10th Social Science – Civics Guide Unit 1 Book Answer
Unit 1. இந்திய அரசியலமைப்பு
10th Social Science – Civics Tamil Medium Book Back & Additional Question – Answers
10th social Science – CIVICS Unit 1 இந்திய அரசியலமைப்பு Book Back & Additional Question – Answers
I. சரியான விடையைத் தேர்ந்தெடு.
1.கீழ்காணும் வரிசையில் ‘முகவுரை’ பற்றிய சரியான தொடர் எது?
அ) குடியரசு, ஜனநாயக, சமயச் சார்பற்ற, சமதர்ம இறையாண்மை .
ஆ) இறையாண்மை , சமதர்ம, சமயச் சார்பற்ற, குடியரசு, ஜனநாயக.
இ) இறையாண்மை , குடியரசு, சமயச் சார்பற்ற, சமதர்ம, ஜனநாயக.
ஈ) இறையாண்மை , சமதர்ம, சமயச் சார்பற்ற, ஜனநாயக , குடியரசு.
விடை: ஈ) இறையாண்மை , சமதர்ம, சமயச் சார்பற்ற, ஜனநாயக, குடியரசு.
2.இந்திய அரசியலமைப்பின் முகவுரை எத்தனை முறை திருத்தப்பட்டது?
அ) ஒரு முறை
ஆ) இரு முறை
இ) மூன்று முறை
ஈ) எப்பொழுதும் இல்லை
விடை: அ) ஒரு முறை
3.ஒரு வெளிநாட்டவர், கீழ்க்காணும் எதன் மூலம் இந்தியக் குடியுரிமை பெறமுடியும்?
அ) வம்சாவளி
ஆ) பதிவு
இ) இயல்புரிமை
ஈ) மேற்கண்ட அனைத்தும்
விடை: இ இயல்புரிமை
4.மாறுபட்ட ஒன்றைக் கண்டுபிடி?
அ) சமத்துவ உரிமை
ஆ) சுரண்டலுக்கெதிரான உரிமை
இ) சொத்துரிமை
ஈ) கல்வி மற்றும் கலாச்சார உரிமை
விடை: இ) சொத்துரிமை
5.கீழ்கண்டவற்றில் ஒன்று அடிப்படை உரிமையைப் பயன்படுத்துவதற்கு உதாரணம் இல்லை.
அ) கர்நாடகாவிலிருந்து கேரளா பண்ணைகளில் வேலையாட்கள் பணிசெய்தல்
ஆ) கிறித்துவ சமயக்குழு, தொடர்ச்சியாக, பள்ளிகளை அமைத்தல்.
இ) ஆண், பெண் இருபாலரும் அரசுப்பணிகளுக்கு சம ஊதியம் பெறுதல்
ஈ) பெற்றோர்களின் பூர்வீக சொத்துகள் அவர்களது பிள்ளைகளுக்குச் செல்லுதல்.
விடை: ஈ) பெற்றோர்களின் பூர்வீக சொத்துகள் அவர்களது பிள்ளைகளுக்குச் செல்லுதல்
6.பின்வருவனவற்றுள் எந்த உரிமை டாக்டர். B.R. அம்பேத்கர் அவர்களால் ‘இந்திய அரசியலமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா’ என விவரிக்கப்பட்டது?
அ) சமய உரிமை
ஆ) சமத்துவ உரிமை
இ) அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை
ஈ) சொத்துரிமை
விடை: இ அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை
7.அடிப்படை உரிமைகள் எவ்வாறு நிறுத்திவைக்கப்பட முடியும்?
அ) உச்சநீதி மன்றம் விரும்பினால்
ஆ) பிரதம மந்திரியின் ஆணையினால்
இ) தேசிய அவசரநிலையின் போது குடியரசு தலைவரின் ஆணையினால்.
ஈ) மேற்கண்ட அனைத்தும்
விடை: இ தேசிய அவசரநிலையின் போது குடியரசு தலைவரின் ஆணையினால்
8.நமது அடிப்படை கடமைகளை ………….. இடமிருந்து பெற்றோம்.
