10th Science Book Back Answer Chemistry Unit 7
10th Standard Science Book back Answers Tamil Medium | Lesson.7 அணுக்களும் மூலக்கூறுகளும் (Atoms and Molecules)
10th Science Book Back Answer Chemistry Unit 7. 10th Standard Science Physics Answers, 10th Chemistry Book Back Answers, 10th Biology Book Back Answers Tamil Medium and English Medium. 10th All Subject Text Books. Class 10 Science Samacheer kalvi guide. 10th Tamil Samacheer Kalvi Guide. 10th Science Unit 7. அணுக்களும் மூலக்கூறுகளும் book back answers. 10th Science Samacheer Kalvi Guide TM & EM All Unit Book Back Answers.
10th Standard Science Book back Answers | Lesson.7 Atoms and Molecules | அணுக்களும் மூலக்கூறுகளும்
I. சரியான விடையைத் தேர்ந்தெடு.
1. கீழ்கண்டவற்றுள் எது குறைந்த நிறையைக் கொண்டது
- 6. 023 × 1023 ஹீலியம் அணுக்கள்
- 1 ஹீலியம் அணு
- 2 கி ஹீலியம்
- 1 மோல் ஹீலியம் அணு.
விடை ; 1 ஹீலியம் அணு
2. கீழ்கண்டவற்றுள் எது மூவணு மூலக்கூறு?
- குளுக்கோஸ்
- ஹீலியம்
- கார்பன் டை ஆக்சைடு
- ஹைட்ரஜன்
விடை ; கார்பன் டை ஆக்சைடு
3. திட்ட வெப்ப அழுத்த நிலையில் 4.4 கி CO2 ன் பருமன்
- 4 லிட்டர்
- 24 லிட்டர்
- 24 லிட்டர்
- 1 லிட்டர்
விடை ; 2.24 லிட்டர்
4. 1 மோல் நைட்ரஜன் அணுவின் நிறை
- 28 amu
- 14 amu
- 28 கி
- 14 கி
விடை ; 28 கி
5. 1 amu என்பது
a.C -12 ன் அணுநிறை
b.ஹைட்ரஜனின் அணுநிறை
c.ஒரு C-12 ன் அணுநிறையில் 1/12 பங்கின் நிறை
d.O – 16 ன் அணு நிறை.
விடை ; ஒரு C-12 ன் அணுநிறையில் 1/12 பங்கின் நிறை
6. கீழ்கண்டவற்றுள் தவறான கூற்று எது.
- 12 கிராம் C -12 வானது அவகாட்ரோ எண்ணிக்கையிலான அணுக்களைக் கொண்டது.
- ஒரு மோல் ஆக்சிஜன் வாயுவானது அவகாட்ரோ எண்ணிக்கையிலான மூலக்கூறுகளைக் கொண்டது.
- ஒரு மோல் ஹைட்ரஜன் வாயுவானது அவகாட்ரோ எண்ணிக்கையிலான அணுக்களைக் கொண்டது.
- ஒரு மோல் எலக்ட்ரான் என்பது023 × 1023 எலக்ட்ரான்களைக் குறிக்கிறது.
விடை ; 12 கிராம் C -12 வானது அவகாட்ரோ எண்ணிக்கையிலான அணுக்களைக் கொண்டது.
7. திட்ட வெப்ப அழுத்த நிலையில் 1 மோல் ஈரணு
மூலக்கூறு வாயுவின் பருமன்
- 2 லிட்டர்
- 6 லிட்டர்
- 4 லிட்டர்
- 8 லிட்டர்
விடை ; 22.4 லிட்டர்
8. 20Ca40 தனிமத்தின் உட்கருவில்
- 20 புரோட்டான் 40 நியூட்ரான்
- 20 புரோட்டான் 20 நியூட்ரான்
- 20 புரோட்டான் 40 எலக்ட்ரான்
- 20 புரோட்டான் 20 எலக்ட்ரான்
விடை ; 20 புரோட்டான் 20 நியூட்ரான்
9. ஆக்சிஜனின் கிராம் மூலக்கூறு நிறை
- 16 கி.
- 18 கி.
- 32 கி.
- 17 கி.
விடை ; 32 கி
10. 1 மோல் எந்த ஒரு பொருளும் ___________
மூலக்கூறுகளைக் கொண்டிருக்கும்.
