10th Social Science – Economics Guide Unit 5 Book Answer
Unit 5 தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்
10th Social Science – Economics Tamil Medium Book Back & Additional Question – Answers
10th social Science – Economics Unit 5. தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள் Book Back & Additional Question – Answers
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1.ஆசியாவின் டெட்ராய்ட் என அழைக்கப்படுவது ……………………..
அ) தூத்துக்குடி
ஆ) கோயம்புத்தூர்
இ) சென்னை
ஈ) மதுரை
விடை: இ) சென்னை
2.குழாய்கள் மற்றும் நீரிறைக்கும் இயந்திரம் பெருமளவில் உற்பத்தி செய்யப்படுவது ………………
அ) சேலம்
ஆ) கோயம்புத்தூர்
இ) சென்னை
ஈ) தருமபுரி
விடை: ஆ) கோயம்புத்தூர்
3.……………….. என்பது ஒரு நாட்டின் வளர்ச்சியில் முக்கிய அம்சமாகும்.
அ) வேளாண்மை
ஆ) தொழில்
இ) இரயில்வே
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
விடை: ஆ) தொழில்
4.திருப்பூர் ………………. தொழிலுக்கு பெயர்பெற்றது.
அ) தோல் பதனிடுதல்
ஆ) பூட்டு தயாரித்தல்
இ) பின்னலாடை தயாரித்தல்
ஈ) வேளாண் பதப்படுத்துதல்
விடை: இ பின்னலாடை தயாரித்தல்
5.…………….. இல் ஒரு வெற்றிகரமான தொழில்துறை தொகுப்பு முற்றிலும் தமிழ்நாட்டால் உருவாக்கப்பட்டது.
அ) ஓசூர்
ஆ) திண்டுக்கல்
இ) கோவில்பட்டி
ஈ) திருநெல்வேலி
விடை: அ) ஓசூர்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1.நூற்றுக்கணக்கான தோல் மற்றும் தோல் பதனிடும் வசதிகள் தமிழ்நாட்டில் …………………. மாவட்டத்தைச் சுற்றி அமைந்துள்ளது.
விடை: வேலூர்
2.சிறப்புப் பொருளாதார மண்டலக் கொள்கைகள் ……………ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
விடை: ஏப்ரல் 2000
3.………. என்பவர் புத்தாக்க சிந்தனைகள் மற்றும் வணிக செயல்முறைகளின் புத்தாக்கம் புனைபவர் ஆவார்.
விடை: தொழில் முனைவோர்
III. தவறான ஒன்றினை தேர்வு செய்க.
1.பின்வருவனவற்றில் தோல் தொழிற்சாலைகள் இல்லாதது எது?
அ) ராணிப்பேட்டை
ஆ) தர்மபுரி
இ) ஆம்பூர்
ஈ) வாணியம்பாடி
விடை: ஆ) தர்மபுரி
2.பின்வருவனவற்றில் எது தொழில் துறை வளர்ச்சி நிறுவனம் அல்ல?
அ) TIDCO
ஆ) SIDCO
இ) MEPG
ஈ) SIPCOT
விடை: இ MEPG
IV. பின்வருவனவற்றைப் பொருத்துக .
- 1. தொழில்முனைவோர் – ஏற்றுமதி செயலாக்க மண்டலம்
- 2. MEPZ – கோயம்புத்தூர்
- 3. இந்திய ஒழுங்குமுறை – அமைப்பாளர் தொழிற்சாலை
- 4. TNPL – அரவங்காடு
- 5. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் – கரூர்
விடை 1-இ , 2-அ, 3-ஈ, 4-உ, 5- ஆ
V. கீழ்க்கண்ட வினாக்களுக்கு குறுகிய விடையளி.
1.விவசாயத்துறையில் ஊதியங்கள் ஏன் குறைவாக உள்ளன?
