10th Tamil Guide Unit 6.4
இயல் 6.4. கம்பராமாயணம்
– கம்பர்
TN 10th Standard Tamil Samacheer kalvi Guide Unit 6.4 Book Back and additional questions and answers. SSLC Tamil 6th Lesson Full Answer key based on reduced syllabus 2022. 10th Tamil Free Online Test. 10th Tamil Chapter 6.4, இயல் 6.4 கம்பராமாயணம் Book Answers. TN 10th Tamil 6th Lesson Unit 6.1 to 6.7 Full Answers. 10th Tamil Full Guide. https://www.studentsguide360.com/
-
10th Tamil Free Online Test Unit 1 to 9 – Click Here
பால காண்டம் – ஆற்றுப் படலம்
தா துகு சோலை தோறுஞ் சண்பகக் காடு தோறும்போ தவிழ் பொய்கை தோ றும் புதுமணற் றடங்க டோறும்மா தவி வேலிப் பூக வனம்தொ றும் வயல்க டோறும்ஓதிய வுடம்பு தோறு முயிரென வுலாய தன்றே. (31)
பாடலின் பொருள்
பாலகாண்டம் – நாட்டுப்படலம்
தண்டலை மயில்க ளாடத் தாமரை விளக்கந் தாங்கக்கொண்டல்கண் முழவி னேங்கக் குவளை கண் விழித்து நோக்கத்தெண்டிரை யெழினி காட்டத் தேம்பிழி மகர யாழின்வண்டுக ளினிது பாட மருதம்வீற் றிருக்கு மாதோ.* (35)
பாடலின் பொருள்
பாலகாண்டம் – நாட்டுப்படலம்
வண்மை யில்லையோர் வறுமை யின்மையாற்நிண்மை யில்லையோர் செறுந ரின்மையால்உண்மை யில்லைபொய் யுரையி லாமையால்வெண்மை யில்லைபல் கேள்வி மேவலால் (84)
அயோத்தியா காண்டம் – கங்கைப்படலம்
வெய்யோனொளி தன்மேனியின் விரிசோதியின் மறையப்பொய்யோவெனு மிடையாளொடு மிளையானொடும் போனான்மையோமர கதமோமறி கடலோமழை முகிலோஐயோவிவன் வடிவென்பதொ ரழியாவழ குடையான்.* (1926)
பாடலின் பொருள்
I. பலவுள் தெரிக.
கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?
- நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்
- ஊரில் விளைச்சல் இல்லாததால்
- அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்
- அங்கு வறுமை இல்லாததால்
விடை : அங்கு வறுமை இல்லாததால்
10th Tamil Guide Unit 6.4
II. சிறு வினா
உறங்குகின்ற கும்பகன்ன ’எழுந்திராய் எழுந்திராய்’
காலதூதர் கையிலே ’உறங்குவாய் உறங்குவாய்’
கும்பகன்னனை என்ன சொல்லி எழுப்புகிறார்கள்? எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்?
- கும்பகருணனே உம்முடைய பொய்யான வாழ்வு எல்லாம் இன்றிலிருந்து இறங்கத் தொடங்கி விட்டது. அதனைக் காண்பதற்கு எழுந்திடுவாய் என்று சொல்லி எழுப்பினார்கள்.
- வில்லைப் பிடித்த காலனுக்குத் தூதரானவர் கையிலே படுத்து உறங்கச் சொல்கிறார்கள்.
III. சிறு வினா
‘கடற்கரையில் உப்புக் காய்ச்சுதல் நடைபெறுகிறது; மலைப் பகுதிகளில் மலைப் பயிர்களும் நிலப் பகுதிகளில் உழவுத் தொழிலும் நடைபெறுகின்றன.’ காலப்போக்கில் பல மாற்றங்கள் நிகழ்ந்த போதிலும், பண்டைத் தமிழரின் திணைநிலைத் தொழில்கள் இன்றளவும் தொடர்வதையும் அவற்றின் இன்றைய வளர்ச்சியையும் எழுதுக.
நிலம் தொழில் / உணவுப்பபயிர் இன்றைய வளர்ச்சி
குறிஞ்சி மலை நெல், திணை நெல், தேன், கிழங்கு ஏற்றுமதிப் பொருள்களாக இருக்கின்றன. நாட்டு மருத்துவத் துறையில் தேன் முக்கிய பங்கு வகிக்கிறது.
