10th tamil guide 5th lesson

10th Tamil Guide Unit 5.1

10th Tamil Guide Unit 5.1

இயல் 5.1 மொழிபெயர்ப்புக் கல்வி

10th Standard Tamil Samacheer kalvi Guide Full Answers. 10th Tamil Book Back Answers, SSLC Tamil இயல் 5.1 மொழிபெயர்ப்புக் கல்வி Book Back and Additional Questions and answers. 10th Tamil 5th Lesson Free Online Test. 10th Tamil Important one Marks, 2 Marks, 5 Marks Question with answers, 10th All Subject All District Question Collections. 10th All Unit Samacheer kalvi Guide Unit 1 to 9 Full Answer. 10th Tamil Unit 5 Book back Question and answers, 10th Standard Tamil Samacheer kalvi guide, Book and additional question and answers.

  • 10th Tamil Free Online Test Unit 1 to 9 – Click Here

10th Tamil Guide Unit 5.1

 

10th Tamil Guide Unit 5.1
10TH TAMIL UNIT 5 BOOK BACK ANSWERS

 

5.1. மொழிபெயர்ப்புக் கல்வி

 

I. பலவுள் தெரிக.

மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம்வைத்தும்’ என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு உணர்த்தும் செய்தி

  1. சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
  2. காப்பியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
  3. பக்தி இலக்கியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
  4. சங்கம் மருவிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
விடை : சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

10th Tamil Guide Unit 5.1

II. குறு வினா

 

தாய்மொழியும் ஆங்கிலமும் தவிர நீங்கள் கற்க விரும்பும் மொழியினைக் குறிப்பிட்டுக் காரணம் எழுதுக.

  • தாய்மொழித் தமிழும் உலகப் பொது மொழி ஆங்கிலமும் தவி, நான் கற்க விரும்பும் மொழி இந்தி
  • இந்தி கற்க விரும்புக் காரணம் :
  • இந்தி இந்திய பாராளுமன்ற மொழி.
  • பாராளுமன்ற விவாதங்களை அறிய உதவும் மொழி.
  • அரசு மற்றும் தனியார் வேலை வடக்கே கிடைத்தால் துணையாக இருக்கும் மொழி.
  • வட நாட்டு மக்களின் பண்பாட்டை புரிந்து கொள்ளும் உதவும் மொழி இந்தி.
  • இந்தி நமது நாட்டின் தேசிய மொழி.

III. சிறு வினா

1. உங்களுடன் பயிலும் மாணவர் ஒருவர் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தி வேலைக்குச் செல்ல விரும்புகிறார். அவரிடம் கற்பதன் இன்றியமையாமையை எவ்வகையில் எடுத்துரைப்பீர்கள்?

  • என்னுடன் படித்த மாணவன் வறுமையின் காரணமாக வேலைக்குச் செல்கிறான்.
  • நான் அவனைக் கண்டு இளம் வயது படிப்பதற்கு உரியது, பணி செய்வதற்கு அல்ல.
  • ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா!
  • நாம் இன்று வேலைக்குச் செல்வதால் இன்றைய தேவைதான் பூர்த்தியாகும். நாளைய தேவை பூர்த்தியாகுமா?
  • கண்ணுடையார் என்பர் கற்றோர் முகத்திரண்டு
  • புண்ணுடையார் கல்லா தவர்.  – என்கிறார் வள்ளுவர்
  • அப்துல்கலாம் அவர்கள் வறுமையில் வாடினாலும் காலை, மாலை வேலைக்குச் செல்வார் இடைப்பட்ட நேரத்தில் பள்ளிக்குச் சென்றதால் தான் உலகம் போற்றும் உத்தமர் ஆனார். இவர் போல நீயும் உழை; இடைப்பட்ட நேரத்தில் என்னோட பள்ளிக்கு வா. படித்தும் பணிக்கு போகலாம்.
  • அரசும், தொண்டு நிறுவனமும் உடை முதல் உணவு வரை இலவசமாகத் தருகிறது.
  • நாம் கல்வியால் இணைவோம்!
  • நம் தேசத்தை கல்வியால் உயர்த்துவோம்!!

