10th Social Science Unit 3 Additional Question Answers
10th Social Science Samacheer kalvi guide – Unit 3 Additional Question and Answers
10th social Science Unit 3. இரண்டாம் உலகப்போர் – Additional question – Answers
10th Social Science Unit 3 Question answers
10th Social Science – History
Additional Important Questions and Answers ( TET, TNPSC TRB )
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.
1. 1919 ஜீன்-ல் ……………… உடன்படிக்கையோடு முதல் உலகப் போர் முடிவுற்றது.
அ) லண்ட ன்
ஆ) வெர்செய்ல்ஸ்
இ) பிரெஸ்ட் லிட்டோவஸ்க்
ஈ) மங்க ளூர்
விடை:
ஆ) வெர்செய்ல்ஸ்
2. செக்கோஸ்லோவாக்கியாவின் ஒரு பகுதி …………………
அ) ரைன்லாந்து
ஆ) நியூசிலாந்து
இ) அயர்லாந்து
ஈ) சூடட்டன்லாந்து
விடை:
ஈ) சூடட்டன்லாந்து
3. கிழக்குப் பகுதிகளில் ………………. இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது.
அ) ரஷ்யா
ஆ) சீனா
இ) ஜப்பான்
ஈ) ஜெர்மனி
விடை:
இ ஜப்பான்
4. இங்கிலாந்துப் பிரதமர் …………………. ஆவார்.
அ) கிளமென்சோ
ஆ) கெரனர்ஸ்கி
இ) வின்ஸ்ட ன் சர்ச்சில்
ஈ) முசோலினி
விடை:
இ வின்ஸ்டன் சர்ச்சில்
5. சேம்பர்லின் தனது பிரதமர் பதவியை …………………….. ல் துறந்தார்.
அ) 1941
ஆ) 1907
இ) 1991
ஈ) 1940
விடை:
ஈ) 1940
6. ஹிட்லரின் ‘மின்னல் வேகத் தாக்குதல் ‘…………………… எனப்பட்டது.
அ) ரேடார்
ஆ) சோனார்
இ) பிளிட்ஸ்கிரிக்
ஈ) எதுவுமில்லை
விடை:
இ பிளிட்ஸ்கிரிக்
7. ஹிட்லர் தனது திட்டங்களை …………………….. மூலம் பிரிட்டனை வற்புறுத்த விருப்பினார்.
அ) இராணுவ தாக்குதல்
ஆ) பனிப் போர்
இ) குண்டு தாக்குதல்
ஈ) எதுவுமில்லை
விடை:
இ குண்டு தாக்குதல்
8. லண்டன் நகரம் குண்டுக்கு இரையான இந்நிகழ்வு …………………. எனப்பட்டது.
அ) இறுதி தீர்வு
ஆ) பேரழிவு
இ) மின்ன ல்
ஈ) எதுவுமில்லை
விடை:
இ மின்னல்
9. ஜப்பான் ………………. உடன் சேர்ந்து போரிட்டது.
அ) அச்சு நாடுகள்
ஆ) நேச நாடுகள்
இ) நடுநிலை நாடுகள்
ஈ) எதுவுமில்லை
விடை:
அ) அச்சு நாடுகள்
10. கடன் குத்தகைத் திட்டத்தை ……………… ல் ரூஸ்வெல்ட் தொடங்கினார்.
அ) 1941 மார்ச்
ஆ) 1940 ஜீலை
இ) 1971 ஆகஸ்ட்
ஈ) 1970 டிசம்பர்
விடை:
அ) 1941 மார்ச்
11. 1945ல் …………….. கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்டார்.
அ) ஹிட்லர்
ஆ) முசோலினி
இ) ஸ்மட்ஸ்
ஈ) ஹெர்சாக்
விடை:
ஆ முசோலினி
12. ஹிட்லர் ……………… ஏப்ரலில் தற்கொலை செய்து கொண்டார்.
அ) 1945
ஆ) 1954
இ) 1934
ஈ) 1905
விடை:
1945
13. 1931ல் …………ப் படைகள் மஞ்சூரியாவின் மீது படையெடுத்தன.
அ) ஜப்பானிய
ஆ) சீன
இ) பிரெஞ்சு
ஈ) இல்லை
விடை:
அ) ஜப்பானிய
14. சீனத் தலைநகர் ………………… ஆகும்.
அ) நான்கிங்
ஆ) ஷாங்காய்
இ) ரூர்கேலா
ஈ) பெய்ஜிங்
விடை:
ஈ) பெய்ஜிங்
15. பெய்ஜிங் பொதுவாக ……………… என அழைக்கப்படுகிறது.
