11th Tamil Guide Unit 2.7
இயல் 2.7 புணர்ச்சிவிதிகள்
Book Back | Additional Question and Answers
11th Tamil Guide Unit 2 Book Back and Additional Question – Answers இயல் 2.7 புணர்ச்சிவிதிகள்
பலவுள் தெரிக
1.‘பெருங்கலம்’ என்னும் சொல்லிற்குரிய புணர்ச்சி விதிகளைத் தேர்வு செய்க.
அ) ஈறுபோதல், தன்னொற்றிரட்டல்
ஆ) ஈறுபோதல், இனமிகல்
இ) ஈறுபோதல், ஆதிநீடல்
ஈ) ஈறுபோதல், இனையவும்
Answer:
ஆ) ஈறுபோதல், இனமிகல்
2.உடம்படு மெய் (ய், வ்) நிலைமொழி ஈற்றில் …………. வருமொழி முதலில் ………… வந்து புணரும்போது தோன்றும்.
ஆ) உயிர் + மெய்
இ) உயிர் + உயிர்
ஈ) மெய் + உயிர்
Answer:
இ) உயிர் + உயிர்
3.‘மெய்யோடு ‘மெய்’ புணர்வதற்கு எடுத்துக்காட்டு……………..
ஆ) நிலம் + கடலை
இ) காட்சி + அழகு
ஈ) தீ + அணை
Answer:
ஆ) நிலம் + கடலை
4.‘மெய்’யோடு ‘உயிர்’ புணர்வதற்கு எடுத்துக்காட்டு …………
ஆ) நிலம் + கடலை
இ) காட்சி + அழகு
ஈ) ம் + இல்லை
Answer:
ஈ) நாய் + இல்லை
5.‘உயி’ரோடு ‘உயிர்’ புணர்வதற்கு எடுத்துக்காட்டு……………..
ஆ) பல் + பொடி
இ) மா + இலை
ஈ) கால் + அடி
Answer:
இ) மா + இலை
6.‘உயி’ரோடு ‘மெய்’ புணர்வதற்கு எடுத்துக்காட்டு………………..
ஆ) மலை + நிலம்
இ) கன் – தாழை
ஈ) மணி + அழகு
Answer:
ஆ) மலை + நிலம்
7.‘கலை + அறிவு’ புணரும் புணர்ச்சிவகை …………..
ஆ) முற்றியலுகரப் புணர்ச்சி
இ) உடம்படுமெய்ப் புணர்ச்சி
ஈ) பண்புப்பெயர்ப் புணர்ச்சி
Answer:
இ) உடம்படுமெய்ப் புணர்ச்சி
8.கீழ்க்கண்ட தொடர்களில் குற்றியலுகரப் புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு ……………..
ஆ) வரவறிந்து
இ) மாசற்றார்
ஈ) பச்சிலை
Answer:
இ) மாசற்றார்
9.முற்றியலுகரப் புணர்ச்சிவ கடிக்கு எடுத்துக்காட்டு………………
ஆ) வெற்றிலை
இ) கதவில்லை
ஈ) பெருநகரம்
Answer:
இ) கதமலை
10.‘பள்ளி + தோழன் என்பது, …………………. புணர்வதற்கு எடுத்துக்காட்டு.
ஆ) மெய்யோடு உயிர்
இ) உயிரோடு உயிர்
ஈ) உயிரோடு மெய்
Answer:
ஈ) உயிரோடு மெய்
11.கீழ்காணும் கூற்றுகளை ஆராய்க.
பூப்பெயர்முன் இனமென்மையும் தோன்றும்.
ஆ) நீர் + இழிவு – நீரிழிவு
மரம் + ஆகும் – மரமாகும்
உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே.
இ) மெய் + ஈறு – மெய்யீறு
தனிக்குறில்முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்.
1. அ மட்டும் சரி
2. ஆ மட்டும் சரி
3. இ மட்டும் சரி
4. அனைத்தும் சரி
Answer:
4. அனைத்தும் சரி
சரியான விடையைத் தேர்க.
1.உடனிலை மெய்ம்மயக்கத்திற்கு மட்டுமே உரிய மெய்யெழுத்துகள் …………….
அ) க், ச், ண், ந்
ஆ) த், ப், ட், ற்
இ) க், ச், த், ப்
ஈ) க், த், ட், ந்
Answer:
இ) க், ச், த், ப்
2.வேற்றுநிலை மெய்ம்மாக்கத்திற்கு மட்டுமே உரிய மெய்யெழுத்துகள் ……………..
ஆ) ஞ், ழ்
இ) ர், ழ்
ஈ) க், ர்
Answer:
இடா, ழ்
3.இரு மெய்ம்மயக்கம் (வேற்றுநிலை, உடனிலை) பெறும் எழுத்துகள் ……………….
ஆ) த், ப், ண், ந்
இ) ர், ழ், ங், ஞ்
ஈ) ட், ற், ய், ன்
Answer:
ஈ) ட், ற், ய், ன்
4.ரொற்று மெய்ம்மயக்கமாய் வரும் எழுத்துகள் ………………
ஆ) ய், ர், ழ்
இ) த், ப், ர்
ஈ) ங், ஞ், ழ்
Answer:
ஆ) ய், ர், ழ்
5.பிறமொழிச் சொற்களைக் கண்டறிய உதவுவது…….
ஆ) மொழி முதலில் வரும் எழுத்துகளை அறிவது
இ) மொழி இடையில் வரும் எழுத்துகளை அறிவது
ஈ) மொழி இறுதியில் வரும் எழுத்துகளை அறிவது
Answer:
இ) மொழி இடையில் வரும் எழுத்துகளை அறிவது
6.மெய்ம்மயக்கம் எனப்படுவது ………………
ஆ) மொழி இறுதியில் வரும் மெய்யெழுத்துகளில் இடம்பெறும்
இ) சொல்லின் கடைசியில் வரும் மெய்யெழுத்துகளில் இடம்பெறும்
ஈ) மொழிக்கு இடையில் வரும் மெய்யெழுத்துகளில் இடம்பெறும்
Answer:
ஈ) மொழிக்கு இடையில் வரும் மெய்யெழுத்துகளில் இடம்பெறும்
7.உடனிலை மெய்ம்மயக்கச் சொல் தொகுதியைக் கண்டறிக.
ஆ) மக்கள், பயிற்சி, மன்னன், கொள்கை
இ) பக்கம், எச்சம், சாத்தன், அப்பம்
ஈ) பக்கம், எச்சம், மஞ்சள், மங்கை
Answer:
இ) பக்கம், எச்சம், சாத்தன், அப்பம்.
