10th Social Science History Unit 7 Additional Questions
10th Social Science Samacheer kalvi guide – Unit 7 Additional Question – Answers
10th social Science Unit 7. காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும் – Additional Question – Answers
சரியான விடையைத் தேர்வு செய்யவும்.
1.இந்தியா கிழக்கிந்திய கம்பெனியால் கொள்ளையடிக்கப்படும் செயலானது ………………………. ஆண்டுகளுக்கு நீடித்தது.
அ) 100
ஆ) 190
இ) 109
ஈ) 209
விடை: ஆ) 190
2.……………… ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்கு பெரும் சவாலாக இருந்தது.
அ) 1857
ஆ) 1987
இ) 1587
ஈ) 1875
விடை: அ) 1857
3.மார்ச் 29ம் தேதி மங்கள் பாண்டே என்ற பெயர் கொண்ட சிப்பாய் தனது ……………………… அதிகாரியைத் தாக்கினார்.
அ) அமெரிக்க
ஆ) ரஷ்ய
இ) ஐரோப்பி
ஈ) எதுவுமில்லை
விடை: இ ஐரோப்பிய
4.1857ஆம் ஆண்டில் பிற்பகுதியில் …………….. ஆங்கிலேய துருப்புகளால் கைப்பற்றப்பட்டது.
அ) சென்னை
ஆ) தில்லி
இ) மும்பை
ஈ) ஆந்த்ரா
விடை: ஆ) தில்லி
5.இந்திய ராணுவத்தின் கட்டமைப்பில் ………………. முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டன.
அ) ஐந்து
ஆ) இரண்டு
இ) மூன்று
ஈ) ஏழு
விடை: ஆ) இரண்டு
6.பருவத்தின் இறுதியில் இண்டிகோ பயிருக்கு ……………. விவசாயிகளுக்கு ஆங்கிலேய முகவர்கள் கொடுத்தனர்.
அ) குறைந்த விலையில்
ஆ) அதிக விலையில்
இ) நடுத்தர விலையில்
ஈ) மிக அதிக விலையில்
விடை: அ) குறைந்த விலையில்
7.இண்டிகோ கிளர்ச்சி தொடங்கப்பட்ட ஆண்டு ………………….
அ) 1989
ஆ) 1859
இ) 1789
ஈ) 1895
விடை: ஆ) 1859
8.அதிக அளவிலான வரி விதிப்பு ……………… பாதித்தது.
அ) வேளாண்மை
ஆ) மீன்பிடித்தல்
இ) சுரங்கத் தொழில்
ஈ) தொழிலகம்
விடை: அ) வேளாண்மை
9.இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தலைவராக 1885இல் ………………. இருந்தார்.
அ) உமேஷ் சந்திர பானர்ஜி
ஆ) A.O. ஹியூம்
இ) கர்சன் பிரபு
ஈ) எதுவுமில்லை
விடை: அ) உமேஷ் சந்திர பானர்ஜி
10.……………. ல் சுதேசி இயக்கம் மாற்றுப்பாதையில் செல்லத் துவங்கியது.
அ) 1806
ஆ) 1906
இ) 1916
ஈ) 1866
விடை: ஆ) 1906
கோடிட்ட இடங்களை நிரப்புக.
1.பிளாசிப் போருக்கு வித்திட்டவர் ……………. ஆவார்.
விடை:ராபர்ட் கிளைவ்
2.கிராம அமைப்புகளின் கட்டமைப்பு மூலமாக ………….. விவசாயிகள் ஒன்று திரட்டப்பட்டனர்.
விடை:பெரும் எண்ணிக்கையில்
3.ஆங்கிலேய ஆட்சிக்கு முன் இந்தியாவில் …………….. பற்றிய எந்த விரிவான திட்டமும் நடைமுறைப்படுத்தவில்லை.
விடை:தனிச்சொத்துரிமை
4.சாந்தலர் வசமிருந்த பகுதிகளை ஒழுங்குபடுத்த கொண்டு வரப்பட்ட சட்டத்தின் மூலம் உருவாக்கிய மண்ட லம் ………….. ஆகும்.
விடை:சாந்தல் பர்கானா
5.கூட்டாக நிலத்தை வைத்துக் கொண்டு ………………. என்ற முறையில் விவசாயம் செய்வதில் முண்டா மக்கள் பெயர் பெற்றவர்கள்.
விடை:குண்டக்கட்டி
6.தேசிய காங்கிரஸ் அமைப்பை உருவாக்க ………………. தமது சேவைகளை வழங்கினார்.