- 023 × 1023
- 023 x 10-23
- 0115 x 1023
- 046 x 1023
விடை ; 6.023 × 1023
II. கோடிட்ட இடங்களை நிரப்பு.
1. இரு வேறு தனிமங்களின் அணுக்கள் __________ நிறை எண்ணையும் _______________ அணு எண்ணையும் கொண்டிருந்தால் அவை ஐசோபார்கள் எனப்படும். விடை ; ஒரே, வேறுபட்ட
2. ஒரே __________ எண்ணிக்கையை பெற்றுள்ள வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் ஐசோடோன்கள் எனப்படும். விடை ; நியூட்ரான்கள்
3. ஒரு தனிமத்தின் அணுக்களை மற்றொரு தனிமத்தின் அணுக்களாக __________ முறையில் மாற்றலாம். விடை ; செயற்கை மாற்று தனிமமாக்கல்
4. புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் கூடுதல் அந்த அணுவின் _____________ எனப்படும். விடை ; நிறை எண்
5. ஒப்பு அணுநிறை என்பது ____________ எனவும் அழைக்கப்படுகிறது.
விடை ; திட்ட அணு எண்1
6. ஹைட்ரஜனின் சராசரி அணுநிறை = _________ . விடை ; 1.008 amu
7. ஒரு மூலக்கூறானது ஒரே தனிமத்தின் அணுக்களால் உருவாக்கப்பட்டால் அவை __________ எனப்படும் விடை ; ஒத்த அணு மூலக்கூறு
8. ஒரு மூலக்கூறில் உள்ள அணுக்களின் எண்ணிக்கையே அம்மூலக்கூறின் __________ ஆகும். விடை ; அணுக்கட்டு எண்
9. திட்ட வெப்ப அழுத்த நிலையில் __________ மி.லி இடத்தை அடைத்துக் கொள்ளக் கூடிய வாயு 1 மோல் எனப்படும். விடை ; 22,400
10 பாஸ்பரஸின் அணுக்கட்டு எண் = ___________ விடை ; 4
III. பொருத்துக.
- 8 கி O2 – 4 மோல்கள்
- 4 கி H2 – 0.25 மோல்கள்
- 52 கி He – 2 மோல்கள்
- 112 கி N2 – 0.5 மோல்கள்
- 35.5 கி Cl2 – 13 மோல்கள்
விடை ; 1 – D, 2 – A, 3 – B, 4 – E, 5 – E
IV. சரியா? தவறா? (தவறு எனில் கூற்றினை திருத்துக)
- இரு தனிமங்கள் இணைந்து ஒன்றுக்கு மேற்பட்ட சேர்மங்களை உருவாக்கும். ( சரி )
- மந்த வாயுக்கள் அனைத்தும் ஈரணு மூலக்கூறுகள் ஆகும். ( தவறு )
- மந்த வாயுக்கள் அனைத்தும் ஓரணு மூலக்கூறுகள் ஆகும்.
- தனிமங்களின் கிராம் அணு நிறைக்கு அலகு இல்லை. ( தவறு )
- தனிமங்களின் ஒப்பு அணு நிறைக்கு அலகு இல்லை.
- 1 மோல் தங்கம் மற்றும் 1 மோல் வெள்ளி ஆகியவை ஒரே எண்ணிக்கையிலான அணுக்களைக் கொண்டிருக்கும். ( சரி )
- CO2-ன் மூலக்கூறு நிறை 42 கி. ( தவறு )
- CO2-ன் மூலக்கூறு நிறை 44 கி.
V. பின்வரும் வினாக்களில் கூற்றும் அதனையடுத்து காரணமும் கொடுக்கப் பட்டுள்ளன. பின்வருவனவற்றுள் எது சரியான தெரிவோ அதனைத் தெரிவு செய்க.
அ. A மற்றும் R சரி R, A ஐ விளக்குகிறது.
ஆ. A சரி R தவறு .
இ. A தவறு R சரி
ஈ. A மற்றும் R சரி R, A க்கான் சரியான விளக்கம் அல்ல.
- கூற்று A. அலுமினியத்தின் ஒப்பு அணுநிறை 27.
காரணம் R. ஒரு அலுமினியம் அணுவின் நிறையானது 1/12 பங்கு கார்பன்–12-ன் நிறையைவிட 27 மடங்கு அதிகம்.
- அ. A மற்றும் R சரி R, A ஐ விளக்குகிறது.
- கூற்று A. குளோரினின் ஒப்பு மூலக்கூறுநிறை 35.5 amu
காரணம் R. குளோரினின் ஐசோடோப்புகள் இயற்கையில் சம அளவில் கிடைப்பதில்லை.
- அ. A மற்றும் R சரி R, A ஐ விளக்குகிறது.
VI. சுருக்கமாக விடையளி
1. ஒப்பு அணுநிறை – வரையறு
ஒரு தனிமத்தின் ஒப்பு அணுநிறை என்பது அத்தனிமத்தின் ஐசோடோப்புகளின் சராசரி அணுநிறைக்கும் C-12 அணுவின் நிறையில் 1/12 பங்கின் நிறைக்கும் உள்ள விகிதமாகும்.