அ) அமெரிக்க அரசியலமைப்பு
ஆ) கனடா அரசியலமைப்பு
இ) ரஷ்யா அரசியலமைப்பு
ஈ) ஐரிஷ் அரசியலமைப்பு
விடை: இ ரஷ்யா அரசியலமைப்பு
9.எந்த பிரிவின் கீழ் நிதிநிலை அவசரநிலையை அறிவிக்க முடியும்?
அ) சட்டப்பிரிவு 352
ஆ) சட்டப்பிரிவு 356
இ) சட்டப்பிரிவு 360
ஈ) சட்டப்பிரிவு 368
விடை: இ சட்டப்பிரிவு 360
10.எந்தக் குழுக்கள் / கமிஷன்கள் மத்திய – மாநில உறவுகள் பற்றி பரிந்துரை செய்தன?
1. சர்க்காரியா குழு
2. ராஜமன்னார் குழு
3. M.N. வெங்கடாசலையா குழு கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடு.
அ) 1, 2 &3
ஆ) 1 & 2
இ) 1 &3
ஈ) 2 & 3
விடை: ஆ) 1 & 2
10th Social Science Guide Civics Unit 1
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1.முதன் முதலில் அரசியலமைப்பு எனும் கொள்கை ……………… தோன்றியது.
விடை: அமெரிக்க ஐக்கிய நாடுகளில்
2.அரசியல் நிர்ணய சபையின் தற்காலிகத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
விடை: Dr. சச்சிதானந்த சின்கா
3.இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் மற்றும் ஆண்டு ……….
விடை: 26 நவம்பர் 1949
4.………………… பேராணைகள் சட்டப்பிரிவு 32இல் குறிப்பிடப்படுகின்றன.
விடை:ஐந்து வகையான
5.இந்திய குடிமக்களுக்கு அடிப்படை கடமைகள் …………… பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ளன.
விடை: 51A
III. பொருத்துக.
- 1. குடியுரிமைச் சட்டம் – ஜவகர்லால் நேரு
- 2. முகவுரை – 42-வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம்
- 3. சிறிய அரசியலமைப்பு – 1955
- 4. செம்மொழி – 1962
- 5. தேசிய அவசரநிலை – தமிழ்
விடை:- 1-இ, 2-அ, 3-ஆ, 4-உ, 5-ஈ
IV. குறுதிய விடை தருக
1.அரசியலமைப்பு என்றால் என்ன?
- ஒரு நாட்டின் நிர்வாகமானது எந்த அடிப்படைக் கொள்கைகளைச் சார்ந்து அமைந்துள்ளது என்பதை பிரதிபலிக்கும் அடிப்படைச் சட்டமே அரசியலமைப்பு என்பதாகும்.
- அது ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு அச்சாணி ஆகும்.
- அரசியலமைப்பு என்ற கொள்கை முதன்முதலில் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் (U.S.A.) தோன்றியது.
2.குடியுரிமை என்பதன் பொருள் என்ன?
- ‘சிட்டிசன்’ (Citizen) எனும் சொல் ‘சிவிஸ்’ (Civis) எனும் இலத்தீன் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும்.
- இதன் பொருள் ஒரு ‘நகர அரசில் வசிப்பவர்’ என்பதாகும். இந்திய அரசியலமைப்பு, இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான ஒற்றை குடியுரிமையை வழங்குகிறது.
- இந்திய அரசியலமைப்பின் பகுதி || சட்டப்பிரிவுகள் 5லிருந்து 11 வரை குடியுரிமையைப் பற்றி விளக்குகின்றன.
3.இந்திய அரசியலமைப்பால் வழங்கப்படும் அடிப்படை உரிமைகளை பட்டியலிடுக.
- சமத்துவ உரிமை
- சுதந்திர உரிமை
- சுரண்டலுக்கெதிரான உரிமை
- சமயச் சார்பு உரிமை
- கல்வி, கலாச்சார உரிமை
- அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை
4.நீதிப்பேராணை (Writ) என்றால் என்ன?
- நீதிமன்ற முத்திரையுடன், நீதிமன்றத்தால் வெளியிடப்படும் கட்டளை அல்லது ஆணை நீதிப்பேராணை எனப்படும்.
