10th Geography Guide Unit 1 Tamil Medium
10th Social Science – Geography Tamil Medium Book Back & Additional Question – Answers
10th social Science – Geography Unit 1. இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு Additional Question – Answers
சரியான விடையைத் தேர்வு செய்க.
1.இந்தியாவின் வடக்கு தெற்கு பரவல் ……..
அ) 2500 கி.மீ
ஆ) 2933 கி.மீ
இ) 3214 கி.மீ
ஈ) 2814 கி.மீ
விடை: இ) 3214கி.மீ
2.பீகாரின் துயரம் என்று அழைக்கப்படும் ஆறு …..
அ) நர்மதா
ஆ) கோதாவரி
இ) கோசி
ஈ) தாமோதர்
விடை: இ கோசி
3.மூன்று பக்கம் நீரால் சூழப்பட்ட பகுதி …………….. என அழைக்கப்படுகிறது.
அ) கடற்கரை
ஆ) தீபகற்பம்
இ) தீவு
ஈ) நீர்ச்சந்தி
விடை: ஆ) தீபகற்பம்
4.பாக் நீர்சந்தி மற்றும் மன்னார் வளைகுடா ……………ஐ இந்தியாவிடமிருந்து பிரிக்கிறது.
அ) கோவா
ஆ) மேற்கு வங்காளம்
இ) இலங்கை
ஈ) மாலத்தீவு
விடை: இ இலங்கை
5.தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம்
அ) ஊட்டி
ஆ) ஆனை முடி
இ) கொடைக்கானல்
ஈ) ஜின்டா கடா
விடை: ஆ) ஆனை முடி
6.பழைய வண்டல் படிவுகளால் உருவான சமவெளி ………………
ஆ) தராய்
இ) பாங்கர்
ஈ) காதர்
விடை: இ பாங்கர்
7.பழவேற்காடு ஏரி ……………. மாநிலங்களுக்கிடையே அமைந்துள்ளது.
அ) மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா
ஆ) கர்நாடகா மற்றும் கேரளா
இ) ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசம்
ஈ) தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம்
விடை: ஈ) தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம்
II. பொருத்துக.
- சாங்போ – கங்கை ஆற்றின் துணை ஆறு
- யமுனை – இந்தியாவின் உயர்ந்த சிகரம்
- புதிய வண்டல் படிவுகள் – பிரம்மபுத்ரா
- காட்வின் ஆஸ்டின் (K2) – தென்கிழக்கு கடற்கரைச் சமவெளி
- சோழ மண்டலக்கடற்கரை – காதர்
விடை: 1 – ஈ, 2 – உ, 3 – ஆ, 4 – அ, 5 – இ
III. காரணம் கூறுக
1.இமயமலைகள் மடிப்புமலைகள் என அழைக்கப்படுகின்றன.
- இமயமலைகள் ஒரு இளம் மடிப்பு மலை.
- வடக்கே இருந்த யுரேசியா, தெற்கே இருந்த கோண்ட்வானா நிலப்பகுதிகள் ஒன்றை நோக்கி இமயமலைகள் புவிமேலோட்டு பேரியக்க விசைகள் காரணமாக புவிமேலோடு ஒன்று நகர்ந்ததால் ஏற்பட்ட அழுத்தத்தின் காரணமாக மடிப்பு இமயமலை உருவானது
2.வட இந்திய ஆறுகள் வற்றாத ஆறுகள்.
- வடஇந்திய ஆறுகள் இமயமலையில் உற்பத்தியாகின்றன.
- எனவே ஆண்டு முழுவதும் நதிகளில் நீர் கிடைக்கிறது.
- தென்னிந்திய நதிகள் கிழக்கு நோக்கி பாய்கின்றன.
3.தென்னிந்திய நதிகள் கிழக்கு நோக்கிப்பாயும் நதிகள்.
- இந்நதிகள் மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து உருவாகின்றன.
- இந்த ஆறுகள் பள்ளத்தாக்கில் செங்குத்து சாய்வுடன் பாய்கிறது.
4.மேற்கு நோக்கிப்பாயும் நதிகள் டெல்டாவை உருவாக்குவதில்லை.
- மேற்கு நோக்கிப் பாயும் நதிகள் மிக முக்கிய தூரமே ஓடி கடலில் கலக்கின்றன.
- பள்ளத்தாக்குகள் வழிப் பாய்வதால் டெல்டாவை உருவாக்க முடிவதில்லை.
