11th Tamil Guide Unit 4.1
இயல் 4.1 தமிழகக் கல்வி வரலாறு
Book Back | Additional Question and Answers
11th Tamil Guide Unit 4 Book Back and Additional Question – Answers இயல் 4.1 தமிழகக் கல்வி வரலாறு
பலவுள் தெரிக
1.ஏடு, சுவடி, பொத்தகம், பனுவல் முதலிய சொற்கள் தரும் பொருள் ……………..என்பதாகும்.
ஆ) ஓலை
இ) எழுத்தாணி
ஈ) தாள்
Answer:
அ) நூல்
2.சரியான விடையைத் தேர்க.
அ) கல்வி அழகே அழகு – 1. தொல்காப்பியம் சிறப்புப்பாயிர உரைப்பாடல்
ஆ) இளமையில் கல் – 2. திருமந்திரம்
இ) துணையாய் வருவது தூயநற் கல்வி – 3. ஆத்திசூடி
ஈ) பாடம் போற்றல் கேட்டவை நினைத்தல் – 4. திருக்குறள்
– 5. நாலடியார்
ii) அ – 3, ஆ – 4, இ – 1, ஈ – 2
iii) அ – 5, ஆ – 3, இ – 2, ஈ – 1
iv) அ – 4, ஆ – 1, இ – 2, ஈ – 5
Answer:
iii) அ – 5, ஆ – 3, இ – 2, ஈ – 1
3.“பட்டி மண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்’ என்னும் அடிகள் இடம் பெற்ற நூல் ……………….
ஆ) சீவகசிந்தாமணி
இ) மணிமேகலை
ஈ) வளையாபதி
Answer:
இ) மணிமேகலை
4.தனிமனிதனைச் சமுதாயத்திற்கு ஏற்றவனாக மாற்றுவது …………………
ஆ) பணம்
இ) வியாபாரம்
ஈ) கல்வி
Answer:
ஈ) கல்வி
5.கல்வி கற்பதற்காகப் பிரிந்து செல்வதை, ‘ஓதற் பிரிவு’ எனக் கூறும் நூல்……………..
ஆ) திருமந்திரம்
இ) மணிமேகலை
ஈ) தொல்காப்பியம்
Answer:
ஈ) தொல்காப்பியம்
6.கல்வியினால் ஒருவனுக்குத் தோன்றுவது ………………..
ஆ) செருக்கு
இ) பெருமிதம்
ஈ) செயல்
Answer:
இ) பெருமிதம்
7.ஆசிரியர், மாணவர்க்கான இலக்கணம் வகுத்த நூல்கள் …………….
ஆ) நன்னூல், ஆத்திசூடி,
இ) தொல்காப்பியம், நன்னூல்
ஈ) நன்னூல், திருமந்திரம்
Answer:
8.மன்னராட்சிக் காலத்தில் முக்கியக் கல்வியாகக் கருதப்பட்டது ……………..
ஆ) தொழில் பயிற்சி
இ) போட்ட பயிற்சி
ஈ) சமயக் கல்வி
Answer:
இ) போர்ப் பயிற்சி
9.எழுத்தும் இலக்கியமும், உரிச்சொல்லும் கணக்கும் கற்பித்தோரைக் ………… என அழைத்தனர்.
ஆ) குரவர்
இ) குரு
ஈ) கணக்காயர்
Answer:
ஈ) கணக்காயர்
10.மூவகை இலக்கணத்தையும், அவற்றிற்கு எடுத்துக்காட்டுகளான பேரிலக்கியங்களையும் கற்பித்தோர்……. என அழைக்கப் பெற்றனர்.
ஆ) குரவர்
இ) குரு
ஈ) கணக்காயர்
Answer:
அ) ஆசிரியர்
11.சமய நூல்களையும், தத்துவ நூலையும் கற்பித்தோர், …………….. என அழைக்கப்பட்டனர்.
ஆ) குரவர்
இ) குரு
ஈ) கணக்காயர்
Answer:
ஆ) குரவர்
12.கலைகள் கல்வி கற்பிக்கும் இடங்களாக விளங்கியவை……………
ஆ) பள்ளிகள்
இ) சான்றோர் அவைகள்
ஈ) கூடங்கள்
Answer:
ஆ) பள்ளிகள்
13.கற்ற வித்தைகளை அரங்கேற்றும் இடமாகத் திகழ்ந்தது ……………..
