You are currently viewing 10th Tamil 2nd Revision Test Model Question Paper

10th Tamil 2nd Revision Test Model Question Paper

10th Tamil 2nd Revision Test Model Question Paper

SSLC Tamil 2nd Revision Test Model Question Paper March 2022. 10th 2nd Revision Test Portion | Syllabus. 10th 2nd Revision Test REVISED Time Table 2022. 10th Standard Tamil All Units Book Back And Additional Question and Answers. 10th & 12th 1st Revision Test Original Question Paper and Answer keySSLC Second Revision Test Model Question Papers All Subjects. 10th Tamil Full Guide – Samacheer kalvi Guide.

இரண்டாம் திருப்புதல் தேர்வு-மாதிரி வினாத்தாள்

  • Subject 10ஆம் வகுப்பு தமிழ்
  • Marks: 100 மதிப்பெண்கள்

பகுதி-1

(மதிப்பெண்கள்:15)

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:

1)உனதருளே பார்ப்பன் அடியேனே -யாரிடம் யார் கூறியது?

  • அ)குலசேகராழ்வார்,இறைவனிடம்
  • ஆ)இறைவனிடம்,குலசேகராழ்வார்
  • இ)மருத்துவரிடம்,நோயாளி
  • ஈ)நோயாளியிடம்,மருத்துவர்

2)குலசேகர ஆழ்வார் வித்துவக்கோட்டம்மா’என ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார்.

பூனையார் பால்சோற்றைக் கண்டதும் வருகிறார்- ஆகிய தொடர்களில் இடம்பெற்றுள்ள வழுவமைதிகள் முறையே

  • அ)மரபு வழுவமைதி, திணை வழுவமைதி
  • ஆ)இடவழுவமைதி, மரபு வழுவமைதி
  • இ)பால் வழுவமைதி ,திணை வழுவமைதி
  • ஈ)கால வழுவமைதி,இட வழுவமைதி.

3)’வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்

மாளாத காதல் நோயாளன் போல்-இவ்வடியில் மருத்துவர்,நோயாளன் முறையே

  • அ)குலசேகர ஆழ்வார்,இறைவன்
  • ஆ)இறைவன்,குலசேகர ஆழ்வார்
  • இ) நப்பூதனார் ,இறைவன்
  • ஈ) இறைவன், நப்பூதனார்

4)அருந்துணை என்பதைப் பிரித்தால்- ————-என வரும்

  • அ)அரு+துணை
  • ஆ)அருமை +துணை
  • இ)அருமை+இணை
  • ஈ)அரு+இணை

5)’இங்கு நகரப்பேருந்து நிற்குமா?’ என்று வழிப்போக்கர் கேட்பது———-வினா.

‘அதோ அங்கு நிற்கும்’ என்று மற்றொருவர் கூறியது————–விடை

  • அ)ஐய வினா,வினா எதிர் வினாதல்
  • ஆ)அறியா வினா,மறை விடை
  • இ)அறியா வினா,சுட்டு விடை
  • ஈ)கொளல் வினா,இனமொழி விடை

6) “அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி

மருளை யகற்றி மதிக்கும் தெருளை” -என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது

  • அ)தமிழ்
  • ஆ)அறிவியல்
  • இ)கல்வி
  • ஈ)இலக்கியம்

7)செய்குத்தம்பி பாவலர்———-என அழைக்கப்படுகிறார்

  • அ)நாஞ்சில் கவிஞர்
  • ஆ)மக்கள் கவிஞர்
  • இ)சதாவதானி
  • ஈ)தசாவதானி

8)பறந்தது வண்டா? பழமா? எனக் கேட்பது————வினா

  • அ)அறிவினா
  • ஆ)அறியா வினா
  • இ) ஏவல் வினா
  • ஈ) ஐய வினா

9)குளிர்காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள்

  • அ)முல்லை,குறிஞ்சி,மருத நிலங்கள்
  • ஆ)குறிஞ்சி, பாலை,நெய்தல் நிலங்கள்
  • இ)குறிஞ்சி,மருதம்,நெய்தல் நிலங்கள்
  • ஈ)மருதம்,நெய்தல்,பாலை நிலங்கள்

10)கோசல நாட்டில் குறையில்லாத காரணம் என்ன?

