10th Tamil Guide Unit 7.6 | 10th Tamil Samacheer kalvi Guide unit 7.6

10th Tamil Guide Unit 7.4

10th Tamil Guide Unit 7.4 | 10th Tamil Samacheer kalvi Guide unit 7.4

7.4 சிலப்பதிகாரம்

– இளங்கோவடிகள்
10th Tamil Guide Unit 7.4 Book Back answers.  TN 10th Tamil Samacheer kalvi Guide Unit 7.4 Book Back and Additional Question and answers. SSLC Tamil 7th Lesson Unit 7.1 to 7.6 Full Answer key based on reduced syllabus 2022. 10th Tamil Free Online Test. 10th Tamil இயல் 7.4  சிலப்பதிகாரம் Book Answers. TN 10th Tamil 7th Lesson Full Guide Full Answers. 10th Tamil Full Guidehttps://www.studentsguide360.com/  
  • 10th Tamil Free Online Test Unit 1 to 9 – Click Here
10th Tamil Guide Unit 7.4

 மருவூர்ப் பாக்கம்

வண்ணமும் சுண்ணமும் தண்நறுஞ் சாந்தமும் 
பூவும் புகையும் மேனிய விரையும்
பகர்வனர் திரிதரு நகர வீதியும்;
பட்டினும் மயிரினும் பருத்தி நூலிலும் 
கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்;
 
*தூசும் துகிரும் ஆரமும் அகிலும்
மாகஅறு முத்தும் மணியும் பொன்னும் 
அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா 
வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்;
 
பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு 
கூலம் குவித்த கூல வீதியும்; *
 
காழியர், கூவியர், கள்நொடை ஆட்டியர், 
மீன்விலைப் பரதவர், வெள்உப்புப் பகருநர், 
பாசவர், வாசவர், பல்நிண விலைகுரோடு 
ஓசுநர் செறிந்த ஊன்மலி இருக்கையும்;
 
கஞ்ச காரரும் செம்புசெய் குநரும் 
மரம்கொல் தச்சரும் கருங்கைக் கொல்லரும்
 
கண்ணுள் வினைஞரும் மண்ணீட்டு ஆளரும். 
பொன்செய் கொல்லரும் நன்கலம் தருநரும் 
துன்ன காரரும் தோலின் துன்னரும்
கிழியினும் கிடையினும் தொழில்பல பெருக்கிப்
பழுஇல் செய்வினைப் பால்கெழு மாக்களும்; 
குழவினும் யாழினும் குரல்முதல் எழும் 
வழுவின்றி இசைத்து வழித்திறம் காட்டும் 
அரும்பெறல் மரபின் பெரும்பாண் இருக்கையும்;
 
சிறுகுறுங் கைவினைப் பிறர்வினை யாளரொடு 
மறுகின்றி விளங்கும் மருவூர்ப் பாக்கமும் 
இந்திரவிழா ஊரெடுத்த கரதை ( அடி 13-39)

I. பாடலின் பொருள்

    புகார் நகர மருவூர்ப்பாக்கத்தின் வணிக வீதிகளில் வண்ணக்குழம்பு, சுண்ணப்பொடி, குளிர்ந்த மணச்சாந்து. பூ. நறுமணப் புகைப்பொருள்கள். அகில் முதலான மணப்பொருள்கள் விற்பவர்கள் வீதிகளில் வணிகம் செய்து கொண்டிருக்கின்றனர்.

    இங்குப் பட்டு. முடி, பருத்திநூல். இவற்றினைக் கொண்டு அழகாகப் பின்னிக் கட்டும் கைத்தொழில் வல்லுநரான நெசவாளர் வாழும் வீதிகள் உள்ளன. இங்குப் பட்டும் பவளமும், சந்தனமும் அகிலும், முத்தும் மணியும் பொன்னும் அளக்க முடியாத அளவிற்குக் குவிந்து கிடக்கும் வளம் நிறைந்த அகன்ற வணிக வீதிகளும் உள்ளன. மேலும் இவ்வீதிகளில் வேறு பலப்பல பண்டங்களின் விற்பனை நடைபெறுகின்றது. எட்டுவகைத் தானியங்களும் குவிந்து கிடக்கும் கூலக்கடைத் தெருக்களும் உள்ளன.

