You are currently viewing 10th Science Book Back Answer Biology Unit 13

10th Science Book Back Answer Biology Unit 13

10th Science Book Back Answer Biology Unit 13

10th Standard Science Book back Answers Tamil Medium | Lesson.13 Structural Organisation of Animals (உயிரினங்களின் அமைப்பு நிலைகள்)

10th Science Book Back Answer Biology Unit 13. 10th Standard Science Physics Answers, 10th Chemistry Book Back Answers, 10th Biology Book Back Answers Tamil Medium and English Medium. 10th All Subject Text Books. Class 10 Science Samacheer kalvi guide. 10th Tamil Samacheer Kalvi Guide. 10th Science Unit 13. உயிரினங்களின் அமைப்பு நிலைகள் book back answers. 10th Science Samacheer Kalvi Guide TM & EM All Unit Book Back Answers.

10th Science Book Back Answer Tamil Medium

10th Standard Science Book back Answers | Lesson.13 Structural Organisation of Animals (உயிரினங்களின் அமைப்பு நிலைகள்)

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.

1. அட்டையில் இடப்பெயர்ச்சி —————– மூலம் நடைபெறுகிறது

  1. முன் ஒட்டுறுப்பு
  2. பக்கக் கால்கள்
  3. சீட்டாக்கள்
  4. தசைகளின் சுருக்கம் மற்றும் நீள்தல்

விடை ; முன் ஒட்டுறுப்பு

2. அட்டையின் உடற்கண்டங்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன

  1. மெட்டாமியர்கள் (சோமைட்டுகள்)
  2. புரோகிளாட்டிடுகள்
  3. ஸ்ட்ரோபிலா
  4. இவை அனைத்தும்

விடை ; மெட்டாமியர்கள் (சோமைட்டுகள்)

3. அட்டையின் தொண்டைப்புற நரம்புத்திரள் எந்த உறுப்பு மண்டலத்தின் ஒரு பகுதி

  1. கழிவுநீக்க மண்டலம்
  2. நரம்பு மண்டலம்
  3. இனப்பெருக்க மண்டலம்
  4. சுவாச மண்டலம்

விடை ; நரம்பு மண்டலம்

4. அட்டையின் மூளை இதற்கு மேலே உள்ளது

  1. வாய்
  2. வாய்க்குழி
  3. தொண்டை
  4. தீனிப்பை

விடை ; தொண்டை

5. அட்டையின் உடலில் உள்ள கண்டங்களின் எண்ணிக்கை

  1. 23
  2. 33
  3. 38
  4. 30

விடை ; 33

6. பாலூட்டிகள் —————– விலங்குகள்

  1. குளிர் இரத்த
  2. வெப்ப இரத்த
  3. பாய்கிலோதெர்மிக்
  4. இவை அனைத்தும்

விடை ; வெப்ப இரத்த

7. இளம் உயிரிகளைப் பிரசவிக்கும் விலங்குகள்

  1. ஓவிபேரஸ்
  2. விவிபேரஸ்
  3. ஓவோவிவிபேரஸ்
  4. அனைத்தும்

விடை ; விவிபேரஸ்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1 ————— கண்டத்தின் மாறுபாட்டால் அட்டையின் பின் ஒட்டுறுப்பு உருவாகியுள்ளது. விடை ; உடலின் இறுதி 7 கண்டங்கள்

2 ஒரு விலங்கின் வாழ்நாளில் இரு தொகுதி பற்கள் உருவானால் அது ——————— பல்லமைப்பு எனப்படும் விடை ; இரு முறை தோன்றும்

3 அட்டையின் முன் முனையிலுள்ள கதுப்பு போன்ற அமைப்பு ——————- எனப்படும் விடை ; முன் ஒட்டுறிஞ்சி அல்லது வாய் ஒட்டுறிஞ்சி

4 இரத்தத்தை உறிஞ்சும் அட்டையின் பண்பு ——— ————— என அழைக்கப்படுகிறது. விடை ; சாங்கிவோரஸ் அல்லது வாய் ஒட்டுறிஞ்சி

5 ———————— நைட்ரஜன் சார்ந்த கழிவுப் பொருள்களை இரத்தத்திலிருந்து பிரித்தெடுக்கிறது. விடை ; சாங்கிவோரஸ் அல்லது இரத்த உறிஞ்சிகள்