மருதம் செந்நெல், வெண்ணெல் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. பெரும்பாலான மக்களின் உணவுப் பொருளாக இருப்பதால் அதிகமாகப் பயிரிடப்படுகிறது.
நெய்தல் உப்பு, மீன் மீன்களைப் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் மிகுதியாகி உள்ளன. இத் தொழிற்சாலைகள் மூலம் பலருக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறது. இங்கு பதப்படுத்தப்பட்ட மீன்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதைப் போலவே உப்பளங்களில் உள்ள உப்பு சுத்திகரிக்கப்பபட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
10th Tamil Guide Unit 6.4
IV. நெடு வினா
சந்தக் கவிதையில் சிறக்கும் கம்பன் என்ற தலைப்பில் இலக்கிய உரை எழுதுக.
அன்பும் பண்பும் குணச்சித்திரமும் கொண்ட தலைவர் அவர்களே! தேர்ந்தெடுத்த பூக்களைப் போன்று வரிசை தொடுத்து அமர்ந்திருக்கும் ஆன்றோர்களே! அறிஞர் பெருமக்களே! வணக்கம். இயற்கை கொலு வீற்றிருக்கும் காட்சியைப் பெரிய கலைநிகழ்வே நடப்பதான தோற்றமாகக் கம்பன் காட்டும் கவி… தண்டலை மயில்கள் ஆட…
இவ்வுரையைத் தொடர்க!
கொண்டல்கண் முழவினேங்க குவளைக்கண் விழித்து நோக்க,
தெண்டிரை யெழினி காட்டத், தேம்பிழி மகரயாழின்
வண்டுகளி னிதுபாட மருதம்வீற்றி ருக்கும்மாதோ.”
தண்டல மயில்கள் ஆட என்னும் பாடலில் கம்பரின் கவித்திறம்,
சோலையை நாட்டிய மேடையாகவும்
மயிலை நடன மாதராகவும்
குளங்களில் உண்டான அலைகளைத் திரைச்சீலையாகவும்
தாமரை மலரை விளக்காகவும்
மேகக்கூட்டங்களை மத்தளமாகவும்
வண்டுகளின் ஓசையை யாழின் இசையாகவும்
பார்வையாளர்களைக் குவளைமலர்களாகவும் சித்தரித்து
தன் கவித்திறனைச் சான்றாக்குகிறார்.
படைப்பாளி தான் வாழ்ந்த காலத்தில் மட்டுமல்லாது, தான் வீழ்ந்த பின்னரும் வாழ்கின்றான் என்றால் மிகையாகாது. அந்த வகையில் கம்பன் இன்றும் தன் சந்தக் கவிதையோடு வாழ்ந்து வருகிறான்.
“காலமெனும் ஆழியிலும்
காற்றுமழை ஊழியிலும் சாகாது
கம்பனவன் பாட்டு, அது
தலைமுறைக்கு அவன் எழுதி வைத்த சீட்டு”
எனக் கண்ணதாசன் கம்பனைப் பாடுகிறார். இது அவரது கவித்திறனுக்குச் சான்று.
உதாரணமாக
தாடகை என்ற அரக்கியைக் கம்பர் உருவாக்குகிறார்.
” இறைக்கடை துடித்த புருவங்கள் எயிறு என்னும்
பிறைக்கிடை பிறக்கிட மடித்த பிலவாயன
மறக்கடை அரக்கி” என எவ்வளவு அழகாக தன் கவித்திறனைப் பதிவு செய்கிறார்.
“ஆழ நெடுந்திரை ஆறு கடந்து இவர் போவாேரோ
வேழ நெடும் படை……….”
இறங்குகின்றது! இன்று காண்! எழுந்திராய்! எழுந்திராய்!
கறங்கு போல வில்பிடித்த கால தூதர் கையிலே,
உறங்குவாய், உறங்குவாய்! இனிக் கிடந்து உறங்குவாய்!”
கம்பராமாயணம் – கூடுதல் வினாக்கள்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. கம்பர் இராமனது வரலாற்றைத் தமிழில் வழங்கி _____________ எனப் பெயரிட்டார்.
விடை : “இராமாவதாரம்”
2. இராமாவதாரம் _____________ என வழங்கப்பெறுகிறது.
விடை : கம்பராமாயணம்
3. கம்பராமாயணப் பாடல்கள் _____________ மிக்கவை.
