொற்றுதல் வைரஸ் அற்ற முறையாகும்.

ஈ) பாலிலாக்டிக் என்பது ஒரு வகை உயிரி சிதைவடையும் மற்றும் உயிரி செயல் மிகு வெப்ப பிளாஸ்டிக்

விடை : ஈ) பாலிலாக்டிக் என்பது ஒரு வகை உயிரி சிதைவடையும் மற்றும் உயிரி செயல் மிகு வெப்பபிளாஸ்டிக்

14. சதர்ன் கலப்பினமாக்கல் தொழில்நுட்பமுறையின் குரோமோசோம் DNA பகுப்பாய்வு எதில் பயன்படுவதில்லை.

அ) மின்னாற்பிரிப்பு

ஆ) ஒற்றியெடுப்பு முறை

இ) கதிரியக்க புகைப்படமுறை

ஈ) பாலிமரேஸ் சங்கிலித் தொடர் முறை

விடை : ஈ) பாலிமரேஸ் சங்கிலித் தொடர் முறை

15.ஒரு தாங்கிக்கடத்தியில் உயிரி எதிர்ப்பொருள் மரபணு எதனை தேர்ந்தெடுக்க உதவுகிறது?

அ) போட்டி செல்கள்

ஆ) மாற்றப்பட்ட செல்கள்

இ) மறுகூட்டிணைவுச் செல்கள்

ஈ) மேற்கூறிய எதுவுமில்லை

விடை: ஆ) மாற்றப்பட்ட செல்கள்

16. Bt பருத்தியின் சில பண்புகள்.

அ) நீண்ட நார்களும், அசுவுனி பூச்சிகளுக்கு (aphids) எதிர்ப்புத்திறன்

ஆ) நடுத்தரமான அறுவடை, நீண்ட நார்கள் மற்றும் வண்டுகளுக்கான எதிர்ப்புத்தன்மை

இ) அதிக விளைச்சல் மற்றும் டிப்தீரியன் பூச்சிகளைக் கொல்லக் கூடிய படிக நச்சுப் புரத உற்பத்தி

ஈ) அதிக உற்பத்தி மற்றும் காய் புழுவிற்கான எதிர்ப்புத்திறன்

விடை : ஈ) அதிக உற்பத்தி மற்றும் காய் புழுவிற்கான எதிர்ப்புத்திறன்

12th Botany Lesson 4 Book Back Answers

17. தற்காலப் பயிற்சிகளில் உயிரி தொழில் நுட்பவியலை எவ்வாறு பயன்படுத்துவாய்?

  • தற்கால (அ) நவீன உயிர்தொழில் நுட்பவியல் மரபணு மாற்றம் மட்டுமின்றி, செல்லிணைவுத் தொழில்நுட்பத்தையும் உள்ளடக்கியது. மருந்து நிறுவனங்கள், மதுபானத் தொழிலகங்கள், வேளாண் தொழிற்சாலைகள் மற்றும் பிற சார்ந்த தொழில்கள், அவற்றின் முன்னேற்றத்திற்காக உயிரி தொழில்நுட்பக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.

தொழில் நுட்பம்

பயன்கள்

அ) நொதித்தல்

அமிலங்கள், நொதிகள், ஆல்கஹால்கள் உயிரி எதிர்ப் பொருட்கள், நுண்வேதியப் பொருட்கள், வைட்டமின்கள் மற்றும் நச்சுப் பொருட்களின் உற்பத்தி

ஆ) பெருமளவு உயிர்த்திரள் உற்பத்தி

ஒற்றை செல் புரதம், ஆல்கஹால் மற்றும் உயிரி எதிர்ப்பொருள்

இ) நொதிகள்

பதப்படுத்தும், தொழிற்சாலைகளில் உயிரி உணர்விகளாக செயல்படுதல்.

