10th Geography Guide Unit 4 Book & Additional Answer
Unit 4. இந்தியர் – வளங்கள் மற்றும் தொழிலகங்கள்
10th Social Science – Geography Tamil Medium Book Back & Additional Question – Answers
10th social Science – Geography Unit 4. இந்தியர் – வளங்கள் மற்றும் தொழிலகங்கள் Book Back & Additional Question – Answers
I. சரியான விடையைத் தேர்வு செய்க.
1.மாங்கனீசு இவற்றில் பயன்படுத்தப்படுகிறது.
அ) சேமிப்பு மின்கலன்கள்
ஆ) எஃகு தயாரிப்பு
இ) செம்பு உருக்குதல்
ஈ) பெட்ரோலிய சுத்திகரிப்பு
விடை: ஆ) எஃகு தயாரிப்பு
2.ஆந்த்ரசைட் நிலக்கரி ……………. கார்பன் அளவை கொண்டுள்ளது.
அ) 80% – 95%
ஆ) 70% க்கு மேல்
இ) 60% – 70%)
ஈ) 50% க்கும் குறைவு
விடை: அ) 80% – 95%
3.பெட்ரோலியத்தில் உள்ள முக்கிய கனிமங்கள் ஹைட்ரஜன் மற்றும் ………………………
அ) ஆக்ஸிஜன்
ஆ) நீர்
இ) கார்பன்
ஈ) நைட்ரஜன்
விடை: இ கார்பன்
4.தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் நகரம் ……………………..
அ) சேலம்
ஆ) சென்னை
இ) மதுரை
ஈ) கோயம்புத்தூர்
விடை: ஈ) கோயம்புத்தூர்
5.இந்தியாவில் முதல் அணுமின் நிலையம் நிறுவப்பட்ட மாநிலம் ……………………..
அ) குஜராத்
ஆ) இராஜஸ்தான்
இ) மகாராஷ்டிரம்
ஈ) தமிழ்நாடு
விடை: இ மகாராஷ்டிரம்
6.மிக அதிகமாக கிடைக்கக்கூடிய ஆற்றல் வளம் …………………..
அ) உயிரி சக்தி
ஆ) சூரியன்
இ) நிலக்கரி
ஈ) எண்ணெய்
விடை: ஆ) சூரியன்
7.புகழ் பெற்ற சிந்திரி உரத் தொழிலகம் அமைந்துள்ள மாநிலம் ………………..
அ) ஜார்கண்ட்
ஆ) பீகார்
இ) இராஜஸ்தான்
ஈ) அசாம்
விடை: அ) ஜார்கண்ட
8.சோட்டா நாகபுரி பீடபூமி பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு கருவாக இருப்பது ………………..
அ) போக்குவரத்து
ஆ) கனிமப்படிவுகள்
இ) பெரும் தேவை
ஈ) மின்சக்தி கிடைப்பது
விடை: ஆ) கனிமப்படிவுகள்
II. பொருத்துக.
- 1. பாக்சைட் சிமெண்ட்
- 2. ஜிப்சம் வானூர்தி
- 3. கருப்பு தங்கம் மின்சாதனப் பொருட்கள்
- 4. இரும்பு தாது நிலக்கரி
- 5. மைக்கா மேக்னடைட்
விடை: 1 – ஈ, 2 – அ, 3 – உ, 4 – ஆ, 5 – இ
10th Geography Guide Unit 4 Tamil Medium
III. சுருக்கமான விடையளி.
1.வளத்தை வரையறுத்து அதன் வகைகளை குறிப்பிடுக.
- இயற்கையிலிருந்து பெறப்பட்டு உயிரினங்களால் பயன்படுத்தப்படும் அனைத்து வளங்களும் “இயற்கை வளம்” என்று அழைக்கப்படுகிறது.
- புதுப்பிக்கக்கூடிய வளம் – சூரிய ஆற்றல்
- புதுப்பிக்க இயலாத வளம் – நிலக்கரி
2.கனிமங்கள் மற்றும் அதன் வகைகள் யாவை?
