10th Social Science History Unit 7 Book Back Answers
10th Social Science Samacheer kalvi guide – Unit 7 Book Back Answers
10th social Science Unit 7. காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் – Book Back Question – Answers
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.
1.1818ஆம் ஆண்டு கிழக்கு வங்காளத்தில் ஹாஜி ஷரியத்துல்லா கீழ்க்கண்டவற்றில் எதனைத் தொடங்கினார்?
அ) வஹாபி கிளர்ச்சி
ஆ) ஃபராசி இயக்கம்
இ) பழங்குடியினர் எழுச்சி
ஈ) கோல் கிளர்ச்சி
விடை: ஆ) ஃபராசி இயக்கம்
2.‘நிலம் கடவுளுக்குச் சொந்தம்’ என்று அறிவித்ததுடன் நிலத்தின் மீது வரிவிதிப்பதோ வாடகை வசூலிப்பதோ இறைச் சட்டத்திற்கு எதிரானது என்று கூறியவர் யார்?
அ) டிடு மீர்
ஆ) சித்து
இ) டுடு மியான்
ஈ) ஷரியத்துல்லா
விடை: இ டுடு மியான்
3.நிரந்தரக் குடியிருப்பின் கீழ் ஜமீன்களை உருவாக்கும் திட்டத்தின்படி தங்கள் சொந்த நிலத்தை விட்டு விரட்டப்பட்டவர்கள் யார் ?
அ) சாந்தலர்கள்
ஆ) டிடு மீர்
இ) முண்டா
ஈ) கோல்
விடை: அ) சாந்தலர்கள்
4.கீழ்க்காண்போரில் தீவிர தேசியவாதி யார்?
அ) தாதாபாய் நௌரோஜி
ஆ) நீதிபதி கோவிந்த் ரானடே
இ) பிபின் சந்திர பால்
ஈ) ரொமேஷ் சந்திரா
விடை: இ பிபின் சந்திர பால்
5.வங்கப்பிரிவினை எந்த நாளில் நடைமுறைக்கு வந்தது ?
அ) 1905 ஜூன் 19
ஆ) 1906 ஜூலை 18
இ) 1907 ஆகஸ்ட் 19
ஈ) 1905 அக்டோபர் 16
விடை: 1905 அக்டோபர் 16
6.சோட்டா நாக்பூர் குத்தகைச் சட்டம் எந்தப் பின்னணியில் நிறைவேற்றப்பட்டது?
அ) கோல் கிளர்ச்சி
ஆ) இண்டிகோ கிளர்ச்சி
இ) முண்டா கிளர்ச்சி
ஈ) தக்காண கலவரங்கள்
விடை: இ முண்டா கிளர்ச்சி
7.1916ஆம் ஆண்டு ஏப்ரலில் தன்னாட்சி இயக்கத்தை முதலில் தொடங்கியவர் யார்?
அ) அன்னி பெசன்ட் அம்மையார்
ஆ) பிபின் சந்திர பால்
இ) லாலா லஜபதி ராய்
ஈ) திலகர்
விடை: ஈ) திலகர்
8.நீல் தர்பன் நாடகம் மூலமாக இண்டிகோ பயிரிடும் விவசாயிகளின் இன்னல்கள் குறித்து ஆங்கிலேயரின் கவனத்துக்கு கொண்டு சென்றவர் யார்?
அ) தீன பந்து மித்ரா
ஆ) ரொமேஷ் சந்திர தத்
இ) தாதாபாய் நௌரோஜி
ஈ) பிர்சா முண்டா
விடை: அ) தீன பந்து மித்ரா
II. கோடிட்ட இடங்களை நிரப்புக .
1.மன்னராட்சிக்கும் நிலசுவான்தாரர்களுக்கும் எதிரான …………….. இயக்கம் 1827ஆம் ஆண்டு வாக்கில் தொடங்கப்பட்டது.
விடை:வஹாபி
2.சோட்டாநாக்பூர் பகுதியில் நடந்த மிகப்பெரிய பழங்குடியினர் கிளர்ச்சி ………………
விடை:கோல் கிளர்ச்சி
3.……………… சட்டம் பழங்குடியினரல்லாத மக்களை பழங்குடி நிலத்தில் நுழைய தடைவிதித்தது.