ஈ) உயிரி எரிபொருள் உற்பத்தி

ஹைட்ரஜன் எரிபொருள், ஆல்கஹால், மீத்தேன் போன்றவை 

உ) நுண்ணுயிரி உப்புக்கட்டல்கள்

உயிரி உரங்கள் மற்றும் நைட்ரஜன் நிலைநிறுத்திகள்

ஊ) தாவர மற்றும் விலங்கு செல் வளர்ப்பு

இரண்டாம் நிலை வளர்ச்சிப் பொருட்கள் மற்றும் மோனோகுனோலஸ் ஆண்டி பாடி உற்பத்தி

மறுகூட்டிணைவு DNA தொழில் நுட்பம் மூலம் பெறுவது

நொதிகள், தடுப்பூசிகள், வளர்ச்சி ஹார்மோன்கள், உயிரி எதிர்பொருட்கள் மற்றும் இண்டர்பெரான்களின் உற்பத்தி 

செயல்முறை பொறியியல்

நீர் மறுசுழற்சி மற்றும் கழிவுப் பொருட்களின் சுத்திகரிப்பில் பயன்படும் உயிரி தொழில் நுட்ப கருவியின் பயன்பாடு.

18. ஸ்பைருலினா போன்ற நுண்ணுயிர்களை வளர்ப்பதற்கு என்ன பொருட்களைப் பயன்படுத்துவாய்?

  • உருளைக்கிழங்கு பதப்படுத்தப்படும் தொழிற்சாலையிலிருந்து கிடைக்கும் தரசம் கொண்ட கழிவுநீர்
  • வைக்கோல் வெல்லசக்கைப்பாகு விலங்கு உரம் கழுவு நீர்
  • ஸ்பைருலினா எளிதில் வளர்த்து அதிகளவில் புரதங்கள், தாது உப்புகள் கொழுப்புகள், கார்போஹைட்ரேட் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவை உண்டாக்கலாம்.
  • மேலும் இத்தகைய பொருட்களின் பயன்பாடு சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கிறது.
  • 250 கி மெத்தைலோபில்லஸ், மெத்தைலோட்ரோபஸ், அதனுடைய மிக அதிக அளவு உயிர்த்திரன் பயன்பாட்டின் மூலம் 25 டன் புரத உற்பத்தியை உருவாக்குகிறது. மேலும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கிறது.

19. உயிரிதொழில்நுட்பவியல் ஆய்வகத்தில் ஈகோலை பாக்டீரியத்தைப் பயன்படுத்தி ஆய்வு செய்கிறாய். நியூக்ளியோடைடு தொடர்வரிசையை நீ எவ்வாறு துண்டிப்பாய்?

  • ஒரு மரபணு நகலாக்க சோதனையின் வடிவமைப்பில் ஒரு தடைக்கட்டு நொதியினால் உண்டாக்கப்படும் சரியான வகை பிளவு முக்கியமானதாகும். குறிப்பாக இரண்டு வகை காணப்படுகிறது.

சமச்சீர் துண்டிப்புகள்

  • சிலதடைகட்டு நொதிகள் இரண்டு DNA இழைகளின் மையப் பகுதியின் ஊடே பிளவு ஏற்படுத்துவதன் விளைவாக மழுங்கிய (அ) பறிக்கப்பட்டமுனை உண்டாகிறது.

சமச்சீரற்ற துண்டிப்புகள்

  • சில நொதிகள் DNA வை வெட்டும் போது நீட்டிக் கொண்டு காணப்படும் முனைகள் உண்டாகின்றன. இவை ஒட்டும் (அ) ஒட்டிணைவான முனைகள் என அழைக்கப்படுகின்றன.

20.நியூக்ளியோடைடு தொடர்வரிசையின் முனை மற்றும் உள்ளாக அமைந்த பாஸ்போடை எஸ்டர் பிணைப்பை துண்டிக்க என்ன நொதிகளைப் பயன் படுத்துவாய்?

