10th Social Science History Unit 5 Book Back Answers

10th Social Science History Unit 5 Book Back Answers

10th Social Science Samacheer kalvi guide – Unit 5 Book Back Answers

TN 10th Standard Social Science Samacheer kalvi Guide History Unit 5 Answers Tamil Medium. SSLC Social Science 5th Lesson Full answers. It’s very used for 10th Students, TNTET Paper 1 and Paper 2, TNPSC, TRB Exam Candidates. 10th Social Science Guide 5. 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள். SSLC History, Geography, Civics, Economics Full Answers Both School Students, TNTET, TRB, TNPSC, etc… Applicable to everyone preparing for the exam. TN Samacheer Kalvi Guide for 10th Standard. Tamil Nadu State Board Samacheer Kalvi 10th Social Science Book Answers Solutions Guide Pdf Free Download in English Medium and Tamil Medium are part of Samacheer Kalvi 10th Books Solutions. TN State Board New Syllabus Samacheer Kalvi 10th Std Social Science Guide Text Book Back Questions and Answers all units 10th Social Science Model Question Papers 2020-2021 English & Tamil Medium. We Update TN State Board Syllabus Guide All Classes Guide, Answers https://www.studentsguide360.com/

10th social Science Unit 5. 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள் – Book Back Question – Answers

 I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

1.எந்த ஆண்டில் உடன்கட்டை ஏறுதல் (சதி) ஒழிக்கப்பட்டது?

அ) 1827
ஆ) 1829
இ) 1826
ஈ) 1927

விடை: ஆ) 1829

2.தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பெற்ற சமாஜத்தின் பெயர் யாது?

அ) ஆரிய சமாஜம்
ஆ) பிரம்ம சமாஜம்
இ) பிரார்த்தனை சமாஜம்
ஈ) ஆதி பிரம்ம சமாஜம்

விடை: அ) ஆரிய சமாஜம்

3.யாருடைய பணியும் இயக்கமும், 1856ஆம் ஆண்டு விதவை மறுமண சீர்திருத்தச் சட்டம் இயற்றப்படுவதற்கு வழிகோலியது?

அ) ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்
ஆ) இராஜா ராம்மோகன் ராய்
இ) அன்னிபெசன்ட்
ஈ) ஜோதிபா பூலே

விடை: அ) ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்

4.‘ராஸ்ட் கோப்தார்’ யாருடைய முழக்கம்?

அ) பார்சி இயக்கம்
ஆ) அலிகார் இயக்கம்
இ) இராமகிருஷ்ணர்
ஈ) திராவிட மகாஜன சபை

விடை: அ) பார்சி இயக்கம்

5.நாம்தாரி இயக்கத்தை உருவாக்கியவர் யார்?

அ) பாபா தயாள் தாஸ்
ஆ) பாபா ராம்சிங்
இ) குருநானக்
ஈ) ஜோதிபா பூலே

விடை: ஆ) பாபா ராம்சிங்

6.விதவை மறுமணச் சங்கத்தை ஏற்படுத்தியவர் யார்?

அ) M.G. ரானடே
ஆ) தேவேந்திரநாத் தாகூர்
இ) ஜோதிபா பூலே
ஈ) அய்யன்காளி

விடை: அ) M.G. ரானடே

7.‘சத்யார்த்தபிரகாஷ்’ எனும் நூலின் ஆசிரியர் யார்?

அ) தயானந்த சரஸ்வதி
ஆ) அயோத்தி தாசர்
இ) அன்னிபெசன்ட்
ஈ) சுவாமி சாரதாநந்தா

விடை: அ) தயானந்த சரஸ்வதி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1.……………. சமரச வேத சன்மார்க்க சங்கத்தை நிறுவினார்.

விடை:இராமலிங்க சுவாமிகள்

2.புனே சர்வஜனிக் சபாவை நிறுவியவர் …………………

விடை:மகாதேவ் கோவிந்த் ரானடே

3.குலாம்கிரி நூலை எழுதியவர் …………………..