IV. வேறுபடுத்துக.
1.இமயமலை ஆறுகள் மற்றும் தீபகற்ப ஆறுகள்.
இமயமலை ஆறுகள்
- இமயமலையில் உற்பத்தியாகின்றன
- நீளமானவை மற்றும் அகலமானவை
- வற்றாத நதிகள்
- மின் உற்பத்தி செய்ய முடியாது
- ஆற்றின் மத்திய மற்றும் கீழ்நிலைப் பகுதிகள் போக்குவரத்திற்கு ஏற்றது
தீபகற்ப இந்திய ஆறுகள்
- மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்றன
- குறுகலானவை மற்றும் நீளம் குறைந்தவை
- வற்றும் நதிகள்
- மின் உற்பத்தி செய்ய முடியும்
- நீர்வழி போக்குவரத்திற்கு ஏற்றதல்ல
2.மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகள்.
மேற்குத் தொடர்ச்சி மலைகள்
- இம்மலைகள் தீபகற்ப பீடபூமியின் மேற்கு விளிம்பு பகுதியில் காணப்படுகிறது.
- மேற்கு கடற்கரைக்கு இணையாகச் செல்கிறது
- தொடர்ச்சியான மலைகள்
- இம்மலையின் வடபகுதி சயாத்ரி என்று அழைக்கப்படுகிறது.
கிழக்கு தொடர்ச்சி மலைகள்
- கிழக்குத் தொடர்ச்சி மலைகள் தென்மேற்கு பகுதியிலிருந்து வடகிழக்கு நோக்கி நீண்டு தீபகற்ப பீடபூமியின் கிழக்கு விளிம்பு பகுதியில் அமைந்துள்ளது.
- கிழக்கு கடற்கரைக்கு இணையாகச் செல்கிறது
- தொடர்ச்சியற்ற மலைகள்
- இம்மலைத்தொடர் பூர்வாதிரி என்றும் அழைக்கப்படுகிறது.
3.மேற்கு கடற்கரைச் சமவெளி மற்றும் கிழக்கு கடற்கரைச் சமவெளி.
மேற்கு கடற்கரைச் சமவெளி
- மேற்கு கடற்கரைச் சமவெளி மேற்கு தொடர்ச்சி மலைக்கும் அரபிக் கடலுக்கும் இடையே அமைந்துள்ளது.
- இது வடக்கில் உள்ள ரானா ஆப் கட்ச் முதல் தெற்கில் உள்ள கன்னியாகுமரி வரை நீண்டுள்ளது.
- மேற்கு கடற்கரையின் வடபகுதி கொங்கணக் கடற்கரை எனவும். மத்திய பகுதி கனரா கடற்கரை எனவும் அழைக்கப்படுகிறது.
- இதன் தென்பகுதி மலபார் கடற்கரை என அழைக்கப்படுகிறது.
- பல காயல்கள், உப்பங்கழிகள் மற்றும் டெரிஸ்
போன்றவை இக்கடற்கரைப் பகுதியில் காணப்படுகின்றன. - வேம்பநாடு ஏரி இப்பகுதியில் உள்ள ஒரு முக்கியமான ஏரியாகும்.
கிழக்கு கடற்கரைச் சமவெளி
- கிழக்கு கடற்கரைச் சமவெளி கிழக்கு தொடர்ச்சி மலைக்கும் வங்காள விரிகுடாவிற்கும் இடையே அமைந்துள்ளது.
- மேற்கு வங்காளம் முதல் தமிழ்நாடு வரை நீண்டுள்ளது.
- இதன் வடபகுதியான மகாநதிக்கும் கிருஷ்ணா நதிக்கும் இடைப்பட்டப் பகுதி வடசர்க்கார் எனவும், தென் பகுதியான கிருஷ்ணா மற்றும் காவிரி ஆற்றிற்கு இடைப்பட்டப் பகுதி சோழமண்டல கடற்கரை எனவும் அழைக்கப்படுகிறது.
- சிலிகா ஏரி, கொல்லேறு ஏரி, பழவேற்காடு (புலிகாட்) ஏரி ஆகியன இச்சமவெளியில் முக்கியமான ஏரிகளாகும்.
- புதிய வண்டல் படிவுகளால் நன்கு வரையறுக்கப்பட்ட கடற்கரையைக் கொண்டது.
V. சுருக்கமாக விடையளி.
1.இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்களைக் கூறுக.