    மருவூர்ப்பாக்கத்தின் தெருக்களில், பிட்டு வணிகம் செய்பவரும் அப்பம் சுடுபவரும் கள் விற்கும் வலைச்சியரும் மீன் விற்கும் பரதவரும் உள்ளனர். மேலும் வெண்மையான உப்பு விற்கும் உமணரும் வெற்றிலை விற்பவரும் ஏலம் முதலான ஐந்து நறுமணப் பொருள் விற்பவரும் பல வகையான இறைச்சிகள் விற்பவரும் எண்ணெய் வணிகம் இங்கு, வணிகம் செய்கின்றனர்.

    இவற்றுடன் அத்தெருக்களில் பல்வகைப் பொருள்களை விற்கின்ற கடைகளும் உள்ளன. வெண்கலம், செம்புப் பாத்திரங்கள் செய்வோர், மரத்தச்சர், இரும்புக்கொல்லர், ஓவியர், மண் பொம்மைகள் செய்பவர், சிற்பிகள் ஆகியோர் உள்ளனர். பொற்கொல்லர், இரத்தின வேலை செய்பவர், தையற்காரர், தோல்பொருள் தைப்பவர், துணியாலும் கட்டைகளாலும் பொம்மைகள் செய்பவர் ஆகியோர் உள்ளனர்.

    இவ்வாறாகப் பழுதின்றிக் கைத்தொழில் பல செய்யும் மக்கள் வாழும் பகுதிகள் இங்கு நிறைந்துள்ளன. குழவிலும் யாழிலும் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்னும் ஏழு இசைகளைக் (ச. ரி, க, ம, ப, த, நி என்னும் ஏழு சுரங்களை) குற்றமில்லாமல் இசைத்துச் சிறந்த திறமையைக் காட்டும் பெரும்பாணர்களின் இருப்பிடங்களும் உள்ளன.

    இவர்களுடன் மருவூர்ப்பாக்கத்தின் தெருக்களில் சிறுசிறு கைத்தொழில் செய்வோர், பிறருக்கு ஏவல் செய்வோர் வாழும் இடங்களும் உள்ளன. இவை அனைத்தும் குற்றமின்றிச் சிறப்புடன் அமைந்து விளங்கப் பரந்து கிடந்தன.

II. சொல்லும் பொருளும்

  • சுண்ணம் – நறுமணப்பொடி,
  • காருகர் – நெய்பவர் (சாலியர்),
  • தூசு – பட்டு
  • துகிர் – பவளம்
  • வெறுக்கை – செல்வம்
  • நொடை – விலை
  • பாசவர் – வெற்றிலை விற்போர்
  • ஓசுநர் – எண்ணெய் விற்போர்
  • மண்ணுள் வினைஞர் – ஓவியர்
  • மண்ணீட்டாளர் – சிற்பி
  • கிழி – துணி

III. இலக்கணக் குறிப்பு

  • வண்ணமும் சுண்ணமும் – எண்ணும்மை
  • பயில்தொழில் – வினைத்தொகை

IV. பகுபத உறுப்பிலக்கணம்

மயங்கிய – மயங்கு + இ(ன்) + ய் + அ
  • மயங்கு – பகுதி
  • இ(ன்) – இறந்த கால இடைநிலை
  • ‘ன்’ – புணர்ந்து கெட்டது.
  • ய் – உடம்படு மெய்
  • அ – பெயரெச்ச விகுதி
ஐம்பெருங்காப்பிய முறைவைப்பு

சிந்தா மணியாம் சிலப்பதிகா ரம்படைத்தான் கந்தா மணிமே கலைபுனைந்தான் – நந்தா வளையா பதிதருவான் வாசவனுக் கீந்தான் திளையாத குண்டலகே சிக்கும்

-திருத்தணிகையுலர்,

IV. சிறு வினா

பாசவர், வாசவர், பல்நிண விலைஞர், உமணர் – சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்?