- நிலத்தின் உற்பத்தித்திறன் குறைந்து வருவதால் விவசாயத் துறையில் தொழிலாளர் ஊதியம் குறைவாக உள்ளது.
- நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் விவசாயத் துறையில் நில உற்பத்தித்திறன் அதிகரிக்க முடியாது.
2.தொழில் துறை தொகுப்பு என்றால் என்ன?
- தொழில் தொகுப்புகள் என்பது பொதுவான சந்தைகள் தொழில்நுட்பங்கள் மற்றும் திறன்களுக்கான தேவைகளை பகிர்ந்துகொள்ள வரையறுக்கப்பட்ட புவியியல் பகுதியில் உள்ள நிறுவனங்களின் தொகுப்புகளாகும்.
3.தொழில் தொகுப்புகள் உருவாவதற்கான வழிகள் யாவை?
- தொழில் தொகுப்பு தோன்றுவதற்கு பல்வேறு காரணிகள் உள்ளன.
- ஒரு சில தொழில் தொகுப்புகள் தோன்றிய இடங்களில் கைவினைஞர்கள் குடியேறி நெடுங்காலமாக அங்கு தங்கி இருந்ததாகவும் வரலாறு கூறுகிறது.
- கைத்தறி நெசவுத்தொழில் வளர்ச்சி இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.
4.தமிழ்நாட்டில் உள்ள மூன்று தொழில்துறை வளர்ச்சி மேம்பாட்டு நிறுவனங்களையும் அவற்றின் பங்கினையும் குறிப்பிடுக.
- தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (SIPCOT)
- தொழில் முன்னேற்றத்திற்காக நிறுவப்பட்டு தொழிற் தோட்டங்களை அமைத்துள்ளது.
- தமிழ்நாடு மாநில சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் (TANSIDCO)
- சிறுதொழில் முன்னேற்றத்திற்காக நிறுவப்பட்ட ஒரு அரசு நிறுவனமாகும்.
- தமிழ்நாடு சிறுதொழில் கழகம் – வரையறுக்கப்பட்டது (TANSI)
- சிறுநிறுவனங்களுக்காக நிறுவப்பட்ட முதல் தொழில்துறை நிறுவனமாகும்.
5.தற்போது தமிழ்நாட்டில் தொழில்மயமாதலின் சிக்கல்கள் யாவை?
- வேதிப்பொருள்கள், நெசவுத் துறை மற்றும் தோல் தொகுப்புகள் மூலம் வரும் திரவக் கழிவுகள் நமது சுகாதாரத்தை கெடுக்கிறது.
- இந்த திரவக் கழிவுகள் சேரும் நீர் நிலைகளை மட்டுமல்லாமல் அதையொட்டியுள்ள விவசாய நிறுவனங்களையும் மாசுபடுத்துகிறது.
- உலகளாவிய அளவில் போட்டிப் போடுவதற்காக முதன்மையான தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதால் நிலையான வேலை வாய்ப்புக்கான குறை ஏற்படுகிறது. பணியாளர்களின் தரமானது, இன்றைய காலகட்டத்தில் தற்காலிகமாக பணியமர்த்தப்படுவதால் குறைகிறது.
6.தொழில்முனைவோர் என்பவர் யாவர்?
- ஒரு “தொழில் முனைவோர்” என்பவர் புதிய சிந்தனைகளுக்கும், வணிக செயல்முறைகளுக்கும் புத்தாக்கம் புனைபவர் ஆவார்.
- இவர்களிடம் சிறந்த நிர்வாகத் திறன்கள், வலிமையான குழுவை அமைக்கும் திறமைகளும் மற்றும் தலைமைக்குத் தேவையான பண்புகளும் இருக்கும்.
7.தொழில்முனைவு என்றால் என்ன?
- தொழில் முனைவோர் தங்கள் தொழிலை பெருக்குவதற்கான செயல்முறைகளே தொழில் qமுனைவு எனப்படும்.
