10th Social Science Unit 2 Additional Question Answers
10th social Science Unit 2. இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம் – Additional Question Answers
10th Social Science Samacheer Guide – History Tamil Medium
Unit 2. இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்
Additional Important Questions and Answers ( TET Paper 1 and 2, TNPSC, TRB)
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.
1.………………. என்பது தீவிர ஆதிக்க மனப்பான்மை கொண்டது.
அ) நாசிசம்
ஆ) பாசிசம்
இ) தாவோயிசம்
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) பாசிசம்
2.கத்தோலிக்க திருச்சபையின் ஆதரவைப் பெறுவதில் வெற்றி பெற்றவர் ………………….
அ) போர்
ஆ) ஹிட்லர்
இ) முசோலினி
ஈ) பிராங்கோ
விடை:
இ முசோலினி
3.ரோமாபுரி நோக்கி அணிவகுப்பை ………………… முசோலினி மேற்கொண்டார்.
அ) 1928
ஆ) 1944
இ) 1921
ஈ) 1922
விடை:
ஈ) 1922
4.…………………. தடை செய்யப்பட்ட கட்சி சமூக ஜனநாயக கட்சி ஆகும்.
அ) வில்சன்
ஆ) வெய்மர்
இ) பிஸ்மார்க்
ஈ) எதுவுமில்லை
விடை:
பிஸ்மார்க்கால்
5.ஹிண்டென்பர்க் …………….. இல் இறந்தார்.
அ) 1934
ஆ) 1943
இ) 1439
ஈ) 1997
விடை:
அ) 1934
6.ஹோசிமின் ……………….. பிறந்தார்.
அ) மாஸ்கோ
ஆ) ரஷ்யா
இ) இத்தாலி
ஈ) டோங்கிங்
விடை:
ஈ) டோங்கிங்
7.இன ஒதுக்கல் என்பதன் பொருள் ……………… ஆகும்.
அ) ஒதுக்கல்
ஆ) அழித்தல்
இ) தனிமைப்படுத்துல்
ஈ) எதுவுமில்லை
விடை:
இ தனிமைப்படுத்துதல்
8.ஸ்மட்ஸ் தலைமையில் ……………… இடங்கள் தென்னாப்பிரிக்க கட்சி வெற்றி பெற்றது.
அ) 44
ஆ) 34
இ) 43
ஈ) 41
விடை:
ஈ) 41
9.போயர்கள் …………………. போரைக் கைக்கொண்டனர்.
அ) வெர்டர்
ஆ) கொரில்லா
இ) மார்ன்
ஈ) எதுவுமில்லை
விடை:
கொரில்லா
10.ஜெர்மனி பாசிசத்தின் தோற்றம் …………….. ஆண்டு ஆகும்.
அ) 1991
ஆ) 1919
இ) 1909
ஈ) 1999
விடை:
ஆ) 1919
11.ஹிட்லரின் சுயசரிதை நூல் ………………… ஆகும்.
அ) இண்டிகா
ஆ) அர்த்தசாஸ்திரம்
இ) மெயின் காம்ப்
ஈ) எதுவுமில்லை
விடை:
மெயின் காம்ப்
12.ஹிட்லரின் சின்னம் ………………….
அ) டைமண்ட்
ஆ) ஸ்வஸ்திக்
இ) மீன்
ஈ) வில்
விடை:
ஸ்வஸ்திக்
13.ஹிட்லரின் இராணுவத்தினர் அணிந்த சட்டை நிறம் ……………… ஆகும்.
அ) பழுப்பு
ஆ) கருப்பு
இ) சிவப்பு
ஈ) மஞ்சள்
விடை:
அ) பழுப்பு
14.……………….. வியட்நாம் கட்சியை தோற்றுவித்தார்.
அ) வில்சன்
ஆ) சர்ச்சில்
இ) ஹிட்லர்
ஈ) ஹோசிமின்
விடை:
ஈ) ஹோசிமின்
15.வெள்ளை பயங்கரவாதத்திற்கு பின் ஹோசிமின் ………………… சென்றார்.
அ) ரஷ்யா
ஆ) மாஸ்கோ
இ) டோங்கிங்
ஈ) இத்தாலி
விடை:
ஆ) மாஸ்கோ
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1.அமெரிக்காவில் முதல் பெரும் வீழ்ச்சி அரங்கேறியது.
விடை:1929 அக்டோபர் 24
2.மேற்கு ஐரோப்பாவில் பழைய ஆட்சி அதிகாரத்திற்கு எதிராக திரும்பிய முதல் நாடு ……………….. ஆகும்.
