10th Tamil Guide Unit 1.2
இயல் 1: அமுதஊற்று // Unit 1.2. தமிழ்ச்சொல் வளம்
10th Tamil Guide Unit 1.2. 10th Tamil Guide Unit 1.2 Samacheer Kalvi 10th Tamil Guide Unit 1.2 Question Answer. TN 10th Standard Tamil Book Back and Additional Question and answers. TN Samacheer kalvi Guide. 12th Standard All Unit Full answer key. Class 10 இயல் 1: அமுதஊற்று Book Full Answers. 10th Lesson 1 Free Online Test. Tamilnadu state board 10th Tamil New Reduced syllabus Guide 2021 and New full Syllabus full Guide PDF Download. our website https://www.studentsguide360.com/ Teachers prepared the 10th Tamil Guide solutions. TN 10th Tamil New Reduced syllabus-based important question. 10th Tamil Guide Reduced syllabus based 2021 and Full new syllabus based on important questions with answers, Samacheer Kalvi 10th Tamil Book Back Answers. Guide, 10th Tamil Unit 1 Book back Question and Answers, 10th Tamil Unit 1 Book Back and additional question and answers, TN Students Guide. 10th Tamil All Units Full Answer key.
-
10th Tamil Free Online Test Unit 1 to 9 – Click Here
10th Tamil Guide Unit 1.2
I. பலவுள் தெரிக
1. “காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்” நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது –
- இலையும் சருகும்
- தோகையும் சண்டும்
- தாளும் ஓலையும்
- சருகும் சண்டும்
விடை : சருகும் சண்டும்
2. வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை –
- குலை வகை
- மணி வகை
- கொழுந்து வகை
- இலை வகை
விடை : மணி வகை
II. குறு வினா
ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.
ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன.
ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.
மேற்கண்ட தொடர்களில் சரியான தொடர்களைச் சுட்டிக்காட்டி, எஞ்சிய பிழையான தொடரிலுள்ள பிழைக்கான காரணத்தை எழுதுக.
III. சிறு வினா
‘புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது.’
இதுபோல் இளம் பயிர் வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.
- பிள்ளை – தென்னம் பிள்ளை வாங்கி வந்தேன்.
- வடலி – காட்டில் பனை வடலியைப் பார்த்தேன்.
- நாற்று – நெல் நாற்று நட்டேன்
- கன்று – வாழைக்கன்று நட்டேன்
- பைங்கூழ் – சோளப் பைங்கூழ் பசுமையா உள்ளது.
10th Tamil Guide Unit 1.2
IV. நெடு வினா
தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரைக் குறிப்புகளை எழுதுக.
- அறிமுக உரை
- சொல்வளம்
- சொல்லாக்கத்திற்கான தேவை
- நிறைவுரை
- வணக்கம்! அன்னைமொழியே! அழகார்ந்த செந்தமிழே! எனப் போற்றப்படும் தமிழ்மொழி பிறமொழிகளுக்கெல்லாம் தலைச்சிறந்த மொழியாகும். அம்மாெழியின் சொல் வளத்தைப் பற்றி காண்போம்.
- இலக்கியச் செம்மொழிகளக்கெல்லாம் பொதுவேனும், தமிழ்மட்டும் அதில் தலை சிறந்ததாகும்.
- தமிழ்ச்சொல் வளத்தைப் பலதுறைகளில் காணலாம்.
- ஒரு பொருட் பல சொல் வரிசைகள் தமிழைத் தவிர வேறு எந்தத் திராவிட மொழிகளின் அகாராதிகளிலும் காணப்படவில்லை.
- “பிற திராவிட மொழிகளுக்குரியனவாகக் கருதப்படும் சொற்களம் தமிழில் உள” என்கிறார் கால்டுவெல்
- சொல்லாக்கத்கத்திற்கான தேவை என்பது அதன் பயன்பாட்டு முறையைக் கொண்டே அமைகிறது.
- இன்றைய அறவியல் வளர்ச்சிக்கேற்ப நூல்களை புதிய சொல்லாக்கத்துடன் படைத்தல் வேண்டும்.