- ஒரு குறிப்பிட்ட வேதியியல் மற்றும் இயற்பியல் பண்புகளைக் கொண்ட உயிருள்ள மற்றும் உயிரற்ற இயற்கை மூலங்கள் கனிமங்கள் ஆகும்.
- கனிமங்கள் இரண்டு பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன. அவை அ. உலோகக்கனிமங்கள், ஆ. அலோகக்கனிமங்கள்.
3.மெக்னீசியத்தின் பயன்களை குறிப்பீடுக.
- இது இரும்பு எஃகு மற்றும் உலோகக் கலவை உற்பத்திக்கு அடிப்படையான மூலப்பொருள் ஆகும்.
- வெளுக்கும் தூள், பூச்சிக்கொல்லிகள், வண்ணப்பூச்சிகள், மின்கலன்கள் போன்றவைத் தயாரிப்பதற்கு மெக்னீசியம் பயன்படுகின்றது.
4.இயற்கை எரிவாயு என்றால் என்ன?
- இயற்கை எரிவாயு பொதுவாக பெட்ரோலிய பகுதிகளுடன் இணைந்து காணப்படுகிறது.
- இது இயற்கையாக உருவாகும் ஒரு நீர்மகரிம வாயுவாகும்.
- இவற்றின் பெரும்பகுதி மீத்தேன் வாயுவும் பல்வேறு அளவுகளில் உள்ள உயர் அல்கேன்கள் கலந்த கலவைகளால் ஆனது.
5.நிலக்கரியின் வகைகளை அதன் கரிம அளவுகளுடன் குறிப்பிடுக.
- ஆந்தரசைட்: 80 முதல் 90%
- பிட்டுமினஸ் : 60 முதல் 80%
- பழுப்பு நிலக்கரி: 40 முதல் 60%
- மரக்கரி: 40% கும் குறைவு.
6.இந்தியாவில் சணல் உற்பத்தி செய்யும் முக்கிய பகுதிகளைக் குறிப்பிடுக.
- மேற்கு வங்காளம், ஆந்திரப்பிரதேசம், பீகார், அசாம், உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா சணல்கள் உற்பத்தி செய்கின்ற மாநிலங்களாகும்.
7.இந்தியாவின் முக்கிய எண்ணெய் உற்பத்தி பகுதிகளைக் குறிப்பிடுக.
- மேற்கு கடற்கரைக்கு அருகில் உள்ள எண்ணெய் வயல்கள் :
- மும்பை ஹை எண்ணெய் வயல் (65% மிகப்பெரியது)
- குஜராத் கடற்கரை (2வது பெரியது)
- அகமதாபாத் – கலோல்பகுதி
IV. வேறுபடுத்துக.
1.புதுப்பிக்க இயலும் மற்றும் புதுபிக்க இயலாத வளங்கள்.
புதுபிக்க இயலும் வளங்கள்
- பயன்பாட்டிற்கு பிறகு இயற்கை முறையில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடிய வளங்கள் புதுப்பிக்க இயலும் வளங்களாகும்.
- சூரிய சக்தி, காற்று சக்தி, உயிரின கழிவு வாயு வளிமம், ஓதசக்தி, அலைசக்தி போன்றவை புதுப்பிக்கக்கூடிய வளங்கள் ஆகும்.
புதுபிக்க இயலாத வளங்கள்
- பயன்பாட்டிற்கு பிறகு மீண்டும் மீட்டுருவாக்கம் செய்ய இயலா வளங்கள் புதுப்பிக்க இயலா வளங்கள் ஆகும்.
- நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கை வாயு போன்றவை புதுப்பிக் இயலாத வளங்கள் ஆகும்.
2.உலோகம் மற்றும் அலோக கனிமங்கள்.
உலோகக் கனிமங்கள்
- உலோகக் கனிமங்கள் என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உலோகங்களைக் கொண்டிருக்கும்.
- உலோகக் கனிமப் படிவுகளில் இரும்பு, மாங்கனீசு, தாமிரம், பாக்சைட், நிக்கல், துத்தநாகம், காரியம், தங்கம் போனற உலோகங்கள் காணப்படுகின்றன.