விடை : சந்தநயம்
4. கம்பர் சாேழ நாட்டுத் _____________ சார்ந்தவர்;
விடை : திருவழுந்தூரைச்
5. கம்பர் _____________ ஆதரிக்கப் பெற்றவர்;
விடை : திருெவண்ணெய்நல்லூர் சடையப்ப வள்ளலால்
II. சிறு வினா
1. கம்பனின் பெருமையை சுட்டும் தொடர்கள் யாவை?
- கல்வியில் பெரியவர் கம்பர்
- கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்
- விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்
2. கம்பர் இயற்றிய நூல்கள் யாவை?
- சரசுவதி அந்தாதி
- சடகோபர் அந்தாதி
- திருக்கை வழக்கம்
- ஏரெழுபது
- சிலை எழுபது
3. கம்பராமாயணம் குறிப்பு வரைக
- இராமனது வரலாற்றைக் கூறும் நூல்.
- கம்பர் தான் எழுதிய நூலுக்கு இராமவதாரம் எனப் பெயரிட்டார்
- ஆறு காண்டங்களை உடையது
- சந்த நயம் மிக்கது
4. கம்பர் சிறு குறிப்பு வரைக
- “கல்வியில் பெரியவர் கம்பர்”, “கம்பன் வீடுக்கட்டுத்தறியும் கவிபாடும் போன்ற முதுமொழிக்கு உரியவர்
- சோழ நாட்டுத் திருவழுந்தூரைச் சார்ந்தவர்.
- திருவெண்ணெய்நல்லூர் சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப் பெற்றவர்.
- விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன் என்று புகழ் பெற்றவர்
- சரசுவதி அந்தாதி, சடகோபர் அந்தாதி, திருக்கை வழக்கம், ஏரெழுபது, சிலை எழுபது முதலியன கம்பர் இயற்றிய நூல்கள் ஆகும்
10th Tamil Guide Unit 6.4
பலவுள் தெரிக
1.பாலகாண்டம் ஆற்றுப்படலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆறு எது?
அ) சரயு ஆறு
ஆ) கங்கை ஆறு
இ) நர்மதை ஆறு
ஈ) யமுனை ஆறு
Answer:
அ) சரயு ஆறு
2.கீழ்க்காண்பனவற்றுள் கொடி வகையைச் சேர்ந்தது எது?
அ) செண்பகம்
ஆ) கமுகு
இ) குருக்கத்தி
ஈ) கொன்றை
Answer:
இ) குருக்கத்தி
3.கம்பர் இராமாயணத்திற்கு இட்ட பெயர் எது?
அ) இராமகாதை
ஆ) இராமாயணம்
இ) கம்பராமாயணம்
ஈ) இராமாவதாரம்
Answer:
ஈ) இராமாவதாரம்
4.பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.
அ) பாலகாண்டம் – ஆற்றுப்படலம், நாட்டுப்படலம்
ஆ) அயோத்தியா காண்டம் – கங்கைப் படலம், கங்கை காண் படலம்
இ) யுத்தகாண்டம் – கும்பகருணன் வதைப் படலம்
ஈ) சுந்தர காண்டம் – குகப் படலம்
Answer:
ஈ) சுந்தர காண்டம் – குகப் படலம்
5.‘கம்பன் இசைத்த கவியெல்லாம் நான்’ என்று பெருமைப்படுபவர் …………….
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) கண்ண தாசன்
ஈ) கம்பதாசன்
Answer:
அ) பாரதியார்
6.கம்பர் பிறந்த ஊர் …………….
அ) திருவழுந்தூர்
ஆ) திருக்கடையூர்
இ) திருவாரூர்
ஈ) திருவெண்காடு
Answer:
அ) திருவழுந்தூர்
7.கம்பராமாயணத்திலுள்ள காண்டங்கள்…………….
அ) ஆறு
ஆ) ஏழு
இ) எட்டு
ஈ) ஒன்பது
Answer:
அ) ஆறு
8.கம்பர் பிறந்த நாடு …………….
அ) பாண்டிய நாடு
ஆ) சோழ நாடு
இ) சேரநாடு
ஈ) பல்லவ நாடு
Answer:
ஆ) சோழ நாடு
9.சடையப்ப வள்ளலின் ஊர் …………….
அ) தென்காசி
ஆ) திருவெண்ணெய் நல்லூர்
இ) திருநெல்வேலி
ஈ) திருவழுந்தூர்
Answer:
ஆ) திருவெண்ணெய் நல்லூர்
10.‘விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்’ என்று புகழப்பட்டவர் …………….
