10th Tamil Guide unit 8 | 10th Tamil Samacheer kalvi guide unit 8.2

10th Tamil Guide unit 8.2

10th Tamil Guide unit 8.2 | 10th Tamil Samacheer kalvi guide unit 8.2

8.2. ஞானம்

10th Tamil Guide Unit 8.2 TN 10th Tamil Samacheer kalvi guide Unit 8.2 Book Back Answers. 10th Tamil Chapter 8.1 to 8.5 Full Answer key based on reduced syllabus 2022. 10th Tamil Free Online Test. 10th Tamil இயல் 8.2. ஞானம் Book Answers. TN 10th Tamil 8th Lesson Full Answers. 10th Tamil Full Guidehttps://www.studentsguide360.com/  

  • 10th Tamil Free Online Test Unit 1 to 9 – Click Here

10th Tamil Guide unit 8.2 | 10th Tamil Samacheer kalvi guide unit 8

10th Tamil Guide unit 8 Answers TN Students Guide

 

சாளரத்தின் கதவுகள், சட்டம்;
காற்றுடைக்கும், தெருப்புழுதி வந்தொட்டும்.
கரையான் மண் வீடு கட்டும்.
அன்று துடைத்தேன்,
சாயம் அடித்தேன்,
புதுக்கொக்கி பொருத்தினேன்.
காலக்கழுதை
கட்டெறும்பான
இன்றும்
கையிலே
வாளித்தண்ணீர், சாயக்குவளை,
கந்தைத்துணி, கட்டைத் தூரிகை: அறப்பணி ஓய்வதில்லை
ஓய்ந்திடில் உலகமில்லை!

கோடை வயல் – தொகுப்பு:

I. பலவுள் தெரிக.

‘வீட்டைத் துடைத்துச் சாயம் அடித்தல்’ இவ்வடி குறிப்பிடுவது ……………

  1. காலம் மாறுவதை
  2. வீட்டைத் துடைப்பதை
  3. இடையறாது அறப்பணி செய்தலை
  4. வண்ணம் பூசுவத

விடை : இடையறாது அறப்பணி செய்தலை

10th Tamil Guide unit 8.2

II. குறு வினா

காலக் கழுதை சுட்டெறும்பானது கவிஞர் செய்வது யாது?

  • காலக் கழுதை கட்டெறும்பானது என்பது காலம் மாறி வயது முதிர்தலை குறிப்பது ஆகும்.
  • வயது முதிர்ந்து உடலும் உடல் உறுப்புகளும் வலுவிழந்தாலும் அற்பணியைத் தொடர்ந்து செய்கிறார்.
  • வாளித்தண்ணீர், சாயக்குவளை, துணி கந்தையானாலும், சாயம் அடிக்கும் தூரிகை கட்டையானலும் சுத்தம் செய்வது போல, காலக்கழுதை கட்டெறும்பான பின்னும் அறப்பணி ஓயாது தொடர்கிறது.

III. சிறு வினா

1. ‘சுற்றுச்சூழலைப் பேணுவதே இன்றைய அறம்’ என்ற தலைப்பில், பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் பேசுவதற்கான உரைக்குறிப்பு ஒன்றை உருவாக்குக.

 

(குறிப்பு – சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்கச் சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும், ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஏற்படும் மாற்றமே சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும்)

உரைக்குறிப்புகள்:-

அறம் என்பதன் விளக்கம் தரல்
சுற்றுச்சூழல் என்றால் என்ன?
சுற்றுச்சூழலோடு அறத்திற்கு உள்ள தொடர்பை விளக்குதல்.
அறம் சார்ந்த வகையில் மாசு அடைவதைத் தவிர்க்க வழி கூறுதல்.

