10th Tamil Guide Unit 2.5

10th Tamil Guide Unit 2.4

10th Tamil Guide Unit 2.4

இயல் 2.4 புயலிலே ஒரு தோணி

10th Tamil Samacheer kalvi Guide Lesson 2. SSLC Tamil Guide Unit 2.4 Full Book Back and Additional Question with answers. 10th Tamil Unit 2 Free Online Test. 10th Tamil Unit 2.1 to 2.5 Full Answers. TN 10th Tamil Reduced Syllabus Full Answers. 10th 1st and 2nd Revision Test Syllabus and Time Table 202210th Standard Tamil Nadu Start Board Syllabus, Samacheer Kalvi Guide, 10th Tamil Unit 2 Full Guide, 10th Tamil Unit 2 Book Back Question And Answers, Also Additional Question and answers. Unit 1 to 9 Full Guide.

  • 10th Tamil Free Online Test Unit 1 to 9 – Click Here

10th Tamil Guide Unit 2.4

1 . ‘  புயலிலே  ஒரு தோணி ‘  கதையில் இடம்பெற்றுள்ள  வருணனைகளும் அடுக்கு தொடர்களும் ஒலிக் குறிப்புச் சொற்களும்  புயலில் ,  தோணி படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன ?
 வர்ணனைகள் :
 
1.  கொளுத்திக் கொண்டிருந்த வெயில்   இமைநேரத்தில் மறைந்து விட்டது ;  புழுங்கிற்று .
2.  மேகப்  பொதிகள் பரந்து திரண்டொன்றிக்  கும்மிருட்டாய்  இறுகி  நின்றன .
3.  கிடுகிடுக்கும்  இடி முழக்கத்துடன்   மின்னல் கீற்றுகள் வானைப் பிளந்தன .
4.  வானம் உடைந்து கொட்டு கொட்டென்று வெள்ளம் கொட்டியது .
5 . சூறாவளி மாரியும் காற்றும் கூடிக் கலந்து ஆடிக் குதித்துக்  கெக்கலித்தன .
6.  வானும் கடலும் வளியும் மழையும்  மீண்டும் ஒன்று
கூடிக் கொந்தளிக்கின்றன .
7 .  வானம் பிளந்து தீ  கக்கியது .
8 .மழை வெள்ளம் கொட்டுகிறது . 
9.வளி முட்டி புரட்டுகிறது .
10 .கடல்வெறிக் கூத்தாடுகிறது .
அடுக்குத் தொடர்கள் :
1 .தொங்கான்  எலும்புகள் முடிவது போல்  நொறு நொறு நொறுங்கல் ஒலியுடன்  தத்தளித்தது .
2. இருளிருட்டு , இருட்டிருட்டு ,  கும்மிருட்டு ,  குருட்டிருட்டு தலைக்கு மேல் காணப்பட்டது .
3 . தொங்கான் நடுநடுங்கித்  தாவித் தாவிக்  குதித்து குதித்து விழுவிழுந்து   நொறு நொறு நொறுங்குகிறது .
4 . சூரியன் சூரியன்….கரை ! கரை ! …
5 .  கடல் அலைகள் மொத்து மொத்தென்று மோதின .
ஒலிக்குறிப்புச் சொற்கள் :
1 . தொங்கான்  நடுநடுங்கித்  தாவித் தாவிக்   குதிகுதித்து நொறு நொறு நொறுங்கல்  ஒலியுடன்   நொறுங்குகிறது .
2. ஙொய்ங் புய்ங் ஙொய்ங் புய்ங்  ஙொய்ங் புய்ங் .
3.  இடிமுழக்கச்  சீனப் பிசாசுகள் தாவி வீசுகின்றன .
புயலுக்குப் பின் அமைதி…கரை :
    மறுநாள் காலையில்  சூரியன் உதித்து ,  தொங்கான் மிதந்து சென்று ,  அலைகளில் நெளிந்தோடி  ஒருவழியாகக்   கரையை அடைந்தது .

Leave a Reply