- இவை ஒன்றை உருவாக்குவதற்கும் மேலும் பெரிதுபடுத்துவதற்குமான திறன் ஆகும்.
VI. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விரிவான விடையளி.
1.வெற்றிகரமான தொழில்துறை தொகுப்புகளின் முக்கிய பண்புகள் என்ன?
- வெற்றிகரமான தொழில் தொகுப்புகளின் முக்கிய பண்புகள் பின்வருமாறு:
- சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் புவியியல் பகுதிகளுக்கு அருகாமையில் இருத்தல்.
- துறை சார்ந்த சிறப்பு கவனம்.
- நிறுவனங்களுக்கு இடையே நெருக்கமான அல்லது பரஸ்பர முறையில் இணைந்திருத்தல்.
- புத்தாக்கத்தினால் நிறுவனங்களுக்கு இடையேயான போட்டி.
- நம்பிக்கையை எளிதாக்கும் ஒரு சமூக கலாச்சார அடையாளம்.
- பல்வேறு திறமையான தொழிலாளர்கள்.
- சுய உதவி குழுக்கள் செயல்படுதல்.
- வட்டார மற்றும் நகராட்சிகளுக்கு அரசின் ஆதரவு.
2.தமிழ்நாட்டின் நெசவுத் தொழில் தொகுப்பு பற்றி எழுதுக.
- இந்தியாவில் மிகப்பெரிய நெசவுத் தொழில் துறைகளுக்கு தமிழ்நாடு தாயகமாக விளங்குகிறது.
- காலனித்துவ காலத்திலிருந்து பருத்தி நெசவுத் தொழில் வளர்ச்சியின் காரணமாக கோயம்புத்தூர் “தென்னிந்தியாவின் மான்செஸ்டர்” என அழைக்கப்படுகிறது.
- நமது நாட்டின் மிகப் பெரிய பருத்தி நெசவு தொழில் உற்பத்தியில் தமிழகம் பெரும்பங்கு வகிக்கிறது.
- ஈரோடு மற்றும் சேலம் பகுதியிலும் அதிகளவிலான மின்தறி அலகுகள் இருப்பதால் மின்விசைத்தறித் தொழில் மிகவும் பரவலாக உள்ளது.
- திருப்பூரானது பின்னலாடை தயாரிக்கும் ஏராளமான நிறுவனங்களின் தொகுப்புகளுக்கு புகழ்பெற்ற இடமாகும்.
- இது நாட்டின் பருத்தி பின்னலாடை ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 80% பங்கினைக் கொண்டுள்ளது.
- இது உள்நாட்டுச் சந்தையில் ஒரு மிகப்பெரிய உற்பத்தியாளராகத் திகழ்கிறது.
- மிகப்பெரிய வெற்றியின் காரணமாக உலகச் சந்தையில் உலகின் தெற்கு அரைக் கோளத்தில் ஒரு சக்தி வாய்ந்த தொகுப்பாக இந்த இடம் உள்ளது.
- வாகனக் கட்டுமானத் தொழிலமைப்பைத் தவிர மேசைத்துணி, திரைச்சீலைகள், படுக்கை விரிப்புகள் மற்றும் துண்டுகள் போன்ற வீட்டு அலங்கார பொருள்களை ஏற்றுமதி செய்யும் முக்கிய மையமாக கரூர் உள்ளது.
- பவானி மற்றும் குமாரபாளையம் உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளுக்கு தரை விரிப்புகளை உற்பத்திச் செய்யும் முக்கிய மையங்களாகத் திகழ்கின்றன.
- நவீன தொகுப்புகளைத் தவிர பட்டு மற்றும் கைத்தறிப் புடவைகளுக்கு பிரபலமான மதுரை மற்றும் காஞ்சிபுரம் போன்ற பாரம்பரிய கைவினைத் தொகுப்புகளும் உள்ளன.
3.தொழில்மயமாதலுக்கு தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்ட கொள்கைகளின் வகைகள் பற்றி விரிவாக எழுதுக.