2. ஆக்சிஜனின் பல்வேறு ஐசோடோப்புகளையும் அதன் சதவீத பரவலையும் குறிப்பிடுக.
8O16 – 99.757 % 8O17 – 0.038 % 8O18 – 0.205 %
3. அணுக்கட்டு எண் – வரையறு.
ஒரு மூலக்கூறில் உள்ள அணுக்களின் எண்ணிக்கையே அம்மூலக்கூறின் அணுக்கட்டு எண் ஆகும்.
அணுக்கட்டு எண் = மூலக்கூறு நிறை / அணு நிறை
4. வேறுபட்ட ஈரணு மூலக்கூறுகளுக்கு 2 எடுத்துக்காட்டு கொடு.
வேறுபட்ட ஈரணு மூலக்கூறுகள் = HCl, CaO
5. வாயுவின் மோலார் பருமன் என்றால் என்ன?
திடட வெப்ப அழுத்த நிலையில் (S.T.P) ஒரு மோல் வாயுவானது 22.4 லிட்டர் அல்லது 22400 மிலி பருமனை ஆக்கிரமிக்கும். இது மோலார் பருமன் எனவும் அழைக்கப்படும்.
6. அம்மோனியாவில் உள்ள நைட்ரஜனின் சதவீத இயைபைக் கண்டறிக.
அம்மோனியாவின் (NH3) மூலக்கூறு நிறை | = N x 1 + H x 3 |
= 14 x 1 + 1 x 3 = 14 +3 | |
அம்மோனியாவின் மூலக்கூறு நிறை | = 17 |
அம்மோனியாவின் நைட்ரஜனின் சதவீத இயைபு | = அம்மோனியாவில் நைட்ரஜனின் நிறை / அம்மோனியாவின் மூலக்கூறு நிறை x 100 |
= 14 / 17 x 100 = 1400 / 17 | |
அம்மோனியாவின் நைட்ரஜனின் சதவீத இயைபு | = 82.35 % |
VII. விரிவாக விடையளி.
1. 0.18 கி நீர் துளியில் உள்ள நீர் மூலக்கூறுகளின் எண்ணிக்கையை கணக்கிடு.
கிராம் மூலக்கூறு நிறை H2O = H x 2 + 0 x 1 = 1 x 2 + 16 +1 = 2 + 16 = 18கி |
|
மோல்களின் எண்ணிக்கை | = அவகாட்ரோ எண் x கொடுக்கப்பட் நிறை / கிராம் மூலக்கூறு நிறை |
= 6.023 x 1023 x 0.18 / 18 | |
= 6.023 x 1023 x 0.01 | |
= 6.023 x 1021 | |
0.18 கி நீரிலுள்ள மூலக்கூறுகளின் எண்ணிக்கை = 6.023 x 1023 |
2. N2 + 3 H2 2 NH3 (N = 14, H = 1)
1 மோல் நைட்ரஜன் = _________ கி + 3 மோல் ஹைட்ரஜன் = _________ கி → 2 மோல் அம்மோனியா = _________ கி
ஒரு மோல் நைட்ரஜனின் நிறை N2 | = 2 x N = 2 x 14 = 28கி |
3 மோல் ஹைட்ரஜனின் நிறை H2 | = 3(2 x H) = 3(2 x 1) = 6கி |
2 மோல் அம்மோனியாவின் நிறை NH3 | = 2 (N x 1 + H x 3) |
= 2 (14 x 1 + 1 x 3) | |
= 2 (14+3) = 34 கி | |
ஒரு மோல் நைட்ரஜன் = 28கி
↓ 3 மோல் ஹைட்ரஜன் = 6கி |
= 2 மோல் அம்மோனியா 34 கி |
3. மோல்களின் எண்ணிக்கையைக் கண்டறிக.
அ. 27 கி அலுமினியம்.
மோல்களின் எண்ணிக்கை | = கொடுக்கப்பட்ட நிறை/அணு நிறை |
= 27/27 = 1 | |
27 கி அலுமினியத்தின் மோல்களின் எண்ணிக்கை = 1 |
ஆ. 1.51 × 1023 மூலக்கூறு NH4Cl
மோல்களின் எண்ணிக்கை | மூலக்கூறுகளின் எண்ணிக்கை/6.023 x 1023 |
1.15 x 1023/6.023 x 1023 | |
1.15 /6.023 = 0.25 | |
1.51 × 1023 மூலக்கூறுகளின் மோல்களின் எண்ணிக்கை =0.25 |
4. நவீன அணுக்கொள்கையின் கோட்பாடுகளை எழுதுக.
