You are currently viewing 12th Botany Lesson 3 Additional 2 Marks

12th Botany Lesson 3 Additional 2 Marks

12th Botany Lesson 3 Additional 2 Marks

12th Botany Lesson 3 Additional 2 Marks. TN 12th Bio Botany Unit 7, Lesson 3 Additional 2 Mark Question and Answers Tamil Medium. TN Samacheer kalvi Guide +2 Bio-Botany Book Back Question and Answer key and also some additional questions with answer key. 12th Botany Important Questions in Tamil Medium Lesson 3. Students Guide 360.

12th Botany Lesson 3 Additional 2 Marks Tamil Medium | Students Guide 360

12th Botany Lesson 3 Additional 2 Marks

இரண்டு மதிப்பெண் வினாக்கள்

1. குரோமோசோம் கோட்பாட்டை வரையரை செய்க.

 ஒவ்வொரு குரோமோசோமும் குறிப்பிட்ட மரபியத் தீர்மானிகள் (அ) மெண்டலிய காரணியை குறிப்பிட்ட அமைவிடத்தில் கொண்டுள்ளன. இவை பண்புகளை ஒருதலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கடத்துகின்றன.

2. பின்வரும் உயிரினங்களில் காணப்படும் குரோமோ சோம்களின் இருமய எண்ணிக்கை தருக.

  1. ஒபியோகிளாசம்,
  2. அரபிடாப்சிஸ்,
  3. கரும்பு,
  4. அரிசி,
  5. உருளை,
  6. மக்காச்சோளம்

விடை:1) 1262, 2) 10, 3) 80, 4) 24, 5) 48, 6) 20.

3. தொல்லுயிர் எச்ச மரபணுக்கள் என்றால் என்ன?

  • விரையமாகக் கருதக் கூடிய சில DNA க்கள் பொய்யான மரபணுக்களால் உருவாக்கப்படு கின்றன.
  • இத்தகைய மரபணுக்கள், கடந்த காலங்களில் உயிரூட்டத்துடன் செயல்பட்டவைகள் ஆனால் தற்போது புரதம் உருவாக்கும் தன்மையை இழந்து விட்டவை.
  • இவை பரிமாணத்திற்கான வரலாற்றைக் கூறுகிறது.

4. T.H. மார்கனின் பணிகள் யாவை?

  • டுரோசோஃபில்லா மெலனோகாஸ்டர் பால் நிர்ணயம் பற்றிய ஆய்வு குரோமோசோம் பாரம் பரியக் கொள்கையை தீர்மானிக்க உதவியது.
  • இது சார்ந்த செயலியல், மருத்துவத்துறைக்காக 1933ல் நோபல் பரிசு பெற்றவர்.

5. இணை சடுதி மாற்றிகள் (Co-mutagens) என்றால் என்ன? (PTA – 5)

  • சில வேதியியல் சேர்மங்கள் அதற்குரிய சடுதி மாற்றம் பண்புகளைப் பெற்றிருக்காமல் மற்ற சடுதிமாற்றிகளோடு சேர்ந்து அதன் திறனை அதிகரித்தால் அவை இணை சடுதி மாற்றிகள் என்று அழைக்கப்படுகிறது.
  • எ.கா. அஸ்கார்பிக் அமிலம், ஹைட்ரஜன் பெராக்ஸைடு மூலம் ஏற்படும் பாதிப்பை அதிகப் படுத்துகிறது. காஃபின், மிதோட்ரெக்ஷட்டின் நச்சுத்தன்மையை அதிகமாக்குகிறது.

6. மெய்மடியம் / மெய்யிலாமடியம் வேறுபடுத்துக.

மெய்மடியம்

மெய்யிலாமடியம்

குரோமோசோம்களின் மொத்தத் தொகுதியால் ஏற்படும் மடியம் மெய்மடியம்

இருமடிய தொகுதியில் ஒன்று (அ) அதற்கு மேற்பட்ட குரோமோசோம்கள் சேர்த்தல் (அ) நீக்குதல் மாற்றத்தினால் ஏற்படும் நிலையாகும்.

எ.கா.- மும்மடியம் 3n நான்மடியம் 4n

எ.கா: டிரைசோமி (2n+1) டெட்ரோசோமி (2n+2) - ஹைப்போபிளாய்டி

மோனோசோமி & (2n-1) நல்லிசோமி (2n-2) - 
ஹைபர்பிளாய்டி

7. மோனோபிளாய்டி & ஹாப்ளாய்டி வேறுபடுத்துக.