கல்வி:
- திறமை வாய்ந்த மனித வளங்கள் தொழிற்சாலைக்குத் தேவைப்படுகிறது.
- நமது மாநிலமானது தொடக்கக் கல்விக்காக அதிகமான கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல், படித்தவர்களின், எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் அடிப்படை எண் கணித திறன்களை வளர்ப்பதிலும் கவனம் செலுத்துகிறது.
உள்கட்டமைப்பு:
- மாநிலங்களில் உள்ள சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் தொழில்மயமாதல் பரவுதலுக்கு மின்சார விநியோகம் சிறப்பான பங்கினை வகிக்கிறது.
- மின்சார விநியோகம் மட்டுமல்லாது தமிழ்நாடானது மிகச் சிறந்த போக்குவரத்து உள்கட்டமைப்புக்குப் பெயர் போனது ஆகும்.
- குறிப்பாக கிராமப்புறங்கள் சிறு சாலை வசதிகளால் அருகிலுள்ள சிறு நகரங்களுடனும், பெரு நகரங்களுடனும் சிறப்பான முறையில் இணைக்கப்பட்டுள்ளது.
- பொது மற்றும் தனியார் போக்குவரத்துத் துறைகள் ஒருங்கிணைந்து கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களின் இணைப்பை எளிதாக்கியுள்ளது.
தொழில்துறை ஊக்குவிப்பு:
- சிறந்த தொழிற்பிரிவுக்கான தொழிற்சாலை விரிவாக்கங்களை சிறந்த பகுதிகளில் ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
4.தொழில்முனைவோரின் பங்கினைப் பற்றி விளக்குக.
- நாட்டில் பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் தொழில் முனைவோரின் பங்கு மிக முக்கியமானதாகும்.
- தொழில் முனைவோர் கிராமப்புற மற்றும் பின்தங்கிய தொழிற்சாலைகளை முன்னேற்றுவதுடன், நாட்டில் பல்வேறு பகுதிகளில் நிலவும் வட்டார ஏற்றத்தாழ்வுகளை நீக்குகிறார்கள்.
- இவர்கள் நாட்டின் மொத்த உள்நாட்டு (GDP) உற்பத்தி மற்றும் தலா வருமானம் உயர்வதற்கு உதவி புரிகிறார்கள்.
- குடிமக்களின் அசையா சேமிப்புகள் மற்றும் நாட்டின் ஏற்றுமதி வியாபாரம் மூலமாக மூலதனத்தை செயல்பட வைக்கிறார்கள்.
- தொழில்முனைவோர் கைவினைஞர்கள், தொழில்நுட்பத் தகுதி வாய்ந்த நபர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு பெரிய அளவிலான வேலைவாய்ப்பை வழங்குகிறார்கள். இலாபத்தினை அதிகரிக்க முயற்சிக்கின்றனர்.
- தொழில் முனைவோர், குறைந்த விலையில் சிறந்த தரமான பொருட்களைப் பெற மக்களுக்கு உதவுகின்றனர். இதன் விளைவாக அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுகிறது.
10th Social science Guide Economics Unit 5
Additional Questions and Answers ( TNPSC, TN TET, TRB )
சரியான விடையைத் தேர்வு செய்யவும்.
1.தொழில்துறைத் தொகுப்பு ……………. வளர்ந்தது.
அ) 1915
ஆ) 1930
இ) 1920
ஈ) 1945
விடை: இ 1920
2.…………….. தொழில் தொகுப்பிற்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.
அ) டெக்ஸ்டைல்ஸ்
ஆ) பில்டிங்
இ) கைத்தறி நெசவுத் தொழில்
ஈ) ஏதுமில்லை
விடை: இ) கைத்தறி நெசவுத் தொழில்
3.தோல் உற்பத்தி நடைபெறுமிடம் …………… ஆகும்.
