12thBotany Lesson 3 Fill in the blanks
12thBotany Lesson 3 Fill in the blanks. 12th bio botany Additional Questions. 12th Botany Lesson 3 Fill in the blanks. 12th Bio Botany Unit 7 Lesson 3 Additional One Marks. TN Samacheer kalvi Guide Tamil Medium. HSC Second year 12thBotany Lesson 3 Fill in the blanks Answers. Fill in the blanks Question and Answers. +2 Bio Botany Lesson 3 பகுதி-II. 12th Botany Lesson 3 Fill in the blanks கூடுதல் வினாக்கள். Students Guide 360.
12thBotany Lesson 3 Fill in the blanks
I.கோடிட்ட இடத்தை நிரப்புக.
1. மெண்டலின் ஆய்வுகளை மறுபடி கண்டறிந்த வர்கள் விடை : டி.விரிஸ், காரன்ஸ் மற்றும் ஷெர்மாக்
2. செல்பிரிதலின் போது செல்லில் காணப்பட்ட புழுக்கள் போன்ற அமைப்புகள் ……. எனப்படும். விடை : குரோமோசோம்கள்
3. செல்லில் காணப்படும் குரோமோசோம்களே பாரம்பரியப் பண்புகளை கடத்துவதற்குக் காரணம்………என்றவர் விடை : வில்ஹெல்ம் ராக்ஸ்
4. டுரோசோவில்லாவில் சடுதிமாற்றத்தை முதன் முதலில் கண்டறிந்தவர் விடை : முல்லர் (1927)
5. 2ம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட வேதி ஆயுதம் விடை : மஸ்டர்டு வாயு (Dichloroethyl Sulphide)
6. பழப்பூச்சியில் ஓ-கதிர்களை பயன்படுத்தி சடுதி மாற்றத்தைத் தோற்றுவித்தவர் விடை : H.J.முல்லர்
7. தூண்டப்பட்ட சடுதிமாற்றம் தாவரங்களில் முதன்முதலில் காணப்படுவதைக் கூறியவர் விடை : L.J. ஸ்டேட்லர்
8. வேதி மியூட்டாஜெனிசிஸ் முதலில் கண்டறியப்பட்டது விடை : அயுர்பேக் (1944)
9. வேதி நல்லி சோமி எனப்படுவது விடை: 2n-2-2
10. டிரைசோமி முதலில் பிளாக்ஸீலியால் கண்டறியப் பட்ட தாவரம் விடை: டத்தூரா ஸ்ட்ராமோனியம்
11. எல்லாவித டெட்ராசோமியும் காணப்படும் தாவரம் விடை: கோதுமை
12.எந்தவிதமான மெய்யிலாமடியம் உயிருக்கு தீங்கு விளைவிப்பது விடை : நல்லிசோமி
13. பன்மடியத்தைத் தூண்ட பயன்படும் பொருள் விடை : கோல்சிசின்
14. ராப்பனோபிராஸிகா – வை உருவாக்கியவர் விடை : G.D.கார்பெசென்கோ (1927)
15. ஹெக்ஸாபிளாய்டி கோதுமை ட்ரிட்டிகம் ஏஸ்டிவம் மற்றும் ரையின் கலப்பினால் கிடைப்பது விடை : எண்மயம்
16.கந்தம் ஆகியவற்றிலிருந்து பெறப்படுகிற பன்மயத்தை தூண்டும் ஆல்கலாய்டு. விடை : கோல்ச்சிகம் ஆட்டம்னேல்
17. பெற்றோர் பண்பு 25%க்கும் அதிகமாக ஒரு இரு பண்பு சோதனைக் கலப்பில் காணப்பட்டால் அது இரு மரபணுக்களைப் பொறுத்தவரையில் எதனைக் குறிக்கிறது? விடை : பிணைப்பு
18. எந்தவிதமான செல்களில் குரோமோசோம் பிறழ்ச்சி சாதாரணமாகக் காணப்படும்? விடை : புற்றுநோய் செல்கள்
19. மறுசேர்க்கை நிகழ்விரைவு (Recombination Frequency (RF) சமமாகக் காணப்படுவது விடை : சிஸ் மற்றும் ட்ரான்ஸ்வகை ஹெட்ரோ சைகோட்களில்
12thBotany Lesson 3 Fill in the blanks