- வடமேற்கில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுடனும், வடக்கில் சீனா, நேபாளம், பூடானுடனும், கிழக்கில் வங்காளதேசம் மற்றும் மியான்மர் நாடுகளுடனும்
- தெற்கில் இலங்கையுடனும் நில எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது
2.இந்திய திட்ட நேரத்தின் முக்கியத்துவம் பற்றி கூறுக.
- மத்திய தீர்க்கரேகையான 82°30′ கிழக்கு தீர்க்கரேகையின் தலநேரம், இந்திய திட்டநேரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
- இத்தீர்க்கரேகை மிர்சாபூர் (அலகாபாத்) வழியாக செல்கிறது. கிழக்கு தீர்க்க ரேகையின் தலநேரம், இந்திய திட்ட நேரமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.
3.தக்காண பீடபூமி – குறிப்பு வரைக.
- தக்காணபீடபூமி, தீபகற்ப பீடபூமியில் அமைந்துள்ள மிகப்பெரிய இயற்கை அமைப்பைக் கொண்டதாகும்.
- இது தோராயமாக முக்கோண வடிவம் கொண்டது.
- சுமார் 7 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவு கொண்டுள்ளது.
- கடல் மட்டத்திலிருந்து 500 மீ முதல் 1000 மீ உயரம் வரையும் அமைந்துள்ளது.
4.இந்தியாவின் மேற்கு நோக்கி பாயும் ஆறுகளைப் பற்றி கூறுக.
மேற்கு நோக்கி பாயும் ஆறுகள்:
- அ) நர்மதை
- ஆ) தபதி
- இ) மாகி
- ஈ) சபர்மதி
5.இலடச்சத்தீவுக் கூட்டங்கள் பற்றி விவரி.
இலட்சத்தீவுகள் :
- இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள இலட்சத்தீவு முருகைப் பாறைகளால் ஆனது.
- இத்தீவுகள் சுமார் 32 ச.கி.மீ. பரப்பளவைக் கொண்டதாகும்
- இதன் நிர்வாகத் தலைநகரம் கவரட்டி ஆகும்.
VI. ஒரு பத்தியில் விடையளிக்கவும்.
1.இமயமலையின் உட்பிரிவுகளையும் அதன் முக்கியத்துவம் பற்றியும் விவரி.
- இந்தியாவின் பெரும் அரணாக உள்ள இமயமலையை மூன்று பெரும் உட்பிரிவுகளாக பிரிக்கலாம்.
- ட்ரான்ஸ் இமயமலைகள்
- இமயமலைகள்
- கிழக்கு இமயமலை/பூர்வாஞ்சல் குன்றுகள்
- இம்மலைகள் ஜம்மு – காஷ்மீர் மற்றும் திபெத் பீடபூமியில் அமைந்துள்ளது. இவை ‘திபெத்தியன் இமயமலை’ எனவும் அழைக்கப்படுகிறது.
- இப்பகுதியில் காணப்படும் பாறை அமைப்புகள் கடலடி உயிரினப் படிமங்களைக் கொண்ட டெர்சியரி கிரானைட் பாறைகளாகும்.
- இங்குள்ள முக்கியமான மலைத்தொடர்கள் சாஸ்கர், லடாக், கைலாஸ் மற்றும் காரகோரம் ஆகும்.
2. இமயமலை:
- இவை வடக்கு மலைகளின் பெரிய பகுதியாக அமைந்துள்ளது.
- இது ஒரு இளம் மடிப்பு மலையாகும்.
- வடக்கே இருந்த யுரேசியா நிலப்பகுதியும், தெற்கே இருந்த கோண்ட்வானா நிலப்பகுதியும் ஒன்றை நோக்கி ஒன்று நகர்ந்ததால் ஏற்பட்ட அழுத்தத்தின் காரணமாக இடையிலிருந்த டெத்தீஸ் என்ற கடல் மடிக்கப்பட்டு இமயமலை உருவானது.
- இது பல மலைத்தொடர்களை உள்ளடக்கியது.
- இவை மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது.
- உள் இமயமலைகள் / இமாத்ரி
- மத்திய இமயமலை / இமாச்சல்
- வெளி இமயமலை / சிவாலிக்
3. பூர்வாஞ்சல் குன்றுகள் :
- இவை இமயமலையின் கிழக்கு கிளையாகும்.
- இது வடகிழக்கு மாநிலங்களில் பரவியுள்ளது.