  • பாசவர் – வெற்றிலை விற்பவர்கள்
  • வாசவர் – நறுமணப் பொருட்களை விற்பவர்
  • பல்நிண விலைஞர் – பல்வகை இறைச்சிகளை விலைகூறி விற்பவர்கள்
  • உமணர் – உப்பு விற்பவர்

III. குறு வினா

“பகர்வனர் திரிதிரு நகரவீதியும்;
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்;
தூசும் துகிரும் ஆரமும் அகிலும்”

அ) இவ்வடிகள் இடம்பெற்ற நூல் எது?
சிலப்பதிகாரம்
ஆ) பாடலில் அமைந்த மோனையை எடுத்து எழுதுக.
பகர்வனர் – பட்டினும்
இ) எதுகைச் சொற்களை அடிக்கோடிடுக.
பட்டினும் – சுட்டு
ஈ) காருகர் – பொருள் தருக.
நெய்பவர் (நெசவாளர்)
உ) இப்பாடலில் காணப்படும் நறுமணப் பொருள்கள் யாவை?
சந்தனமும் அகிலும்

III. நெடு வினா

சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக  வளாகங்களோடும், அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக.

  • மருவூர்ப்பாக்கத்து வணிகவீதிகளில் வண்ணக்குழும்பு, சுண்ணப்பொடி விற்பது போல இன்றைய அங்காடிகளிலும், வணிக வளாகங்களிலும் விற்கப்படுகின்றன.
  • குளிர்ச்சி பொருந்திய சந்தனம், பூ வகைகள், ஊதுவத்தி, அகில் போன்ற நறுமணப் பொருள்களும் இன்றைய வணிக வளாகத்திலும், கிடைக்கின்றன, விற்கப்படுகின்றன.
  • பொன், மணி, முத்து, பவளம், ஆகியவை மருவூர்ப்காக்க வீதிகளில் விற்பனை செய்யப்பட்டது. இன்று வணிக வளாகத்திலும் நகைக்கடைகளில் பொன், மணி, முத்து, பவளம் விற்கப்படுகிறது,
  • வணிக வீதிகளில் குவியலாகக் கிடந்து தானிய வகைகள்.
  • இன்று அங்காடிகளில் தானிய வகைகளை எடை போட்டு பொட்டலங்களில் கட்டி விற்பனை செய்கின்றனர்.
  • மரூவூர்ப்பாக்கத் தெருக்களில் உப்பு, வெற்றிலை, நறுமணப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது போல், இன்றைய அங்காடிகளிலும் விற்கப்படுகின்றது.
  • வெண்கலம், செம்புப் பாத்திரம், மரப்பொருட்கள், இரும்புப் பொருட்கள் கிடைத்ததைப் போல, இன்றைய அங்காடிளிலும் விற்கப்படுகின்றது.
  • வெண்கலம், செம்புப் பாத்திரம், மரப்பொருட்கள், இரும்புப் பொருட்கள் கிடைத்ததைப் போல இன்றைய அங்காடி, வணிக வளாகங்களில் கிடைப்பதோடு, கூடுதலாக பல நவீனப் பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள (நெகிழி) பொருள்கள் நவீன அலங்காரங்களுடன் கிடைக்கின்றன.
  • மருவூர்பாக்க வீதிகளில் பொற்கொல்லர், இரத்தின வேலை செய்பவர், தையற்காரர், தோல் பொருள் செய்பவர், துணியாலும், கட்டையாலும் பொம்மை செய்பவர்கள் எனப் பல திறப்பட்ட கைவினைஞர்கள் இருந்தனர்.
  • அதைப்போலவே, இன்றைய அங்காடிகளிலும், வணிக வளாகங்களிலும் இத்தகு கைவினைக் கலைஞர்கள், நவீன தொழில் நுட்பத்துடன் தொழில் வல்லோராய் இருக்கின்றார்கள். அழகு மிளிரும் கைவினைப் பொருள்களைச் செய்து விற்பனையும் செய்கின்றனர்.

