10th Science Book Back Answer Biology Unit 22
10th Standard Science Book back Answers Tamil Medium | Lesson.22 Environmental Management (சுற்றுச்சூழல் மேலாண்மை)
10th Science Book Back Answer Biology Unit 22. 10th Standard Science Physics Answers, 10th Chemistry Book Back Answers, 10th Biology Book Back Answers Tamil Medium and English Medium. 10th All Subject Text Books. Class 10 Science Samacheer kalvi guide. 10th Tamil Samacheer Kalvi Guide. 10th Science Unit 22. சுற்றுச்சூழல் மேலாண்மை Book back answers. 10th Science Samacheer Kalvi Guide TM & EM All Unit Book Back Answers.
10th Standard Science Book back Answers | Lesson.22 Environmental Management ( சுற்றுச்சூழல் மேலாண்மை )
I. கோடிட்ட இடங்களை நிரப்பு.
- காடுகள் அழிப்பினால் மழை பொழிவு _______________ . விடை ; குறையும்
- மண்ணின் மேல் அடுக்கு மண் துகள்கள் அகற்றப்படுவது _______________ . விடை ; மண்ணரிப்பு
- சிப்கோ இயக்கம் _______________ எதிராக ஆரம்பிக்கப்பட்டது. விடை ; காடுகளை அழிப்பதற்கு
- _______________ என்பது தமிழ்நாட்டிலுள்ள உயிர்க்கோள பாதுகாப்பு மையமாகும். விடை ; நீலகிரி
- ஓத ஆற்றல் _______________ வகை ஆற்றலாகும். விடை ; இயக்க ஆற்றல் மின் ஆற்றலாக மாறும்
- கரி, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவை _____________ எரிபொருட்கள் ஆகும். விடை ; புகை வடிவ
- மின்சார உற்பத்திக்கு மிகவும் அதிக அளவில் பயன்படுத்தப்படும் எரிபொருள் _______________ ஆகும். விடை ; உயிரி வாயு
II. சரியா? தவறா? (தவறு எனில் கூற்றினை திருத்துக)
- உயிரி வாயு ஒரு புதைபடிவ எரிபொருளாகும். ( தவறு )
- உயிரி வாயு விலங்குகள் மற்றும் தாவரங்களின் கழிவுகள், காற்றில்லாச் சூழலில் மட்கும் போது உருவாகிறது.
- மரம் நடுவதால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும். ( சரி )
- வாழிடங்களை அழிப்பது வன உயிரிகளின் இழப்புக்குக் காரணமாகும். ( சரி )
- அணு ஆற்றல் ஒரு புதுப்பிக்கத்தக்க ஆற்றலாகும்.( சரி )
- அதிகப்படியான கால்நடை மேய்ச்சல், மண்ணரிப்பைத் தடுக்கும். ( தவறு )
- அதிகப்படியான கால்நடை மேய்ச்சல், மண்ணரிப்பைத் ஏற்படுத்தும்.
- வன உயிர்களை வேட்டையாடுதல் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும். ( தவறு )
- வன உயிர்களை வேட்டையாடுதல் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படாத ஒன்றாகும்.
- தேசியப் பூங்கா ஒரு பாதுகாக்கப்பட்டப் பகுதியாகும்.( சரி )
- வன உயிரி பாதுகாப்புச் சட்டம் 1972 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ( சரி )
III. பொருத்துக.
- மண்ணரிப்பு – ஆற்றல் சேமிப்பு
- உயிரி வாயு – அமில மழை
- இயற்கை வாயு – தாவரப் பரப்பு நீக்கம்
- பசுமை இல்ல வாயு – புதுப்பிக்கத்தக்க ஆற்றல்
- CFL பல்புகள் – CO2
- காற்று – புதுப்பிக்க இயலாத ஆற்றல்
- திடக்கழிவு – காரீயம் மற்றும் கன உலோகங்கள்
விடை ; 1 – C, 2 – D, 3 – F, 4 – B, 5 – A, 6 – E, 7 – G
IV. சரியான விடையைத் தேர்ந்தெடு.
1. கீழுள்ளவற்றுள் எது/எவை புதைபடிவ எரிபொருட்கள்
- தார் ii. கரி iii. பெட்ரோலியம்
- i மட்டும்
- i மற்றும் ii
- ii மற்றும் iii
- i, ii மற்றும் iii
விடை ; i மற்றும் ii
2. கழிவுகளை மேலாண்மை செய்வதற்காக கீழுள்ளவற்றுள் எவற்றினை நீவிர் பயன்படுத்துவீர்?