8.சொற்களின் இடையில் ஒரே மெய்யெழுத்து அடுத்தடுத்து வருவது…………………
ஆ) வேற்றுநிலை மெய்ம்மயக்கம்
இ) உடனிலை மெய்ம்மயக்கம்
ஈ) ஈரொற்று மெய்ம்மயக்கம்
Answer:
இ) உடனிலை மெய்ம்மயக்கம்
9.சொற்களின் இடையில் வெவ்வேறு மெய்யெழுத்துகள் தொடர்ந்து வருவதும் ………………..
ஆ) மெய்ம்மயக்கம்
இ) வேற்றுநிலை மெய்ம்மயக்கம்
ஈ) உடனிலை பொட்மயக்கம்
Answer:
இ) வேற்றுநிலை மெய்ம்மயக்கம்
10.ஈரொற்று மெய்ம்மயக்கம் என்பது………………..
ஆ) சொற்களின் இடையில் வெவ்வேறு மெய்யெழுத்துகள் தொடர்ந்து வருவது
இ) மெய்யெழுத்துகள் உடனிலையாகவும் சோற்று நிலையாகவும் வருவது
ஈ) சொற்களின் இடையிர் ய், ர், ழ் மெய் கலைத் தொடர்ந்து ஈரொற்றாய் வருவது
Answer:
ஈ) சொற்களின் இடையிர் ய் ர், ழ மெய்களைத் தொடர்ந்து ஈரொற்றாய் வருவது
கூடுதல் வினாக்கள்
1.புணர்ச்சி என்பது என்ன சான்று தருக.
இருவேறு சொற்களான, நிலைமொழியும் வருமொழியும் இணையும் சேர்க்கை புணர்ச்சி எனப்படும்.
எ – கா : வாழை + மரம் = வாழைமரம் (இயல்பு புணர்ச்சி)
பாழை + பழம் = வாழைப்பழம் (தோன்றல் – விகாரப் புணர்ச்சி)
பால் + குடம் = பாற்குடம் (திரிதல் – விகாரப் புணர்ச்சி)
மரம் + வேர் = மரவேர் (கெடுதல் – விகாரப் புணர்ச்சி)
2.இணர்ச்சி விதிகளை விளக்குக.
3.புணர்ச்சி விதிகளை அறிவதன் பயன்களைக் கூறுக.
தமிழ் மொழியைப் பிழையின்றிக் கையாளவும், பாடல் அடிகளைப் பொருள் உணர்வுக்கு ஏற்றவகையில் பிரித்து அறியவும், மொழியின் அமைப்பைப் புரிந்து கொள்ளவும் புணர்ச்சி விதிகள் பெரிதும் பயன்படும்.
4.உடம்படு மெய்யெழுத்துகள் எவை?
5.உடம்படு மெய் எங்குத் தோன்றும்? ஏன்?
எ – கா : கலை + அழகு = கலை + ய் + அழகு = கலையழகு (யகர உடம்படுமெய்)
பூ + அழகு = பூ + வ் + அழகு = பூவழகு (வகர உடம்படுமெய்)
6.யகர (ய்) உடம்படுமெய் எங்குத் தோன்றும்? எடுத்துகாட்டுத் தருக.
எ – கா : காட்சி + அழகு = காட்சி + ய் + அழகு = காட்சியழகு
தீ + அணை = தீ + ய் + அணை = தீயணை
கலை + அறிவு = கலை + ய் + அறிவு = கலையறிவு
7.வகர (வ்) உடம்படுமெய் எங்குத் தோன்றும்? எடுத்துக்காட்டுத் தருக.
எ – கா : மா + இலை = மா + வ் + இலை = மாவிலை
கோ + இல் = கோ + வ் + ல் = கோவில்
பூ + அழகு = பூ + வ் + அழகு = பூவழகு
8.‘ஏ முன் இவ்விருமையும்’ – விளக்கி உதாரணம் தருக.
எ – கா : சே + இழை = சே + ய் + இழை – சேயிழை
சே + அடி = சே + வ் + அடி = சேவடி
9.குற்றியலுகரப் புணர்ச்சியாவது யாது?
எ – கா : மாசு + அற்றார் மாசற்றார், மாசு + யாது = மாசியாது
10.குற்றியலுகரத்துடன் உயிர் எவ்வாறு புணரும்?
மாசு + அற்றார் = ‘மாச் + அற்றார்’. பின்னர் நிலைமொழி ஈற்று மெய்யுடன் வருமொழிமுதல் உயிர் சேர்ந்து மாசார்’ எனப் புணரும். (உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே).
11.‘வரவறிந்தான்’ பிரித்துப் புணர்ச்சிவிதி எழுதுக.
(விதி : முற்றும் அற்று ஒரோவழி). பின்னர், நிலைமொழி ஈற்று (வரவ்) மெய்யுடன் வருமொழி முதல் உயிர் சேர்ந்து (விதி : உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே) ‘வரவறிந்தான்’ எனப் புணர்ந்தது.
12.காடு + மரம் – புணர்ச்சி விதி கூறுக.
விதி : நெடிலோடு உயிர்த்தொடர்க் குற்றுகரங்களுள் ட ற ஒற்று இரட்டும் வேற்றுமை மிகவே.
13.வீடு + தோட்டம் = புணர்ச்சி விதி கூறுக.
விதி : நெடிலோடு உயிர்த்தொடர்க் குற்றுகரங்களுள் ட ற ஒற்று இரட்டும் வேற்றுமை மிகவே.
14.ஆற்றுநீர் – பிரித்துப் புணர்ச்சிவிதி கூறுக.
நீர் என்னும் வருமொழியுடன், ‘ஆறு’ என்னும் நெடில்தொடர்க் குற்றியலுகர நிரைமொழி புணரும்போது, (அச்சொல் இடையே) ‘ற்’ என்னும் மெய் (ஒற்று) இரட்டித்து, ‘ஆற்று+ நீர் = ஆற்றுநீர்’ எனப் புணர்ந்தது.
விதி : நெடிலோடு உயிர்த்தொடர்க் குற்றுகரங்களுள், ட, ற ஒற்று இரட்டும் வேற்றுமை மிகவே.
15.‘வயிற்றுப்பசி’ – பிரித்துப் புணர்ச்சிவிதி கூறுக.
விதி : நெடிலோடு உயிர்த்தொடர்க் குற்றுகரங்களுள் ட ற ஒற்று இரட்டும் வேற்றுமை மிகவே.
16.‘பள்ளித் தோழன்’ – பிரித்துப் புணர்ச்சிவிதி கூறுக.