- இலக்கிய மேன்மைக்கு மக்கள் அறிவுடையவர்களாக உயர்வதற்கும், புதிய சொல்லாக்கம் தேவை.
- மொழி என்பது உலகின் போட்டி பேராட்டத்திற்கு ஒரு போர்க்கருவியாகும். அக்கருவி காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும்.
- தமிழன் பெருமையும் மொழியின் சிறப்பும் குன்றாமல் இருக்க தமிழில் சொல்லாக்கம் தேவை.
- உலகின் பிற ஆய்வுச் சிந்தனைகளைத் தமிழர்படுத்தி எழுதும் போது பிறமொழி அறியாத தமிழரும் அவற்றைக் குறித்த அறிந்து கொள்ள முடியாது.
- மொழியே கலாச்சாரத்தின் வழிகாட்டி அதை நிலைநாட்ட புதிய சொல்லாக்கம் தேவை.
- மக்களிடையே பரந்த மன்பான்மையையும், ஆளுமையும் நிலைநாட்ட புதிய சொல்லாக்கம் தேவைப்படுகிறது.
- பிறமொழிச் சொற்கள் கலவாமல் இருக்க காலத்திற்கேற்ப புதிய கலைச் சொல்லாக்கம் ஏற்படுத்த வேண்டும்.
- மென்மையான தமிழை மேன்மையான தமிழாக்க அறிவியல் தொழில்நுடபச் சொற்களை தமிழ்ப்படுத்தி தமிழன் பெருமையை உலகிற்ககு கொண்டு செல்வோம்.
10th Tamil Guide Unit 1.2
தமிழ்ச்சொல் வளம் – வினாக்கள்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. தமிழ் மொழிக்காக மாநாடு நடத்திய நாடு ________
2. நாடும் மொழியும் நமதிரு கண்கள் என்றார் _____________
3. ஒரு நாட்டின் வளத்திற்கேற்ப அம்மக்களின் _____________ அமைந்திருக்கும்.
4. போர்ச்சுகீசு நாட்டின் தலைநகர் _____________
5. _____________ என்னும் நூல் முதன்முதலாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.
6. இந்திய மொழிகளிலேயே முதலில் _____________ அச்சேறியது தமிழ் மொழி
II. குறு வினா
1. ஒரு தாவரத்தின் அடிப்பகுதிகளைக் குறிப்பதற்கான சொற்கள் எவை?
- தாள், தண்டு, கோல், தூறு, தட்டு, கழி, கழை, அடி
2. தாவரங்களின் அடியிலிருந்து பிரிந்து செல்லும் பிரிவுகளுக்கு வழங்கப்படும் சொற்கள் யாவை?
- கவை, காெம்பு, கொப்பு, கிளை, சினை, போத்து, குச்சி, இணுக்கு
3. தாவரங்களின் காய்ந்த பகுதிகளுக்கு வழங்கப்படும் சொற்கள் யாவை?
- சுள்ளி, விறகு, வெங்கழி, கட்டை
III. சிறு வினா
1. தாவரத்தின் பிஞ்சு வகைகளுக்கு வழங்கும் சொற்களை விளக்கத்துடன் கூறுக.
- பூம்பிஞ்சு : பூவோடு கூடிய இளம்பிஞ்சு
- பிஞ்சு : இளம் காய்
- வடு : மாம்பிஞ்சு
- மூசு : பலாப்பிஞ்சு
- கவ்வை : எள்பிஞ்சு
- குரும்பை : தென்னை, பனை முதலியவற்றின் இளம் பிஞ்சு
- முட்டுக் குரும்பை : சிறு குரும்பை
- இளநீர் : முற்றாத தேங்காய்
- நுழாய் : இளம்பாக்கு
- கருக்கல் : இளநெல்
- கச்சல்: வாழைப்பிஞ்சு
2. தாவரங்களின் குலை வகைகளைக் குறிப்பதற்கான சொற்கள் விளக்குக
- கொத்து : அவரை, துவரை முதலியவற்றின் குலை
- குலை : கொடி முந்திரி போன்றவற்றின் குலை
- தாறு : வாழைக் குலை
- கதிர் : கேழ்வரகு, சோளம் முதலியவற்றின் கதிர்
- அலகு அல்லது குரல் : நெல், தினை முதலியவற்றின் கதிர்
- சீப்பு : வாழைத் தாற்றின் பகுதி.
