10th STD Tamil இயல் 1 Book Back & Additional Question-Answers

 10th Tamil Guide Unit 1.3

 10th Tamil Guide Unit 1.3

இயல் 1: அமுதஊற்று // Unit 1.3 இரட்டுற மொழிதல்

10th Tamil Guide Unit 1.3. 10th Tamil Guide Unit 1. Samacheer Kalvi 10th Tamil Guide Unit 1.3 Question Answer. TN 10th Standard Tamil Book Back and Additional Question and answers. TN Samacheer kalvi Guide. 12th Standard All Unit Full answer key. Class 10 இயல் 1: அமுதஊற்று Book Full Answers. 10th Lesson 1 Free Online Test.  Tamilnadu state board 10th Tamil New Reduced syllabus Guide 2021 and New full Syllabus full Guide PDF Download. our website https://www.studentsguide360.com/  Teachers prepared the 10th Tamil Guide solutions. TN 10th Tamil New Reduced syllabus-based important question. 10th Tamil Guide Reduced syllabus based 2021 and Full new syllabus based on important questions with answers, Samacheer Kalvi 10th Tamil Book Back Answers. Guide, 10th Tamil Unit 1 Book back Question and Answers, 10th Tamil Unit 1 Book Back and additional question and answers, TN Students Guide. 10th Tamil All Units Full Answer key.

  • 10th Tamil Free Online Test Unit 1 to 9 – Click Here
 10th Tamil Guide Unit 1.3

 10th Tamil Guide Unit 1.3

 10th Tamil Guide Unit 1.3

இரட்டுற மொழிதல்

    ஒரு சொல்லோ, சொற்றொடரோ இருபொருள்பட வருவது இரட்டுற மொழிதல் அணி எனப்படும். இதனைச் சிலேடை அணி என்றும் அழைப்பர். செய்யுளிலும் உரைநடையிலும் மேடைப்பேச்சிலும் சிலேடைகள் பயன்படுத்தப்படுகின்றன.

 

நூல் வெளி!

    புலவர் பலரின் பாடல்களின் தொகுப்பான தனிப்பாடல் திரட்டு (ஐந்தாம் பகுதி – கழகப் பதிப்பு) என்னும் நூலிலிருந்து இந்தப்பாடல் எடுத்தாளப்பட்டுள்ளது. இப்பாடலைப் படைத்தவர் தமிழழகனார்.

    சந்தக்கவிமணி எனக் குறிப்பிடப்படும் தமிழழகனாரின் இயற்பெயர் சண்முகசுந்தரம். இலக்கணப் புலமையும் இளம்வயதில் செய்யுள் இயற்றும் ஆற்றலும் பெற்ற இவர் பன்னிரண்டு சிற்றிலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்.

 

பாடநூல் வினாக்கள்

I. சொல்லும் பொருளும்
  • துய்ப்பது – கற்பது, தருதல்
  • மேவலால் – பொருந்துதல், பெறுதல்
 10th Tamil Guide Unit 1.3


பலவுள் தெரிக

1.‘மெத்த வணிகலன்’ என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது
அ) வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்
ஆ) பெரும் வணிகமும் பெரும் கலன்களும்
இ) ஐம்பெரும் காப்பியங்களும் அணிகலன்களும்
ஈ) வணிகக் கப்பல்களும் அணிகலன்களும்
Answer:
அ) வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்

II. குறு வினா

1. தற்கால உரைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு ஓர் எடுத்தக்காட்டுத் தருக.
  • ஒரு சொல்லோ, சொற்றொடரோ இரு பொருள் பட வருவது இரட்டுற மொழிதல் அணி என்பர். இதனை சிலேடை அணி என்றும் அழைப்பர்.
எ.கா, சீனிவாசன் பாற்கடலில் துயில் கொள்கிறான்
– இத் தொடர் எவ்வித மாற்றமுமின்றி இரண்டு விதமான பொருளைத் தருகிறது.
சீனியில் (சர்க்கரை) வாசம் செய்யும் எறும்பு பாலில் இறந்து மிதக்கிறது.
சீனிவாசனாகிய திருமால் பாற்கடலில் துயில் கொள்கிறார்.

சிறுவினா

1.தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுறமொழியும் பாங்கினை விளக்குக.
 

Answer: 10th Tamil Guide Unit 1.3 >

இரட்டுற மொழிதல் – வினாக்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. கடல் மூன்று வகையான ______________ தருகிறது
விடை : சங்கினைத்
2. தமிழ் ______________ அணிகலனாய்ப் பெற்றது.
விடை : ஐம்பெருங்காப்பியங்களை
3. கடல் ______________, ______________ தருகிறது.
விடை : முத்தினையும், அமிழ்தினையும்
4. தமிழழகனாரின் மற்றொரு பெயர் ______________
விடை : சந்தக்கவிமணி
5. தமிழழகனாரின் இயற்பெயர் ______________
விடை : சண்முகசுந்தரம்
6. தமிழழகனாரின் _____________ சிற்றிலக்கிய  நூல்களைப் படைத்துள்ளார்.
விடை : 12

