10th Science Book Back Answer Biology Unit 20
10th Standard Science Book back Answers Tamil Medium | Lesson. 20 Breeding and Biotechnology (இனக்கலப்பு மற்றும் உயிர்த்தொழில் நுட்பவியல்)
10th Science Book Back Answer Biology Unit 20. 10th Standard Science Physics Answers, 10th Chemistry Book Back Answers, 10th Biology Book Back Answers Tamil Medium and English Medium. 10th All Subject Text Books. Class 10 Science Samacheer kalvi guide. 10th Tamil Samacheer Kalvi Guide. 10th Science Unit 20. இனக்கலப்பு மற்றும் உயிர்த்தொழில் நுட்பவியல் book back answers. 10th Science Samacheer Kalvi Guide TM & EM All Unit Book Back Answers.
10th Standard Science Book back Answers Lesson.20 Breeding and Biotechnology ( இனக்கலப்பு மற்றும் உயிர்த்தொழில் நுட்பவியல் )
I. சரியான விடையைத் தேர்ந்தெடு.
1. ஓர் அனுபவமற்ற விவசாயி பயிர் மேம்பாட்டிற்காக எந்த முறையைப் பின்பற்றுவார்?
- போத்துத் தேர்வு முறை
- கூட்டுத் தேர்வு முறை
- தூய வரிசைத் தேர்வு முறை
- கலப்பினமாக்கம்
விடை ; கலப்பினமாக்கம்
2. பூசா கோமல் என்பது __________ இன் நோய் எதிர்ப்புத் திறன் பெற்ற ரகம் ஆகும்
- கரும்பு
- நெல்
- தட்டைப்பயிறு
- மக்காச் சோளம்
விடை ; தட்டைப்பயிறு
3. கலப்பினமாக்கம் மற்றும் தேர்வு செய்தல் மூலமாக உருவாக்கப்பட்ட, துரு நோய்க்கு எதிர்ப்புத் தன்மைப் பெற்ற ஹிம்கிரி என்பது __________ இன் ரகமாகும்.
- மிளகாய்
- மக்காச்சோளம்
- கரும்பு
- கோதுமை
விடை ; கோதுமை
4. தன்னுடைய 50 வது பிறந்த நாளைக் கொண்டாடிய, மில்லியன் மக்களின் உயிரைக் காப்பாற்றிய அதிசய அரிசி _____________ ஆகும்.
- IR 8
- IR 24
- அட்டாமிட்டா 2
- பொன்னி
விடை ; IR 8
5. உயிர்த்தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட பின்வரும் எப்பொருள் மனிதனுக்கு பயன்படும் பொருள்களை உற்பத்தி செய்யப் பயன்படுகிறது?
- உயிரினங்களிடமிருந்து பெறப்பட்ட நொதி
- வாழும் உயிரினங்கள்
- வைட்டமின்கள்
- (அ) மற்றும் (ஆ)
விடை ; (அ) மற்றும் (ஆ)
6. DNA வை வெட்டப் பயன்படும் நொதி __________
- கத்திரிக்கோல்
- ரெஸ்ட்ரிக்ஸன் எண்டோநியூக்ளியேஸ்
- கத்தி
- RNA நொதிகள்
விடை ; ரெஸ்ட்ரிக்ஸன் எண்டோநியூக்ளியேஸ்
7. rDNA என்பது ______________
- ஊர்தி DNA
- வட்ட வடிவ DNA
- ஊர்தி DNA மற்றும் விரும்பத் தக்க DNA வின் சேர்க்கை.
- சாட்டிலைட் DNA
விடை ; ஊர்தி DNA மற்றும் விரும்பத் தக்க DNA வின் சேர்க்கை.
8. DNA விரல்ரேகை தொழில்நுட்பம் ______________ DNA வரிசையை அடையாளம் காணும் கொள்கையினை அடிப்படையாகக் கொண்டது.
- ஓரிழை
- திடீர்மாற்றமுற்ற
- பல்லுருத்தோற்ற
- மீண்டும் மீண்டும் வரும் தொடர்
விடை ; மீண்டும் மீண்டும் வரும் தொடர்
9. மாற்றம் செய்யப்பட்ட உள்ளார்ந்த அல்லது அயல் ஜீனைப் பெற்ற உயிரினங்கள் ______________ என அழைக்கப்படுகின்றன.