அலோகக் கனிமங்கள்
- அலோகக் கனிமங்களில் உலோகத் தன்மை இருப்பதில்லை.
- மைக்கா, சுண்ணாம்பு, ஜிப்சம், நைட்ரேட், பொட்டஷ், டோலமைட், நிலக்கரி, பெட்ரோலியம் ஆகியன முக்கிய அலோகங்க கனிமங்களாகும்
3.வேளாண் மற்றும் கனிமம் சார்ந்த தொழிலகங்கள்.
வேளாண் சார்ந்த தொழிலகங்கள்
- வேளாண் சார்ந்த தொழிலகங்கள் வேளாண் துறையிலிருந்து மூலப்பொருள்களை பெறுகின்றது
- பருத்தி நெசவாலைகள், சணல் ஆலைகள், பட்டு நெசவாலைகள், சர்க்கரை ஆலைகள் முக்கிய சான்றுகள்
கனிமம் சார்ந்த தொழிலகங்கள்
- இத்தொழில்கள் உலோகம் மற்றும் உலோகமற்ற பொருட்களை மூலப்பொருட்களாக பயன்படுத்தப்படுகிறது.
- இரும்பு எஃகு தொழிற்சாலைகள், சிமெண்ட் தொழிற்சாலைகள், இரசாயன உரத் தொழிற்சாைலைகள் இதற்கு சான்றுகளாகும்.
4.சணல் ஆலைகள் மற்றும் சர்க்கரை ஆலைகள்.
சணல் ஆலைகள்
- சணல் ஆலைகள் என்பது குறைவான விலையில் கிடைக்கக்கூடிய சணலிலிருந்து பொருடகள் தயாரிக்கும் ஆலைகளாகும்.
- சணல் உற்பத்தியில் உலகில் வங்கதேசத்திற்கு அடுத்து இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது
இந்தியாவில் சணல் உற்பத்தியில் மேற்கு வங்கம் முதலிடம் பெறுகிறது. - மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம், பீகார், அசாம், உத்திரப்பிரதேசம்,சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா முதலியன சணல் உற்பத்தி செய்யும் மாநிலங்கள் ஆகும்.
சர்க்கரை ஆலைகள்
- சர்க்கரை ஆலைகள் என்பது கரும்பு, சர்க்கரை கிழங்குகள் ஆகியவற்றிலிருந்து சர்க்கரை தயாரிக்கும் ஆலைகளாகும்.
- கரும்பு உற்பத்தியில் உலகில் பிரேசிலுக்கு அடுத்து இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது
- இந்தியாவில் சணல் உற்பத்தியில் உத்திரப்பிரதேசம் முதலிடம் பெறுகிறது.
- உத்திரப்பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், குஜராத், தமிழ்நாடு, ஹரியானா, பஞ்சாப், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சர்க்கரை ஆலைகள் உள்ளன.
5.மரபு சார் மற்றும் மரபு சாரா எரிசக்தி.
மரபு சார் எரிசக்தி
- மரபுசார் எரிசக்தி புதுபிக்க இயலாத வளங்களாகும்
- பெரும்பாலன வளங்கள் பயன்பாட்டின்போது மாசுக்கள் ஏற்படக் காரணமாகின்றன
- அனல் மின்சக்தி, அணு மின்சக்தி ஆகியன இவற்றிற்கு எடுத்துக்காட்டாகும்.
மரபு சார் எரிசக்தி
- மரபுசார் எரிசக்தி புதுபிக்க கூடிய வளங்களாகும்
- பயன்பாட்டின்போது மாசுக்கள் ஏற்படக் வாய்ப்புகளில்லை.
- நீர்மின்சக்தி, சூரிய சக்தி, காற்று சக்தி, உயிரி சக்தி இவற்றிற்கு எடுத்துக்காட்டாகும்.
V. ஒரு பத்தியில் விடையளி.
1.இந்தியாவில் உள்ள பருத்தி நெசவாலைகளின் பரவல் பற்றி எழுதுக.