2. ஐக்கிய நாடுகள் அவையில் மொழிபெயர்ப்பு

  • ஐ.நா.அவையில் ஒருவர் பேசினால் அவரவர் மொழிகளில் புரிந்துகொள்வதற்கு வசதி செய்யப்பட்டிருக்கிறது. மொழிபெயர்ப்பு (translation) என்பது எழுதப்பட்டதை மொழிபெயர்ப்பது; ஆனால் ஒருவர் பேசும்போதே மொழிபெயர்ப்பது விளக்குவது (Interpreting) என்றே சொல்லப்படுகிறது. ஐ.நா.அவையில் ஒருவர் பேசு வதை மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர் பார்வையாளர்களுக்குத் தெரியாதபடி வேறு இடத்தில் இருப்பார். ஒருவர் பேசுவதைக் காதணிேகட்பியில் (Headphone) கேட்டபடி சில நொடிகளில் மொழிபெயர்த்து ஒலிவாங்கி வழியே பேசுவார். அவையில் உள்ள பார்வையாளர் தம்முன் உள்ள காதணிேகட்பியை எடுத்துப் பொருத்திக்கொண்டு அவரது மொழியில் புரிந்துகொள்வார். இப்பகுதியிலிருந்து ஐந்து வினாக்களை உருவாக்குக.

இப்பகுதியில் இருந்து 5 வினாக்களை உருவாக்குக

  1. ஐ.நா. அவையில் உறுப்பினர்கள் தம் மொழியில் பேசும்போது மொழி தெரியாதவர்களுக்கு ஏதேனும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா?
  2. மொழிபெயர்ப்பு என்றால் என்ன?
  3. பார்வையாளர்கள் அவையில் பேசுவோர் உரையை எப்படி புரிந்து கொள்கின்றனர்?
  4. மொழிபெயர்ப்பாளர்கள் எங்கு அமர்ந்திருப்பர்?
  5. ஐ.நா. அவையில் பேசுவோரின் பேச்சு எவ்வளவு நேரத்தில் மொழிபெயர்க்கப்படுகிறது?
  6. ஐ.நா. அவையில் செய்யப்பட்டுள்ள வசதி யாது?
  7. காதணி கேட்பியை எதற்குப் பயன்படுத்துவர்?
  8. விளக்குவது (Inter Preting) என்றால் என்ன?

10th Tamil Guide Unit 5.1

IV. நெடு வினா

தமிழின் இலக்கிய வளம் – கல்வி மொழி – பிறமொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள் – அறிவியல் கருத்துகள் – பிறதுறைக் கருத்துகள் – தமிழுக்குச் செழுமை.

மேற்கண்ட குறிப்புகளைக் கொண்டு ‘செம்மொழித் தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்புக் கலை’ என்ற தலைப்பில் வார இதழ் ஒன்றுக்கு நடுப்பக்கக் கட்டுரை எழுதுக.
தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்புக் கலை