ஆ) மன்றம்
இ) சான்றோர் அவை
ஈ) பட்டி மன்றம்
Answer:
ஆ) மன்றம்
14.செயல்களைச் சீர்தூக்கிப் பார்க்கும் அவை…………………..
ஆ) பேச்சு மன்றம்
இ) கலைக்கூடம்
ஈ) சான்றோர் அவை
Answer:
ஈ) சான்றோர் அவை
15.கல்வி கற்பிக்கப்படும் இடங்களைப் ‘பள்ளி’ என்று குறித்தது …………………
ஆ) மணிமேகலை
இ) சீவகசிந்தாமணி
ஈ) பெரிய திருமொழி
Answer:
ஈ) பெரிய திருமொழி
16.கல்வி கற்பிக்கப்படும் இடங்களை ‘ஓதும்பள்ளி’ எனக் கூறியது ………………
ஆ) சீவகசிந்தாமணி
இ) திவாகர நிகண்டு
ஈ) சிலப்பதிகாரம்
Answer:
இ) திவாகர நிகண்டு
17.கல்வி கற்பிக்கப்படும் இடங்களைக் கல்லூரி’ எனக் கூறியுள்ளது ……………
ஆ) திவாகர நிகண்டு
இ) மணிமேகலை
ஈ) சீவகசிந்தாமணி
Answer:
ஈ) சீவகசிந்தாமணி
18.‘தெற்றிப் பள்ளிகள்’ என அழைக்கப்பட்டவை………………
ஆ) பௌத்த பள்ளிகள்
இ) திண்ணைப் பள்ளிகள்
ஈ) ஐரோப்பியப் பள்ளிகள்
Answer:
இ) திண்ணைப் பள்ளிகள்
19.சென்னை மாகாணத் திண்ணைப் பள்ளிகளின் கல்வித் தரத்தைப் பாராட்டியவர்……………..
ஆ) யுவான் சுவாங்
இ) தாமஸ் மன்றோ
ஈ) கார்லஸ்வுட்
Answer:
இ) தாமஸ் மன்றோ
20.“ஆசிரியர்களால் சர்வ வல்லமையிலும் பாதிப்பினை ஏற்படுத்த இயலும். அவர்களால் ஏற்படப்போகும் நல்ல விளைவுகளை அவர்களாலேயே மதிப்பிட இயலாது” என்று கூறியவர் …………………..
ஆ) ஹென்றி ஆடம்ஸ்
இ) டச்சுக்காரர்கள்
இ) ரெவரெண்டு பெல்
Answer:
ஆ) ஹென்றி ஆடம்ஸ்
21.தாய்நாட்டு இலக்கியங்களையும், கீழைத்தேசத்துக் கலைகளையும் பயிற்றுவிக்க வேண்டும் என்பதைக் கொள்கையாகக் கொண்டோர்…………………..
ஆ) மேற்கத்தியவாதிகள்
இ) டச்சுக்காரர்கள்
ஈ) கீழைத்தேயவாதிகள்
Answer:
ஈ) கீழைத்தேயவாதிகள்
22.தற்காலக் கல்வி முறையும், தேர்வு முறையும் உருவெடுக்கக் காரணம் ………………….
ஆ) லண்டன் பாராளுமன்றம்
இ) தாமஸ் மன்றே ஆய்வு
ஈ) சார்லஸ் உட் அறிக்கை
Answer:
ஈ) சாஸ் உட் அறிக்கை
23.‘இந்தியக் கல்வி வளர்ச்சியின் மகாசாசனம்’ எனப் போற்றப்பட்டது …………………
ஆ) தாமஸ் மன்றோ ஆய்வு
இ சாலஸ் உட் அறிக்கை
ஈ) ஹென்றி ஆடம்ஸ் அறிக்கை
Answer:
இ) சார்லஸ் உட் அறிக்கை
24.அளளிகளில் சீருடை முறை, தாய்மொழிவழிக் கல்வி போன்றவற்றைக் கட்டாயமாக்கியது ……………….
ஆ) தாமஸ் மன்றோ ஆய்வு
இ) ஹென்றி ஆடம்ஸ் அறிக்கை
ஈ) ஹண்டர் கல்விக்குழு
Answer:
ஈ) ஹண்டர் கல்விக்குழு
25.புதுப்பள்ளிகளைத் தொடங்கி நடத்தும் பொறுப்பைத் தனியாருக்கு வழங்கப் பரிந்துரைத்தது……………….