20.வரைபட தூரம் மரபணு A மற்றும் Bக்கு இடையே 3 அலகுகள் – B மற்றும் Cக்கு இடையே 10 அலகுகள் C மற்றும் Aக்கு இடையே 7 அலகுகள் அந்த மரபணுக்களின் வரிசையானது
1) B——10 அலகு
ii) A—–C 7 அலகு
iii) vdnt B………A
விடை: B – A -C
21. குறுக்கேற்ற விகிதம் எப்போது அதிகமாகக் காணப்படும் எனில் விடை : பிணைந்த மரபணுக்கள் ஒன்றிலிருந்து ஒன்று தூரமாகக் காணப்படும் போது
22. எந்த ஒரு பதிலீட்டு சடுதி மாற்றத்தினால் புதிய மரபுக் குறியன் நிறுத்து குறியனை ((UAA) உருவாக்கி மரபுச் செய்தி இறுதி முன் முதிர்வு அடைகிறது விடை : பொருளுணர்த்தாத சடுதி மாற்றம்
23. ஒரு DNA வில் ஒரு கார மாறுபாடு எனப்படும் விடை : புள்ளி சடுதி மாற்றம்
24.இனசெல்சாரா செல்லில் காணப்படும் மரபணு மாற்றம் எனப்படும் விடை : சொமாட்டிக் மியூட்டேஷன் (உடல் செல் சடுதி மாற்றம்)
12th Botany Lesson 3 Fill in the blanks
25. ஒரு DNA தொடர்வரிசையின் அருகில் காணப்படும் நகல் DNA விடை : டாண்டம் இரட்டிப்பாதல்
26. ஒரு DNA (அ) குரோமோசோமில் ஒரு சிறு பகுதி இல்லாமலிருப்பது (அ) நீக்கப்படுவது விடை : நீக்குதல் சடுதி மாற்றம்
27. சேர்த்தல் (அ) நீக்குதல் சடுதி மாற்றம் இரண்டு கூட்டாக எனப்படுகிறது. விடை: இன்டெல் சடுதி மாற்றம்
28. மரபுச் செய்தி பெயர்வு கட்டமைப்புகளை மாற்றும் சடுதிமாற்றம் எனப்படும் விடை : கட்ட நகர்வு சடுதி மாற்றம்
29. DNAவில் ஒரு மரபணுவை சேர்த்தல் (அ) நீக்கு தலைச் செய்வது விடை : மியூட்டா ஜென்கள்
30. சாதாரணமாக காணப்படாத ஒரு பகுதி அமினோ அயிலங்களை அறிமுகப்படுத்தும் திடீர் மாற்றம் விடை : கட்ட நகர்வு சடுதி மாற்றம்
31. அடினைக்கு பதில் குவானைன் மாற்றும் சடுதி மாற்றம் என்பதற்கு எ.கா விடை : டிரான்சிசன் (ஒத்த பதிலீடு)
32. எந்த ஒரு பெரிய புறத்தோற்ற மாறுதலையும் விளைவிக்காத சடுதி மாற்றம் எனப்படும். விடை : அமைதியான சடுதிமாற்றம்
33. AGC யை AGA வாக மாற்றும் சடுதி மாற்றம் எனப்படும். விடை: பொருளுணர்த்தா சடுதி மாற்றம்
34. மியாசிசிஸின் முன் நடைபெறும் DNA இரட்டிப்பின் போது நடைபெறும் சடுதி மாற்றம் …. எனப்பட, மைட்டாசிசிற்கு முன் நடை. பெறும் DNA இரட்டிப்பின் போது நடைபெறும் சடுதி மாற்றம் எனவும் அழைக்கப்படுகிறது விடை : இனசெல், உடல் செல் சடுதி மாற்றங் களாகும்
35, பியூரினுக்கு பதிலாக பிரிமிடின் (அ) பிரிமிடி னுக்கும் பதிலாக பியூரினை மாற்றும் சடுதி மாற்றம் விடை: டிரான்ஸ் வெர்ஷன் (வேறுபட்ட பதிலீடு)
36. இயல்பாக நடைபெறும் சடுதி மாற்றம்,பொது வாக லாகும். இன் போது நடைபெறும் தவறுத விடை : DNA இரட்டிப்படைதலின் போது
37. லியூசினின் மரபுக்குறியன் CUC ஒரு சிறு நைட்ரஜன் காரம் மாறும் போது இதிலிருந்து எத்தனை வேறுபட்ட அமினோ அமிலங்கள் உருவாக்கப்படும்? விடை : 7
38. எத்தனை வரைபட அலகுகள் தொலைவில் இரண்டு அல்லீல்கள் அமைந்திருந்தால் அதன் RF = 0.09-? விடை: 9cM
39. ஓஃபியோகுளோசம் தாவர ஒற்றைமடிய குரோ மோசோம் எண்ணிக்கை …… விடை:n-631