- பெரும்பாலான குன்றுகள் மியான்மர் மற்றும் இந்திய எல்லைகளுக்கிடையே காணப்படுகின்றன.
- இமயமலையின் முக்கியத்துவம்:
- வட இந்திய பகுதிக்கு கனமழையைக் கொடுக்கிறது.
- வற்றாத நதிகளின் பிறப்பிடமாக உள்ளது. எ.கா. சிந்து, கங்கை , பிரம்மபுத்திரா மற்றும் பிற ஆறுகள்.
- இயற்கை அழகின் காரணமாக வடக்கு மலைகள் சுற்றுலா பயணிகளின் சொர்க்கமாகத் திகழ்கிறது.
- பல கோடைவாழிடங்களும், புனித தலங்களான அமர்நாத், கேதர்நாத், பத்ரிநாத் மற்றும் வைஷ்ணவிதேவி கோயில்களும் இம்மலைத் தொடரில் அமைந்துள்ளன.
- வனப்பொருட்கள் சார்ந்த தொழிலகங்களுக்கு மூலப்பொருட்களை அளிக்கிறது.
- இமயமலை பல்லுயிர் மண்டலத்திற்கு பெயர் பெற்றவை.
2.தீபகற்ப ஆறுகளைப் பற்றி விவரி.
தீபகற்ப இந்திய ஆறுகள்:
- தென் இந்தியாவில் பாயும் ஆறுகள் தீபகற்ப ஆறுகள் எனப்படுகின்றன.
- பெரும்பாலான ஆறுகள் மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்றன.
- இவை பருவகால ஆறுகள் அல்லது வற்றும் ஆறுகள் எனப்படும்.
- தீபகற்ப ஆறுகளை அவை பாயும் திசையின் அடிப்படையில் இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை,
- கிழக்கு நோக்கி பாயும் ஆறுகள்
- மேற்கு நோக்கி பாயும் ஆறுகள்
- கிழக்கு நோக்கி பாயும் ஆறுகள் :
அ. மகாநதி:
- இந்நதி சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள ராய்ப்பூர் மாவட்டத்திலுள்ள சிகாவிற்கு அருகில் உற்பத்தியாகி ஒடிசா மாநிலத்தின் வழியாக சுமார் 85 கி.மீ நீளத்திலும் பாய்கிறது.
- மகாநதி பல கிளையாறுகளாகப் பிரிந்து டெல்டாவை உருவாக்குகிறது.
- இந்நதி வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
ஆ. கோதாவரி:
- தீபகற்ப இந்தியாவில் பாயும் மிக நீளமான ஆறாகும்.
- நாசிக் மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகிறது.
- இந்நதி விருத்தகங்கா எனவும் அழைக்கப்படுகிறது.
- கோதாவரி டெல்டா பகுதியில் நன்னீர் ஏரியான கொல்லேறு ஏரி அமைந்துள்ளது.
இ. கிருஷ்ணா :
- மகாராஷ்ட்டிரா மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் மகாபலேஷ்வர் என்ற பகுதியில் ஊற்றாக உருவாகிறது.
- இது தீபகற்ப ஆறுகளில் இரண்டாவது மிகப்பெரிய நதியாகும்.
- கொய்னா, பீமா, முசி, துங்கபத்ரா மற்றும் பெடவாறு போன்றவை இவ்வாற்றின் முக்கிய துணை ஆறுகளாகும்.
ஈ. காவிரி:
- காவிரி ஆறு கர்நாடக மாநிலத்தில் குடகு மலையிலுள்ள தலைக்காவிரியில் உற்பத்தியாகிறது.
- இது தென் இந்தியாவின் கங்கை என்றும் அழைக்கப்படுகிறது.
- திருச்சிராப்பள்ளிக்கு முன் ஸ்ரீரங்கம் அருகே கொள்ளிடம் மற்றும் காவிரி என இரண்டு பிரிவுகளாக பிரிந்து, இறுதியில் பூம்புகார் என்ற இடத்தில் வங்கக் கடலில் கலக்கிறது.
மேற்கு நோக்கி பாயும் ஆறுகள்:
அ) நர்மதை:
- மத்தியப்பிரதேசத்தில் உள்ள அமர்கண்டாக் பீடபூமியில் உற்பத்தியாகிறது.
- இது மேற்கு நோக்கி பாயும் ஆறுகளிலேயே நீளமானதாகும்.