3. பழங்களின் மேற்பகுதியினைக் குறிக்க வழங்கும் சொற்களை விளக்குக
- தொலி : மிக மெல்லியது
- தோல் : திண்ணமானது
- தோடு : வன்மையானது
- ஓடு : மிக வன்மையானது
- குடுக்கை : சுரையின் ஓடு
- மட்டை : தேங்காய் நெற்றின் மேற்பகுதி
- உமி : நெல்,கம்பு முதலியவற்றின் மூடி
- கொம்மை : வரகு, கேழ்வரகு முதலியவற்றின் உமி
4. தாவரங்களின் இளம் பருவத்திற்கான சொற்களை கூறுக
- நாற்று : நெல், கத்தரி முதலியவற்றின் இளநிலை
- கன்று : மா, புளி, வாழை முதலியவற்றின் இளநிலை
- குருத்து: வாழையின் இளநிலை
- பிள்ளை: தென்னையின் இளநிலை
- குட்டி: விளோவின் இளநிலை
- மடலி அல்லது வடலி: பனையின் இளநிலை
- பைங்கூழ் : நெல், சோளம் முதலியவற்றின் பசும் பயிர்.
5. தேவநேயப்பாவாணர் பற்றி நீவீர் அறிந்தவற்றை எழுதுக
- தேவநேயப்பாவணர் சிறப்புப் பெயர் மொழி ஞாயிறு
- இலக்கணக் கட்டுரைகள், மொழியாராச்சி கட்டுரைகள், சொல்லாய்வுக் கட்டுரைகள்.
- செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்குநர், உலக கழகத் தலைவர் இவர் ஆற்றிய பணிகள் ஆகும்.
6. கார்டிலா – நூல் குறிப்பு வரைக
- 1554-ல் கார்டிலா என்னும் நூல் முதன்முதலாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.
- ரோமன் வரி வடிவில் அச்சிடப்பட்ட நூல்இதனை Carthila de lingo Tamul e Portugues என்பர்இந்திய மொழிகளிலேயே மேலைநாட்டு எழுத்துருவில் முதலில் அச்சேறியது தமிழ் மொழி.
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
1.மரஞ்செடியினின்று பூ கீழே விழுந்த நிலையைக் குறிக்கும் சொல் எது?
2.திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம் என்னும் நூலை எழுதியவர் யார்?
3.திருவள்ளுவர் தவச்சாலை அமைந்துள்ள இடம் எது?
4.குச்சியின் பிரிவு எச்சொல்லால் அழைக்கப்படுகிறது? அ) போத்து
5.பொருத்துக.
1. தாள் – அ) குத்துச்செடி, புதர் முதலியவற்றின் அடி
2. தண்டு – ஆ) நெட்டி, மிளகாய்ச்செடி முதலியவற்றின் அடி
3. கோல் – இ) தண்டு, கீரை முதலியவற்றின் அடி
4. தூறு – ஈ) நெல், கேழ்வரகு முதலியவற்றின் அடி
அ) 1.ஈ 2.இ 3.ஆ 4.அ
6.பொருத்துக.
1. தட்டு – அ) கரும்பின் அடி
2. கழி – ஆ) புளி, வேம்பு முதலியவற்றின் அடி
3. கழை – இ) கம்பு, சோளம்
முதலியவற்றின் அடி – ஈ) மூங்கிலின் அடி
7.பொருத்துக.
1. கவை – அ) அடிமரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை
2. கொம்பு – ஆ) கிளையின் பிரிவு
3. சினை – இ) கவையின் பிரிவு
4. போத்து – ஈ) சினையின் பிரிவு
8.பொருந்தாதவற்றைக் கண்டறிக.
9.பொருந்தாதவற்றைக் கண்டறிக.
10.பொருந்தாதவற்றைக் கண்டறிக.
11.பொருந்தாத இணையைக் கண்டறிக.
12.வேறுபட்ட குழுவினைக் கண்டறிக.
13.பொருத்துக.