 சிலப்பதிகாரம் – கூடுதல் வினாக்கள் 

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. இளங்கோவடிகள் ____________ சேர்ந்தவர்
விடை : சேர மரபைச்


2. ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று ____________
விடை : சிலப்பதிகாரம்

3. சிலப்பதிகாரத்தில் ____________, ____________ உள்ளன
விடை : மூன்று காண்டங்கள், முப்பது காதைகள்

4. சிலப்பதிகாரத்தோடு தொடர்புடைய காப்பியம் ____________
விடை : மணிமேகலை

5. சிலப்பதிகாரத்தின் பெரும் பிரிவு ____________
விடை : காண்டம்

6. சிலப்பதிகாரம் ____________ பற்றிய செய்திகளைக் கூறுகிறது
விடை : மூவேந்தர்களின்

II. சிறு வினா

1. சிலப்பதிகாரத்தில் உள்ள காண்டங்கள் எத்தனை? அவை யாவை?

 

சிலப்பதிகாரத்தில் உள்ள காண்டங்கள் மூன்று.
அவை

  • புகார்க்காண்டம்
  • மதுரைக்காண்டம்
  • வஞ்சிக்காண்டம்

2. இரட்டைக் காப்பியங்கள் எவை? அவ்வாறு அழைக்கப்படக் காரணம் யாது?

இரட்டைக் காப்பியங்கள் என்பது சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகும்
காரணம்:-

  • கோவலன், கண்ணகி, மாதவி வாழ்க்கையைப் பாடுவது மணிமேகலைக் காப்பியத்துடன் கதைத்தொடர்பு கொண்டிருப்பதால் இவை இரண்டும் இரட்டைக் காப்பியங்கள் என அழைக்கப்படுகின்றன

3. சிலப்பதிகாரத்தின் சிறப்பு பெயர்கள் யாவை?

  • முத்தமிழ்காப்பியம்
  • குடிமக்கள் காப்பியம்

4. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் (உரைபாட்டு மடை) விளக்குக

  • உரைப்பாட்டு மடை என்பது சிலப்பதிகாரத்தில் வரும் தமிழ்நடை. இது உரைநடைப்பாங்கில் அமைந்திருக்கும் பாட்டு

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1.மூவேந்தர் பற்றிய செய்திகளைக் கூறும் நூல் …………………….

அ) சிலப்பதிகாரம்
ஆ) மணிமேகலை
இ) வளையாபதி
ஈ) குண்டலகேசி
Answer:
அ) சிலப்பதிகாரம்


2.சிலப்பதிகாரத்தில் உள்ள காண்டங்கள் ……………………
அ) ஐந்து
ஆ) ஏழு
இ) மூன்று
ஈ) ஒன்பது
Answer:
இ) மூன்று

3.சிலப்பதிகாரத்தின் காதைகள் ………………………..
அ) 30
ஆ) 27
இ) 33
ஈ) 36
Answer:
அ) 30

4.‘அடிகள் நீரே அருளுக’ என்று இளங்கோவடிகளிடம் வேண்டிக் கொண்டவர் ……………………..
அ) கம்பர்
ஆ) கபிலர்
இ) திருத்தக்கதேவர்
ஈ) சீத்தலைச்சாத்தனார்
Answer:
ஈ) சீத்தலைச்சாத்தனார்

5.சிலப்பதிகாரத்தோடு தொடர்புடைய காப்பியம் ……………….
அ) மணிமேகலை
ஆ) சூளாமணி
இ) வளையாபதி
ஈ) நீலகேசி
Answer:
அ) மணிமேகலை

6.நாட்டுதும் யாமோர் பாட்டுடைச்செய்யுள் என்றவர் ………………..
அ) பாரதியார்
ஆ) கம்பர்
இ) இளங்கோவடிகள்
ஈ) உமறுப்புலவர்
Answer:
இ) இளங்கோவடிகள்

