10th Tamil Guide Unit 3.4
இயல் 3.4 கோபல்லபுரத்து மக்கள்
10th Tamil Guide Unit 3.4. TN 10th Samacheer kalvi Guide Lesson 3, Unit 3.4 Book Back and Additional Question and answer. SSLC Tamil Unit 3.4 கோபல்லபுரத்து மக்கள் Full Answer key 2022. SSLC Tamil Reduced Syllabus Guide. 10th Tamil Unit 3 Free Online Test. 10th Tamil Full Guide Samacheer kalvi guide. Unit Test Question paper. 1st and 2nd Revision Test Syllabus & Time Table. 10th Tamil Chapter 3 Answers. TN Goc Announced KALVI TV Videos.
10th Tamil Guide Unit 3.4 கோபல்லபுரத்து மக்கள்
1. அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பட்டனை கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க .
முன்னுரை :
- அன்னமய்யா என்ற கதாபாத்திரம் கரிசல் எழுத்தாளர் கி . ராஜநாராயணன் என்பவரால் கோபாலபுரத்து மக்கள் என்ற நூலில் எழுதப்பட்டுள்ளது . இந்நூல் 1991 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி பரிசினைப் பெற்றது .
அன்னமய்யாவுடன் வந்த வாலிபன் :
- அன்னமய்யா தற்செயலாக அந்தப் பக்கம வந்தபோது அவர் கண்ணில் தென்பட்டான் அந்த வாலிபன் . அவன் கால்களை நீட்டி , புளியமரத்தில் சாய்ந்து உட்கார்ந்திருந்த அவனை நெருங்கிப் போய் பார்த்தபோது , பசியால் வாடி போய்விட்ட அந்த முகத்தில் கண்களின் தீட்சண்யம் , கவனிக்கக் கூடியதாய் இருந்தது . அன்னமாய்யாவைப் பார்த்ததும் சிறு புன்னகை காட்டினான் . அவனைப் பார்த்ததும் அன்னமையாவுக பத்துக் குழந்தைகள் லாட சன்னியாசி விளையாட்டு விளையாடுவது அன்னமையாவுக்கு ஞாபகம் வந்தது .
நீச்சுத் தண்ணி :
- அன்னமய்யாவை பா ர்த்த வாலிபன் ” தம்பி , கொஞ்சம் குடிக்கத் தண்ணி கிடைக்குமா ? ” என்று கேட்டது சந்தோஷமாக இருந்தது .” இந்தா பக்கத்துல அருகெடுத்துக்கிட்டு இருக்கிறவங்க கிட்ட நீச்சுத் தண்ணி இருக்கும் ; வாங்கிட்டு வரட்டுமா ?” என்றார் .
- இருவரும் மெல்ல நடந்து வேப்பமரத்தின் அடியில் சென்றனர் .அங்கே ஏகப்பட்ட கலயங்கள் , கருப்புக் கலயங்கள் தேங்காய்ப்பருமனுள்ள கற்களால் மூடப்பட்டு , மண் தரையில் பாதி புதைக்கப்பட்டிருந்தன. ஒரு கல்லை அகற்றினான் . ஒரு சிரட்டையில் காணத் துவையலும் ஊறுகாயும் , மோர் மிளகாய் போன்றவை இருந்தது .சிரட்டையே கலயத்தின் மூடியாக இருந்தது . ஒரு சிரட்டையில் நீத்துபாகத்தை வடித்து அவனிடம் திட்டினான் .
” சும்மா கடிச்சு குடிங்க ” – ஜீவா
- கையில் வாங்கியதும் சப்பிக்குடிப்பதா அண்ணாந்து குடிப்பதா என்ற தயக்கம் வந்தபோது ” சும்மா கடிச்சுக் குடிங்க “என்றான் அன்னமய்யா.. உறிஞ்சும்போது கண்கள் சொருகின . தொண்டையில் இறங்குவதன் சொகத்தை முகம் சொல்லியது.
- ‘உட்காருங்க உட்கார்ந்து குடிங்க’ என்று உபசரித்தான் .