- இது சில சட்டங்களை நிறைவேற்றாமல் தடைசெய்ய, நீதிமன்றத்தால் வெளியிடப்படும் ஆணையாகும்.
5.இந்தியாவின் செம்மொழிகள் எவை?
- தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஓடியா.
6.தேசிய அவசரநிலை என்றால் என்ன?
தேசிய அவசரநிலை (பிரிவு 352):
- போர், அல்லது வெளிநாட்டினர் ஆக்கிரமிப்பின் காரணமாக அவசரநிலை அறிவிக்கப்படும் பொழுது அது ‘வெளிப்புற அவசரநிலை’ எனப்படுகிறது.
- ஆயுதமேந்திய கிளர்ச்சிக் காரணமாக அவசர நிலை அறிவிக்கப்படும்பொழுது அது ‘உள்நாட்டு அவசரநிலை’ எனப்படுகிறது.
7.மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மூன்று தலைப்புகளில் பட்டியலிடுக.
- சட்டமன்ற உறவுகள்
- நிர்வாக உறவுகள்
- நிதி உறவுகள்
10th Social Science Guide Civics Unit 1
V. விரிவான விடை தருக.
1.இந்திய அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகளை விளக்குக.
- இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சிறப்புக் கூறுகள் :
- உலகிலுள்ள எழுதப்பட்ட, அனைத்து அரசியலமைப்புகளை விடவும் மிகவும் நீளமானது.
- இதன் பெரும்பாலான கருத்துக்கள் பல்வேறு நாடுகளின் அரசியலமைப்புகளிலிருந்து பெறப்பட்டவை,
- இது நெகிழாத் தன்மை கொண்டதாகவும், நெகிழும் தன்மை கொண்டதாகவும் உள்ளது.
- கூட்டாட்சி முறை அரசாங்கத்தை (மத்திய, மாநில அரசுகள்) ஏற்படுத்துகிறது.
- இந்தியாவைச் சமயச்சார்பற்ற நாடாக்குகிறது.
- சுதந்திரமான நீதித்துறையை வழங்குகிறது.
- உலகளாவிய வயது வந்தோர் வாக்குரிமையை அறிமுகப்படுத்தியதோடு 18 வயது நிரம்பிய குடிமக்கள் அனைவருக்கும் எந்த வித பாகுபாடுமின்றி வாக்குரிமையை வழங்குகிறது.
2.அடிப்படை உரிமைகளைக் குறிப்பிடுக.
- தற்போது ஆறு அடிப்படை உரிமைகள் மட்டுமே உள்ளன.
- இந்தியாவில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் அடிப்படை உரிமைகள் பொதுவானது.
சமத்துவ உரிமை:
- பிரிவு 14 – சட்டத்தின் முன் அனைவரும் சமம்.
- பிரிவு 17 – தீண்டாமையை ஒழித்தல்.
- பிரிவு 18 – இராணுவ மற்றும் கல்விசார் பட்டங்களைத் தவிர மற்றப் பட்டங்களை நீக்குதல்.
- சுதந்திர உரிமை :
- பிரிவு 21 – வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு பாதுகாப்பு பெறும் உரிமை.
- பிரிவு 21 A – தொடக்கக் கல்வி பெறும் உரிமை.
- பிரிவு 22 – சில வழக்குகளில் கைது செய்து, தடுப்புக் காவலில் வைப்பதற்கெதிரான பாதுகாப்பு உரிமை.
- சுரண்டலுக்கெதிரான உரிமை:
- பிரிவு 23 – கட்டாய வேலை, கொத்தடிமை முறை மற்றும் மனிதத்தன்மையற்ற வியாபாரத்தைத் தடுத்தல்.
- பிரிவு 24 – தொழிற்சாலைகள் மற்றும் ஆபத்தான இடங்களில் குழந்தைத் தொழிலாளர் முறையைத் தடுத்தல்.
- சமய சார்பு உரிமை:
- பிரிவு 25 – எந்த ஒரு சமயத்தினை ஏற்கவும், பின்பற்றவும், பரப்பவும் உரிமை.
- பிரிவு 26 – சமய விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமை.