  • அ)நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்
  • ஆ)ஊரில் விளைச்சல் இல்லாததால்
  • இ)அரசன் கொடுங்கோலாட்சி புரிவதால்
  • ஈ)அங்கு வறுமை இல்லாததால்

11.தேவர் அனையர் என்று வள்ளுவர் யாரைக் குறிப்பிடுகிறார்?

  • அ)சான்றோர்
  • ஆ)நல்லோர்
  • இ)கயவர்
  • ஈ)பொய்கூறாதோர்

பாடலைப்படித்து வினாக்களுக்கு விடையளிக்க:

உறங்குகின்ற கும்பகன்ன வுங்கண் மாய வாழ்வெலாம்

இறங்குகின்ற தின்று காணெ ழுந்திரா யெழுந்திராய்

கறங்கு போல விற்பிடித்த காலதூதர் கையிலே

உறங்குவா யுறங்குவா யினிக்கிடந் துறங்குவாய்

12)இப்பாடல் இடம்பெற்ற நூல் யாது?

  • அ. சிலப்பதிகாரம்
  • ஆ. கம்பராமாயணம்
  • இ. பெருமாள் திருமொழி
  • ஈ. நீதி வெண்பா

13) இப்பாடலை இயற்றியவர் யார்?

  • அ. குலசேகர ஆழ்வார்
  • ஆ. இளங்கோவடிகள்
  • இ. சதாவதானி
  • ஈ. கம்பர்

14)விற்பிடித்த- என்பதன் இலக்கணக்குறிப்பு

  • அ. பண்புத்தொகை
  • ஆ. இரண்டாம் வேற்றுமை
  • இ. இரண்டாம் வேற்றுமைத்தொகை
  • ஈ. உருவகம்

15)கறங்கு என்ற சொல்லின் பொருள்

  • அ. கரத்தல்
  • ஆ.அம்பு
  • இ.காற்றாடி
  • ஈ.பகைவர்

பகுதி-2 (மதிப்பெண்கள்:18)

பிரிவு-1

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க:

(Q.No: 21 கட்டாயவினா)

16)விடைகளுக்கேற்ற வினாக்கள் அமைக்க:

அ)திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்.

ஆ)சதம் என்ற சொல்லின் பொருள் நூறு என்பதாகும்

 

17)வறுமையின் காரணமாக உதவிகேட்டு வருபவரின் தன்மானத்தை எள்ளி நகையாடுவது குறித்து குறளின் கருத்து என்ன?

18)மருத்துவத்தில் மருந்துடன் அன்பும்,நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக

19)சதாவதானம்- குறிப்பு வரைக.

20) உறங்குகின்ற கும்பகன்ன எழுந்திராய் எழுந்திராய்

கால தூதர் கையிலே உறங்குவாய் உறங்குவாய்

கும்பகன்னனை என்ன சொல்லி எழுப்புகிறார்கள்? எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்?

21)வினை என முடியும் திருக்குறளை எழுதுக.

பிரிவு-2

ஐந்து வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க:

22) காட்டில் விளைந்த வரகில் சமைத்த உணவு மழைக்கால மாலையில் சூடாக உள்ள சுவை மிகுந்து இருக்கும்- இத் தொடரில் அமைந்துள்ள முதற்பொருள் கருப்பொருள்களை வகைப்படுத்தி எழுதுக.

23) சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக:-

தேன்,விளக்கு,மழை,விண்,மணி,விலங்கு, செய்,மேகலை,வான்,பொன்,பூ

24)அறுத்து-பகுபத உறுப்பிலக்கணம் தருக.

25)கலைச்சொல் தருக: NANOTECHNOLOGY, INFRARED RAYS.