- கழிவுகள் உருவாகும் அளவைக் குறைத்தல்.
- கழிவுகளை மறு பயன்பாட்டு முறையில் பயன்படுத்துதல்.
- கழிவுகளை மறுசுழற்சி செய்தல்.
- மேலே உள்ளவை அனைத்தும்.
விடை ; மேலே உள்ளவை அனைத்தும்.
3. வாகனங்கள் வெளியேற்றும் புகையில் உள்ள வாயுக்கள்
- கார்பன் மோனாக்சைடு ii. சல்பர் டை ஆக்சைடு iii. நைட்ரஜன் ஆக்ஸைடுகள்
- i மற்றும் ii
- i மற்றும் iii
- ii மற்றும் iii
- i, ii மற்றும் iii
விடை ; ii மற்றும் iii
4. மண்ணரிப்பைத் தடுக்கப் பயன்படுவது
- காடுகள் அழிப்பு
- காடுகள் /மரம் வளர்ப்பு
- அதிகமாக வளர்த்தல்
- தாவரப் பரப்பு நீக்கம்
விடை ; காடுகள் /மரம் வளர்ப்பு
5. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம்
- பெட்ரோலியம்
- கரி
- அணுக்கரு ஆற்றல்
- மரங்கள்
விடை ; மரங்கள்
6. கீழுள்ளவற்றுள் மண்ணரிப்பு அதிகமாக காணப்படும் இடம்
- மழைப்பொழிவு இல்லாத இடம்
- குறைவான மழை பொழிவு உள்ள இடம்
- அதிகமான மழைப்பொழிவு உள்ள இடம்.
- இவற்றில் எதுவுமில்லை.
விடை ; குறைவான மழை பொழிவு உள்ள இடம்
7. கீழுள்ளவற்றுள் தீர்ந்து போகாத வளம் / வளங்கள்
- காற்றாற்றல்
- மண்வளம்
- வன உயிரி
- மேலே உள்ள அனைத்தும்
விடை ; மேலே உள்ள அனைத்தும்
8. கிராமங்களில் கிடைக்கும் பொதுவான ஆற்றல் மூலம் / மூலங்கள்
- மின்சாரம்
- கரி
- உயிரி வாயு
- மரக்கட்டைகள் மற்றும் விலங்குகளின் கழிவு
விடை ; உயிரி வாயு
9. பசுமை இல்ல விளைவு என குறிப்பிடப்படுவது
- பூமி குளிர்தல்.
- புற ஊதாக் கதிர்கள் வெளி செல்லாமல் இருத்தல்.
- தாவரங்கள் பயிர் செய்தல்.
- பூமி வெப்பமாதல்.
விடை ; பூமி வெப்பமாதல்.
10. மிக மலிவான வழக்கமான வர்த்தக ரீதியிலான தீர்ந்து போகாத ஆற்றல் மூலம்
- நீர் ஆற்றல்
- சூரிய ஆற்றல்
- காற்றாற்றல்
- வெப்ப ஆற்றல்
விடை ; சூரிய ஆற்றல்
11. புவி வெப்பமாதலின் காரணமாக ஏற்படக்கூடிய விளைவு
- கடல் மட்டம் உயர்தல்.
- பனிப்பாறைகள் உருகுதல்.
- தீவுக்கூட்டங்கள் மூழ்குதல்.
- மேலே கூறிய அனைத்தும்.
விடை ; மேலே கூறிய அனைத்தும்.
12. கீழேகொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் காற்றாற்றல் குறித்த தவறான கூற்று எது
- காற்றாற்றல் ஒரு புதுப்பிக்கத்தக்க ஆற்றல்.
