12th Botany 4th lesson Additional 3 Marks
12th Botany 4th lesson Additional 3 Marks. 12th Botany Lesson 4 Book Back Answers. TN 12th Standard Unit 8 Lessin 4 Book Back All Question with answers Tamil Medium. 12th Samacheer kalvi Guide Lesson 4. உயிரி தொழில்நுட்பவியல் நெறிமுறைகளும் செயல்முறைகளும் Full Answer key in Tamil Medium Students Guide 360. HSC 12th Botany Lesson 4 Book Back Answers.
12th Botany 4th lesson 3 mark questions
VIII. மூன்று மதிப்பெண் வினாக்கள்
1.நவீன உயிரி தொழில்நுட்பத்தின் இரு முக்கிய அம்சங்கள் யாவை?
- மறு கூட்டிணைவு தொழில் நுட்பத்தின் மூலம் குறிப்பிட்ட தேவைக்காக புதிய தயாரிப்புகள் பெறுவதற்கு மரபணு மாற்றம் தேவைப்படுதல்.
- புதிதாக உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்தின் உரிமை மற்றும் அதன் சமூகத் தாக்கம்.
2.உயிரி வினைகலன் என்றால் என்ன?
- இது நொதிகலன் எனப்படும். ஒரு பாத்திரம் அல்லது கொள்கலனாகும்.
வினைபடு பொருட்கள் + நுண்ணுயிரி (அ) அவற்றின் நொதிகள்—-> தேவையான பொருட்கள உற்பத்தி
- இந்த வினைகள் நடைபெற உகந்த சூழ்நிலையை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
- காற்றோட்டம், கிளர்வூட்டம், வெப்பநிலை, pH போன்றவை கட்டுப்படுத்தப்பட்டிருக்கும்.
- இதிலுள்ள இரு செயல்முறைகள் உள்ளன. 1. மேல்கால் பதப்படுத்தல், 2. கீழ்கால் பதப்படுத்தல்.
3.மேற்கால் மற்றும் கீழ்கால் பதப்படுத்துதல் வேறுபடுத்துக.
மேற்கால் பதப்படுத்துதல் | கீழ்கால் பதப்படுத்துதல் |
1.முதல் நிலை - நொதித்தலுக்கு முன்பானது. | 1. இரண்டாம் நிலை நொதித்தலுக்குப் பின்பானது. |
4. தொழிற்சாலையில் நொதித்தலின் யாவை?
5.SCP இன் பயன்பாடுகள் யாவை?ருட்கள் தயாரிப்பு :
புரத மாற்று உணவு அழகுப் பொ
6. ‘வரிக்குறியீடு’ மரபணு உள்ளடகத்தின் அடிப் படையில் விவரி.
- இது தாவர இனத்தை அடையாளம் கண்டறிய உதவும் ஒரு உத்தியாகும்.
- நடைமுறையில் இது தரவுகளின் ஒளி சார் கருவியில் படிக்கப்படக்கூடிய ஒரு குறியீட்டு வழிமுறை.
- இது தாவரத்தின் பண்புகளை விவரிக்கிறது.
7. மரபணு தொகைய சீர்வரிசையாக்கம் என்றால் என்ன?
- ஒரு உயிரினத்தின் DNAவில் மாற்றம் ஏற்படுத்தும் திறன் கொண்ட தொழில் நுட்பங்களின் ஒரு தொகுதி தான் மரபணு தொகைய சீர் வரிசையாக்கமாகும்.
- இதனால் எந்த மரபணு சார் பொருட்கள சேர்க்கவோ, நீக்கவோ, மாற்றவோ அனுமதிக்கிறது. (எ.கா) CRISPR சீர்வரிசையாக்கி முறையால் கலப்பின அரிசி உருவாக்கப்படுகிறது.
8. மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுகளால் ஏற்படும் ஆபத்துகளாக நம்பப்படுபவைகள் யாவை?