- ரண்டாவது சிரட்டைக்கு சோற்றின் மகுளி மேலே வந்ததும் வார்த்துக் கொடுத்தான் . அதைக் குடித்ததும் ‘ ஹ ! ” என்றான் .
- மடக்கும் மடக்காய் அவனுள் ஜீவஊற்று பொங்கி நிறைந்து வந்தது .
மனநிறைவு :
- சிரட்டையைக் கையளித்துவிட்டு அப்படியே வேப்ப மரத்து நிழலிலே சொர்க்கமாய் படுத்துத் தூங்கினான் .அன்னமய்யாவுக்கு மேலான மனநிறைவு ஏற்பட்டது .
- மார்பில் பால் குடித்துக் கொண்டிருக்கும் போதே வயிறு நிறைந்ததும் அப்படியே தூங்கிவிடும் குழந்தையைப் பார்ப்பது போல அவனைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
கண் விழிக்க காத்திருந்த அன்னமய்யா :
வாலிபனின் சிறு தூக்கம் முடியும்வரை காத்திருந்த அன்னமய்யா. அந்தப் பக்கத்தில் “அருகு “எடுத்துக் கொண்டிருந்தார்கள்.
வாலிபனுக்கு முழிப்பு வந்ததும் தன் பிரண்டு சுப்பையாவிடம் கூட்டிச்சென்றான் . செல்லும் வழியில்
பேசிக்கொண்டே சென்றனர் .
” எங்கிருந்து வர்ரீங்க . எங்க போகணும் ?”
” ரொம்பத் தொலவட்லயிருந்து வர்ரென் ; எங்கதெ பெரிசு ! ” என்றான் . தம்பீ ஒம் பெயரென்ன ?”
” அன்னமய்யா “
பெயருக்கேற்ற பொருத்தம் :
“எனக்கு இன்று நீ இடும் அன்னம் தான “….
வாலிபன் அந்தப் பேரை மனதுக்குள் திரும்பத் திரும்பச் சொல்லி பார்த்துக் கொண்டான் . எவ்வளவு பொருத்தம் என்று நினைத்துக் கொண்டான் போலிருக்கிறது !
” எனக்கு இன்று நீ இடும் அன்னம் தான் “….
பதிலுக்கு வாலிபனிடம் என்ன என்று கேட்டான் . பெயர் பரமேஸ்வரன் எனவும் இப்போது மணின்னே கூப்பிடு என்றான் .
” இப்போ நாம எங்க போகணும் சொல்லு ” என்றான் . “அந்தோ…அங்கெ ” , என்று கைகாட்டினான் .
” அங்கெ என்னொட பிரண்டு – சுப்பையா ன்னு பேரு – காலேஜ்ல படிக்கான் . லீவுக்கு வந்திருக்கான் . அவங்க பிஞ்சையிலேயும் அருகெடுக்கிறாங்க , அங்க போவமா ? “
” ஓ ! போவமே “
அன்னம் வழங்கிய அன்னமய்யா :
- அன்னமய்யாவையும் புதுஆளையும் பார்த்து வரவேற்று உண்ணும்படி உபசரித்தார்கள் . மணி அவர்களோடு சேர்ந்து சாப்பிட்டான் .
- இடதுகைச் சோற்றில் ஒரு சிறு பள்ளம் செய்து அதில் துவையலை வைத்தார்கள் . சிரிது சோற்றை எடுத்துத் துவையலில் பட்டதோ படலையோ என்று தொட்டு கழுக் என்று முழங்கினார்கள் . அவர்கள் சாப்பிட்டு முடித்ததும் ஊர்க் கதைகள் பேச ஆரம்பித்தார்கள் . மணி திரும்பவும் படுத்து அமைதியாக கண்களை மூடிக் கிடந்தார் .
- இக்கதை அன்னமய்யாவின் பெயருக்கும் அவரின் செயல்களுக்கும் உள்ள பொருத்தப்பட்டனை விளக்குகிறது .