ஆ) ஹண்டர் கல்விக்குழு
இ) ஹென்றி ஆடம்ஸ் அறிக்கை
ஈ) டச்சு சமயப் பரப்புக் குழு
Answer:
ஆ) ஹண்டர் கல்விக்குழு
26.‘சட்டாம் பிள்ளை ‘ என அழைக்கப்படுபவர்
ஆ) ஆசிரியர்
இ) பெற்றோர்
ஈ) துணை ஆசிரியர்
Answer:
அ) மாணவர் தலைவர்
27.“உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே” எனக் கூறிக் கல்வியின் சிறப்பை விளக்கியவர் ……………..
ஆ)ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்
இ) வள்ளுவர்
ஈ) ஔவையார்
Answer:
ஆ) ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்
28.ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் பாடல் காணப்படும் நூல் ………………..
ஆ) திருமந்திரம்
இ) நன்னூல்
ஈ) புறநானூறு
Answer:
ஈ) புறநானூறு
29.“துணையாய் வருவது தூயநற் கல்வி” எனக் கூறும் நூல்……………..
ஆ) நன்னூல்
இ) நாலடியார்
ஈ) திருமந்திரம்
Answer:
ஈ) திருமந்திரம்
30.“கல்வி அழகே அழகு” என்னும் பாடல்வரி இடம்பெற்ற நூல்………….
ஆ) புறநானூறு
இ) நாலடியார்
ஈ) சிலப்பதிகாரம்
Answer:
இ) நாலடியார்
31.“கற்றில னாயினும் கேட்க” எனக் கூறியவர்…………………….
ஆ) திருவள்ளுவர்
இ) நன்னூலார்
ஈ) திருமூலர்
Answer:
ஆ) திருவள்ளுவர்
32.‘கண்ணுடையர் என்பவர் கற்றோர்’ எனக் கூறும் நூல் ……………..
ஆ) நாலடியார்
இ) சிலப்பதிகாரம்
ஈ) திருக்குறள்
Answer:
ஈ) திருக்குறள்
33.‘இளமையில் கல்’ எனக் கூறியவர்……………..
ஆ) நாக்ஷயார்
இ) ஔவையார்
ஈ) நாடக மகளிர்
Answer:
இ) ஔவையார்
34.‘பட்டிமண்டபம்’ என்பது, அயைக் கருத்துகளை விவாதிக்கும் இடம் என்று சுட்டும் நூல்……………
அ) தொல்காப்பில்
ஆ) மணிமேகலை
இ) புறநானூறு
ஈ) சிலப்பதிகாரம்
Answer:
ஆ) மண மேகலை
35.“கணக்காயம் இல்லாத ஊர், நன்மை பயக்காது” என்று கூறும் நூல்………………
அ) திருக்குறள்
ஆ) ஆத்திசூடி
இ) திருமந்திரம்
ஈ) திரிகடுகம்
Answer:
ஈ) திரிகடுகம்
36.சென்னை ஆளுநர் சர் தாமஸ்மன்றோ ஆணைப்படி தொடங்கப்பட்டது…………..
அ) சென்னை மருத்துவக் கல்லூரி
ஆ) சென்னைப் பல்கலைக்கழகம்
இ) இடைநிலைக் கல்வி வாரியம்
ஈ) பொதுக்கல்வி வாரியம்
Answer:
ஈ) பொதுக்கல்வி வாரியம்
அ) டச்சு சமயப் பரப்புச் சங்கத்தார்
ஆ) கீழைத்தேசியவாதிகள்
இ) ஹண்டர் கல்விக்குழு
ஈ) மேற்கத்தியவாதிகள்
Answer:
ஈ) மேற்கத்தியவாதிகள்
38.கீழைத்தேசியவாதிகள், மேற்கத்தியவாதிகள் கருத்து வேறுபாடுகளைத் தீர்க்க அமைக்கப்பட்ட கல்விக்குழு …………
அ) சார்லஸ் உட்குழு
ஆ ஹண்டர் கல்விக்குழு
இ) கட்டாய இலவசக் கல்வி
ஈ) மெக்காலே கல்விக்குழு
Answer:
ஈ) மெக்காலே கல்விக்குழு
39.சரியான விடையைத் தெரிவு செய்க. அ. ஆசிரியர் – 1. நிகண்டும் கணக்கும் கற்பிப்போர்
ஆ. கணக்காயர் – 2. நடனமும் நாட்டியமும் கற்பிப்போர்
இ. குரவர் – 3. இலக்கணம், பேரிலக்கியம் கற்பிப்போர்
– 4. சமய, தத்துவ நூல் கற்பிப்போர்
1. அ – 3, ஆ – 4, இ – 2
2. அ – 3, ஆ – 1, இ – 4
3. அ – 1, ஆ – 2, இ – 3 4.