அ) புகழேந்தி
ஆ) செயங்கொண்டார்
இ) கம்பர்
ஈ) ஒட்டக்கூத்தர்
Answer:
இ) கம்பர்
11.கம்பர் இயற்றாத நூலைக் கண்டறிக.
அ) சரசுவதி அந்தாதி
ஆ) பதிற்றுப் பந்தாதி
இ) திருக்கை வழக்கம்
ஈ) ஏரெழுபது
Answer:
ஆ) பதிற்றுப் பந்தாதி
12.சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப் பெற்ற புலவர் …………….
அ) கம்பர்
ஆ) புகழேந்தி
இ) ஒட்டக்கூத்தர்
ஈ) ஔவையார்
Answer:
அ) கம்பர்
13.உறங்குகின்ற கும்பகன்ன! என்னும் பாடல் இடம் பெற்றுள்ள காண்டம் …………….படலம்…………….
அ) யுத்த காண்டம், கும்பகருணன் வதைப் படலம்
ஆ) பாலகாண்டம், நாட்டுப்படலம்
இ) பாலகாண்டம், ஆற்றுப்படலம்
ஈ) அயோத்தியா காண்டம், கங்கைப் படலம்
Answer:
அ) யுத்த காண்டம், கும்பகருணன் வதைப் படலம்
14.‘தாதுகு சோலைதோறுஞ்’ – என்று ஆற்றின் அழகை வர்ணிக்கும் கம்பராமாயணத்தின் காண்டம் எது? படலம் எது?
அ) பாலகாண்டம், நாட்டுப்படலம்
ஆ) பாலகாண்டம், ஆற்றுப்படலம்
இ) அயோத்தியா காண்டம், கங்கைப் படலம்
ஈ) யுத்த காண்டம் கும்பகருணன் வதைப்படலம்
Answer:
ஆ) பாலகாண்டம், ஆற்றுப்படலம்
15.ஓர் உயிர் பல உடல்களில் ஊடுருவி உலாவுவது போல பாயும் நதியாகப் பாலகாண்டத்தில் குறிப்பிடப்படுவது …………….
அ) சரயு
ஆ) யமுனை
இ) பிரம்மபுத்திரா
ஈ) கங்கை
Answer:
அ) சரயு
16.“தண்டலை மயில்களாட” – என்று இயற்கை கொலுவீற்றிருக்கும் காட்சியைப் பெரிய கலை நிகழ்வே நடப்பதால் தோற்றமாகக் கம்பன் எடுத்தியம்பும் காண்டம்…………….
அ) பாலகாண்டம், நாட்டுப்படலம்
ஆ) பாலகாண்டம், ஆற்றுப்படலம்
இ) அயோத்தியா காண்டம், கங்கைப்படலம்
ஈ) யுத்த காண்டம் கும்பகருணன் வதைப்படலம்
Answer:
அ) பாலகாண்டம், நாட்டுப்படலம்
17.‘வண்மையில்லை’ என்ற கம்பனின் பாடலால் அறியப்படுவது…………….
அ) ஒன்றின் இருப்பால் இன்னொன்று அடையாளப்படுகிறது என்பதை
ஆ) பலவற்றின் இருப்பால் சிலவற்றைக் காண இயலாமல் போவதை
இ) அல்வழி நல்வழி அறிதல்
ஈ) இயற்கைக் காட்சிகளை மனிதர்களோடு ஒப்பிடல்
Answer:
அ) ஒன்றின் இருப்பால் இன்னொன்று அடையாளப்படுகிறது என்பதை
18.‘ஆழ நெடுந்திரை ஆறு கடந்து இவர் போவா ரோ?
வேழ நெடும் படை கண்டு விலங்கிடும் வில் ஆளோ?’ இப்பாடலில் அமைந்த நயங்கள் யாவை?
அ) எதுகை
ஆ) மோனை
இ) முரண்
ஈ) அந்தாதி
Answer:
அ) எதுகை
19.பொருத்திக் காட்டுக.
i) தாதுகு சோலை – 1. ஆற்றுப்படலம்
ii) தண்டலை மயில்களாட – 2. நாட்டுப்படலம்
iii) வெய்யோன் ஒளி – 3. கங்கைப்படலம்
iv) ஆழ நெடுந்திரை – 4. கங்கை காண் படலம்
அ) 1, 2, 3, 4
இ) 2, 3, 4, 1
ஆ) 4, 3, 2, 1
ஈ) 1, 4, 3, 2
Answer:
அ) 1, 2, 3, 4