10th Social Science Unit 1 Additional Question Answers
10th Social Science Samacheer kalvi guide – Unit 1 Additional Question and Answers
10th social Science Unit 1. முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் – Additional question – Answers
10th Social Science Unit 1 Question Answers
10th Social Science – History
Additional Important Questions and Answers ( TET, TNPSC TRB )
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.
1.முதல் உலகப் போரின் மிகப்பெரும் விளைவு ………………….. புரட்சி ஆகும்.
அ) சீனப்
ஆ) ரஷ்யப்
இ) பிரெஞ்சு
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) ரஷ்யப்
2.……………… ஆனது தகவல் பரிமாற்றம், போக்குவரத்து என்றறியப்பட்டது.
அ) காலனித்துவமயமின்மை
ஆ) புரட்சி
இ) காடழிப்பு
ஈ) அ) மற்றும் ஆ)
விடை:
ஆ) புரட்சி
3.………………… கூட்டு நிறுவனங்களும், ஜெர்மனியில் வணிக கூட்டிணைப்பும் உருவானது.
அ) ஜப்பான்
ஆ) அமெரிக்கா
இ) ரஷ்யா
ஈ) பிரெஞ்சு
விடை:
ஆ) அமெரிக்கா
4.……………….. காலத்தில் ஆசிய நாடுகள் காலனிமயமாக்கப்பட்டன.
அ) 1912
ஆ) 1882
இ) 1880
ஈ) 1885
விடை:
இ 1880
5.“எனது நாடு சரியோ, தவறோ நான் அதை ஆதரிப்பேன்” என்பது ………………. ஆகும்.
அ) ஆக்கிரமிப்பு மனப்பாங்கு
ஆ) பகை
இ) வன்முறை சார்ந்த தேசியம்
ஈ) எதுவுமில்லை
விடை:
இ வன்முறை சார்ந்த தேசியம்
6.………………… போர் பதுங்கு குழிப் போரின் தொடக்கம் ஆகும்.
அ) வெர்டன்
ஆ) கொரில்லா
இ) மார்ன்
ஈ) உலகப்
விடை:
இ மார்ன்
7.எதிரிகளின் சுடுதலில் இருந்து பாதுகாத்து கொண்டு நிற்க உதவுவது ……………… ஆகும்
அ) வெர்டன் போர்
ஆ) மார்ன் போர்
இ) ரஷ்யப் போர்
ஈ) பதுங்கு குழிப் போர்
விடை:
ஈ) பதுங்கு குழிப் போர்
8.ஜெர்மனியோடு 1918 மார்ச் 3ம் நாள் பிரெஸ்ட் லிட்டோவஸ்க் உடன்படிக்கையில் கையெழுத்திட்டது …………….. ஆகும்.
அ) பிரான்ஸ்
ஆ) இத்தாலி
இ) ரஷ்யா
ஈ) ஜப்பான்
விடை:
இ ரஷ்யா
9.மைய நாடுகளுடன் சேர்ந்து ………………….. போரிட்டது.
அ) ஜெர்மனி
ஆ) ஜப்பான்
இ) சீனா
ஈ) துருக்கி
விடை:
துருக்கி
10.அமெரிக்க குடியரசுத் தலைவர் ………………….. ஆவார்.
அ) சேம்பர்லின்
ஆ) வில்லியம்
இ) உட்ரோ வில்சன்
ஈ) கிளமென்சோ
விடை:
இ உட்ரோ வில்சன்
11.ஜெர்மனி ……………….. தொடங்கிய குற்றத்தைச் செய்தது.
அ) முதல் உலகப் போர்
ஆ) இரண்டாம் உலகப்போர்
இ) அ மற்றும் ஆ
ஈ) எதுவுமில்லை
விடை:
உலகப் போர்
12.அமெரிக்காவிற்கு சொந்தமான கப்பல் ………………. ஆகும்.
அ) எம்டன்
ஆ) லூசிடானியோ
இ) சுதேசி
-ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) லூசிடானியோ
13.முதல் உலகப் போர் வெடித்த ஆண்டு ………………. ஆகும்.