விடை:ஜோதிபா பூலே

4.இராமகிருஷ்ணா மிஷன் ………………ஆல் நிறுவப்பட்டது.

விடை:சுவாமி விவேகானந்தர்

5.………………. அகாலி இயக்கத்தின் முன்னோடியாகும்.

விடை:சிங்சபா

6.‘ஒரு பைசா தமிழன்’ பத்திரிக்கையைத் துவக்கியவர் ……………. ஆவார்.

விடை:அயோத்தி தாசர்

III. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

1.i) இராஜா ராம்மோகன் ராய் ஒரு கடவுள் கோட்பாட்டை போதித்தார்.
ii) அவர் உருவ வழிபாட்டை ஆதரித்தார்.
iii) சமூகத் தீமைகளைக் கண்டனம் செய்வதை எதிர்த்து அவர் சிற்றேடுகளை வெளியிட்டார்.
iv) இராஜா ராம் மோகன் ராய் கவர்னர் வில்லியம் பெண்டிங்கால் ஆதரிக்கப்பட்டார்.

அ) i) சரி
ஆ) i), ii) ஆகியன சரி
இ) i), ii), iii) ஆகியன சரி
ஈ) i), iii) ஆகியன சரி

விடை:
ஈ) i), iv) ஆகியன சரி

2.i) பிரார்த்தனை சமாஜம் டாக்டர் ஆத்மாராம் பாண்டுரங்கால் நிறுவப்பெற்றது.

ii) இந்த சமாஜம் அனைத்துச் சாதியினரும் பங்கேற்கும் சமபந்திகளையும் சாதிக்கலப்பு திருமணங்களையும் ஊக்குவித்தது.
iii) ஜோதிபாபூலே ஆண்களின் மேம்பாட்டிற்காகப் பணியாற்றினார்.
iv) பிரார்த்தனை சமாஜம் பஞ்சாபைப் பிறப்பிடமாகக் கொண்டது.

அ) i) சரி
ஆ) ii) சரி
இ) i), ii) ஆகியன சரி
ஈ) iii), iv) ஆகியன சரி

விடை:
இ) i), ii) ஆகியன சரி

3.i) இராமகிருஷ்ணா மிஷன் கல்வி, உடல் நலம், பேரிடர்களின்போது நிவாரணப் பணி செய்தல் போன்ற சமூகப்பணிகளில் செயலூக்கத்துடன் ஈடுபட்டது.
ii) பேரின்பநிலை எய்தும் பழக்கங்களின் மூலம் ஆன்ம ரீதியாக இறைவனோடு இணைவதை இராமகிருஷ்ணர் வலியுறுத்தினார்.
iii) இராமகிருஷ்ணர் இராமகிருஷ்ணா மிஷனை ஏற்படுத்தினார்.
iv) இராமகிருஷ்ணர் வங்கப்பிரிவினையை எதிர்த்தார்.

அ) i) சரி
ஆ) i) மற்றும் ii) சரி
இ) iii) சரி
ஈ) iv) சரி

விடை:
ஆ) i) மற்றும் ii) சரி

4.கூற்று : ஜோதிபா பூலே ஆதரவற்றோருக்கான விடுதிகளையும், விதவைகளுக்கான விடுதிகளையும் திறந்தார்.
காரணம் : ஜோதிபா பூலே குழந்தைத் திருமணத்தை எதிர்த்தார். விதவை மறுமணத்தை ஆதரித்தார்.

அ) கூற்று சரி. ஆனால் காரணம் கூற்றுக்குப் பொருத்தமானதாக இல்லை.
ஆ) கூற்று சரி. காரணம் கூற்றுக்குப் பொருத்தமானதாக உள்ளது.
இ) இரண்டுமே தவறு.
ஈ) காரணம் சரி. ஆனால் கூற்று பொருத்தமற்றதாக உள்ளது.

