10th Science Book Back Answer Biology Unit 12
10th Standard Science Book back Answers Tamil Medium | Lesson.12 Plant Anatomy And Plant Physiology ( தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல்)
10th Science Book Back Answer Biology Unit 12. 10th Standard Science Physics Answers, 10th Chemistry Book Back Answers, 10th Biology Book Back Answers Tamil Medium and English Medium. 10th All Subject Text Books. Class 10 Science Samacheer kalvi guide. 10th Tamil Samacheer Kalvi Guide. 10th Science Unit 12. தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல் book back answers. 10th Science Samacheer Kalvi Guide TM & EM All Unit Book Back Answers.
10th Standard Science Book back Answers | Lesson.12 Plant Anatomy And Plant Physiology (தாவர உள்ளைமப்பியல் மற்றும் தாவர செயலியல்)
I. சரியான விடையைத் தேர்ந்தெடு.
1. காஸ்பேரியன் பட்டைகள் வேரின் _________ பகுதியில் காணப்படுகிறது.
- புறணி
- பித்
- பெரிசைக்கிள்
- அகத்தோல்
விடை ; அகத்தோல்
2. உள்நோக்கிய சைலம் என்பது எதன் சிறப்புப் பண்பாகும்?
- வேர்
- தண்டு
- இலைகள்
- மலர்கள்
விடை ; தண்டு
3. சைலமும் புளோயமும் ஒரே ஆரத்தில் அருகருகே அமைந்து காணப்படுவது _________ எனப்படும்.
- ஆரப்போக்கு அமைப்பு
- சைலம் சூழ் வாஸ்குலார் கற்றை
- ஒன்றிணைந்தவை
- இவற்றில் எதுவுமில்லை
விடை ; ஒன்றிணைந்தவை
4. காற்றில்லா சுவாசத்தின் மூலம் உருவாவது
- கார்போஹைட்ரேட்
- எத்தில் ஆல்கஹால்
- அசிட்டைல் கோ.ஏ
- பைருவேட்
விடை ; எத்தில் ஆல்கஹால்
5. கிரப் சுழற்சி இங்கு நடைபெறுகிறது
- பசுங்கணிகம்
- மைட்டோகாண்ட்ரியாவின் உட்கூழ்ம மேட்ரிக்ஸ்
- புறத்தோல் துளை
- மைட்டோ காண்ட்ரியாவின் உட்புறச்சவ்வு
விடை ; மைட்டோகாண்ட்ரியாவின் உட்கூழ்ம மேட்ரிக்ஸ்
6. ஒளிச்சேர்க்கையின் போது எந்த நிலையில் ஆக்ஸிஜன் உற்பத்தியாகிறது?
- ATP யானது ADP யாக மாறும் போது
- CO2 நிலை நிறுத்தப்படும் போது
- நீர்மூலக்கூறுகள் பிளக்கப்படும் போது
- இவை அனைத்திலும்.
விடை ; நீர்மூலக்கூறுகள் பிளக்கப்படும் போது
II. கோடிட்ட இடங்களை நிரப்பு.
- வேரில் புறணியின் உட்புற அடுக்கு ____________ ஆகும் விடை ; பாரன்கைமா செல்கள்
- சைலமும் புளோயமும் வெவ்வேறு ஆரங்களில் காணப்படும் வாகுலார் கற்றை ____________ அமைவாகும். விடை ; ஆரப்போக்கு அமைந்த வாஸ்குலார் கற்றை
- கிளைக்காலிஸிஸ் நடைபெறும் இடம் ____________ விடை ; சைட்டோபிளாசம்
- ஒளிச்சேர்க்கையின்போது வெளிப்படும் ஆக்ஸிஜன் ____________ லிருந்து கிடைக்கிறது. விடை ; நீரிலிருந்து
- செல்லின் ATP உற்பத்தி தொழிற்சாலை ____________ விடை ; மைட்டோகாண்ட்ரியா
III. சரியா? தவறா? (தவறு எனில் கூற்றினை திருத்துக)
- தாவரங்களில் நீரை கடத்துவதில் ஈடுபடும் திசு புளோயம். ( தவறு )
- தாவரங்களில் நீரை கடத்துவதில் ஈடுபடும் திசு சைலம்
- தாவரத்தின் வெளிப்புறத்தில் காணப்படும் மெழுகுப்படலம் கியூடிக்கிள் ( சரி )
- ஒருவிதையிலைத் தாவரத் தண்டில் சைலத்திற்கும் புளோயத்திற்கும் இடையில் கேம்பியம் காணப்படுகிறது. ( தவறு )
- ஒருவிதையிலைத் தாவரத் தண்டில் சைலத்திற்கும் புளோயத்திற்கும் இடையில் கேம்பியம் காணப்படுவதில்லை.