- அயல் ஜீனைப் பெற்ற உயிரினங்கள்
- மரபுப் பண்பு மாற்றம் செய்யப்பட்டவை
- திடீர் மாற்றம் அடைந்தவை
- (அ) மற்றும் (ஆ)
விடை ; அயல் ஜீனைப் பெற்ற உயிரினங்கள்
10. ஹெக்சாபிளாய்டி கோதுமையில் (2n = 6x = 42) ஒற்றை மயம் (n) மற்றும் அடிப்படைத் தொகுதி (x) குரோமோசோம் எண்ணிக்கை முறையே ______________ ஆகும்
- n = 7 மற்றும் x = 21
- n= 21 மற்றும் x = 21
- n = 7 மற்றும் x = 7
- n = 21 மற்றும் x = 7
விடை ; n = 7 மற்றும் x = 21
II. கோடிட்ட இடங்களை நிரப்புக
- ______________ என்பது பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த உயர்ந்த தரமுடைய தாவரங்களை உற்பத்திச் செய்யும் கலை ஆகும். விடை ; பயிர்ப்பெருக்கம்
- புரதம் செறிந்த கோதுமை ரகம் __________ஆகும். விடை ; அட்லஸ் 66
- ______________ என்பது குரோமோசோம் எண்ணிக்கையை இரட்டிக்க பயன்படுத்தப்படும் வேதிப்பொருள் ஆகும். விடை ; காலச்சிசின்
- விரும்பத்தக்க ஊட்டச்சத்து நிறைந்த பயிர்த் தாவரங்களை உற்பத்திச் செய்யும் அறிவியல் முறை ______________ எனப்படும். விடை ; உயிரூட்டச்சத்தேற்றம்
- நெல் பொதுவாக வண்டல் மண்ணில் செழித்து வளர்கிறது. ஆனால் சடுதிமாற்றத்தின் மூலம் உற்பத்திச் செய்யப்பட்ட ______________என்ற நெல் ரகம் உவர் தன்மை வாய்ந்த மண்ணில் செழித்து வளரும். விடை ; அட்டாமிட்டா – 22
- ______________ தொழில்நுட்பம் மரபியல் ரீதியாக உயிரினங்களை உற்பத்திச் செய்ய வழிவகை செய்துள்ளது. விடை ; DNA மறுசேர்க்கை
- ரெஸ்ட்ரிக்ஸன் எண்டோநியூக்ளியேஸ் நொதியானது DNA மூலக்கூறை ______________ என்று அழைக்கப்படும் குறிப்பிட்ட இடங்களில் துண்டாக்குகிறது. விடை ; மூலக்ககூறு கத்திரக்கோல்
- ஒத்த DNA விரல் ரேகை அமைப்பு __________ இடையே காணப்படும். விடை ; ஒற்றைக் கரு இரட்டையர்
- வேறுபாடு அடையாத செல்களின் தொகுப்பு ______________ ஆகும். விடை ; குருத்தணுக்கள்
- ஜீன் குளோனிங் முறையில் விரும்பிய DNA, ___________ உடன் ஒருங்கிணைக்கப் படுகிறது. விடை ; பிளாஸ்மிட்
III. சரியா அல்லது தவறா என கூறுக. தவறாயின், சரியான கூற்றை எழுதுக.
- கால்ச்சிசின் சிகிச்சையால் உருவாக்கப்பட்ட ரப்பனோ பிராசிக்கா என்பது மனிதன் உருவாக்கிய ஒரு அல்லோடெட்ராபிளாய்டு ஆகும். ( தவறு )
- கால்ச்சிசின் சிகிச்சையால் உருவாக்கப்பட்ட ரப்பனோ பிராசிக்கா என்பது ஒரு அல்லோ டெட்ராபிளாய்டு (4n) ஆகும்.