17.‘நிலத்தலைவர்’ – பிரித்துப் புணர்ச்சிவிதி எழுதுது
விதி : இயல்பினும் விதியினும் என்ற உயிர்முன் வலிமிகும்.
18.திரைப்படம் – பிரித்துப் புணர்ச்சி விதி எழுதுக.
‘இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்’ என்னும் விதிப்படி, ‘திரைப்படம்’ எனப் புணர்ந்தது.
19.மரக்கலம் – பிரித்துப் புணர்ச்சி விதி எழுதுக.
‘மவ்வி ஒற்று அழிந்து உயிர் ஈறு ஒப்பவும் ஆகும்’ என்னும் விதிப்படி ‘மர + கலம்’.
இயினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்’ விதிப்படி ‘மரக்கலம்’ எனப் புணர்ந்தது.
20.பூப்பெயர்ப் புணர்ச்சி விளக்குக.
(பூ + செடி – பூச்செடி); அன்றி, வருமொழி வல்லின மெய்க்கு இனமாக மெல்லின மெய் மிகுந்தும் புணரும். (பூஞ் + செடி).
விதி : பூப்பெயர்முன் இன மென்மையும் தோன்றும்.
எ – கா : 1. பூ + கொடி = பூக்கொடி / பூங்கொடி
2. பூ + சோலை = பூச்சோலை / பூஞ்சோலை
3. பூ + தொட்டி = பூத்தொட்டி / பூந்தொட்டி
4. பூ + பந்தல் = பூப்பந்தல் / பூம்பந்தல்
21.‘மண்மகள்’ பிரித்துப் புணர்ச்சிவிதி கூறுக.
Answer:
‘மண்ம கள் = மண் + மகள்’.
‘மண்’ என்னும் நிலைமொழி ஈற்றில் மெய் (ன்) நின்றது; ‘மகள்’ என்னும் வருமொழி முதலில் (ம் + அ = ம) மெய்வந்தது. எனவே, ‘மண்மகள்’ என இயல்பாகப் புணர்ந்தது.
22.‘வானொலி’ – பிரித்துப் புணர்ச்சிவிதி கூறுக.
Answer:
வானொலி = வான் + ஒலி
‘வான்’ என்னும் நிலைமொழி ஈற்றில் நின்ற மெய்யுடன் (ன்) (ஒ) ‘ஒலி ‘ என்னும் வருமொழி முதலில் நின்ற உயிர் இயல்பாகப் புணர்ந்து, (ன் + ஒ = னொ) ‘வானொலி’ என்றானது.
விதி : உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
Answer:
கல்லதர் – கல் + அதர்
‘கல்’ என்னும் சொல்லில், தனிக்குறிலை அடுத்த ஒற்று, வருமொழி முதலில் உயிர் வந்ததனால் இரட்டித்தது. கல்ல் + அதர். பின் நிலைமொழி ஈற்று மெய்யுடன் வருமொழி முதல் உயாம் புணர்ந்து, (ல் + அ = ல) ‘கல்லதர்’ என்றானது.
விதி : தனிக்குறில் முன்ஒற்று உயிர்வரின் இரட்டும் / உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே.
24.பாடவேளை – பிரித்துப் புணர்ச்சிவிதி கூறுக.
Answer:
பாடவேளை – பாடம் + வேளை
‘பாடம்’ என்னும் நிலைமொழி ஈற்று மகரமெய் (ம்) கெட்டு, ‘வேல்கள) என்னும் வருமொழியுடன் ‘பாடவேளை’ எனப் புணர்ந்தது.
25.‘பழத்தோல்’ – பிரித்துப் புணர்ச்சிவிதி கூறுக.
Answer:
பழத்தோல் – பழம் + தோல்
‘பழம்’ என்னும் நிலைமொழி ஈற்று மகரமெய் (ம்) கெட்டு, ‘பழ’ என உயிர் ஈறு ஆகி, ‘தோல்’ என்னும் வருமொழி முதலின் வல்லினம் (த்) மிக்கப் புணர்ந்து, ‘பழத்தோல்’ என்றானது.
Answer:
காலங் கடந்தவன் – காலம் + கடந்தவன்\
‘காலம்’ என்னும் நிலைமொழி ஈற்று மகாகாய் (ம்) கெட்டு, ‘கால’ என உயிர் ஈறாகி, ‘கடந்தான்’ என்னும் வருமொழி முதல் வல்லின மெய்க்கு (க்) இனமான மெல்லின மெய் (ங்) பெற்றுப் புணர்ந்து, ‘காலங் கடந்தவன்’ என்றானது.
விதி : மவ்ஈறு ஒற்று அழிந்து உயிராறு ஒப்பவும்
வன்மைக்கு இனித் திரிபவும் ஆகும்.
27.‘பெருவழி’ – பிரித்துப் புணர்ச்சி விதி தருக.
Answer:
பெருவழி – பெருமை + வழி
‘பெருமை’ என்னும் பண்புச் சொல்லின் நிலைமொழி ‘மை’ விகுதி ‘ஈறுபோதல்’ என்னும் விதிப்படி கெட்டு, பெருழி’ எனப் புணர்ந்தது.
கரியன் – கருமை + அன்.
ஈறுபோதல் – கரு + அன்
இடை உகரம் இய்யாதல் – கரி + அன்
உயிர்வரின் …… இ, ஈ, ஐ வழி யவ்வும் – கரிய் + அன்
உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே – கரியன்.
Answer:
மூதூர் – முதுமை + ஊர்
ஈறுபோதல் – முது + ஊர்; ஆதிநீடல் – மூது + ஊர்
உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும் – மூத் + ஊர்;
உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே – மூதூர்.
30.‘பைந்தமிழ்’ – பிரித்துப் புணர்ச்சி விதி தருக.
Answer:
பைந்தமிழ் – பசுமை + தமிழ்
“ஈறுபோதல்” (பசு + தமிழ் )
“அடி அகரம் ஐ ஆதல்” (பைசு + தமிழ் )
“இனையவும் பண்பிற்கு இயல்பே” (பை + தமிழ்)
“இனம் மிகல்” (பைந் +தமிழ் – ‘பைந்தமிழ்’ எனப் புணர்ந்தது.)
31.‘வெற்றிலை’ – பிரித்துப் புணர்ச்சிவிதி தருக.
Answer:
வெற்றிலை – வெறுமை + இலை
“ஈறுபோதல்” (வெறு + இலை)
“தன் ஒற்று இரட்டல்” (வெற்று + இலை)
“உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” (வெற்ற் + இலை)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (வெற்றிலை.)