அ) இத்தாலி
ஆ) ஹங்கேரி
இ) ருமேனியா
ஈ) பீகிங்
விடை:
ஈ) பீகிங்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. முதல் உலகப் போர் ……………….. எனப்பட்டது. விடை:மாபெரும் போர்
2. போரின் இழப்பீட்டை ……………… வழங்கியது. விடை:ஜெர்மனி
3.சூடட்டன்லாந்தில் பேசும் மொழி ………………. ஆகும். விடை:ஜெர்மன்
4.இத்தாலி அல்பேனியாவைக் கைப்பற்றிய ஆண்டு …………………. விடை:1939
5.அமெரிக்க கப்பற்படைத் தளம் ……………………… ஆகும். விடை:முத்துத் துறைமுகம்
6.க்வாடெல்கெனால் போர் …………………….. மாதங்கள் நீடித்தது. விடை:பல
7.காலனித்துவ அடிப்படையில் ………………….. முதலாவதாக சுதந்திரமடைந்தது. விடை:இந்தியா
8.இரண்டாம் உலகப் போரின் போது உலகம் …………….. துருவங்களாகப் பிரிந்தது. விடை:இரு
9.………………த் தொழில் யூதர்களின் முக்கிய தொழில் ஆகும். விடை:வட்டி
10.ஷேக்ஸ்பியரின் பிரபலமான நாடகம் ……………… ஆகும். விடை:வெனிஸ் நகர வணிகர்
11.மனித உரிமைப் பிரகடனம் ……………… கட்டுரைகளைக் கொண்டது. விடை:30
12.மனித உரிமைகள் தினம் ……………… ஆகும். விடை:டிசம்பர் – 10
13.ஐக்கிய நாடுகள் …………………. உறுப்பு நாடுகளைக் கொண்டது. விடை:193
14.ஐ.நா வின் தலைமையகம் …………………… விடை:நியூயார்க்
15.உலக வங்கி ……………. பிரிவைக் கொண்டது. விடை:2
IV. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.
1.கூற்று : இத்தாலி முசோலினியின் சர்வாதிகார ஆட்சி 1933ல் தூக்கியெறியப்பட்டது.
காரணம் : ஜெர்மனி வடக்கே ஒரு பொம்மை அரசை நிறுவி அதில் முசோலினியை அமரவைத்தது.
அ) கூற்று, காரணம் சரி. காரணம் கூற்றுக்கு பொருத்தமானது.
ஆ) கூற்று, காரணம் சரி. காரணம் கூற்றுக்கு பொருத்தமாக இல்லை.
இ) இரண்டும் தவறு.
ஈ) கூற்று தவறு. காரணம் சரி
விடை:
ஈ) கூற்று தவறு. காரணம் சரி
V. சுருக்கமான விடையளிக்கவும்.
1.தென்கிழக்கு ஆசியாவில் ஜப்பானின் ஆக்கிரமிப்புகள் யாவை?
- தென்கிழக்கு ஆசிய நாடுகள் அனைத்திலும் தனது பேரரசை விரிவாக்க வேண்டுமென்ற தனது திட்டத்தில் ஜப்பான் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றது.
- குவாம், பிலிப்பைன், ஹாங்காங், சிங்கப்பூர், மலேசியா, டச்சு, கிழக்கிந்தியா (இந்தோனேசியா). பர்மா ஆகிய அனைத்தும் ஜப்பானிடம் வீழ்ந்தன.
2.பேரழிவுப் படுகொலை – நீவீர் அறிந்தது என்ன?
- இரண்டாவது உலகப் போரின் போது ஜெர்மானியர்களால் ஆறு மில்லியன் யூத மக்கள் கொல்லப்பட்ட இன அழிப்பை விளக்குவதற்கு பேரழிவுப்படுகொலை என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.
3.மனித உரிமைப் பிரகடனம் வரையறு.
- ஐக்கிய நாடுகள் சபை தன்னுடைய மனித உரிமை சாசனத்தில் இனம், பால், மொழி, மதம் ஆகிய வேறுபாடுகளின்றி அடிப்படைச் சுதந்திரமும் மனித உரிமைகளும் உலகளாவிய முறையில் கடைபிடிக்கப்படுவதை ஊக்குவிக்கப்போவதாக உறுதிமொழி மேற்கொண்டது.
- உலகளாவிய முறையில் மனித உரிமைகளைக் காப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபை மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாக மனித உரிமைகள் ஆணையம் உருவாக்கப்பட்டது.
4.இஸ்ரேல் நாட்டின் பிறப்பு பற்றி எழுதுக.