- பர்னா, ஹலுன், ஹொன், பஞ்சர், தூதி, சக்கார், டவா மற்றும் கோலர் ஆகியவை இதன் முதன்மையான துணையாறுகள் ஆகும்.
ஆ) தபதி :
- தபதி ஆறு தீபகற்ப இந்தியாவின் முக்கிய ஆறுகளில் ஒன்றாகும். இந்நதி 724 கி.மீ நீளத்தையும், 65145 ச.கி.மீ. பரப்பளவு வடிநிலத்தை கொண்டது.
- இந்நதி மத்திய பிரதேசத்தில் உள்ள பெட்டூல் மாவட்டத்தில் முல்டாய் என்ற இடத்திலிருந்து உற்பத்தியாகிறது.
- வாகி, கோமை, அருணாவதி, அனெர், நீசு, புரெ, பஞ்சரா மற்றும் போரி ஆகியன தபதி ஆற்றின் துணை ஆறுகள் ஆகும்.
3.கங்கை ஆற்று வடிநிலம் குறித்து விரிவாக எழுதுக.
- வடிகாலமைப்பு என்பது முதன்மையாறுகளும், துணையாறுகளும் ஒருங்கிணைந்து மேற்பரப்பு நீரை கடலிலோ, ஏரிகளிலோ அல்லது நீர் நிலைகளிலோ சேர்க்கும் செயலாகும்.
- முதன்மை ஆறுகளும், துணையாறுகளும் இணைந்து பாயும் பரப்பளவு வடிகால் கொப்பரை என்று அழைக்கப்படுகின்றது.
கங்கை நதி தொகுப்பு:
- இந்தியாவின் மிகப்பெரிய வடிகால் அமைப்பைக் கொண்டதாகும். கங்கையாற்றின் தொகுப்பு 8,61,404 ச.கி.மீ. பரப்பளவில் பாய்கிறது. கங்கை சமவெளியில் பல நகரங்கள் ஆற்றங்கரையையொட்டியும் அதிக மக்களடர்த்தி கொண்டதாகும் உள்ளன.
- கங்கை ஆறு உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தர் காசி மாவட்டத்தில் 7010மீ உயரத்தில் கங்கோத்ரி பனியாற்றிலிருந்து பாகிரதி என்னும் பெயருடன் உற்பத்தியாகிறது.
- இந்நதியின் நீளம் சுமார் 2525 கி.மீ. ஆகும்.
- வட பகுதியிலிருந்து கோமதி, காக்ரா, கண்டக், கோசி மற்றும் தென் பகுதியிலிருந்து யமுனை, சோன், சாம்பல் போன்ற துணையாறுகள் கங்கையுடன் இணைகின்றன. வங்கதேசத்தில், கங்கை பத்மா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
- கங்கை மற்றும் பிரம்மபுத்திரா ஆறுகள் சேர்ந்து உலகிலேயே மிகப் பெரிய டெல்டாவை உருவாக்கி பின் வங்காள விரிகுடாவில் கலக்கின்றன.
10th Social Science – Geography Unit 1 Question answers – Tamil Medium
Additional Important Questions and Answers ( TET, TNPSC, TRB )
சரியான விடையைத் தேர்வு செய்யவும்.
1.ஆசிய கண்ட த்தில் இந்தியா …………….. பெரிய நாடு.
அ) ஏழாவது
ஆ) இரண்டாவது
இ) மூன்றாவது
ஈ) எதுவுமில்லை
விடை: ஆ) இரண்டாவது
2.இந்தியா ……………… நாட்டுடன் தனது மிக நீண்ட எல்லையைப் பகிர்கிறது.
அ) ஆப்கானிஸ்தான்
ஆ) சீனா
இ) மூன்றாவது
ஈ) பங்களாதேஷ்
விடை: ஈ) பங்களாதேஷ்
3.இந்தியக் கடற்கரை …………….. பகுதிகளைக் கொண்டது.
அ) ஐந்து
ஆ) மூன்று
இ) இரண்டு
ஈ) ஆறு
விடை: ஆ) மூன்று
4.இந்திய நிலப்பகுதியின் தென்கோடி முனை ……………. ஆகும்.
அ) இந்திரா முனை
ஆ) குமரி முனை
இ) இந்திரா கோல்
ஈ) எதுவுமில்லை
விடை: ஆ) குமரி முனை
5.இந்தியா ஏறத்தாழ ……………… தீர்க்க கோடுகளை கொண்டுள்ளது.
