10th Social Science Unit 3 Book Back Answers
10th Social Science Samacheer kalvi guide – Unit 3 Book Back Question and Answers
10th social Science Unit 3. இரண்டாம் உலகப்போர் – Book Back Question – Answers
10th Social Science – History Unit 3. இரண்டாம் உலகப்போர் – Book Answers
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.
1.ஜப்பான் சரணடைவதாக எப்போது முறைப்படி கையெழுத்திட்டது?
அ) செப்டம்பர் 2, 1945
ஆ) அக்டோபர் 2, 1945
இ) ஆகஸ்ட் 15, 1945
ஈ) அக்டோபர் 12, 1945
விடை:
அ) செப்டம்பர் 2, 1945
2.சர்வதேச சங்கம் உருவாக்கப்படுவதில் முன்முயற்சி எடுத்தவர் யார்?
அ) ரூஸ்வெல்ட்
ஆ) சேம்பெர்லின்
இ) உட்ரோ வில்சன்
ஈ) பால்டுவின்
விடை:
இ உட்ரோ வில்சன்
3.ஜப்பானியக் கப்பற்படை அமெரிக்க கப்பற்படையால் எங்கே தோற்கடிக்கப்பட்டது?
அ) க்வாடல்கெனால் போர்
ஆ) மிட்வே போர்
இ) லெனின்கிரேடு போர்
ஈ) எல் அலாமெய்ன் போர்
விடை:
ஆ) மிட்வே போர்
4.அமெரிக்கா தனது முதல் அணுகுண்டை எங்கே வீசியது?
அ) கவாசாகி
ஆ) இன்னோசிமா
இ) ஹிரோஷிமா
ஈ) நாகசாகி
விடை:
இ ஹிரோஷிமா
5.ஹிட்லர் எவரை மிகவும் கொடுமைப்படுத்தினார்?
அ) ரஷ்யர்கள்
ஆ) அரேபியர்கள்
இ) துருக்கியர்கள்
ஈ) யூதர்கள்
விடை:
ஈ) யூதர்கள்
6.ஜெர்மனியோடு மியூனிச் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட இங்கிலாந்துப் பிரதமர் யார்?
அ) சேம்பர்லின்
ஆ) வின்ஸ்ட ன் சர்ச்சில்
இ) லாயிட் ஜார்ஜ்
ஈ) ஸ்டேன்லி பால்டுவின்
விடை:
அ) சேம்பர்லின்
7.எப்போது ஐக்கிய நாடுகள் சபையின் பட்டய சாசனம் கையெழுத்தானது?
அ) ஜீன் 26, 1942
ஆ) ஜீன் 26, 1945
இ) ஜனவரி 1, 1942
ஈ) ஜனவரி 1, 1945
விடை:
ஆ) ஜீன் 26, 1945
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1.இராணுவ நீக்கம் செய்யப்பட்ட …………….. பகுதியை ஹிட்லர் தாக்கினார்.
விடை:ரைன்லாந்து
2.இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான் ஆகியவற்றிக்கிடையேயான ஒப்பந்தம் என அழைக்கப்பட்டது.
விடை:ரோம்-பெர்லின் டோக்கியோ அச்சு உடன்படிக்கை
3.……………… கடன் குத்தகைத் திட்டத்தை தொடக்கி வைத்தார்.
விடை:ரூஸ்வெல்ட்
4.1940இல் ராஜினாமா செய்த பிரிட்டன் பிரதமர் ………………. ஆவார்.
விடை:சேம்பர்லின்
5.……………. என்பது தொலைவிலிருந்தே எதிரிகளின் போர் விமானங்களைக் கண்டுபிடிப்பதற்கான ஒரு கருவி.
விடை:ரேடார்
III. பொருத்துக.
விடை:- 1 – உ, 2 – ஈ, 3 – அ, 4 – ஆ, 5 – இ
IV. சரியான கூற்றைத் தேர்வு செய்க.
1.கூற்று : குடியரசுத்தலைவர் ரூஸ்வெல்ட் அமெரிக்கா தனது தனித்திருக்கும் கொள்கையை மாற்றியமைக்க வேண்டும் என்பதை உணர்ந்தார்.
காரணம் : அவர் 1941இல் கடன் குத்தகைத் திட்டத்தை தொடங்கினார்.
அ) கூற்றும் காரணமும் சரி.
ஆ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.
இ) காரணம் கூற்று ஆகிய இரண்டுமே தவறானவை.
ஈ) காரணம் சரி ஆனால் அது கூற்றுடன் பொருந்தவில்லை .