நல்லாடை – நன்மை + ஆடை
“ஈறுபோதல்” (நன் + ஆடை
“முன்நின்ற மெய் திரிதல்” (நல் + ஆடை)
“தனிக்குறில் முன்ஒற்று உயிர்வரின் இரட்டும்” (நல்ல் + ஆடை )
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (நல்லாடை)
33.தன்னொற்றிரட்டல் – விதியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
Answer:
வெற்றிலை – வெறுமை + இலை
“ஈறுபோதல்” (வெறு + இலை); “தன்னொற்றிடல் (வெற்று + இலை)
“உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்” வெற்ற் + இலை)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே (வெற்றிலை )
சிறுவினா (கூடுதல் வினாக்கள்)
1.சான்று தந்து விளக்குக : அ. குற்றியலுகரப் புணர்ச்சி, ஆ. முற்றியலுகரப் புணர்ச்சி.
Answer:
அ. குற்றியலுகரப் புணர்ச்சி
நிலைமொழி ஈற்றில் குற்றியலுகரம் இருந்து, வருமொழி முதலில் உயிரெழுத்து வந்தால் – நிலைமொழி ஈற்று உகரம் நீங்கி, மெய் நிற்கும்; அந்த மெய்யுடன் வருமொழிமுதல் உயிர் சேர்ந்து புணரும்.
எ-கா: மான அற்றார் – மாசற்றார். “உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்” (மாச் + அற்றார்) “உடன் மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (மாசற்றார்). ரிலலமொழி ஈற்றில் குற்றியலுகரம் இருந்து, வருமொழி முதலில் யகரம் வந்தால், உகரம் இக மாகத் திரியும்.
எ – கா : மாசு + யாது – மாசி + யாது – மாசியாது (“உக்குறள் யவ்வரின் இய்யாம்’).
ஆ. ‘முற்றியலுகரப் புணர்ச்சி :
நிலைமொழி ஈற்றில் முற்றியலுகரம் இருந்து, வருமொழி முதலில் உயிரெழுத்து வந்தால், நிலைமொழி ஈற்று உகரம் நீங்கி, மெய் நிற்கும்; அந்த மெய்யுடன் வருமொழி முதல் உயிர் சேர்ந்து புணரும்.
எ – கா : வரவு + அறிந்தான் – வரவறிந்தான்.
“உயிர்வரின்…..முற்றும் அற்று” (வரவ் + அறிந்தான்)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (வரவறிந்தான்) (நிலைமொழி ஈற்றில் முற்றியலுகரம் இருந்து, வருமொழி முதலில் யகரம் வந்தால், உகரம் இகரமாகத் திரியும். எ- கா : வரவு + யாது – வரவியாது (“யவ்வரின் முற்றும் அற்று” – அதாவது, முற்றியலுகரமும் யவ்வரின் இய்யாகும்.)
1.குற்றியலுகரப் புணர்ச்சியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
Answer:
i. நிலைமொழி ஈற்றில் குற்றியலுகரம் இருந்து, வருமொழி முதலில் உயிர் எழுத்து வந்தால் – நிலை
மொழி ஈற்று உகரம் நீங்கி, மெய் நிற்கும். அந்த மெய்யுடன் வருமொழி முதல் உயிர் சேர்ந்து புணரும்.
எ – கா : மாசு + அற்றார் – மாசற்றார்
“உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்” (மாச் + அற்றார்)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (மாசற்றார்)
ii. நிலைமொழி ஈற்றில் குற்றியலுகரம் இருந்து, வருமொழி முதலில் யகரம் வந்தால், உகரம் இராமாகத்
திரியும்.
எ – கா : மாசு + யாது – மாசியாது. “உக்குறள் யவ்வரின் இய்யாம்” (மாசி + யாது)
2.i. கருவிழி, ii. பாசிலை, iii. சிறியன், iv. பெருங்கல் ஆகிய சொற்களைப் பிரித்துப் புணர்ச்சிவிதிகள் தருக.
Answer:
i. கருவிழி – கருமை + விழி – “ஈறுபோதல்” (கரு + விழி)
ii. பாசிலை – பசுமை + இலை
“ஈறு போதல்” (பசு + இலை), “ஆதிநீடல்” (பாசு + இலை), “உயிர்கரின் உக்குறள் மெய்விட் டோடும் (பாச் + இலை), “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இய பே’ (பாசிலை)
iii. சிறியன் – சிறுமை + அன்
“ஈறுபோதல்” (சிறு + அன்), “இடை உகரம் இய்யாதல்” (சிறி + அன்), “உயிர்வரின் …… இ ஈ ஐ வழி யவ்வும் உடம்படுமெய் என்றாகும்” (சிறிய் + அனா), “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (சிறியன்)
iv. பெருங்கல் – பெருமை + கல் – “ஈறுபோதல் (பெரு + கல்), “இனமிகல்” (பெருங்கல்)
3.புணர்ச்சிவிதி தந்து விளக்குக:
அ. புலனறிவு, ஆ. வில்லொடிந்தது, இ. வழியில்லை , ஈ. திரைப்படம், உ . ஞாயிற்றுச் செலவு.
Answer:
அ) புலனறிவு – புலன் + அறிவு
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (நிலைமொழி ஈற்று மெய்யுடன் வருமொழிமுதல் உயிர் சேர்ந்தது)
ஆ) வில்லொடிந்தது – வில் + ஓடிந்தது
i. “தனிக்குறில் முன் ஒத்து உயிர்வரின் இரட்டும்”
(நிலைமொழியாக அமைத்த சொல், தனிக்குறிலை அடுத்த மெய்யாக இருந்தால், அந்த மெய் இரட்டிக்கும்) (வில் + ஒடிந்தது).