II. குறு வினா

1. ஐம்பெருங்காப்பியங்கள் யாவை?
  • சிலப்பதிகாரம்
  • மணிமேகலை
  • சீவகசிந்தாமணி
  • வளையாபதி
  • குண்டலகேசி
2. தமிழ் எப்படி வளர்ந்தது?
  • தமிழ், இயல் இசை நாடகம் என முத்தமிழாய் வளர்ந்தது
3. தமிழ் எவற்றால் வளர்க்கப்பட்டது;
  • தமிழ் முதல், இடை, கடை ஆகிய முச்சங்கங்களால் வளர்க்கப்பட்டது
4. தமிழ் எவற்றை அணிகலனாய் பெற்றது?
  • ஐம்பெருங்காப்பியங்கள் என அழைக்கப்படும் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகியவற்றை அணிகலன்களாகப் பெற்றது
5. தமிழ் யாரால் காக்கப்பட்டது?
  • தமிழானது சங்கப் பலகையில் அமர்ந்திருந்த சங்கப்புலவர்களால் காக்கப்பட்டது.
6. கடல் எவற்றையெல்லாம் தருகிறது?
  • முத்து
  • அமிழ்து
  • வெண்சங்கு
  • சலஞ்சலம்
  • பாஞ்சசன்யம் ஆகியவற்றை தருகிறது
7. கடல் எவை செல்லும்படி இருக்கிறது?
  • மிகுதியான வணிகக் கப்பல்கள் செல்லும்படி இருக்கிறது;
8. கடல் தன் அலையால் எதனை தடுத்து நிறுத்திக் காக்கிறது?
  • கடல் தன் அலையால் சங்கினைத் தடுத்து நிறுத்திக் காக்கிறது.
9. இரட்டுற மொழிதல் அணி என்றால் என்ன?
  • ஒரு சொல்லோ, சொற்றொடரோ இரு பொருள் பட வருவது இரட்டுற மொழிதல் அணி என்பர். இதனை சிலேடை அணி என்றும் அழைப்பர்.
10. சிலேடைகள் எங்கெல்லாம் பயன்படுத்தப்படுகின்றன?
  • சிலேடைகள்
  • செய்யுள்
  • உரைநடை
  • மேடைப்பேச்சு ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகின்றன.
11. தமிழ் எவற்றோடெல்லாம் இணைத்து பேசப்படுகிறது?
  • தமிழ் விண்ணோடும், முகிலோடும், உடுக்களோடும், கதிரவனோடும், கடலோடும் இணைத்து பேசப்படுகிறது

III. சிறு வினா

1. தமிழழகனார் – குறிப்பு வரைக
  • தமிழழகனார் இயற்பெயர் சண்முகசுந்தரம்.
  • தமிழழகனாரின் வேறு பெயர் சந்தக்கவிமணி.
  • இலக்கணப் புலமையும், இளம் வயதில் செய்யுள் இயற்றும் ஆற்றலும் பெற்றவர்.
  • பன்னிரண்டு சிற்றிலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்.
2. தமிழ் குறித்து தமிழழகனார் கூறுவன யாவை?
  • தமிழ், இயல் இசை நாடகம் என முத்தமிழாய் வளர்ந்தது.
  • முதல் இடை கடை ஆகிய முச்சங்கங்களால் வளர்க்கப்பட்டது.
  • ஐம்பெருங்காப்பியங்களை அணிகலன்களாகப் பெற்றது.
  • சங்கப் பலகையில் அமர்ந்திருந்த சங்கப்புலவர்களால் காக்கப்பட்டது.
3. கடல் குறித்து தமிழழகனார் கூறுவன யாவை?
  • கடல், முத்தினையும் அமிழ்தினையும் தருகிறது
  • வெண்சங்கு, சலஞ்சலம், பாஞ்சசன்யம் ஆகிய மூன்று வகையான சங்குகளைத் தருகிறது
  • மிகுதியான வணிகக் கப்பல்கள் செல்லும்படி இருக்கிறது;
  • தன் அலையால் சங்கினைத் தடுத்து நிறுத்திக் காக்கிறது.

 10th Tamil Guide Unit 1.3

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

1.‘தமிழ், ஆழி இரண்டுக்கும் பொருள்படும் படியான’ – இரட்டுற மொழிதலணி அமைய பாடிய ஆசிரியர் யார்?
அ) தேவநேயப் பாவாணர்
ஆ) பாவலரேறு பெருஞ்சித்திரனார்
இ) தமிழழகனார்
ஈ) எழில் முதல்வன்
Answer:
இ) தமிழழகனார்
 
2.கடல் தரும் சங்குகளின் வகைகள் எத்தனை?
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
Answer:
ஆ) மூன்று
 
3.கடல் தன் அலையால் எதைத் தடுத்து நிறுத்திக் காக்கிறது?
அ) மணல்
ஆ) சங்கு
இ) கப்பல்
ஈ) மீனவர்கள்
Answer:
ஆ) சங்கு
 