அ – 2, ஆ – 3, இ – 1,
Answer:
2. அ – 3, ஆ – 1, இ – 4
40.கூற்று 1 : மரபுவழிக் கல்விமுறை, போதனா முறையைத் தாண்டி வாவியலைக் கட்டமைப்பதில் உறுதியானதாக விளங்கியது.
கூற்று 2 : காஞ்சி மாநகரத்திற்கு வந்த சீனப்பயணி, ‘யுவான் சுவாங்’, அங்கிருந்த பௌத்தப் பல்கலைக்கழகத்தில் தங்கிச் சிறப்புரை ஆற்றினார். ‘
அ) கூற்று 1 சரி, இரண்டு தவறு
ஆ கூற்று தவறு, இரண்டு சரி
இ) இரு கூற்றுகளும் தவறு
ஈ இரு கூற்றுகளும் சரி
Answer:
ஈ) இரு கூற்றுகளும் சரி
41.சரியான விடையைத் தெரிவு செய்க.
மரபுவழிக் கல்வி முறைகள் ………….
1. குருகுலக் கல்விமுறை
2. திண்ணைப்பள்ளிக் கல்விமுறை
3. உயர்நிலைக் கல்விமுறை
அ) 1 மட்டும் சரி
ஆ) 2 மட்டும் சரி
இ) 2 மட்டும் சரி
ஈ) அனைத்தும் சரி
Answer:
ஈ) அனைத்தும் சரி
42.சரியான விடையைத் தெரிவு செய்க.
கல்வியின் நோக்கம் …………….
அ) கற்றலாம் கற்பித்தலும் வளர்ப்பது
ஆ) கல்விக் கூடங்களைப் பெருக்குவது
இ) நாகரிகத்தையும் பண்பாட்டையும் வளர்ப்பது
ஈ) மாணவர்க்கும் ஆசிரியர்க்கும் உதவுவது
Answer:
இ) நாகரிகத்தையும் பண்பாட்டையும் வளர்ப்பது
43.சரியான விடையைத் தெரிவு செய்க.
இந்திய அரசியலமைப்பு வழங்கும் “அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி” என்பது………….
அ) 5 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு
ஆ) 12 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு
இ) 14 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு
ஈ) 21 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு
Answer:
இ) 14 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு
44.பொருந்தாததை நீக்குக.
நன்னூல், புறநானூறு, திருமந்திரம், நாலடியார், நாடக மகளிர்
Answer:
நாடக மகளிர்
45.பொருத்துக.
1. கல்வி சிறந்த தமிழ்நாடு – அ. சமண முனிவர்
2. பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே – ஆ. திருவள்ளுவர்
3. துணையாய் வருவது தூயநற் கல்வி – இ. தொல்காப்பியர்
4. கல்வி அழகே அழகு – ஈ. பாரதியார்
5. கண்ணுடையர் என்பவர் கற்றோர் – உ.ஔவையார்
6. இளமையில் கல் – ஊ. திருமூலர்
– எ. நெடுஞ்செழியன்
Answer:
1-ஈ, 2-எ, 3-9, 4-அ, 5-ஆ, 6-உ
46.கூற்று 1 : தரங்கம்பாடியில் அச்சுக்கூடத்தை ஆங்கிலேயர் நிறுவினர்.
கூற்று 2 : டச்சுக்காரர்களின் சமயப் பரப்புச் சங்கம், அறப்பள்ளிகளையும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி களையும் நிறுவியதோடு, இந்திய மொழிகளில் தமிழ்மொழியை அச்சேறிய முதல் மொழியாக்கியது.
அ) இரண்டு கூற்றுகளும் சரி
ஆ கூற்று 1 தவறு, இரண்டு சரி
இ) கூற்று 1 சரி, இரண்டு தவறு
ஈ) இரு கூற்றுகளும் தவறு
Answer:
ஆ கூற்று 1 தவறு, இரண்டு சரி
குறுவினாக்கள்
1.சங்ககாலத்தில் தமிழ்மொழியின் நிலைபற்றி இராசமாணிக்கனாரின் கூற்று யாது?