குறிப்புச் சட்டம்

  • முன்னுரை
  • வரையறை
  • தமிழ் இலக்கிய வளம்
  • கல்வி மொழி
  • பிற மொழி இலக்கியம்
  • அறிவியல் கருத்துகள்
  • பல்துறை கருத்துக்கள்
  • முடிவுரை
முன்னுரை:-
  • உலகம் தகவல் தொழில் நுட்பத்தினால் சுருங்கி விட்ட குழலில் கூட மொழிபெயர்ப்புத் துறை முக்கிய இடம் பெறுகிறது. இத்தகு மொழிபெயர்ப்பு கலை மக்களின் வாழ்வில் எத்தகு போக்கினைச் செய்கிறது என்பது பற்றிக் காண்போம்.
வரையறை:-
  • மொழி பெயர்ப்பு என்பது மூல மொழியில் உள்ள சொல் அல்லது சொற்றொடர்களை எவ்வித பொருள் மாற்றமும் இல்லாமல் வேறு மொழியில் பெயர்ப்பு செய்வது மொழிபெயர்ப்பு எனப்படும்.
தமிழ் இலக்கிய வளம்:-
  • தமிழ் இலக்கிய வளம் பெற வேண்டும் என்றால் பிற மொழியல் சிறந்து விளங்கிய நூல்களை தமிழில் மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும்.
  • பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இருந்து தமிழில் மொழிபெயர்ப்புப் பணி நடைபெற்ற வருகிறது. அதனடிப்படையில் கம்பரின் இராமவதாரம், வில்லிபுத்தூராரின் வில்லிபாரதம் போன்ற காவியங்கள் அனைத்தும் மொழிபெயர்க்கப்பட்டவையே.
கல்வி மொழி:-
  • மொழிபெயர்ப்பைக் கல்வியாக்குவதன் மூலம் அனைத்துலக அறிவை நாம் பெற்றுமப் பல்வேறு துறையில் சிறந்து விளங்க முடியும்.
பிற மொழி இலக்கியம்:-
  • ரவீந்திரநாத் தாகூர் வங்க மொழியில் எழுதிய கீதாஞ்சலியை அவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தப் பிறகு நோபல் பரிசு கிடைத்துள்ளது.
அறிவியல் கருத்துகள்:-
  • மொழிபெயர்ப்பு அறிவியல் சார்ந்த துறையிலும் தன் ஆதிக்கத்தைச் செலுத்துகிறது. Tele என்ற ஆங்கிலச் சொல் தொலை என்பதனைக் குறிக்கும். இதன் அடிப்படையில் Telephone – Telescope – தொலைபேசி, தொலைநோக்கி என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
பல்துறை கருத்துக்கள்:-
  • கல்வி, அறிவியல், இலக்கியம் மட்டுமல்லாமல் பிற துறையிலும் வளர்ச்சி அடைந்துள்ளன. வானொலி, திரைப்படம், இதழியியல், விளம்பரம் போன்ற துறைகளில் மொழிபெயர்ப்பு பணி சிறந்து விளங்குகிறது. தொலைக்காட்சித் தொடர்கள் வேற்று மொழிக்கு மாற்றப்படுவதால் அனைத்து மக்களையும் சென்றடைகிறது.
முடிவுரை:-
  • எந்த மொழியின் படைப்பாக இருந்தாலும் எதை மொழி பெயர்க்க வேண்டும்? எப்படிச் செய்ய வேண்டும்? என்பதனை அறிந்து இலக்கண விதிமுறையுடன் செய்வதால் நிலைபெற்று விளங்கும்.

மொழிபெயர்ப்புக் கல்வி – கூடுதல் வினாக்கள் 

I. குறு வினா

1. மணவை முஸ்தபா மொழிபெயர்ப்பு பற்றி கூறுவன யாவை?

  • ஒரு மொழியல் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு என மணவை முஸ்தபா கூறுகிறார்

2. மொழி பெயர்ப்பு எதற்கு இன்றியமையாததாகும்?

  • ஒரு மொழி வளம் பெறவும் உலகத்துடன் உறவு கொள்ளவும் மொழி பெயர்ப்பு இன்றியமையாததாகும்.

3. மு.கு.ஜகந்நாத ராஜா மொழி பெயர்ப்பு எதற்கு காரணமாகுகிறது என்கிறார்?

  • உலக நாகரிக வளர்ச்சிக்கும் பொருளியல் மேம்பாட்டிற்கும் மொழி பெயர்ப்பு ஒரு காரணமாகிறது என்கிறார் மு.கு.ஜகந்நாத ராஜா.
4. மொழிபெயர்க்கப்படாததால் உரிய ஏற்பு கிடைக்காத நூல் எது?
  • மகாகவி பாரதியின் கவிதைகள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டிருந்தால் உலகளவில் உயரிய விருதுகளும் ஏற்பும் கிடைத்திருக்கும்.

5. ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சி எதன் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது?

  • ஒரு நாடு எவ்வளவு மின்னாற்றலைப் பயன்படுத்துகிறது என்பதைப் பொறுத்தே அந்த நாட்டின் தொழில் வளர்ச்சியை மதிப்பிடுகிறார்கள்.

6. இப்போது நேரடியாக மொழிபெயர்க்கப்படும் நூல்கள் யாவை?

  • பிரெஞ்சு, ஜெர்மன், ஆப்பிரிக்கா, லத்தீன், அமெரிக்கா, முதலான நாடுகளின் நூல்கள் நேரடியாக மொழி பெயர்க்கப்பட்டு கிடைக்க தொடங்கியிருப்பது நல்ல பயனைத் தரும்

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1.பிறநாட்டு தூதரகங்கள் நம் நாட்டில் எப்போது நிறுவப்பட்டன?