விடை:A.0. ஹியூம்
7.வட இந்தியாவின் பாதிக்கப்பட்ட ………………. வாழ்ந்த மக்களும் உள்நாட்டுக் கிளர்ச்சிக்கு சரிசமமாக ஆதரவு தெரிவித்தனர்.
விடை:கிராம சமூகத்தில்
8.1905ஆம் ஆண்டின் ………………. மிகவும் அதிருப்தியை ஏற்படுத்திய நிகழ்வாகும்.
விடை:வங்கப் பிரிவினை
9.1914ஆம் அண்டு ஜெர்மனிக்கு எதிராக பிரிட்டன் போர் அறிவித்த நிலையில் மித தேசியவாத மற்றும் தாராளமய தலைமை …………… ஆதரவைத் தந்தது.
விடை:பிரிட்டிஷாருக்கு
10.முஸ்லிம்களுக்கு தனித் தொகுதிகளை வழங்கும் திட்டத்தை ……………. ஏற்றது.
விடை:காங்கிரஸ் தலைமை
சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.
1.கூற்று : ஹாஜி ஷரீயத்துல்லா என்பவரால் 1819ஆம் ஆண்டு பராசி இயக்கம் தொடங்கப்பட்டது.
காரணம் : ஃஷரீயத்துல்லாவிற்கு பிறகு டுடுமியான் தலைமை ஏற்றார்.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே தவறு.
ஆ) கூற்று தவறு காரணம் சரி.
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி. அத்துடன் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
விடை: ஆ) கூற்று தவறு காரணம் சரி.
2.கூற்று : வஹாபி கிளர்ச்சி என்பது ஆங்கிலேய ஆட்சிக்கும், நிலப்பிரபுக்களுக்கும் ஏகிராகத் துவங்கப்பட்டது.
காரணம் : டிடு மீர் விவசாயிகள் மத்தியில் செல்வாக்கு மிகுந்த நபராகத் திகழ்ந்தார்.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே தவறு.
ஆ) கூற்று தவறு காரணம் சரி.
இ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி. அத்துடன் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
விடை: கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி. அத்துடன் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
சுருக்கமான விடையளிக்கவும்.
1.சமய இயக்கங்கள் குறிப்பு வரைக.
- சமய இயக்கங்களுக்கு தலைமையேற்ற சமயத்தலைவர்கள் சமயச் சிந்தனைகளின் அடிப்படையில் சமூகத்தை சீரமைப்பதன் மூலம் உள்ளூர் மக்களின் விடுதலைக்காகப் போராடினார்கள்.
2.சமூகக் கொள்கை குறிப்பு வரைக.
- இத்தகைய இயக்கங்களின் தலைவர்கள் ஆங்கிலேயர்களாலும் பாரம்பரிய உயர்குடியினராலும் குற்றவாளிகளாகக் கருதப்பட்டனர்.
- ஆனால் அச்சமூகத்தைச் சார்ந்த மக்கள் அவர்களைத் தங்களுடைய மேம்பாட்டிற்காக உழைத்த நாயகர்களாகவும், சாதனையாளர்களாகவும் கண்டனர்.
3.மேலாதிக்கக் கொள்கை குறிப்பு வரைக.
- ஆங்கிலேயர் தங்களை வானளாவிய அதிகாரங்கள் கொண்ட உயர் அதிகார அமைப்பாக கருதினார்கள்.
- உள்நாட்டு ஆட்சியாளர்கள் திறனற்றவர்கள் என்ற அடிப்படையில் புதிய நிலப்பகுதிகள் இணைக்கப்பட்டன.
4.1857ம் ஆண்டின் பெருங்கலகத்தின் முக்கியத்துவம் யாது?
- இராணுவ வீரர்களுடன் ஆயுதமேந்திய படைகளும் இணைந்து நடந்த முதல் மாபெரும் புரட்சி இதுவேயாகும்.
- இருதரப்புகளிலும் தூண்டப்பட்டதால் முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு கிளர்ச்சியில் வன்முறை வெடித்தது.
5.இந்தியா ஆங்கிலேய அரசுக் காலனியாக மாறுதல் பற்றி எழுதுக.
- 1858ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய அரசு சட்டம் பிரிட்டிஷ் நாடாளுமன்றம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, நாடாளுமன்றத்தால் நேரடியாக ஆட்சி அதிகாரம் செலுத்தப்படும் ஆங்கிலேய அரசின் காலனிகளில் ஒன்றாக இந்தியா அறிவிக்கப்பட்டது.
- அமைச்சரவை உறுப்பினர் ஒருவரிடம் பொறுப்பு வழங்கப்பட்டது, அவர் இந்தியாவுக்கான அரசுச் செயலராக பதவி வகிப்பார்.
