You are currently viewing 10th Science Book Back Answer Chemistry Unit 8

10th Science Book Back Answer Chemistry Unit 8

10th Science Book Back Answer Chemistry Unit 8

10th Standard Science Book back Answers Tamil Medium | Lesson.8 தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு (Periodic Classification of Elements)

10th Science Book Back Answer Chemistry Unit 8. 10th Standard Science Physics Answers, 10th Chemistry Book Back Answers, 10th Biology Book Back Answers Tamil Medium and English Medium. 10th All Subject Text Books. Class 10 Science Samacheer kalvi guide. 10th Tamil Samacheer Kalvi Guide. 10th Science Unit 8. தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு book back answers. 10th Science Samacheer Kalvi Guide TM & EM All Unit Book Back Answers.

10th Science Book Back Answer Tamil Medium

10th Standard Science Book back Answers | Lesson.8 Periodic Classification of Elements | தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

1. ஆவர்த்தன அட்டவணையில் உள்ள தொடர்கள் மற்றும் தொகுதிகள் எண்ணிக்கை ___________

  1. 6,16
  2. 7,17
  3. 8,18
  4. 7,18

விடை ; 7,18

2. நவீன ஆவர்த்தன விதியின் அடிப்படை _________

  1. அணு எண்
  2. அணு நிறை
  3. ஐசோடோப்பின் நிறை
  4. நியுட்ரானின் எண்ணிக்கை

விடை ; அணு எண்

3. ஹேலஜன் குடும்பம் எந்த தொகுதியைச் சேர்ந்தது

  1. 17வது
  2. 15வது
  3. 18வது
  4. 16வது

விடை ; 17வது

4. ________ என்பது ஒப்பிட்டு ஆவர்த்தன பண்பு

  1. அணு ஆரம்
  2. அயனி ஆரம்
  3. எலக்ட்ரான் நாட்டம்
  4. எலக்ட்ரான் கவர்தன்மை

விடை ; எலக்ட்ரான் கவர்தன்மை

5. துருவின் வாய்ப்பாடு _________

  1. FeO x H2O
  2. ×H2O
  3. x H2O
  4. FeO

விடை ; FeO x H2O

6. அலுமினோ வெப்ப வினையில், அலுமினியத்தின் பங்கு

  1. ஆக்ஸிஜனேற்றி
  2. ஆக்ஸிஜன் ஒடுக்கி
  3. ஹைட்ரஜனேற்றி
  4. சல்பர் ஏற்றி

விடை ; ஆக்ஸிஜன் ஒடுக்கி

7. மெல்லிய படலமாக துத்தநாக படிவை, பிற உலோகத்தின் மீது ஏற்படுத்தும் நிகழ்வு _________ எனப்படும்.

  1. வர்ணம் பூசுதல்
  2. நாகமுலாமிடல்
  3. மின்முலாம் பூசுதல்
  4. மெல்லியதாக்கல்

விடை ; நாகமுலாமிடல்

8. கீழ்க்கண்ட மந்த வாயுக்களில், எது வெளிப்புற ஆற்றல் மட்டத்தில் இரண்டு எலக்ட்ரான்களைக் கொண்டது.

  1. He
  2. Ne
  3. Ar
  4. Kr

விடை ; He

9. நியான் வாயுவின் எலக்ட்ரான் நாட்டம் பூஜ்ஜியம் ஆக காரணம் _________

  1. நியுட்ரானின் உறுதியான வரிசை அமைப்பு
  2. எலக்ட்ரானின் உறுதியான கட்டமைப்பு
  3. குறைந்த உருவளவு
  4. அதிக அடர்த்தி

விடை ; எலக்ட்ரானின் உறுதியான கட்டமைப்பு

10. இரசக்கலவை உருவாக்கலில் தேவைப்படும் முக்கியமான உலோகம் _________

  1. Ag
  2. Hg
  3. Mg
  4. Al

விடை ; Hg

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

  1. ஒரு மூலக்கூறில் இரு பிணைப்புற்ற அணுக்கட்டு இடையில் உள்ள எலக்ட்ரான் கவர்ஆற்றல் வித்தியாசம் 1.7 க்கு மேல் எனில், பிணைப்பின் இயல்பு __________ ஆகும்.விடை ; அயணிப் பிணைப்பு
  2. நவீன ஆவர்த்தன அட்டவணையின் அடிப்படை __________ ஆகும். விடை ; அணு எண்
  3. தனிம வரிசை அட்டவணையில் மிக நீள் தொடர் __________ ஆகும்.