- காற்றாலையின் இறக்கைகள் மின்மோட்டார் மூலம் இயக்கப்படுகின்றன.
- காற்றாற்றல் மாசு ஏற்படுத்தாமல் உற்பத்தி செய்யப்படுகிறது.
- காற்றாற்றலைப் பயன்படுத்துவதன் மூலம் புதைபடிவ எரிபொருட்கள் பயன்பாட்டினைக் குறைக்கலாம்.
விடை ; காற்றாலையின் இறக்கைகள் மின்மோட்டார் மூலம் இயக்கப்படுகின்றன.
V. ஒரு வாக்கியத்தில் விடையளி.
1. மரங்கள் வெட்டப்படுவதால் உண்டாகும் விளைவுகள் யாவை?
மழை பொழிவு குறைவு
2. வன உயிரினங்களின்வாழிடம் அழிக்கப்படுவதால் ஏற்படும் விளைவுகள் யாவை?
மறைத்தொடங்கும் (அ) நகரங்களை நோக்கி நகர தொடங்கும்
3. மண்னரிப்பிற்கான காரணிகள் யாவை?
அதிவேகமாக வீசும் காற்று, பெருவெள்ளம், நிலச்சரிவு, மனிதரின் நடவடிக்கைகள், கால்நடைகளின் அதிக மேய்ச்சல்
4. புதைபடிவ எரிபொருள்களை நாம் ஏன் பாதுகாக்க வேண்டும்?
புதைபடிவ எரிபொருள்கள் தோன்ற பல மில்லியன் ஆண்டுகள் ஆவதால் நாம் பாதுகாக்க வேண்டும்.
5. சூரிய ஆற்றல் மூலம் எவ்வாறு ஒரு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் எனப்படுகிறது?
சூரியன் உலகம் முழுவதும் காணப்பபடக்கூடியது. சூரிய ஒளியை ஆற்றலாக பயன்படுத்தலாம்.
6. மின்னணுக் கழிவுகள் எவ்வாறு உற்பத்தியாகின்றன?
மின்னணுக் கழிவுகள் என்பது பயன்படுத்த முடியாத, பழைய, மீண்டும் சரிப்படுத்தி உபயோகிக்க முடியாத, கணினிகள், மடிக்கணினிகள், தொலைபேசிகள், தொலைக்காட்சி, பெட்டிகள், DVD பிளேயர்கள , கால்குலேட்டர்கள் சாதனங்களின் உடைந்த பாகங்களில் இருந்து உற்பத்தியாகின்றன.
VI. சுருக்கமாக விடையளி
1. மழைநீர் சேமிப்பின் முக்கியத்துவங்கள் யாவை?
- மழைநீர் சேகரிப்பு மிக வேகமாகக் குறைந்து வரும் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கப் பயன்படுகிறது.
- பெருகிவரும் நீர்த் தேவைகளை சமாளிக்கப் பயன்படுகிறது.
- பெரு வெள்ளம் மற்றும் மண் அரிப்பைத் தடுக்கப் பயன்படுகிறது.
- குடிநீராகப் பயன்படுத்த முடியும்
2. உயிரி வாயுவை பயன்படுத்துவதன் நன்மைகள் யாவை?
- சமையலுக்கான எரிபொருளாகப் பயன்படுகிறது.
- நீரேற்றப் பயன்படும் இயந்திரங்களையும், மோட்டார்களையும் இயக்குவதற்குப் பயன்படுகிறது.
- மின்சார உற்பத்திக்குப் பயன்படுகிறது.
3. கழிவுநீர் சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும் விளைவுகள் யாவை?
கழிவு நீர் விவசாய நிலங்களை அசுத்தப்படுத்துவதோடு, சுற்றுச்சூழல் சீர்கேட்டையும் ஏற்படுத்துகிறது.
4. காடழிப்பினால் ஏற்படக்கூடிய விளைவுகள் யாவை?