- இரண்டுக்கும் மேற்பட்ட தொகுதி குரோமோசோம்களைக் கொண்ட உயிரினங்களை உருவாக்கும் முறை சடுதிமாற்றம் எனப்படும். ( தவறு )
- இரண்டுக்கும் மேற்பட்ட தொகுதி குரோமோசோம்களைக் கொண்ட உயிரினங்களை உருவாக்கும் முறை பன்மய பயிர் பெருக்கம் எனப்படும்.
- உடல இனப்பெருக்கம் அல்லது பாலிலா இனப்பெருக்கத்தின் மூலம் ஒரு தனித்தாவரத்தில் இருந்து உருவாக்கப்பட்ட தாவரங்களின் கூட்டமே தூய வரிசை எனப்படும். ( தவறு )
- உடல இனப்பெருக்கம் அல்லது பாலிலா இனப்பெருக்கத்தின் மூலம் ஒரு தனித்தாவரத்தில் இருந்து உருவாக்கப்பட்ட தாவரங்களின் கூட்டமே குளோன் எனப்படும்.
- இரும்பு சத்து செறிவூட்டப்பட்ட அரிசி ரகம், பயிர் செய்யப்பட்ட தாவரத்தின் புரதத் தரத்தை தீர்மானிக்கிறது. ( சரி )
- ‘கோல்டன் ரைஸ்’ ஒரு கலப்புயிரி ( சரி )
- பாக்டீரியாவின் Bt ஜீன், பூச்சிகளைக் கொல்லக் கூடியது. ( சரி )
- செயற்கைக் கருவுறுதல் என்பது உடலுக்குள் நடைபெறும் கருவுறுதலாகும். ( தவறு )
- செயற்கைக் கருவுறுதல் என்பது உடலுக்கு வெளியே நடைபெறும் கருவுறுதலாகும்.
- DNA விரல் ரேகை தொழில் நுட்பம் அலெக் ஜெஃப்ரே என்பரால் உருவாக்கப்பட்டது. ( சரி )
- மூலக்கூறு கத்திரிக்கோல் என்பது DNA லைகேஸைக் குறிக்கும். ( தவறு )
- மூலக்கூறு கத்திரிக்கோல் என்பது ரெஸ்ட்ரிக்ஸன் நொதிகளை குறிக்கும்.
IV. பொருத்துக.
- சோனாலிகா – பேசியோலஸ் முங்கோ
- IR 8 – கரும்பு
- சக்காரம் – அரைக்குள்ள கோதுமை
- முங் நம்பர் 1 – வேர்க்கடலை
- TMV – 2 – அரைக்குள்ள அரிசி
- இன்சுலின் – பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ்
- Bt நச்சு – பீட்டா கரோட்டின்
- கோல்டன் ரைஸ் – rDNA தொழில் நுட்பத்தில் உருவான முதல் ஹார்மோன்.
விடை ; 1 – C, 2 – E, 3 – B, 4 – A, 5 – D, 6 – H, 7 – F, 8 – G
V. கூற்று மற்றும் காரணம் வகை கேள்விகள்.
பின்வரும் ஒவ்வொரு வினாக்களிலும் ஒரு கூற்றும் அதன் கீழே அதற்கான காரணமும் கொடுக்கப்பட்டுள்ளன. கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு வாக்கியங்களில் ஒன்றை சரியான பதிலாக குறிக்கவும்.
- அ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.
- ஆ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.
- இ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.
- ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
1. கூற்று : கலப்புயிரி இரு பெற்றோரையும் விட மேம்பட்டதாக இருக்கும்.
காரணம் : கலப்பின வீரியம் தற்கலப்பில் இழக்கப்படுகிறது.
- அ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.
2. கூற்று : கால்ச்சிசின் குரோமோசோம் எண்ணிக்கையைக் குறைக்கிறது.
காரணம் : சகோதரி குரோமோட்டிடுகள் எதிரெதிர்த் துருவங்களை நோக்கி நகர்வதை அது ஊக்குவிக்கிறது.
- ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
3. கூற்று : rDNA தொழில் நுட்பம் கலப்பினமாக்கலை விட மேலானது.