அ) 40
ஆ) 30
இ) 20
ஈ) 10
விடை: ஆ) 30
6.இந்தியாவின் மத்திய தீர்க்க ரேகை ……………… ஆகும்.
அ) 8°4’வ
ஆ) 37°6’வ
இ) 85°30’கி
ஈ) 82°30’கி
விடை: ஈ) 82°30’கி
7.மத்திய தீர்க்க ரேகை …………. வழியே செல்கிறது.
அ) லாகூர்
ஆ) மிர்சாபூர்
இ) சபர்மதி
ஈ) வேதாரண்யம்
விடை: ஆ) மிர்சாபூர்
8.ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகர் …………….. நகர்.
அ) டாமன் டையூ
ஆ) சண்டிகர்
இ) அமராவதி
ஈ) பாண்டிச்சேரி
விடை: இ அமராவதி
9.இந்திய இயற்கையமைப்பு ……………. பெரும் பிரிவுகளைக் கொண்டது.
அ) 6
ஆ) 5
இ) 4
ஈ) 3
விடை: ஆ) 5
10.“இமாலயா” என்ற சொல்லுக்கு ……………. மொழியில் பனி உறைவிடம் எனப் பொருள்.
அ) கிரேக்கம்
ஆ) சமஸ்கிருதம்
இ) லத்தீன்
ஈ) பெங்காலி
விடை: ஆ) சமஸ்கிருதம்
11.இந்தியாவின் மிகப் பழமையான மடிப்பு மலைத் தொடர் ……………
அ) நீலகிரி
ஆ) திபெத்தியன்
இ) ஆரவல்லி
ஈ) பெங்காலி
விடை: இ) ஆரவல்லி
12.ட்ரான்ஸ் இமயமலையின் மற்றொரு பெயர் …………. இமயமலை.
அ) கிழக்கு
ஆ) சர்வாதிரி
இ) திபெத்தியன்
ஈ) சிவாலிக்
விடை: இ திபெத்தியன்
13.…………….. என்பது ஒரு இளம் மடிப்பு மலையாகும்.
அ) கிழக்கு
ஆ) இமயமலை
இ) ட்ரான்ஸ் இமயமலை
ஈ) எதுவுமில்லை
விடை: ஆ) இமயமலை
14.உலகின் உயரமான சிகரங்கள் ………………….
அ) 12
ஆ) 14
இ) 41
ஈ) 21
விடை: ஆ) 14
15.பூர்வாஞ்சல் குன்றுகள் ….. மாநிலங்களிடையே பரவியுள்ளது.
அ) வடகிழக்கு
ஆ) வடமேற்கு
இ) தென்மேற்கு
ஈ) தென்கிழக்கு
விடை: அ) வடகிழக்கு
16.இமயமலை …………….ற்கு பெயர் பெற்றவை.
அ) சரணாலயம்
ஆ) உயிர்க்கோள காப்பகம்
இ) பல்லுயிர் மண்டலம்
ஈ) எதுவுமில்லை
விடை: இ பல்லுயிர் மண்டலம்
17.சிந்துவின் துணையாறுகள் …………………. ஆகும்.
அ) 4
ஆ) 5
இ) 6
ஈ) 7
விடை: ஆ) 5
18.இந்தியாவின் மிகப்பெரிய வடிகாலமைப்பு ……………… ஆகும்.
அ) சிந்து
ஆ) பிரம்மபுத்திரா
இ) கங்கை
ஈ) வைகை
விடை: இ கங்கை
19.…………….. விருத்தகங்கா எனப்படுகிறது.
அ) மகாந்தி
ஆ) கோதாவரி
இ) கிருஷ்ணா
ஈ) காவிரி
விடை: ஆ) கோதாவரி
20.……………… இந்தியாவின் முக்கிய தீபகற்ப ஆறு.
அ) நர்மதை
ஆ) தபதி
இ) மாஹி
ஈ) ஸ்ரீரங்கம்
விடை: ஆ) தபதி
கோடிட்ட இடங்களை நிரப்புக.
1.இந்தியா பரப்பளவில் உலகின் ………… பெரிய நாடு.
விடை:ஏழாவது
2.இந்தியாவின் நிலப்பரப்பு ………………… ச.கி.மீ.
விடை:32,87,263
3.……………. 15,200 கி.மீ. நில எல்லைகளைக் கொண்டுள்ளது.
விடை:இந்தியா
4.இந்தியா ஒரு ………….. ஆகும்.
