10th Tamil Guide Unit 7.1 | 10th Tamil Samacheer kalvi Guide Unit 7.1
7.1. சிற்றகல் ஒளி
10th Tamil Guide Unit 7.1 Book Back answers. TN 10th Tamil Samacheer kalvi Guide Unit 7.1 Book Back and Additional Question and answers. SSLC Tamil 7th Lesson Unit 7.1 to 7.6 Full Answer key based on reduced syllabus 2022. 10th Tamil Free Online Test. 10th Tamil இயல் 7.1. சிற்றகல் ஒளி Book Answers. TN 10th Tamil 7th Lesson Full Guide Full Answers. 10th Tamil Full Guide. https://www.studentsguide360.com/
I. பலவுள் தெரிக
1. ‘மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்’ – மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே-
- திருப்பதியும் திருத்தணியும்
- திருத்தணியும் திருப்பதியும்
- திருப்பதியும் திருச்செந்தூரும்
- திருப்பரங்குன்றமும் பழனியும்
விடை : திருப்பதியும் திருத்தணியும்
2. தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது ………..
- திருக்குறள்
- புறநானூறு
- கம்பராமாயணம்
- சிலப்பதிகாரம்
விடை : சிலப்பதிகாரம்
10th Tamil Guide Unit 7.1
II. குறு வினா
1. வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி. என்பதற்குச் சான்று தருக.
- ம.பொ.சி. வறுமையிலும் நூல் வாங்குவதற்கும் பணமில்லாத நிலையில் பழைய புத்தகங்கள் வாங்கி படிப்பார்.
- இவர் விரும்பமான புத்தகங்களை குறைந்த விலைக்கு வாங்கும் வழகம் உள்ளவர்
- இவர் பல வேளைகளில் பட்னி கிடந்து புத்தகம் வாங்கி ஆனந்தம் அடைவார்
- செவி வழியாகவும் இலக்கிய அறிவை பெற்றார்.
2. பொருத்தமான இடங்களில் நிறுத்தக் குறியிடுக.
- பழங்காலத்திலே பாண்டியன் ஆண்ட பெருமையைக்கூறி சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தேன் – ம.பொ.சி.
- பழங்காலத்திலே பாண்டியன் ஆண்ட பெருமையைக்கூறி, சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி, சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தேன். – ம.பொ.சி.
III. சிறு வினா
தலையைக் கொடுத்தேனம் தலைநகரைக் காப்போம் – இடம் சுட்டி பொருள் விளக்குக
இடம்:-
- ம.பொசி.யின் தன் வரலாற்றப் பகுதியில் சிற்றகல் ஒளி என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ளன.
பொருள்:-
- ஆந்திர மாநிலம் பிரியும் போது சென்னைதான் அதன் தலைநகராக இருக்க வேண்டும் என்று அந்திர தலைவர்கள் விரும்பினர். அதனை எதிர்த்து ம.பொ.சி. கூறிய கூற்று இது.
விளக்கம்:-
- மாநகரத் தந்தை செங்கல்வராயன் தலைமையில் ஒரு கூட்டத்தை கூட்டினர். அப்போது, தமிழ் மாநிலத்தின் தலைநகர் “சென்னை” என்ற தீர்மானத்தை முன் மொழிந்தனர்
- முன்மொழிந்து “தலையை கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” என்று ம.பொ.சி முழங்கினார்.
- 25.03.1953-ல் பிரதமர் நேரு, சென்னை தமிழருக்கே என்ற உறுதிமொழியை நாடளுமன்றத்தில் நடுவணரசின் சார்பில் வெளியிட்டார்.
10th Tamil Guide Unit 7.1
IV. நெடு வினா
நாட்டு விழாக்கள் – விடுதலைப் போராட்ட வரலாறு – நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர் பங்கு – குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் “மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும்” என்ற தலைப்பில் மேடை உரை எழுதுக.
மாணவப் பருவமும் நாட்டுப்பற்றும்
- அன்பார்ந்த அவையோரே! வணக்கம்! மாணவப் பருவத்திலே நாம் நாட்டுப்பற்று உடையர்களாய் இருத்தல் வேண்டும் என்பதைப் பற்றி உங்கள் முன் பேச வந்துள்ளேன்.