மோனோபிளாய்டி

ஹாப்ளாய்டி

இதில் குரோமோசோம் எண்ணிக்கை X- எனக் குறிப்பிடப்படுகிறது. எ.கா.ஹெக்ஸாபிளாய்ட்  கோதுமை 2n = 6x = 72 ஹாப்ளாய்ட்=(n) = 36 மோனோபிளாய்டி = X = 12

உடல் கு ரோமோசோம்களின் பாதி எண்ணிக்கை - கேமிட்குரோமோசோம் எண்ணிக்கை - இதுவே ஹாப்ளாய்டி

(அ) n எனப்படும்.

மனித ஹாப்ளாய்ட் எண்ணிக்கை = 23 (n) கோதுமை ஹாப்ளாய்ட் =36(n)

8. சார்பின்றி ஒதுங்குதல் & பிணைப்பு ஏற்படுத்து.

எண்.

சார்பின்றி ஒதுங்குதல்

பிணைப்பு

1.

மரபணுக்கள் வெவ்வேறு குரோமோசோம்களில் காணப்படுதல் அவை சார்பின்றி ஒதுங்குகின்றன

மரபணுக்கள் ஒரே குரோமோசோமில் காணப் படுவதால் அவை சேர்ந்திருக்க முற்படுகின்றன.

2. 

அதிகமான பெற்றோர் பண்புகளும் குறைவான பண்புகளும் காணப்படுகின்றன.

அதிகமான பெற்றோர் பண்புகள் காணப் படுகின்றன.

9. பிணைதலின் பலம் & பலமற்ற தன்மை யாது?

  • பிணைதலில் மரபணுகளுக்கிடையேயான தூரம் குறைய குறைய பிணைதலின் பண்பு அதிகரிக்கும்.
  • பிணைதலின் தன்மை மரபணுகளுக்கிடையே யான தூரம் அதிகரிக்க அதிகரிக்க பிணைதலின் பலம் அதிகரிக்கும்.

12th Botany Lesson 3 Additional 2 Marks

10.மோனோமார்ஃபிக் தாவரங்கள் என்றால் என்ன?

  • 94% பூக்கும் தாவரங்களில் ஒரே விதமான மலர் களைக் கொண்ட தாவரங்கள் அதாவது ஆண் உறுப்புகள் (மகரந்தத்தாள்கள்) மற்றும் பெண் உறுப்புகளை (சூலக இலைகள்) கொண்ட மலர்களாக காணப்படுகின்றன.
  • பால் தன்மையின் காரணமாக இது மோனோமார்ஃபிக் தாவரங்கள் எனப்படுகின்றன.

11. டைமார்ஃபிக் தாவரங்கள் என்றால் என்ன?

  • 6% பூக்கும் தாவரங்களில் ஆண், பெண் பாலின உறுப்புகள் தனித்தனியாக அமைந்திருக்கும்.
  • இவற்றை டைமார்ஃபிக் தாவரங்கள் எனப்படு கின்றன.

12. மறு கூட்டிணைவு வரையறு.

  • DNAவின் துண்டங்கள் உடைந்து மறுகூட்டிணைவு கொண்ட புதிய அல்லீல்கள் சேர்க்கை உருவாகின்றன.
  • இந்தச் செயல்முறை மறுகூட்டிணைவு என்று பெயர்.

13. கயாஸ்மாக்கள் என்றால் என்ன?

  • ஒத்திசைவு குரோமோசோம்களின் சகோதரி அல்லது குரோமாட்டிடுகள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகளில் இணைகிறது.
  • இந்த ஒத்திசைவு குரோமோசோம்களின் சகோதரி அல்லா குரோமாட்டிடுகளுக்கு இடையேயான இணைவுப் புள்ளிகள் (ஒருமை-கயாஸ்மா) கயாஸ்மாக்கள் என்று அழைக்கப்படுகிறது.

14. பல்கூட்டு அல்லீல்கள் என்றால் என்ன?

  • ஒரு இணை ஒத்திசைவு குரோமோசோம்களில் ஒரு மரபணுவின் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட அல்லீல் வகைகள் ஒரே அமைவிடத்தில் அமைந் திருப்பது பல்கூட்டு அல்லீல்கள் என்று பெயர்.

15.குரோமோசோம் பிறழ்ச்சிகள் என்றால் என்ன?

  • குரோமோசோம்களின் அமைப்பு மற்றும் எண்ணிக்கையில் உண்டாகும் மாற்றங்கள், ஒரு செல்லின் மரபணு தொகையத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்த மிகப்பெரிய மாற்றங்களே குரோமோசோம் சடுதிமாற்றங்கள் (அ) குரோமோசோம் பிறழ்ச்சிகள் என அழைக்கப் படுகின்றன.

Leave a Reply