10th Tamil Guide Unit 3.5
இயல் 3.5. தொகாநிலைத் தொடர்கள்
10th Tamil Guide Unit 3.5 TN 10th Samacheer kalvi Guide Lesson 3, Unit 3.5 Book Back and Additional Question and answer. SSLC Tamil Unit 3.5. தொகாநிலைத் தொடர்கள் Full Answer key 2022. SSLC Tamil Reduced Syllabus Guide. 10th Tamil Unit 3 Free Online Test. 10th Tamil Full Guide Samacheer kalvi guide. Unit Test Question paper. 1st and 2nd Revision Test Syllabus & Time Table. 10th Tamil Chapter 3 Answers. TN Goc Announced KALVI TV Videos.
-
10th Tamil Free Online Test Unit 1 to 9 – Click Here
10th Tamil Guide Unit 3.5 தொகாநிலைத் தொடர்கள்
I. பலவுள் தெரிக.
“அறிஞருக்கு நூல்”, “அறிஞரது நூல்” ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது
- வேற்றுமை உருபு
- எழுவாய்
- உவம உருபு
- உரிச்சொல்
விடை : வேற்றுமை உருபு
10th Tamil Guide Unit 3.5
II. குறு வினா
1. ‘எழுது என்றாள்’ என்பது விரைவு காரணமாக ‘எழுது எழுது என்றாள்’ என அடுக்குத்தொடரானது. ‘சிரித்துப் பேசினார் ‘ என்பது எவ்வாறு அடுக்குத்தொடராகும்?
- ‘சிரித்துப் பேசினார் ‘ என்பது, உவகை காரமாணக சிரித்து சிரித்து பேசினார் என அடுக்குத் தொடராகும்
2. பாரதியார் கவிஞர், நூலகம் சென்றார், அவர் யார்? ஆகிய தொடர்களில் எழுவாயுடன் தொடரும் பயனிலைகள் யாவை?
- பெயர்ப் பயனிலை – கவிஞர்
- வினை பயனிலை – சென்றார்
- வினா பயனிலை – யார்?
III. சிறு வினா
கண்ணே கண்ணுறங்கு!காலையில் நீயெழும்பு!மாமழை பெய்கையிலேமாம்பூவே கண்ணுறங்கு!பாடினேன் தாலாட்டு!ஆடி ஆடி ஓய்ந்துறங்கு! –
இத்தாலாட்டுப் பாடலில் அமைந்துள்ள தொடர் வகைகளை எழுதுக.
‘கண்ணே கண்ணுறங்கு – விளித்தொடர்
காலையில் நீயெழும்பு – ஐந்தாம் வேற்றுமை தொகாநிலைத் தொடர்
மாமழை பெய்கையிலே – உரிச்சொல் தொடர்
மாம்பூவே கண்ணுறங்கு – விளித்தொடர்
பாடினேன் தாலாட்டு – வினைமுற்றுத் தொடர்
ஆடி ஆடி ஓய்ந்துறங்கு – அடுக்குத் தொடர்
தொகாநிலைத் தொடர்கள் – கூடுதல் வினாக்கள்
1. தொகாநிலைத்தொடர் என்றால் என்ன?
- ஒரு தொடர் மொழியில் இருசொற்கள் இருந்து அவற்றின் இடையில் சொல்லோ உருபோ இல்லாமல் அப்படியே, பொருளை உணர்த்துவது தொகாநிலைத் தொடர் எனப்படும்.
எ.கா:- காற்று வீசியது, குயில் கூவியது
2. எழுவாய்த்தொடர் என்றால் என்ன?
- எழுவாயுடன் பெயர், வினை, வினா ஆகிய பயனிலைகள் தொடர்வது எழுவாய்த்தொடர் ஆகும்.
3. விளித்தொடர் என்றால் என்ன?
- விளியுடன் வினை தொடர்வது விளித்தொடர் ஆகும்.
எ.கா:- நண்பா எழுது!