  • ரெஸ்ட்ரிக்ஷன் எண்டோநியூக்ளியஸ் 3 முக்கிய வகுப்புகளை கொண்டது.
  • வகை-I, வகை-II, வகை-III, இவை செயல்படும் விதத்தில் ஒன்றிலிருந்து மற்றொன்று வேறு படுகின்றன.
  • வகை- II நொதி மட்டும் மறுகூட்டிணைவு DNA தொழில்நுட்பத்தில் அதிகம் பயன்படுத்தப் படுகிறது.
  • DNA ஐ துண்டிக்கும் நொதி ரெஸ்ட்ரிக்ஷன்
  • எண்டோ நியூக்ளியேஸ். இவை DNA மூலக் கூறுக்குள், குறிப்பிட்ட அடையாளம் காணக் கூடிய பகுதிக்கு அருகில் (அ) இடத்தில் DNAஐத் துண்டிக்கின்றன. இதற்கு தடைகட்டும்களம்

அ) எக்சோநியூக்ளியேஸ் நொதி :

  • இவை DNA மூலக்கூறின் ஒரு முனையில் இருந்து நியுக்ளியோடைடுகளை நீக்குகிறது. (எ.கா) Bal 31, எக்சோ நியுக்ளியேஸ் III

ஆ) எண்டோநியூக்ளியேஸ் நொதி :

  • இவை DNA மூலக்கூறின் உட்புறம் உள்ள பாஸ்ஃபோ – டை – எஸ்டர் பிணைப்பை நீக்கு கிறது.(எ.கா) Hind II, Ecori, Pvul, Bam H1, Taq I போன்றவை.

21. மரபணு மாற்றத்திற்கு பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்களின் பெயர்களைக் கூறுக.

  • நேரடி (அ) தாங்கிக் கடத்தி அற்ற மரபணு மாற்ற முறையில் விரும்பத்தகுந்த அயல் மரபணுவை தாங்கிக் கடத்தி உதவி இல்லாமல் ஓம்புயிரி தாவரத்திற்குள்ளாக செலுத்தப்படுகிறது.

வேதியியல் வழி மரபணு மாற்றம்

  • பாலி எத்திலீன் கிளைக்கால் மற்றும் டெக்ஸ்ட்ரான் சல்ஃபேட் போன்ற சில வேதிப் பொருட்கள் தாவரங்களில் புரோட்டோபிளாஸ்ட் களுக்குள் DNAவை எடுத்துக் கொள்ளத் தூண்டுகின்றன.

22. pBR 322 எனும் வார்த்தையிலிருந்து நீர் அறிந்துக் கொள்வது என்ன ?

  • pBR 322 என்பது மறுகட்டமைக்கப்பட்டபிளாஸ்மிட் ஆகும்.
  • இது நகலாக்க தாங்கிக் கடத்தியாக அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.
  • இதில் 4361 bp கொண்டுள்ளது.
  • p= பிளாஸ்மிட்

 

ampR – ஆம்பிசிலின் தடுப்பு மரபணு

tetR – டெட்ராசைக்ளின் தடுப்பு மரபணு

  • BR = பிளாஸ்மிட் உருவாக்கி, அறிஞர்களான பொலிவர் மற்றும் ரோட்டிரிக்ஸ் ஆகிய இரு வரையும் குறிக்கின்றன.
  • 322 = அவர்களுடைய ஆய்வகத்தில் உருவாக்கப் பட்ட பிளாஸ்மிட்டின் எண்ணிக்கையாகும். இதில் காணப்படுவன
  • இரு வேறுபட்ட உயிரி எதிர்பொருள் தடுப்பு மரபணுக்கள் (ampR, tetR)
  • பல தடைக்கட்டு நொதிகளுக்கான அடையாளக் களங்கள் (Hind III, EcoR1, Bam H -1, Sali, Pvull, Pst 1, Cla 1)
  • Ori – மரபணு
  • Rop – பிளாஸ்மிட் பெருக்கமடைவதில் ஈடுபடும் புரதங்களையும் Rop குறியீடு செய்கிறது.

