10th Tamil Guide unit 8 | 10th Tamil Samacheer kalvi guide unit 8.2

10th Tamil Guide Unit 8.1

10th Tamil Guide Unit 8.1 | TN Samacheer kalvi guide unit 8.1

8.1. சங்க இலக்கியத்தில் அறம்

10th Tamil Guide Unit 8.1. TN 10th Tamil Samacheer kalvi guide Unit 8.1 Book Back Answers. 10th Tamil Chapter 8.1 to 8.5 Full Answer key based on reduced syllabus 2022. 10th Tamil Free Online Test. 10th Tamil இயல் 8.1 சங்க இலக்கியத்தில் அறம் Book Answers. TN 10th Tamil 8th Lesson Full Answers. 10th Tamil Full Guidehttps://www.studentsguide360.com/  

  • 10th Tamil Free Online Test Unit 1 to 9 – Click Here

10th Tamil Guide Unit 8.1 | 10th Tamil Samacheer kalvi guide unit 8.1

10th Tamil Guide Unit 8.1 | TN Samacheer kalvi guide unit 8.1

 

I. பலவுள் தெரிக.

1. மேன்மை தரும் அறம் என்பது…….

  1. கைம்மாறு கருதாமல் அறம் செய்வது
  2. மறுபிறப்பில் பயன் பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது
  3. புகழ் கருதி அறம் செய்வது
  4. பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது

விடை : கைம்மாறு கருதாமல் அறம் செய்வது

2. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும் பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர்

  1. உதியன்; சேரலாதன்
  2. அதியன்; பெருஞ்சாத்தன்
  3. பேகன்; கிள்ளிவளவன்
  4. நெடுஞ்செழியன்; திருமுடிக்காரி

விடை : அதியன்; பெருஞ்சாத்தன்

II. குறு வினா

குறிப்பு வரைக : அவையம்

  • அறம் கூறும் மன்றங்கள் அரசனின் ஆட்சிக்கு துணை புரிந்தன.
  • “அறம் அறக்கண்ட நெறிமான் அவையம்” என்கிறது புறநானூறு, உறையூலிருந்து அவையம் தனிச்சிறப்புப் பெற்றது.
  • மதுரையிலிருந்த அவையம் பற்றி மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது.
  • மதுரை அவையம் துலாக்கோல் போல் நடுநிலைமிக்கது.

III. சிறு வினா

சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்குமு் தேவையானவையே என்பதற்கு சில எடுத்துக்காட்டுகள் தருக.

  • சங்க இலக்கியங்ள் காட்டும் அறங்கள், ஒரு மனிதன் தனியாகவும், சமூக உறுப்பினராகவும் இயங்குவதற்கும், அவனது பண்பு நலனை உருவாக்குவதற்கும் உதவுகிறது.

அரசியல் அறம்:-
“அறநெறி முதற்றே அரசின் கொற்றம்”

  • நீர் நிலையைப் பெருக்கி நிலவளம் கண்டு, உணவுப் பெருக்கம் காண்பதும், அதனை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதும் அரசினின் அறம். இவ்வறம் இன்றைய சூழலில் காணப்படுகிறது.

வணிகத்தில் அறம்:-
“அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்”

  • அறம் செய்வதில் வணிகநோக்கம் இருத்தல் கூடாது, நோக்கமின்றி அறம் செய்வதே வணிக அறனின் மேன்மையாகும்.

போர் அறம்:-

  • தமிழர் போர் செய்வதிலும், அறநெறி உடையவர்களாக இருந்தனர். போர் அறம் என்பது வீரமற்றோர், முதியோர், சிறார் போன்றவரை எதிர்த்து போர் செய்யாமல் இருப்பது.

உதவி செய்வதி அறம்:-

  • பிறருக்கு உதவி செய்வதை அறமாகக் கருதினர். அதாவது தன்னைத் தாண்டி பிறரைப் பற்றி சிந்திக்கும் நிலை.
  • “பிழையா நன்மொழி” என்று நற்றிணையும் கூறுகிறது.
  • நிலம் பெயர்ந்தாலும் பொய் சொல்லக் கூடாது. மெய் பேசும் நாவே மனிதனை உயர்த்தும்.
  • சங்க இலக்கியங்கள் காட்டும் அறம் ஒரு மனிதன் தனியாகவும், சமூக உறுப்பினராகவும் இயங்குதவதற்குப் பண்பு நலனே காரணம் என்று சங்க இலக்கியம் மூலமாக அறிய முடிகிறது.
  • இறுதியாக, சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைய மனிதனுக்கு அடிப்படையாகவும் வழிகாட்டுதலாகவும் உள்ளது.