6 முயலின் தண்டுவட நரம்புகளின் எண்ணிக்கை ———————– விடை ; 37

III. சரியா தவறா எனக் கண்டறிக. தவறான கூற்றை சரியானதாக மாற்றுக.

  1. இரத்தம் உறைவதைத் தடுக்கும் ஹிபாரின் என்ற பொருள் அட்டையின் உமிழ்நீரில் காணப்படுகிறது. ( தவறு )
  • இரத்தம் உறைவதைத் தடுக்கும் ஹிருடின் என்ற பொருள் அட்டையின் உமிழ்நீரில் காணப்படுகிறது.
  1. விந்து நாளம் அண்டம் வெளிச் செலுத்தப்படுவதில் பங்கேற்கிறது. ( தவறு )
  • விந்து நாளம் விந்து வெளிச் செலுத்தப்படுவதில் பங்கேற்கிறது.
  1. முயலின் முன்கடைவாய்ப் பற்களுக்கும் பின் கடைவாய் பற்களுக்கும் இடையேயான இடைவெளிப்பகுதி டயாஸ்டீமா எனப்படும். ( தவறு )
  • முயலின் முன்கடைவாய்ப் பற்களுக்கும் முன் கடைவாய் பற்களுக்கும் இடையேயான இடைவெளிப்பகுதி டயாஸ்டீமா எனப்படும்.
  1. முயலின் பெருமூளை அரைக்கோளங்கள் கார்போரா குவாட்ரி ஜெமினா என்ற குறுக்கு நரம்பு பட்டையால் இணைக்கப்பட்டுள்ளது. ( தவறு )
  • முயலின் பெருமூளை அரைக்கோளங்கள் கார்பஸ் கலோசம் என்ற குறுக்கு நரம்பு பட்டையால் இணைக்கப்பட்டுள்ளது.

IV. பொருத்துக.

1) கலம் I ஐ கலம் II மற்றும் III உடன் சரியாகப் பொருத்தி விடையைத் தனியே எழுதுக.

உறுப்புகள்                சூழ்ந்துள்ள சவ்வு                அமைவிடம்

மூளை                             புளூரா                                           வயிற்றறை

சிறுநீரகம்                    கேப்ஸ்யூல்                                  மீடியாஸ்டினம்

இதயம்                            மூளை உறைகள்                    மார்பறையில்

நுரையீரல்                    பெரிகார்டியம்                        மண்டையோட்டுக் குழி

விடை ; 1 – C – D, 2 – B – A, 3 – D – B, 4 – A – C

V. ஓரிரு வார்த்தைகளில் விடையளி.

1. ஹிருடினேரியா கிரானுலோசாவின் பொதுப் பெயரை எழுதுக.

இந்திய கால்நடை அட்டை

2. அட்டை எவ்வாறு சுவாசிக்கிறது?

அட்டையில் தோல் மூலம் சுவாசம் நடைபெறுகிறது.

3. முயலின் பல் வாய்ப்பாட்டினை எழுதுக.

2033/1023

4. அட்டையின் உடலில் எத்தனை இணை விந்தகங்கள் உள்ளன?

அட்டையின் உடலில் 11 இணை விந்தகங்கள் உள்ளன

5. முயலில் டையாஸ்டீமா எவ்வாறு உருவாகின்றது?

வெட்டும் பற்களுக்கும் முன் கடவாய்பற்களுக்கு இடையேயான இடைவெளி டையாஸ்டீமாவை ஏற்படுத்துகின்றது.

6. இரு சுவாசக் கிளைகளுடனும் இணைந்துள்ள உறுப்புகள் எவை?

நுரையீரல்

7. அட்டையின் எந்த உறுப்பு உறிஞ்சு கருவியாகச் செயல்படுகிறது?

தொண்டைப்பகுதி

8. CNS – ன் விரிவாக்கம் என்ன?

மைய நரம்பு மண்டலம்

9 முயலின் பல்லமைவு ஏன் ஹெட்டிரோடான்ட் (வேறுபட்ட) பல்லமைவு எனப்படுகிறது?