- பிரிவு 27 – எந்தவொரு மதத்தையும் பரப்புவதற்காக வரி செலுத்துவதற்கெதிரான சுதந்திரம்.
- பிரிவு 28 – மதம் சார்ந்த கல்வி நிறுவனங்களில் நடைபெறும் வழிபாடு மற்றும் அறிவுரை நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமலிருக்க உரிமை.
- கல்வி கலாச்சார உரிமை:
- பிரிவு 29 – சிறுபான்மையினரின் எழுத்து, மொழி மற்றும் கலாச்சாரப் பாதுகாப்பு.
- பிரிவு 30 – சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்களை நிறுவி, நிர்வகிக்கும் உரிமை.
- அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை:
- பிரிவு 32 – தனிப்பட்டவரின், அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும் போது, நீதிமன்றத்தை அணுகி உரிமையைப் பெறுதல்.
3.அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமையைப் பற்றி எழுதுக.
- அரசியல் சட்ட மேல் முறையீட்டு உரிமைகள் (சட்டப்பிரிவு – 32):
- நீதிமன்ற முத்திரையுடன், நீதிமன்றத்தால் வெளியிடப்படும் கட்டளை அல்லது ஆணை நீதிப்பேராணை எனப்படும்.
- இது சில சட்டங்களை நிறைவேற்றாமல் தடைசெய்ய நீதிமன்றத்தால் வெளியிடப்படும் ஆணையாகும்.
- Dr. B.R. அம்பேத்கரின் கூற்றுப்படி அரசியலமைப்பு சட்டப்பிரிவு-32 இந்திய அரசியலமைப்பின் ‘இதயம் மற்றும் ஆன்மா ‘ ஆகும்.
- அ. ஆட்கொணர்வு நீதிப்பேராணை:
- சட்டத்திற்கு புறம்பாக ஒருவர் கைது செய்யப்படுவதிலிருந்து இது பாதுகாக்கிறது.
ஆ. கட்டளையுறுத்தும் நீதிப்பேராணை:
- மனுதாரர் சட்ட உதவியுடன் தனது மனுதொடர்பான பணியினைச் சம்மந்தப்பட்ட துறைகளிலிருந்து நிறைவேற்றிக் கொள்ள முடியும்.
இ. தடையுறுத்தும் நீதிப்பேராணை:
- ஒரு கீழ்நீதிமன்றம் தனது, சட்ட எல்லையைத் தாண்டி செயல்படுவதைத் தடுக்கிறது.
ஈ. ஆவணக் கேட்பு பேராணை:
- உயர்நீதிமன்றம், ஆவணங்களை நியாயமான பரிசீலனைக்கு தனக்கோ அல்லது உரிய அதிகாரிக்கோ அனுப்பச் செய்ய கீழ்நீதிமன்றங்களுக்கு இடும் ஆணை ஆகும்.
உ. தகுதி முறை வினவும் நீதிப்பேராணை:
- இப்பேராணை சட்டத்திற்குப் புறம்பாக, தகாத முறையில் அரசு அலுவலகத்தைக் கைப்பற்றுவதை தடை செய்கிறது.
4.அடிப்படை உரிமைகளுக்கும், அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகளுக்கும் இடையேயான வேறுபாடுகளைக் குறிப்பிடுக.
அடிப்படை உரிமைகள் | அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகள் |
இவை அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டவை. | இவை அயர்லாந்து நாட்டின் அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டவை . |
அரசாங்கத்தால் கூட இந்த உரிமையை சுருக்கவோ, நீக்கவோ முடியாது. | இவை அரசுக்கு வெறும் அறிவுறுத்தல்களே ஆகும். |
இவற்றை நீதிமன்ற சட்டத்தால் செயற்படுத்த முடியும். |
|
இவை சட்ட ஒப்புதலைப் பெற்றவை. | இவை தார்மீக மற்றும் அரசியல் ஒப்புதலைப் பெற்றவை. |
இந்த உரிமைகள் நாட்டின் அரசியல் ஜனநாயகத்தை வலுப்படுத்துகின்றன . | இந்தக் கொள்கைகளைச் செயற்படுத்தும் பொழுது, சமுதாய மற்றும் பொருளாதார ஜனநாயகம் உறுதியாகிறது. |
10th Social Science Guide Civics Unit 1
Additional Questions and Answers ( TNTET, TNPSC, TRB )
சரியான விடையைத் தேர்வு செய்யவும்.