ii. “உடல்மேல் உயவேந்து ஒன்றுவது இயல்பே”
நிலைமொழி ஈற்று மெய்யுடன் வருமொழிமுதல் உயிர் சேரும். (வில்லொடிந்தது)
இ) வழியில்லை வழி + இல்லை
i. “உயிர்வரின்…. இ ஈ ஐ வழி யவ்வும் உடம்படுமெய் என்றாகும்
(இஐ என்பவற்றுள் ஒன்றை இறுதியில் பெற்ற சொல், வருமொழிமுதல் உயிருடன் புணரும்போது, இய்’ என்னும் உடம்படுமெய் பெறும்) (வழி + ய் + இல்லை )
ii) உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (நிலைமொழி ஈற்று மெய்யுடன் வருமொழிமுதல் உயிர் சேரும் – வழியில்லை )
ஈ) திரைப்படம் – திரை + படம்
“இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்”
(நிலைமொழி இறுதியில் உயிர் எழுத்து இயல்பாகவோ, விதிப்படியோ வந்தால், வருமொழிமுதலில் வரும் க், ச், த், ப் மிகுந்து புணரும்) (திரை + ப் + படம் – திரைப்படம்)
உ) ஞாயிற்றுச்செலவு – ஞாயிறு + செலவு → ஞாயிற்று + செலவு – ஞாயிற்றுச் = செலவு
i. “நெடிலோடு உயிர்த்தொடர்க் குற்றுகரங்களுள் டற ஒற்று இரட்டும் வேற்றுமை மிகவே” (நெடில் தொடர், உயிர்த்தொடர்க் குற்றியலுகரச் சொற்கள் வருமொழியோடு புணரும்போது, ட், ற் என்னும் மெய்கள் இரட்டிக்கும்) (ஞாயிறு – ஞாயிற்று + செலவு)
ii. “இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்”
(இயல்பாகவும் விதிப்படியும் நின்ற உயிர் ஈற்றின்முன் வந்த க், ச், த், ப் மிகும்) (ஞாயிற்றுச் + செலவு)
4.விதி வேறுபாடறிந்து விளக்குக.
i. தன்னொற்றிரட்டல் – தனிக்குறில் முன்ஒற்று உயிர்வரின் இரட்டும்.
ii. இனமிகல் – வன்மைக்கு இனமாத் திரிபவும் ஆகும்.
Answer:
i. தன்னொற்றிரட்டல் – தனிக்குறில் முன்ஒற்று உயிர்வரின் இரட்டும்:
தன்னொற்றிரட்டல் : பண்புப்பெயர்ப் புணர்ச்சியில், “ஈறுபோதல்” என்னும் விதிப்படி ‘மை’ விகுதி போனபின், நிலைமொழி இறுதி ‘உகரமாக’ இருந்து வருமொழி முதலில் உயிர் எழுத்து வந்தால், “தன்னொற்று இரட்டல்” என்னும் விதி இடம்பெற வேண்டும்.
எ – கா : வெற்றிலை – வெறுமை + இலை
“ஈறுபோதல்” (வெறு + இலை), “தன்னொற்று இரட்டல்” (வெற்று + இலை)
(தனிக்குறில் முன்ஒற்று உயிர்வரின் இரட்டும் : தனிக்குறிலைச் சார்ந்த மெய்எழுத்தைப் பெற்ற நலைமொழி, உயிரை முதலாகப் பெற்ற வருமொழியுடன் சேரும்போது, நிலைமொழி ஈற்று மெய், இரட்டத்துப் புணரும். அப்போது, “தனிக்குறில் முன்ஒற்று உயிர்வரின் இரட்டும்” என்னும் விதி இடம்பெறும்.
எ – கா : கல் + எறிந்தான் – கல்ல் + எறிந்தான் – கல்லெறிந்தான்.
“தனிக்குறில் முன்ஒற்று உயிர்வரின் இரட்டும்” (கல்ல் + எறிந்தன்)
“உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (கல்லெறிந்தால்
ii. இனமிகல் – வன்மைக்கு இனமாத் திரிபவும் ஆகும்:
இனமிகல் : பண்புப்பெயர் புணர்ச்சியில் – ‘ஈறுபோதல்’ விதிப்பமை’ விகுதி போனபின், மகர மெய் வராத நிலையில், வருமொழி முதலாகக் கசதப வந்தால், ‘இனம்மிகல் விதி இடம்பெறும்.
எ – கா : கருங்கடல் – கருமை + கடல்
“ஈறுபோதல்” (கரு + கடல்), “இனமிகல்” கருங்கடல்)
வன்மைக்கு இனமாத் திரிபவும் ஆகும் : –
மகரமெய்யை இறுதியாகப் பெற்ற நிலைமொழி வல்லினத்தை முதலில் பெற்ற வருமொழியுடன் புணரும் போது, நிலைமொழி இறுதி மகரம், வருமொழி முதல் வல்லினத்தின் இனமான மெல்லினமாகத் திரியும்.
எ – கா : காலம் + கடந்தான் – காலங் + கடந்தான் – காலங்கடந்தான்.
(“மவ்வீறு ஒற்று வன்மைக்கு இனமாத் திரிபவும் ஆகும்’)
அ) அடி அகரம் ஐ ஆதல்’ – செங்கதிர்
ஆ) முன் நின்ற மெய் திரிதல் – பெருங்கொடை
இ) ஆதிநீடல் – பைங்கூழ்
ஈ) இனமிகல் – காரிருள்
Answer:
அ) அடி அகரம் ஐ ஆதல் – பைங்கூழ் (பசுமை – பசு – பைசு – பைங் + கூழ்)
ஆ) முன் நின்ற மெய் திரிதல் – செங்கதிர் (செம்மை – செம் – செங் + கதிர்)
இ) ஆதிநீடல் – காரிருள் (கருமை – கரு – காரு + கார் + இருள்)
ஈ) இனமிகல் – பெருங்கொடை (பெருமை – பெரு – பெருங் + கொடை)
6.கூற்றுகளைப் படித்துக் கீழ்க்காண்பனவற்றுள் சரியானதைத் தேர்க.
அ) நிலைமொழியின் ஈறு குற்றியலுகரமாகவும், வருமொழியின் முதல் உயிரெழுத்தாகவும் அமையும் போது, ‘உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும்’ என்னும் விதியைப் பெறும்.
ஆ) நிலைமொழியின் ஈற்றில் இஈஐ வரும்போது வகர உடம்படுமெய் பெறும்.
இ) பண்புப்பெயர்ப் புணர்ச்சியில் ‘ஈறுபோதல்’ என்னும் விதியே முதன்மையானதாக விளங்கும்.
ஈ) தன்னொற்றிரட்டல் என்னும் விதி, பண்புப்பெயர்ப் புணர்ச்சிக்குப் பொருந்தும்.
i) அ, ஆ, இ சரி, ஈ தவறு.
ii) அ, இ, ஈ சரி, ஆ தவறு.
விடை : ‘
ii) அ, இ, ஈ சரி, ஆ தவறு.