“சங்க காலத்தில் தமிழகத்தில் ஆட்சி மொழியாகவும், பயிற்று மொழியாகவும், இலக்கிய மொழியாகவும் தமிழ் விளங்கியுள்ளது. மேலும், தமிழ் மொழியே சமயம், வாணிகம் முதலான எல்லாத் துறைகளிலும் பொதுமொழியாகவும் விளங்கி வந்தது” என இராசமாணிக்கனார் கூறியுள்ளார்.
2.உ.வே.சா. அவர்கள் பயின்ற கல்விமுறை குறித்துக் குறிப்பு வரைக.
இக்கல்விமுறை, தனிநிலையில் புலவர்களிடத்துக் கற்கும் உயர்நிலைக் கல்விமுறையாகும்.
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களிடம், உ.வே.சா. பாடம் பயின்றமுறை இம்முறையாகும்.
கூடுதல் வினாக்கள்
3.தமிழகத்தின் சங்க காலத்திய கற்பித்தல் பணி பற்றி எழுதுக.
‘4.எவர் ‘ஆசிரியர்’ எனப்பட்டனர்?
பிற்காலத்தில் ஐந்தாக விரித்து உரைக்கப்பட்ட மூவகை இலக்கணத்தையும், அவற்றுக்கு எடுத்துக் காட்டுகளான பேரிலக்கியங்களையும் கற்பித்தோர், ஆசிரியர் எனப்பட்டனர்.
5.‘குரவர்’ என அழைக்கப்பட்டோர் எவர்?
சமயநூலும் தத்துவ நூலும் கற்பித்தோர், ‘குரவர்’ என அழைக்கப்பட்டனர்.
6.கல்வியின் நோக்கம் யாது?
7.கல்வி கற்பிக்கும் இடங்களைத் தமிழ்நூல்கள் எவ்வாறு வழங்கின?
கல்வி கற்பிக்கப்பெற்ற இடங்களைப் ‘பள்ளி’ எனப் பெரிய திருமொழியும்,
‘ஓதும் பள்ளி’ எனத் திவாகர நிகண்டும்,
‘கல்லூரி’ எனச் சீவக சிந்தாமணியும் குறிப்பிடுகின்றன.
8.கற்றலுக்கு உரிய சுவடிகள் எவ்வாறு வழங்கப்பெற்றன?
கற்றலுக்கு உரிய ஏட்டுக் கற்றைகள் ஏடு, சுவடி, பொத்தகம், பனுவல், பால என வழங்கப்பெற்றன.
9.தமிழகத்துப் பட்டி மண்டபம் குறித்து எழுதுக.
‘பட்டி மண்டபம்’ என்பது, சமயக் கருத்துகளை விவாதிக்கும் இடம் என்று மணிமேகலை சுட்டுகிறது.
10.திண்ணைப் பள்ளிகளை யார், எப்படிப் பாராட்டினர்?
சென்னை மாகாணத்தில் இயங்கி வந்த 12,498 சிண்ணைப் பள்ளிகளின் கல்வித்தரத்தைச் சென்னை மாகாண கவர்னர் சர் தாமஸ் மன்றோ ஆராய்ந்தார்.
“திண்ணைப் பள்ளிகளின் கல்வித்தரம், பல ஐரோடவிய நாடுகளின் அப்போதைய கல்வித் தரத்தைக் காட்டிலும் உயர்ந்ததாகவே உள்ளது” எனப் பாராட்டி ஆய்வு அறிக்கை தந்தார்.
11.ஐரோப்பிய டச்சுக்காரர்களின் கல்விப்பணி பாது?
ஐரோப்பியருள் டச்சுக்காரர்களின் (சமயப்பரப்புச் சங்கம், தமிழகத்தின் தரங்கம்பாடியில் அச்சகம் நிறுவியது. மாணவர்களுக்குத் தேவையான தமிழ்ப் புத்தகங்களை அச்சடித்தது. அறப்பள்ளிகளையும் ஆசிரியப் பயிற்சிப் பள்ளிகளையும் நிறுவி, முதன்முதலில் கல்விப் பணியில் ஈடுபட்டது.
12.மாநில மொழிக்கல்வி மறுக்கிட்டது ஏன்?
லார்டு மெக்காலே தலைமையில் 1835இல் அமைக்கப்பட்ட கல்விக்குழு, மேனாட்டுக் கல்வி முறையைப் பின் பறி, ஆங்கிலவழிக் கல்வி கற்பிக்க வலியுறுத்தியது.
அதனால் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிவழிக் கல்வி மறுக்கப்பட்டது.
13.‘திண்ணைப்பள்ளிக் கல்விமுறை’ எங்கு நடைமுறையில் உள்ளது?