IV. நெடு வினா

பள்ளித் திடலில் கிடந்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்தையும், அதற்குப் பாராட்டுப் பெற்றதையும் பற்றி வெளியூரில் இருக்கும் உறவினர் ஒருவருக்கு கடிதம் எழுதுக

 

உறவினருக்கு மடல்
திருநெல்வேலி
07.07.2020

அன்புள்ள பெரியப்பாவிற்கு ராமு எழுதுவது,
நலம், நலம் அறிய ஆவல்,
நான் இன்று மகிழ்ச்சியாக உள்ளேன். என்னவென்று தெரியுமா? நேற்று வகுப்பு முடித்து வெளியே வந்து கொண்டிருந்தேன். அப்போது பள்ளித்திடலில் ஒரு பணப்பை கிடைத்தது. அதில் அதிகமான பணம் இருந்தது. ஒரு நிமிடம் ஐயோ! இவ்வளவு பணம் இருக்கிறதே என்று பையை எடுத்துக் கொண்டு தலைமை ஆசிரியரிடம் சென்றேன். அவர் அலுவலக ஊழியர் கட்டணம் வசூலித்த பணம் இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லும்போது தவற விட்டு விட்டார் என்றார்.


தலைமை ஆசிரியர் மிகவும் மகிழ்ந்தார். என் நேர்மையையும், கண்ணியமான செயலையும் பாராட்டினார்.


பிறர் பொருளுக்கு ஆசைப்படாத உன்னைப் பாராட்டியே தீர வேண்டும் என்று மறுநாள் காலை இறை வணக்கக் கூட்டத்தில் மாணவர்கள் மத்தியில் என் நேர்மையை பாராட்டி, சன்மானத் தொகையை பரிசாகவும் வழங்கினார்.
அது மட்டுமல்லாமல் என்னைப் பள்ளி மாணவர் தலைவராக்கினார். நேர்மைக்கு எப்போதும் உயர்வு உண்டு என்று கூறி, அதற்கு ராமுவே என்று என்னைப் பாராட்டினார்.


இந்நிகழ்வின் மகிழ்ச்சியை உங்களுடன், பெரியம்மா, தங்கையுடன் இக்கடிதம் மூலம் பகிர்ந்து கொள்வதற்கு மகிழ்கிறேன்.

இப்படிக்கு
தங்கள் அன்புள்ள,
ராமு
உறைமேல் முகவரி
பெறுநர்:-
அ. அய்யம்பெருமாள்
5/507, திருவள்ளூவர் நகர்
சென்னை – 600 012.

 

 சங்க இலக்கியத்தில் அறம் – கூடுதல் வினாக்கள் 

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. தமிழர் ____________, ____________  இன்புற்றனர்.
விடை : பொருள் ஈட்டி, அறம் செய்து


2. சங்க காலத்தில் அறத்தை ____________ மையமாகக் கொண்டிருந்தனர்.
விடை : மனித உறவின்

3. சமயக் கலப்பில்லாத ____________ இயல்பாக நிலவிய காலம் சங்ககாலம்
விடை : மானிட அறம்

4. அறநெறிக்கால அறங்கள் ____________ சார்ந்தவை.
விடை : சமயம்
5. அறம் கூறும் மன்றங்கள் அரசனின் ____________ ஆட்சிக்குத் துணைபுரிந்தன.
விடை : அறநெறி

6. வீ ரத்தைப் போலவே கொடையும் ____________ விரும்பப்பட்டது.
விடை : தமிழர்களால்

II. குறு வினா

1. அறத்தின் குறியீடாக போற்றப்பட்டவை எவை?

  • மன்னர்களுடைய செங்கோலும், வெண் கொற்றக் குடையும் அறத்தின் குறியீடுகளாக போற்றப்பட்டன.

2. உண்மையான செல்வம் என நல்வேட்டனார் கூறுவது என்ன?

  • பிறர் துன்பம் தீர்ப்பது தான் ‘உண்மையான செல்வம் என நல்வேட்டனார் கூறுகிறார்.

3. அமைச்சரின் கடமைகளாகச் சங்க இலக்கியம் யாது கூறுகிறது?

  • அரசன் அறநெறியில் ஆட்சி செய்ய உதவி புரிய வேண்டும்.
  • நன்றும் தீதும் ஆய்தலும், அன்பும் அறனும் காத்தலும் அமைச்சர் கடமை என்று மதுரைக்காஞ்சி கூறுகிறது

4. கொடையில் சிறந்த மன்னர்கள் நால்வரைக் குறிப்பிடுக.