முயலின் பற்கள் பல்வேறு வகையான அமைப்பைக் கொண்டது. எனவே முயலின் இப்பல்லைமப்பு ஹெட்டிரோடென்ட் பல்லமைப்பு எனப்படுகிறது

10 அட்டை ஓம்புயிரியின் உடலிலிருந்து எவ்வாறு இரத்தத்தை உறிஞ்சுகிறது?

முன் ஒட்டுறிஞ்சி மூலம் Y வடிவ காயத்தை ஏற்படுத்தி ஒரு மயக்ககப் பொருளைச் செலுத்தி விருந்தோம்பியின் உடலில் இருந்து இரத்ததத்தை உறிஞ்சுகிறது.

VI. குறுகிய விடையளி.

1 முயலின் சுவாசக் குழாயில் குருத்தெலும்பு வளையங்கள் காணப்படுவது ஏன் ?

மூச்சுக்குழாயின் வழியே காற்று எளிதாகச் சென்று வரும் வகையில் அதன் சுவர்கள் குருத்தெலும்பு வளையங்களால் தாங்கப்படுகின்றன

2 அட்டையில் காணப்படும் ஒட்டுண்ணி தகவமைப்புகளை எழுதுக.

  1. தொண்டை இரத்தத்தை உறிஞ்சப் பயன்படுகிறது.
  2. உடலின் இரு முனைகளிலும் உள்ள ஒட்டுறிஞ்சிகள் அட்டையை விருந்தோம்பியுடன் உறுதியாக இணைத்துக் கொள்ளப் பயன்படும் கவ்வும் உறுப்புகளாகச் செயல்படுகின்றன.
  3. அட்டையின் வாயினுள் காணப்படும் மூன்று தாடைகள் விருந்தோம்பியின் உடலில் வலியில்லாத Y – வடிவ காயத்தை உருவாக்க உதவுகின்றன.
  4. உமிழ் நீர்ச் சுரப்பிகளால் உருவாக்கப்படும் ஹிருடின் என்ற பொருள் இரத்தத்தை உறைய விடுவதில்லை. எனவே தொடர்ச்சியாக இரத்தம் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.
  5. பக்கக் கால்களும் (parapodia) மயிர்க் கால்களும் (Setae) காணப்படுவதில்லை. ஏனெனில் இவ்வுறுப்புகள் எந்த வகையிலும் தேவையில்லை.
  6. தீனிப்பையில் இரத்தம் சேமிக்கப்படுகிறது. இது அட்டைக்கு பல மாதங்களுக்கு ஊட்டமளிக்கிறது. இதன் காரணமாக சீரண நீரோ, நொதிகளோ அதிக அளவில் சுரக்க வேண்டிய தேவையில்லை.

VII. விரிவான விடையளி.

1. அட்டையின் இதய அமைப்புக்கேற்ப அதன் சுற்றோட்ட மண்டலம் எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது?

  • இரத்த உடற்குழி மூலம் அட்டையில் சுற்றோட்டம் நடைபெறுகிறது.
  • உண்மையான இரத்தக் குழாய்கள் இல்லை
  • இரத்தக்குழாய்களுக்குப் பதிலாக இரத்தம் போன்ற திரவத்தால் நிரப்பப்பட்ட இரத்த உடற்குழிக் கால்வாய்கள் அமைந்துள்ளன.
  • இந்த உடற்குழி திரவமானது ஹீமோகுளோபினைக் கொண்டுள்ளது.
  • காற்றோட்ட மண்டலத்தில் நான்கு நீண்ட கால்வாய்கள் உள்ளன.
  • ஒரு கால்வாய் உணவுப் பாதையின் மேல் புறமாகவும், மற்றொரு கால்வாய் பாதையின் கீழ் புறமாகவும் அமைந்துள்ளது.
  • மற்ற இரு கால்வாய்களும் உணவுப் பாதையின் இரு பக்கங்களிலும் அமைந்துள்ளன.
  • இவ்விரு கால்வாய்ககுளம் உட்புறம் வால்வுகளைக் கொண்டு, இதயம் போன்று செயல்படுகின்றன. நான்கு கால்வாய்களும் கீழ்புறத்தில் 26வது கண்டத்தில் ஒன்றாக இணைகின்றன.