23. உயிரி தொழில்நுட்பவியலின் பயன்பாட்டைக் குறிப்பிடுக.

  • 21 ஆம் நூற்றாண்டின் மிகவும் முக்கியமான பயன் பாட்டு அறிவியல்களில் முக்கியமானது.
  • வாழ்வை பயனுள்ள முறையில் செலவிட நமக்குள்ள ஒரு நம்பத்தகுந்த துறையாகும்.
  • பரந்து பட்ட பயன்பாடு வேளாண்மை, மருத்துவம்.
  • சூழல், வணிக தொழில்கள் போன்றவை மரபணு மாற்றத் தாவரவகைள் போன்ற அதிகமதிப்புள்ள விளைவுகள் Bt பருத்தி, அரிசி, தக்காளி, புகையிலை, காலிஃபிளவர், உருளை, வாழை போன்றவை மரபணு மாற்ற வேளாண் தாவர வகைகள் நோயெதிர்ப்பு திறன்.
  • களைக்கொல்லி எதிர்ப்புத்தன்மை, இறுக்க எதிர்ப்பு தன்மை உயிர்தொழில் நுட்ப தொழிற்சாலையின் மிகப் பெரிய சாதனை (மருத்துவம்)
  • இன்சுலின், இரத்தப்புரத உற்பத்தி, தடுப்பூசி மருந்து, நொதிகள், உயிரி எதிர்ப்புப் பொருட்கள்.
  • பால் சார்ந்த தயாரிப்புகள், பானங்கள் போன்றவை உயிரி சில்லுகள் அடிப்படையாகக் கொண்ட உயிரிய கணிணி உருவாக்குதல்.
  • மரபணுப் பொறியியல் மரபணு கையாளுதல், திட்ட வளர்ப்பு (முழு ஆக்குத்திறன்) SCP – ஸ்பைருலீனா – (உணவு தொழிற்சாலை)
  • இரண்டாம் நிலை வளர்சிதைப் பொருட்கள் உயிரி உரங்கள், உயிரிபூச்சிக் கொல்லிகள் மற்றும் நொதிகள் போன்றன.
  • சூழல் சார் உயிர் தொழில் நுட்பம் உயிரித்திரள் ஆற்றல், உயிரி எரிபொருள், உயிரி சீரமைப்பாக்கம், தாவர சீரமைப்பாதல்.

24. தடைகட்டு (ரெஸ்ட்ரிக்ஷன்) நொதி என்றால் என்ன? அவற்றின் வகைகளைக் கூறி, உயிரி தொழில் நுட்பவியலின் அதன் பங்கைக் குறிப்பிடுக?

  • இது மூலக்கூறு கத்திரிக்கோல் எனப்படுகிறது.
  • 1963 ஆம் ஆண்டு எ.கோலை பாக்டீரியாவில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டது.
  • இது DNA மூலக்கூறுக்குள் குறிப்பிட்ட அடையாளம் காணக்கூடிய பகுதிக்கு அருகில் (அ) இடத்தில் DNAஐ துண்டிக்கின்றன.
  • இது தடைகட்டுக்களம் எனப்படும்.
  • செயல்படும் விதம் அடிப்படையில் பிரிப்பது

அ. எக்சோ நியூக்ளியேஸ்

  • DNA மூலக்கூறின் ஒரு முனையில் இருந்து நியுக்ளியோடைடுகளை நீக்குகிறது. (எ.கா) Bal 31, எக்சோ நியுக்ளியேஸ் III

ஆ. எண்டோ நியுக்ளியேஸ்

  • இது நொதி மூலக்கூறின் உட்புறம் உள்ள ஃபாஸ்ஃபோடை – எஸ்டர் பிணைப்பை நீக்குகிறது.
  • (எ.கா) Hind II, EcoR 1, Pvul, Bam H1, Tag எண்டோ நியூக்ளியேஸ் 3 வகுப்புகளைக் கொண்டது.
  • வகை,1,II மற்றும் I இவை செயல்படும் விதத்தில் சிறிய வேறுபாடுகளைக் கொண்டது.