  • அதியன்
  • பேகன்
  • ஆடுகோட்பாட்டுச்சேரலாதன்
  • திருமுடிக்காரி

5. நாக்கு ஓர் அதிசயத் திறவுகோல் காரணம் கூறுக

  • இன்பத்தின் கதவைத் திறப்பதுவும், துன்பத்தின் கதவைத் திறப்பதுவும் நாக்கு தான்.
  • மெய் பேசும் நா மனிதனை உயர்ததுகிறது
  • பொய் பேசும் நா மனிதனை தாழ்த்துகிறது
  • எனவே நாக்கு ஓர் அதிசயத் திறவுகோல் எனக் கூறக் காரணம் ஆகும்.
  • சங்க காலத்தில் போர் அறம் பற்றி கூறுக
  • தமிழர், போரிலும் அறநெறிகளைப் பின்பற்றினர். போர் அறம் என்பது வீரமற்றோர், புறமுதுகிட்டோர், சிறார், முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமையைக் குறிக்கிறது.
  • போரின் கொடுமையிலிருந்து பசு, பார்ப்பனர், பெண்கள், நோயாளர், புதல்வரைப் பெறாதவர் ஆகியோருக்குத் தீங்கு வராமல் போர் புரிய வேண்டும் என்று ஒரு பாடல் கூறுகிறது.
  • தம்மைவிட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது என்பதை ஆவூர் மூலங்கிழார் குறிப்பிட்டிருக்கிறார்.
  • எறியார் எறிதல் யாவணது எறிந்தார்
  • எதிர்சென்று எறிதலும் செல்லான் – புறம்.

எத்திசையும் புகழ் மணக்க…

கி.பி.(பொ.ஆ.) ஆறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காஞ்சி மாநகரத்துச் சிற்றரசர் ஒருவர் போதிதர்மர் என்னும் சமயப்பெயர்பூண்டு சீனாவுக்குச் சென்றார். பௌத்த சமயத் தத்துவத்தின் ஒரு பிரிவைப் போதித்தார். அதிலிருந்து உருவானதே “ஜென்” தத்துவம். இது, பின்னர் ஜப்பான் நாடுகளுக்கும் பரவிச் செழித்து விளங்கியது. போதி தருமருக்குச் சீனர்கள் கோவில் முதலிய கட்டி சிலை வைத்து இன்றளவும் வணங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1.சங்க காலத்திற்குப் பிந்தையக் காலம்…………………..

அ) அறநெறிக் காலம்
ஆ) மன்னர் காலம்
இ) பக்திக் காலம்
ஈ) சமயக் கலப்பில்லாக் காலம்
Answer:
அ) அறநெறிக் காலம்


2.சங்க இலக்கியத்தைப் பற்றி ‘கவிதை வாழ்க்கையின் திறனாய்வு’ என்றவர் ………………….
அ) ஜி.யூ. போப்
ஆ) ஆர்னால்டு
இ) கால்டுவெல்
ஈ) வீரமாமுனிவர்
Answer:
ஆ) ஆர்னால்டு

3.சங்கப் பாடலில் அறம் பற்றிய கருத்துகள் யாரை முதன்மைப்படுத்தியே கூறப்படுகிறது?
அ) வீரர்களை
ஆ) மக்களை
இ) அமைச்சர்களை
ஈ) அரசர்களை
Answer:
ஈ) அரசர்களை

4.மதுரையின் அவையம் பற்றிக் குறிப்பிடும் நூல் ……………………
அ) சிலப்பதிகாரம்
ஆ) மதுரைக்காஞ்சி
இ) பரிபாடல்
ஈ) மதுரை மும்மணிக்கோவை
Answer:
ஆ) மதுரைக்காஞ்சி

5.உதவி செய்தலை ‘உதவியாண்மை’ என்று குறிப்பிட்டவர்………………………
அ) ஈழத்துப் பூதன் தேவனார்
ஆ) நக்கீரர்
இ) திருமுடிக்காரி
ஈ) கபிலர்
Answer:
அ) ஈழத்துப் பூதன் தேவனார்

6.‘இரப்போர்க்கு ஈயாது வாழ்வதை விட உயிர் துறப்பது மேலானது’ என்று கூறும் அகநூல்…………………….
அ) கலித்தொகை
ஆ) குறுந்தொகை
இ) ஐங்குறுநூறு
ஈ) பரிபாடல்
Answer:
அ) கலித்தொகை