- மேற்சொல்லப்பட்ட பேரழிவின் முக்கிய விளைவு யூத இன மக்களுக்கென இஸ்ரேல் எனும் நாடு உருவாக்கப்பட்டதாகும்.
- வரலாற்று ரீதியாக, ரோமர்கள் காலத்திலிருந்து இதுவே அவர்களின் தாயகமாகும்.
5.ஐநாவின் முக்கியத் துணை அமைப்புகள் யாவை? –
- உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு.
- உலக சுகாதார நிறுவனம்.
- ஐ.நா. கல்வி, அறிவியல், மற்றும் பண்பாட்டு அமைப்பு.
6.உலக வங்கியின் இரு முக்கிய அம்சங்கள் யாவை?
- புனரமைப்பு மற்றும் வளர்ச்சிக்கானப் பன்னாட்டு வங்கி.
- பன்னாட்டு வளர்ச்சி முகமை.
VI. விரிவான விடையளிக்கவும்.
1.பன்னாட்டு நிதியமைப்பை பற்றி விவரி.
- பன்னாட்டு நிதியமைப்பானது அடிப்படையில் ஹேரி டேக்ஸ்டர் ஒயிட், ஜான் மேனார்டு கெய்ன்ஸ் எனும் புகழ்பெற்றப் பொருளாதார நிபுணர்களின் மூளையில் உதித்த குழந்தையாகும்.
- இவ்வமைப்பு 1945இல் 29 உறுப்புநாடுகளைக் கொண்டு முறையாக தொடங்கப்பெற்றது. தற்போது 189 நாடுகள் உறுப்புநாடுகளாக உள்ளன.
- இதனுடைய அடிப்படை நோக்கம் உலகம் முழுவதிலும் நிதி மற்றும் வளர்ச்சியின் நிலைத்த தன்மையை உறுதிப்படுத்துவதாகும்.
- இவ்வமைப்பு பணம் செலுத்துவதில் சமநிலைப் பிரச்சனைகளை (ஏனெனில் இந்நாடுகளால் தங்கள் இறக்குமதிகளுக்கு பணம் செலுத்த முடிவதில்லை) சந்திக்கும் நாடுகளுக்குக் கடன் வழங்கும்.
- ஆனால் கடன் வாங்கும் நாடுகள் மீது இவ்வமைப்பு வரவு செலவுத்திட்டங்களைச் சுருக்குதல், செலவுகளைச் சுருக்குதல் போன்ற கடுமையான நிபந்தனைகளைச் சுமத்துகிறது.
- இந்நடவடிக்கைகள் பெரும்பாலும் வளரும் நாடுகளால் விரும்பப்படுவதில்லை.
- ஏனெனில் மக்களுக்கு மானியம் வழங்கும் பல்வேறு திட்டங்களைக் கைவிட வேண்டிய சூழல் உருவாகிறது.
2.இரண்டாம் உலகப்போருக்குப்பின் ஐரோப்பாவில் மக்கள் நல அரசுகள் பற்றி விவரி.
- மக்கள் நலஅரசு எனும் சொற்றொடர், அரசாங்கமே மக்களின் சமூகப் பொருளாதார நலன்களுக்குப் பொறுப்பு என்ற கோட்பாட்டைக், குறிப்பதாகும்.
- 1942இல் பிரிட்டன் பொதுவாக பெவரிட்ஜ் அறிக்கை என்றழைக்கப்பட்ட அறிக்கையை வெளியிட்டது.
- பொதுமக்களுக்கு அதிக வருமானத்தை அளிப்பது, உடல் நலப்பாதுகாப்பு, கல்வி, வீட்டுவசதி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை வழங்கும் பல திட்டங்கள் தொகுப்பாக இடம் பெற்றிருந்தன.
- போருக்குப் பின்னர் பிரிட்டனில் தொழிலாளர் கட்சி ஆட்சியமைத்தது.
- “தொட்டிலிலிருந்து கல்லறை வரை” மக்களைக் கவனித்துக்கொள்ளும் திட்டங்களை மேற்கொள்ளப்போவதாக அவ்வரசு உறுதியளித்தது.
- தேசிய நலச் சேவையின் மூலம் இலவச மருத்துவ வசதி, முதியோர்க்கு ஓய்வூதியம், வேலையற்றோர்க்கு உதவித்தொகை போன்ற நிதியுதவிகள் குழந்தை நல சேவைகள், குடும்பநலச்சேவைகள் ஆகியவற்றை வழங்குவதற்காகப் பல சட்டங்கள் இயற்றப்பட்டன.
- அனைவருக்குமான இலவசப் பள்ளிக் கல்வி என்பதற்கு மேலாக இவையனைத்தும் அளிக்கப்பட்டன.