அ) கோயம்புத்தூர்
ஆ) வேலூர்
இ) திருச்சி
ஈ) நாமக்கல்
விடை: ஆ) வேலூர்
4.திருச்சிராப்பள்ளியில் உள்ள BHEL நிறுவனம் ………….. தயாரிக்கிறது.
அ) தொட்டிகள்
ஆ) கொதிகலன்கள் (ம) விசையாழிகள்
இ) ரயில் பெட்டிகள்
ஈ) எதுவுமில்லை
விடை: ஆ) கொதிகலன்கள் (ம) விசையாழிகள்
5.…………………. சேலம் இரும்பு எஃகு ஆலை அமைக்கப்பட்டது.
அ) 1920
ஆ) 1973
இ) 1937
ஈ) 1945
விடை: ஆ) 1973
6.1990ல் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு ………….. தொழில்மயமாதலின் இறுதி கட்டம்.
அ) முன் காலகட்டம்
ஆ) பிந்தைய காலகட்டம்
இ) நவீன காலகட்டம்
ஈ) எதுவுமில்லை
விடை: ஆ) பிந்தைய காலகட்டம்
7.தொழிற்சாலைகளை அதிகளவு கொண்ட மாநிலம் ……………….. ஆகும்.
அ) கேரளா
ஆ) கர்நாடகா
இ) தமிழ்நாடு
ஈ) ஆந்திரப் பிரதேசம்
விடை: இ தமிழ்நாடு
8.ஈரோடு (ம) சேலம் பகுதியில் அதிகளவு மின்தறி அலகுகள் இருப்பதால் ……………… பரவலாக உள்ளது.
அ) தீப்பெட்டி
ஆ) கட்டுமானம்
இ) மின்விசைத்தறித்தொழில்
ஈ) நெசவுத் தொழில்
விடை: இ மின்விசைத் தறித்தொழில்
9.பின்னலாடை ஏற்றுமதியில் கிட்டத்திட்ட பங்கினை ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 80% பங்கினை ……………. கொண்டுள்ளது.
அ) சென்னை
ஆ) கோயம்புத்தூர்
இ) திருப்பூர்
ஈ) தஞ்சை
விடை: இ திருப்பூர்
10.……………… அரைக்கோளத்திலுள்ள நாடுகள் உலகளாவிய தெற்கு நாடுகள் எனப்படுகின்றது.
அ) கிழக்கு
ஆ) மேற்கு
இ) வடக்கு
ஈ) தெற்கு
விடை: ஈ) தெற்கு
11.வீட்டுப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் முக்கிய மையம் …………….. ஆகும்.
அ) ஈரோடு
ஆ) சேலம்
இ) கரூர்
ஈ) எதுவுமில்லை
விடை: இ கரூர்
12.வேலூர் ……………… ஏற்றுமதியின் சிறந்து விளங்குகிறது.
அ) வீட்டுப்பொருள்
ஆ) விசைத்தறி
இ) தோல்
ஈ) எதுவுமில்லை
விடை: இ தோல்
13.……………. போக்குவரத்திற்கு சிறந்தது.
அ) தமிழ்நாடு
ஆ) கேரளா
இ) அ) (ம) ஆ)
ஈ) எதுவுமில்லை
விடை: அ) தமிழ்நாடு
14.TIDCO ………………. தொடங்கப்பட்டது.
அ) 1949
ஆ) 1971
இ) 1965
ஈ) 1956
விடை: இ 1965
கோடிட்ட இடங்களை நிரப்புக.
1.…………….. என்பது புதிய சிந்தனைகளுக்கும், வணிக செயல்முறைக்கும் புத்தாக்கம் புனைபைவர் ஆவார்.
விடை:தொழில் முனைவோர்
2.……………… ஒன்றை உருவாக்குவதற்கும் பெரிதுபடுத்துவதற்கான திறனாகும்.
விடை:தொழில் முனைவு
3.ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் ……………. தொடங்கப்பட்டது.