வகை – I

  • இது மறு கூட்டிணைவு தொழில் நுட்பத்தில் அதிகம் பயன்படுகிறது. இது 4 – 8 bp கொண்டு உள்ள ஒரு தொடர் வரிசைக்குள்ளே DNA வை அடையாளம் கண்டறிந்து அவ்விடத்தில் DNA மூலக்கூறுகளைத் துண்டிக்கிறது.

Hind. II

  • குறிப்பிட்ட வரிசையிலுள்ள 6 காரஇணைகளை அடையாளம் கண்டறிந்து அங்கு DNA மூலக் கூறகளைத் துண்டிக்கிறது (Recognition sequences) . இது வரை வேறபட்ட அடையாள தொடர்வரிசை உடைய ஏறத்தாழ 900 தடை கட்டு நொதிகள் பாக்டீரியங்களிலிருந்து பிரித்து எடுக்கப்பட்டுள்ளன.

12th Botany Lesson 4 Book Back Answers

25. தாங்கிக்கடத்திகள் இல்லாமல் ஒம்புயிரித் தாவரத் திற்கு பொருத்தமான விரும்பத்தகுந்த மரபணுவை மாற்ற முடியுமா? உன் விடை எதுவாகினும் அதை நியாயப்படுத்துக.

  • ஆம். தாங்கிக்கடத்தி அற்ற மரபணு மாற்ற முறை காணப்படுகிறது. இதில் அயல் மரபணு தாங்கிக் கடத்தி உதவியின்றி தாவரத்திற்குள்ளாத செலுத்தப் படுகிறது.

அ. வேதியியல் வழி மரபணு மாற்றம்

  • பாலி எத்திலீன் கிளைக்கால் மற்றும் டெக்ஸ்ட் ரான் சலஃபேட் போன்ற வேதிப் பொருட்கள் புரோட்டோபிளாஸ்ட்களுக்குள் DNAவை எடுத்துக் கொள்ளத் தூண்டி புரோட்டோபிளாச இணைவை ஊக்குவிக்கின்றன.

ஆ. நுண்பொருள் உட்செலுத்துதல்.

  • தாவர செல்களை மரபணு மாற்றம் செய்ய DNAவை, நேரடியாக ஒரு மிக நுண்ணிய முனை உடைய கண்ணாடி ஊசி (அ) நுண்-பிப்பெட்டி களை பயன்படுத்தி உட்கருவினுள் உட் செலுத்தப்படுகிறது. புரோட்டோபிளாஸ்ட்கள் ஒரு திட தாங்கிய அகரோஸில் (கண்ணாடித் தகட்டில் வைக்கப்பட்டுள்ளது) நிலை நிறுத்தப் படுகின்றன.

இ. மின்துளையாக்க முறையில் மரபணு மாற்றம்

  • திசுக்கள், செல்கள் (அ) புரோட்டோபிளாஸ்ட்கள் உயர் மின் அழுத்த விசை கொடுக்கப்படுகிறது. இதனால் பிளாஸ்மா சவ்வில் உண்டாகும் தற்காலிகத் துளைகள் மூலம் அயல் DNA உள்ளெழுக்கப்படுகிறது.

லிப்போசோம் வழி மரபணு மாற்ற முறை (லிப்போ பெச்சன்)

  • லிப்போசோம்கள் என்ற நுண்பைகள் வழியாக மரபணு (அ) DNA தாவரசெல்களின் நுண் பைகளுக்கு மாற்றப்படுகின்றது. இது காற்று உறை சூழப்பட்ட DNAவினால் நுண்குமிழ் பைக்குள் (vacuole) தாங்கிச் செல்லப்படுகிறது. இது நுண்குமிழ் பையிலுள்ள அமில pH. புரோட்டீயேஸ் நொதி ஆகியவற்றால் ஏற்படும் சிதைவிலிருந்து பாதுகாக்கிறது. இதனால் லிப்போசோம் காற்றுக்குமிழியின் டோனோ பிளாஸ்ட் இணைகிறது. இந்த முறை லிப்போஃ பெக்சன் (lipofection) எனப்படுகிறது.