பொருள்:-
- நாட்டின் எதிர்காலம் வகுப்பறைகளில் தான் வடிவமைக்கப்டுகிறது என்றார் நேரு. கல்வியோடு நாட்டுப்பற்றையும் கண் எனப் போற்றி வளர்க்க வேண்டும்.
- சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நாட்டு விழாக்களை கொண்டாடும் போது நம் முன்னோர்கள் சிந்திய கண்ணீரையும், செந்நீரையும், விலைமதிப்பில்லாத உயிரையும் மனப்பூர்வமாக உணர்ந்து செயல்பட வேண்டும்.
- அகிம்சை, தீண்டாமை விலக்கு, கதர் விறபனை, வெள்ளையேன வெளியேறு போன்ற விடுதலைப் போராட்ட முறைகளை நாம் மறத்தல் கூடாது.
- செக்கடியில், சிறைச்சாலையிலும் நம் வீரர்கள் பட்ட துன்பத்தை எண்ணிப் பார்த்து, நாட்டு விழாக்களைக் கொண்டுடாடும் போது நாட்டைக் காக்கும் சூளுரை ஏற்பவர்களாகவும், அதனைச் செயல்படுத்துகிறவர்களாகவும் நாம் இருத்தல் வேண்டும்.
- மாணவப் பருவத்தில் நாட்டு நலப்பணித்திட்டம், தேசிய மாணவர் படை ஆகியவற்றில் இணைந்து நாட்டுப் பற்றையும், சேவை மனப்பான்மையையும் நாம் வளர்த்து கொண்டால் நாம் நாட்டைக் காக்கும் நல்லோராய், பற்றாளராய் மாற முடியும்
- கல்வி, பொருளாதாரம், தொழில் பெருக்கம் இவற்றில் நாம் அக்கறை உடையவர்களாய் இருப்பதும் நாட்டுப்பற்றே
- நம் நாட்டின் உயர்வுக்கும் முற்போக்கு வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டையாக இருப்பவைகளை முறியடித்து கல்வி, அறிவியல், தொழில்நுட்பபம் போன்ற துறைகளில் கவனம் செலுத்த வேண்டும்.
- சொந்த நலன் கருதி சொந்த நாட்டையே சீரழிக்கும் கயவர் போல் இல்லாமல் இருத்தல் வேண்டும்.
விளக்கம்:-
- நாடு நமக்கு என்ன செய்தது என்பதை நினைக்காமல் நாட்டிற்காக நாம் நல்ல செயல்களை செய்வேம் என்று கூறி என் உரையை நிறைவு செய்கிறேன்.
சிறந்த கல்வி – கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. ம.பாெ.சி-யின் இயற்பெயர் ____________
விடை :
2. காந்தியடிகள் சத்தியாகிரத்தை தொடங்கிய ஆண்டு ____________
விடை : 1906
3. இந்தியாவை விட்டு வெளியேறு என்ற தீர்மானத்தை இந்திய பேராயக் கட்சி நிறைவேற்றிய நாள் ____________
விடை : 1942 ஆகஸ்ட் 8
4. ம.பொ.சி. சாகித்திய அகாதெமி விருது ____________ -ல் பெற்றார்
விடை : 1966
5. ____________ என ம.பொசி. போற்றப்பட்டார்
விடை : சிலம்புச் செல்வர்
II. குறு வினா
1. 1906-ம் ஆண்டின் சிறப்புகள் யாவை?