மெய்ம்மயக்கம்
சிறுவினா
சொற்களுக்கு இடையில் மெல்லின எழுத்துகளுக்குப்பின் வல்லின மெய்கள் மட்டும் வரும். மெல்லின மெய்யெழுத்துகள் ங், ஞ், ண், ந், ம், ன் ஆகும். அந்தந்த மெல்லின எழுத்துகளுக்குப் பின் அந்தந்த வல்லின எழுத்துகளே வரும். அவை க்,ச், ட், த், ப், ற் ஆகும். எடுத்துக்காட்டாய் என்னும் எழுத்தைக் காணலாம். அதே எழுத்துக்கு நட்பு எழுத்து ‘க்’ ஆகும். அதாவது ‘சங்கம் என்னும் சொல்லில் ‘ங்’ மெல்லினத்திற்குப் பின் (க- க் + அ) ‘க்’ வந்துள்ளதை அறியலாம். இதைக் கருத்தில் கொண்டுதான் தமிழ் நெடுங்கணக்கில் நினைவில் கொள்ளும் வகையில் க் – ங், ச் – ஞ், ண், த் – ந், ப் – ம், ழ் – ள் என வரிசையாய் அமைத்துள்ளனர். இதை அறிந்துகொண்டால் பிழைகளைத் தவிர்க்கலாம்.
தெரிந்துகொள்வோம்
1.மெய்ம்ம யக்கம் என்பது எது?
Answer:
தமிழ்ச்சொற்களின் இடையில், எந்த மெய்யெழுத்தை அடுத்து எந்த மெய்யெழுத்து (இணைந்து) வரும் என்பதை விளக்குவது மெய்ம்மயக்கம் கும்.
2.மெய்ம்மயக்கம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
மெய்ம்மயக்கம், இரண்டு வகைப்படும்.
அவை : உடனிலை மெய்ம்மயக்கம் – எ-கா : அச்சம் (அச்ச்அம்), தண்ணீர் (தண்ண்ஈ ர்)
வேற்றுநிலை மெய்ம்மயக்கம். –எ கா : தேர்தல் (தேர்த் அல்), வாழ்வு (வாழ்வ்உ)
ஈரொற்று மெய்ம்மயக்கம் என்ற ஒன்றும் உண்டு.
3.உடனிலை மெய்ம்மயக்கம் என்பது யாது?
Answer:
சொற்களின் இடையில் ஒரே மெய்யெழுத்து அடுத்து அடுத்து வருவது உடனிலை மெய்ம்மயக்கம் எனப்படும்.
எ – கா : அச்சம் (அச்ச்அம்), தண்ணீர் (தண்ண்ஈர்)
4.தம் மெய்யெழுத்துகளுடன் மட்டுமே சேர்ந்து உடனிலை மெய்ம்மயக்கமாக வரும் எழுத்துகள் எவை? சான்றுடன் விளக்குக.
Answer:
க், என்னும் மெய்யெழுத்துகள், தம் மெய்யெழுத்துகளுடன் மட்டுமே சேர்ந்து, உடனிலை பெட் மயக்கச் சொற்கள் வரும். ஏ கா : மக்கள் (மக்க்அள்), எச்சம் (எச்ச்அம்), மொத்தம் (மொத்த்அம்), அப்பம் (அப்ப்அம் )
( க் , ச், த், ப் எழுத்துகளை அடுத்துப் பிற மெய்யெழுத்துகள் வாரா. வந்தால் அச்சொல் தமிழ்ச்சொல்லாக இருக்காது. எ – கா : சகாப்த்அம்)
5.‘தம் மெய்யெழுத்துகளுடன் சேர்ந்து வாரா எழுத்துகள் எவை?
Answer:
ர், ழ் ஆகிய இரண்டு மெய்யெழுத்துகளும் தம் எழுத்துகளுடன் சேர்ந்து வாரா. பிற மெய்யெழுத்து களுடன் மட்டுமே சேர்ந்து வரும்.
எ – கா : உயர்வு (உயர்வ்உ), வாழ்க (வாழ்க்அ)
6.வேற்றுநிலை மெய்ம்மயக்கம் என்பது யாது?
Answer:
சொற்களின் இடையில் வெவ்வேறு மெய்யெழுத்துகள் தொடர்ந்து வருவது, வேற்றுநிலை மெய்ம் மயக்கம் எனப்படும்.
எ – கா : தேர்தல் (தேர்த்அல்), வாழ்வு (வாழ்வ்உ)
7.உடனிலை, வேற்றுநிலை என்னும் இருவகை மெய்ம்மயக்கங்களாக வரும் எழுத்துகள் எவை? சான்று தருக.
Answer:
மெய்யெழுத்துகள் பதினெட்டனுள் க், ச், த், ப், ர், ழ் என்னும் ஆறு நீங்கிய பிற (ட், ற், ங், ஞ், ண், ந், ம், ன், ய், ல், வ், ள்) பன்னிரண்டு மெய்யெழுத்துகளும் உடனிலை மெய்ம்மயக்கமாகவும், வேற்றுநிலை மெய்ம்மயக்கமாகவும் வரும்.
8.ஈரொற்று மெய்ம்மயக்கமாவது யாது?
Answer:
தனிச் சொற்களிலோ, கூட்டுச் சொற்களிலோ சொற்களின் இடையில் ய், ர், ழ் ஆகிய மெய்கள் ஈரொற்றாய் (மூன்று மெய்களாக மயங்கி) வரும். இதனை ஈரொற்று மெய்ம்மயக்கம் என்பர். (இரண்டு + ஒற்று = ஈரொற்று, இரண்டு மெய்யெழுத்துகள்)
மொழியை ஆள்வோம் – சான்றோர் சித்திரம்
தமிழிசை இயக்கத்தின் தந்தை என்று போற்றப்படும் ஆபிரகாம் பண்டிதர், தென்காசிக்கு அருகேயுள்ள சாம்பவர் வடகரை என்னும் சிற்றூரில் பிறந்தவர். இளமையிலேயே புகைப்படக்கலை, அச்சுக்கலை, சோதிடம், மருத்துவம், இசை ஆகிய துறைகளில் பெருவிருப்பம் கொண்டு, நேரம் கிடைக்கும்போதெல்லாம் அதன் நுட்பங்களைப் பயின்றார். எண்டுக்கல்லில் ஆசிரியராகப் பணியாற்றும்போதே சித்தமருத்துவத்தில் சீரிய அறிவு பெற்று, மக்களால் அன்புடன் ‘பண்டுவர்’ (மருத்துவர்) என்று அழைக்கப்பட்டார். சில ஆண்டுகள் பணியாற்றியிரின் அதைவிடுத்து முழுமையாகச் சித்த மருத்துவத்தில் கவனம் செலுத்தினார். தஞ்சையில் குடியேறினார்.