பையோலிஸ்டிக் முறை

  • நுண்ணிய தங்க (அ) டங்ஸ்டன் (1-3um) துகள்களால் பூச்சு செய்யப்பட்ட அயல் DNA இலக்கு திசு (அ) செல்களில் துகள் துப்பாக்கி, நுண் எறிதல் துப்பாக்கி வெடிப்புத்துப்பாக்கி பயன்படுத்தி அதிக விசையுடன் செலுத்தப் படுகிறது. பின்னர் செயற்கை ஊடகத்தில் வளர்க்கப்படுகிறது. இதன் மூலம் மரபணு மாற்ற மடைந்த செல்களிலிருந்து தாவரங்களை மீளுருவாக்கம் செய்ய இயலும்.

28. ஒரு தாங்கிக்கடத்தியை எவ்வாறு அடையாளம் காண்பாய்? (அல்லது) வெக்டார்களின் சிறப்புப் பண்புகள் யாவை?

பண்புகள்

செயல் / பணி

தன்னிச்சையாகப் பெருக்கமடையும் திறன்

ஒம்புயிரி செல்லுக்குள் அவற்றுடைய DNA செருகலுடன் தன்னிச்சையாக பெருக்கமடைந்து பல மடங்கு நகல்களை உற்பத்தி செய்கிறது.

சிறிய அளவு - குறைந்த மூலக்கூறு எடை கொண்டிருக்க வேண்டும் (10kbக்கும் குறைவு)

இதனால் ஓம்புயிரி செல்லுக்குள் நுழைதல், மாறுதல் எளிதாகிறது.

பெருக்கமடைதல் தோற்றுவி காணப்படவேண்டும் (Ori)

காணப்பட்டால் மட்டுமே ஒம்புயிரி செல்லுக்குள் தன்னிச்சையாகப் பெருக்கமடைய இயலும்.

அடையாளக் குறி (உயிரி எதிர்பொருள் தடுப்பு) கொண்டிருக்க வேண்டும்.

இதனால் மரபணு மாற்றமடைந்த ஓம்புயிரி செல் லுக்குள் அதனை அடையாளம் கண்டறிய முடியும்.

DNA செருகலோடு ஒருங்கிணைவதற்கு தனிப் பட்ட இலக்குக் களங்களைப் பெற்றிருக்கவேண்டும் மற்றும் தாங்கியிருக்கும். DNA செருகலுடன் சேர்ந்து ஓம்புயிரி செல்லின் மரபணு தொகையத்துடன் ஒருங்கிணையும் திறனைப் பெற்றிருக்க வேண்டும். ஒன்று (அ) ஒன்றுக்கு மேற்பட்ட நகலாக்க களங்கள் (MCS) கொண்டிருப்பது சிறப்பானது.

இதனால் ஓம்புயிரியின் மரபணு தொகுப்புக்குள் எடுத்துச் செல்லப்பட இயலும். MCS இருப்பதால் தேவைப்படும் தடைக்கட்டு நொதிகளின் பயன்பாட்டிற்கு வழிவகை செய்கிறது.

27. பல்வேறு வகை ஒற்றியெடுப்பு தொழில்நுட்பத்தை ஒப்பிடுக.
ஒற்றியெடுப்பு தொழில்நுட்ப முறைகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகள்

27. பல்வேறு வகை ஒற்றியெடுப்பு தொழில்நுட்பத்தை ஒப்பிடுக. 12th Botany Lesson 4 Book Back Answers

28. களைக்கொல்லியைத் தாங்கக்கூடிய பயிர்களின் நன்மைகள் யாவை ?