2. அட்டையில் நடைபெறும் இடப்பெயர்ச்சி நிகழ்ச்சியின் படிநிலைகளை எழுதுக.

  • அட்டை, தளத்தில் வளைதல் அல்லது ஊர்தல் முறையிலும்,
  • நீரில் 2) நீந்துதல் முறையிலும் இடப்பெயர்ச்சி செய்கிறது.

1) வளைதல் அல்லது ஊர்தல் இயக்கம்

இவ்வகை இயக்கமானது தசைகளின் சுருக்கம் மற்றும் நீள்தல் மூலம் நடைபெறுகிறது. இவ்வியக்கத்தின்போது ஒட்டிக் கொள்வதற்கு இரு ஒட்டுறிஞ்சிகளும் உதவுகின்றன.

2) நீந்துதல் இயக்கம்

அட்டையானது நீரில் மிகுந்த செயலாக்கத்துடன் நீந்தி, அலை இயக்கத்தை மேற்கொள்கிறது.

  1. முயலின் ஆண் இனப்பெருக்க மண்டலத்தைப் படம் வரைந்து விளக்குக.

முயலின் ஆண் இனப்பெருக்க மண்டலம் ஓரிணை விந்தகங்கள் மற்றும் அவற்றோடு தொடர்புடைய நாளங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

விந்தகங்கள் விந்து செல்களை உற்பத்தி செய்கின்றன.

விந்தகங்கள் வயிற்றுக்கு வெளியே தொங்கிக் கொண்டிருக்கும், தோலாலான விதைப்பைகளினுள் அமைந்துள்ளன. ஒவ்வொரு விந்தகமும் விந்து நுண்குழல்கள் என்ற சுருண்ட குழல்களின் தொகுப்பைக் கொண்டுள்ளது.

இக்குழல்களில் விந்து செல்கள் முதிர்ச்சி அடையும் போது, அவை சேகரிக்கும் நாளங்களில் தேக்கப்பட்டு, எபிடிடைமிசுக்குக் கடத்தப்படுகின்றன.

இருபக்க விந்து நாளங்களும் சிறுநீர்ப்பைக்கு சற்று கீழே சிறுநீர் வடிகுழாயில் இணைகின்றன.

சிறுநீர் வடிகுழாய் பின்னோக்கி சென்று, ஆண்குறியில் சேர்கிறது.

10th Science Book Back Answer Biology Unit 13

 

முயல் – ஆண் இனப்பெருக்க மண்டலம்

VIII. உயர் சிந்தனை வினாக்கள்.

1 அர்ஜூன் பத்தாம் வகுப்பு படிக்கிறான். அவனுக்கு காய்ச்சல் வந்ததால் மருத்துவரை சந்திக்கச் செல்கிறான். அவன் மருத்துவமனைக்குச் சென்றபோது, அட்டையால் தீவிரமாக கடிக்கப்பட்ட ஒரு நோயாளி சிகிச்சை பெறுவதைக் காண்கிறான். மிகவும் கொடூரமாக இருப்பதைக் கண்ட அர்ஜூன், மருத்துவரிடம் அட்டை மனிதனின் தோலில் ஒட்டும்போதே, அது கடிப்பதை ஏன் உணர முடிவதில்லை என வினவுகிறான். அதற்கு மருத்துவர் அளித்த விடை என்னவாக இருக்கும்?

  • அட்டைகள் ஹிருடின் என்ற புரதத்தைச் சுரப்பதன் மூலம் இரத்த உறைவதைக் தடுக்கின்றன.
  • மேலும் விருந்தோம்பியின் உடலில் மயக்கப் பொருளைச் செலுத்துவதன் மூலம் இவை கடிப்பதை விருந்தோம்பிகள் உணர முடிவதில்லை.

2 சைலேஷ் தன் வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்த்து வருகிறான். அவற்றில் சில முயல்களும் உள்ளன. ஒரு நாள் முயல்களுக்கு உணவளிக்கும்போது அவற்றின் பற்கள் வித்தியாசமாக இருப்பதை கவனிக்கிறான். இது குறித்து அவனுடைய தாத்தாவிடம் கேட்கிறான். அந்த வித்தியாசத்திற்கு என்ன காரணம் என்று ஊகிக்க முடிகிறதா ? விவரி.