விடை ; 6 மற்றும் 7

  1. Cl2 மூலக்கூறில் உள்ள ‘Cl’ அணுக்களுக்கு இடையில் உள்ள தூரம் 1.98 A0 எனில் ‘Cl’ அணுவின் ஆரம் __________ விடை ; 0.99Ao
  2. A– , A+ மற்றும் A இவற்றில் மிகச்சிறய உருவ அளவு உள்ளது __________ விடை ; A+
  3. நவீன ஆவர்த்தன அட்டவணையை உருவாக்கிய விஞ்ஞானியின் பெயர் __________விடை ; ஹென்றி மோஸ்லே
  4. அயனி ஆரம், தொடரில் __________ (குறைகின்றது, அதிகரிக்கின்றது)

விடை ; குறைகின்றது

  1. __________ மற்றும் __________ ஆனது உள் இடைத் தனிமங்கள் எனப்படும்.

விடை ; லாந்தனைடுகள் மற்றும் ஆக்டினைடுகள்

  1. அலுமினியத்தின் முக்கிய தாது __________ஆகும். விடை ; பாக்சைட்
  2. துருவின் வேதிப்பெயர் __________ ஆகும். விடை ; நீரேறிய ஃபெரிக் ஆக்சைடு

III. பொருத்துக.

  1. முலாம் பூசுதல் மந்த வாயுக்கள்
  2. காற்றில்லா வறுத்தல் துத்தநாகம் பூச்சு
  3. ஆக்ஸிஜனேற்ற ஒடுக்க வினை சில்வர் – டின் ரசக்கலவை
  4. பற்குழி அடைத்தல் அலுமினோ வெப்ப ஒடுக்க வினை
  5. 18 ஆம் தொகுதி தனிமங்கள் காற்றிலா சூழ்நிலையில் சூடேற்றும் நிகழ்வு

விடை ; 1 – B, 2 E, 3 – D, 4 – C, 5 – A

IV.  சரியா? தவறா? (தவறு எனில் கூற்றினை திருத்துக)

  1. மோஸ்லேவின் தனிம வரிசை அட்டவணை அணு நிறையைச் சார்ந்தது. ( தவறு )
  • மோஸ்லேவின் தனிம வரிசை அட்டவணை அணு எண்ணைச் சார்ந்தது
  1. இடப்புறத்திலிருந்து வலப்புறம் செல்கையில், அயனி ஆரமானது, தொடரில் அதிகரிக்கும். ( தவறு )
  • இடப்புறத்திலிருந்து வலப்புறம் செல்கையில், அயனி ஆரமானது, தொடரில் குறையும்.
  1. எல்லா தாதுக்களும் கனிமங்களே, ஆனால் எல்லா கனிமங்களும் தாதுக்கள் ஆகா. ( சரி )
  2. அலுமினியக்கம்பிகள், மின்கம்பிகள் உருவாக்க பயன்படுவதன் காரணம் அதன், வெள்ளியைப் போன்ற நிறமே. ( தவறு )
  • அலுமினியக்கம்பிகள், மின்கம்பிகள் உருவாக்க பயன்படுவதன் காரணம் அதன், மின் கடத்தும் திறன் அதிகம்.
  1. உலோகக் கலவை என்பது உலோகங்களின் பல படித்தான கலவை ஆகும். ( தவறு )
  • உலோகக் கலவை என்பது உலோகங்களின் ஒரு படித்தான கலவை ஆகும்.