காடுகள் அழிக்கப்படுவதால் ஏற்படக்கூடிய விளைவுகள்
- பெரு வெள்ளம்
- வறட்சி
- மண்ணரிப்பு
- வன உயிரிகள் அழிப்பு
- அருகிவரும் சிற்றினங்கள் முற்றிலுமாக அழிதல்
- உயிர் புவி சுழற்சியில் சமமற்ற நிலை
- பருவ நிலைகளில் மாற்றம்
- பாலைவனமாதல்
10th Science Book Back Answer Biology Unit 22
VII. விரிவாக விடையளி.
1. மழைநீர் சேமிப்பு அமைப்புகள் எவ்வாறு நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கச் செய்கின்றன?
மேற் கூரைகளில் விழும் மழை நீரைச் சேமித்தல் :-
- மழை நீரை மிகச் சிறப்பான முறையில் மேற் கூரைகளிலிருந்து சேமிக்கலாம்.
- வீட்டின் மேற்கூரை, அடுக்கு மாடிக் குடியிருப்புகள், அலுவலகங்கள், கோயில்கள் ஆகியவற்றில் பெய்யும் மழைநீரை, தொட்டிகளில் சேகரித்து, வீட்டு உபயோகத்திற்குப் பயன்படுத்தலாம்.
கசிவு நீர்க் குழிகள் :-
- இம்முறையில், மேற்கூரை மற்றும் திறந்த வெளிகளிலிருந்து பெறப்படும் மழைநீர் வடிகட்டும் தொட்டிகளுக்கு குழாய் மூலம் இணைக்கபட்டுள்ளது.
- இவ்வாறு சேகரிக்கப்படும் நீர், கசிவு நீர் குழிகள் மூலம் மண்ணுக்குள் ஊடுருவி, நிலத்தடி நீராக சேகரிக்கப்படுகிறது.
ஏரிகள் அமைத்தல் :-
- இது தமிழ் நாட்டிலுள்ள மிகப்பழமையான மழை நீர்சேகரிப்பு முறையாகும்.
- ஒரு ஏரியில் மழை நீர் சேகரித்தப்பின், அதில் உள்ள உபரி நீர் அருகிலுள்ள மற்றொரு கிராமத்திலுள்ள ஏரியை சென்றடைந்து சேமிக்கும்படி அமைக்கப்பட்டிருக்கிறது.
ஊரணிகள் :-
- ஒவ்வொரு கிராமப் புறத்திலும் சிறிய அளவிலான மழை நீரைச் சேமிக்கும் விதமாக “ஊரணிகள்” அமைந்துள்ளன.
- அவை கிராமங்களில் உள்ள மக்கள் பயன்படுத்தும் வகையில், குளிக்க, குடிக்க, துணி துவைக்க உதவுகின்றன.
- இவை அருகிலுள்ள கிராமங்களுக்கும் பயன்படுகின்றன.
2. மண்ணரிப்பை நீவிர் எவ்வாறு தடுப்பீர் ?
- தாவரப்பரப்பை நிலை நிறுத்திக் கொள்வதன் மூலம் மண்ணரிப்பைத் தடுக்கலாம்.
- கால்நடைகளின் அதிகமான மேய்ச்சலைக் கட்டுப்படுத்துவதன் மூலம் மண் அரிப்பை தடுக்கலாம்.
- பயிர் சுழற்சி மற்றும் மண்வள மேலாண்மை மூலம் மண்ணில் கரிமப் பொருள்களின் அளவை மேம்படுத்தலாம்.
- நிலப்பரப்பில் ஓடும் நீரினை நீர்பிடிப்பு பகுதிகளில்
- சேமிப்பதன் மூலம் மண் அரிப்பைத் தடுக்கலாம்.
- காடுகள் உருவாக்கம், மலைகளில் நிலத்தை சமப்படுத்துதல், நீரோட்டத்திற்கு எதிர்திசையில் மண் உழுதல் ஆகியவை மூலம் மண் அரிப்பை தடுக்கலாம்.
- காற்றின் வேகத்தை மட்டுப்படுத்த அதிக பரப்பில் மரங்களை நடுவதன் மூலம் (பாதுகாப்பு அடுக்கு) மண் அரிப்பை தடுக்கலாம்.
3. திடக்கழிவுகள் உருவாகும் மூலங்கள் யாவை? அவற்றினை எவ்வாறு கையாளலாம்?