4. வினைமுற்றுத்தொடர் என்றால் என்ன?
- வினைமுற்றுடன் ஒரு பெயர் தொடர்வது வினைமுற்றுத்தொடர் ஆகும்.
- பாடினாள் கண்ணகி
- “பாடினாள்” என்னும் வினைமுற்று முதலில் நின்று ஒரு பெயரைக்கொண்டு முடிந்துள்ளது..
5. பெயரெச்சத்தொடர் என்றால் என்ன?
- முற்றுப் பெறாத வினை, பெயர்ச்சொல்லைத் தொடர்வது பெயரெச்சத்தொடர் எனப்படும்.
- கேட்ட பாடல் – “கேட்ட” என்னும் எச்சவினை “பாடல்” என்னும் பெயரைக்கொண்டு முடிந்துள்ளது .
7. வினையெச்சத்தொடர் என்றால் என்ன?
- முற்றுப் பெறாத வினை, வினைச் சொல்லைத் தொடர்வது வினையெச்சத்தொடர் ஆகும்.
- பாடி மகிழ்ந்தனர் – “பாடி” என்னும் எச்சவினை “மகிழ்ந்தனர் ” என்னும் வினையைக் கொண்டு முடிந்துள்ளது.
8. வேற்றுமைத்தொடர் என்றால் என்ன?
- வேற்றுமை உருபுகள் வெளிப்பட அமையும் தொடர்கள் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்கள் ஆகும்.
எ.கா.:-கட்டுரையைப் படித்தாள்.
இத்தொடரில் ஐ என்னும் வேற்றுமை உருபு வெளிப்படையாக வந்து பொருளை
உணர்த்துகிறது.
9. இடைச்சொல் தொடர் என்றால் என்ன?
- இடைச்சொல்லுடன் பெயரோ, வினையோ தொடர்வது இடைச்சொல் தொடர் ஆகும்.
எ.கா.:- மற்றொன்று – மற்று + ஒன்று
மற்று என்னும் இடைச்சொல்லை அடுத்து ஒன்று என்னும் சொல் நின்று பொருள் தருகிறது.
10. உரிச்சொல் தொடர் என்றால் என்ன?
- உரிச்சொல்லுடன் பெயரோ, வினையோ தொடர்வது உரிச்சொல் தொடர் ஆகும்.
எ.கா.:- சாலச் சிறந்தது
சால என்பது உரிச்சொல். அதனைத் தொடர்ந்து சிறந்தது என்ற சொல் நின்று மிகச் சிறந்தது என்ற பொருளை தருகிறது.
11. அடுக்குத் தொடர் என்றால் என்ன?
- ஒரு சொல் இரண்டு மூன்று முறை அடுக்கித் தொடர்வது தொடர் ஆகும்.
எ.கா.:- வருக! வருக! வருக!
ஒரே சொல் உவகையின் காரணமாக மீண்டும் மீண்டும் அடுக்கி வந்துள்ளது.
கற்பவை கற்றபின்
1. கீழ்க்காணும் பத்தியில் உள்ள தொடர் வகைகளை எடுத்து எழுதுக.
மாடியிலிருந்து இறங்கினார் முகமது. அவர் பாடகர். பாடல்களைப் பாடுவதும் கேட்பதும் அவருக்குப் பொழுதுபோக்கு. அவர் அறையில் கேட்ட பாடல்களையும் கேட்காத பால்களையும் கொண்ட குறுந்தகடுகளை அடுக்கு அடுக்காக வைத்திருப்பார்.