7.பேகன், மறுமை நோக்கிக் கொடுக்காதவர் என்று பாராட்டியவர்…………………………
அ) கபிலர்
ஆ) ஔவையார்
இ) நக்கீரர்
ஈ) பரணர்
Answer:
ஈ) பரணர்

8.‘வள்ளலின் பொருள், இரவலனின் பொருள்’ – என்றவர் ……………………
அ) நக்கீரர்
ஆ) கபிலர்
இ) பெரும்பதுமனார்
ஈ) நல்வேட்டனார்
Answer:
இ) பெரும்பதுமனார்

9.‘நிறைவடைகிறவனே செல்வன்’ என்று கூறும் தத்துவம் ………………….
அ) மாவோவியம்
ஆ) தாவோவியம்
இ) பௌத்தம்
ஈ) ஜென்தத்துவம்
Answer:
ஆ) தாவோவியம்

10.‘பிழையா நன்மொழி’ என்று வாய்மையைக் குறிப்பிடும் நூல் ………………….
அ) கலித்தொகை
ஆ) புறநானூறு
இ) நற்றிணை
ஈ) கொன்றை வேந்தன்
Answer:
இ) நற்றிணை

11.நம்மிடமுள்ள அதிசயத் திறவுகோல் எது?
அ) மூளை
ஆ) நாக்கு
இ) கண்
ஈ) கை
Answer:
ஆ) நாக்கு

12.சேர அரசர்களின் கொடைப் பதிவாக திகழும் நூல் ………………….
அ) புறநானூறு
ஆ) பரிபாடல்
இ) பதிற்றுப்பத்து
ஈ) சிலப்பதிகாரம்
Answer:
இ) பதிற்றுப்பத்து

13.தன்னிடமுள்ள எல்லாவற்றையும் கொடுப்பவன் என்று திருமுடிக்காரியைப் பாராட்டியவர்
அ) கம்ப ர்
ஆ) கபிலர்
இ) ஒளவையார்
ஈ) நல்வேட்டனார்
Answer:
ஆ) கபிலர்

14.பின்வரும் புலவர்களையும், மன்னர்களையும் சரியான இணையாகப் பொருத்துக.
அ) நக்கீரர் – 1. ஆடு கோட்பாட்டுச் சேரலாதன்
ஆ) ஔவையார் – 2. பெருஞ்சாத்தன்
இ) கபிலர் – 3. அதியன்
ஈ) நச்செள்ளையார் – 4. திருமுடிக்காரி
அ) 4, 3, 2, 1
ஆ) 3, 2, 1, 4
இ) 2, 3, 4, 1
ஈ) 2, 4, 3, 1
Answer:
இ) 2, 3, 4, 1

15.இரவலர் வராவிட்டாலும் தேடி வரவழைத்துக் கொடுக்கும் மன்னன் ………………….
அ) அதியன்
ஆ) திருமுடிக்காரி
இ) ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
ஈ) நல்வேட்டனார்
Answer:
இ) ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்

16.காஞ்சி மாநகரத்து சிற்றரசரே ………………….என்றும் சமயப் பெயர் கண்டார்.
அ) தர்மர்
ஆ) கன்பூசியஸ்
இ) போதி தர்மர்
ஈ) புத்தர்
Answer:
இ) போதி தர்மர்

17.போதி தர்மருக்குக் கோயில் கட்டியவர்கள் ………………….
அ) சீனர்கள்
ஆ) ஜப்பானியர்
இ) கிரேக்கர்
ஈ) புத்தர்
Answer:
அ) சீனர்கள்

18.சமூகக் கடலின் ஒரு துளி ………………….
அ) பறவைகள்
ஆ) விலங்குகள்
இ) மரங்கள்
ஈ) மனிதன்
Answer:
ஈ) மனிதன்

19.சொற்றொடர்களை முறைப்படுத்துக.
i) செய்ய வெறுத்தனர்
ii) பழிதரும் செயல்களை
iii) பரிசாகக் கிடைத்தாலும்
iv) உலகே
அ) (iv)-(iii)-(ii)-(i)
ஆ) (iii)-(iv)-(i)-(ii)
இ) (ii)-(i)-(iv)-(iii)
ஈ) (i)-(iv)-(iii)-(ii)
Answer:
அ) (iv)-(iii)-(i)-(i)

20.பொருத்துக.

1. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் – அ) ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
2. இரவலர் வராவிட்டாலும் அவர்களைத் தேடி அழைக்கும் இயல்பு – ஆ) பேகன்
3. மறுமை நோக்கிக் கொடுக்காதவன் – இ) மலையமான் திரு முடிக்காரி
4. எல்லாவற்றையும் கொடுப்பவன் – ஈ) அதியன்
அ) 1.அ 2.ஆ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
ஆ)1.ஈ 2.அ 3.ஆ 4.இ


21.பொருத்துக.
1. கொடை வள்ளல் எழுவரின் கொடைப்பெருமை – அ) ஆற்றுப்படை இலக்கியங்கள்
2. கொடை இலக்கியங்கள் – ஆ) சிறுபாணாற்றுப் படை
3. சேர அரசர்களின் கொடைப்பதிவு – இ) வள்ளல்கள்
4. இல்லோர் ஒக்கல் தலைவன் – ஈ) பதிற்றுப்பத்து
அ) 1.அ 2.ஆ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
இ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

22.தவறான சொற்றொடரைக் கண்டறிக.
அ) நாக்கு ஓர் அதிசயத் திறவுகோல்.
ஆ) நாக்கு இன்பத்தின் கதவைத் திறப்பது.
இ) நாக்கு துன்பத்தின் கதவைத் திறப்பது.
ஈ) மெய் பேசும் நா மனிதனைத் தாழ்த்துகிறது.
Answer:
ஈ) மெய் பேசும் நா மனிதனைத் தாழ்த்துகிறது.

23.‘செம்மை சான்ற காவிதி மாக்கள்’ என்றழைக்கப்பட்டவர் ………………….
அ) அமைச்சர்கள்
ஆ) மன்னர்கள்
இ) புலவர்கள்
ஈ) சான்றோர்கள்
Answer:
அ) அமைச்சர்கள்

24.‘செம்மை சான்ற காவிதி மாக்கள்’ என்று அமைச்சர்களைக் குறிப்பிட்ட புலவர் ………………….
அ) மாங்குடி மருதனார்
ஆ) பரணர்
இ) ஆவூர் மூலங்கிழார்
ஈ) நக்கீரர்
Answer:
அ) மாங்குடி மருதனார்

25.தம்மைவிட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது என்பதைக் குறிப்பிட்ட புலவர் ………………….
அ) மாங்குடி மருதனார்
ஆ) பரணர்
இ) ஆவூர் மூலங்கிழார்
ஈ) நக்கீரர்
Answer:
இ) ஆவூர் மூலங்கிழார்

26.குற்றங்களை, அறத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தண்டனை வழங்க வேண்டும் என்று கூறிய புலவர் ………………….
அ) மாங்குடி மருதனார்
ஆ) பரணர்
இ) ஆவூர் மூலங்கிழார்
ஈ) ஊன் பொதிப் பசுங்குடையார்
Answer:
ஈ) ஊன் பொதிப் பசுங்குடையார்

27.‘அறம் அறக் கண்ட நெறிமான் அவையம்’ எனக் குறிப்பிடும் நூல் – ………………….
அ) புறநானூறு
ஆ) பதிற்றுப்பத்து
இ) பரிபாடல்
ஈ) நற்றிணை
Answer:
அ) புறநானூறு

28.தனிச் சிறப்புப் பெற்றிருந்த அற அவையம் அமைந்திருந்த இடம் ………………….
அ) உறையூர்
ஆ) மதுரை
இ) திருநெல்வேலி
ஈ) மாமல்லபுரம்
Answer:
அ) உறையூர்

29.உண்மையான செல்வம் என்பது பிறர்துன்பம் நீக்குவது தான் என்றவர் ………………….
அ) நல்வேட்டனார்
ஆ) பரணர்
இ) ஆவூர் மூலங்கிழார்
ஈ) நக்கீரர்
Answer:
அ) நல்வேட்டனார்

30.சங்க இலக்கியங்கள் பேசும் சிறந்த அறம் ………………….
அ) உதவி
ஆ) கொடை
இ) வாய்மை
ஈ) பொருள்
Answer:
இ) வாய்மை

31.ஈதல் பற்றியச் செய்திகளைக் கூறும் அகஇலக்கியம் ………………….
அ) கலித்தொகை
ஆ) குறுந்தொகை
இ) அகநானூறு
ஈ) நற்றிணை
Answer:
அ) கலித்தொகை

32.செல்வத்துப் பயனே ஈதல் என்று கூறும் நூல் ………………….
அ) புறநானூறு
ஆ) கலித்தொகை
இ) அகநானூறு
ஈ) பரிபாடல்
Answer:
அ) புறநானூறு

Leave a Reply