விடை:
ஆ) கூற்று சரி. காரணம் கூற்றுக்குப் பொருத்தமானதாக உள்ளது.

IV. பொருத்துக.

  1. அய்யா வழி – விதவை மறுமண சீர்திருத்தச் சட்டம்
  2. திருவருட்பா – ஆ. நிரங்கரி இயக்கம்
  3. பாபா தயாள்தாஸ் – இ. ஆதி பிரம்மசமாஜம்
  4. ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் – ஈ. வைகுண்ட சுவாமிகள்
  5. தேவேந்திரநாத் – உ. ஜீவகாருண்யப் பாடல்கள்

விடை: 1 – ஈ, 2 – உ, 3 – ஆ, 4 – அ, 5 – இ

 

V. கீழ்க்காணும் வினாக்களுக்கு சுருக்கமாக விடையளிக்கவும்.

1.மகரிஷி தேவேந்திரநாத் தாகூர் முன்வைத்த நம்பிக்கையின் நான்கு கூறுகளைக் குறிப்பிடுக.

விடை:

  • நம்பிக்கை பற்றிய நான்கு கொள்கைக் கூறுகளை முன் வைத்தார்.
  • தொடக்கத்தில் எதுவுமில்லை, எல்லாம் வல்ல ஒரு கடவுள் மட்டுமே உள்ளார். அவரே இவ்வுலகத்தைப் படைத்தார்.
  • அவர் ஒருவரே உண்மையின் எல்லையற்ற ஞானத்தின், நற்பண்பின் சக்தியின் கடவுளாவார். அவரே நிலையானவர், எங்கும் நிறைந்திருப்பவர். அவருக்கிணையாருமில்லை.
  • நம்முடைய வீடுபேறு, இப்பிறவியிலும் அடுத்த பிறவியிலும் அவரை நம்புபவரையும் அவரை வணங்குவதையும் சார்ந்துள்ளது.
  • அவரை நம்புவதென்பது, அவரை நேசிப்பதிலும் அவர் விருப்பத்தைச் செயல்படுத்துவதிலும் அடங்கியுள்ளது.

2.சமூகச் சீர்திருத்தங்களுக்கு மகாதேவ் ரானடேயின் பங்களிப்பைக் குறிப்பிடுக.

விடை:

  • சாதிமறுப்பு, சமபந்தி, சாதிமறுப்புத் திருமணம் விதவை மறுமணம், பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் போன்ற நடவடிக்கைகளுக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களாவார்.
  • மகாதேவ் கோவிந்த் ரானடே (1842-1901) விதவை மறுமணச் சங்கம் (1861), புனே சர்வஜனிக் சபா (1870), தக்காணக் கல்விக்கழகம் (1884) ஆகிய அமைப்புகளை நிறுவினார்.

3.இராமலிங்க சுவாமிகளின் சீர்திருத்தங்கள் குறித்து சிறுகுறிப்பு வரைக.

விடை:

  • உயிர்களிடையே நம்பிக்கை, இரக்கம் எனும் பிணைப்புகள் இருக்கவேண்டுமென்றார்.
  • துயரப்படும் உயிரினங்களைப் பார்த்து இரக்கம் கொள்ளாதவர்கள் கல் நெஞ்சக்காரர்கள், அவர்களின் ஞானம் மேகங்களால் மூடப்பட்டிருக்கும்.
  • அன்பையும், இரக்கத்தையும் அனைத்து உயிரினங்களிடமும் காட்டினர். இதை அவர் ஜீவகாருண்யம் என்றார்.
  • 1865இல் சமரச வேத சன்மார்க்க சங்கம் எனும் அமைப்பை நிறுவினார்.
  • 1867இல் சாதி எல்லைகளைத் தாண்டி அனைத்து மக்களுக்குமான இலவச உணவகத்தை வடலூரில் நிறுவினார்.
  • அவர் இயற்றிய ஏராளமான பாடல்கள் திருவருட்பா என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டன.