திண்ணைப் பள்ளிக் கல்விமுறை, ஸ்காட்லாந்தில் ‘மெட்ராஸ் சிஸ்டம்’, ‘பெல் சிஸ்டம்’, ‘மானிடரி சி என அழைக்கப்பெறுகிறது. அங்கு அங்கீகரிக்கப்பட்டு, இன்றும் நடைமுறையில் உள்ளது.
சிறுவினாக்கள்
1.தமிழ் இலக்கியங்களில் கல்வி குறித்து நீங்கள் அறிந்த செய்திகளை அட்டவணைப்படுத்துக.
தொல்காப்பியம், கல்வி கற்பதற்காகப் பிரிந்து செல்வதை , ‘ஓதற் பிரிவு’ எனக் குறிப்பிடுகிறது.
அத்துடன், “கல்வியின் பொருட்டு ஒருவருக்குப் பெருமிதம் தோன்றும்” எனவும் குறிப்பிடுகிறது.
ஆசிரியர்கள், மாணவர்களுக்கான இலக்கணங்களைத் தொல்காப்பியமும் நன்னூலும் வகுத்துள்ளன.
சங்க இலக்கியங்களும் கல்வியின் சிறப்பைப் பெரிதும் போற்றுகின்றன.
புறநானூறு, “உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே” எனக் குறிப்பிடுகிறது.
“துணையாய் வருவது தூயநற் கல்வியே” எனத் திருமந்திரமும், “கல்வி அழகே அழகு” என நாலடியாரும், “இளமையில் கல்” என ஆத்திசூடியும் கல்வியின் சிறப்புக் குறித்துக் கூறுகின்றன.
சமணப் பள்ளி :
கல்வி, மருந்து, உணவு, அடைக்கலம் என்பன, சமண சமயத்தின் அறக்கொடைகள்.
மலைக்குகைகளில் தங்கிய சமணத் திகம்பரத் துறவிகள், அங்கிருந்தே கல்வியையும் சமயக் கருத்துகளையும் மாணவர்க்குப் போதித்தனர். சமணப் பள்ளிகளில் கல்வி கற்றதனால் கல்விக்கூடம், “பள்ளிக்கூடம்” என அழைக்கப்பட்டது.
பெண்கல்வி :
வந்தவாசிக்கு அருகிலுள்ள ‘வேடல்’ கிராமத்திலிருந்த சமணப்பள்ளியின் பெண்சமண ஆசிரியர், 500 மாணவர்களுக்குக் கல்வி கற்பித்துள்ளார். சமணப்பெண் ஆசிரியர் “பட்டினிக்குரத்தி”, விளாப்பாக்கத்தில் பள்ளி ஒன்றை நிறுவியுள்ளார். இவற்றால் சமணப்பள்ளிகளில், பெண்கள் ஆசிரியர்களாக இருந்துள்ளமை வெளிப்படுகிறது. அத்துடன், பெண்களுக்கு எனத் தனிய கக் கல்வி கற்பிக்கும் சமணப்பள்ளிகள் இருந்தமையும் புலப்படுகிறது.
கூடுதல் வினாக்கள்
3.மரபுவழிக் கல்வி முறைகளில் எவையேனும் இரண்டனை விளக்குக.
மரபுவழிக் கல்விமுறை சார்ந்த குருகுலக் கல்வி முறையில், மாணவர்கள் ஆசிரியர்களை அணுகிப் பல ஆண்டுகள் அவருடன் தங்கி இருந்து, ஆசிரியருக்குத் தேவையான பணிகளைச் செய்து கல்வி கற்றனர்.
குருகுலக் கல்வி முறையானது செய்து கற்றல், வாழ்ந்து கற்றல், எளிமையாக வாழ்தல் என்னும் அடிப்படையில் அமைந்திருந்தது. இம்முறையானது, வாழ்வியலைக் கட்டமைப்பதில் உறுதியானதாக விளங்கியது.
19ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில், சிற்றூர்கள் தோறும் பெருமளவில் திண்ணைப் பள்ளிகள் தோன்றின. இவற்றைத் ‘தெற்றிப் பள்ளிகள்’ எனி அழைத்தனர். இதன் ஆசிரியர் ‘கணக்காயர்’ என அழைக்கப்பட்டார். இப்பள்ளிகள் ஒரே மாதிரியாக வரன்முறை செய்யப்படவில்லை. ஆங்கிலேயர்கள் திண்ணைப் பள்ளிகள், பாடசாலைகள், மத்தாபுகள் போன்ற கல்வி அமைப்புகளை ‘நாட்டுக்கல்வி’ என அழைத்தனர்.