அ) 1915
ஆ) 1916
இ) 1914
ஈ) 1918
விடை:
இ 1914
14.………………….. ஜெர்மனியோடும், அமெரிக்காவோடும் போட்டியிட வேண்டியிருந்தது.
அ) பிரான்ஸ்
ஆ) இத்தாலி
இ) ஆஸ்திரேலியா
ஈ) இங்கிலாந்து
விடை:
ஈ) இங்கிலாந்து
15.…………………. ஜப்பான் சீனாவின் மீது வலுக்கட்டாயமாக போரிட்டது.
அ) 1984
ஆ) 1894
இ) 1948
ஈ) 1888
விடை:
ஆ) 1894
16.கிழக்கு ஆசியாவில் வலிமை மிகுந்த நாடு ………………….
அ) பிரான்ஸ்
ஆ) ரஷ்யா
இ) ஜப்பான்
ஈ) ஐரோப்பா
விடை:
இ ஜப்பான்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1.………….. என்பது ரஷ்ய மொழிச் சொல் ஆகும்.
விடை:
“பிராவ்தா”
2.“பிராவ்தா” என்றால் ………………….. எனப் பொருள் ஆகும்.
விடை:
“உண்மை ”
3.நிலம் சமுதாயத்தின் ……………….. அறிவிக்கப்பட்டது.
விடை:
சொத்தாக
4.பன்னாட்டு சங்கம் …………………. உறுப்புகளைக் கொண்டது.
விடை:5
5.பன்னாட்டு சங்கத்தின் முதல் பொருட் செயலாளர் ………………..
விடை:
சர் ஏரிக் ட்ரம்மாண்ட்
Question 6.
ரஷ்ய புரட்சி ……………….. தொடங்கியது.
விடை:1917
7.ரஷ்ய புரட்சியில் தாக்கத்தை ஏற்படுத்தியவர். ………………… ஆவார்.
விடை:லெனின்
8.……………… நேசநாடோடு சேர்ந்து போரிட்டது.
விடை:சீனா
9.ஜெர்மனியின் போரின் போக்கை கண்காணித்தது ஆகும்.
விடை:ருமேனியா
10.……………. இலக்காக கொண்டு குண்டு வீசப்பட்டன.
விடை:பொதுமக்களை
11.………………. நாட்டில் 2 அமைதி மாநாடுகள் கூட்டப்பட்டன.
விடை:ஹாலந்து
12.ஆர்மீனிoய இனப்படுகொலைகள் …………….. க்கு எ.கா. ஆகும்.
விடை:பால்கன் போர்
13.பன்னாட்டு சங்கம் ………………. கலைக்கப்பட்டது.
விடை:1946
14.பன்னாட்டு சங்கத்தால் ……………… எனும் கோட்பாட்டை நடைமுறைப்படுத்த முடியவில்லை .
விடை:கூட்டுப் பாதுகாப்பு
15.பெரும்பாலான ஆதரவைப் பெற்ற ஆதரவாளர்கள் ………………. எனப்பட்டனர்.
விடை:போல்ஷின்ஸ்ட்லோ
16.பன்னாட்டு சங்கத்தில் உறுப்பினராகாத நாடு ……………… ஆகும்.
விடை:அமெரிக்கா
17.……………… ஜப்பான் மஞ்சூரியாவைத் தாக்கியது.
விடை:1931
III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.
1.i) மஞ்சு வம்சத்தை சேர்ந்தவர் சார் இரண்டாம் நிக்கோலஸ் நிர்வாகத்தில் குறைவான அனுபவம் கொண்டிருந்தார்.
ii) இரண்டாம் அலெக்சாண்டர் பண்ணை அடிமை முறையை ஒழித்தார்.
iii) கபான் தலைமையில் நடைபெற்ற புரட்சி ” குருதி ஞாயிறு” எனப்பட்டது.
iv) ரஷ்ய புரட்சி 1914ல் தோன்றியது.
அ) i, ii சரி
ஆ) i, iii சரி
இ) ii, iii சரி
ஈ) ii சரி
விடை:
அ) i, ii சரி
2.கூற்று : பன்னாட்டு சங்கம் 5 உறுப்புகளைக் கொண்டது.