விடை:ஜனவரி 16, 2016
4.…………….. என்பது சென்னையில் ஒரு சிறப்பு பொருளாதார மண்டலமாகும்.
விடை:MEPZ
5.MEPZ தலைமையகம் சென்னையை அடுத்த ……………. GST சாலையில் அமைந்துள்ளது.
விடை:தாம்பரம்
6.திறமை வாய்ந்த மனிதவளங்கள் ………… தேவைப்படுகின்றன.
விடை:தொழிற்சாலைக்கு
7.…………….. தொழிற்சாலையும், வேலைவாய்ப்பையும் அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
விடை:தோல் உற்பத்தி
8.50க்கும் மேற்பட்ட அலகுகளைக் கொண்டு ………………. முக்கிய மையமாகத் திகழ்கிறது.
விடை:கரூர்
9.மூலப்பொருட்களை எளிதில் பயன்படுத்தக்கூடிய பொருளாக மாற்றுவதில் ஈடுபட்டுள்ள எந்த ஒரு மனித நடவடிக்கையும் நிறைவேற்றுமிடம் ……………… எனப்படும்.
விடை:தொழிற்சாலை
10.வருமானம் அதிகரிப்பு ………….. தேவைக்கு வழி வகுக்கிறது.
விடை:பண்டங்கள் (ம) பணிகளின்
தவறான ஒன்றினை தேர்வு செய்க.
1.…………… தீப்பெட்டி தொழிற்சாலைக்கு பெயர் பெற்ற இடமாகும்.
அ) ராணிப்பேட்டை
ஆ) தர்மபுரி
இ) சிவகாசி
ஈ) திருப்பூர்
விடை: இ சிவகாசி
2.…………. உள்நாட்டுப் போக்குவரத்துக்கு சிறந்த மாநிலமாகும்.
அ) தமிழ்நாடு
ஆ) ஆந்திரப்பிரதேசம்
இ) கேரளா
ஈ) கர்நாடகா
விடை: அ) தமிழ்நாடு
கீழ்க்கண்ட வினாக்களுக்கு குறுகிய விடையளி.
1.மெட்ராஸ் ஏற்றுமதி செயலாக்க மையம் – வரையறு.
- மெட்ராஸ் ஏற்றுமதி செயலாக்க மையம் சென்னையில் ஒரு சிறப்புப் பொருளாதார மையமாகும்.
- மத்திய அரசு அமைத்த நாட்டின் ஏழு ஏற்றுமதி செயலாக்க மண்டலங்களில் இதுவும் ஒன்றாகும்.
- இது அந்நிய நேரடி முதலீட்டினை ஊக்குவிப்பதற்கும் அந்நிய செலாவணியை ஈட்டுவதற்கும், வட்டாரப் பகுதிகளில் அதிக வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதற்கும் 1984ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
- MEPZ தலைமையகம் சென்னையை அடுத்த தாம்பரம் GST சாலையில் அமைந்துள்ளது.
2.தொழிற்சாலை வரையறு.
- பொதுவாக மூலப்பொருள்களை எளிதில் பயன்படுத்தக்கூடிய பொருள்களாக மாற்றுவதில் ஈடுபட்டுள்ள எந்த ஒரு மனித நடவடிக்கையையும் நிறைவேற்றுமிடம் “தொழிற்சாலை” என்று அழைக்கப்படுகிறது.
3.தொழிற்சாலைகளின் வகைகள் யாவை?
- பயனர்கள்
- பயன்Question படுத்தப்படும் உள்ளீடுகளின் வகை
- நிறுவன உரிமையாளர்கள்
- அளவு
4.தொழில்மயமாதல் வரையறு.
- நுகர்வோருக்கும் மற்ற உற்பத்தியாளர்களுக்கும் தேவைப்படும் பொருள்களை நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திப் பெருமளவில் உற்பத்திச் செய்வது தொழில்மயமாதல் எனப்படும்.