அ) சுதந்திரத்திற்கு முன்
ஆ) விடுதலைக்குப் பின்
இ) குடியரசுக்கு முன்
ஈ) குடியரசுக்குப் பின்
Answer:
ஆ) விடுதலைக்குப் பின்

2.மொழிபெயர்த்தல் என்னும் தொடரைத் தொல்காப்பியர் கையாண்ட இடம் ………………..

அ) பெயரியல்
ஆ) வினையியல்
இ) மரபியல்
ஈ) உயிரியல்
Answer:
இ) மரபியல்

3.இராமாயண மகாபாரத தொன்மச் செய்திகள் இடம் பெற்றுள்ள தமிழ் இலக்கியம் எது?

அ) சங்க இலக்கியம்
ஆ) பக்தி இலக்கியம்
இ) சிற்றிலக்கியம்
ஈ) நவீன இலக்கியம்
Answer:
அ) சங்க இலக்கியம்

4.மொழிபெயர்க்கப்பட்டதால் நோபல் பரிசு பெற்ற இந்தியக் கவிஞர் யார்?

அ) வி.சூ. நைப்பால்
ஆ) இரட்யார்ட் கிப்ளிவ்
இ) வெங்கட்ராமன்
ஈ) இரவீந்திரநாத் தாகூர்
Answer:
ஈ) இரவீந்திரநாத் தாகூர்

5.‘மொகு சாஸ்ட்டு’ என்னும் ஜப்பானிய சொல்லின் பொருள்………………..

அ) பதில் தர மறுக்கிறோம்
ஆ) விடைதர அவகாசம் வேண்டும்
இ) விடைதர முடியாது
ஈ) இரவீந்திரநாத் தாகூர்
Answer:
ஆ) விடைதர அவகாசம் வேண்டும்

6.வடமொழிக் கதையைத் தழுவி படைக்கப்பட்ட நூல் ………………..

அ) கம்பராமாயணம்
ஆ) சீவகசிந்தாமணி
இ) கலிங்கத்துப்பரணி
ஈ) வில்லிபாரதம்
Answer:
இ) கலிங்கத்துப்பரணி

7.மொழிபெயர்ப்பு முயற்சியில் ஈடுபடும் நிறுவனங்கள்………………..

அ) சாகித்திய அகாதெமி
ஆ) தேசிய புத்தக நிறுவனம்
இ) தென்னிந்திய புத்தக நிலையம்
ஈ) இவை அனைத்தும்
Answer:
ஈ) இவை அனைத்தும்

8.பன்னாட்டு மொழிகளைக் கற்பிப்பவை………………..

அ) தனியார் நிறுவனங்கள்
ஆ) வெளிநாட்டு தூதரகங்கள்
இ) பள்ளிகள்
ஈ) இவை அனைத்தும்
Answer:
ஈ) இவை அனைத்தும்

9.‘காசினியில் இன்றுவரை அறிவின் மன்னர் கண்டுள்ள கலைகளெல்லாம் தமிழில் எண்ணிப் பேசி மகிழ் நிலை வேண்டும்” என்று கூறியவர் யார்?

அ) குலோத்துங்கன்
ஆ) பராந்தகன்
இ) இராஜராஜன்
ஈ) இராஜேந்திரன்
Answer:
அ) குலோத்துங்கன்

10.பொருத்தித் தெரிக.