திடக்கழிவு என்பது நகர்ப்புறக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள், தொழிற்சாலைக் கழிவுகள் மற்றும் மின்னணுக் கழிவுகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
திடக்கழிவு மேலாண்மை என்பது வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் உற்பத்தி ஆகும் கழிவுப் பொருட்களை சேகரித்தல், சுத்தப்படுத்துதல் மற்றும் முறையாக வெளியேற்றுதல் ஆகியவற்றை உள்ளடக்கியது.
திடக்கழிவுகளை அகற்றும் முறைகள்
தனித்துப் பிரித்தல் :-
பல்வேறு வகையான திடக்கழிவுகளை மக்கும் தன்மை உள்ளவை மற்றும் மக்கும் தன்மையற்றவை என தனித்து பிரிப்பதாகும்.
நிலத்தில் நிரப்புதல் :-
தாழ்வான பகுதிகளில் திடக்கழிவுகளை நிரப்புவது ஆகும். கழிவுப் பொருட்களை நிரப்பிய பிறகு அதன் மேல் மண்ணை ஒரு அடுக்கு நிரப்பி சரக்கு ஊர்திகள் மூலம் அழுத்தச் செய்யலாம். 2 முதல் 12 மாதங்களுக்குள் கழிவுகள் நிலைப்படுத்தப்படுகின்றன. அதில் உள்ள கரிம பொருட்கள் சிதைவடைகின்றன.
எரித்து சாம்பலாக்கல் :-
எரியும் தன்மை உடைய கழிவுகளான மருத்துவமனை கழிவுகளை முறையாக அமைக்கப்பட்ட எரியூட்டிகளில் அதிக வெப்பநிலையில் எரித்து சாம்பலாக்கலாம்.
உரமாக்குதல் :-
உயிரி சிதைவடைய கூடிய கழிவுகளை மண்புழுக்களை பயன்படுத்தியும் நுண்ணுயிரிகளைப் பயன்படுத்தியும் சிதைவடையச் செய்து மட்கிய உரமாக மாற்றுவதாகும
4. காடுகளின் முக்கியத்துவம் பற்றி கூறுக.
- காடுகள் நமது நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு முக்கிய பங்களிப்பவை.
- காடுகள் மனித வாழ்வுக்கு இன்றியமையாதவை
- மேலும் பல தரப்பட்ட புதுப்பிக்கத்தக்க இயற்கை வளங்களின் ஆதாரமாகவும் விளங்குபவை.
- காடுகள் ,மரம் ,உணவு தீவனம். நார்கள் மற்றும் மருந்துப் பொருட்களை அளிப்பவை.
- காடுகள் கார்பனை நிலை நிறுத்துவதால், அவை கார்பன் தொட்டி என்றும் அழைக்கப்படுகின்றன.
- தட்பவெப்ப நிலையை ஒழுங்குபடுத்தி, மழைபொழிவை அதிகமாக்கி புவி வெப்பமாதலைக் குறைத்து, வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கைச் சீற்றங்களை தடுத்து வன உயிரிகளை பாதுகாத்து நீர் பிடிப்பு பகுதிகளாக மாறி செயல்படுகின்றன.
- சுற்றுச் சூழல் சமநிலையை பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
5. மண்ணரிப்பினால் உண்டாகக்கூடிய விளைவுகள் யாவை?
- மண்ணரிப்பின் காரணமாக மண்ணின் மட்கு, ஊட்டப் பொருட்கள், வளம், ஆகியவை வெகுவாக குறைந்து மண் வளத்தை குறைக்கிறது.
- அதி வேகமாக வீசும் காற்று, பெருவெள்ளம், நிலச்சரிவு போன்றவை ஏற்படுகிறது.
- மண்வளம் குறைவதால் பயிர் விளைச்சல் பாதிக்கிறது.
6. வனங்களை மேலாண்மை செய்வதும், வன உயிரினங்களை பாதுகாப்பதும் ஏன் ஒரு சவாலான பணியாகக் கருதப்படுகிறது?