- ம.பொ.சி. சென்னை ஆயிரம் விளக்கு சால்வன் குப்பத்தில் 1906-ல் பிறந்தார்
- காந்தியடிகள் சத்தியாகிர அறப்போரினை தென்னாப்பிரிக்காவில் தொடங்கினார்
- ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதேசிக் கப்படல் நிறுவனத்தை தொடங்கினார் வ.உ.சி
2. ம.பொ.சி பற்றி குறிப்பு வரைக
- சிலம்புச் செல்வர் என்று போற்றப்படுபவர்
- இவர் விடுதலை பேராட்ட வீரர் (1906 – 1995)
- சட்டமன்ற பேரவைத் தலைவர் (1952-1954)
- சட்ட மேலவை தலைவர் (1972 – 1978)
- தமிழரசுக் கழகத்தை தொடங்கியவர்
- “வள்ளலால் கண்ட ஒருமைப்பாடு” என்ற இவரின் நூலுக்கா சாகித்தி அகாதெமி விருது பெற்றார்
3. சென்னையை மீட்போம் என்று ம.பொ.சி குறிப்பிடுவன பற்றி கூறுக
- ஆந்திர மாநிலம் பிரியும் போது சென்னைதான் அதன் தலைநகராக இருக்க வேண்டும் என்று அந்திர தலைவர்கள் விரும்பினர்.
- தலைநகர் காக்க தன் முதல்வர் பதவியை துறக்க முன் வந்தார் இராஜாஜி
- மாநகரத் தந்தை செங்கல்வராயன் தலைமையில் ஒரு கூட்டத்தை கூட்டினர். அப்போது, தமிழ் மாநிலத்தின் தலைநகர் “சென்னை” என்ற தீர்மானத்தை முன் மொழிந்தனர்
- முன்மொழிந்து “தலையை கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” என்று ம.பொ.சி முழங்கினார்.
- இதுவே சென்னையை மீட்போம் என்று ம.பொ.சி குறிப்பிடுவனவாகும்.
10th Tamil Guide Unit 7.1 – கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
1.ம.பொ.சி.க்கு பெற்றோர் இட்ட பெயர் ……………..
அ) சிவஞானம்
ஆ) ஞானப்பிரகாசம்
இ) பிரகாசம்
ஈ) பொன்னுசாமி
Answer:
ஆ) ஞானப்பிரகாசம்
2.சிவஞானி என்ற பெயரே……………..
என நிலைத்தது.
அ) சிவஞானம்
ஆ) சிவப்பிரகாசம்
இ) ஞானப்பிரகாசம்
ஈ) பிரகாசம்
Answer:
அ) சிவஞானம்
3.ம.பொ.சியின் இயற்பெயரை மாற்றிய முதியவர் ……………..
அ) பொன்னுசாமி
ஆ) சரவணன்
இ) சரபையர்
ஈ) சிவஞானி
Answer:
இ) சரபையர்
4.காந்தியடிகள் ‘சத்தியாகிரகம்’ என்னும் அறப்போர் முறையைத் தொடங்கிய ஆண்டு ……………..
அ) 1806
ஆ) 1906
இ) 1916
ஈ) 1919
Answer:
ஆ) 1906
5.ஒருவன் அறிவு விளக்கம் பெறுவதற்கான இரண்டு வழிகள் ……………..
அ) கல்வி, கேள்வி
ஆ) கல்வி, ஓவியம்
இ) கலை, பண்பாடு
ஈ) கலை, மேடைப்பேச்சு
Answer:
இ) கலை, பண்பாடு
6.‘இந்தியாவை விட்டு வெளியேறு’ என்ற தீர்மானத்தை இந்தியப் பேராயக் கட்சி நிறைவேற்றிய நாள்……………..
அ) 1942 ஜனவரி 8
ஆ) 1939 ஆகஸ்டு 8
இ) 1942 ஆகஸ்டு 8
ஈ) 1947 ஆகஸ்டு 18
Answer:
இ) 1942 ஆகஸ்டு 8
7.பசல் அலி ஆணையம் நடுவண் அரசுக்குத் தந்த பரிந்துரை வெளியான நாள் ……………..
அ) 1955 அக்டோபர் 10
ஆ) 1957 ஆகஸ்டு 10
இ) 1957 ஆகஸ்டு 10
ஈ) 1949 அக்டோபர் 15
Answer:
அ) 1955 அக்டோபர் 10
8.ஆஸ்டிரியா நாட்டின் தலைநகர் ……………..
அ) இலண்ட ன்
ஆ) டெல்அவிவ்
இ) வியன்னா
ஈ) சிட்னி
Answer:
இ) வியன்னா
9.‘சிற்றகல் ஒளி’ இடம் பெற்ற நூல் ……………..