இப்பள்ளிகளுக்கான பாடத்திட்டம், உள்ளிநேரம், பயிற்றுவிக்கும்முறை ஆகியன ஆசிரியர்களின் விருப்பப்படி அமைந்திருந்தன. இவை பொதுமக்களின் கல்வித் தேவையை நிறைவு செய்தன.
சென்னை மாகாணத்தில் 24 திண்ணைப் பள்ளிகள் இருந்ததாகவும், அவற்றின் கல்வித்தரம் ஐரோப்பிய நாடுகளின் கல்வித்தரத்தைவிட உயர்ந்திருந்ததாகவும் தாமஸ் மன்றோ நடத்திய ஆய்வு உறுதி செய்துள்ளது.
4.‘குருகுலக் கல்விமுறை குறித்துப் பெறப்படும் செய்தி யாது?
‘குருகுலக் கல்வி முறையில், மாணவர்கள் இளம் வயது முதலே தகுதிக்கும் திறமைக்கும் ஏற்பக்
கல்வி சற்றனர். இம்முறையில் ஆசிரியரை அணுகி, அவருடன் பல ஆண்டுகள் தங்கி, அவருக்குத் தேவைப்பட்ட பணிகளைச் செய்து, மாணவர்கள் கல்வி கற்றனர்.
செய்து கற்றல், வாழ்ந்து கற்றல், எளிமையாக வாழ்தல் என்னும் அடிப்படையில், குருகுலக் பால்விமுறை அமைந்திருந்தது. போதனா முறையைத் தாண்டி, வாழ்வியலைக் கட்டமைப்பதில் தெருகுலக் கல்விமுறை, உறுதியாக விளங்கியது.
6.தமிழ் இலக்கியங்களில் கல்வி குறித்து நீங்கள் அறிந்த செய்திகளை அட்டவணைப்படுத்துக.
பண்டைத் தமிழ் இலக்கணமாகிய தொல்காப்பியம், எண்வகை மெய்ப்பாடுகள் பற்றிக் கூறும்போது, “கல்வியின் பொருட்டு ஒருவருக்குப் பெருமிதம்’ தோன்றும்” எனக் குறிப்பிடுகிறது.
புறநானூறு – “உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே”
திருமந்திரம் – “துணையாய் வருவது தூயநற் கல்வியே”
நாலடியார் – “கல்வி அழகே அழகு”
ஆத்திசூடி – “இளமையில் கல்”
நெடுவினா
1.பௌத்தக் கல்வி, சமணக் கல்வி, மரபுவழிக் கல்வி முறைகளால் தமிழகக் கல்விமுறையில் ஏற்பட்ட பல்வேறு மாறுதல்களை விவரிக்க.
தலையாய அறம் :
கல்வி, மருத்துவம், உணவு, அடைக்கலம் என்பன, சமண சமயத்தின் தலையாய அறங்கள். சங்க காலத்திலும் சங்கம் மருவிய காலத்திலும் சமண, பௌத்தப் பள்ளிகள் இருந்துள்ளன.
சமண பௌத்தப் பள்ளிகள் :
சமண, பௌத்தத் துறவிகள் தங்கிய இடம், ‘பள்ளி’ எனப்பட்டது. அங்கு, மாணவர்கள் சென்று கற்றதால், கல்வி கற்பிக்கும் இடம், பிற்காலத்தில் பள்ளிக்கூடம்’ எனப்பட்டது.
சமணப் பள்ளிகளில் பயின்ற மாணவர் சிலர், சமணப்படுக்கைகள் அமைத்தமை குறிக்கத் திருச்சி மலைக் கோட்டை, கழுகுமலைக் கல்வெட்டுகள் கூறுகின்றன.
கல்வி கற்பித்தல் :
சமண சமயத் திகம்பரத் துறவிகள், தாங்கள் தங்கி இருந்த மலைக்குகைப் பள்ளிகளில், மாணவர்களுக்குக் கல்வியையும் சமயக் கருத்துகளையும் போதித்துள்ளனர்
‘பள்ளி’ என்பது சமண, பௌத்தச் சமயங்களின் கொடையாகும். வடல்’ என்னும் ஊரில் பெண் சமணத் துறவி, 500 மாணவர்களுக்குக் கல்வி கற்பித்துள்ளார். விளாப்பாக்கத்தில், பட்டினிக்குரத்தி என்னும் சமணப் பெண் ஆசிரியர், பள்ளியை நிறுவிக் கற்பித்துள்ளார்.