- இறங்கினார் முகமது – வினைமுற்றுத்தொடர்
- அவர் பாடகர் – எழுவாய்த்தொடர்
- பாடுவதும் கேட்பதும் – உம்மைத்தொகை
- கேட்ட பாடல் – உரிச்சொல்தொடர்
- அடுக்கு அடுக்காக- அடுக்குத்தொடர்
2. கோடிட்ட சொற்களின் தொடர்வகைகளை எழுதுக
1. பழகப் பழகப் பாலும் புளிக்கும்
- பழகப் பழகப் – அடுக்குத் தொடர்
2. வடித்த கஞ்சியில் சீலையை அலசினேன்
- வடித்த கஞ்சியில் – வினையெச்சத் தொடர்
3. மேடையில் நன்றாகப் பேசினான்
- நன்றாகப் பேசினான் – உரிச்சொல் தொடர்
4. வந்தார் அண்ணன் – வினைமுற்றுத் தொடர்
- வந்தார் – வினைமுற்றுத் தொடர்
5. அரிய கவிதைகளின் தொகுப்பு
- கவிதைகளின் – உரிச்சொல்தொடர்
மொழியை ஆள்வோம்!
I. மொழிபெயர்க்க
Respected ladies and gentlemen, I am Ilangovan studying tenth standard. I have come here to say a few words about our Tamil culture. Sangam literature shows that Tamils were best in culture and civilization about two thousand years ago. Tamils who have defined grammar for language have also defined grammar for life. Tamil culture is rooted in the life styles of Tamils throughout India, Srilanka, Malaysia, Singapore, England and Worldwide. Though our culture is very old, it has been updated consistently. We should feel proud about our culture. Thank you one and all.
தமிழ்ப் பண்பாடு
மரியாதைக்குரியர்களே! என் பெயர் இளங்கோவன். நான் பத்தாம் வகுப்பில் படிக்கிறேன். நான் பத்தாம் வகுப்பில் படிக்கிறேன். நான் தமிழர் பண்பாட்டைப் பற்றி சில வார்த்தைகள் சொல்ல வந்திருக்கிறேன். இரண்டாயிரம் வருடத்திற்கு முன் பண்பாட்டிலும், நாகரிகத்திலும் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்கள் என்று சங்க இலக்கியம் கூறுகிறது. மொழிக்கு இலக்கணம் வகுத்த தமிழரே வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்தனர். தமிழர்களின் பண்பாடு இந்தியா, ஸ்ரீலங்கா, இங்கிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் உலகமெங்கும் உள்ள தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தில் வேரூன்றி உள்ளது. நம் பண்பாடு பழமையானதாக இருந்தாலும் அது சீரான முறையில் மேம்படுத்தி உள்ளது. நாம் பண்பாட்டைப் பற்றி பெருமிதம் கொள்ள வேண்டும். அனைவருக்கும் நன்றி!
II. பழமொழிகளை நிறைவு செய்க.
1. உப்பில்லாப் ____________________________________
- உப்பில்லாப் பண்டம் குப்பையிலே
2. ஒரு பானை ____________________________________
- ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்
3. உப்பிட்டவரை ____________________________________
- உப்பிட்டவரை உள்ளளவும் நினை
4. விருந்தும் ____________________________________
- விருந்தும் மருந்தும் மூன்று வேளை
5. அளவுக்கு ____________________________________
- அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
பத்தியைப் படித்துக் கருத்தைச் சுருக்கி எழுதுக.
பழையசோறு பச்சை நெல் வயலைக் கண்கள் முழுதும் சுமந்து, இளநெல்லை நுகர்ந்து, அதன் பாலை ருசித்து, நீராவியில் அந்த நெல் அவியும் கதகதப்பான புழுங்கல் மணம்வரை சுவைத்தவள் நான். அவித்து, காய்ந்து, குத்திய அந்தப் புழுங்கல் அரிசியை, அதன் வழவழப்பை, கடுப்பு மணத்தை, சோறாகு முன் கைநிறைய அள்ளி வாயில் போட்டு நெரித்து மென்றவள் சொல்கிறேன். பகலெல்லாம் உச்சி வெயிலுக்கு அது சுடச்சுடப் புழுங்கலரிசிச் சோறு. இரவு முழுவதும் அந்தச் சோறு நீரில் ஊறும். விடிந்த இந்தக் காலையில் அதன் பெயர் பழையசோறு அல்லது பழையது. காத்திருந்து, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் கடித்து நீராகாரம்போல் குடிப்பது ஒருவகை. வாழை இலையில் அந்தப் பழைய சோற்றைப் பிழிந்து போட்டால், வடுமாங்காய் அல்லது உப்பு நாரத்தங்காய் அதனுடன் சேர்ந்துகொள்ளத் துடிப்பது இன்னொரு வகை. சுண்டவைத்த முதல்நாள் குழம்பு இன்னும் உச்சம்! நல்ல பழையது மாம்பழ வாசம் வீசுமாம். பழைய சோறு- அது கிராமத்து உன்னதம்.