மக்கள் அவரைப் ‘பண்டிதர்’ என அழைக்கத் தொடங்கினர். பண்டைத் தமிழ் நூல்களையெல்லாம் ஆழ்ந்து கற்று, ‘சங்கீத வித்தியா மகாஜன சங்கம்’ என்னும் அமைப்பை உருவாக்கி, தமது சொந்தச் செலவிலேயே தமிழிசை மாநாடுகள் நடத்தினார். அனைத்திந்திய அளவில் நடந்த இசை மாநாடுகளுக்கும் சென்று உரையாற்றினார். அவருடைய இசைத்தமிழ்த் தொண்டின் சிகரம் ‘கருணாமிர்த சாகரம்’. எழு ததோராண்டுகள் வாழ்ந்து, தமிழுக்குத் தொண்டு செய்தவர் ஆபிரகாம் பண்டிதர்.
1.உானிலை மெய்ம்மயக்கச் சொற்களை எடுத்து எழுதுக.
Answer:
இயக்கம், என்னும், சிற்றூரில், மருத்துவம், மக்கள், சித்த, மருத்துவத்தில், செலுத்தி, அழைக்க, அமைப்பை, உருவாக்கி, நடத்தினார்.
2.வேற்றுநிலை மெய்ம்மயக்கச் சொற்களை எடுத்து எழுதுக.
Answer:
தந்தை, என்று, பண்டிதர், பிறந்தவர், பயின்றார், அன்புடன், பண்டுவர், ஆண்டு, நடந்த.
3.உடனிலை மெய்ம்மயக்கமாகவும், வேற்றுநிலை மெய்ம்மயக்கமாகவும் உள்ள சொற்களை எழுதி, மெய்களை அடிக்கோடிடுக.
Answer:
விருப்பம், கல்லில், அழைக்க, எல்லாம், வித்தியா – உடனிலை மெய்ம்மயக்கம். கொண்டு, நுட்பம், திண்டு, தொடங்கி, நூல்களை, சங்கீத – வேற்றுநிலை மெய்ம்மயக்கம்.
4.கீழ்க்காணும் வடமொழிச் சொற்களைத் தமிழாக்குக.
Answer:
அ) சங்கீதம் – இசை
ஆ) வித்தியா – கலையறிவு
இ) மகாஜனம் – பெருமக்கள்
ஈ) சாகரம் – கடல் (ஆழி)
5.இலக்கணக்குறிப்பும் பகுபத உறுப்பிலக்கணமும் தருக.
Answer:
அ) பயின்றார் – படர்க்கைப் பலர்பால் இறந்தகால வினைமுற்று.
பயின்றார் – பயில் (ன்) + ற் + ஆர் : பயில் – பகுதி, ‘ல்’, ‘ன்’ ஆனது விகாரம், ற் – இறந்தகால இடைநிலை, ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி.
ஆ) தொடங்கினார் – படர்க்கைப் பலர்பால் இறந்தகால வினைமுற்று.
தொடங்கினார் – தொடங்கு + இன் + ஆர்
தொடங்கு – பகுதி, இன் – இறந்தகால இடைநிலை, ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி
1. சித்த மருத்துவத்தில் சீரிய அறிவு பெற்ற ஆபிரகாம் பண்டிதர், மக்களால் ‘பண்டுவா என்று அன்புடன் அழைக்கப்பட்டார்.
வினா : ஆபிரகாம் பண்டிதர், மக்களால் என்னவென்று, எவ்வாறு அழைக்கப்பட்டார்?
2. ஆபிரகாம் பண்டிதருடைய இசைத்தமிழ்த் தொண்டின் சிகரம் கருணாமிர்த சாகரம்’ என்பது.
வினா : ‘கருணாமிர்த சாகரம்’ என்பது எது?
தமிழாக்கம் தருக
1. Just living is not enough. One must have sunshine, freedom and a little flower – Hans Anderson.
Answer:
ஏதோ வாழ்ந்தோம் என்பதுமட்டும் போதாது. ஒருவன், குரிய ஒளியில் பிரகாசித்துச் சுதந்திரமாக
ஒரு சிறு மலர்போல் விளங்க வேண்டும். – ஹென்ஸ் ஆண்டர்சன்
2. In nature, light creats the colour. In the picture, colour creates the light – Hans Hofmann.)
Answer:
இயற்கையில், ஒளி என்பது வண்ணங்களைக் காட்சிப்படுத்துகிறது. ஓவியங்களில், வண்ணங்கள் ஒளியை உருவாக்குகின்றன. – ஹென்ஸ் ஹொஃப்மன்
3. Look deep into nature and then su’ will – understand everything better – Albert Einstein
Answer:
இயற்கையை ஆழ்ந்து நோக்குங்கள், அப்போது எல்லாவற்றைப் பற்றியும் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். – ஆல்பர்ட் ஐன்ஸ்டின்
4. Simplicity is nature’s firsy step, and the last of art – Philip James Bailey.
Answer:
எளிமை என்பது இயற்கையின் முதல் படி; அதுவே கலையின் இறுதி நிலை – பிலிப் ஜேம்ஸ் பெய்லி
5. Roads were male for journeys not destination – Confucius.
Answer:
சாலைகள், பயணம் செய்வதற்காக உருவாக்கப்பட்டவை. அவையே குறிப்பிட்ட இடங்கள் அல்ல. – கன்ஃபுஷியல்.
மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக.
1. உலை உளை, உழை
2. வலி, வளி, வழி
3. கலை, களை, கழை
4. சனை, கணை
5. குரை, குறை
6. பொரி, பொறி
Answer:
1. உலை, உளை, உழை :
மன உளைச்சல் தீரவும், வீட்டில் உலை கொதிக்கவும் உழைக்க வேண்டும். வலி, வளி, வழி : கடுமையான வளி வீசியதால், வழி அறியாமல் ஓடி விழுந்ததால், உடலுக்கு வலி
ஏற்பட்டது.
3. கலை, களை, கழை : இனிக்கும் கழைப் பயிரில், களை எடுப்பது ஒரு கலை.
4. கனை, கணை : குதிரை கனைத்ததால், வீரன் கணை வீசினான்.
5. குரை, குறை : நாய் குரைக்காமல் போனது பெரிய குறைதான்.
6. பொரி, பொறி : சோளம் பொரிக்கப் பொறியைப் பயன்படுத்துகின்றனர்.
நயம் பாராட்டுக
மீன்கள் கோடி கோ சூழ வெண்ணிலாவே! ஒரு
வெள்ளியோடம் போல வரும் வெண்ணிலாவே!
வளர்ந்துவளர்ந்து வந்த வெண்ணிலாவே! மீண்டும்
வாடிவாடி போவேதேனோ? வெண்ணிலாவே!
கூலை ஆந்தைபோல நீயும் வெண்ணிலாவே! பகல்
கூட்டினில் உறங்குவாயோ? வெண்ணிலாவே!
பந்தடிப்போம் உன்னையென்று வெண்ணிலாவே! நீயும் பாரில்வர அஞ்சினையோ? வெண்ணிலாவே!