40. மக்காசோளத்தில் முழுமையற்ற பிணைப்பைக் கண்டறிந்தவர். விடை : ஹட்சின்சன்
41. இரு எதிரெதிர் விளைவுகளை கொண்டசெயல்கள்……… ஆகும். விடை : பிணைப்பு – குறுக்கேற்றம்
42. குறுக்கேற்றம் நடைபெறும் புரோநிலை விடை : பாக்கிடீன்
43. மேற்புற சவ்வுகளுக்கு அருகாமையில் உட்கரு கொண்ட ஒரு செல் நுண்ணுயிரிகள், வித்துக்கள் மகரந்தத்துகள்களை கதிரியத்திற்கு உட்படுத்த பயன்படுவது விடை UV கதிர்கள்
44. பப்பாளியில் பால் நிர்ணயத்தைக் கட்டுப்படுத்தும் அல்லீல்கள் ஆகும். விடை : M, M, M, ஆகியவை
45. ஒரே குரோமோசோமில் காணப்படும் அருகமைந்த மரபணுக்கள் ஒன்றாகவே பாரம்பரியமாதலை குறிப்பிடுவது
அ) பிணைப்பற்ற மரபணுக்கள்
ஆ) பிணைப்புறாத மரபணுக்கள்
இ) சின்டெனிக் மரபணுக்கள்
ஈ) ட்ரான்ஸ் வகை மரபணுக்கள்
விடை : அ) பிணைப்பற்ற மரபணுக்கள்
46. பப்பாளியில் …. இணை உடலக குரோமோசோம்களும்……… இணை பால் குரோமோசோம் களும் உள்ளன. விடை : 17 இணை, 1 இணை
47. ஒரு செல்லில் ஒரு மடிய குரோமோசோமின் எண்ணிக்கை 23, அதன் இரட்டை மானோசோமி மற்றும் பென்டாசோமி லைகளில் குரோமோசோம்களின் எண்ணிக்கை
அ) 44 மற்றும் 49
ஆ) 17 மற்றும் 34
இ) 47 மற்றும் 46
ஈ) 45 மற்றும் 48
விடை : அ) 44 மற்றும் 49
48. குரோமோசோம்களின் இரட்டிப்படைந்த பகுதி அதன் இயல்பான பகுதிக்குச் சற்று தொலைவில் அதே வரிசையில் காணப்படுவது விடை : இடம்மாறிய இரட்டிப்பாதல்
49. சென்டிரோமியர் அல்லாத பகுதி – தலைகீழ் திருப்பம் ஆகும். விடை : பாராசென்டிரிக்
50. சென்டிரோமியர் உள்ள பகுதியில் தலைகீழ் திருப்பம் நடைபெறுவது விடை பெரிசென்ட்ரிக் தலைகீழ்திருப்பம்
51. மிக அரிதாக நடைபெறும் மரபணு அமைவிடவரிசையில் ஏற்படும் சடுதி மாற்றம் விடை : எளிய திடீர் மாற்றம்
52. இந்தியப் பசுமைப்புரட்சியின் தந்தை விடை : M.S.சுவாமிநாதன்
53.சில வேதியியல் சேர்மங்கள் அதற்குரிய சடுதி மாற்ற பண்புகளைப் பெற்றிருக்காமல் மற்ற சடுதி மாற்றங்களோடு சேர்ந்து அதன் திறனை அதிகரித்தால் அவை விடை : இணை சடுதி மாற்றம் எனப்படும்.
54. கடுகு வாயு வின் வேதிப்பெயர் விடை : டை குளோரோ எத்தில் சல்பைடு
55. பியூரினுக்கு பதிலாக வேறொரு பியூரின் காணப் படுவது………. விடை : ஒத்த பதிலீடு
56. அமினோ அமில வரிசையில் மாற்றம் இல்லை யெனில் அந்த சடுதி மாற்றம்……… எனப்படும். அதனால்……… மாறுவதில்லை விடை : அமைதியான சடுதி மாற்றம், புரதம்
57. அயனியாக்கும் கதிர்வீச்சுகளின் குறுகிய அலை நீளம் கொண்டவைகளுக்கு இரு எ.கா. விடை X கதிர்கள், காமாகதிர்கள்
58. தாவரங்களில் பால்நிர்ணய முறையை முதலில் கண்டறிந்தவர் விடை : C.E.ஆலன் (1917)
59. 6% பூக்கும் தாவரங்கள் பாலின உறுப்புகள்…… வகைப்படும் விடை டைமார்பிக்
60. ஹாலிடே சந்திப்பு தோன்றிய இடத்திலிருந்து நகர்வது விடை : கிளை இடப்பெயர்வு என்று பெயர்
61. குறுக்கேற்றத்தின் பயன்…… விடை : இவை மிக துல்லியமான வரைபடத் தொலைவைத் தருகிறது.