  • சட்டங்கள் வன்மையாக இருந்தாலும், அரசின் வாயிலாக மென்மைப்படுத்தல் வேண்டும்.
  • நெகிழி, ஆலைக்கழிவு, நச்சுக்காற்று வாகனப்புகை இவற்றால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்பதை மக்கள் மனதில் பதிய வைத்தல்.
  • இக்குறிப்புகளை மையமாக வைத்து உரையாற்ற வேண்டும்.

2. வாளித் தண்ணீர், சாயக் குவளை, கந்தைத் துணி, கட்டைத் தூரிகை – இச்சொற்களைத் தொடர்புபடுத்தி ஒரு பத்தி அமைக்க.

  • வீட்டின் சுவர், சன்னல் போன்றவற்றில் அழுக்குப் படிந்தும், சன்னல்களில் கரையான் படிவதைத் தடுக்க, வாளித் தண்ணீரைக் கொண்டு சுவரையும் ஜன்னலையும் நன்கு கழுவ வேண்டும்.
  • பிறகு கந்தை துணியால் நன்கு துடைத்து விட வேண்டும்.
  • மூன்றாவதாக சாயக் குவளையில் உள்ள சாயத்தை கட்டைத் தூரிகை கொண்டு சாயம் பூசி புதுபிக்க வேண்டும்.

10th Tamil Guide unit 8.2

ஞானம் – கூடுதல் வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. ___________ உலகம் நிலைத்திருப்பதற்கான அடிப்படை
விடை : இயக்கமே


2. கடல் அலைகளைப்போல் ___________ ஓய்வதில்லை
விடை : பணிகள்

3. பணிகள் ஓய்திடின் ___________ இல்லை
விடை : உலகம்

4. தி,சொ.வேணுகோபாலன் ___________ பிறந்நதவர்
விடை : திருவையாற்றில்

5. தி.சொ.வேணுகோபாலன் ___________ புதுக்கவிஞர்களில் ஒருவர்
விடை : ‘எழுத்து’ காலப்

6. தி,சொ.வேணுகோபாலனின் மற்றாெரு கவிைதத் தாெகுப்பு ___________
விடை :  மீட்சி விண்ணப்பம்

II. குறு வினா

1. எவை அறம் சாரந்து வளர வேண்டும்?

  • தனக்கான பணிகளோ உலகிற்கான பணிகேளா அறம் சாரந்து வளர வேண்டும்

2. காலக் கழுதை கட்டெறும்பானது என்பது எதை குறிப்பது ஆகும்?

  • காலக் கழுதை கட்டெறும்பானது என்பது காலம் மாறி வயது முதிர்தலை குறிப்பது ஆகும்.

3. சட்டங்கள் வன்மையாக இருந்தாலும் யாரின் வாயிலாக மென்மைப்படுத்தல் வேண்டும்?

  • சட்டங்கள் வன்மையாக இருந்தாலும், அரசின் வாயிலாக மென்மைப்படுத்தல் வேண்டும்.

4. எவற்றால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்பதை மக்கள் மனதில் பதிய வைத்தல் வேண்டும்?

  • நெகிழி
  • ஆலைக்கழிவு
  • நச்சுக்காற்று
  • வாகனப்புகை இவற்றால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்பதை மக்கள் மனதில் பதிய வைத்தல்

5. தி.சொ.வேணுகோபாலன் குறிப்பு வரைக

  • இவர் திருவையாற்றில் பிறந்தவர்; மணிப்பால்
  • பாெறியியல் கல்லூரியில் எந்திரவியல் பேராசிரியராகப் பணியாற்றியவர்;
  • ‘எழுத்து’ காலப் புதுக்கவிஞர்களில் ஒருவர்.
  • இவரின் மற்றாெரு கவிைதத் தாெகுப்பு மீட்சி விண்ணப்பம்.

பலவுள் தெரிக

1.‘ஞானம்’ – கவிதையின் ஆசிரியர் ……………………..