- இருவிதையிலைத் தாவர வேரில் மேற்புறத் தோலுக்கு கீழே பாலிசேட் பாரன்கைமா உள்ளது. ( தவறு )
- இருவிதையிலைத் தாவர இலை மேற்புறத் தோலுக்கு கீழே பாலிசேட் பாரன்கைமா உள்ளது.
- இலையிடைத் திசு பசுங்கணிகங்களைப் பெற்றுள்ளது. ( சரி )
- காற்று சுவாசத்தை விட காற்றில்லா சுவாசம் அதிக ATP மூலக்கூறுகளை உற்பத்தி செய்கிறது. ( தவறு )
- காற்று சுவாசத்தை விட காற்றில்லா சுவாசம் குறைவான ATP மூலக்கூறுகளை உற்பத்தி செய்கிறது.
IV. பொருத்துக.
புளோயம் சூழ் வாஸ்குலார் கற்றை – டிரசீனா
கேம்பியம் – உணவு கடத்துதல்
சைலம் சூழ் வாஸ்குலார் கற்றை – பெரணிகள்
சைலம் – இரண்டாம் நிலை வளர்ச்சி
புளோயம் – நீரைக் கடத்துதல்
விடை ; 1 – C, 2 – D, 3 – A, 4 – E, 5 – B
V. ஓரிரு வார்த்தைகளில் விடையளி
- ஒன்றிணைந்த வாஸ்குலார் கற்றை என்றால் என்ன?
சைலமும் புளோயமும் ஒரே ஆரத்தில் ஒரு கற்றையில் அமைந்திருப்பது ஒன்றிணைந்த வாஸ்குலார் கற்றை எனப்படும்.
இது இரு வகைப்படும்
- ஒருங்கமைந்தவை
- இருபக்க ஒருங்கமைந்தவை
2. ஒளிச்சேர்க்கைக்கு தேவையான கார்பன் எதிலிருந்து பெறப்படுகிறது?
ஒளிச்சேர்க்கைக்கு தேவையான கார்பன் வளிமண்டலத்தில் உள்ள கார்பன்-டை-ஆக்ஸைடிலிருந்து பெறப்படுகிறது
3. காற்று சுவாசத்திற்கும் காற்றில்லா சுவாசத்திற்கும் பொதுவான நிகழ்ச்சி எது?
காற்று சுவாசத்திற்கும் காற்றில்லா சுவாசத்திற்கும் பொதுவான நிகழ்ச்சி கிளைக்காலிசிஸ்
4. கார்போஹைட்ரேட்டானது ஆக்ஸிகரணமடைந்து ஆல்கஹாலாக வெளியேறும் நிகழ்வின் பெயர் என்ன?
கார்போஹைட்ரேட்டானது ஆக்ஸிகரணமடைந்து ஆல்கஹாலாக வெளியேறும் நிகழ்வின் பெயர் காற்றில்லா சுவாசம் (நொதித்தல்) ஆகும்.
VI. சுருக்கமாக விடையளி
1. இருவிதையிலைத் தாவரத் தண்டின் வாஸ்குலார்கற்றையின் அமைப்பைப் பற்றி எழுதுக.
- வாஸ்குலார் கற்றைகள் ஒன்றிணைந்தவை
- ஒருங்கமைந்தவை
- திறந்தவை
- உள்நோக்கு சைலம் கொண்டவை
கோலன்கைமை
- குறைவான எண்ணிக்கை மற்றும் சம அளவுடையவை
- வளைய வடிவில் உள்ளது
- திறந்தவை
- கற்றை உறை இல்லை
திறந்த ஒருங்கமைந்த வாஸ்குலார் கற்றை
சைலத்திற்கும் புளோயத்திற்கும் இடையில் கேம்பியம் காணப்பட்டால் அவை திறந்த ஒருங்கமைந்த வாஸ்குலார் கற்றை ஆகும்.
உள்நோக்கிய சைலம்
புரோட்டா சைலம் மையத்தை நோக்கியும் மெட்டா சைலம் வெளிப்புறத்தை நோக்கியும் காணப்படுவது
எ.கா. – தண்டு
ஒன்றிணைந்த வாஸ்குலார் கற்றை
சைலம் புளோயத்தை முழுவதுமாக சூழ்ந்து காணப்படுவது
எ.கா. பாலிபோடியம்
புளோயம் சூழ் வாஸ்குலார் கற்றை
புளோயம் சைலத்தை முழுவதுமாக சூழந்து காணப்படுவது
எ.கா. பாலிபோடியம்
2. இலையிடைத்திசு (மீசோபில்) பற்றி குறிப்பு எழுதுக.