விடை:இத்தாலி
3.லேட்டரன் உடன்படிக்கை …………….. போப்புடன் கையெழுத்தானது.
விடை:1929
4.முசோலினி ………………….. மீது படையெடுத்தார்.
விடை:எத்தியோப்பியாவின்
5.ஹிட்லரின் மெய்க்காப்பாளர் …………………… ஆவார்.
விடை:ஹைட்ரிச் ஹிம்லர்
6.ஹிட்லரின் இனப்படுகொலை நாஜிக்களால் ………………. எனப்பட்டது.
விடை:“இறுதித் தீர்வு”
7.ஹோ சி மின் லண்டன் உணவு விடுதியில் ………………… பணியாற்றினார்.
விடை:சமையல் கலைஞராகப்
8.……………. மாபெரும் மக்கள் இயக்கமாய் மாறியது.
விடை:இந்திய தேசிய காங்கிரஸ்
9.போயர் போர் ……………… ஆண்டுகள் நீடித்தது.
விடை:3
10.ஆப்பிரிக்க நேர்களின் மொழி ………………. ஆகும்.
விடை:ஆப்பிரிக்கான்ஸ்
11.தென்னாப்பிரிக்க ஒன்றியம் ……………….. உதயமானது.
விடை:1910
12.11ஆம் நூற்றாண்டில் பெரிய நகரங்களில் இணைந்து ……………………. அமைப்பாக உருவானது.
விடை:மாயாபன்
13.அஸ்டெக்குகள் மாயா நாட்டைக் கைப்பற்றி ………………….. எனும் தலைநகரை நிறுவினர்.
விடை:டெனோச்டிட்லான்
14.ஸ்டபரானியர்கள் ……………… தங்கள் பகுதிகளில் ஒன்றாக ஆக்கினார்கள்.
விடை:பெருவை
15.……………… தளை தகர்ப்பாளர் என்றறியப்பட்டார்.
விடை:சைமன் பொலிவர்
III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.
1.i) 1830ல் ஒட்டுமொத்த அமெரிக்காவும் ஐரோப்பிய மேலாதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றது.
ii) நாசிசம் தீவிர ஆதிக்க மனப்பான்மை கொண்ட தேசியவாதத்தின் ஒரு வடிவமாகும்.
iii) பாசிசம் 1919ல் தொடங்கப்பட்டது.
iv) ஹிட்லர் 1922ல் ரோமாபுரி நோக்கி அணிவகுப்பை நடத்தினார்.
அ) i, iii சரி
ஆ) ii, iv சரி
இ) 1 சரி
ஈ) iv சரி
விடை:
அ) i, iii சரி
2.கூற்று : லத்தீன் அமெரிக்கா டாலர் அரசியல் ஏகாதிபத்தியத்தை விரும்பவில்லை.
காரணம் : அமெரிக்காவிற்கு பொருளாதார தொழில்நுட்ப உதவிகளை செய்ய ஒத்துக் கொள்ளவில்லை.
அ) கூற்று, காரணம் சரி
ஆ) கூற்று சரி, காரணம் தவறு
இ) கூற்று தவறு, காரணம் சரி
ஈ) இரண்டும் தவறு
விடை:
ஆ) கூற்று சரி, காரணம் தவறு
IV. பொருத்துக .
V. சுருக்கமான விடையளிக்கவும்.
1.பாசிசம் என்பது யாது?
விடை:
- பாசிஸம் என்பது தீவிர ஆதிக்க மனப்பான்மை கொண்ட அதிதீவிர தேசியவாதத்தின் ஓர் வடிவமாகும்.
- சர்வாதிகார வல்லமையும் எதிர்ப்பை வன்முறை கொண்டு அடக்குவதும் சமூகத்தையும், பொருளாதாரத்தையும் வலுவான மத்திய அதிகாரத்தின் கீழ் வைத்திருப்பதும் இதன் பண்புகளாகும்.
2.ஜனநாயகக்கட்சி பற்றி எழுதுக.
விடை:
- சமூக ஜனநாயகக் கட்சியானது ஜெர்மன் பொதுத்தொழிலாளர் கழகம் என்ற பெயரில் 1863 மே 23 இல் லிப்சிக் நகரத்தில் நிறுவப்பட்டது.
- அதனை நிறுவியவர் பெர்டினன்ட் லாஸ்ஸல்லி என்பவராவார்.
- 1945இல் ஹிட்லரின் மூன்றாவது ரெய்க்கின் (குடியரசின்) வீழ்ச்சியைத் தொடர்ந்து இக்கட்சி புத்தெழுச்சி பெற்றது.