விடை:
அ) கூற்றும் காரணமும் சரி
10th Social Science Unit 3 Book Back Answers
V. சுருக்கமாக விடையளிக்கவும்.
1.முதல் உலகப்போருக்குப் பிந்தைய உலகத்தின் மூன்று முக்கிய சர்வாதிகாரிகள் யாவர்?
விடை:
- இத்தாலி – முசோலினி
- ஜெர்மனி – ஹிட்லர்
- ஸ்பெயின் – பிராங்கோ
2.ஹிட்லர் ஜெர்மன் மக்களின் ஆதரவை எவ்வாறு பெற்றார்?
விடை:
அடால்ப் ஹிட்லரின் எழுச்சி:
- ஜெர்மனி பெருமளவு அவமானப்படுத்தப்பட்டதாக நிலவிய கருத்தைப் பயன்படுத்தி, தனது வல்லமை மிக்க சொற்பொழிவாற்றும் திறமையாலும் உணர்ச்சிமிக்கப் பேச்சுக்களாலும் ஜெர்மனியை அதன் இராணுவப் புகழ்மிக்க முந்தைய காலத்திற்கு மீண்டும் அழைத்துச் செல்வதாகவும் கூறி அடால்ப் ஹிட்லர் மக்களைத் தன்பக்கம் ஈர்த்தார்.
- தேசிய சமதர்மவாதிகள் கட்சியை நிறுவினர்.
- ஒன்று ஜெர்மனியரே சுத்தமான ஆரிய இனத்தவர் எனும் இனஉயர்வு மனப்பாங்கு மற்றொன்று மிக ஆழமான யூத வெறுப்பு.
3.முத்துத் துறைமுக நிகழ்வை விவரி.
விடை:
- 1941 டிசம்பரில் ஹவாயிலுள்ள அமெரிக்கக் கப்பற்படைத் தளமான முத்துத் துறைமுகத்தின் மீது ஜப்பானிய விமானப்படைகள் முன் அறிவிப்பின்றி பெரும் தாக்குதலைத் தொடுத்தன.
- அமெரிக்காவின் பசிபிக் கப்பற்படையை முடமாக்கி விட்டால் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது தான் படையெடுக்கும் போது எதிர்ப்பேதும் இருக்காது என ஜப்பான் நினைத்ததே இதற்குக் காரணமாகும்.
- இத்தாக்குதலில் பல போர் கப்பல்களும் போர் விமானங்களும் அழிக்கப்பட்டன.
- மிக முக்கியமாக இத்தாக்குதல் பெருமளவிலான வளங்களைக் கொண்டிருந்த அமெரிக்க நாட்டை நேசநாடுகளின் அணியில் இப்போரில் பங்கேற்க வைத்தது.
4.பெவரிட்ஜ் அறிக்கை குறித்து நீ அறிந்தது என்ன?
விடை:
- 1942இல் பிரிட்டன் பொதுவான பெவரிட்ஜ் அறிக்கை என்றழைக்கப்பட்ட அறிக்கையை வெளியிட்டது.
- பொதுமக்களுக்கு அதிக வருமானத்தை அளிப்பது, உடலநலப் பாதுகாப்பு, கல்வி, வீட்டுவசதி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை வழங்கும் பல திட்டங்கள் தொகுப்பாக இடம் பெற்றிருந்தன.
5.பிரெட்டன் உட்ஸ் இரட்டையர்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:
- “பிரெட்டன் உட்ஸ் இரட்டையர்கள்” எனக் குறிக்கப்படும் உலகவங்கி, பன்னாட்டு நிதி அமைப்பு உலக வங்கியின் இரு முக்கிய அங்கங்கள்.
- புனரமைப்பு மற்றும் வளர்ச்சிக்கானப் பன்னாட்டு வங்கி, மற்றொன்று பன்னாட்டு வளர்ச்சி முகமை ஆகும். இவையிரண்டுமே உலகவங்கி என்ற பெயரிலேயே குறிப்பிடப்படுகிறது.
6.பன்னாட்டு நிதியமைப்பின் (IMF) நோக்கங்கள் யாவை?
விடை:
- பன்னாட்டு நிதியமைப்பின் நோக்கங்கள் :
- உலக அளவில் நிதி சார்ந்த ஒத்துழைப்பைப் பேணுவது, நிதி நிலையை உறுதியானதாக வைத்திருத்தல், பன்னாட்டு வணிகத்திற்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பது, வேலை வாய்ப்பினைப் பெருக்குவது, நீடித்தப் பொருளாதார வளர்ச்சி, உலகம் முழுவதிலும் வறுமையை ஒழிப்பது என்பனவாகும்.
VI. விரிவான விடையளிக்கவும்.
1.இரண்டாம் உலகப்போரின் விளைவுகளை ஆய்வு செய்க.