4.பிரம்ம சமாஜத்தால் ஒழிக்கப்பட்ட சமூகத்தீமைகள் யாவை?

விடை:

  • சமூகத்தில் நிலவிவரும் உடன்கட்டை ஏறுதல் (சதி), குழந்தைத் திருமணம், பலதார மணம் போன்ற மரபு சார்ந்த பழக்கங்கள், விதவைப் பெண்கள் மறுமணம், பலதார மணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

5.ஏழைகள் மற்றும் அடித்தட்டு மக்களின் நலன்களுக்காக ஜோதிபா பூலே ஆற்றிய பணிகளைக் கோடிட்டுக் காட்டுக.

விடை:
ஜோதிபா பூலே :

  • 1852 ஆம் ஆண்டு ஒடுக்கப்பட்டோருக்கான முதல் பள்ளியை புனேயில் திறந்தார்.
  • ஜோதிபாவும் அவருடைய மனைவி சாவித்ரிபாயும் ஒடுக்கப்பட்ட மக்களின், பெண்களின் முன்னேற்றத்திற்காகத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர்.
  • ஜோதிபா பெற்றோரில்லா குழந்தைகளுக்கென்று விடுதிகளையும் விதவைகளுக்கென காப்பகங்களையும் உருவாக்கினார்.

VI. விரிவாக விடையளிக்கவும்.

1.19ஆம் நூற்றாண்டில் சீர்திருத்த இயக்கங்கள் நடைபெறுவதற்கு இட்டுச் சென்ற சூழ்நிலைகளை விவாதிக்கவும்.

விடை:

  • பத்தொன்பதாம் நூற்றாண்டில், இந்தியா சதி, குழந்தை திருமணம், பெண் சிசுக்கொலை, பலதார மறுமணம் மற்றும் பல சமூக தீமைகளால் பிடிக்கப்பட்டிருந்தது.
  • பெண்களுக்கு கல்வி பெற அனுமதிக்கப்படவில்லை.
  • பெண்கள் ஆண்களை விட தாழ்த்தப்பட்டவர்களாக நடத்தப்பட்டனர்.
  • தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களின் நிலை பரிதாபகரமாக இருந்தது.
  • பள்ளிகள், கோயில்கள் மற்றும் பொது இடங்களில் நுழைய தாழ்த்தப்பட்ட வகுப்பினர்க்கு தடை விதிக்கப்பட்டது.
  • ஆகவே, தாழ்ந்த சாதியை சேர்ந்தவர்களுக்கு கல்வியில்லை.
  • மூடநம்பிக்கை, மத நம்பிக்கை மற்றும் விலங்குகளை பலி கொடுப்பது போன்ற தீய நடைமுறைகள் இந்திய சமுதாயத்தில் இருந்தன.
  • குழந்தை திருமண முறை இருந்ததால் குழந்தை விதவைகளுக்கு வழிவகுத்தது.
  • இதுவே பத்தொன்பதாம் நூற்றாண்டின் சீர்திருத்த இயக்கங்கள் ஆகும்.

2.இந்தியச் சமூகத்தின் புத்தெழுச்சிக்கு இராமகிருஷ்ண பரமஹம்சரும் விவேகாநந்தரும் ஆற்றிய தொண்டினைத் திறனாய்வு செய்க.

விடை:
இராமகிருஷ்ண பரமஹம்சர் :

  • இராமகிருஷ்ண பரமஹம்சர் (1836-1886) பஜனைப்பாடல்களை மனமுருகிப் பாடுவார்.
  • அவர் கடவுளின் திருவிளையாடல்கள் முடிவற்றவை என அறிவித்தார்.
  • அவருடைய கருத்தினப்டி அனைத்து மதங்களும் உலகளாவிய, எல்லோருக்குமான மூலக்கூறுகளைக் கொண்டுள்ளன. அவற்றைப் பின்பற்றினால் அவை வீடுபேற்றுக்கு இட்டுச்செல்லும். ஜீவன் என்பதே சிவன் எனவும் அவர் கூறினார்.
  • மனிதர்களுக்குச் செய்யப்படும் சேவையே கடவுளுக்குச் செய்யப்படும் சேவையாகும் என்றார்.