1. இலை – அ) தென்னை , பனை முதலியவற்றின் இலை
2. தாள் – ஆ) சோளம், கம்பு முதலியவற்றின் அடி
3. தோகை – இ) புளி, வேம்பு முதலியவற்றின் இலை
4. ஓலை – ஈ) நெல், புல் முதலியவற்றின் இலை
14.பொருத்தமற்ற ஒன்றைக் கண்டறிக.
15.பொருந்தாத இணையைக் கண்டறிக.
16.வேறுபட்ட குழுவினைக் கண்டறிக.
17.தும்பி – இச்சொல்லின் பொருள்
18.தாவரங்களின் இலை வகைகளைக் குறிக்கும் சொற்களுள் – சரியானவற்றைச் தேர்ந்தெடு.
19.‘நாடும் மொழியும் நமதிரு கண்கள்’ என்று பாடியவர் யார்?
20.சொல்லாராய்ச்சியில் பாவாணரும் வியந்த பெருமகனார் யார்?
21.பாவாணர் நூலகம் ஒன்றை உருவாக்கியவர் யார்?
22.தமிழ்வழித் திருமணங்களை நடத்தி வருபவர் யார்?
23.விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்த்தமிழினை இழந்துவிடக் கூடாது என்று எண்ணியவர் யார்?
24.இளங்குமரனார் யார் போல இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக் கொண்டவர்?
25.இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக்கொண்டவர்
26.விழிகளை மூடியபடி எழுதும் ஆற்றல் வாய்ந்த வர்கள் ………… …………
27.‘தமிழ்த்தென்றல்’ என்று போற்றப்பட்டவர் யார்?
28.உலகிலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு எது? மாநாட்டுக்குரிய அம்முதல் மொழியும் தமிழே என்று கூறியவர் யார்?
29.‘பன்மொழிப் புலவர்’ என்றழைக்கப்பட்டவர் யார்?
30.சம்பா நெல்லின் உள் வகைகள் எத்தனை?
குறுவினா
1.தாவரத்தின் அடிப்பகுதியைக் குறிப்பதற்கான சொற்கள் யாவை?
- தாள், தண்டு , கோல், தூறு, தட்டு, கழி, கழை, அடி.
2.தாவரங்களின் அடியிலிருந்து பிரிந்து செல்லும் பிரிவுகளுக்கு வழங்கப்படும் சொற்கள் யாவை?
- கவை, கொம்பு, கொப்பு, கிளை, சினை, போத்து, குச்சி, இணுக்கு.
3.தாவரங்களின் காய்ந்த பகுதிகளுக்கு வழங்கப்படும் சொற்கள் யாவை?
- சுள்ளி, விறகு, வெங்கழி, கட்டை.
4.தாவரங்களின் இலை வகைகளைக் குறிக்கும் சொற்கள் யாவை?
- இலை, தாள், தோகை, ஓலை, சண்டு, சருகு.
5.தாவரங்களின் நுனிப்பகுதியைக் குறிக்கும் சொற்கள் யாவை? (கொழுந்து வகை)
- துளிர் அல்லது தளிர்
- குருத்து
- முறி அல்லது கொழுந்து
- கொழுந்துதாடை
6.பூவின் நிலைகளைக் குறிக்கும் சொற்கள் யாவை?
- அரும்பு, போது, மலர், வீ, செம்மல்.
7.தாவரங்களின் பிஞ்சு வகைகளுக்கு வழங்கப்படும் சொற்கள் யாவை?
- பூம்பிஞ்சு, பிஞ்சு, வடு, மூசு, கவ்வை, குரும்பை, முட்டுக்குரும்பை, இளநீர், நுழாய், கருக்கல், கச்சல்.
8.தாவரங்களின் குலை வகைகளைக் குறிப்பதற்கான சொற்கள் யாவை?
- கொத்து, குலை, தாறு, கதிர், அலகு அல்லது குரல், சீப்பு.
9.கெட்டுப்போன காய்க்கும் கனிக்கும் தாவரத்திற்கேற்ப வழங்கப்படும் சொற்கள் யாவை?