அ) 1942 – 1. யூமா வாசுகி
ஆ) 1949 – 2. முத்துமீனாட்சி
இ) 2016 – 3. ராகுல் சாங்கிருத்யாயன்
ஈ) 2018 – 4. கணமுத்தையா
அ) 3, 4, 2, 1
ஆ) 4, 3, 2, 1
இ) 1, 2, 3, 4
ஈ) 2, 4. 3, 1
Answer:
அ) 3, 4, 2, 1
11.நம்மிடம் எல்லாம் உள்ளது என்ற பட்டை கட்டிய பார்வையை ஒழித்து அகன்ற பார்வையைத் தருவது………………..
அ) நாடகம்
ஆ) மொழிபெயர்ப்பு
இ) தியானம்
ஈ) செல்வம்
Answer:
ஆ) மொழிபெயர்ப்பு
12.ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு என்று கூறியவர் ………………..
அ) மு. கு. ஜகந்நாதர்
ஆ) மணவை முஸ்தபா
இ) அ. முத்துலிங்கம்
ஈ) அப்துல் ரகுமான்
Answer:
ஆ) மணவை முஸ்தபா
13.உலக நாகரிக வளர்ச்சிக்கும் பொருளியல் மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பும் ஒரு காரணமாகும் என்று………………..
கூறியவர்
அ) மு. கு. ஜகந்நாதர்
ஆ) மணவை முஸ்தபா
இ) மு. மேத்தா
ஈ) அ. முத்துலிங்கம்
Answer:
அ) மு. கு. ஜகந்நாதர்
14.“மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்” என்று குறிப்பிடும் செப்பேட்டுக் குறிப்பு………………..
அ) உத்திரமேரூர்
ஆ) மண்டகப்பட்டு
இ) சின்னமனூர்
ஈ) ஆதிச்சநல்லூர்
Answer:
இ) சின்னமனூர்
15.சங்ககாலத்திலேயே தமிழில் மொழிபெயர்ப்பு மேற்கொள்ளப்பட்டதைப் புலப்படுத்தும் சான்று………………..
அ) உத்திரமேரூர் கல்வெட்டு
ஆ) உறையூர்ச் செப்பேட்டுக் குறிப்பு
இ) மண்டகப்பட்டுக் கல்வெட்டு
ஈ) சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு
Answer:
ஈ) சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு
16.வடமொழிக் கதைகளைத் தழுவிப் படைக்கப்படாத இலக்கியத்தைக் கண்டறிக.
அ) சீவக சிந்தாமணி
ஆ) கம்பராமாயணம்
இ) சிலப்பதிகாரம்
ஈ) வில்லிபாரதம்
Answer:
இ) சிலப்பதிகாரம்
17.வடமொழிக் கதையைத் தழுவி எழுதப்பட்ட இலக்கியத்தைக் கண்டறிக.
அ) பெருங்கதை
ஆ) முக்கூடற்பள்ளு
இ) கலிங்கத்துப் பரணி
ஈ) மணிமேகலை
Answer:
அ) பெருங்கதை
18.பாரதியின் மொழிபெயர்ப்புகளைப் பொருத்திக் காட்டுக.
i) பொருட்காட்சி – 1. Strike
ii) இருப்புப் பாதை – 2. Revolution
iii) புரட்சி – 3. East Indian Railways
iv) வேலை நிறுத்தம் – 4. Exhibition
அ) 4, 3, 2,1
ஆ) 3, 4, 1, 2
இ) 2, 1, 4, 3
ஈ) 2, 4, 1, 3
Answer:
அ) 4, 3, 2, 1

19.ஜெர்மன் மொழியில் மொழிபெயர்ப்பின் மூலம் அறிமுகம் ஆன ……………….. அந்நாட்டுப் படைப்பாளர் போலவே கொண்டாடப்பட்டவர்.

அ) வேர்ட்ஸ் வொர்த்
ஆ) ஷேக்ஸ்பியர்
இ) லாங்பெல்லோ
ஈ) ஜி.யு. போப்
Answer:
ஆ) ஷேக்ஸ்பியர்

20.………………..ஆம் நூற்றாண்டு வரை வடமொழி நூல்கள் தமிழில் ஆக்கப்பட்டன.

அ) 16
ஆ) 17
இ) 18
ஈ) 19
Answer:
இ) 18

21.மொழிபெயர்ப்பின் மூலம் பெற்றிருக்கக்கூடிய கொள்கை ………………..

அ) நடப்பியல்
ஆ) தத்துவவியல்
இ) இலக்கியத் திறனாய்வு
ஈ) திறனாய்வு
Answer:
இ) இலக்கியத் திறனாய்வு

22.1942 ஆம் ஆண்டு ஹஜிராபாக் மத்திய சிறையிலிருந்த போது ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற நூலை இந்தி மொழியில் எழுதியவர் ………………..

அ) ராகுல் சாங்கிருத்யாயன்
ஆ) சசிதேவ்
இ) கணமுத்தையா
ஈ) வெ. ஸ்ரீராம்
Answer:
அ) ராகுல் சாங்கிருத்யாயன்

23.‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற நூலைக் கணமுத்தையா தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்ட ஆண்டு ………………..