V.  பின்வரும் வினாக்களில் கூற்றும் அதனையடுத்து காரணமும் கொடுக்கப் பட்டுள்ளன. பின்வருவனவற்றுள் எது சரியான தெரிவோ அதனைத் தெரிவு செய்க. பின்வரும் வினாக்களை, கீழ்கண்ட குறிப்புக்ள மூலம் விடையளிக்கவும்

  1. கூற்றும், காரணமும் சரியானது. காரணம், கூற்றை நன்கு விளக்குகிறது.
  2. கூற்று சரி, காரணம் தவறு

iii. கூற்று தவறு, காரணம் சரி

  1. கூற்றும் காரணமும் சரி, ஆனால் காரணம் கூற்றை விவரிக்கவில்லை.
  2. கூற்று : HF மூலக்கூறில் உள்ள பிணைப்பு அயனிப்பிணைப்பு

காரணம் : ‘H’ க்கும் ‘F’ க்கும் இடையே உள்ள எலக்ட்ரான் கவர் ஆற்றல் வித்தியாசம் 1.9

  • கூற்றும், காரணமும் சரியானது. காரணம், கூற்றை நன்கு விளக்குகிறது.
  1. 2. கூற்று : மெக்னீசியத்தை இரும்பின் மீது பூசுவதால், துருப்பிடித்தலிருந்து பாதுகாக்கப்படுகிறது.

காரணம் : மெக்னீசியம், இரும்பைவிட வினைபுரியும் தன்மைமிக்கது.

  • கூற்று தவறு, காரணம் சரி
  1. கூற்று : சுத்தப்படுத்தப்படாத, தாமிரபாத்திரத்தில் பச்சை படலம் உருவாகிறது.

காரணம் : தாமிரம், காரங்களால் பாதிக்கப்படுவதில்லை.

  • கூற்றும் காரணமும் சரி, ஆனால் காரணம் கூற்றை விவரிக்கவில்லை.

VI. சுருக்கமாக விடையளி.

1. A என்பது செம்பழுப்பு உலோகம். இது ‘O2’ உடன் வினையுற்று < 1370 K வெப்பநிலையில், B. என்ற கருமையான சேர்மத்தை உருவாக்கும். > 1370 K வெப்பநிலையில் A யானது சிவப்பு நிற C ஐ உருவாக்கும் எனில் A,B,C என்னவென்று வினைகளுடன் விளக்குக.

 

2Cu + O2

> 1370 K

 ———————–>

 

2 CuO

 

 

4Cu + O2

> 1370 K

 ———————–>

 

2 Cu2O

  • A என்பது தாமிரம் (Cu)
  • B என்பது குப்ரிக் ஆக்சைடு (Cuo) (கருப்பு நிறம்)
  • C என்பது குப்ரஸ் ஆக்சைடு (Cu2O) (சிவப்பு நிறம்)

2. A என்பது வெள்ளியின் வெண்மை கொண்ட உலோகம். A ஆனது ‘O2 ’ உடன் 800° C யில் வினைபுரிந்து B யை உருவாக்கும். A யின் உலோகக் கலவை விமானத்தின் பாகங்கள் செய்யப்பயன்படும். A மற்றும் B என்ன?

4Al + 3O2 → 2 Al2O3

  • A என்பது அலுமினியம் (Al)
  • B என்பது அலுமினியம் ஆக்சைடு (Al2O3)

3. துரு என்பது என்ன? துரு உருவாகுவதன் சமன்பாட்டை தருக.

துரு என்பது நீரேறிய ஃபெரிக் ஆக்சைடு ஆகும். இதன் வாய்ப்பாடு Fe2O3. x H2O இரும்பின் புறப்பரப்பில் ஈரக்காற்றுடன் வினைபுரிந்து செம்பழுப்பு நிற நீரேறிய ஃபெரிக் ஆக்சைடை உருவாக்குவது. இது சேர்மம் துரு எனப்படும்.

4Fe + 3O2 + xH2O2 → 2Fe2O3. x H2O (துரு)

4. இரும்பு துருபிடித்தலுக்கான இரு காரணங்களை தருக.

  • வளிமண்டலத்தில் உள்ள ஈரக்காற்று
  • வளிமண்டலத்தில் உள்ள ஈரப்பதம்
  • இரும்பும், வளிமண்டல ஈரப்தமும் நேரடித் தொடர்பு

VII. விரிவாக விடையளி.

1. அ.  பாக்கைட் தாதுவை தூய்மையாக்கும் போது அதனுடன் சோடியம் ஹைட்ராக்சைடு காரத்தைசேர்ப்பதன் காரணம் என்ன?