இயற்கையான வாழிடத்தில் (காடுகள், புல்வெளிகள், பாலைவனங்கள்) வாழும், மனிதர்களால் வளர்க்கப்படாத உயிரினங்கள் வன உயிரிகள் எனப்படும்.
உயிரியப் பல்வகைத் தன்மையை வன உயிரிகள், வனச் சுற்றுலாவை மையமாகக்கொண்டு வருவாயைப் பெருக்குவதால் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்திட உதவுகின்றன.
வன உயிர்களை பாதுகாத்தல்
- வன உயிர்களை பாதுகாப்பதில் முக்கிய நோக்கமானது,
- சிற்றினங்களை அழிவிலிருந்து பாதுகாத்தல்.
- தாவரங்கள் மற்றும் விலங்குகளை அழிவிலிருந்து பாதுகாத்தல்.
- அருகி வரும் சிற்றினங்கள் மற்றும் அழிவின் விளிம்பில் உள்ள சிற்றினங்கள் அழியாமல் பாதுகாத்தல்.
- அழியக்கூடிய நிலையில் உள்ள சிற்றினங்களை பாதுகாத்தல்.
- தாவர விலங்கினங்கள் அவற்றின் இயற்கை வாழ்விடங்களுக்கு இடையேயான சூழலியல் தொடர்பைப் பற்றி அறிந்து கொள்தல்.
- சட்டவிரோத வேட்டையாடுதல் மற்றும் விலங்குகளை பிடித்தல் ஆகியவற்றைத் தடை செய்தல்.
- தேசிய பூங்காக்கள்,வன உயிரி சரணாலயங்கள், பாதுகாக்கப்பட்ட பகுதிகள் மற்றும் உயிர்க்கோளக் காப்பகங்கள் ஆகியவற்றை ஏற்படுத்துதல்.
- வன உயிரி பாதுகாப்புச் சட்டம் 1972ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இச் சட்டத்தின் முக்கிய அம்சங்களாவன.
VIII. கொடுக்கப்பட்டுள்ள கூற்று மற்றும்காரணங்களில் சரியாகப் பொருந்தியுள்ளதை கீழ்காண்வரிசைகளின் உதவியுடன் தேர்வு செய்து எழுதுக.
- அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம் தருகிறது.
- ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல.
- இ) கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.
- ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
1. கூற்று : மழை நீர் சேமிப்பு என்பது மழை நீரை சேமித்து பாதுகாப்பதாகும்.
காரணம் : மழை நீரை நிலத்தடியில் கசியவிட்டு நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தலாம்.
- அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம் தருகிறது.
கூற்று : CFL பல்புகள் மட்டுமே பயன்படுத்துவதன் மூலம் மின்னாற்றலை சேமிக்க முடியும்.
காரணம் : CFL பல்புகள் சாதாரண பல்புகளை விட விலை அதிகமானவை. எனவே சாதாரண பல்புகளை பயன்படுத்துவதன் மூலம் நமது பணத்தையும் சேமிக்கலாம்.
- ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல.
IX. உயர் சிந்தனைக்கான வினாக்கள்
1. உயிர்ப்பொருண்மை சிதைவடைவதன் மூலம் நமக்கு கரி மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் கிடைக்கின்றன. இருப்பினும் நாம் அவற்றை பாதுகாப்பது அவசியமாகிறது. ஏன்?
கரி மற்றும் பெட்ரோலியம் ஆகியவை இயற்கை வளங்கள் ஆகும். இவை பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து மடிந்த உயரினங்கள் நிலத்தில் ஆழப் புதைந்து உயிரிப் பொருண்மை சிதைவின் மூலம் ஊருவானவை ஆகும். இவை எளிதில் புதுப்பிக்க இயலாத ஆற்றல் வளங்கள். எனவே அவற்றை நாம் பாதுகாப்பது அவசியம்.
2. மரபுசாரா ஆற்றல் மூலங்களைபயன்படுத்துவதற்கு பதிலாக மரபுசாரா ஆற்றல் மூலங்களை பயன்படுத்துவதன் நோக்கங்கள் யாவை?