6.பிரித்தாளும் கொள்கை வரையறு.
- இந்திய சமூகத்தின் சாதி, மதம், மொழி மற்றும் மண்டலம் ஆகியன சார்ந்த வேறுபாடுகளை ஆகிலேயர்கள் தங்களுக்கச் சாதகமாகப் பயன்படுத்தி கொண்டதையடுத்து அது பிரித்தாளும் கொள்கை என்று அறியப்பட்டது.
7.வங்காளத்தில் சுதேசி இயக்கத்தின் போக்குகள் யாவை?
- மிதவாதப் போக்கு
- ஆக்கபூர்வ சுதேசி
- தீவிர தேசியவாதம்
- புரட்சிகர தேசியவாதம்
விரிவான விடையளிக்கவும்.
1.இந்திய தேசிய காங்கிரஸின் முக்கிய கோரிக்கைகளை எழுதுக.
- மாகாண மற்றும் மத்திய அளவில் சட்டமேலவைகளை உருவாக்குகிறது.
- சட்டமேலவைகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது.
- நிர்வாகத்துறையிலிருந்து நீதித்துறையைப் பிரிப்பது. – இராணுவச்செலவுகளைக் குறைப்பது.
- உள்நாட்டு வரிகளைக் குறைப்பது.
- நீதிபதி மூலமாக விசாரணையை விரிவுசெய்வது.
- ஒரே நேரத்தில் இந்தியாவிலும் இங்கிலாந்திலும் ஆட்சிப்பணித் தேர்வுகளை நடத்துவது.
- காவல்துறை சீர்திருத்தங்கள்.
- வனச்சட்டத்தை மறுபரிசீலனை செய்தல்.
- இந்தியத் தொழிற்சாலைகளின் மேம்பாடு மற்றும் முறையற்ற கட்டணங்கள் மற்றும் கலால் வரிகளை முடிவுக்குக் கொண்டுவருவது.
2.இந்திய தேசிய காங்கிரஸின் தேசிய எழுச்சி மற்றும் பொருளாதாரத்தை பற்றி விவரிக்க.
அ. தேசியத்தின் எழுச்சி:
- 19ஆம் நூற்றாண்டின் இரண்டாவது பாதியில் ஆங்கிலக் கல்வி பெற்ற இந்தியர்களின் புதிய சமூக வகுப்பினர் மத்தியில் தேசிய அரசியல் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டது.
- பல்வேறு பிரச்சாரங்கள் மூலமாக தேசம், தேசியம் மற்றும் பல்வேறு மக்களாட்சியின் உயர்ந்த இலட்சியங்கள் பற்றிய கருத்துக்களை அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முக்கிய பணியை இந்திய அறிவாளர்கள் மேற்கொண்டனர். வட்டார மொழி மற்றும் ஆங்கில அச்சு ஊடகங்களின் வளர்ச்சி இது போன்ற கருத்துகளைப் பரப்புவதில் முக்கியப் பங்காற்றியது.
- எண்ணிக்கையில் அவர்கள் குறைவாக இருந்தாலும் தேசிய அளவிலான வீச்சைக் கொண்டு அகில இந்தியா முழுவதும் தொடர்புகளை உருவாக்கும் திறன் பெற்றிருந்தனர்.
- அவர்கள் வழக்கறிஞர்கள், பத்திரிக்கையாளர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அல்லது மருத்துவர்களாக பணியாற்றினார்கள்.
ஆ. காலனி ஆட்சிபற்றிய பொருளாதார விமர்சனம்:
- காலனி ஆட்சி பற்றி பொருளாதார விமர்சனத்தை உருவாக்குவதே தொடக்ககால இந்திய தேசியவாதிகளின் பங்களிப்புகளில் முக்கியமான ஒன்றாக இருந்தது.
- தாதாபாய் நௌரோஜி, நீதிபதி ரானடே மற்றும் ரொமேஷ் சந்திர தத் ஆகியோர் காலனி ஆட்சியில் பொருளாதாரம் பற்றிய இந்த விமர்சனத்தைச் செய்வதில் முக்கியப் பங்காற்றினார்கள்.
- இந்தியாவை அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக அடக்கி ஆள்வதுதான் பிரிட்டிஷாரின் வளத்துக்கு அடிப்படையானது என்பதை அவர்கள் தெளிவாக உணர்ந்தனர்.
- இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு காலனி ஆதிக்கமே முக்கியத் தடையாக உள்ளதென்று அவர்கள் முடிவு செய்தனர்.