காரணம் : பொதுச்சபை, பாதுகாப்பு சபை, நிர்வாகம் பன்னாட்டு நீதிமன்றம், தொழிலாளர் அமைப்பு என்பவையாகும்.
அ) கூற்று, காரணம் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.
ஆ) கூற்று, காரணம் சரி, காரணம் கூற்றுக்கான விளக்கவில்லை .
இ) கூற்று, காரணம் தவறு
ஈ) கூற்று, காரணம் சரி
விடை:
அ) கூற்று, காரணம் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.
V. சுருக்கமாக விடையளி.
1.கூட்டு நிறுவனம் என்பது யாது?
விடை:
- பொருள்களை உற்பத்தி செய்து விநியோகத்தில் ஈடுபட்டிருக்கும் ஒரு தொழில்சார் நிறுவனமாகும்.
- தனக்கு நன்மை பயக்கும் விதத்தில் பொருள்களின் விநியோகம், விலை ஆகியவற்றின் மீது அந்நிறுவனம் அதிகக் கட்டுப்பாட்டினைக் கொண்டிருக்கும்
2.மேற்கு அல்லது பிரெஞ்சு முனைப்போர் பற்றிக் கூறு.
விடை:
- மேற்கு அல்லது பிரெஞ்சு முனைப் போர்:
- பெல்ஜியம் மக்களின் எதிர்ப்பை ஜெர்மனி தகர்த்தெறிந்தது.
- நேசநாடுகளின் அணியில் போர் செய்யவேண்டிய சுமை பிரெஞ்சுப்படைகளின் தோள்களின்மேல் விழுந்தது.
- ஒரு மாதத்திற்குள் ஏறத்தாழ பாரீஸ்நகர் வீழ்ந்துவிடும் நிலை ஏற்பட்டது.
3.பாரிஸ் அமைதி மாநாடு பற்றி எழுதுக.
விடை:
- பாரிஸ் அமைதி மாநாடு, போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான இரண்டு மாதங்களுக்குப் பின்னர் 1919 ஜனவரி திங்களில் தொடங்கியது.
- உட்ரோ வில்சன் (அமெரிக்க அதிபர்), லாயிட் ஜார்ஜ் (இங்கிலாந்துப் பிரதமர்), கிளமென்சோ (பிரான்சின் பிரதமர்) ஆகிய மூவரும் கலந்தாய்வில் முக்கியப் பங்குவகித்தனர்.
4.லெனின் – பற்றி நீங்கள் அறிந்தது என்ன?
விடை:
- 1870இல் மத்திய வோல்கா பகுதி அருகே கற்றறிந்த பெற்றோர்க்கு லெனின் பிறந்தார்.
- கார்ல்மார்க்ஸின் சிந்தனைகளால் கவரப்பட்ட அவர், விடுதலைக்கான வழி, பெருந்திரளான மக்களின் போராட்டமே என நம்பினார்.
- பெரும்பாலோனோரின் (போல்ஷின்ஸ்ட்வோ ) ஆதரவைப் பெற்ற லெனினும் அவரது ஆதரவாளர்களும் போல்ஷ்விக் கட்சி என்று அறியப்பட்டனர்.
- இவருக்கு எதிரான சிறுபான்மையினர் (மென்ஷின்ஸ்ட்வோ ) மென்ஷ்விக்குகள் என்றும் அழைக்கப்பட்டனர்.
5.பன்னாட்டு சங்கத்தின் குறிக்கோள்கள் யாவை?
விடை:
- பன்னாட்டுச் சங்கத்தின் இரண்டு குறிக்கோள்களில் ஒன்று போர்களைத்தவிர்த்து உலகில் அமைதியை நிலைநாட்டுவது.
- மற்றொன்று சமூகப் பொருளாதார விசயங்களில் பன்னாட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துவது என்பனவாகும்.
VI. பின்வரும் வினாக்களுக்கு விரிவான விடையளிக்கவும்.
1.முதல் உலகப்போரில் இந்தியாவின் மீதான தாக்கத்தை விவரி.
விடை:
- இந்தியாவின் மீதான தாக்கம்:
- முதல் உலகப்போர் இந்தியாவின்மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது.