காரணம் : இலக்கு உயிரினத்தில் விரும்பத் தகாத ஜீன்களை நுழைக்காமல் விரும்பத் தக்க ஜீன்கள் மட்டும் நுழைக்கப் படுகின்றன.
- இ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.
10th Science Book Back Answer Biology Unit 20
VI. ஒரே வாக்கியத்தில் விடையளி
1. அதிக நார்ச்சத்தும், புரதமும் நிறைந்த கோதுமை ரகத்தின் பெயரை எழுதுக.
பல்கர் – புரத சத்து 8.2 கி எடையுள்ளது
2. நெல்லில் அரைக்குள்ள வகைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இது நெல்லில் காணப்படும் குள்ள மரபணுவால் (ஜீனால்) சாத்தியமானது. இந்த குள்ள மரபணுவின் (ஜீன்) பெயரை எழுதுக.
பீ – ஜியோ – வூ – ஜென்
3. மரபுப் பொறியியல் – வரையறு
ஜீன்களை நாம் விரும்பியபடி கையாள்வதும், புதிய உயிர்களை உருவாக்க ஜீன்களை ஒரு உயிரியிலிருந்து மற்றொரு உயிரிக்கு இடம் மாற்றுதலும் மரபுப்பொறியியல் எனப்படும்
4. குருத்தணுக்களின் வகைளை எழுதுக.
- கருநிலைக் குருத்தணுக்கள்
- முதிர் குருத்தணுக்கள் (அ) உடலக் குருத்தணுக்கள்
5. அயல் ஜீனைப் பெற்ற உயிரினங்கள் என்றால் என்ன?
மரபியல் பொறியியல் மூலம் ஜீன்களை ஓர் உயிரிலிருந்து மற்றொரு உயரிக்கு உருவாகும் உயிரினங்கள் அயல் ஜீனைப் பெற்ற உயிரினங்கள் எனப்படும்.
VII. சுருக்கமாக விடையளி
1. நோய் எதிர்ப்புத் திறனுக்கான பயிர் பெருக்கம் பற்றி விவரி.
வைரஸ்கள், பாக்டீரியங்கள் மற்றும் பூஞ்சைகள் போன்ற நோய் உயிரிகளால் தாவரங்களில் நோய்கள் ஏற்படுகின்றன. இது பயிர்களின் மகசூலைப் பாதிக்கிறது. எனவே பூஞ்சைக் கொல்லிகள், பாக்டீரியக் கொல்லிகளைக் குறைவாக பயன்படுத்தி, மகசூலை அதிகமாக்கி அதே வேளையில் நோய் எதிர்ப்புத் திறன் பெற்ற பயிர் வகைகளை உற்பத்திச் செய்வது நோய் எதிர்ப்புத் திறனுக்கான பயிர் பெருக்கம் ஆகும்
2. இந்தியா உணவு உற்பத்தியில் சாதிக்க உதவிய கோதுமையின் மூன்று மேம்பாடு அடைந்த பண்புகளை எழுதுக.
மெக்சிகோவின் அதிக மகசூல் தரும் அரைக்குள்ள உயரமுடைய (Semi dwarf) செயற்கை உரத்தை ஏற்றுக் கொள்ளும் தன்மை கொண்டு கோதுமை வகைகளில் இருந்து சோனாலிகா மற்றும் கல்யான் சோனா போன்ற அரைக்குள்ள கோதுமை வகைகள் உற்பத்தி செய்யப்பட்டன.
3. லைசின் அமினோ அமிலம் செறிந்த இரண்டு மக்காச்சோள கலப்புயிரி வகைகளின் பெயரை எழுதுக.