மரபுவழிக் கல்வி :
மரபுவழிக் கல்வியில், ‘குருகுலக் கல்வி’ முறையில் மாணவர்கள் குருவோடு தங்கி, அவருக்குரிய பணிகளைச் செய்து கல்வி கற்றனர். செய்து கற்றல் போழந்து கற்றல், எளிமையாக வாழ்தல் ஆகிய அடிப்படையில் இக்கல்விமுறை அமைந்தது. போதனை முறையைத் தாண்டி, வாழ்வியலைக் கட்டமைப்பதில் குருகுலக் கல்வி முறை, உறுதியாக விளங்கியது
ஆங்கிலேயர் போற்றிய திண்ணைப்பள்ளி : 19ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியல் கராமங்களில் திண்ணைப் பள்ளிகள் என்னும் தெற்றிப்பள்ளிகள் மரபுவழிக் கல்வி என்னும் அமைப்புக் கல்வியைக் கற்பித்தன. மரபுவழிக் கல்விக் கூடங்களான திண்ணைப் பள்ளிகள், பாடசாலைகள், மக்தாகள், மதரஸாக்கள் போன்றவற்றை, ஆங்கிலேயர் ‘நாட்டுக்கல்வி’ அமைப்பு என அழைத்தனர். அப்பள்ளிகளில் பள்ளிநேரம், பயிற்றுமுறை எல்லாம், ஆசிரியர் விருப்பப்படி அமைந்திருந்தன.
விடைக்கேற்ற வினா அமைக்க.
1. கல்வியின் நோக்கம், நாகரிகத்தையும் பண்பாட்டையும் வளர்ப்பதாகும்.
வினா : கல்வியின் நோக்கம் எவற்றை வளர்ப்பதாகும்?
2. காலந்தோறும் மக்களின் தேவைகளுக்கேற்பக் கற்றலும் கற்பித்தலும், பல்வேறு பரிமாணங்களைப் பெற்று வளர்ந்துள்ளன.
வினா : காலந்தோறும் கற்றலும் கற்பித்தலும், எவற்றுக்கேற்ப எவ்வாறு வளர்ந்துள்ளன ?
3. சங்க காலத்தவர், குடும்பம், அரசு, சமூகம் என்ற மூன்று நிலைகளிலும் சிறப்பினைப் பெறக் கல்வி தேவை என்பதை உணர்ந்து கற்றதும்.’
வினா : சங்க காலத்தவர், எந்த மூன்று நிலைகளிலும் எதனைப் பெற, எது தேவை என்பதை உணர்ந்து கற்றனர்?
4. சங்கம் என்ற அமைப்புப் பலர் விவாதிக்கும் பாங்குடையது.
வினா : பலர்கூடி விவாதிகளும் பாங்குடையது எவ்வமைப்பு?
5. கல்வி, மருந்து, உண அடைக்கலம் ஆகிய நான்கு கொள்கைகளும் சமண சமயத்தின் தலையாய அறங்களாகும்.
வினா : எந்நான்கு கொள்கைகள், சமண சமயத்தின் தலையாய அறங்களாகும்?
6. ‘ரெவரெண்ட் பெல்’ என்ற ஸ்காட்லாந்து பாதிரியார், தமிழகத் திண்ணைப் பள்ளிக் கல்வி முறையை கண்டு வியந்தார்.
வினர் : ரெவரெண்ட்’ பெல் என்ற ஸ்காட்லாந்து பாதிரியார், எந்தக் கல்வி முறையைக் கண்டு பயந்தார்?
7. செய்து கற்றல், வாழ்ந்து கற்றல், எளிமையாக வாழ்தல் என்ற அடிப்படையில், குருகுலக் கல்விமுறை அமைந்திருந்தது.
வினா : குருகுலக் கல்விமுறை, எவ்வெவ் வடிப்படையில் அமைந்திருந்தது?
8. திண்ணைப் பள்ளி ஆசிரியர், கணக்காயர் என்று அழைக்கப்பட்டனர்.
வினா : திண்ணைப் பள்ளி ஆசிரியர், எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
9. ஹண்டர் கல்விக்குழு, சீருடைமுறை, தாய்மொழிக் கல்வி போன்றவற்றைக் கட்டாயமாக்கியது.
வினா : சீருடைமுறை, தாய்மொழிக் கல்வி போன்றவற்றைக் கட்டாயமாக்கியது எக்குழு?