விடை:சோட்டா நாக்பூர் குத்தகை
4.சோட்டா நாக்பூர் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு …………….
விடை:1908
5.W.C. பானர்ஜி இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு ………..
விடை:1885
III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.
1.(i) மீர் ஜாபரிடம் இருந்து 2 கோடியே 25 லட்ச ரூபாயை வாங்கிய கிழக்கு இந்திய கம்பெனி அதனை பிரிட்டனில் தொழிற்புரட்சி மேம்பட முதலீடு செய்தது.
(ii) 1831 – 1832ஆம் ஆண்டு அரசு அதிகாரிகள் மற்றும் கடன்கொடுப்போருக்கு எதிரான கிளர்ச்சியைக் கோல் மக்கள் ஒருங்கிணைத்தனர்.
(iii) 1855ஆம் ஆண்டில் சாந்தலர் கிளர்ச்சிக்கு சித்து, கணு ஆகிய இரண்டு சாந்தலர் சகோதரர்கள் தலைமை ஏற்றனர்.
(iv) 1879ஆம் ஆண்டில் சாந்தலர்கள் வசம் இருந்த பகுதிகளை ஒழுங்குமுறைப்படுத்த ஒரு சட்டம் இயற்றப்பட்டது.
அ) (i), (ii) மற்றும் (iii) சரியானவை
ஆ) (ii) மற்றும் (iii) சரியானவை
இ) (iii) மற்றும் (iv) சரியானவை
ஈ) (i) மற்றும் (iv) சரியானவை
விடை: அ) (i), (ii) மற்றும் (iii) சரியானவை
2.(i) காலனி ஆட்சி பற்றியப் பொருளாதார விமர்சனத்தைச் செய்தது ஆரம்பகால இந்திய தேசியவாதிகளின் மிக முக்கியமான பங்களிப்புகளில் ஒன்றாகும்.
(ii) இந்தியாவில் வறுமை அதிகரிக்க சமய ரீதியிலான சுரண்டலே மிக முதன்மையான காரணம் என்று ஆரம்பகால காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர். (
(iii) சுயராஜ்ஜியம் அல்லது தன்னாட்சியை எட்டுவதே மிததேசியவாத காங்கிரஸ் தலைவர்களின் குறிக்கோள்களில் ஒன்றாக இருந்தது.
(iv) வங்காளத்தின் ஆதிக்கத்தை குறைப்பதையும் தேசியவாத இயக்கத்தை வலுவிழக்கச் செய்வதையும் குறிக்கோளாகக் கொண்டு வங்கப் பிரிவினை நடந்தது.
அ) (i) மற்றும் (iii) சரியானவை
ஆ) (i), (iii) மற்றும் (iv) சரியானவை
இ) (ii) மற்றும் (iii) சரியானவை
ஈ) (iii) மற்றும் (iv) சரியானவை
விடை: ஆ) (i), (iii) மற்றும் (iv) சரியானவை
3.கூற்று : இந்திய வரலாற்றில் முதன்முறையாக காலனி ஆட்சியின் கீழ் அரசு வனங்களின் மீது நேரடி தனியுரிமையைக் கோரியது.
காரணம் : இண்டிகோ விவசாயம் செய்யுமாறு விவசாயிகளை நிர்ப்பந்திக்க தொழில் செய்வோர் மிரட்டல் மற்றும் வன்முறையைக் கையாண்டனர்.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி; ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே தவறு
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி அத்துடன் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஈ) கூற்று தவறு காரணம் சரி
விடை: அ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி; ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
4.கூற்று : பிரிட்டிஷ் அரசு 1857ஆம் ஆண்டின் கிளர்ச்சியை இரும்புக்கரம் கொண்டு அடக்கியது.
காரணம் : மையப்படுத்தப்பட்ட நிர்வாகம் இல்லாததால் கிளர்ச்சி தோல்வி கண்டது.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே தவறு.
ஆ) கூற்று தவறு காரணம் சரி.