“மைக்கடல் முத்துக்கு ஈடாய் மிக்க நெல்முத்து” ……முக்கூடற்பள்ளு.
விடை:-
நெல்லை அவித்து காய வைத்து எடுக்கும் புழங்கல் அரிசியைச் சோறாக்கி, அதனை இரவெல்லாம் நீரில் ஊற வைத்து, கிடைக்கும் பழைய சோற்றுடன் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், வடுமாங்காய், உப்பு நார்த்தங்காய் மற்றும் சுண்ட வைத்த குழம்பு இவற்றில் ஒன்றைக் கூட்டாக வைத்து சாப்பிடுவது கிராமத்து உன்னதம்.
மொழியோடு விளையாடு
I. விடுபட்ட எழுத்துகளை நிரப்பி அந்த எழுத்துகளை மட்டும் இணைத்து ஒளிந்துள்ள ஒரு நூலின் பெயரைக் கண்டுபிடிக்க.
1. இ __ கு (பறவையிடம் இருப்பது)
- இறகு
2. கு __ தி (சிவப்பு நிறத்தில் இருக்கும்)
- குருதி
3. வா __ (மன்னரிடம் இருப்பது)
- வாள்
4. அ __ கா (தங்கைக்கு மூத்தவள்)
- அக்கா
5. ம __ (அறிவின் மறுபெயர்)
- மதி
6. பட __ (நீரில் செல்வது)
- படகு
ஒளிந்துள்ள நூலின் பெயர் – திருக்குறள்
II. இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக.
1. சிலை – சீலை
- சிலையைத் திரைச்சீலையால் மறைத்திருக்கிறார்கள்.
2. தொடு – தோடு
- தொடு உணர்வின் மூலம் தோடு காதில் உள்ளதை தெரிந்துகொள்ளலாம் .
3. மடு – மாடு
- மாடு மடுவில் தண்ணீர் குடித்துக் கொண்டு இருந்தது
4. மலை – மாலை
- மலை மீது இருக்கும் கோவிலுக்கு மாலை நேரத்தில் சென்றேன் .
5. வளி – வாளி
- வளிமண்டல காற்று பெற மரம் நட்டு வாளி நிறைய தண்ணீர் ஊற்றுவோம் .
6. விடு – வீடு
- தீய பழக்கங்களை விட்டு விடு; வீடு சென்று மகிழ்ச்சியாக இரு
III. அகராதியில் கண்டு பொருள் எழுதுக.
1. ஊண் – ஊன்
- ஊண் – உணவு
- ஊன் – மாமிசம்
2. திணை – தினை
- திணை – உயர்திணை, அஃறிணை போன்ற இலக்கண பாகுபாடு
- தினை – சிறு தானிய வகை
3. அண்ணம் – அன்னம்
- அண்ணம் – உள் நாக்கு
- அன்னம் – சோறு
4. வெல்லம் – வெள்ளம்
- வெல்லம் – கரும்பு சாற்றினால் தயாரிக்கப்படும் இனிப்பு பொருள்
- வெள்ளம் – ஆற்றில் கரைபுரண்டு ஓடுவது வெள்ளம்
நிற்க அதற்குத் தக…
I. கலைச்சொல் அறிவோம்
- செவ்விலக்கியம் – classical literature
- காப்பிய இலக்கியம் – Epic literature
- பக்தி இலக்கியம் – Devotional literature
- பண்டைய இலக்கியம் – Ancient literature
- வட்டார இலக்கியம் – Regional literature
- நாட்டுப்புற இலக்கியம் – Folk literature
- நவீன இலக்கியம் – Modern literature
கடிதம் எழுதுக.
உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக.
Answer:
உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம்
அனுப்புநர்
கண்ணன்,
25, வள்ளல் தெரு,
அண்ணாநகர்,
திருநெல்வேலி – 11.
பெறுநர்
உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,
உணவு பாதுகாப்பு ஆணையம், திருநெல்வேலி.
மதிப்பிற்குரிய ஐயா,
பொருள் : தரமற்ற உணவு வழங்கிய உணவு விடுதியின் மீது நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுதல் – தொடர்பாக.
வணக்கம்.
இன்று காலை பேருந்துநிலையத்திற்கு வெளியில் உள்ள “சுவையகம்” என்ற உணவகத்திற்குச் சென்றோம். நானும் என் நண்பனும் உணவு உண்டோம். உணவில் கல்லும், குழம்பில் பூச்சியும் கிடந்தது. உணவக மேலாளரிடம் முறையிட்டோம். அதற்குச் சரியான காரணத்தை அவர் அளிக்கவில்லை. மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த உணவு விலைப்பட்டியல் பலகையில் எழுதி வைக்கப்பட்டிருந்த தொகையை வாங்காமல் கூடுதலாக இருபது ரூபாயைக் காசாளர் வாங்கினார்.
எனவே, தரமற்ற உணவையும், விலை கூடுதலாகவும் விற்பனை செய்த, அந்த உணவகத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். மேலும் இதற்கான தக்க சான்றுகள் (புகைப்படம்) இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
நன்றி!
திருநெல்வேலி.
23.03.2020.
இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
கண்ணன்.
உறைமேல் முகவரி:
கண்ணன்,
25, வள்ளல் தெரு,
அண்ணாநகர்,
திருநெல்வேலி – 11.
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
1.கீழ்க்காண்பனவற்றுள் பொருந்தாத இணையைத் தேர்வு செய்க.
அ) காவிரி பாய்ந்தது – எழுவாய்த் தொடர்
ஆ) பாடினாள் கண்ணகி – வினைமுற்றுத் தொடர்
இ) நண்பா எழுது – விளித்தொடர்
ஈ) பாடி மகிழ்ந்த னர் – பெயரெச்சத்தொடர்
Answer:
ஈ) பாடி மகிழ்ந்தனர் – பெயரெச்சத்தொடர்
2.சரியான வரிசையைத் தேர்ந்தெடுத்து எழுது.
i) பாடத்தைப் படித்தாள் – 1. இரண்டாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்
ii) இசையால் ஈர்த்தார் – 2. மூன்றாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்
iii) கயல்விழிக்குப் பரிசு – 3. ஐந்தாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்
iv) முருகனின் சட்டை – 4. நான்காம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்
அ) 1, 2, 3, 4
ஆ) 2, 1, 4, 3
இ) 1, 2, 4, 3
ஈ) 4, 3, 2, 1
Answer:
இ) 1, 2, 4, 3
3.ஒரு தொடர் மொழியில் இருசொற்கள் இருந்து அவற்றின் இடையில் சொல்லோ உருபோ இல்லாமல் அப்படியே, பொருளை உணர்த்துவது……………………………
அ) தொகை நிலைத்தொடர்
ஆ) தொகாநிலைத்தொடர்
இ) மரபுத்தொடர்
ஈ) உவமைத்தொடர்
Answer:
ஆ) தொகாநிலைத்தொடர்
4.தொகாநிலைத் தொடரின் வகைகள்……………………………
அ) 6
ஆ) 7
இ) 8
ஈ) 9
Answer:
ஈ) 9
5.விளியுடன் எது தொடர்வது விளித்தொடர் ஆகும்?