பண்பு

விளைவு

களைகள் குறைக்கப்படுகிறது.

விளைச்சல் அதிகரிக்கிறது.

களைக்கொல்லி தெளிப்பு (அ) பயன்பாடு குறைகிறது.

செலவு குறைகிறது.

சூழலுக்குகந்தது.

தாவரங்கள் களைகளின் போட்டி இன்றி வளர்கிறது.

ஆரோக்கியமான வளர்ச்சியுடைய தாவரங்கள்

நச்சுப்பொருட்களின் பயன்பாடு குறைகிறது.

பாதிப்பு மண்ணில் குறைவாகவோ, செயல்திறன் குறைவாகவோ உள்ளது. மண்ணின் தன்மை யையும் நுண்ணுயிரிகளையும் இதன் மூலம் பாதுகாக்கலாம்.

29. Bt பருத்தியின் நன்மை, தீமைகளை எழுதுக.

நன்மைகள் :

  • விளைச்சல் அதிகரிக்கிறது, ஏனெனில் காயப் புழுக்களின் தாக்குதல் கட்டுப்படுத்தப்படுகிறது.
  • பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு குறைகிறது. பயிர் வளர்ப்பில் உண்டாகும் செலவு குறைகிறது.

தீமைகள்:

  • இதன் விதையின் விலை அதிகம்.
  • முதல் 120 நாட்கள் மட்டுமே வீரியமுள்ளதாக இருக்கிறது. பின்னர் இதன் வீரியம் வர வர குறைகிறது.
  • சாறு உறிஞ்சும் தத்துப்பூச்சிகள், அசுவினிப் பூச்சிகள், வெள்ளை ஈக்கள் போன்றவற்றிற்கு எதிராகச் செயல்படுவதில்லை.
  • மகரந்தச் சேர்க்கையில் துணைபுரியும் பூச்சிகளை பாதிக்கிறது. அதனால் விளைச்சல் குறைகிறது.

30.உயிரி உயிரிவழித் திருத்தம் என்றால் என்ன? உயிரிவழித் திருத்தத்திற்கு எடுத்துக்காட்டு தருக.

வரையறை :

  • நுண்ணுயிரிகள் (அ) தாவரங்களைக் கொண்டு சூழல் மாசுறுதலைச் சுத்திகரிக்கும் அணுகுமுறைக்கு உயிரிவழித் திருத்தம் என்று பெயர்.

அணுகுமுறை :

  • கழிவுநீர் சுத்திகரிப்பு
  • தொழிற்சாலை கழிவு
  • திடக்கழிவுகள் போன்றவை

சுத்திகரிப்பது :

  • மண் மற்றும் நிலத்தடி நீர், கடலில் எண்ணெய் கசிவு ஆகியவற்றில் இருக்கும் எண்ணெய் கசிவு பெட்ரோலிய வேதிய எச்சங்கள் வன் உலோகங்கள்
  • பூச்சிக்கொல்லிகள் போன்றவை

சாதகமானப் பண்புகள்:

  • மலிவானது – அதிக நன்மையுடையது
  • சூழல் மாசுறாத ஒரு அணுகுமுறை (eco friendly)
  • தொடர் பயன்தருவது (sustaibable)
  • குறைந்த செறிவில் காணப்படும் மாசுறுத்திகளைஅதிக திறனுடன் இது நீக்கிவிடும்.
  • (எ.கா) சூடோமோனாஸ் பியுடிடா எனும் மரபணுமாற்றம் செய்யப்பட்ட பாக்டீரியாவை கொண்டு கடலிலுள்ள (அ) நீரிலுள்ள கச்சா எண்ணெய் கசிவுகளை நீக்குதல், உயிரி உயிரிவழித் திருத்த தொழில்நுட்பத்திற்கானசில எடுத்துக்காட்டுகள்:
  • தாவர வழித்திருத்தம் (Phytoremedation) சூழல் மாசுறுத்திகளை தாவரங்களைப் பயன்படுத்தி திருத்தம் செய்தல்
  • பூஞ்சைவழித்திருத்தம் (Mycoremediation)
  • பூஞ்சைகளைக் கொண்டு சூழல் மாசுறுத்தி களை திருத்தம் செய்தல்.
  • உயிரிவழி காற்றோட்டமளித்தல் (Bioventing) – இது ஆக்சிஜன் அல்லது காற்றோட்டத்தை அதிகரிக்கும் ஒரு செயலாகும். இதன் மூலம் சூழல் மாசுறுத்திகளின் சிதைவைத் துரிதப் படுத்தலாம்.
  • உயிரி வழி கரைத்துப் பிரித்தல் (Bioleaching) மாசுறுத்தப்பட்ட இடங்களிலிருந்து கரைகல் உலோக மாசுறுத்திகளை (metal pollutant) கரைசல் நிலையில் நுண்ணியிரிகளைப் பயன்படுத்தி மீட்டல்.
  • உயிரி வழி பெருக்குதல் (Bioaugmentation)
  • ஒரு சில தேர்ந்தெடுக்கப்ட்ட நுண்ணுயிர்களைசேர்ப்பதன் மூலம் சிதைவடையும் வேகத்தினை அதிகரிக்கச் செய்யும் செயல்முறை. உரமாக்குதல் (Composting) நுண்ணுயிரிகளைக் கொண்டு திட கழிவுகளை உரமாக மாற்றும் செயல்முறை. இது தாவர வளர்ச்சிக்கு ஊட்டப் பொருளாக பயன்படும். வேர்ப்பூல வடிகட்டல் (Rhizofiltration) நுண்ணுயிர்களைக் கொண்டு வேர்ப்புல (rhizosphere) உலோகங்களை உள்ளெடுத்தல் அல்லது கரிம சேர்மங்களை சிதைத்தல்
  • வேர்ப்புல நுண்ணுயிரித் தூண்டல (Rhizosti mualtion) தாவர வளர்ச்சியை வேர்ப்புல நுண்ணுயிரிகள் மூலம் தூண்டல்; இது சிறந்த வளர்ச்சி சூழ்நிலைகளை கொடுப்பதன் மூலமாக வோ நச்சுப் பொருட்களை குறைப்பதனாலோ தூண்டப்படுகிறது.

31. மரபணு மாற்றப்பட்ட உணவின் நன்மைகள் மற்றும் அபாயங்கள் யாவை?

நன்மைகள்

ஆபத்து (அ) அபாயம்

அதிக மகசூல் கிடைக்கும். ஏனெனில் தீங்குயிர் பாதிப்பற்ற விளைச்சல்.

கல்லீரலை பாதிக்கிறது, சிறுநீரக செயல்பாட்டை பாதிக்கிறது.

வேதிபூச்சிக் கொல்லியின் பயன்பாடு 70% குறைகிறது.

புற்றுநோயை உண்டாக்குகிறது.

மண் மாசாதல் குறைகிறது.

ஹார்மோன் சமனின்மை மற்றும் உடல்நிலை சீர்குலைவு

மண் நுண்ணுயிரித் தொகை பேணப்படுகிறது

பாக்டீரிய புரதத்தின் காரணமாக நோய் எதிர்ப்புத் தன்மை மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது

நிலத்தடி நீர் மாசாதல் குறைவு.

பிறழ்ச்சியடைந்த அதிர்ச்சி (திடீர் மிகையுணர்வு வினை) (Anaphylactic Shock) மற்றும் ஒவ்வாமை.


காற்று மாசாதல் குறைவு (வேதி பூச்சிக் கொல்லிகள் தெளிப்பு குறைகிறது)

விதைகளின் உயிர்ப்பு தன்மை இழப்பு (முடிவுறுத்தி) விதை தொழில் நுட்பத்தில் காணப்படுவது)

Leave a Reply