7.மணிமேகலையின் ஆசிரியர் …………………..
அ) இளங்கோவடிகள்
ஆ) சீத்தலைச்சாத்தனார்
இ) திருத்தக்கதேவர்
ஈ) புத்தமித்திரர்
Answer:
ஆ) சீத்தலைச்சாத்தனார்

8.இந்திரவிழா ஊரெடுத்த காதை அமைந்த காண்டம் ……………….
அ) புகார்க்காண்டம்
ஆ) மதுரைக்காண்டம்
இ) வஞ்சிக்காண்டம்
ஈ) பாலகாண்டம்
Answer:
அ) புகார்க்காண்டம்

9.சிலப்பதிகாரத்தின் பெரும் பிரிவு ………………
அ) பாகம்
ஆ) அங்கம்
இ) காண்டம்
ஈ) காதை
Answer:
இ) காண்டம்

10.சிலப்பதிகாரத்தின் உட்பிரிவு …………….
அ) படலம்
ஆ) சருக்கம்
இ) காதை
ஈ) காட்சி
Answer:
இ) காதை

11.சிலப்பதிகாரத்தில் வரும் தமிழ் நடை……………..
அ) உரைப்பாட்டு மடை
ஆ) உரைநடை
இ) வசனநடை
ஈ) செய்யுள் நடை
Answer:
அ) உரைப்பாட்டு மடை

12.பேசும் மொழியின் ஓட்டம் என்பது ………………….
அ) மொழி
ஆ) உரை
இ) காதை
ஈ) காட்சி
Answer:
ஈ) காட்சி

13.சிலப்பதிகாரமும் மணிமேகலையும்……………………. ஆகும்.
அ) இணைகாப்பியம்
ஆ) முதற்காப்பியம்
இ) பினைகாப்பியம்
ஈ) இரட்டைக்காப்பியம்
Answer:
ஈ) இரட்டைக்காப்பியம்

14.கண்ணகியும் கோவலனும் சென்று அடைந்த ஊர்……………………..
அ) காவிரிப்பூம்பட்டினம்
ஆ) திருவரங்கம்
இ) உறையூர்
ஈ) கொடும்பாளூர்
Answer:
ஈ) கொடும்பாளூர்

15.இளங்கோவடிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
அ) சேர
ஆ) சோழ
இ) பாண்டிய
ஈ) பல்லவ
Answer:
அ) சேர

16.அழகர் மலை என்பது …………………..
அ) திருவரங்கம்
ஆ) திருமால்குன்றம்
இ) வேலவன் குன்றம்
ஈ) மால்குன்றம்
Answer:
ஆ) திருமால்குன்றம்
 
17.கோவலனையும் கண்ணகியையும் அழைத்துச் சென்றவர் ………………….
அ) கவுந்தியடிகள்
ஆ) மாதரி
இ) மாதவி
ஈ) ஆயர்குலப்பெண்
Answer:
அ) கவுந்தியடிகள்

18.கணவனை இழந்த கண்ணகி சென்று அடைந்த இடம்…………………
அ) வைகைக்கரை
ஆ) வேங்கைக்கானல்
இ) அழகர்மலை
ஈ) உறையூர்
Answer:
ஆ) வேங்கைக்கானல்

19.பெருங்குணத்துக் காதலாள் யார்?
அ) கண்ணகி
ஆ) மாதவி
இ) மாதரி
ஈ) மணிமேகலை
Answer:
அ) கண்ணகி

20.சொல்லையும் பொருளையும் பொருத்துக.
அ) தூசு – 1. செல்வம்
ஆ) துகிர் – 2. பட்டு
இ) வெறுக்கை – 3. விலை
ஈ) நொடை – 4. பவளம்
அ) 3, 1, 4, 2
ஆ) 2, 4, 1, 3
இ) 3, 1, 2, 4
ஈ) 2, 1, 3, 4
Answer:
ஆ) 2, 4, 1, 3