அ) எனது போராட்டம்
ஆ) என் பயணம்
இ) என் விருப்பம்
ஈ) என் பாதை
Answer:
அ) எனது போராட்டம்
10.ம.பொ.சிவஞானத்தின் சிறப்புப் பெயர் ……………..
அ) சொல்லின் செல்வர்
ஆ) நாவலர்
இ) சிலம்புச் செல்வர்
ஈ) சிலம்பு அறிஞர்
Answer:
இ) சிலம்புச் செல்வர்
11.சாகித்திய அகாதெமி விருது பெற்ற ம.பொ.சியின் நூல்……………..
அ) வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு
ஆ) மனுமுறை கண்ட வாசகம்
இ) எனது போராட்டம்
ஈ) வானம் வசப்படும்
Answer:
அ) வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு
12.ம.பொ.சி சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆண்டு ……………..
அ) 1956
ஆ) 1966
இ) 1976
ஈ) 1986
Answer:
ஆ) 1966
13.மார்ஷல் ஏ. நேசமணிக்குச் சிலையோடு மணி மண்டபமும் அமைந்துள்ள ஊர்……………..
அ) கன்னியாகுமரி
ஆ) தூத்துக்குடி
இ) நெல்லை
ஈ) நாகர்கோவில்
Answer:
ஈ) நாகர்கோவில்
14.ம.பொ.சிவஞானம் வாழ்ந்த காலம் ……………..
அ) 1906-1955
ஆ) 1906-1995
இ) 1906 -1966
ஈ) 1906-1998
Answer:
ஆ) 1906-1995
15.ம.பொ.சி. சிலை அமைந்துள்ள இடங்கள்……………..
அ) திருத்தணி, தியாகராயநகர்
ஆ) திருத்தணி, திருநெல்வேலி
இ) திருத்தணி, கன்னியாகுமரி
ஈ) திருத்தணி, திருப்பதி
Answer:
அ) திருத்தணி, தியாகராயநகர்
16.இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிகவும் சிறப்புடைய ஆண்டு ……………..
அ) 1906
ஆ) 1908
இ) 1947
ஈ) 1946
Answer:
அ) 1906
17.மா.பொ.சி பிறந்த சென்னை வட்டம் ……………..
அ) ஆயிரம் விளக்கு
ஆ) சால்வன் குப்பம்
இ) திருவல்லிக்கேணி
ஈ) சேப்பாக்கம்
Answer:
அ) ஆயிரம் விளக்கு
18.மா.பொ.சி பிறந்த சென்னைப் பகுதி ……………..
ஆ) சால்வன் குப்பம்
இ) திருவல்லிக்கேணி
ஈ) சேப்பாக்கம்
Answer:
ஆ) சால்வன் குப்பம்
19.மா.பொ.சி பள்ளியில் படிக்கும் போது ஆசிரியர் கண்டிக்க காரணம் ……………..
அ) தாமதமாக வந்தது
ஆ) பாடப் புத்தகம் கொண்டுவராமை
இ) படிக்காமை
ஈ) வீட்டுப் பாடம் எழுதாமை
Answer:
ஆ) பாடப் புத்தகம் கொண்டுவராமை
20.மா.பொ.சியின் பள்ளி வாழ்க்கை முடிவுற்ற வகுப்பு – ……………..
அ) ஐந்தாம் வகுப்பு
ஆ) மூன்றாம் வகுப்பு
இ) ஆறாம் வகுப்பு
ஈ) இரண்டாம் வகுப்பு
Answer:
ஆ) மூன்றாம் வகுப்பு
21.மா.பொ.சிக்கு இளமையிலேயே பாக்களைப் பயிற்றுவித்தவர் ……………..
அ) அன்னை
ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்
இ) மங்கலங்கிழார்
ஈ) மார்சல் ஏ. நேசமணி
Answer:
அ) அன்னை
22.மா.பொ.சி அறிவு விளக்கம் பெற எடுத்துக்கொண்ட வழி ……………..