விடை:தீபகற்பம்
5.இந்தியக் கடற்கரையின் மொத்த நீளம் …………… ஆகும்.
விடை:7,516.6 கி.மீ.
6.இந்தியாவையும், இலங்கையையும் பிரிக்கும் கடல் பகுதி ……….. ஆகும்.
விடை:பாக்நீர்ச்சந்தி
7.இந்தியா ஒரு ………………. ஆகும்.
விடை:துணைக்கண்டம்
8.இந்தியாவின் தென்கோடி முனை ……………. ஆகும்.
விடை:இந்திரா முனை
9.இந்தியாவின் வடமுனை …………… என அழைக்கப்படுகின்றது.
விடை:இந்திரா கோல்
10.…………… இமயமலையின் கிழக்கு கிளையாகும்.
விடை:பூர்வாஞ்சல் குன்றுகள்
11.இமயமலையின் மத்திய மலைத்தொடர் ……………… ஆகும்.
விடை:இமாச்சல்
12.இமயமலையின் வடக்கே ………………………. உள்ளது.
விடை:இமாத்ரி
13.ஆறுகளால் கொண்டுவரப்படும் படியவைக்கப்படும் புதிய வண்டல்மண் ……….. எனப்படும்.
விடை:காதர்
14.காதர் நிலத்தின் மற்றொரு பெயர் ……………… ஆகும்.
விடை:பெட்நிலம்
15.கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடர். ……….. எனப்படுகிறது.
விடை:பூர்வாதிரி
காரணம் கூறுக.
1.இந்தியா ஒரு துணைக்கண்டம்.
- இயற்கை நில அமைப்பு, காலநிலை இயற்கைத் தாவரம் கனிமங்கள் மற்றும் மனிதவளத்தில் ஒரு கண்டத்தில் காணப்படும் வேறுபாடுகளைக் கொண்டுள்ளதால், இந்தியா துணைக்கண்டம் எனப்படுகிறது.
2.வடபெரும் சமவெளி = உலகிலேயே வளமான சமவெளி.
- துணையாறுகளால் உருவாக்கப்பட்ட வண்டல் மண் படிவுகளைக் கொண்டுள்ளது.
சுருக்கமாக விடையளி.
1.பிரம்மபுத்திரா சமவெளி – குறிப்பு வரைக.
- பிரம்மபுத்திரா சமவெளியின் பெரும்பகுதி அஸ்ஸாமில் அமைந்துள்ளது.
- பிரம்மபுத்திரா ஆற்றினால் உருவாக்கப்பட்ட ஒரு தாழ்நில சமவெளியாக வடபெரும் சமவெளியின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது.
- சுமார் 56,275 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் வண்டல் விசிறிகளாகவும், தராய் எனப்படும் சதுப்பு நிலக் காடுகளாகவும் காணப்படுகிறது.
2.ஏன் இந்தியா ஒரு துணைக்கண்டம் என அழைக்கப்படுகிறது?
- பாகிஸ்தான், மியான்மர், வங்காள தேசம், நேபாளம், பூடான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுடன் இணைந்து இந்தியா ஒரு துணைக்கண்டம் என அழைக்கப்படுகிறது.
- இயற்கை நில அமைப்பு, காலநிலை, இயற்கைத் தாவரம், கனிமங்கள் மற்றும் மனித வளங்கள் போன்றவற்றில் ஒரு கண்டத்தில் காணப்படக்கூடிய வேறுபாடுகளைக் கொண்டுள்ளதால் இந்தியா ஒரு துணைக்கண்டம் என அழைக்கப்படுகிறது.
3.இயற்கை அமைப்பின் பிரிவுகள் யாவை?
இயற்கை அமைப்பை 5 பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம். அவை,
- வடக்கு மலைகள்
- வடபெரும் சமவெளிகள்
- தீபகற்ப பீடபூமிகள்
- கடற்கரைச் சமவெளிகள்
- தீவுகள்
4.கடற்கரைச் சமவெளி – குறிப்பு வரைக.
- இந்திய தீபகற்ப பீடபூமி குறுகலான, வேறுபட்ட அகலத்தையுடைய வடக்கு தெற்காக அமைந்துள்ள கடற்கரைகளால் சூழப்பட்டுள்ளது.
- இக்கடற்கரைச் சமவெளிகள் ஆறுகள், கடல் அலைகள் ஆகியவற்றின் அரித்தல் மற்றும் படிய வைத்தல் செயல்களால் உருவானவை.