4.முத்தினையும் அமிழ்தினையும் தருவதாகச் சந்தக்கவிமணி தமிழழகனார் குறிப்பிடுவது எதை?
அ) மூங்கில்
ஆ) கடல்
இ) மழை
ஈ) தேவர்கள்
Answer:
ஆ) கடல்
 
5.தமிழ் அணிகலன்களாகப் பெற்றவை எவை?
அ) சங்க இலக்கியங்கள்
ஆ) ஐம்பெருங்காப்பியங்கள்
இ) ஐஞ்சிறு காப்பியங்கள்
ஈ) நீதி இலக்கியங்கள்
Answer:
ஆ) ஐம்பெருங்காப்பியங்கள்
 
6.இரட்டுறமொழிதல் அணியின் வேறுபெயர் யாது?
அ) வேற்றுமை அணி
ஆ) பிறிதுமொழிதல் அணி
இ) சொற்பொருள் பின்வருநிலையணி
Answer:
ஈ) சிலேடை அணி
 
7.ஒரு சொல்லோ, சொற்றொடரோ இருபொருள்பட வருவது எது?
அ) இரட்டுறமொழிதல் அணி
ஆ) வேற்றுமை அணி
இ) உவமை அணி
ஈ) உருவக அணி
Answer:
அ) இரட்டுறமொழிதல் அணி
 
8.சந்தக்கவிமணி எனக் குறிப்பிடப்படும் தமிழழகனாரின் இயற்பெயர் என்ன?
அ) சண்முகமணி
ஆ) சண்முகசுந்தரம்
இ) ஞானசுந்தரம்
ஈ) ஆறுமுகம்
Answer:
ஆ) சண்முகசுந்தரம்
 
9.தமிழழகனார் எத்தனை சிற்றிலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்?
அ) பத்து
ஆ) பன்னிரண்டு
இ) பதினான்கு
ஈ) பதினாறு
Answer:
ஆ) பன்னிரண்டு
 
10.முத்தமிழ் துய்ப்பதால் என்னும் பாடல் இடம் பெற்றுள்ள தொகுப்பு யாது?
அ) எட்டுத்தொகை
ஆ) பத்துப்பாட்டு
இ) சிற்றிலக்கியங்கள்
ஈ) தனிப்பாடல் திரட்டு
Answer:
ஈ) தனிப்பாடல் திரட்டு

குறுவினா

1.சிலேடைகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
Answer:
சிலேடைகள் இரண்டு வகைப்படும். அவை:
1.
அ) காலை நேரம் ஒரு நிகழ்ச்சிக்காகத் தொடர்வண்டியில் வந்து இறங்கினார் தமிழறிஞர் கி.வா. ஜகந்நாதன். அவரை மாலையிட்டு வரவேற்றனர். அப்போது கி.வா.ஜ., “அடடே! காலையிலேயே மாலையும் வந்துவிட்டதே!” என்றார். எல்லோரும் அந்தச் சொல்லின் சிலேடைச் சிறப்பை மிகவும் சுவைத்தனர்.
 
ஆ) இசை விமரிசகர் சுப்புடுவின் விமரிசனங்களில் நயமான சிலேடைகள் காணப்படும். ஒரு முறை ஒரு பெரிய வித்துவானுடைய இசைநிகழ்ச்சியை விமர்சனம் செய்யும் போது அவர் குறிப்பிட்டது: “அன்று கச்சேரியில் அவருடைய காதிலும் கம்மல், குரலிலும் கம்மல்.”
 
இ) தமிழறிஞர் கி.ஆ.பெ. விசுவநாதன் பல் மருத்துவத்தில் சிறப்புப் பட்டம் பெற்ற நண்பர் ஒருவரை அறிமுகம் செய்து வைத்தபோது “இவர் பல்துறை வித்தகர்” என்று குறிப்பிட்டார்.
இவைபோன்ற பல சிலேடைப் பேச்சுகளை நீங்கள் கேட்டிருப்பீர்கள். அவற்றைத் தொகுத்துச் சொல்நயங்களைப் பதிவு செய்து கலந்துரையாடுக.
 
Answer:
ஆசிரியர் : இன்று வகுப்பிற்கு புதிதாக வந்த மாணவன் எங்கே?
 
மாணவன் : இதோ, உள்ளேன் ஐயா. (மாணவன் வகுப்பின் கடைசி இருக்கையிலிருந்து கூறுகிறான்)
 
ஆசிரியர் : உன் பெயர் என்ன?
 
மாணவன் : கவியரசன்.
 
ஆசிரியர் : அப்படியானால் உனக்கு இருக்க வேண்டிய நீண்ட வாலையும் கூர்மையான நகங்களையும் காணவில்லையே.
 
*மாணவர்கள் அனைவரும் காரணம் புரியாமல் சிரிக்கின்றனர். அதற்கு ஆசிரியர் கூறிய விளக்கம் பின்வருமாறு அமைந்தது.] ‘கவி என்றால் குரங்கு என்று இன்னொரு பொருளும் உண்டு. ஆகவேதான் நீ குரங்குகளின் அரசனானால் உன் வாலையும், கூரிய நகங்களையும் எங்கே என்றேன்’ என விளக்கினார்.

Leave a Reply