1.அமைச்சரவை தூதுக்குழு உருவாக்கப்பட்ட ஆண்டு …………….
அ) 1964
ஆ) 1946
இ) 1856
ஈ) 1846
விடை: ஆ) 1946
2.……………….. இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் தலைவரானார்.
அ) Dr. A.P.J. அப்துல் கலாம்
ஆ) Dr. இராஜேந்திர பிரசாத்
இ) Dr. சச்சிதானந்த சின்கா
ஈ) V.T. கிருஷ்ணமாச்சாரி
விடை: ஆ) Dr. இராஜேந்திர பிரசாத்
3.இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த ஆண்டு …………………
அ) 15 ஆகஸ்ட் 1947
ஆ) 26 ஆகஸ்ட் 1949
இ) 26 நவம்பர் 1949
ஈ) 26 ஜனவரி 1950
விடை: ஈ) 26 ஜனவரி 1950
4.ஒருவர் இந்தியக் குடியுரிமை கோரி, பொருத்தமான அங்கீகாரத்துடன் ………………………. செய்வதன் மூலம் இந்தியக் குடியுரிமை பெறலாம்.
அ) வம்சாவளி
ஆ) பிறப்பு
இ) பதிவு
ஈ) இயல்புரிமை
விடை: இ பதிவு
5.ஒருவர் தன் குடியுரிமையை ……………. வழிகளில் இழப்பார்.
அ) மூன்று
ஆ) நான்கு
இ) ஆறு
ஈ) இரண்டு
விடை: அ) மூன்று
6.உயர்நீதிமன்றம், ஆவணங்களை நியாயமான பரிசீலனைக்கு உரிய அதிகாரிக்கு அனுப்பச் செய்ய கீழ்மன்றங்களுக்கு இடும் ஆணை ……………………
அ) கட்டளையுறுத்தும் நீதிப்பேராணை
ஆ) ஆவணக் கேட்பு பேராணை
இ) தடையுறுத்தும் நீதிப்பேராணை
ஈ) எதுவுமில்லை
விடை: ஆ) ஆவணக் கேட்பு பேராணை
7.சட்டத்திற்கு புறம்பாக ஒருவர் கைது செய்யப்படுவதில் இருந்து ………….. பாதுகாக்கிறது.
அ) தடையுறுத்தும் நீதிப்பேராணை
ஆ) தகுதிமுறை வினவும் நீதிப்பேராணை
இ) ஆட்கொணர்வு நீதிப்பேராணை
ஈ) கட்டளையுறுத்தும் நீதிப்பேராணை
விடை: இ ஆட்கொணர்வு நீதிப்பேராணை
8.மற்ற அடிப்படை உரிமைகளையும் …………. சில குறிப்பிட்ட ஆணைகளைப் பிறப்பிப்பதின் மூலம் தடை செய்யலாம்.
அ) பிரதமர்
ஆ) குடியரசுத் தலைவர்
இ) ஆளுநர்
ஈ) எதுவுமில்லை
விடை: ஆ) குடியரசுத் தலைவர்
9.இந்திய அரசியலமைப்பின் ……………… இந்தியாவின் மகாசாசனம் என அழைக்கப்படுகிறது.
அ) பகுதி IV
ஆ) பகுதி II
இ) பகுதி III
ஈ) (ஆ) மற்றும் (இ) இரண்டும்
விடை: இ பகுதி
10.1946 ஆம் ஆண்டு 42வது அரசியலமைப்பு சட்டதிருத்தம் சேர்க்கப்பட்ட பொறுப்புகளே குடிமக்க ளின் ……………… ஆகும்.
அ) நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகள்
ஆ) அடிப்படைக் கடமைகள்
இ) அடிப்படை உரிமைகள்
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) அடிப்படைக் கடமைகள்
11.அடிப்படைக் கடமைகளின் புதிய பகுதி ………… என்ற ஒரேயொரு பிரிவைக் கொண்டது.