பாக்சைட் தாதுவினை நன்கு தூளாக்கி சலவை சோடாவுடன் 150oC வெப்பநிலையில் குறிப்பிட்ட அழுத்தத்தில் வினைப்படுத்தும் போது சோடியம் மெட்டா அலுமினேட் உருவாகிறது. இந்த சோடியம் மெட்டா அலுமினேட் உருவாக்கத்திற்கு சோடியம் ஹைட்ராக்சைடு சேர்க்கப்படுகிறது.

ஆ.  அலுமினா மற்றும், கிரையோலைட்டுடன், இன்னும் ஒரு பொருள், மின்பகுளியுடன் சேர்க்கப்பட்டு அலுமினியம் பிரிக்க உதவுகிறது. அது என்ன? அதற்கான காரணம் என்ன?

அலுமினா மற்றும் கிரையோலைட்டுடன் சேர்க்கப்படுவது ஃப்ளுர்ஸ்பார்.

இது மின்பகுளியின் உருக்கு வெப்பநிலையை குறைக்க பயன்படுகிறது.

2. ஒரு உலோகம் A யின் எலக்ட்ரான் ஆற்றல் மட்டம் 2,8,18,1 ஆகும். A ஆனது ஈரக்காற்றுடன் வினைபுரிந்து பச்சை படலத்தை உருவாக்கும். A அடர் H2SO4 உடன் வினைபுரிந்து C மற்றும் D ஐ உருவாக்கும் D யானது வாயுநிலை சேர்மம் எனில் A,B,C மற்றும் D எவை?

 

தாமிரம் Co2 மற்றும் ஈரப்பதத்துடன் வினைபுரிந்து பச்சை நிற சல்பர் கார்பேனட் படலத்தை உருவாக்குகிறது.

2Cu + O2 + Co2+ H2O → CuCO3. Cu(OH)2 (தாமிரம் கார்பனேட்)

மேலும் காற்றில்லா சூழ்நிலையில் H2SO4 உடன் வினைபுரிவதில்லை. ஆனால் காற்றின் முன்னிலையில் H2SO4 கரைகிறது

எனவே

  • A என்பது தாமிரம் Cu
  • B என்பது தாமிரக் கார்பனேட் Cu(OH)2
  • C என்பது தாமிர சல்பேட் CuSO4
  • D என்பது கந்தக ஆக்சைடு SO2

3. ஊது உலையில் உருக்கிப்பிரித்தலை விவரி.

வறுக்கப்பட்ட தாது, கல்கரி, சுண்ணாம்புக்கல் இவற்றை 8:4:1 என்ற விகிதத்தில் எடுத்துக் கொண்டு, உலையின் மேலுள்ள கிண்ணக்கூம்பு அமைப்பு வழியாக, செலுத்தப்படுகிறது. உலையில் மூன்று முக்கிய பகுதிகள் உள்ளன.

கீழ்ப்பகுதி (எரிநிலை மண்டலம்)

இந்தப் பகுதியின் வெப்பநிலை 15000 C ஆகும் வெப்பக்காற்றுடன் தாதுக்கலவை சேரும் போது, ஆக்ஸிஜனுடன் எரிந்து CO2 வாக மாறுகிறது.

C + O2 1500oC

———————->

Δ

CO2 + வெப்ப ஆற்றல்

ஊது வெப்ப உலை

இவ்வினையிலிருந்து வெப்ப ஆற்றல் வெளியாவதால் வெப்ப உமிழ்வினை எனப்படும்.

நடுப்பகுதி அல்லது உருக்கு மண்டலம்

இப்பகுதி 1000oC வெப்பநிலையில் உள்ளது. இங்கு CO2 ஆனது CO ஆக ஓடுக்கமடைகிறது.

CO2 + C 1000oC

———————->

Δ

2CO – வெப்ப ஆற்றல்

சுண்ணாம்புக்கல் சிதைந்து, கால்சியம் ஆக்சைடையும், CO2வையும் தரும்.

CaCO3 1000oC

———————->

Δ

CaO + CO2 – வெப்ப ஆற்றல்

 

மேற்கண்ட இருவினைகளில், வெப்பம் உட்கவரப்படுவதால் வெப்ப கொள்வினைகள் ஆகும். கால்சியம் ஆக்சைடு மணலுடன் சேர்ந்து கால்சியம் சிலிகேட் எனும் கசடாகிறது.