- மேல்புறத்தோலுக்கும், கீழ்புறத்தோலுக்கும் இடையே காணப்படும் தளத்திச இலையிடைத்திசு அல்லது மீசோபில் எனப்படும். இருவித்திலைத் தாவ இலையிடைத்திசு பாலிசேட் பாரன்கைமா மற்றும் ஸ்பாஞ்சி பாரன்கைமா என இருவை செல்கள் உள்ளன.
- இரு வித்திலை தாவர இலையிடைத்திசு பாலிசேட் மற்றும் ஸ்பாஞ்சி பாரன்கைமா என வேறுபாடின்றி காணப்படுகிறது.
- செல் இடைவெளிகளுடன், பசுங்கணிகங்களுடன் கூடிய ஒழுங்கற்ற செல்கள் காணப்படுகின்றன.
3. ஒரு ஆக்ஸிஸோமின் படம் வரைந்து பாகங்களை குறி.
4. மலரும் தாவரங்களில் காணப்படும் மூன்று வகையான திசுத் தொகுப்புகளை குறிப்பிடுக.
- தோல் திசுத்தொகுப்பு அல்லது புறத்தோல் திசுத்தொகுப்பு
- அடிப்படை அல்லது தளத்திசுத் தொகுப்பு
- வாஸ்குலார் திசுத்தொகுப்பு
5. ஒளிச்சேர்க்கை என்றால் என்ன? இது செல்லில் எங்கு நடைபெறுகிறது?
கார்பன்டை ஆக்ஸைடு மற்றும் நீரின் உதவியால், சூரிய ஒளியின் முன்னிலையில் பசுங்கணிகத்தில் கார்போஹைட்ரேட் தயாரிக்கப்படுகிறது.
ஒளிச்சேர்க்கை பசுங்கணிகத்தல் நடைபெறுகிறது.
6. சுவாச ஈவு என்றால் என்ன?
சுவாசித்தலின் போது வெளியேற்றப்பட்ட கார்பன் டை ஆக்ஸைடின் அளவிற்கும் எடுத்துக்கொள்ளப்பட்ட ஆக்ஸிஜன் அளவிற்கும் இடையேயுள்ள விகிதமே சுவாச ஈவு எனப்படும்.
சுவாச வு = வெளியிடப்படும் CO2 அளவு / எடுத்துக்கொள்ளப்படும் O2 அளவு
7. ஒளிச்சேர்க்கையின் போது இருள் வினைக்கு முன்பு ஏன் ஒளி வினை நடைபெற வேண்டும்?
ஒளிச்சார்ந்த வினையில் உண்டான ATP மற்றும் NADPH2 உதவியுடன் CO2 ஆனது கார்போஹைட்ரேட்டாக ஒடுக்கமைடைகிறது.
8. ஒளிச்சேர்க்கையின் ஒட்டுமொத்த சமன்பாட்டை எழுதுக.
6CO2 + 12H2O |
சூரியஒளி → பச்சையம் |
C6H12O6 + 6H2O + 6O2 |
டை ஆக்ஸைடு + நீர் கார்பன் | → | குளுக்கோஸ் + நீர் + ஆக்ஸிஜன் |
VII. விரிவாக விடையளி.
1. வேறுபாடு தருக.
அ. ஒரு விதையிலைத் தாவரவேர் மற்றும் இரு விதையிலைத் தாவர வேர்
திசுக்கள் | இருவிதையிலைத் தாவர வேர் | ஒருவிதையிலைத் தாவர வேர் |
சைலக்கற்றைகளின் எண்ணிக்கை |
நான்குமுனை சைலம் | பலமுனை சைலம் |
கேம்பியம் | காணப்படுகிறது (இரண்டாம் நிலை வளர்ச்சியின் பொழுது மட்டும்) | காணப்படவில்லை |
இரண்டாம் நிலை வளர்ச்சி | உண்டு | இல்லை |
பித் அல்லது மெட்டுல்லா | இல்லை | உண்டு |
இணைப்புத்திசு | பாரன்கைமா | ஸ்கிளிரன்கைமா |
எடுத்துக்காட்டு | அவரை | சோளம் |
ஆ. காற்றுள்ள சுவாசம் மற்றும் காற்றில்லா சுவாசம்
காற்றுள்ள சுவாசம்
செல்சுவாசத்தில் உணவானது ஆக்ஸிஜன் உதவியால் முழுவதுமாக ஆக்ஸிகரணமடைந்து கார்பன் டை ஆக்ஸைடு, நீர் மற்றும் ஆற்றலாக மாற்றப்படுகிறது.