அ) சட்டதிருத்தம் 21 A
ஆ) சட்டதிருத்தம் 45A
இ) சட்டதிருத்தம் 51A
ஈ) சட்டதிருத்தம் 20 A
விடை: இ சட்டதிருத்தம் 51 A
12.1976ஆம் ஆண்டு 42வது அரசியலமைப்பு சட்டதிருத்தம் மாநிலப்பட்டியலில் இருந்து ……………… துறைகளை பொதுப் பட்டியலுக்கு மாற்றியது.
அ) 6
ஆ) 5
இ) 4
ஈ) 3
விடை: ஆ) 5
13.ஒரு மாநில அரசின் …………….. அதன் சொந்த மாநிலத்தில் மட்டுமே உள்ளது.
அ) நிர்வாக அதிகாரம்
ஆ) நிதி அதிகாரம்
இ) இரண்டும்
ஈ) எதுவுமில்லை
விடை: அ) நிர்வாக அதிகாரம்
14.மறைந்த பிரதமர் இந்திரா காந்தி சேர்காரிய கமிஷனில் நியமிக்கப்பட்ட ஆண்டு …………………
அ) 1938
ஆ) 1983
இ) 1883
ஈ) 1838
விடை: ஆ) 1983
15.அரசியலமைப்பு சட்டப் பகுதி XVII இல் …………….. பற்றி விவரிக்கிறது.
அ) அலுவலக மொழிகள்
ஆ) அங்கீகரிக்கப்பட்ட மொழிகள்
இ) செம்மொழிகள்
ஈ) எதுவுமில்லை
விடை: அ) அலுவலக மொழிகள்
கோடிட்ட இடங்களை நிரப்புக.
1.நிர்ணய சபையில் ……………… உறுப்பினர்கள் இருந்தனர்.
விடை:389
2.………………. இந்திய அரசியலமைப்பின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
விடை:டாக்டர் B.R. அம்பேத்கர்
3.………………. என்பவரால் இந்திய அரசியலமைப்புச் சட்டம் கையெழுத்திடப்பட்டது.
விடை:பிரேம் பெஹாரி நரேன் ரைஜடா
4.முகவுரை ………………. என குறிப்பிடப்பட்டது.
விடை:அரசியலமைப்பின் திறவுகோல்
5.………………… குறிக்கோள் தீர்மானத்தின் அடிப்படையில் இந்திய அரசியலமைப்பு முகவுரை அமைந்துள்ளது.
விடை:ஜவகர்லால் நேருவின்
6.இந்தியா ஒரு …………., …………….., …………….., ………………., ………………… என தமது அரசியலமைப்பின் முகவுரை கூறுகிறது.
விடை:இறையாண்மைமிக்க, சமதர்ம, சமயசார்ப்பற்ற, ஜனநாயக , குடியரசு
7.குடிமகன் என்பதன் பொருள் ………………
விடை:நகர அரசியல் வசிப்பவர்
8.…………….. நடைமுறைக்கு கொண்டு வந்த ஆண்டு 1955 ஆகும்.
விடை:குடியுரிமைச் சட்டம்
9.தற்போது ……………… அடிப்படை உரிமைகள் மட்டுமே உள்ளன.
விடை:ஆறு
10.……………….. அரசியலமைப்பின் பாதுகவாலன் என அழைக்கப்படுகிறது.
விடை:உச்ச நீதிமன்றம்
11.…………. நீதிமன்ற சட்டத்தால் செயல்படுத்த முடியும்.
விடை:அடிப்படை உரிமைகள்
12.…………….. உறவுகளை விவரிக்க இந்திரா காந்தி சர்காரியா கமிஷணாக நியமிக்கப்பட்டார்.
விடை:மத்திய, மாநில
13.மிக முக்கியமான உள்மாநில சபை மேற்கொள்ளப்பட்ட ஆண்டு …………….
விடை: 1990
14.உள்நாட்டு அவசர நிலை …………. ஆண்டுகளில் அறிவிக்கப்படுகிறது.
விடை: மூன்று
15.அதிகபட்சம் அவசர நிலையின் காலம் ………………. ஆண்டுகள் ஆகும்.
விடை: 3
16.அரசியலமைப்பு செயல்பாடு ……………… தலைமையில் செயல்படுத்தப்பட்டது.