அ) கல்வி
ஆ) கேள்வி
இ) கட்டுரை
ஈ) சிறுகதை
Answer:
ஆ) கேள்வி
23.மா.பொ.சிக்குக் கேள்வி ஞானம் பெருக்கியவர் ……………..
அ) அன்னை
ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்
இ) மங்கலங்கிழார்
ஈ) மார்சல் ஏ.நேசமணி
Answer:
ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்
24.வடக்கெல்லைத் தமிழர்களை ஒருங்கிணைத்துத் தமிழுணர்வு கொள்ளச் செய்தவர்……………..
அ) அன்னை
ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்
இ) மங்கலங்கிழார்
ஈ) மார்சல் ஏ.நேசமணி
Answer:
இ) மங்கலங்கிழார்
25.இளம் வயதிலேயே சமூக விடுதலைக்காகப் போராடிய வழக்கறிஞர்……………..
அ) அன்னை
ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்
இ) மங்கலங்கிழார்
ஈ) மார்சல் ஏ.நேசமணி
Answer:
ஈ) மார்சல் ஏ. நேசமணி
26.நாகர்கோவில் நகர்மன்றத்தலைவர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகிய பொறுப்புகளை வகித்தவர் ……………..
அ) அன்னை
ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்
இ) மங்கலங்கிழார்
ஈ) மார்சல் ஏ.நேசமணி
Answer:
ஈ) மார்சல் ஏ.நேசமணி
27.குமரிமாவட்டப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர் ……………..
அ) அன்னை
ஆ) திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள்
இ) மங்கலங்கிழார்
ஈ) மார்சல் ஏ.நேசமணி
Answer:
ஈ) மார்சல் ஏ.நேசமணி
28.‘தலையைக் கொடுத்தாவது தலைநகரைக் காப்போம்’ என்று முழங்கியவர் ……………..
அ) மா.பொ .சி
ஆ) செங்கல்வராயன்
இ) மங்கலங்கிழார்
ஈ) மார்சல் ஏ.நேசமணி
Answer:
அ) மா.பொ .சி
29.சிலம்புச் செல்வர் என்று போற்றப்படுபவர்……………..
அ) மா.பொ .சி
ஆ) செங்கல்வராயன்
இ) மங்கலங்கிழார்
ஈ) மார்சல் ஏ.நேசமணி
Answer:
அ) மா.பொ.சி
30.மா.பொ.சிவஞானத்தின் ‘எனது போராட்ட நூல்’ ஒரு ……………..
அ) தன்வரலாறு
ஆ) கவிதை
இ) சிறுகதை
ஈ) புதினம்
Answer:
அ) தன்வரலாறு
31.தமிழரசுக் கழகத்தைத் தொடங்கியவர் ……………..
அ) மா.பொ .சி
ஆ) செங்கல்வராயன்
இ) மங்கலங்கிழார்
ஈ) மார்சல் ஏ.நேசமணி
Answer:
அ) மா.பொ.சி
32.பொருத்துக.
1. திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள் – அ) வடக்கெல்லைத்தமிழ் மக்களை ஒருங்கிணைத்த தமிழாசான்
2. மங்கலங்கிழார் – ஆ) மா.பொ.சிக்குக் கேள்வி ஞானம் பெருக்கியவர்
3. மார்சல் ஏ.நேசமணி – இ) மா.பொ.சிவஞானம்
4. சிலம்புச் செல்வர் – ஈ) குமரிமாவட்டப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர்
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
33.பொருத்துக.
1. ஞானியாரடிகள் – அ) தமிழாசான்
2. மங்கலங்கிழார் – ஆ) வழக்கறிஞர்
3. மார்சல் ஏ.நேசமணி – இ) முதல்வர்
4. இராஜாஜி – ஈ) திருப்பாதிரிப்புலியூர்
அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
34.பொருத்துக.
1. வாஞ்சு – அ) மாநகரத் தந்தை
2. செங்கல்வராயன் – ஆ) நீதிபதி
3. தேவசகாயம், செல்லையா – இ) மொழிவாரி ஆணையத் தலைமை
4. சர்தார் கே.எம்.பணிக்கர் – ஈ) தமிழரசுக் கழகத் தோழர்கள்
அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ
ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ
ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ
Answer:
இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