விடை:
இரண்டாம் உலகப்போரின் விளைவுகள்:
உலகம் இரு அணிகளாகப் பிரிதல்:
- இரண்டாவது உலகப்போர் உலகில் அடிப்படையானதும் முக்கியமானதுமான பல மாற்றங்களை ஏற்படுத்தியது.
- ஒரு அணி கம்யூனிச எதிர்ப்புக் கருத்துக்களைக் கொண்ட அமெரிக்காவால் தலைமையேற்கப்பட்டது.
- மற்றொரு அணிக்கு சோவியத் யூனியன் தலைமை தாங்கியது.
- கம்யூனிச நாடுகள், கம்யூனிசமல்லாத நாடுகளென ஐரோப்பா இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
அணு ஆயுதப்பரவல்:
- அமெரிக்க ஐக்கிய நாடுகளும் சோவியத் யூனியனும் அணு ஆயுதங்களை அதிகரிக்கும் போட்டியில் இறங்கி, ஆயுதங்களைப் பெருக்கிக் குவித்தன.
- பல நாடுகளில் இராணுவத்திற்கான செலவினங்கள் உச்சத்தை எட்டின.
பன்னாட்டு முகமைகள் :
- பல பன்னாட்டு முகமைகள் குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபை, உலக வங்கி, பன்னாட்டு நிதியம் போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டன.
- காலனி நீக்கச் செயல்பாட்டின் அடிப்படையில் காலனியாதிக்கச் சக்திகள் தங்களது காலனிகளுக்கு விடுதலை வழங்க வேண்டிய கட்டாயத்திற்குள்ளாயினர்.
- அதில் இந்தியா முதலாவதாய் சுதந்திரம் பெற்றது.
2.ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு, செயல்பாடுகளை ஆய்வு செய்க.
விடை:
நிர்வாக அமைப்பு:
- ஐக்கிய நாடுகள் சபையின் செயல்பாட்டு அங்கமாகத் திகழ்வது செயலகம் ஆகும்.
- இதன் தலைமைச் செயலாளர், பொதுச்சபையில், பாதுகாப்பு சபையின் பரிந்துரையின்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
- பொதுச் செயலாளர் தனது காபினெட் உறுப்பினர்கள், ஏனைய அதிகாரிகள் ஆகியோரின் துணையோடு ஐக்கிய நாடுகள் சபையை நடத்துகிறார்.
- பன்னாட்டு நீதிமன்றம் ஐக்கிய நாடுகள் சபையின் நீதி நிர்வாகக்கிளையாகும்.
- இது ஹாலந்திலுள்ள தி ஹேக்கில் அமைந்துள்ளது. பொருளாதார சமூக மாமன்றம் ஐக்கிய நாடுகள் சபையின் ஐந்தாவது அங்கமாகும்.
- ஐக்கிய நாடுகள் சபை மேற்கொள்ளும் அனைத்துப் பொருளாதாரச் சமூகப் பணிகளை ஒருங்கிணைப்பது இவ்வமைப்பின் பணியாகும்.
- உலகின் பல்வேறு பகுதிகளில் வட்டாரங்களின் வளர்ச்சிக்காக பல பிராந்திய பொருளாதார ஆணையங்கள் செயல்படுகின்றன.
- அவைப் பொருளாதார சமூகமாமன்றத்தின் துணையமைப்புகளாகும்.
ஐ.நா.வின் செயல்பாடுகள்:
- 1950களில் காலனியாதிக்க நீக்கம் முக்கிய பிரச்சனையாகும்.
- மனித உரிமைகள், அகதிகள் பிரச்சனை, பருவகாலமாற்றம், பாலினச் சமத்துவம் ஆகியன தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் செயல்பாட்டு வளையத்தினுள் உள்ளன.
- மிகச் சிறப்பாகக் கட்டாயம் குறிப்பிடப்பட வேண்டியது ஐ.நா.வின் அமைதிப்படை ஆகும்.
- உலகம் முழுவதிலும் மோதல்கள் அரங்கேறியப் பல்வேறு பகுதிகளில் அப்படை பணி செய்துள்ளது.
VII. செயல்பாடுகள்
உலக வரைபடத்தில் அச்சு நாடுகள், நேசநாடுகள் ஆகியவற்றைக் குறிக்கவும்.
VIII உலை்க வடரெைத்தில் கீழக்கண்ைவறடைக
குறிக்கவும.
10th Social Science Unit 3 Question answers
10th Social Science – History
Additional Important Questions and Answers ( TET, TNPSC TRB )
-
10th Social Science – History – Unit 3 – Additional Question and Answers – Tamil Medium – Click Here