- உறுப்புகள் பாதிப்பு கல்லீரல், சிறுநீரக செயல்பாட்டை பாதிக்கிறது.
- புற்றுநோய் பாதிப்பு ஏற்படும்.
- ஹார்மோன் சமமின்மை மற்றும் உடல்நிலை சீர் குலையும்.
- நோயெதிர்ப்பு தன்மை தொகுதியில் மோசமா விளைவு ஏற்படும்.
- பிறழ்ச்சியடைந்த அதிர்ச்சி (திடீர் மிகையுணர்வு வினை) மற்றும் ஒவ்வாமை
- விதைகளின் உயிர்ப்புத்தன்மை இழப்பு-(எ.கா) முடிவுறுத்தி விதை தொழில் நுட்பம்.
9. எவ்வாறு ஃபிளேவர் சேவர் தக்காளி உருவாக்கப் படுகிறது?
- நாட்டு ரக தக்காளியில், இயல்பான மரபணு, பாலிகேலக்டுரானேஸ் நொதியின் செயல் பாட்டால் விரைவாக பழுத்தல் தொடர்ந்து அழுகுதல் இவற்றால் வீணாகிறது. மரபணுப் பொறியியல் மூலம் தயாரிக்கப்பட்ட தக்காளி
தனிமைப்படுத்தப்பட்ட உணர்தடை மரபணு
⇓
அக்ரோபாக்டீரியம் வழிகடத்தல்
⇓
மரபணு மாற்றப்பட்ட தக்காளியில் உணர்தடை மரபணு செயல்படல்
⇓
பாலிகேலக்டுரோனேஸ் நொதியின் உற்பத்தி இடையீடு செய்கிறது.
⇓
காய், கனியாவது, கனியுறை மென்மையானது தொடர்ந்து அழுகுதல் தாமதமாதல்
⇓
நீண்ட சேமிப்பு மற்றும் நெடுந்தூரம் எடுத்துச் செல்லும் போதும் தக்காளி கெடுவதில்லை.
10.வெஸ்டர்ன் ஒற்றியெடுப்பு சோதனை எலிசா (ELISA) சோதனையை விடச் சிறந்தது எவ்வாறு?
- எலிசா மற்றும் வெஸ்டர்ன் ஒற்றியெடுப்பு ஆகிய இவ்விரு சோதனைகளும் நோய் தொற்றுக்கு எதிரான நோய் தடுப்பாற்ற மண்டலங்களின் பதில் விளைவை அறியும் மறைமுக பரிசோதனைகளே அன்றி நோய் கிருமியைக் கண்டறியும் பரிசோதனைகள் அல்ல.
- இச்சோதனை மூலம் நோய் தொற்று ஏற்பட்ட 2-12 வாரங்களில் நமது உடல் உருவாக்கும் ஆண்டி-பாடிகளைக் கண்டறியும் சோதனை.
- ஆயினும் இது உறுதியாக நோய் தொற்றை தீர்மானிக்க உதவாது.
- எ.கா : HIV – AIDS
- இதுவும் அவ்வாறே செயல்பட்டாலும் இது பொதுவாக நோய் இருப்பின் கண்டறிந்து நோயில்லை என தவறான முடிவைப் பொதுவாகத் தராது- இம்முறை குறிப்பிட்ட நோய்த்தொற்றுக்கு எதிரான ஆண்டிபாடி களை பிறவற்றிலிருந்து வேறுபடுத்திக் காணும் திறனுடைய பரிசோதனை
- இது உறுதியாக நோய் தொற்றை தீர்மானிக்க உதவும் பரிசோதனை ஆகும்.
- எ.கா : HIV – AIDS
11. வெளிப்பாடுடைய தாங்கிக் கடத்திகள் வரையறு. எ.கா. தருக.
- அயல் புரதங்களை வெளிப்படுத்துவதற்கு பொருத்தமான தாங்கிக் கடத்திகள் வெளிப்பாடுடைய தாங்கிக் கடத்திகள் எனப்படும். எ.கா. PC 19 Vector