26)இருசொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க: இயற்கை-செயற்கை

27அகராதி உணர்த்தும் பொருளை எழுதுக: மன்றல் , தூவல்

28) தராசின் இரண்டு தட்டுகளிலும் மூன்று மூன்று கோல்டு பிஸ்கட்டுகளை வையுங்கள். இரண்டு

தட்டுகளும் ஈக்வலாக இருந்தா ல், கையில் மிச்சம் உள்ள பிஸ்கட்டே வெயிட் குறைவானது. பட், ஒரு பக்க

தராசுத் தட்டு உயர்ந்தால் அதில் உள்ள மூன்று பிஸ்கட்களில் ஒன்று வெயிட் குறைவானது.

-பிறமொழிச்சொல்லை நீக்கி எழுதுக.

பகுதி-3

பிரிவு-1

இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க:

29)தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்-இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக.

30)தாவரத்தின் பிஞ்சுகளுக்கு வழங்கப்படும் சொற்களைப் பட்டியலிடுக.

31) பத்தியைப் படித்துப் பதில் தருக:-

பருப்பொருள்கள் சிதறும்படியாகப் பல காலங்கள் கடந்து சென்றன.புவி உருவானபோது

நெருப்புப் பந்துபோல் விளங்கிய ஊழிக்காலம் தோன்றியது. பின்னர்ப் புவி குளிரும்படியாகத் தொடர்ந்து

மழை பொழிந்த ஊழிக்காலம் கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில்

மூழ்கியது. இப்படி மீண்டும் மீண்டும் சிறப்பாக ஆற்றல் மிகுந்து செறிந்து திரண்டு இப்படியாக

( வெள்ளத்தில் மூழ்குதல் ) நடந்த இந்தப் பெரிய உலகத்தில், உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாகிய

உள்ளீடு தோன்றியது. உயிர்கள் தோன்றி நிலைபெறும்படியாக இப்பெரிய புவியில் ஊழிக்காலம் கடந்தது.

1.உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாக நீவிர் கருதுவன யாவை?

2. பெய்மழை,பெய்த மழை-இலக்கணக்குறிப்பு தருக.

3.இப்பத்தி உணர்த்தும் அறிவியல் கொள்கை யாது?

பிரிவு-2

இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க

(Q.NO: 34 கட்டாய வினா)

32) மாளாத காதல் நோயாளன் போல்- என்னும் தொடரில் உள்ள உவமை சுட்டும் செய்தியை விளக்குக.

33) உங்களுடன் பயிலும் மாணவர் ஒருவர் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தி வேலைக்குச் செல்ல விரும்புகிறார். அவரிடம் கற்பதன் இன்றியமையாமையை எவ்வாறு எடுத்துரைப்பீர்கள்?

34) அ.வாளால் அறுத்து- எனத்தொடங்கும் பெருமாள் திருமொழி பாடலை அடி மாறாமல் எழுதுக

(அல்லது)

ஆ. அருளை- எனத் தொடங்கும் நீதிவெண்பா பாடலை அடிமாறாமல் எழுதுக

பிரிவு-3

இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க:

35)அலகிட்டு வாய்பாடு எழுதுக:

அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்

புல்லார் புரள விடல்

36) கடற்கரையில் உப்புக் காய்ச்சுதல் நடைபெறுகிறது; மலைப் பகுதிகளில் மலைப் பயிர்களும் நிலப்

பகுதிகளில் உழவுத்தொழிலும் நடைபெறுகின்றன.’- காலப்போக் கில் பல மாற்றங்கள் நிகழ்ந்தபோதிலும்,

பண்டைத் தமிழரின் திணைநிலைத் தொழில்கள் இன்றளவும் தொடர்வதை யும் அவற்றின் இன்றைய

வளர்ச்சியையும் எழுதுக.

37)தீவக அணியின் வகைகளைக் கூறி,அதில் ஒன்றனைச் சான்றுடன் விளக்குக

10th Tamil 2nd Revision Test Model Question Paper

பகுதி-4 (மதிப்பெண்:25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க:

38)அ) சந்தக் கவிதையில் சிறக்கும் கம்ப ன் என்ற தலைப்பில் இலக்கிய உரை எழுதுக. அன்பும் பண்பும்

கொண்ட தலைவர் அவர்களே! தேர்ந்தெடுத்த பூக்களைப் போன்று வரிசை தொடுத்து அமர்ந்திருக்கும்

ஆன்றோர்களே! அறிஞர் பெருமக்களே! வணக்கம். இயற்கை கொலுவீற்றிருக்கும் காட்சியைப் பெரிய

கலைநிகழ்வே நடப்பதான தோற்றமாகக் கம்பன் காட்டும் கவி… தண்டலை மயில்கள் ஆட… இவ்வுரையைத்

தொ டர்க!