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி. அத்துடன் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
விடை: இ கூற்றும் மற்றும் காரணம் இரண்டுமே சரி. அத்துடன் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
IV. பொருத்துக.
- வஹாபி கிளர்ச்சி – லக்னோ
- முண்டா கிளர்ச்சி – பேஷ்வா இரண்டாம் பாஜி ராவ்
- பேகம் ஹஸ்ரத் மகால் – டிடு மீர்
- கன்வர் சிங் – ராஞ்சி
- நானாசாகிப் – பீகார்
விடை 1-இ, 2-ஈ, 3-அ, 4-உ, 5-ஆ
V. சுருக்கமாக விடையளிக்கவும்.
1.ஆங்கிலேயே இந்தியாவில் விவசாயிகளின் கிளர்ச்சி எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன?
- மறுசீரமைத்தலுக்கான கிளர்ச்சிகள்
- சமய இயக்கங்கள்
- சமூகக் கொள்ளை
- மக்களின் கிளர்ச்சி
2.வாரிசு இழப்புக் கொள்கையின் அடிப்படையில் பிரிட்டிஷ் அரசில் இணைத்துக் கொள்ளப்பட்ட பகுதிகளைப் பட்டியலிடவும்.
- சதாரா, சம்பல்பூர், பஞ்சாபின் சில பகுதிகள், ஜான்சி மற்றும் நாக்பூர் ஆகியன இந்த வாரிசு இழப்புக் கொள்கையின் அடிப்படையில் ஆங்கிலேய ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டன.
3.வளங்கள் சுரண்டப்படுவது (செல்வச் சுரண்டல்) பற்றி தங்களின் கருத்து என்ன?
- இந்தியா பொருளாதார ரீதியாக அடிபணிந்து பிரிட்டிஷ் தொழில்களுக்கு மூலப்பொருட்களை வழங்குபவராக மாற்றப்பட்டது.
- அதேசமயம் இது ஆங்கில உற்பத்தியை கைவிடுவதற்கும் பிரிட்டிஷ் மூலதனத்தின் முதலீட்டிற்கும் ஒரு சந்தையாக மாறியது.
- எனவே காலனித்துவ பொருளாதாரம் இந்தியாவுக்கு எந்தவொரு சாதகமான வருமானமும் இல்லாமல் தொடர்ந்து இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு வளங்களை மாற்றுவதாக இருந்தது.
- இது ‘செல்வத்தின் வடிகால்’ என்று அழைக்கப்படுகிறது.
4.தன்னாட்சி (ஹோம்ரூல்) இயக்கத்தின் குறிக்கோள்களை விவரிக்கவும்.
- அரசியலமைப்பு வழிகளைப் பயன்படுத்தி பிரிட்டிஷ் பேரரசிற்குள் தன்னாட்சியை அடைவது.
- தன்னாட்சிப் பகுதி (டொமினியன்) என்ற தகுதியை அடைவது. ஆஸ்திரேலியா, கனடா, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகியவற்றுக்குப் பின்னர் இந்த அரசாட்சி சாராதநிலை வழங்கப்பட்டது.
- அவர்களின் இலக்குகளை அடைய வன்முறையல்லாத அரசியல் சாசன வழிமுறைகளைக் கையாள்வது.
5.லக்னோ ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களைத் தொகுத்து வழங்கவும்.
- லக்னோ ஒப்பந்தத்தின் (1916) போது காங்கிரஸ் கட்சியும் முஸ்லிம் லீக்கும் இந்தியாவில் விரைவில் தன்னாட்சி வேண்டுமென்பதே ஏற்றுக்கொண்டது.
- இதற்கு பதிலாக முஸ்லிம்களுக்கு தனித் தொகுதிகளை வழங்கும் திட்டத்தை காங்கிரஸ் தலைமை ஏற்றது.
VI. விரிவாக விடையளிக்கவும்.
1.1857ஆம் ஆண்டின் கிளாச்சியான காரணங்கள் குறித்து விரிவாக ஆராயவும்.
- காரணங்கள் : ஆங்கிலேய இந்தியாவின் இணைப்புக் கொள்கை :
- உள்நாட்டு ஆட்சியாளர்கள் திறனற்றவர்கள் என்ற அடிப்படையில் புதிய நிலப்பகுதிகள் இணைக்கப்பட்டன.
வாரிசு இழப்புக் கொள்கை:
- சதாரா, சம்பல்பூர், பஞ்சாபின் சில பகுதிகள், ஜான்சி மற்றும் நாக்பூர் ஆகியன இந்த வாரிசு இழப்புக் கொள்கையின் அடிப்படையில் ஆங்கிலேய ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டன.