ஆசிரியர்: இப்பாடலைப் பாடியவர், ‘கவிமணி’ என்னும் சிறப்புப் பெயர் பெற்ற ‘தேசிக விநாயகம்’ ஆவார். இவரே முதன்முதலில் குழந்தைகளுக்காக அறிவை வளர்க்கும், சிந்திக்கத் தூண்டும் இனிய, எளிய பாடல்களைப் பாடி வழங்கியவர். தொடக்கப்பள்ளியில் படித்த ‘தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு’ எனத் தொடங்கும் பாடலை எவரும் மறக்க முடியாது. இனிப் பாடல் செய்தி காண்போம்.
திரண்ட செய்தி : விண்ணில் வெண்ணிலவு பவனி வருகிறது. அது வளர்பிறையாக வானில் தோன்றும்போது, வெள்ளி ஓடம்போலக் காட்சி தருகிறது. விண்ணிலுள்ள மீன்கள் பலவும் அதனைச் சூழ்ந்திருப்பதுபோலத் தோன்றுகிறது. இப்படிச் சிறிது சிறிதாக வளர்ந்து முழுநிலவாக மாறி, ஒருநாள் மட்டுமே ஒளிவீசித் தோன்றும் முழுநிலவு, பின்னர்ச் சிறிது சிறிதாகத் தேய்ந்து, ஒருநாள் காணாமல் போய் நமக்கெல்லாம் வாட்டத்தை ஏற்படுத்துகிறது.
மையக்கருத்து : நிலவு முழுமை அடைவதும், தேய்வதும், பகலில் கண்ணில் படாததும், மண்ணிற்கு வராததும் ஆகிய செயல்களுக்குத் தனக்குத் தோன்றிய காரணங்களைக் கூறி ஆறுதல் பெறுவதுபோலப் பாடியுள்ளமை, குழந்தைகளை மகிழச் செய்வதற்கேயாகும்.
நயம் : வெண்ணிலவு ஓடமாக விண்ணில் வலம் வருதல் ; மீன்கள் சூழ்ந்திருத்தல்; வளர்ந்து முழுமை பெறுவது; தேய்ந்து வாடுவது; பகலில் காணாததற்குக் காரணமாகக் கூறும் உவமை; நிலத்தில் வாராமைக்குக் கண்டறிந்து கூறும் காரணம் – எல்லாம் சுவையானவை. தெளிவு இல்லாமல் இதுவோ, அதுவோ என ஐய உணர்வை வெளிப்படுத்துவது என எல்லாமும் சுவைதாம். இனிய கருத்தைக் குழந்தைகளுக்குப் புரியும் வகையில் எளிய சொற்களில் கூறுவதில் கவிஞரை மிஞ்ச ஒருவரும் இல்லை எனலாம். எல்லா அடிகளுமே ‘வெண்ணிலாவே’ என முடிந்து, ‘இயைபு’ என்னும் தொடை பெற்று ஓசை நயம் தருகிறது.
ஒவ்வோர் அடியின் இறுதியிலும் ‘வெண்ணிலாவே’ என்னும் சீர் அமைந்து, இயைபுத் தெடை பெற்றுள்ளது.
‘வளர்ந்து வளர்ந்து’, ‘வாடி வாடி’ என்னும் அடுக்குத்தொடர்ச் சொற்கள் அமைந்து இனியே பயக்கிறது. பிறைவடிவை வெள்ளி ஓடம்போல்’ என உவமித்துள்ளார்.
உவமை அணி அமைந்து, இரண்டிரண்டு அடிகளாய்க் ‘கண்ணி’ என்னும் சிந்து பாடலாக அமைந்து, இனிய சந்த நயம் பெற்றுள்ளது.
மொழியோடு விளையாடு
எண்ணங்களை எழுத்தாக்குக.
1. ஐந்தெழுத்துக்காரர்
முதலிரண்டோ பாட்டெழுதுபவரின் பட்டம் (கவி)
இரண்டும் மூன்றுமோ பசுப்பால் என்பதன் பின் இறுதி (ஆவின்)
கடைசி இரண்டெழுத்தோ மானினத்தில் ஒரு வகையாம் (கலை)
இரண்டும் ஐந்துமோ பொருளை விற்கத் தேவையாம் (விலை)
அது என்ன? (கவின்கலை)
2. இறுதி இரண்டெழுத்தோ
பழத்தின் முந்தைய பச்சைநிலை (காய்)
தமிழ்க்கடவுளின் முற்பாதியை முதலிரு எழுத்துகளில் வைத்திருக்கும் (முரு)
நடுவிலோ ஓரெழுத்து ஒருமொழி (கை)
அதற்கும் முன் பொட்டு வைத்த ஙகரம் (ங்)
சேர்த்தால் காயாவான் (காய்)
பிரித்தால் நிலைமொழியில் மரமாவான் (முருங்கை)
ஏழுத்துக்காரன் – அவன் யார்? (முருங்கைக்காய்)
இவைபோன்ற சிறுசிறு புதிர்க் கவிதைகளை எழுதிப் பழகுக.
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, இயற்கைப் பாதுகாப்புக் குறித்த முழக்கத்தொடர்கள் எழுதிக் காட்சிப்படுத்துக.
எ – கா : 1. விதைப்பந்து எறிந்திடுவீர் ! பூமிப்பந்து காத்திடுவீர் !
2. சிட்டுக்குருவிக்குக் கொஞ்சம் அரிசியிடு!
3. உலக உயிர்களுக்கு உன் கருணையிடு!
3. மரம் ஒன்று நட்டு மழை பெற முயல்!
4. நீர் ஓடை அமைத்துத் தண்ணீ ரைத் தேக்கு!
5. மண்வளம் காக்க மாசுகளை அகற்று!
வேளாண்மைத் தொடர்பான சொற்கள் விளக்க அகராதி ஒன்று உருவாக்குக.
கலப்பை, ஏர், உழவு, பயிர், விளைவு, உரம், பூச்சிக்கொல்லி, மண்வெட்டி, தண்ணீர், வாய்க்கால், பாசனம், பாத்தி.
கலைச்சொல் அறிவோம்
- இயற்கை வேளாண்மை – Organic Farming ஒட்டுவிதை – Shell Seeds
- மதிப்புக்கூட்டுப் பொருள் – Value Added Product
- தூக்கணாங்குருவி – Weaver Bird
- வேதி உரங்கள் – Chemical Fertilizers
- thozhuvaram – Farmyard Manure
- வேர்முடிச்சுகள் – Root Nodes
- தொழுஉரம் – Farmyard Manure
- அறுவடை – Harvesting