பருத்தி நெசவாலைகள் :
- இந்தியா இத்துறையில் உலகின் இரண்டாம் இடத்தில் உள்ளது.
- பாரம்பரிய தொழில்களான கைவினைப்பொருள்கள், சிறிய விசைத்தறிகள் போன்றவை லட்சக்கணக்கிலான கிராமப்புற மற்றும் புறநகர் மக்களுக்கு வேலை வாய்ப்பினை அளிக்கும் ஆதாரங்களாக உள்ளன.
- பருத்தி இழையிலிருந்து , விதைகளை பிரித்தெடுக்கும் முறைக்கு ஜின்னிங் என்று பெயர்.
- மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதியில் பருத்தியாலைகள் செறிந்து காணப்படுவதால் மும்பை, இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது.
- மகாராஷ்டிரா மாநிலத்தில் காணப்படும் கரிசல் மண், ஈரப்பத காலநிலை மும்பைத் துறைமுகம், எளிதில் கிடைக்கும் நீர்மின்சக்தி, சந்தை வசதி, சிறந்த போக்குவரத்து வசதி ஆகியன மும்பையில் அதிக அளவு பருத்தி நெசவாலைகள் இருப்பதற்கு காரணங்களாக அமைகிறது.
- மகாராஷ்டிரம், குஜராத் மேற்கு வங்காளம் உத்திரப்பிதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பருத்தி நெசவாலைகள் செறிந்து காணப்படுகிறது.
- தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூரில் அதிக எண்ணிக்கையிலான பருத்தி நெசவாலைகள் உள்ளன. இதனால் கோயம்புத்தூர் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது.
- ஈரோடு திருப்பூர், கரூர், சென்னை , திருநெல்வேலி, மதுரை தூத்துக்குடி, சேலம் மற்றும் விருதுநகர் ஆகியன மாநிலத்தின் பிற முக்கிய நெசவாலை நகரங்களாகும்.
2.இந்தியத் தொழிலகங்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் பற்றி எழுதுக.
- இந்தியத் தொழிலகங்கள் பல சவால்களை எதிர்கொண்டுள்ளன. அவற்றில் சில முக்கியப் பிரச்சினைகள் கீழே பட்டியிலிடப்பட்டுள்ளன.
- மின் பற்றாக்குறை மற்றும் சீரற்ற மின் வினியோகம்.
- தொழிலகங்கள் நிறுவுவதற்கு ஏற்ற பரந்த நிலபரப்பு இல்லாமை.
- கடன் பெறுவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள்.
- கடனுக்கான அதிக வட்டி விகிதம்.
- மலிவான ஊதியத்திற்கு வேலையாட்கள் கிடைக்காமை.
- ஊழியர்களுக்கான தொழில்நுட்ப மற்றும் தொழில் முறை பயிற்சிகள் இல்லாமை.
- தொழிற்பேட்டைகளுக்கருகில் வசிப்பதற்கு ஏற்ற சூழல் இல்லாமை.
10th Geography Guide Unit 4 Tamil Medium – Additional Questions and Answers (TN TET, TNPSC, TRB)
சரியான விடையைத் தேர்வு செய்யவும்.
1.வளங்கள் தொடர்ந்து கிடைக்கும் தன்மையின் அடிப்படையில் ……………… வகைப்படும்.
அ) 3
ஆ) 2
இ) 4
ஈ) 6
விடை: ஆ) 2
2.……………… புதுப்பிக்க இயலா வளங்களுள் ஒன்று.
அ) உயிரி வாயு
ஆ) காற்றாற்றல்
இ) நிலக்கரி
ஈ) ஒத சக்தி
விடை: இ நிலக்கரி
3.…………….. தனித்த நிலையில் அரிதாக காணப்படுகிறது.
அ) காப்பர்
ஆ) மாங்கனீசு
இ) இரும்புத்தாது
ஈ) பாக்சைட்
விடை: இ இரும்புத்தாது
4.லைமனைட் இரும்பு தாது படிவில் ……………… இரும்புள்ளது.