அ) பெயர்
ஆ) வினா
இ) வினை
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
இ) வினை
6.வினைமுற்றுடன் ஒரு பெயர் தொடர்வது……………………………
அ) எழுவாய்த்தொடர்
ஆ) விளித்தொடர்
இ) வினையெச்சத்தொடர்
ஈ) வினைமுற்றுத்தொடர்
Answer:
ஈ) வினைமுற்றுத்தொடர்
7.முற்றுப் பெறாத……………………………பெயர்ச்சொல்லைத் தொடர்வது பெயரெச்சத்தொடர் எனப்படும்.
அ) வினா
ஆ) எழுவாய்
இ) வினை
ஈ) இவற்றில் எதுவுமில்லை
Answer:
இ) வினை
8.……………………………உருபுகள் வெளிப்பட அமையும் தொடர்கள் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்கள் ஆகும்.
அ) உவம்
ஆ) வேற்றுமை
இ) பண்பு
ஈ) வினை
Answer:
ஆ) வேற்றுமை
9.பொருத்திக் காட்டுக.
i) கட்டுரையைப் படித்தாள் – 1. உரிச்சொல் தொடர்
ii) அன்பால் கட்டினார் – 2. நான்காம் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்
iii) அறிஞருக்குப் பொன்னாடை – 3. மூன்றாம் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்
iv) சாலச் சிறந்தது – 4. இரண்டாம் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்
அ) 4, 3, 2, 1
ஆ) 3, 4, 1, 2
இ) 2, 3, 1, 4
ஈ) 4, 2, 3, 1
Answer:
அ) 4, 3, 2, 1
10.பொருத்திக் காட்டுக.
i) காவிரி பாய்ந்தது – 1. வினையெச்சத்தொடர்
ii) நண்பா எழுது – 2. பெயரெச்சத்தொடர்
iii) கேட்ட பாடல் – 3. எழுவாய்த்தொடர்
iv) பாடி மகிழ்ந்த னர் – 4. விளித்தொடர்
அ) 3, 4, 2, 1
ஆ) 2, 1, 4, 3
இ) 4, 3, 2, 1
ஈ) 3, 2, 1, 4
Answer:
அ) 3, 4, 2, 1
11.இடைச்சொல் தொடரில் இடைச்சொல்லுடன் தொடர்வது……………………………
அ) பெயர், வினை
ஆ) வினா, விடை
இ) பெயர், வினா
ஈ) வினை, வினா
Answer:
அ) பெயர், வினை
12.மற்றொன்று என்பது……………………………
அ) வினையெச்சத்தொடர்
ஆ) வினைமுற்றுத்தொடர்
இ) இடைச்சொல் தொடர்
ஈ) உரிச்சொல் தொடர்
Answer:
இ) இடைச்சொல் தொடர்
13.ஒரு சொல் இரண்டு மூன்று முறை அடுக்கித் தொடர்வது……………………………
அ) இரட்டைக்கிளவி
ஆ) அடுக்குத்தொடர்
இ) இரட்டுறமொழிதல்
ஈ) உரிச்சொல் தொடர்
Answer:
ஆ) அடுக்குத்தொடர்
14.கேட்க வேண்டிய பாடல், சொல்லத் தக்க செய்தி ஆகியன……………………………
அ) பெயரெச்சங்கள்
ஆ) கூட்டுநிலைப் பெயரெச்சங்கள்
இ) கூட்டுநிலை வினையெச்சங்கள்
ஈ) வினையெச்சங்கள்
Answer:
ஆ) கூட்டுநிலைப் பெயரெச்சங்கள்
15.அன்பால் கட்டினார், அறிஞருக்குப் பொன்னாடை ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது
அ) வேற்றுமை உருபு
ஆ) எழுவாய்
இ) உவம உருபு
ஈ) உரிச்சொல்
Answer:
அ) வேற்றுமை உருபு