இந்த சுவாசம் பெரும்பாலான தாவரங்கள் மற்றும் விலங்குகளில் நடைபெறுகிறது.
C6H12O6 + 6O2 → 6CO2 + 6H2O + ATP
காற்றில்லா சுவாசம்
ஆக்ஸிஜன் இல்லாத சூழலில் நடைபெறும் சுவாசமாகும்.
இதில் குளுக்கோஸானது எத்தனாலாகவும் (ஈஸ்டினால் மதுபான நொதித்தல்) அல்லது லேக்டிக் அமிலமாகவும் (பாக்டீரியங்களால் பால் புளித்தல்) மாற்றப்படுகிறது.
உடன் CO2 வெளியேறுகிறது.
C6H12O6 → 2CO6+ 2C2H2OH + ஆற்றல் (ATP)
2. காற்று சுவாசிகள் செல்சுவாசத்தின் போது எவ்வாறு குளுக்கோஸிலிருந்து ஆற்றலைப் பெறுகின்றன? அதற்கான மூன்று படிநிலைகளை எழுதி விவரிக்கவும்.
இவ்வகை செல்சுவாசத்தில் உணவானது ஆக்ஸிஜன் உதவியால் முழுவதுமாக ஆக்ஸிகரணமடைந்து கார்பன் டை ஆக்ஸைடு, நீர் மற்றும் ஆற்றலாக மாற்றப்படுகிறது. இந்த சுவாசம் பெரும்பாலான தாவரங்கள் மற்றும் விலங்குகளில் நடைபெறுகிறது.
C6H122O6 + 6O2 → 6CO2 + 6H2O + ATP
காற்றுச் சுவாசத்தின் படிநிலைகள்
அ. கிளைக்காலிஸிஸ் (குளுக்கோஸ் பிளப்பு):
இது ஒரு மூலக்கூறு குளுக்கோஸானது (6 கார்பன்) இரண்டு மூலக்கூறு பைருவிக் அமிலமாக (3 கார்பன்) பிளக்கப்படும் நிகழ்ச்சியாகும்.
இது சைட்டோபிளாசத்தில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியானது காற்று மற்றும் காற்றில்லா சுவாசம் இரண்டிற்கும் பொதுவானதாகும்.
ஆ. கிரப்சுழற்சி:
இந்நிகழ்ச்சி மைட்டோகாண்ட்ரியாவின் உட்கூழ்மத்தில் நடைபெறுகிறது (உட்கூழ்மம் – matrix) கிளைக்காலிஸிஸ் நிகழ்ச்சியின் முடிவில் உண்டான இரண்டு மூலக்கூறு பைருவிக் அமிலம் முழுவதும் ஆக்ஸிகரணம் அடைந்து கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் நீராக மாறும் இந்த சுழற்சிக்கு கிரப் சுழற்சி அல்லது ட்ரை கார்பாக்ஸிலிக் அமில சுழற்சி (TCA சுழற்சி) என்று பெயர்.
இ. எலக்ட்ரான் கடத்தும் சங்கிலி அமைப்பு:
மைட்டோகாண்ட்ரியாவின் உட்புறச்சவ்வில் எலக்ட்ரான் கடத்து சங்கிலி என்ற எலக்ட்ரான்களை கடத்தும் அமைப்பு உள்ளது. கிளைக்காலிஸிஸ் மற்றும் கிரப் சுழற்சியின் போது உண்டான NADH2 மற்றும் FADH2வில் உள்ள ஆற்றலானது இங்கு வெளியேற்றப்பட்டு அவை NAD+ மற்றும் FAD+ ஆக ஆக்ஸிகரணம் அடைகின்றன. இந்நிகழ்ச்சியின் போது வெளியான ஆற்றல் ADP-யால் எடுத்துக் கொள்ளப்பட்டு ATP ஆக உருவாகிறது. இதற்கு ஆக்ஸிகரண பாஸ்பேட் சேர்ப்பு என்று அழைக்கப்படும். இந் நிகழ்க்சியின் போது வெளியேற்றப்பட்ட எலக்ட்ரானை ஆக்ஸிஜன் எடுத்துக்கொண்டு நீராக (H2O) ஒடுக்கமடைகிறது.