அ) 72.4%
ஆ) 55%
இ) 69.9%
ஈ) 48.2%
விடை: ஆ) 55%
5.இந்தியர்கள்…………….. வளங்கள் ஹேமடைட் வகையையும், மேக்னடைட் வகையையும் சார்ந்தது.
அ) பாக்சைட்
ஆ) இரும்புத்தாது
இ) தாமிரம்
ஈ) மாங்கனீசு
விடை: இரும்புத்தாது
6.இரும்பு தாது உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் மாநிலம் …………… ஆகும்.
அ) அசாம்
ஆ) பீகார்
இ) ஜார்கண்ட்
ஈ) ராஜஸ்தான்
விடை: இ ஜார்கண்ட்
7.………………. ஒரு வெளிர் சாம்பல் நிறம் உடையது.
அ) ஜிப்சம்
ஆ) பாக்சைட்
இ) மைக்கா
ஈ) மாங்கனீசு
விடை: ஈ) மாங்கனீசு
8.வரலாற்றுக்கு முந்தைய காலத்திலே மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட உலோகம் ……………….. ஆகும்.
அ) தாமிரம்
ஆ) இரும்பு தாது
இ) சுண்ணாம்புகல்
ஈ) மைக்கா
விடை: அ) தாமிரம்
9.அலுமினியத்தின் முக்கிய தாது ……………. ஆகும்.
அ) மேக்னடைட்
ஆ) ஹோமடைட்
இ) லிக்னைட்
ஈ) பாக்சைட்
விடை: ஈ) பாக்சைட்
10.…………….. மின்கடத்தா தன்மையுடையவை.
அ) தாமிரம்
ஆ) மைக்கா
இ) பாக்சைட்
ஈ) மாங்கனீசு
விடை: ஆ) மைக்கா
11.ஜிப்சம் என்பது …………………….. சல்ஃபேட்டின் நீர்ம கனிமமாகும்.
அ) கால்சியம்
ஆ) பொட்டாசியம்
இ) பாஸ்பரஸ்
ஈ) எதுவுமில்லை
விடை: அ) கால்சியம்
12.நிலக்கரி ……………… வகைப்படும்.
அ) 6
ஆ) 2
இ) 3
ஈ) 4
விடை: ஈ) 4
13.……………… கருப்புத் தங்கம் எனப்படுகிறது.
அ) மைக்கா
ஆ) ஜிப்சம்
இ) நிலக்கரி
ஈ) எதுவுமில்லை
விடை: இ நிலக்கரி
14.……………… தாது எண்ணெய் எனப்படுகிறது.
அ) நிலக்கரி
ஆ) பெட்ரோலியம்
இ) இயற்கை வாயு
ஈ) உயிரி வாயு
விடை: ஆ) பெட்ரோலியம்
15.GAILன் தலைமையகம் ……………… உள்ள து.
அ) மும்பை
ஆ) சீனா
இ) புதுடெல்லி
ஈ) குஜராத்
விடை: இ புதுடெல்லி
16.தேசிய அனல் மின் சக்தி நிலையம் ………………ஆண்டில் தொடங்கப்பட்டது.
அ) 1965
ஆ) 1975
இ) 1955
ஈ) 1985
விடை: ஆ) 1975
17.……………… சக்தி ஓடும் நீரிலிருந்து பெறப்படும்.
அ) காற்றாற்றல்
ஆ) ஓதசக்தி
இ) நீர்மின்சக்தி
ஈ) சூரிய சக்தி
விடை: இ நீர்மின்சக்தி
18.இந்திய தேசிய நீர்மின் சக்தி நிறுவனம் ……………… இல் உள்ளது.
அ) அலகாபாத்
ஆ) பரிதாபாத்
இ) அகமதாபாத்
ஈ) எதுவுமில்லை
விடை: ஆ) பரிதாபாத்
19.…………….. இந்தியாவிலேயே அதிக அளவு காற்றாலைகளைக் கொண்டது.