  • பற்கள் கடினமான, எலும்பு போன்ற அமைப்புகள், இவை உணவுப் பொருட்களை வெட்டுவதற்கும், மெல்லுவதற்கும் அரைப்பதற்கும் பயன்படுகிறது.
  • முயல், தன் வாழ்நாளில் இரு தொகுதி பற்களை பெறுகிறது.
  • இவ்வாறு ஒரு விலங்கின் வாழ்நாளில் இரு தொகுதி பற்கள் காணப்படும் நிலை “இரு முறை தோன்றும் பல்லமைப்பு” என்று பெயர்.
  • பாலுட்டிகளில் நான்கு வகைப் பற்கள் காணப்படுகின்றன. அவை
    1. வெட்டும் பற்கள்
    2. கோரைப்பற்கள்
    3. முன் கடைவாய் பற்கள்
    4. பின் கடைவாய் பற்கள்
  • முயலின் பல்வாய்ப்பாடு 1 x 2/1, C x 0/0, PM x 3/2, M x 3/3 அல்லது 2033/1033
  • முயலுக்கு கோரைப்பற்கள் கிடையாது.
  • முயலின் வெட்டும் பற்களுக்கும், முன்கடை வாய்ப் பற்களுக்கும் இடையேயான இடைவெளி என அழைக்கப்படுகிறது.
  • மெல்லும் போதும், அரைக்கும் போதும் உணவை கையாளுவதற்கும் இந்த பல் இடைவெளி பயன்படுகிறது.

IX. மதிப்பு சார் வினாக்கள்.

1 அட்டையில் பல வகையான சீரண சுரப்பு மற்றும் நொதிகள் காணப்படுவதில்லை ஏன்?

  • ஏனெனில் அட்டை ஒரு உண்மையான உடற்குழியுடைய வளைதசைப் புழுக்கள் ஆகும்.
  • இது முன் ஒட்டுறிஞ்சி மூலம் Y வடிவ காயத்தை ஏற்படுத்தி இரத்தத்தை உறிஞ்சுகிறது.
  • சீரணமாகாத உணவான இரத்தம் தீனிப்பை அறைகளிலும் குடல்வால்களிலும் சேமிக்கப்படுகிறது.
  • வயிற்றுக்கு இரத்தமானது, சொட்டு சொட்டாக அனுபப்படுகிறது.
  • புரதச் சீரண நொதி மூலம் வயற்றில் சீரணம் நடைபெறுகிறது.
  • செரிக்கப்பட்ட இரத்தத்தை குடல் மெதுவாக உறிஞ்சிக் கொள்கிறது.
  • அட்டை தனது முழு உணவையும் செரித்து, உறிஞ்சிக் கொள்ள ஓராண்டுக்கு மேலாகிறது.
  • இதனால் அட்டையில் பல வகையான சீரண சுரப்பு மற்றும் நொதிகள் காணப்படுவதில்லை.

2. முயலின் உணவு மண்டலம் தாவர உண்ணி வகையான ஊட்டத்திற்கு ஏற்றாற் போல் எவ்வாறு அமைந்துள்ளது?

  • வாய்க்குழியானது உணவுக்குழாயாகத் தொடர்கிறது.
  • உணவுக்குழாய் இரைப்பையினுள் திறக்கிறது. இரப்பையைத் தொடர்ந்து சிறு குடல் அமைந்துள்ளது.
  • மெல்லிய சுவருடைய குடல்வால் நீட்சி, சிறு குடலும் பெருங்குடலும் சந்திக்கும் இடத்தில் காணப்படுகிறது.
  • இதில் உள்ள பாக்டீரியா, செல்லுலோஸை செரிக்க உதவுகிறது.

சீரணச் சுரப்பிகள்

  • உமிழ்நீர்ச் சுரப்பிகள், இரப்பைச் சுரப்பிகள், கல்லீரல் கணையம் மற்றும் சிறுகுடல் சுரப்பிகள் போன்றவை சீரண சுரப்பிகளாகும்.
  • இச்சுரப்பிகள் சுரக்கும் நொதிகள் உணவுப் பாதையில் உணவின் செரிமானத்திற்குத் துணை புரியும்.

Leave a Reply