அ) 1942
ஆ) 1945
இ) 1949
ஈ) 1952
Answer:
இ) 1949

24.‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற நூல் மொழிபெயர்க்கப்பட்ட ஆண்டும், மொழி……………….. பெயர்த்தவர்களையும் பொருத்திக்காட்டுக.

i) கணமுத்தையா – 1. 1949
ii) டாக்டர் என். ஸ்ரீதர் – 2. 2016
iii) முத்து மீனாட்சி – 3. 2016
iv) யூமாவாசுகி – 4. 2018
அ) 1, 2, 3, 4
ஆ) 2, 3, 4, 1
இ) 4, 3, 2, 1
ஈ) 4, 3, 1, 2
Answer:
அ) 1, 2, 3, 4

25.வடம் (கயிறு), ஒட்டகம் என்ற இருபொருளுக்குரியச் சொல் ………………..

அ) Camel
ஆ) Cow
இ) Horse
ஈ) Rope
Answer:
அ) Camel

26.ஜெர்மனியில் ஓர் ஆண்டில் பிற மொழிகளிலிருந்து ……………….. நூல்கள் வரை மொழி பெயர்க்கப் படுகின்றன.

அ) 1000
ஆ) 2000
இ) 4000
ஈ) 5000
Answer:
ஈ) 5000

27.தமிழ் நூல்கள் பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்படுவதில் முதலிடத்தில் இரண்டாமிடத்தில் ……………….. இடம் வகிக்கின்றன.

அ) ஆங்கிலம், மலையாளம்
ஆ) மலையாளம், ஆங்கிலம்
இ) தெலுங்கு, கன்னடம்
ஈ) இந்தி, வடமொழி
Answer:
அ) ஆங்கிலம், மலையாளம்

28.மொழிபெயர்ப்பினால் புதிய சொற்கள் உருவாகி ……………….. ஏற்படுகிறது.

அ) மொழிவளம்
ஆ) மொழி வளமிழப்பு
இ) மொழி சிதைவு
ஈ) மொழி மாற்றம்
Answer:
அ) மொழிவளம்

29.கருத்துப் பகிர்வைத் தருவதால் மொழிபெயர்ப்பைப் ……………….. என்று குறிப்பிடுவார்கள்.

அ) பயன்கலை
ஆ) நிகழ்கலை
இ) கவின்கலை
ஈ) ஆயக்கலை
Answer:
அ) பயன்கலை

30.………………..பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கை அத்தகைய பணிகளில் ஈடுபட வேண்டும்.

அ) கொலம்பியா
ஆ) ஆக்ஸ்போர்டு
இ) ஹார்வர்ட்
ஈ) சென்னை
Answer:
இ) ஹார்வர்ட்

31.“சென்றிடுவீர் எட்டுத்திக்கும் – கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்”  – என்று பாடியவர்.

அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) வாணிதாசன்
ஈ) கண்ண தாசன்
Answer:
அ) பாரதியார்

32.“தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்” – என்று பாடியவர்?

அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) வாணிதாசன்
ஈ) அப்துல் ரகுமான்
Answer:
அ) பாரதியார்

33.பிரான்சு தேசிய நூற்கூடத்தில் ஏறக்குறைய ……………….. பழைய தமிழ் ஏடுகளும் கையெழுத்துப் பிரதிகளும் உள்ளன.

அ) நூறு
ஆ) ஆயிரம்
இ) மூவாயிரம்
ஈ) பதினாறாயிரம்
Answer:
ஆ) ஆயிரம்
34.‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும் – கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் – பாரதியாரின் இக்கூற்று உணர்த்தும் கருத்து?
அ) பலதுறை நூல்கள் தமிழில் உருவாக்கப்பட வேண்டும்.
ஆ) பலகலைகள் தமிழில் புதிதாகத் தோன்ற வேண்டும்.
இ) உலகெங்கும் காணப்படும் செல்வங்கள் தமிழகத்தில் வந்து சேர்தல் வேண்டும்.
ஈ) கலைச் செல்வங்களை உலகம் முழுவதும் பயணம் செய்து கண்டுகளிக்க வேண்டும்.
Answer:
இ) உலகெங்கும் காணப்படும் செல்வங்கள் தமிழகத்தில் வந்து சேர்தல் வேண்டும்.

Leave a Reply