- இந்திய கலாச்சார உணர்வுகள் பற்றிய தீவிரத்தன்மை இல்லாதது.
- 1806ஆம் ஆண்டில் வேலூரில் சிப்பாய்கள் சமயக் குறியீடுகளை நெற்றியில் அணிவதற்கும், தாடி வைத்துக் கொள்வதற்கும், தடைவிதிக்கப்பட்டதோடு தலைப்பாகைகளுக்கு பதிலான வட்ட வடிவிலான தொப்பிகளை அணியுமாறும் பணிக்கப்பட்டனர்.
- ஊதியம் மற்றும் பதவி உயர்வில் பாரபட்சம் காட்டப்படுவது குறித்தும் சிப்பாய்கள் கவலை அடைந்தனர்.
- ஐரோப்பிய சிப்பாய்களுடன் ஒப்பிடுகையில் இந்திய சிப்பாய்களுக்கு மிகக் குறைந்த அளவில்
- ஊதியம் வழங்கப்பட்டது.
- அவர்கள் தரக்குறைவாக நடத்தப்பட்டனர்.
உடனடிக்காரணம்:
- புதிய என்ஃபீல்டு துப்பாக்கிக்கு வழங்கப்பட்ட தோட்டாக்கள் பற்றிய வதந்திகள் புரட்சிக்கு வித்திட்டது.
- பசு மற்றும் பன்றிக் கொழுப்பில் இருந்து தயாரிக்கப்பட்ட பசை (கிரீஸ்) இத்தகைய புதிய குண்டு பொதியுறையில் (காட்ரிட்ஜ்களில்) பயன்படுத்தப்பட்டன.
- சிப்பாய்கள் பெரிதும் சந்தேகம் கொண்டனர்.
- மார்ச் 29ஆம் தேதி மங்கள் பாண்டே என்ற பெயர் கொண்ட சிப்பாய் தனது ஐரோப்பிய அதிகாரியைத் தாக்கினார்.
2.1905ஆம் ஆண்டு நிகழ்ந்த வங்காளப் பிரிவினையின்போது வங்காள மக்கள் எவ்விதம் நடந்துகொண்டனர்?
இந்து முஸ்லிம் பிரிவினை:
- வங்காள அடையாளத்தை உணர்வுப் பெருமையுடன் உருவாக்க வட்டார மொழிப் பத்திரிகைகளின் வளர்ச்சி பெரும் பங்காற்றியது.
பிரிவினைக்கு எதிரான இயக்கம்:
- பிரிட்டிஷ் பொருட்களை புறக்கணிப்பது அவற்றில் ஒரு முறையாகும்.
- எனினும் சுதேசி இயக்கத்தின் கொள்கை வங்கப் பிரிவினையைத் திரும்பப் பெறுவதை உறுதி செய்வதில் இன்னமும் கட்டுப்பட்டிருந்தது.
- 1905 அக்டோபர் 16இல் வங்காளம் அதிகாரப்பூர்வமாகப் பிரிவினையானபோது அந்தநாள் துக்கநாளாக அறிவிக்கப்பட்டது.
- ஆயிரக்கணக்கானவர்கள் கங்கை நதியில் புனித நீராடியதோடு வந்தே மாதரம் பாடலை பாடியபடி கல்கத்தாவின் சாலைகளில் அணிவகுத்துச் சென்றார்கள்.
வங்காளத்தில் புறக்கணிப்பும் சுதேசி இயக்கமும் (1905-1911):
- புறக்கணிப்பும் சுதேசி இயக்கமும் இந்தியாவைத் தற்சார்பு அடையச் செய்யும் விரிவான திட்டத்தின் ஒரு பகுதியாக எப்போதும் ஒன்றுடன் ஒன்று இணைந்தே இருந்தன.
- வங்காளத்தில் சுதேசி இயக்கத்தின் போது நான்கு முக்கியப் போக்குகள் காணப்பட்டன.
- மிதவாதப்போக்கு
- ஆக்கப்பூர்வ சுதேசி
- தீவிர தேசியவாதம்
- புரட்சிகர தேசியவாதம்
10th Social Science – History Unit 7 Question answers
10th Social Science – History
Additional Important Questions and Answers ( TET, TNPSC TRB )