சுவாமி விவேகாநந்தர்:

  • பின்னாளில் நரேந்திரநாத் தத்தா என்றழைக்கப்பட்டவர் சுவாமி விவேகானந்தர் (1863-1902).
  • இராமகிருஷ்ண பரமஹம்சருடைய முதன்மைச் சீடராவார்.
  • மரபு சார்ந்த தத்துவ நிலைப்பாடுகளில் மனநிறைவு பெறாத அவர், நடைமுறை வேதாந்தமான மனிதகுலத்திற்குத் தொண்டுசெய்தல் எனும் கோட்பாட்டைப் பரிந்துரைத்தார்.
  • இந்து சமூகத்திற்குப் புத்துயிரளிக்க இந்திய இளைஞர்களுக்கு அறைகூவல் விடுத்தார்.
  • அவருடைய சிந்தனைகள், பொருள் உற்பத்தியில் மேலைநாடுகள் செய்திருந்த சாதனைகளைக் கண்டு தாழ்வுமனப்பான்மை கொண்டிருந்த இந்தியர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டுவதாய் அமைந்தது.
  • 1893இல் சிக்காகோவில் நடைபெற்ற உலக சமய மாநாட்டில் இந்து சமயம் பற்றியும் பக்திமார்க்கத் தத்துவம் குறித்தும் அவராற்றிய சொற்பொழிவுகள் அவருக்குப் பெரும்புகழ் சேர்த்தது.

3.பெண்களின் மேம்பாட்டிற்கு 19ஆம் நூற்றாண்டு சீர்திருத்தவாதிகள் ஆற்றிய பணிகள் குறித்து ஒரு கட்டுரை வரைக.

விடை:
ராஜாராம் மோகன்ராய்:

  • விதவைப் பெண்கள் மறுமணம் செய்துகொள்ள உரிமை உடையவர்கள் எனும் கருத்தை முன்வைத்தார்.
  • பலதார மணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்றார்.
  • மக்களைப் பகுத்தறிவோடும், பரிவோடும், மனிதப் பண்போடும் இருக்கும்படி வேண்டுகோள் விடுத்தார்.
  • பெண்களுக்குக் கல்வி வழங்கப்பட வேண்டும் எனும் கருத்தை வலுவாக முன் வைத்தார்.

தயானந்த சரஸ்வதி:

  • குழந்தை திருமணம் மற்றும் விதவை மறுமணம் போன்ற நடைமுறைகளை அவர் அறிவித்தார்.

ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்:

  • இவர் பெண்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தினார்.
  • இவர் விதவை மறுமணத்தை ஆதரித்தார் மற்றும் பலதார மணம் (ம) குழந்தை திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
  • பண்டித ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் தலைமையேற்ற இயக்கத்தின் விளைவாய் 1856இல் மறுமண சீர்திருத்தச் சட்டம் (விதவைகள் மறுமணச் சட்டம்) இயற்றப்பட்டது.
  • பெண்கல்வியை மேம்படுத்துவதில் முக்கியப் பங்காற்றிய அவர் பெண்களுக்கான பள்ளிகள் நிறுவப்பட உதவிகள் செய்தார்.

ஜோதிபாபூலே:

  • இவர் குழந்தைத் திருமணத்தை எதிர்த்தார்.
  • விதவை மறுமணத்தை ஆதரித்தார்.
  • ஜோதிபாபூலேவும் அவருடைய மனைவி சாவித்ரிபாயும் ஒடுக்கப்பட்ட மக்களின், பெண்களின் முன்னேற்றத்திற்காகத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர்.

 

10th Social Science – History Unit 5 Question answers

10th Social Science – History

Additional Important Questions and Answers ( TET, TNPSC TRB )

 

Leave a Reply