விரும்பத்தக்க ஊட்டச் சத்துக்களான வைட்டமீன்கள், புரதங்கள் மற்றும் கனிமங்கள் நிறைந்த பயிர் தாவரங்களை உற்பத்திச் செய்ய பயன்படுத்தப்படும் அறிவியில் முறையே உயிரூட்டசத்தேற்றம் எனப்படும். லைசின் என்ற அமினோ அமிலம் செறிந்த கலப்பின மக்காச்சோள ரகங்கள் புரோட்டினா, சக்தி மற்றும் ரத்னா
4. வேறுபடுத்துக :
அ. உடல செல் ஜீன் சிகிச்சை மற்றும் இன செல் ஜீன் சிகிச்சை
உடல செல் ஜீன் சிகிச்சை | இன செல் ஜீன் சிகிச்சை |
1. உடல செல்களில் திருத்தப்பட்ட ஜீன்கள் இடம் மாற்றப்படுதல் | இனப்பெருக்க செல்களில் திருத்தப்பட்ட ஜீன்கள் இடம் மாற்றப்படுதல் |
2. இந்த திருத்ததம் செய்யப்படும் நோயாளிக்கு மட்டுமே நன்மை பயக்கும். அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லப்படுவதில்லை | நோயாளிக்கு நன்மை பயக்கும் மற்றும் அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லப்படும். |
ஆ. மாறுபாடு அடையாத செல்கள் மற்றும் மாறுபட்ட செல்கள்
மாறுபாடு அடையாத செல்கள் | மாறுபட்ட செல்கள் |
மாறுபாடு அடையாத அல்லது சிறப்பு செல் வகைகளாக மாற்ற அடையாத செல்களின் தொகுப்பு | மாறுபாடு அடைந்து வெவ்வேறு பணிகளை மேற்கொள்ளும். |
5. DNA விரல் ரேகைத் தொழில்நுட்பத்தின் நடைமுறை பயன்பாடுகளை எழுதுக.
- டி.என்.ஏ. விரல் ரேகைத் தொழில்நுட்பமானது தடயவியல் பயன்பாடுகளில் குற்றவாளிகளை அடையாளம் காணப் பயன்படுகிறது. மேலும் இது ஒரு குழந்தையின் தந்தையை அடையாளம் காண்பதில் ஏற்படும் சர்ச்சைகளுக்கு தீர்வு காணவும் பயன்படுகிறது.
- இது உயிரினத் தொகையின் மரபியல் வேறுபாடுகள், பரிணாமம் மற்றும் இனமாதல் ஆகியவற்றை அறிய உதவுகிறது.
6. குருத்தணுக்கள் எவ்வாறு புதுப்பித்தல் செயல்பாட்டிற்கு பயன்படுகின்றன?
பகுப்படைவதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான குருத்தணுக்களை உற்பத்தி செய்யும் திறன். இது ‘சுய புதுப்பித்தல்’ எனப்படுகிறது.
7. உட்கலப்பு மற்றும் வெளிக் கலப்பு – வேறுபடுத்துக.
உட்கலப்பு
- நெருங்கிய தொடர்புடைய மற்றும் ஒரே இனத்தை சார்ந்த உயிரினங்களை 4 முதல் 6 தலைமுறைகளுக்கு கலப்புச் செய்வதே உட்கலப்பு முறையாகும்.
- இது ஒரே இனத்தைச் சார்ந்த வீரியமிக்க ஆண் மற்றும் வீரியமிக்க பெண் விலங்குகளை இனங்கண்டு, அவற்றை ஜோடியாக இனக்கலப்பு செய்வதாகும்.
- இம்முறையின் மூலம் வீரியமிக்க ஜீன்கள் கலப்பினத்தில் ஒன்றாகக் கொண்டு வரப்பட்டு, விரும்பத்தகாத ஜீன்கள் நீக்கப்படுகின்றன.
வெளிக்கலப்பு
- இது தொடர்பற்ற விலங்குகளைக் கலப்புச் செய்வதாகும்.
- இவ்வினக்கலப்பின் மூலம் உருவான புதிய உயிரி கலப்புயிரி என அழைக்கப்படுகிறது.
- இக்கலப்புயிரி, பெற்றோர்களை விட பலம் வாய்ந்ததாகவும், வீரியமானதாகவும் இருக்கும்.
- இம்முறையில் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த, விரும்பத்தக்க பண்புகளை கொண்ட இரண்டு சிற்றினங்கள் கலப்பினச் சேர்க்கைக்கு உட்படுத்தப்படுகின்றன.
10th Science Book Back Answer Biology Unit 20
VIII. விரிவாக விடையளி
1. விலங்குகளில் கலப்பின வீரியத்தின் விளைவுகள் யாவை?