3. ஒளிச்சேர்க்கையின் ஒளிசார்ந்த செயல் எவ்வாறு ஒளிச்சாராத செயலிலிருந்து வேறுபடுகிறது. இந்நிகழ்ச்சியின் ஈடுபடும் மூலப்பொருள்கள் யாவை? இறுதிப் பொருட்கள் யாவை? இவ்விரு நிகழ்ச்சிகளும் பசுங்கணிகத்தில் எங்கு நடைபெறுகின்றன?
ஒளிச்சேர்க்கையின் முழு நிகழ்ச்சியும் பசுங்கணிகத்தின் உள்ளே நடைபெறுகிறது. ஒளி சார்ந்த வினை அல்லது ஒளி வினை பசுங்கணிகத்தின் கிரானாவிலும், ஒளி சாரா வினை அல்லது இருள்வினை பசுங்கணிகத்தின் ஸ்ட்ரோமாவிலும் நடைபெறுகிறது.
ஒளிசார்ந்த வினை அல்லது ஒளி வினை (ஹில்வினை)
இது ராபின் ஹில் (1939) என்பவரால் முதன் முதலில் கண்டறியப்பட்டது. இந்நிகழ்வு சூரிய ஒளியின் முன்னிலையில் தைலகாய்டு சவ்வில் நடைபெறுகிறது.
சூரியஒளி பச்சையம் ஒளிச்சேர்க்கை நிறமிகள் சூரிய ஆற்றலை ஈர்த்து ATP மற்றும் NADPH2 வை உருவாக்குகின்றன. இவை இரண்டும் இருள்வினைக்குப் பயன்படுகின்றன.
ஒளிசாரா வினை அல்லது இருள்வினை (உயிர்பொருள் உற்பத்தி நிலை)
இந்நிகழ்ச்சியின் போது ஒளிச்சார்ந்த வினையில் உண்டான ATP மற்றும் NADPH2 உதவியுடன் CO2 ஆனது கார்போஹைட்ரேட்டாக ஒடுக்கமடைகிறது.
இது பசுங்கணிகத்தின் ஸ்ட்ரோமா பகுதியில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சி கால்வின் சுழற்சி எனவும் அழைக்கப்படுகிறது. இதற்கு சூரிய ஒளி தேவை இல்லை. எனவே இது இருள் வினை எனப்படும்.
கால்வின் சுழற்சியில் காற்றிலிருந்து CO2 ம் ஒளி வினையின் மூலம் உண்டான ATP மற்றும் NADPH2 ம் உள்நுழைகிறது.
VIII. உயர் சிந்தனைக்கான வினாக்கள்.
1. ஒளிச்சேர்க்கை ஒரு உயிர் வேதியியல் நிகழ்ச்சியாகும்.
அ. ஒளிவினை மற்றும் இருள் வினையின் போது உருவாகும் வினைவிளை பொருட்கள் யாவை?
இந்நிகழ்ச்சியின் போது ஒளிச்சார்ந்த வினையில் உண்டான ATP மற்றும் NADPH2 உதவியுடன் CO2 ஆனது கார்போஹைட்ரேட்டாக ஒடுக்கமடைகிறது.
ஆ. ஒளிச்சேர்க்கையின் உயிர் வேதி வினையில் ஈடுபடும் சில வினைபடுபொருட்கள் இந்நிகழ்ச்சியின் சுழற்சியில் மீண்டும் மீண்டும் ஈடுபடுகின்றன அந்த வினைபடு பொருட்களை குறிப்பிடுக.
- ஒளிச்சேர்க்கையானது இரண்டு செயல்வினைகளில் நடைபெறுகிறது.
- ஒளிவினை மூலம் மற்றும் இருள்வினை (கால்வின் சுழற்சி) ஒளிவினை மூலம் ATP மற்றும் NADPH2 உருவாகிறது.
- கால்வின் சுழற்சியில் வினைபடு பொருள் குளுக்கோஸ் மூலமாக கூடுதல் கார்பன் டை ஆக்ஸைடுவை உருவாக்குகிறது.
- இந்த சுழற்சி மூலம் NAP + ADP +Pi ஒளிவினை மூலமாக உருவாக்குகிறது. இதனுடன் நீர் மூலக்கூறு இணைந்து ATP மற்றும் NADPH2 யை மீண்டும் உருவாக்குகிறது.
2. பசுங்கணகித்தின் எந்தபகுதியில் ஒளிச்சார்ந்த செயல் மற்றும் கால்வின் சுழற்சி நடைபெறுகின்றன?
- ஒளி சாரந்த வினை தைலக்காய்டு (கிரானா) பகுதியில் நடைபெறுகிறது.
- ஒளி சாரா வினை (கால்வின் சுழற்சி) ஸ்ட்ரோமாவில் நடைபெறுகிறது.