CaO + SiO2  ——–> CaSiO3

மேற்பகுதி (ஒடுக்கும் மண்டலம் )

இப்பகுதியில் 400oC வெப்பநிலையில் ஃபெரிக் ஆக்சைடு, கார்பன் மோனக்சைடு மூலம் இரும்பாக ஒடுக்கம் அடைகிறது.

Fe2O3 + 3CO 400oC

———————->

 

2Fe + 3CO2 – ↑

 

கசடை நீக்கிய பிறகு, உருகிய இரும்பானது, உலையின் அடியில் சேகரிக்கப்படுகிறது. இவ்விரும்பு மீண்டும் உருக்கப்பட்டு விதவித அச்சுக்களில் வார்க்கப்படுவதால், இது வார்ப்பிரும்பு எனப்படும்.

VIII. உயர் சிந்தனைக்கான வினாக்கள்.

1. A என்ற உலோகம் 3 ஆம் தொடரையும் 13 ம் தொகுதியையும் சார்ந்தது. செஞ்சூடெறிய A நீராவியுடன் சேர்ந்து B யை உருவாக்கும். உலோகம் A யானது NaOH உடன் சேர்ந்து C ஐ உருவாக்கும். எனில் A,B,C எவை எவை என வினகளுடன் எழுதுக.

செஞ்சூடேறிய அலுமினியம் நீராவியுடன் வினைபுரிந்து அலுமினியம் ஆக்சைடையும் ஹைட்ரஜனையும் உருவாக்குகிறது.

2Al     +     3H2O       → Al2O3 + 3H2 ↑

(நீராவி)                                                  (தாமிரம் கார்பனேட்)

அலுமினியம், சோடியம் ஹைட்ராக்சைடுடன் வினைபுரிந்து அலுமினேட்டுகளை உருவாக்குகிறது

2Al + 2NaOH + 2H2O  → 2NaAlO2 + 3H

(சோடியம் மெட்டா அலுமினேட்)

அலுமினியம், சோடியம் ஹைட்ராக்சைடுடன் வினைபுரிந்து அலுமினேட்டுகளை உருவாக்குகிறது

2Al + 2NaOH + 2H2O  → 2NaAlO2 + 3H2 ↑

(சோடியம் மெட்டா அலுமினேட்)

  • A என்பது அலுமினியம் Al
  • B என்பது அலுமினியம் ஆக்சைடு Al2O3
  • C என்பது சோடியம் மெட்டா அலுமினேட் NaAlO2

2. எந்த அமிலம், அலுமினிய உலோகத்தை செயல்படா நிலைக்கு உட்படுத்தும். ஏன்?

நீர்த்த மற்றும் அடர் நைட்ரிக் அமிலம் அலுமினியத்தை செயல்படாத நிலையில் வைத்து விடும். அலுமினியத்தின் மேல் பகுதியில் ஆக்சைடு படலம் உருவாவதால் அதன் வினைபடும் திறன் தடுக்கப்படுகிறது.

3. a. HF மூலக்கூறில் உள்ள H மற்றும் F க்கு இடையில் உள்ள பிணைப்பு எது?

அயனிப் பிணைப்பு

  1. இப்பிணைப்பை அறிய உதவும் ஆவர்த்தன பண்பு எது?

எலக்ட்ரான் கவர்தன்மை

  1. இப்பண்பு தொடரிலும், தொகுதியிலும் எவ்வாறு வேறுபடுகிறது?

 

தொடரில் இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கமாக செல்லும்போது எலக்ட்ரான் கவர்தன்மை அதிகரிக்கும். ஏனெனில் அணுக்கருவின் சுமை அதிகரிக்கும் போது எலக்ட்ரான் கவர்ச்சி விசை அதிகமாகும். தொகுதியில் மேலிருந்து கீழாக இறங்குகையில் எலக்ட்ரான் கவர்தன்மை குறைகிறது. ஏனெனில் ஆற்றல் மட்டத்தின் எண்ணிக்கை அதிமாகிறது.

Leave a Reply