- கால்நடைகளில் பால் உற்பத்தியை அதிகரித்தல்
- கோழிகளில் முட்டை உற்பத்தியை அதிகரித்தல்
- உயர்தர இறைச்சியை உற்பத்திச் செய்தல்
- வீட்டு விலங்குகளின் வளர் வீதத்தை அதிகப்படுத்துதல்.
2. சடுதிமாற்றத்தை எடுத்துக்காட்டுடன் விவரி
ஒரு உயிரினத்தின் DNA வின் நியூக்ளியோடைடு வரிசையில் திடீரென ஏற்படும், பாரம்பரியத்துக்கு உட்படும் மாற்றமே சடுதிமாற்றம் எனப்படும். இது மரபியல் வேறுபாடுகளை உண்டாக்குவதன் மூலமாக, உயிரினங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும் செயல் ஆகும்.
எ.கா.
ஸொனாரா – 64 என்ற கோதுமை ரகத்தில் இருந்து காமாக் கதிர்களைப் பயன்படுத்தி சர்பதி ஸொனாரா என்ற கோதுமை ரகம் உருவாக்கப்பட்டத
3. உயிரூட்டச்சத்தேற்றம் பற்றி சிறு குறிப்பு வரைக.
விரும்பத்தக்க ஊட்டச் சத்துக்களான வைட்டமின்கள், புரதங்கள் மற்றும் கனிமங்கள் நிறைந்த பயிர் தாவரங்களை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் அறிவியல் முறைேய உயிரூட்டச்சத் தேற்றம் எனப்படும். லைசின் என்ற அமினோ அமிலம் செறிந்த கலப்பின மக்காச் சோள ரகங்கள் புரோட்டினா, சக்கி மற்றும் ரத்னா
4. ஜீன் குளோனிங் தொழில்நுட்பத்தைப் படத்துடன் விவரி.
Dr. அயர்ன் வில்மட் பெண் செம்மறி ஆட்டின் மடியில் உள்ள இரட்டை குரோமோசோம் எண் (2n) கொண்ட உடல் செல்லை தேர்ந்தெடுத்தார். அதேபோல் மற்றொரு ஆட்டின் அண்டத்தை பிரித்தெடுத்தார். அண்டம் ஒற்றை எண் குரோமோசோமைக் (n) கொண்டதால், அதனால் புதிய செம்மறி ஆட்டினை உருவாக்க இயலாது. அதே போல மடியில் உள்ள உடல செல் (2n) இனப்பெருக்கச் செல்லாக இல்லாததால் அச்செல்லும் புதிய ஆட்டினை தோற்றுவிக்க முடியாது. எனேவ வில்மட் மரபுச் செல்லின் இரட்டை எண் (2n) கொண்ட உட்கருவை நீக்கினார். அதே போல அண்டத்தில் உள்ள ஒற்றை எண் (n) கொண்ட உட்கருவை நீக்கினார். பின்னர் மடிச்செல் உட்கருவை உட்கரு நீக்கிய கரு முட்டையினுள் செலுத்தினார். தற்போது கருமுட்டை (2n) இரட்டை எண் கொண்ட குரோமோசோம்களின் தொகுதியினை உட்கரு மாற்றி பொருத்தல் மூலம் முழுவதும் பெற்றது. பின்னர் இரட்டை எண் (2n) உட்கரு கொண்ட கருமுட்டை, அதன் தாய் செம்மறி ஆட்டின் கருப்பையினுள் மீண்டும் பொருத்தப்பட்டது. மேற்படி கருமுட்டையை மற்றொரு புதி தாய் செம்மறி ஆட்டின் (செவிலித்தாய்) கருப்பையிலும் பொருத்தப்படலாம். கருமுட்டை கருப்பையினுள் வளர்ந்து செம்மறி ஆட்டுக்குட்டியை தோற்றுவித்தது. இவ்வாறு உருவான குளோனிங் செம்மறி ஆடு மரபுப் பண்புகளின் இரட்டை எண் உட்கருவை (மடிச்செல்) வழங்கிய செம்மறி ஆட்டினை ஒத்திருக்குமேயன்றி கருமுட்டை வழங்கிய செம்மறி ஆட்டினை ஒத்திராது.