- ஐரோப்பா, ஆப்பிரிக்கா, மேற்கு ஆசியா ஆகிய பகுதிகளில் போர்ப்பணி செய்வதற்காக ஆங்கிலேயர் இந்தியர்களைக் கொண்ட பெரும்படையைத் திரட்டினர்.
- போர் முடிந்த பின்னர் இவ்வீரர்கள் புதிய சிந்தனைகளோடு தாயகம் திரும்பினர். அச்சிந்தனைகள் இந்திய சமூகத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தின.
- போர் செலவுக்காக இந்தியா 230 மில்லியன் பவுண்டுகளை ரொக்கமாகவும், 125 மில்லியன் பவுண்டுகளைக் கடனாகவும் வழங்கியது.
- இதன் விளைவாக இந்தியாவில் பெருமளவிலான பொருளாதார இன்னல்கள் ஏற்பட்டன.
- போர் முடிவடையுந் தருவாயில் உலகம் முழுதும் பரவிய விஷக்காய்ச்சலால் இந்தியாவும் பெருந்துயருக்குள்ளானது.
- இவ்வாறு முதல் உலகப்போர் இந்தியச் சமூகம், பொருளாதாரம், அரசியல் ஆகியவற்றின்மேல் பல தாக்கங்களை ஏற்படுத்தியது.
2.தற்காலிக அரசின் தோல்வியை விவரி.
விடை:
தற்காலிக அரசு:
- அரசு நிர்வாகப்பணிகளை மேற்கொள்ள ஒன்றுக்கொன்று இணையான இரண்டு அமைப்புகள் இருந்தன.
- ஒன்று பழைய டூமா அமைப்பு, உடைமை வர்க்கத்தைச் சேர்ந்த பூர்ஷ்வா அரசியல்வாதிகளைக் கொண்ட அமைப்பு.
- மற்றொன்று தொழிலாளர்களின் பிரதிநிதிகள் அங்கம்வகித்தக் குழு அல்லது சோவியத்.
தற்காலிக அரசின் தோல்வி:
- புரட்சி வெடித்தபோது லெனின் சுவிட்சர்லாந்தில் இருந்தார். புரட்சி தொடர்ந்து நடைபெற வேண்டுமென அவர் விரும்பினார்.
- “அனைத்து அதிகாரங்களும் சோவியத்திற்கே” என்ற அவரது முழக்கம் தொழிலாளர்களையும் தலைவர்களையும் கவர்ந்தது.
- போர்க்காலத்தில் ஏற்பட்டிருந்த பற்றாக்குறைகளால் பெருந்துயரங்களுக்கு உள்ளாகியிருந்த மக்கள் “ரொட்டி, அமைதி, நிலம்” எனும் முழக்கத்தால் கவரப்பட்டனர்.
- ஆனால் தற்காலிக அரசு இரண்டு முக்கியத் தவறுகளைச் செய்தது.
- ஒன்று நிலங்களின் மறுவிநியோகம் குறித்த கோரிக்கையின் மீது எடுக்கப்பட வேண்டிய முடிவைத் தள்ளிவைத்தது. மற்றொன்று போரைத்தொடர்வதென எடுக்கப்பட்ட முடிவு.
- ஏமாற்றமடைந்த விவசாய இராணுவவீரர்கள் தங்கள் பொறுப்புகளைக் கைவிட்டு நில அபகரிப்பில் ஈடுபடலாயினர்.
- இந்நிகழ்வு பெட்ரோகிரேடில் போல்ஷ்விக்குகளின் தலைமையில் நடைபெற்ற எழுச்சியை மேலும் தீவிரப்படுத்தியது.
VII. செயல்பாடுகள்
முதல் உலகப்போரில் ஈடுபட்ட நாடுகளை உலக வரைபடத்தில் குறிக்கவும்.
1. கிரேட் பிரிட்டன்,
2. ஜெர்மனி
3. பிரான்ஸ்
4. இத்தாலி
5. மொராக்கோ
6. துருக்கி
7. செர்பியா
8. பாஸ்னியா
9. கிரீஸ்
10. ஆஸ்திரியா – ஹங்கேரி
11. பல்கேரியா
12. ருமேனியா.