ஆற்றல் துறையில் நீடித்த வளர்ச்சியை நாம் பெற வேண்டுமெனில், விரைவாக தீர்ந்துபோகும் மரபு சாரா ஆற்றல் மூலங்களின் பயன்பாட்டைக் குறைந்து, பாதுகாத்து அவற்றுக்குப் பதிலாக சுற்றுச்சூழலுக் மாசு ஏற்படுத்தாத புதுப்பிக்கதக்க ஆற்றல் வளங்களை நாம் பயன்படுத்த வேண்டும். புதிய மரபு சாரா ஆற்றல் மூலங்கள் எனப்படும் புதிய ஆற்றல் மூலங்களை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
3. தமிழக அரசு நெகிழிப் பொருளையும் பிளாஸ்டிக் பொருளையும் பயன்படுத்தத் தடை விதித்துள்ளது? இதற்கான மாற்று முறைகள் ஏதேனும் இருப்பின் அதனை கூறு. இந்தத் தடையின் காரணமாக சுற்றுச்சூழல் எவ்வாறு சீரடையும்?
நெகிழிப் பொருளையும் பிளாஸ்டிக் பொருளையும் சுற்றுச்சூழலை பாதிக்கின்றது. மட்கும் தன்மை அற்றது.
மாற்ற வழிகள்
- பிளாஸ்டிக் பொருள்களுக்கு பதிலாக துணி பைகளை உபயோகிப்பது நல்லது
- மட்கக்கூடிய மெல்லிய பைகளை பயன்படுத்துவது
- கண்ணாடி பாட்டில்களை பயன்படுத்துவது
பிளாஸ்டிக் பொருள் பயன்படுவது தடை செய்யாமல் பசுமை இல்ல வாயுக்கள் வெளியேறுவது குறைந்து சுற்றுசூழலை பாதுகாக்கப்படுகிறது.
X. விழுமிய அடிப்படையிலான வினாக்கள்
1. சூரிய மின்கலன்கள் நமது ஆற்றல் தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு இல்லை. ஏன்? உமது விடைக்கான மூன்று காரணங்களை கூறுக.
சூரிய மின்கலங்கள் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் மின் உற்பத்தி செய்யக்கூடியவை. இதிலிருந்து மாசு உண்டாக்கக்கூடிய எரிபொருடகளோ ஆபத்தான வாயுக்களோ கழிவு பொருள்களோ வெளியேறுவதில்லை. இவற்றினை யாரும் அணுக இயலாத அல்லது மிக தொலைதூர இடங்களில் பொருத்த முடியும் (காடுகள் மற்றும் மலைப்பாங்கான பிரதேசங்கள்) பெரும் பொருட் செலவில் மட்டுமே அமைக்க முடியும்.
2. கீழ்க்காணும் கழிவுகளை எவ்வாறு கையாளுவாய்?
(அ) வீட்டுக் கழிவுகளான காய்கறிக் கழிவுகள்.
(ஆ) தொழிற்சாலைக் கழிவுகளான கழிவு உருளைகள்.
இக்கழிவுகள் சுற்றுச்சூழலை பாதுகாக்குமா? ஆம் எனில் எவ்வாறு பாதுகாக்கும்?
(அ) வீட்டுக் கழிவுகளான காய்கறிக் கழிவுகளை வீடுகளிேல குழி அமைத்து மடக் செய்து உரமாக மாற்றலாம்
(ஆ) தொழிற்சாலைக் கழிவுகளான கழிவு உருளைகளை மறுசுழற்சி முறையை பின்பற்றலாம். ஆம் இக்கழிவுகள் சுற்றுச்சூழலை பாதுகாக்கும்.
3. 4 – R முறையினைப் பயன்படுத்தி இயற்கை வளங்களை பாதுகாக்க ஏதேனும் மூன்று செயல்பாடுகளை கூறுக
கழிவுகளை சிறப்பான முறையில் கையாளுவதற்கு 4 – R முறையினைப் பயன்படுத்தி இயற்கை வளங்களை பாதுகாக்கலாம்
- Reduce – குறைத்தல்
- Reuse – மறுபயன்பாடு
- Recycle – மறுசுழற்சி
- Recovery – மீட்டெடுத்தல்