5.ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் வரையறு.
- ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் என்பது இந்திய அரசின் ஒரு முன் முயற்சித் திட்டமாகும்.
- இதன் முதன்மையான நோக்கம் தொழில் தொடங்குவதற்கான தொடக்க முயற்சிகளை ஏற்படுத்துதல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் வளங்களை உருவாக்குதல் ஆகும்.
கீழ்க்கண்ட வினாக்களுக்கு விரிவான விடையளி.
1.தமிழகத்தில் தொழில் விரிவாக்கத்திற்கு திறவுகோலாக செயல்படும் முகமைகளை விவரி.
தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம்:
- 1971இல் தொழில் முன்னேற்றத்திற்காக நிறுவப்பட்டு தொழிற் தோட்டங்களை அமைத்துள்ளது.
தமிழ்நாடு மாநில சிறுதொழில் வளர்ச்சிக் கழகம்:
- 1970இல் தமிழக அரசால் நம் மாநிலத்தில் சிறுதொழில் முன்னேற்றத்திற்காக நிறுவப்பட்ட ஒரு அரசு நிறுவனமாகும். சிறு தொழிற்பிரிவின் புதிய நிறுவனங்களுக்கு மானியம் மற்றும் தொழிற் நுட்ப உதவிகளையும் இந்த நிறுவனம் வழங்குகிறது.
தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழகம்:
- நம் மாநிலத்தில் தொழில் தோட்டங்களை நிறுவுவதற்கும் தொழிற்சாலைகளை மேம்படுத்துவதற்கும் உதவும் மற்றுமொரு அரசு நிறுவனமாகும்.
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் – வரையறுக்கப்பட்டது:
- புதிய தொழில் பிரிவுகளை நிறுவுவதற்கும் தற்போதுள்ள தொழில் பிரிவுகளை பெருக்குவதற்கும் குறைந்த அளவிலான நிதி உதவியைச் செய்கிறது.
தமிழ்நாடு சிறுதொழில் கழகம் – வரையறுக்கப்பட்டது:
- சிறுநிறுவனங்களுக்காக நிறுவப்பட்ட முதல் தொழில்துறை நிறுவனமாகும்.
2.தமிழ்நாட்டின் முக்கிய தானியங்கி தொகுப்புகள் பற்றி விவரிக்க.
- சென்னை பெரிய அளவிலான வாகனத் தொழில்துறை தளமாக இருப்பதால் “ஆசியாவின் டெட்ராய்ட்” என்று அழைக்கப்படுகிறது.
- சென்னையானது மிக அதிகமான தானியங்கி தொழிலை ஒருங்கிணைக்கும் மற்றும் உதிரிபாகங்கள் செய்யும் தலைமை இடமாகத் திகழ்கிறது.
- சில உள்நாட்டு நிறுவனங்களான TVS, TI சைக்கிளஸ், அசோக் லேலண்ட் மற்றும் ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ் ஆகியன இதற்கு முன்னர் இருந்தன.
- பொருளாதார சீர்த்திருத்தத்திற்கு பின்னர் ஹூன்டாய், ஃபோர்டு, டைம்லர்பென்ஸ் மற்றும் ரெனால்ட்
- நிசான் போன்ற பல பன்னாட்டு நிறுவனங்கள் இப்பகுதியில் தொழிற்சாலைகளைத் திறந்துள்ளன.
- எனவே வெளிநாடுகளிலிருந்து பல உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளரின் கவனங்கள் இங்கே ஈர்க்கப்பட்டுள்ளது.
- பல உள்நாட்டு நிறுவனங்களும் சேர்ந்து அனைத்து நிறுவனங்களுக்கான உதிரி பாகங்களின் உற்பத்தித் தேவையைப் பூர்த்தி செய்கின்றன.
- கோயம்புத்தூர் பகுதி ஒரு தானியங்கிகளின் தொகுப்பாக வளர்ந்து வருகிறது.