விடை: M.N. வெங்கடாசலய்யா
17.டாக்டர் B.R. அம்பேத்கர் கூற்றுப்படி அரசியலமைப்பு ……………… இதயம் மற்றும் ஆன்மா ஆகும்.
விடை: சட்டப்பிரிவு 32
18.இந்திய அரசியலமைப்பு சட்டம் …………. எழுதப்பட்டது.
விடை:இத்தாலிய பாணியில்
19.…………….. செம்மொழி தகுதியை பெற்றுள்ளன.
விடை: 6 மொழிகள்
20.……………… அரசு எல்லா சமயமும் சமம் என பாதுகாக்கிறது.
விடை: சமயசார்பற்ற அரசு
குறுகிய விடை தருக.
1.அரசியலமைப்பின் அவசியம் யாது?
- அனைத்து மக்களாட்சி நாடுகளும் தங்களை நிர்வகித்துக்கொள்ள ஓர் அரசியலமைப்புச் சட்டத்தை பெற்றுள்ளன.
- ஒரு நாட்டின் குடிமக்கள் வாழ விரும்பும் வகையில் சில அடிப்படைக் கொள்கைகளை அரசியலமைப்பு வகுத்துக் கொடுக்கிறது.
2.குடியுரிமைச் சட்டம் பற்றி குறிப்பு வரைக.
- இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தபின்பு, 1955ல் இயற்றப்பட்ட குடியுரிமைச்சட்டம், குடியுரிமை பெறுதல் மற்றும் குடியுரிமை இழத்தல் ஆகியன பற்றி விளக்குகிறது.
- இச்சட்டம் அரசியலமைப்பு சட்ட திருத்தத்தால் எட்டு முறை திருத்தப்பட்டுள்ளது.
3.குடியுரிமைச் சட்டத்தின் படி ஒருவர் எந்தெந்த ஒரு முறையில் குடியுரிமை பெறமுடியும்?
- பிறப்பின் மூலம்
- வம்சாவளி மூலம்
- பதிவின் மூலம்
- இயல்புரிமை மூலம்
- பிரதேச இணைவின் மூலம்
4.குறிப்பு வரைக. அ) ஆட்கொணர்வு நீதிப்பேராணை ஆ) கட்டளையுறுத்தும் நீதிப்பேராணை
அ) ஆட்கொணர்வு நீதிப்பேராணை:
- சட்டத்திற்கு புறம்பாக ஒருவர் கைது செய்யப்படுவதிலிருந்து இது பாதுகாக்கிறது.
ஆ) கட்டளையுறுத்தும் நீதிப்பேராணை:
- மனுதாரர் சட்ட உதவியுடன் தனது மனுதொடர்பான பணியினைச் சம்மந்தப்பட்ட துறையிலிருந்து நிறைவேற்றிக் கொள்ள முடியும்.
5.அடிப்படை உரிமைகளை நிறுத்தி வைத்தல் பற்றி எழுதுக.
- இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 352ன் கீழ் குடியரசுத்தலைவரால் அவசரநிலை அறிவிக்கப்படும் பொழுது, இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 19ன் கீழ் உத்திரவாதம் அளிக்கப்பட்ட சுதந்திரம் தாமாகவே நிறுத்தப்படுகிறது.
- மற்ற அடிப்படை உரிமைகளையும் குடியரசுத்தலைவர் சில குறிப்பிட்ட ஆணைகளைப் பிறப்பிப்பதின் மூலம் தடை செய்யலாம்.
- குடியரசுத்தலைவரின் இந்த ஆணைகள் நாடாளுமன்றத்தால் கட்டாயம் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
6.ஏழாவது அட்டவணையின் அதிகாரப் பகிர்வினைப் பற்றி கூறுக.
- மத்திய பட்டியல்
- மாநில பட்டியல்
- பொதுப்பட்டியல்
- என மூன்று பட்டியல்கள் முறையே 97, 66, 47 என்று அதிகாரத்தை வழங்கியுள்ளது.
விரிவான விடை தருக.
1.அவசரகால ஏற்பாட்டின் பிரிவுகள் என்னென்ன? அவற்றை விவரிக்கவும்.