அ) அப்துல் ரகுமான்
ஆ) வேணுகோபாலன்
இ) இராஜகோபாலன்
ஈ) இராமகோபாலன்
Answer:
ஆ) வேணுகோபாலன்


2.உலகிற்கான பணிகள் எதைச் சார்ந்து வளர வேண்டும்?
அ) மறம்
ஆ) அறம்
இ) ஞானம்
ஈ) கல்வி
Answer:
ஆ) அறம்

3.‘ஞானம்’ கவிதை இடம்பெற்ற தொகுப்பு……………………..
அ) தீக்குச்சி
ஆ) மீட்சி விண்ணப்பம் 
இ) கோடை வயல்
ஈ) கோடைமழை
Answer:
இ) கோடை வயல்

4.தி.சொ.வேணுகோபாலன் பிறந்த ஊர் ……………………..
அ) தஞ்சாவூர்
ஆ) திருவாதவூர்
இ) திருவாரூர்
ஈ) திருவையாறு
Answer:
ஈ) திருவையாறு

5.தி.சொ.வேணுகோபாலன் எக்காலத்துப் புதுக்கவிஞர்களில் ஒருவர்?
அ) மணிக்கொடி
ஆ) எழுத்து
இ) வானம்பாடி
ஈ) கவிக்குயில்கள்
Answer:
ஆ) எழுத்து

6.வேணுகோபாலன் பேராசிரியராகப் பணியாற்றியது……………………..
அ) கோவை மருத்துவக் கல்லூரியில்
ஆ) மணிப்பால் பொறியியல் கல்லூரியில்
இ) சென்னை கிண்டி கல்லூரியில்
ஈ) வேளாண்மைக் கல்லூரியில்
Answer:
ஆ) மணிப்பால் பொறியியல் கல்லூரியில்

7.“மீட்சி விண்ணப்பம்” கவிதைத் தொகுப்பின் ஆசிரியர்……………………..
அ) வேணுராம்
ஆ) வேணுகோபாலன்
இ) சி.சு. செல்லப்பா
ஈ) கபிலன்
Answer:
ஆ) வேணுகோபாலன்

8.‘ஞானம்’ கவிதை உணர்த்தும் பொருள்
அ) சமூக அறப்பணி
ஆ) வீட்டைப் புதுப்பித்தல்
இ) இடைவிடாத சமூக அறப்பணியை
ஈ) உலகப் பணிகள்
Answer:
இ) இடைவிடாத சமூக அறப்பணியை

9.அறப்பணி ஓய்ந்தால்……………………..இல்லை .
அ) மனிதன்
ஆ) இயற்கை
இ) உலகம்
ஈ) கடல்
Answer:
இ) உலகம்

10.“புதுக்கொக்கி பொருத்தினேன்” – இத்தொடர் உணர்த்துவது………………………
அ) சாளரக் கதவை சீர்ப்படுத்துதல்
ஆ) சமூகத்தைச் சீர்ப்படுத்துதல்
இ) பொய்களை நீக்குதல் 
ஈ) வீட்டைப் புதுப்பித்தல்
Answer:
ஆ) சமூகத்தைச் சீர்ப்படுத்துதல்

11.பொருத்துக.
1. கரையான் – அ) கட்டெறும்பு
2. காலக்கழுதை – ஆ) வந்தொட்டும்
3. தெருப்புழுதி – இ) காற்றுடைக்கும்
4. சட்ட ம் – ஈ) மண்வீடு கட்டும்
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

12.‘அறப்பணி ஓய்வதில்லை
ஓய்ந்திடில் உலகமில்லை !’ – இவ்வடிகளில் அமைந்த நயம்?
அ) எதுகை
ஆ) மோனை
இ) முரண்
ஈ) இயைபு
Answer:
ஈ) இயைபு

13.பொருத்துக.
1. வாளி – அ) குவளை
2. சாயம் – ஆ) தண்ணீர்
3. கந்தை – இ) தூரிகை
4. கட்டை – ஈ) துணி
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

Leave a Reply