62. குதிரைவால் பெரணி (ஈக்விசிட்டம்) என்ற தாவரம் இறுக்க சூழலில் இருந்தால் தாவரமாக வளரும். விடை: ஆண்
63.பிரையோபைட்டாவின் கேமீட்டோபைட் தாவரம் தன்மை கொண்டது. விடை ஒரு மடிய தன்மை கொண்டது.
64.கீழ்வருவனவற்றுள் எது செல்பிரிதலின் போது குரோமோசோம்களின் செயல்பாடுகள் பற்றிய சரியற்ற வாக்கியம் (PTA – 4)
அ) ஒத்திசைவு குரோமோசோம்களின் அல்லீல்களின் மரபணுவகையம் அதற்கென ஒரு குறிப்பிட்ட அமைவிடத்திலேயே உள்ளது.
ஆ)குன்றல் பகுப்பின் இடைநிலையில் வரும் 5 நிலையில் ஒவ்வொரு குரோமோசோமும் இரட்டிப் படையும் போது ஒவ்வொரு அல்லீல்களும் இரண்டு நகல்களாக மாறுகின்றன.
இ) மெட்டாஃபேஸ் I-ல் ஒத்திசைவு குரோமோ சோம்கள் பிரிவதன் மூலம் இருவேறுபட்ட அல்லீல்களாக பிரிதலடைகின்றன.
ஈ) குன்றல் பகுப்பின் அனாஃபேஸ் – IIல் ஒத்திசைவு குரோமோசோம்களின் சகோதரி குரோமேட்டிட்கள் பிரிகின்றன.
விடை: இ)
65.அ) எல்லா பூக்கும் தாவரங்களும் 94% ஒரே விதமான மலர்களைக் கொண்ட தாவரங்களாக அதாவதுமோனோமார்ஃபிக் ஆக உள்ளன.
ஆ) ஒரு அமினோ அமிலத்திற்கான மரபுக்குறியன் வேறு ஒரு அமினோ அமிலத்திற்கான மரபுக் குறியனாக மாறுபடுவது கட்ட நகர்வு சடுதி மாற்றம் – என்று பெயர்.
இ) டுரோசோஃபில்லாவில் முதன் முதலாக X கதிர்கள் மூலம் திடீர் மாற்றம் ஏற்படுத்தியவர் முல்லர் (1928)
விடை: இ
12thBotany Lesson 3 Fill in the blanks
66. பணிகளின் மீது ஏற்படும் பாதிப்பின் அடிப்படை யில் சடுதிமாற்றத்தைக் குறித்த தவறானக் கூற்றை குறிப்பிடுக.
அ) செயல் இழப்பு (Knockout) சடுதி மாற்றத்தால் இயல்பான செயல்பாட்டினைத் தடுக்கிறது.
ஆ) குறை அமைப்பு நிலை hypomorphic இயல்பான செயல்பாட்டைக் குறைக்கிறது
இ) மிகை அமைப்பு நிலை hypermorphic இயல்பான செயல்பாட்டினை அதிகரிப்பது
ஈ) செயல் ஏற்பு (இடமறியா வெளிப்பாடு) தவறான நேரத்தில் (அ) பொருத்தமற்ற செல் களில் வெளிப்படுவது. 67.50% RF உடைய இரண்டு மரபணுக்கள் பற்றிய
விடை : அ
67. கூற்றுக்களில் தவறானதைக் கண்டறி.
அ) மரபணுக்கள் வெவ்வேறு குரோமோசோம்களில் காணப்படும்.
ஆ) மரபணுக்கள் நெருக்கமாக பிணைந்துள்ளன.
இ) மரபணுக்கள் சார்பின்றி ஒதுங்குகின்றன.
ஈ) ஒரே குரோமோசோம்களில் இந்த மரபணுக்கள் காணப்பட்டால் ஒவ்வொரு மியாசிசின் போதும் ஒன்றுக்கும் மேற்பட்ட குறுக்கேற்றம் அடை கின்றன.
விடை : ஈ
68.அ) மானோசோமிக் தாவரங்களை தற்கலப்பிற்கு உட்படுத்தினால் அவை நலலிசோமியை உருவாக்கும்.
ஆ) ஒரு தூய இருமய தாவரத்தில் மோனோ பிளாய்டி ஹாப்ளாய்டி எண்ணிக்கை சமமானது.
இ) ஒரு ஒருமயத்தை இருமயத்துடன் கலப்பு செய்யும் போது மும்மயம் பெறப்படும்.
ஈ) புதிய சிற்றினங்கள் உருவாவதில் குரோமோ சோம் எண்ணிக்கை உருவாவது முக்கியக் காரணியாகும்.
விடை இ
12th Botany Lesson 3 Fill in the blanks