5. மருத்துவத் துறையில் உயிர்தொழில்நுட்பவியலின் முக்கியத்துவத்தை எழுதுக.
- இரத்த சர்க்கரை நோய் சிகிச்சைக்கான இன்சுலின்
- வளர்ச்சி குறைபாடுள்ள குழந்தைகளின் குறைபாட்டினை நீக்கும் மனித வளர்ச்சி ஹார்மோன்
- ஹீமோஃபிலியா என்ற இரத்த உறைதல் குறைபாட்டு நோய்க் கட்டுப்பாட்டிற்கான ‘இரத்த உறைதல் காரணிகள்’.
- திசு பிளாஸ்மினோஜன் தூண்டி, (இரத்தம் உறைதலைத் தடுக்கும் காரணி) இரத்தக் கட்டிகளைக் கரைத்து இதய அடைப்பைத் தவிர்க்க உதவுகின்றது.
- ஹெப்பாடிடிஸ் B மற்றும் வெறி நாய்க்கடி (ரேபிஸ்) நோயைத் தடுக்கும் தடுப்பூசிகள்.
IX. உயர் சிந்தனைக்கான வினாக்கள்
1. பயிர் ரகங்களை பெருக்குபவர் ஒருவர் விரும்பத் தக்க பண்புகளை தாவரப் பயிரில் இணைத்துக் கொள்ள விரும்புகிறார். அவர் இணைத்துக் கொள்ளும் பண்புகளின் பட்டியலைத் தயார் செய்.
- நிலைப்புத்தன்மை
- உயர்த்தப்பட்ட உணவூட்ட மதிப்பு
- நோய் எதிர்ப்புத் தன்மை
- மாறுபடும் சுற்று சூழல் நிலைகளுக்குத் தாங்கும் தன்மை
- குறைந்த செலவில் அதிக வளர்ச்சி வேகம்
2. ‘இயற்கை விவசாயம் பசுமைப்புரட்சியை விட சிறந்தது’ காரணங்கள் கூறு.
- இயற்கை விவசாயத்தில் வேதி உரங்கள் (அ) வேதிப்பொருட்கள் இருப்பதில்லை.
- பூச்சி கொல்லிகள் இயற்கை விவசாயத்தில் பயன்படுத்தப்படுவதில்லை.
- விதைகள் விரும்பத்தக்கள் மரபுப் பண்புகளை பெற்று இருக்கும்.
3. “பன்மயம் இராட்சதத் தன்மையை பண்பாகக் கொண்டது” இக்கூற்றை சரியான காரணத்துடன் விவரி.
இரண்டுக்கு மேற்பட்ட தொகுதி குரோமோசோம்களைக் கொண்ட உயிரினம், பல தொகுதியாக்கும் இயல்பு எனப்படும். எனவே இறுதியில் கிடைக்கும் தாவரத்தின் அளவு இராட்சத் தன்மையை பெற்று இருக்கும்.
எகா ; தர்பூசணி
4. P என்ற ஜீன் வைட்டமின் A உற்பத்திக்குத் தேவைப்படுகிறது. இது ‘R’ என்ற மரபுப்பண்பு மாற்றப்பட்ட தாவரத்தை உற்பத்திச் செய்ய ‘Q’ வின் ஜீனோமுடன் இணைக்கப்படுகிறது.
அ. P,Q மற்றும் R என்பன யாவை?
- P – வைட்டமின் ஏ உற்பத்திகு தேவையான ஜீன்
- Q – P-யை இணைக்க உதவும் ஜீனோம்
- R – உருமாற்றம் அடைந்த விருந்தோம்பி செல்லுடன் சேர்ந்த மறுசேர்க்கை DNA
ஆ. இந்தியாவில் R ன் முக்கியத்துவத்தை எழுதுக.
இந்தியாவின் முக்கிய குறைபாடான கண் குறைபாட்டை நீக்க உதவும் வைட்டமின் ஏ கொண்ட அரிசி ரகம்