அ) கேரளா
ஆ) தமிழ்நாடு
இ) கர்நாடகா
ஈ) ஆந்திரம்
விடை: ஆ) தமிழ்நாடு
20.உயிரின கழிவிலிருந்து ……………… பெறப்படுகிறது.
அ) உயிரி சக்தி
ஆ) காற்றாற்றல்
இ) ஓதசக்தி
ஈ) நீராற்றல்
விடை: அ) உயிரி சக்தி
கோடிட்ட இடத்தை நிரப்புக.
1.கனிம வளங்கள் …………. வகைப்படும்.
விடை:இரண்டு
2.வளங்கள் ………… வகைப்படும்.
விடை:இரண்டு
3.புவிமேலோட்டில் அதிகம் காணப்படுவது
விடை:இரும்புத்தாது
3.மாங்கனீசு ……….. நிறமுடையது.
விடை:வெளிர்
4.…………… மனிதனால் கண்டறியப்பட்ட முதல் உலோகம்.
விடை:தாமிரம்
5.………….. பாக்சைட் தாதுவிலிருந்து பெறப்படுகிறது.
விடை:அலுமினியம்
7.…………….. ஒளிபுகும் தன்மையுடையது.
விடை:மைக்கா
8.………………….. என்பது கால்சியம் சல்பேட்டின் நீர்மக்கனிமம்.
விடை:ஜிப்சம்
9.……………… எளிதில் எரியக்கூடியது.
விடை:நிலக்கரி
10.…………… என்ற சொல் பெட்ரோ மற்றும் ஒலியம் எனப் பிரிக்கலாம்.
விடை:பெட்ரோலியம்
11.…………… எண்ணெய் வயல் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ளது.
விடை:மும்பை ஹை
12.இந்திய இயற்கை எரிவாயு நிறுவனம் …………..
விடை:GAIL
13.……………………. தமிழ்நாட்டின் முக்கிய அனல்மின் நிலையங்களாகும்.
விடை:தூத்துக்குடி (ம) எண்ணூர்
14.…………… ஓடும் நீரிலிருந்து பெறப்படுகிறது.
விடை:நீர்மின்சக்தி
15.அணுக்கரு பிளவின் மூலம் ……………….. பெறப்படுகிறது.
விடை:அணுசக்தி
16.இந்தியாவின் சூரியசக்தி நிறுவனத்தின் தலைமையிடம்
விடை:புதுதில்லி
17.பருத்தி இழையிலிருந்து, விதையைப் பிரித்தெடுக்கும் முறை ………….
விடை:ஜின்னிங்
18.தேசிய சணல் வாரியத்தின் தலைமையகம் அமைந்துள்ள மாநிலம் ………………… ஆகும்.
விடை:கொல்கத்தா
19.…………….. என்பது குறைவான விலையில் கிடைக்கக்கூடிய இழைநார் ஆகும்.
விடை:சணல்
பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும்.
1.அ) மைக்கா
ஆ) சுண்ணாம்புக்கல்
இ) ஜிப்சம்
ஈ) இரும்பு
விடை: ஈ) இரும்பு
2.அ) கோலோரிஸ்
ஆ) ஆந்திரசைட்
இ) பிட்டுமினஸ்
ஈ) லிக்னைட்
விடை: அ) கோலோரிஸ்
சுருக்கமான விடையளிக்கவும்.
1.இந்தியாவில் உள்ள கனிமங்கள் மற்றும் அதனோடு தொடர்புடைய அமைப்புகள் யாவை?
- இந்திய நிலவியல் கள ஆய்வு நிறுவனத்தின் தலைமையிடம் கொல்கத்தா.
- இந்தியச் சுரங்கப் பணியகம் – நாக்பூர்.
2. பாக்சைட்டின் பயன்பாடுகள் யாவை?
- அலுமினியம் பாக்சைட் தாதுவிலிருந்து பெறப்படுகிறது.
- விமானக் கட்டுமானங்களிலும் தானியங்கி இயந்திரங்களிலும் அதிகம் பயன்படுகிறது. சிமெண்ட் மற்றும் இரசாயனத் தொழிற்சாலைகளிலும் பயன்படுகிறது.