(அல்லது)

ஆ)திருக்குறள் சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் எவ்வாறு பொருந்தும் என

அதன்வழி விளக்குக.

39) அ.பள்ளி ஆண்டுவிழா மலருக்காக நீங்கள் நூலகத்தில் படித்த கதை/கட்டுரை/ சிறுகதை/ கவிதை நூலுக்கான மதிப்புரை எழுதுக.

குறிப்பு: நூலின் தலைப்பு- நூலின் மையப்பொருள் -மொழிநடை- வெளிப்படுத்தும் கருத்து- நூலின் நயம்- நூல் கட்டமைப்பு -சிறப்புக்கூறு-நூலாசிரியர்.

(அல்லது)

ஆ.உமது ஊரில் பழுதடைந்துள்ள சாலையைச் சீரமைத்து தரக்கோரி நகராட்சி தலைவருக்குக் கூட்டு விண்ணப்பம் எழுதுக.

40)அ) நயம் பாராட்டுக:-

நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும்

நேர்ப்பட வைத்தாங்கே

குலாவும் அமுதக் குழம்பைக் குடிதொரு

கோல வெறிபடைத்தோம்;

உலாவும் மனச்சிறு புள்ளினை எங்கணும்

ஓட்டி மகிழ்ந்திடுவோம்;

பலாவின் கனிச்சுளை வண்டியில் ஓர் வண்டு

பாடுவதும் வியப்போ? – பாரதியார்

(அல்லது)

ஆ)மொழி பெயர்க்க:

Malar: Devi, switch off the lights when you leave the room.

Devi: Yeah. We have to save electricity.

Malar: Our nation spends a lot of electricity for lighting up our streets in the night.

Devi: Who knows? In future our country may launch artificial moons to light our night time sky!

Malar: I have read some other countries are going to launch these types of illumination satellites near future.

Devi:Superb news!If we launch artificial moons,they can assist in disaster relief bybeaming lighton areas that lost power

41)நூலக உறுப்பினர் படிவத்தை நிரப்புக.

42)காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

10th Tamil 2nd Revision Test Model Question Paper

பகுதி-5 (மதிப்பெண்:24)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க:   3X8=24

43)அ)நிகழ்கலை வடிவங்கள் – அவை நிகழும் இடங்கள் – அவற்றின் ஒப்பனைகள் – சிறப்பும் பழைமையும்

-இத்தகைய மக்கள் கலைகள் அருகிவருவதற்கான காரணங்கள் – அவற்றை வளர்த்தெடுக்க நாம்

செய்யவேண் டுவன – இவை குறித்து நாளிதழுக்கான தலையங்கம் எழுதுக.

(அல்லது)

ஆ)நாட்டு விழாக்க ள் – விடுதலைப் போராட்ட வரலாறு – நாட் டின் முன்னேற்றத்தில் மாணவர் பங்கு –

குறிப்புகளைக் கொ ண்டு ஒரு பக்க அளவில் ‘மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும்’ என்ற தலைப்பில்

மேடை உரை எழுதுக

44)அ)உங்கள் ஊரில் கடின உழைப்பாளர் – சிறப்புமிக்கவர் – போற்றத்தக்கவர் – என்ற நிலைகளில் நீங்கள்

கருதுகின்ற பெண்கள் தொடர்பான செய்திகளைத் தொகுத்து வழங்குக.

(அல்லது)

ஆ)இராமானுசர் நாடகம் என்ற பாடப்பகுதியை உரையாடல் வடிவில் சுருக்கி எழுதுக.

45)அ.உங்கள் பகுதியில் நடைபெற்ற அரசு பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.

(அல்லது)

ஆ.விண்வெளியும் கல்பனா சாவ்லாவும் என்ற தலைப்பில் கட்டுரை வரைக

 

Leave a Reply