- சூம்பல், சிவியல், சொத்தை, வெம்பல், அளியல், அழுகல், சொண்டு, தேரைக்காய், அல்லிக்காய், ஒல்லிக்காய், கோட்டான்காய் (அ) கூகைக்காய்.
10.பழங்களின் மேற்பகுதியினைக் குறிக்க வழங்கும் சொற்கள் யாவை?
- தொலி, தோல், தோடு, ஓடு, குடுக்கை, மட்டை, உமி, கொம்மை.
11.தானியங்களுக்கு வழங்கப்படும் சொற்கள் யாவை?
- கூலம், பயறு, கடலை, விதை, காழ், முத்து, கொட்டை, தேங்காய், முதிரை.
12.தாவரங்களின் இளமைப் பெயர்களை எழுது.
- நாற்று, கன்று, குருத்து, பிள்ளை , குட்டி, பைங்கூழ், மடலி (அ) வடலி.
13.கோதுமையின் வகைகளில் சிலவற்றைக் கூறு.
- சம்பாக்கோதுமை, குண்டுக்கோதுமை, வாற்கோதுமை.
14.சம்பா நெல் வகைகளை எழுதுக.
- ஆவிரம்பூச்சம்பா, ஆனைக் கொம்பன் சம்பா, குண்டுச் சம்பா, குதிரைவாலிச் சம்பா, சிறுமணிச்சம்பா, சீரகச்சம்பா முதலிய அறுபது வகைகள் சம்பாவில் உள்ளன.
15.இரா. இளங்குமரனாரின் தமிழ்ப்பணியைத் தரம் உயர்த்திய நல்முத்துகள் யாவை?
- இலக்கண வரலாறு
- தமிழிசை இயக்கம்
- தனித்தமிழ் இயக்கம்
- பாவாணர் வரலாறு
- குண்டலகேசி உரை
- யாப்பருங்கலம் உரை
- புறத்திரட்டு உரை
- திருக்குறள் தமிழ் மரபுரை
- காக்கைப் பாடினிய உரை
- தேவநேயம்
- முதலியன இரா. இளங்குமரனாரின் தமிழ்ப்பணியைத் தரமுயர்த்திய நல்முத்துகளாகும்.
16.உலகத்தமிழ் மாநாடு குறித்து க. அப்பாத்துரையார் கூறுவன யாவை?
- “உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு மலேசியா. அம்மாநாட்டுக்குரிய முதல் மொழியும் தமிழே!” என்று க. அப்பாத்துரையார் கூறுகின்றார்.
சிறுவினா
1.தேவநேயப்பாவாணர் பற்றி நீவீர் அறிந்தவற்றை எழுதுக.
- சிறப்புப்பெயர் : மொழிஞாயிறு
- படைப்புகள் : இலக்கணக் கட்டுரைகள், மொழியாராய்ச்சிக் கட்டுரைகள், சொல்லாய்வுக் கட்டுரைகள்.
- பணி : செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்குநர், உலகத் தமிழ்க் கழகத் தலைவர்
2.இரா. இளங்குமரனார் குறித்து நீவீர் அறிந்தவற்றைக் கூறுக.
- தமிழ்ப்பற்று : விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்த்தமிழினை இழந்துவிடக் கூடாது என்றார்.
- திரு.வி.க வழி : தமிழ்த்தென்றல் திரு.வி.க. போல் இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கொண்டவர்.
- சிறந்த நூல்கள் : இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம், பாவாணர் வரலாறு, குண்டலகேசி உரை, யாப்பருங்கலம் உரை, திருக்குறள் தமிழ் மரபுரை, புறத்திரட்டு உரை, காக்கைப் பாடினிய உரை, தேவநேயம்
- பிற செய்திகள் : திருவள்ளுவர் தவச்சாலை மற்றும் பாவாணர் நூலகத்தை அமைத்தார்.
3.கார்டிலா – நூல் குறிப்பு வரைக.
- 1554-ல் போர்ச்சுகீசு நாட்டில் தமிழில் முதன்முதலில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்.
- ரோமன் வரிவடிவில் அச்சிடப்பட்ட நூல்.
- இதனை Carthila de lingoa Tamul e Portugues என்பர்.