- அணுஎன்பது பிளக்கக்கூடிய துகள் (எலக்ட்ரான், புரோட்டான்).
- ஒரே தனிமத்தின் அணுக்கள் வெவ்வேறு அணு நிறைகளைப் பெற்றுள்ளன. (ஐசோடோப்புகள்)
- வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் ஒரே அணுநிறைகளைப் பெற்றுள்ளன. (ஐசோபார்கள்)
- அணுவை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது. ஒரு தனிமத்தின் அணுக்களை மற்றொரு தனிமத்தின் அணுக்களாக மாற்ற முடியும்.
- அணுவானது எளிய முழு எண்களின் விகிதத்தில்
- இருக்க வேண்டிய அவசியமில்லை. (எ.கா. குளுக்கோஸ் C6H12O6
- அணு என்பது வேதிவினையில் ஈடுபடும் மிகச்சிறிய துகள்
- ஒரு அணுவின் நிறையிலிருந்து அதன் ஆற்றலை கணக்கிட முடியும். (E = mc2)
5. ஒப்பு மூலக்கூறு நிறைக்கும் ஆவி அடர்த்திக்கும் உள்ள தொடர்பினை வருவி.
- ஒப்பு மூலக்கூறு நிறை (ஹைட்ரஜன் அளவீடு):
ஒரு வாயு அல்லது ஆவியின் ஒப்பு மூலக்கூறு நிறை என்பது ஒரு மூலக்கூறு வாயு அல்லது ஆவியின் நிறைக்கும் ஒரு ஹைட்ரஜன் அணுவின் நிறைக்கும் இடையே உள்ள விகிதமாகும்.
- ஆவி அடர்த்தி (V.D.):
மாறா வெப்ப மற்றும் அழுத்த நிலையில் ஒரு குறிப்பிட்ட பருமனுள்ள வாயு அல்லது ஆவியின் நிறைக்கும் அதே பருமனுள்ள ஹைட்ரஜன் அணுவின் நிறைக்கும் உள்ள விகிதமே ஆவி அடர்த்தி எனப்படும்.
ஆவி அடர்த்தி (V.D.) | = தி. வெ. அ. நிலையில் குறிப்பிட்ட பருமனுள்ள வாயு (அ) ஆவியின் நிறை / அதே பருமனுள்ள ஹைட்ரஜன் அணுவின் நிறை |
அவகாட்ரோ விதிப்படி சமபருமனுள்ள வாயுக்கள் அனைத்தம் சம அளவு எண்ணிக்கையிலான மூலக்கூறுகளைக் கொண்டிருக்கும்.
ஒரு பருமனுள்ள வாயுவில் ‘n’ எண்ணிக்கையிலான மூலக்கூறுகள் உள்ளதாகக் கொண்டால்,
ஆவி அடர்த்தி (தி.வெ.அ) = | ‘n’ மூலக்கூறு வாயு (அ) ஆவியின் நிறை/‘n’ மூலக்கூறு ஹைட்ரஜனின் நிறை |
‘n’ = 1 எனக் கொண்டால்,
ஆவி அடர்த்தி = | = 1 மூலக்கூறு வாயு (அ) ஆவியின் நிறை / 1 மூலக்கூறு ஹைட்ரஜனின் நிறை |
ஹைட்ரஜன், ஈரணு மூலக்கூறு ஆதலால்
ஆவி அடர்த்தி = | 1 மூலக்கூறு வாயு (அ) ஆவியின் நிறை / 2 ஹைட்ரஜன் அணுக்களின் நிறை |
நாம் ஆவி அடர்த்தியை மூலக்கூறு நிறையுடன் கீழ்கண்டவாறு தொடர்பு படுத்தலாம்.
ஆவி அடர்த்தி = | 1 மூலக்கூறு வாயு (அ) ஆவியின் நிறை/2 × 1 ஹைட்ரஜன் அணுவின் நிறை …………….. (1) |
ஒப்பு மூலக்கூறு நிறை = | 1 மூலக்கூறு வாயு (அ) ஆவியின் நிறை /1 ஹைட்ரஜன் அணுவின் நிறை …………….. (2) |
சமன்பாடு (2)-ஐ (1)-இல் பதிலியிட
ஆவி அடர்த்தி | = ஒப்பு மூலக்கூறு நிறை/2 |
குறுக்கே பெருக்க
2 × ஆவி அடர்த்தி = | வாயு (அ) ஆவியின் ஒப்பு மூலக்கூறு நிறை |
(அ) | |
ஒப்பு மூலக்கூறு நிறை = | 2 × ஆவி அடர்த்தி |