3. புதுப்பிக்க இயலா வளங்களைக் குறிப்பிடுக.
- நிலக்கரி
- பெட்ரோலியம் / கச்சா எண்ணெய்
- இயற்கை எரிவாயு.
4. மத்தியப் பட்டு ஆராய்ச்சி தொழில்நுட்ப நிறுவனம் – குறிப்பு வரைக.
- பட்டு வளர்ப்பு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சிக்கென நிறுவப்பட்ட ஒரு நிறுவனமாகும்.
- இந்நிறுவனம் பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு இந்திய அரசாங்கத்தின் மத்திய பட்டு வளர்ப்பு வாரியத்தால் 1983ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.
5. வனவளம் சார்ந்த தொழிற்சாலைகள் யாவை?
- காடுகள், காகித தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருட்கள்.
- அரக்கு விளையாட்டு பொருள்கள்
- ஏட்டுப் பலகை போன்ற பொருள்களைத் தருகின்றன.
10th Geography Guide Unit 4 Tamil Medium
ஒரு பத்தியில் விடையளி.
1. புதுப்பிக்கக் கூடிய வளங்களைப் பற்றி விவரி.
அ. நீர்மின்சக்தி:
- நீர்மின்சக்தி ஓடும் நீரிலிருந்து பெறப்படுகிறது.
- இம்மின்சக்தி மாசற்ற மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மின் ஆற்றலாக கருதப்படுகிறது.
- இந்தியாவானது நீர்மின்சக்தி உற்பத்தி செய்வதற்கான மிக அதிக திறனை பெற்றுள்ள ஒரு மிகச் சிறந்த ஒரு நாடாக உள்ளது.
ஆ. சூரிய ஆற்றல் / சக்தி:
- சூரிய ஆற்றல் சூரிய ஒளியை நேரடியாகவோ மின் அழுத்திக் கொண்டோ அல்லது செறிவூட்டம் கொண்ட சூரிய ஆற்றல் மூலம் மின்னாற்றலாக மாற்றப்படுதலாகும்.
- மின் அழுத்திகள், ஒளிமின் விளைவு செயல்பாட்டின் மூலம் சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றுகின்றன.
- ஆந்திரப்பிரதேசம், குஜராத், இராஜஸ்தான், மகாராஷ்டிரம், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிக அளவு மின்சாரம் சூரிய ஒளியிலிருந்து உற்பத்தி செய்யப்படுகின்றன.
இ. காற்று சக்தி :
- காற்று வீச்சு அல்லது உந்துதலால் ஏற்படும் ஆற்றலை காற்று விசைச்சுற்று கலன்களின் உதவியோடு மின்னாற்றலாக மாற்றப்பட்டு காற்றாலை மின்சாரம் பெறப்படுகிறது.
- இது ஒரு மலிவான மற்றும் மாசற்ற ஆற்றல் வளமாகும்.
- காற்றாலை மின்சாரமானது நீர் ஏற்றுவதற்கும், கப்பல்களை இயக்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
ஈ. உயிரி சக்தி :
- விலங்குகளின் கழிவுகள், சமையல் கழிவுகள், ஆகாய தாமரை கழிவுகள், வேளாண்கழிவுகள் மற்றும் நகரக் கழிவுகள் போன்ற உயிரின கழிவுகளிலிருந்து உயிரி சக்தி பெறப்படுகிறது.
- இது மாசற்ற மற்றும் மலிவான ஒரு எரிசக்தி வளமாகும்.
- உயிரி எரிசக்தி பெரும்பாலும் வீட்டு உபயோகங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.
உ. ஓத மற்றும் அலை சக்தி:
- கடல் ஒதங்கள் மற்றும் கடல் அலைகள் என இரண்டு வள ஆதாரங்களிலிருந்து மின் ஆற்றல் பெறப்படுகிறது.
- காம்பே வளைகுடா ஓத சக்தி உற்பத்திக்கு மிக உகந்த இடமாக உள்ளது. இதே போன்று மற்றொரு ஆலை அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் நிறுவப்பட்டுள்ளது.