- இந்திய மொழிகளுள் மேலை நாட்டு மொழிகளில் அச்சிடப்பட்ட முதல் நூல் தமிழ்மொழி நூலே.
4.எந்தெந்தத் தாவரங்களின் அடிப்பகுதி என்னென்ன பெயர்களால் அழைக்கப்படுகிறது எனப் பட்டியலிடுக.
- தாள் – நெல், கேழ்வரகு முதலியவற்றின் அடி
- தண்டு – கீரை, வாழையின் அடி
- கோல் – நெட்டி, மிளகாய்ச் செடியின் அடி
- துறு – குத்துச்செடி, புதர் முதலியவற்றின் அடி
- தட்டு (அ) தட்டை – கம்பு, சோளம் முதலியவற்றின் அடி
- கழி – கரும்பின் அடி
- கழை – மூங்கிலின் அடி
- அடி – புளி, வேம்புவின் அடி
5.தாவரங்களின் அடியிலிருந்து பிரிந்து செல்லும் பிரிவுகளுக்கு வழங்கும் சொற்களையும் அவை தாவரங்களின் எப்பகுதிக்குப் பொருந்தும் என்பதையும் எழுது.
- கவை – மரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை
- கொம்பு (அ) கொப்பு – கவையின் பிரிவு
- கிளை – கொம்பின் பிரிவு
- சினை – கிளையின் பிரிவு
- போத்து – சினையின் பிரிவு
- குச்சி – போத்தின் பிரிவு
- இணுக்கு – குச்சியின் பிரிவு
6.எந்தெந்தத் தாவரங்களின் இலைகள் என்னென்ன பெயர்களால் அழைக்கப்படுகின்றன என்பதைப்
- புளி, வேம்பு – இலை
- தென்னை, பனை – ஓலை
- நெல், புல் – தாள்
- காய்ந்த இலை – சருகு
- சோளம், கரும்பு – தோகை
7.தாவரங்களின் பிஞ்சு வகைகளுக்கு வழங்கப்படும் பெயர்களையும் அவை எத்தாவரப் பிஞ்சுகளுக்குப்
- (பூம்பிஞ்சு -பூவோடு கூடிய இளம்பிஞ்சு, பிஞ்சு – இளம்காய்)
- வடு – மாம்பிஞ்சு
- இளநீர் – முற்றாத தேங்காய்
- மூசு – பலாப்பிஞ்சு
- நுழாய் – இளம்பாக்கு
- கவ்வை – எள் பிஞ்சு
- கருக்கல் – இளநெல்
- குரும்பை – தென்னை, பனை பிஞ்சு
- கச்சல் – வாழைப்பிஞ்சு
8.எந்தெந்தத் தாவரங்களின் குலைகள் என்னென்ன பெயர்களால் அழைக்கப்படுகின்றன எனப் பட்டியலிடுக.
- கொத்து – அவரை, துவரை
- கதிர் – கேழ்வரகு, சோளக் கதிர்
- குலை – கொடி முந்திரி
- அலகு (அ) குரல் – நெல், தினைக் கதிர்
- தாறு – வாழைக்குலை
- சீப்பு – வாழைத் தாற்றின் பகுதி
9.கெட்டுப்போன காய்க்கும் கனிக்கும் தாவரத்திற்கேற்ப வழங்கப்படும் பெயர்கள் யாவை?
- சூம்பல் – நுனியில் சுருங்கிய காய்
- சிவியல் – சுருங்கிய பழம்
- சொத்தை – புழுபூச்சி அரித்த காய் (அ) கனி
- வெம்பல் – சூட்டினால் பழுத்த பிஞ்சு
- அளியல் – குளுகுளுத்த பழம்
- அழுகல் – குளுகுளுத்து நாறிய பழம் (அ) காய்
- சொண்டு – பதறாய்ப் போன மிளகாய்
- கோடான்காய் (அ) கூகைக்காய் – கோட்டான் அமர்ந்ததினால் கெட்ட காய்
- தேரைக்காய் – தேரை அமர்ந்ததினால் கெட்டகாய்
- அல்லிக்காய் – தேரை அமாந்ததினால் கெட்ட தேங்காய்
- ஒல்லிக்காய் – தென்னையில் கெட்ட காய்