- ஹிட்லரை எதிர்த்த கட்சி என்ற பெயருடன் வெய்மர் காலத்திலிருந்து செயல்படும் ஒரேகட்சி இதுவேயாகும்.
3.காலனிய நீக்கம் – வரையறு.
விடை:
- காலனிய நீக்கம் என்பது காலனியாதிக்க சக்திகள் காலனிகள் மீது கொண்டுள்ள நிறுவனம் மற்றும் சட்டம் சார்ந்த கட்டுப்பாடுகளைச் சொந்த தேசிய அரசுகளிடம் வழங்குவதாகும்.
4.ஹோ சி மின் பற்றி குறிப்பு எழுதுக.
விடை:
- ஹோ சி மின் 1890இல் டோங்கிங்கில் பிறந்தார்.
- பாரிஸ் அமைதி மாநாட்டில் வியட்நாமின் சுதந்திரத்திற்காக ஆதரவு திரட்டினார்.
- 1921இல் ஹோ சி மின் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கியவர்களில் ஒருவராக இருந்தார்.
- 1925இல் புரட்சிகர இளைஞர் இயக்கம் எனும் அமைப்பை நிறுவினார்.
5.போயர்கள் பற்றி எழுதுக.
விடை:
- தென்னாப்பிரிக்காவில் குடியேறிய டச்சுக் குடியேற்றங்களின் வம்சாவளியினரே ஆப்பிரிக்கநேர்கள் என்றும் அழைக்கப்பட்ட போயர்கள் ஆவர்.
- இவர்களது மொழி ஆப்பிரிக்கான்ஸ் ஆகும்.
VI. விரிவான விடையளிக்கவும்.
1.முதல் உலகப்போருக்குப் பின்னர் ஏற்பட்ட வளர்ச்சிப்போக்குகள் பற்றி விவரி.
விடை:
- முதல் உலகப்போரானது போர்க்காலப் பெரும்வளர்ச்சி முடிவற்றுத் தொடரும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் சில குறிப்பிட்ட தொழில்களின் விரிவாக்கத்திற்கு வலிகோலியது.
- இருந்த போதிலும் போர் ஒரு முடிவுக்கு வந்தபோது, போர்த்தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக உருவாகி வளார்ந்த சில தொழில்கள் கைவிடப்பட்ட வேண்டியவைகளாக அல்லது மாற்றி அமைக்கப்பட வேண்டியவைகளாயின.
- வெர்செய்ல்ஸ் உடன்படிக்கை ஏற்படுத்திய அரசியல்சிக்கல்கள், நிலைமையை மேலும் மோசமாக்கியது.
- பொருளாதார தேசியவாதம் எனும் புதிய அலை ‘பாதுகாப்பு’ அல்லது ‘சுங்கத் தடைகள்’, இறக்குமதியாகும் பொருள்களின் மீது வரிசுமத்துவது எனும் பெயர்களில் தன்னை வெளிப்படுத்திக்கொண்டு, உலகவர்த்தகத்தைப் பாதித்தது.
- போர் ஒவ்வொரு ஐரோப்பிய நாட்டின் மீதும் பெரும் கடன்சுமையை ஏற்றியது.
2.கறுப்பின மக்களுக்கு எதிரான இனக்கொள்கை பற்றி விவரி.
விடை:
- ஆப்பிரிக்கநேர்கள் கறுப்பின மக்களுக்கும், சிறுபான்மை இந்தியர்களுக்கும் எதிராக கடுமையான இனக்கொள்கையைப் பின்பற்றினர்.
- கறுப்பின மக்களின் குடியிருப்புகளை நகரங்களின் சில குறிப்பிட்ட பகுதிகளுக்குள்ளாக கட்டுப்படுத்துவதற்காக 1923இல் ஒரு சட்டம் இயற்றப்பட்டது.
- ஏற்கனவே 1913இல் இயற்றப்பட்ட சட்டம் வெள்ளை மற்றும் கறுப்பின் விவசாயிகளைப் பிரித்து வைத்தது.
- இதனால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கறுப்பின மக்களால் நிலங்களை வாங்குவது முடியாமலேயே போனது.
- 1924இல் இயற்றப்பட்ட சட்டம் கறுப்பின மக்களை வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதிலிருந்தும் தொழிற்சங்கத்தில் சேருவதில் இருந்தும் தடுத்தது.
- மாநிலத்தில் கறுப்பின மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது.
- இவ்வாறு மண்ணின் மைந்தர்களான கறுப்பினமக்கள் அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்டு அவர்கள் அரசியல், பொருளாதாரம், சமூகம் ஆகிய அனைத்துத் தளங்களிலும் துன்புற்றனர்.