தேசிய அவசரநிலை (சட்டப்பிரிவு 352):
- போர், வெளிநாட்டினர் ஆக்கிரமிப்பு, அல்லது ஆயுதமேந்திய கிளர்ச்சி அல்லது உடனடி ஆபத்து அல்லது அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், குடியரசுத்தலைவர், அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 352ன் கீழ் அவசரநிலையை அறிவிக்கலாம்.
- போர் அல்லது வெளிநாட்டினர் ஆக்கிரமிப்பின் காரணமாக அவசரநிலை அறிவிக்கப்படும் பொழுது அது ‘வெளிப்புற அவசரநிலை’ எனப்படுகிறது.
- ஆயுதமேந்திய கிளர்ச்சிக் காரணமாக அவசர நிலை அறிவிக்கப்படும் பொழுது அது ‘உள்நாட்டு அவசர நிலை’ எனப்படுகிறது.
- இந்த வகையான அவசரநிலைகள் 1962, 1971, 1975 ஆகிய ஆண்டுகளில் அறிவிக்கப்பட்டன.
மாநில அவசரநிலை (சட்டப்பிரிவு 356):
- ஒரு மாநிலத்தில், மாநில அரசால் கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்படும் பொழுது அரசியலமைப்பின் விதிகளுக்கேற்ப ஆளுநர் அறிக்கை அளிக்கும் பொழுது, குடியரசுத்தலைவர் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 356ன் கீழ் அவசரநிலையை அறிவிக்கலாம்.
- மாநிலமானது, குடியரசுத்தலைவர் சார்பாக ஆளுநரால் ஆளப்படுகிறது.
நிதி சார்ந்த அவசரநிலை (சட்டப்பிரிவு 360):
- இந்த வகையான அவசர நிலையில் மத்திய-மாநில அரசு ஊழியர் எந்த வகுப்பினராயினும் அவர்களது ஊதியம், படிகள் மற்றும் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் உட்பட அனைவரது ஊதியமும் குடியரசுத்தலைவரின் ஓர் ஆணையின் மூலம் குறைக்கப்படும்.
2.அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் பற்றி விவரிக்கவும்.
- ‘அமெண்ட்மெண்ட்’ எனும் சொல் மாற்றம், மேம்படுத்துதல், மற்றும் சிறு மாறுதல் என்பதைக் குறிக்கிறது.
- அரசியலமைப்பின் சட்டம் பகுதி ல் 368வது சட்டப்பிரிவு, அரசியலமைப்பினை சட்ட திருத்தம் செய்வதில் பின்பற்றப்படும் முறைகள் மற்றும் திருத்தம் செய்வதில் நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் பற்றி தெரிவிக்கின்றது.
வழிமுறைகள் :
- நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், அரசியலமைப்புச் சட்டத்திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
- நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு அவையிலும், அவையின் ஒட்டுமொத்த உறுப்பினர்களில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் மற்றும் அவைக்கு வந்து, வாக்களித்தவர்களில் 3ல் 2 பங்குக்கு குறையாமல் மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தால் மட்டுமே, குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட வேண்டும்.
- குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தபின் மசோதா திருத்தப்பட்டச் சொற்களுடன் அரசியலமைப்பில் ஏற்றுக்கொள்ளப்படும்.
- நாடாளுமன்றத்தால் மட்டுமே அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தைக் கொண்டு வரமுடியும்.
- மாநில சட்ட மன்றத்தால் அரசியலமைப்பில் எந்தவொரு சட்டத்திருத்தத்தையும் கொண்டுவர முடியாது.
அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின் வகைகள்:
- அரசியலமைப்பின் 368வது சட்டப்பிரிவு மூன்று வகைகளில் அரசியலமைப்புச் சட்டத்திருத்தங்களைச் செய்ய வழிவகுக்கிறது.
- நாடாளுமன்றத்தின் சாதாரண அறுதிப் பெரும்பான்மை மூலம் திருத்தப்படுதல்.
- நாடாளுமன்றத்தின் சிறப்பு அறுதிப் பெரும்பான்மை மூலம் திருத்தப்படுதல்.