5.ஆறுகளின் வகைகள் யாவை?
ஆறுகளை இரு பிரிவுகளாக பிரிக்கலாம்.
இமயமலை ஆறுகள் :
- சிந்து, பிரம்மபுத்திரா, கங்கை
- தீபகற்ப ஆறுகள் :
- நர்மதை, கோதாவரி, தபதி, காவிரி, மகாநதி, கிருஷ்ணா.
6.இமயமலையில் தோன்றும் ஆறுகளின் சிறப்பு இயல்புகள் யாவை?
- நீளமானவை மற்றும் அகலமானவை.
- வற்றாத நதிகள்
- நீர்மின் உற்பத்தி செய்ய இயலாத நிலை
- ஆற்றின் மத்திய மற்றும் கீழ்நிலைப்பகுதிகள் போக்குவரத்திற்கு ஏற்றது.
7.தென்னிந்திய ஆறுகளின் சிறப்பியல்புகள் யாவை?
- மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகிறது.
- குறுகலான மற்றும் நீளம் குறைந்தவை.
- வற்றும் ஆறுகள்
- நீர் மின்சாரம் உற்பத்திக்கு ஏற்றது.
ஒரு பத்தியில் விடையளிக்கவும்.
1.இமயமலையின் முக்கியத்துவத்தை விவரி.
இமயமலையின் முக்கியத்துவம்:
- தென்மேற்கு பருவக்காற்றைத் தடுத்து வட இந்திய பகுதிக்கு கனமழையைக் கொடுக்கிறது.
- இந்திய துணைக்கண்டத்திற்கு இயற்கை அரணாக அமைந்துள்ளது.
- வற்றாத நதிகளின் பிறப்பிடமாக உள்ளது. (எ.கா) சிந்து, கங்கை , பிரம்மபுத்திரா மற்றும் பிற ஆறுகள்.
- இயற்கை அழகின் காரணமாக வடக்கு மலைகள் சுற்றுலா பயணிகளின் சொர்க்கமாகத் திகழ்கிறது.
- பல கோடைவாழிடங்களும், புனித தலங்களான அமர்நாத், கேதர்நாத், பத்ரிநாத் மற்றும் வைஷ்ணவிதேவி கோயில்களும் இம்மலைத் தொடரில் அமைந்துள்ளன.
- வனப்பொருட்கள் சார்ந்த தொழிலகங்களுக்கு மூலப்பொருட்களை அளிக்கிறது.
- மத்திய ஆசியாவிலிருந்து வீசும் கடும் குளிர்காற்றை தடுத்து இந்தியாவை குளிரிலிருந்து பாதுகாக்கிறது.
- இமயமலை பல்லுயிர் மண்டலத்திற்கு பெயர் பெற்றவை.
2.அந்தமான் நிக்கோபர் தீவுகள் பற்றி விவரி.
- இத்தீவுக் கூட்டங்கள் கடலடி மலைத்தொடரின் மேல் பகுதியாக அமைந்துள்ளன.
- பூமத்தியரேகைக்கு அருகில் உள்ளதாலும், அதிக ஈரப்பதம், அதிக வெப்பம் கொண்ட காலநிலை நிலவுவதாலும் அடர்ந்த காடுகள் இங்கு காணப்படுகின்றன.
- இத்தீவின் பரப்பளவு 8,249 ச.கி.மீ ஆகும்.
- இத்தீவுக் கூட்டத்தை இரண்டு பிரிவுகளாக பிரிக்கலாம்.
- அவை வட பகுதி தீவுகள் அந்தமான் எனவும் தென் பகுதி தீவுகள், நிக்கோபர் எனவும் அழைக்கப்படுகின்றன.
- இத்தீவுக் கூட்டங்கள் நாட்டின் அமைவிட முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
- இதன் நிர்வாகத் தலைநகரம் போர்ட் பிளேயர் ஆகும்.
- அந்தமான் தீவுக் கூட்டங்களை நிக்கோபர் தீவுக் கூட்டங்களிலிருந்து 100 கால்வாய் பிரிக்கிறது.
செயல்பாடுகள்
கங்கை ஆறு பாயும் மாநிலங்களை இந்திய நிலவரைபடத்தில் குறிக்கவும்.
- 1. உத்தரக்கண்ட்
- 2. உத்திரப்பிரதேசம்
- 3. பீகார்
- 4. மேற்கு வங்காளம்