21.மருவூர்ப்பாக்கம் அமைந்த நகரம் ………….. ஆகும்.
அ) புகார்
ஆ) மதுரை
இ) வஞ்சி
ஈ) காஞ்சி
Answer:
அ) புகார்

22.மண்ணீ ட்டாளர் எனக் குறிக்கப் பெறுபவர் ……………………….
அ) ஓவியர்
ஆ) வணிகர்
இ) சிற்பி
ஈ) சாலியர்
Answer:
இ) சிற்பி

23.கூவம் குவித்த – இதில் ‘கூவம்’ என்பதன் பொருள் …………………….
அ) தானியம்
ஆ) குப்பை
இ) பழம்
ஈ) தோல்
Answer:
அ) தானியம்

24.கள் விற்பவர் ……………………….
அ) பரதவர்
ஆ) உமணர்
இ) பாசவர்
ஈ) வலைச்சியர்
Answer:
ஈ) வலைச்சியர்

25.பொருத்துக.
1. கண்ணுள் வினைஞர் – அ) சிற்பி
2. மண்ணீட்டாளர் – ஆ) ஓவியர்
3. கிழி – இ) தொழில்
4. வினை – ஈ) துணி
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

26.சொல்லும் பொருளும் பொருந்தாத சொல் எது?
அ) சுண்ண ம் – நறுமணப்பொடி
ஆ) காருகர் – நெய்பவர்
இ) தூசு – பட்டு
ஈ) துகிர் முத்து
Answer:
ஈ) துகிர் – முத்து

27.சொல்லும் பொருளும் சரியாகப் பொருந்திய சொல் எது?
அ) சுண்ணம் – நெய்பவர்
ஆ) காருகர் – பவளம்
இ) தூசு – பட்டு
ஈ) துகிர் நறுமணப்பொடி
Answer:
இ) தூசு – பட்டு

28.சொல்லும் பொருளும் சரியாகப் பொருந்திய சொல் எது?
அ) வெறுக்கை – செல்வம்
ஆ) நொடை – எண்ணெய் விற்போர்
இ) பாசவர் – விலை
ஈ) ஓசுநர் – வெற்றிலை விற்போர்
Answer:
அ) வெறுக்கை – செல்வம்

29.‘பருத்தி நூலினும் கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்’ இவ்வடிகளில் ‘காருகர்’ என்பதைச் சுட்டும் சொல் …………..
அ) நெய்பவர்
ஆ) நுண்வினை
இ) சிற்பி
ஈ) ஓவியர்
Answer:
அ) நெய்பவர்
 
30.‘அருங்கல வறுக்கையோடு அளந்துகடை அறியா’ இவ்வடிகளில் ‘வெறுக்கை’ என்பதைச் சுட்டும் சொல் ……………….
அ) துணி
ஆ) பவளம்
இ) பட்டு
ஈ) செல்வம்
Answer:
ஈ) செல்வம்

31.‘ஓசுநர் செறிந்த ஊன்மலி இருக்கையும்’ இவ்வடிகளில் ‘ஓசுநர்’ என்பதைச் சுட்டும் சொல்
அ) எண்ணெய் விற்போர்
ஆ) வெற்றிலை விற்போர்
இ) சிற்பி
ஈ) துணி விற்போர்
Answer:
அ) எண்ணெய் விற்போர்

32.‘கண்ணுள் வினைஞரும் மண்ணீட்டு ஆளரும்’ இவ்வடிகளில் ‘மண்ணுள்’ என்பதைச் சுட்டும் சொல்
அ) சிற்பி
இ) சாலியர்
ஆ) ஓவியர்
ஈ) செல்வம்
Answer:
ஆ) ஓவியர்

33.‘வண்ணமும் சுண்ணமும் தண்நறுஞ் சாந்தமும்’ இவ்வடிகளில் அமைந்த நயம்
அ) எதுகை
ஆ) மோனை
இ) முரண்
ஈ) இயைபு
Answer:
அ) எதுகை

Leave a Reply